Thursday 10 September 2020

உங்களுக்கு வயிற்று வலியா?




வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.


வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம். 


ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி? 


இதோ சிம்பிள் டிரிக். 


வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.


அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும். 


அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.


1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.


2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால்  - அல்சர்.


3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.


4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால்  - ஃபூட் பாய்சன்.


5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,


6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,


7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.


இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்பிரச்சனைக்கு திர்வு 

காணுங்கள்! 


இந்த பதிவை சேமித்து வைத்து  கொள்ளவும்! நன்றி வணக்கம்!... படித்து ரசித்தது! மீள்பதிவு.

Air Conditioner மற்றும் Air Cooler இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட வித்தியாசங்கள் யாவை?

 


Air conditioner:- எப்படி வேலை செய்கிறது என்பதனை முதலில் பார்க்கலாம். வாயுவை அமுக்கி உயர் அளுத்தத்துக்கு உயர்த்தும் போது அதில் சேமித்து வைக்கப் பட்ட சக்தி வெப்பமாகி மாறி வெளியேறுகிறது. அதனையே விரிவடைய வைக்கும் போது குறைந்த அளுத்தத்துக்கு மாற்றும் போது விரிவடையத் தேவையான சக்தியை அதன் சுற்றாடலில் இருந்து பெற்றுக் கொள்ளுகிறது. அது வெப்பத்தைப் பெறுவதனால் சுற்றாடல் வெப்பம் தணிக்கப் படுகிறது….

மேலே காட்டி இருப்பது இரண்டு பாகங்களைக் கொண்ட இதமாக்கி ஆகும். இதே தத்துவம் தான் குளிர்சாதன்ப் பெட்டிகளிலும் பாவிக்கப்படுகின்றது.

Air cooler:- இது உண்மையிலேயே ஒரு மின்விசிறி தான் அத்துடன் ஒரு தண்ணீர்த் தொட்டியும், மித வெப்பத்தில் இருக்கும் சுற்றாடல்க் காற்றை ஈரப்பதன் மிக்க ஒரு பஞ்சு மூட்டையின் ஊடாக இளுப்பதன் மூலம் காற்றின் வெப்பத்தைக் குறைப்பதுடன் இந்தக் காற்றின் ஈரப்பதத்தையும் அதிகரித்து வேகமாக வெளியேற்றப்படுகிறது, அதனால் குளிர்மையாக உங்களை உணரச் செய்கிறது……

இப்போது புரிந்திருக்கும் எயார்க் கூலருக்கு ஏன் தினமும் தண்ணீர் சேர்க்க வேண்டும் என்பது.

Wednesday 2 September 2020

பப்ஜீ விளையாட்டிற்கு தடை ஏன்???

இந்திய அரசு அண்மையில் 59 சீன ஆப்களை தடை செய்தது. அப்போது பிரபல விளையாட்டான PUBG மட்டும் ஏன் தடைச் செய்யப்படவில்லை என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. சீன நிறுவனத்தின் வழி வந்த பப்ஜி கேம் தடை செய்யப்படாதது ஏன்? உண்மை என்னவென்றால், PUBG (PlayerUnknown's Battlegrounds) 2017 ஆம் ஆண்டு தெற்கு கொரியாவைச் சேர்ந்த Bluehole எனும் நிறுவனம் இந்த கேம்-ஐ டெஸ்க்டாப் கணிணியில் பயனபடுத்தும் விதத்தில் வெளியிட்டது. 2018ல் Tencent Games என்ற சீன நிறுவனம் Bluehole-ன் 10 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது. சீனாவிற்காக மொபைலில் செயல்படும் பப்ஜி விளையாட்டை அந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் PUBG Mobile இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. தற்போது அந்த விளையாட்டின் 24% டவுன்லோட்கள் இந்தியாவில் இருந்து வருவதாக சென்சர் டவர் ஆய்வு தெரிவிக்கிறது. சீன ஆப்’களுக்கான தடையின் முதல் பட்டியலில் பப்ஜி தப்பித்து இருந்தாலும், தற்போது பெருகி வரும் சீன எதிர்ப்பு கொள்கையால், விரைவில் பப்ஜி-யும் தடை ஆகலாம் என்ற பேச்சு நிலவிவருகிறது. தற்போது இந்தியாவில் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு $1 பில்லியன் வருவாய் இத்துறையில் பெறப்படும் என்று கணிக்கப்படுகிறது.

