இந்திய அரசு அண்மையில் 59 சீன ஆப்களை தடை செய்தது. அப்போது பிரபல விளையாட்டான PUBG மட்டும் ஏன் தடைச் செய்யப்படவில்லை என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. சீன நிறுவனத்தின் வழி வந்த பப்ஜி கேம் தடை செய்யப்படாதது ஏன்? உண்மை என்னவென்றால், PUBG (PlayerUnknown's Battlegrounds) 2017 ஆம் ஆண்டு தெற்கு கொரியாவைச் சேர்ந்த Bluehole எனும் நிறுவனம் இந்த கேம்-ஐ டெஸ்க்டாப் கணிணியில் பயனபடுத்தும் விதத்தில் வெளியிட்டது. 2018ல் Tencent Games என்ற சீன நிறுவனம் Bluehole-ன் 10 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது. சீனாவிற்காக மொபைலில் செயல்படும் பப்ஜி விளையாட்டை அந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் PUBG Mobile இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. தற்போது அந்த விளையாட்டின் 24% டவுன்லோட்கள் இந்தியாவில் இருந்து வருவதாக சென்சர் டவர் ஆய்வு தெரிவிக்கிறது. சீன ஆப்’களுக்கான தடையின் முதல் பட்டியலில் பப்ஜி தப்பித்து இருந்தாலும், தற்போது பெருகி வரும் சீன எதிர்ப்பு கொள்கையால், விரைவில் பப்ஜி-யும் தடை ஆகலாம் என்ற பேச்சு நிலவிவருகிறது. தற்போது இந்தியாவில் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு $1 பில்லியன் வருவாய் இத்துறையில் பெறப்படும் என்று கணிக்கப்படுகிறது.
அதற்கு மத்திய அரசு சொல்லும் காரணம், பப்ஜி நிறுவனத்தில் சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது, அதனால் இந்தியர்களின் தகவல்கள் திருடுபோக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளது மத்திய அரசு. நீங்கள் கேட்கலாம், அந்நிறுவனத்தின் முதலீட்டிற்கும் இந்தியர்களின் தகவல் திருட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று. ஒரு நாட்டிலும் உள்ள எந்த தொழில் நிறுவனங்களிலும் அந்நாட்டு அரசு எந்த தகவல்களையும் பெற முடியும். அதற்கு அந்த தொழில் நிறுவனங்கள் மறுப்பு தெரிவிக்க முடியாது. சரி, ஒரு வகையில் மத்திய அரசு செய்தது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளலாம். இந்தியாவில் சுமார் 4 கோடி இளைஞர்கள் பப்ஜி விளையாட்டை விளையாடி வந்தனர். டென்சென்ட் நிறுவனத்தின் பங்கு பப்ஜியில் வெறும் 10% மட்டுமே. ஆனால் பேரதிர்ச்சி என்னவென்றால் இன்று இந்திய மக்கள் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் பேடியெம் (Paytm) என்னும் இணையதள பரிவத்தனை செயலியை பயன்படுத்துகின்றனர். பேடியெம் ஒரு இந்திய நிறுவனம் தானே அதிலென்ன ஆச்சர்யம் என்று நீங்கள் கேக்கலாம், இந்தியர் தான் நிறுவினார், ஆனால் அந்நிறுவனத்தில் அவரின் பங்குகள் வெறும் 14.67% மட்டுமே, பெருவாரியான பங்குகள் Ant Financials (29.71%) மற்றும் SAIF Partners (18.56%) ஆகிய சீன நிறுவனங்களிடம் உள்ளது. கிட்டத்தட்ட 48% க்கும் அதிகமான பங்குகள் சீன நிறுவனங்களிடம் உள்ளன.. இந்த செயலியின் மூலம் இந்தியர்களின் தகவல்கள் திருடு போகாதா???
No comments:
Post a Comment