பப்ஜி... பப்ஜி கார்ப்பரேஷன் (PUBG corporation) என்னும் நிறுவனத்தின் ஒரு இணைய தள விளையாட்டு.. இது தென்கொரியாவில் உள்ள ப்ளோஹோல் (Bluehole) என்னும் ஒரு மென்பொருள் கட்டுமான நிறுவனத்தின் கிளை நிறுவனம்.. இவ்விளையாட்டு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் மனம் கவர்ந்த ஒரு விளையாட்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று.. தற்போது இந்தியாவில் இதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
அதற்கு மத்திய அரசு சொல்லும் காரணம், பப்ஜி நிறுவனத்தில் சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது, அதனால் இந்தியர்களின் தகவல்கள் திருடுபோக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளது மத்திய அரசு. நீங்கள் கேட்கலாம், அந்நிறுவனத்தின் முதலீட்டிற்கும் இந்தியர்களின் தகவல் திருட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று. ஒரு நாட்டிலும் உள்ள எந்த தொழில் நிறுவனங்களிலும் அந்நாட்டு அரசு எந்த தகவல்களையும் பெற முடியும். அதற்கு அந்த தொழில் நிறுவனங்கள் மறுப்பு தெரிவிக்க முடியாது. சரி, ஒரு வகையில் மத்திய அரசு செய்தது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளலாம். இந்தியாவில் சுமார் 4 கோடி இளைஞர்கள் பப்ஜி விளையாட்டை விளையாடி வந்தனர். டென்சென்ட் நிறுவனத்தின் பங்கு பப்ஜியில் வெறும் 10% மட்டுமே. ஆனால் பேரதிர்ச்சி என்னவென்றால் இன்று இந்திய மக்கள் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் பேடியெம் (Paytm) என்னும் இணையதள பரிவத்தனை செயலியை பயன்படுத்துகின்றனர். பேடியெம் ஒரு இந்திய நிறுவனம் தானே அதிலென்ன ஆச்சர்யம் என்று நீங்கள் கேக்கலாம், இந்தியர் தான் நிறுவினார், ஆனால் அந்நிறுவனத்தில் அவரின் பங்குகள் வெறும் 14.67% மட்டுமே, பெருவாரியான பங்குகள் Ant Financials (29.71%) மற்றும் SAIF Partners (18.56%) ஆகிய சீன நிறுவனங்களிடம் உள்ளது. கிட்டத்தட்ட 48% க்கும் அதிகமான பங்குகள் சீன நிறுவனங்களிடம் உள்ளன.. இந்த செயலியின் மூலம் இந்தியர்களின் தகவல்கள் திருடு போகாதா???

நீ பப்ஜி விளையாடுற அதனால சொல்ற, மத்திய அரசு என்ன செஞ்சாலும் நல்லதுக்கா தான் இருக்கும்னு இந்நேரம் நெறய பேரு கெளம்பியிருப்பீங்க.. இது எனக்காக போடுற பதிவு இல்ல.. இன்னைக்கு தேதில நாட்டுல வேலைவாய்ப்பின்மை எப்படி தலவிரிச்சு ஆடுதுனு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காதுன்னு நெனைக்கிறேன். இந்த பப்ஜி விளையாட்டு நிறைய இளைஞர்களுக்கு வலையோலி (youtube) மூலமாகவும், அப்பப்போ உலக அளவிலும், கண்டங்கள் அளவிலும் நடக்குற போட்டிகளினாலும் ஒரு வருமானத்தை ஏட்டித்தந்துள்ளது.. இதனால் அவர்கள் வேலையின்மையால் இன்னல்கள் பட நேரவில்லை. வேலை என்று மட்டும் இல்லை, நிறைய இளைஞர்கள் இந்த விளையாட்டை ஒரு வேட்கையாக கொண்டிருந்தனர். தற்போது அவர்களுக்கு மத்திய அரசோ அல்லது இந்த தடையை ஆதரிப்பவர்களோ ஒரு தீர்வு சொல்ல முடியுமா?
பப்ஜிக்கு தடை என்றால் அதே காரணத்தை வைத்து பேடியெம் (Paytm) க்கும் தடை விதிக்கப்படுமா??