Monday, 27 May 2019

இந்தியாவில் ஆட்சி புரிந்த மன்னர்களும் அதன் ஆண்டுகளும் !!

Image result for ruling king meaning


 . 
இந்தியாவில் ஆட்சி புரிந்த மன்னர்களும் அதன் ஆண்டுகளும்...
முஹம்மது கோரி முதல் மோடி வரை....
1193: முஹம்மது கோரி 
1206: குத்புதீன் ஐபக்
1210: ஆரம்ஷா
1211: அல்தமிஷ்
1236: ருக்னுத்தீன் ஷா
1236: ரஜியா சுல்தானா
1240: மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242: ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246: நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266: கியாசுத்தீன் பில்பன்
1286: ரங்கிஷ்வர்
1287: மஜ்தன்கேகபாத்
1290: ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)
கில்ஜி வம்சம்:
1290: 1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292:2 அலாவுதீன் கில்ஜி
1316:4ஷஹாபுதீன் உமர் ஷா
1316: குதுபுத்தீன் முபாரக் ஷா
1320: நாஸிருத்தீன் குஸரு ஷா
(கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)
துக்ளக்Thaglakவம்சம்:
1320: கியாசுத்தீன் துக்ளக்(1)
1325: (2) முஹம்மது பின் துக்ளக்
1351: (3) பெரோஸ்ஷா துக்ளக்
1388: (4) கியாசுத்தீன் துக்ளக்
1389: அபுபக்கர் ஷா
1389: மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394: அலெக்சாண்டர் ஷா(7)
1394: (8) நாஸிருத்தீன் ஷா
1395: நுஸ்ரத் ஷா
1399: (10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413:(11)தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்:
1414:1.கஜர்கான்
1421: 2 .மெஹசுத்தீன் முபாரக் ஷா
1434: 3.முஹம்மது ஷா
1445:4 அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)
லோதி வம்ச ஆட்சி:
1451: பெஹ்லூல் லோதி
1489: அலெக்சாண்டர் லோதி
1517: இப்ராஹிம் லோதி
(லோதி ஆட்சி 75 வருடம்)
முகலியாஆட்சி:
1526: ஜஹிருத்தீன் பாபர்
1530: ஹிமாயூன்
சூரி வமிச ஆட்சி:
1539: ஷேர்ஷா சூரி
1545: அஸ்லம் ஷா சூரி
1552: மெஹ்மூத் ஷா சூரி
1553: இப்றாஹிம் சூரி
1554: பர்வேஸ் ஷா சூரி
1554: முபாரக் கான் சூரி
1555: அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)
முகலாயர் ஆட்சி:
1555: ஹிமாயூன்
1556: ஜலாலுத்தீன் அக்பர்
1605: ஜஹாங்கீர் சலீம்
1628: ஷா ஜஹான் 
1659: ஒளரங்கசீப்
1707: ஷாஹே ஆலம்
1712: பஹாத்தூர் ஷா
1713: பஹாரோகஷேர்
1719: ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
1754: ஆலம்கீர்
1759: ஷாஹேஆலம்
1806: அக்பர் ஷா
1837: பஹதூர்ஷா ஜபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )
ஆங்கிலேயர் ஆட்சி:
1858: லார்டு கேங்க்
1862: லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864: லார்ட் ஜான் லோதேநஷ்
1869: லார்டு ரிசர்டு
1872: லார்டு நோடபக்
1876: லார்டுஎட்வர்ட்
1880: லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884: லார்டு டப்ரின்
1894: லார்டு ஹேஸ்டிங்
1899: ஜார்ஜ் கர்னல்
1905: லார்டு கில்பர்ட் 
1910: லார்டு சார்லஸ்
1916: லார்ட் பிடரிக்
1921: லார்ட் ரக்ஸ்
1926: லார்ட் எட்வர்ட்
1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
1936: லார்டு ஐ கே
1943: லார்டு அரக்பேல்
1947: லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)
சுதந்திர இந்தியாவின் ஆட்சி:
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966: குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங்
1980: இந்திராகாந்தி
1984: ராஜீவ்காந்தி
1989: V.P.சிங்
1990: சந்திரசேகர்
1991: PN ராவ்
1992: A.B.வாஜ்பாய்
1996: A.Jகொளடா
1997: L.K.குஜ்ரால்
1998: A.B.வாஜ்பாய்
2004: மன்மோஹன்சிங்
2014: நரேந்திர மோடி
2019:நரேந்திர மோடி
இஸ்லாமியர்களை அந்நியர்கள் என்று சொல்லும் அனைவருக்கும்  இது சமர்பனம்.
இந்தியா என் தாய் நாடு..
இஸ்லாம் எனது வழிபாடு...
கட்டாயம் உங்கள் FB யில் இந்த பதிவை காப்பி செய்து பகிருங்கள் . Whatsapp குருப்பில் பகிருங்கள் . உரத்து சொல்வோம் இந்தியா 🇮🇳 எமது நாடு என்று .

தொகுப்பு : தையுபா  அஜ்மல்.

Friday, 17 May 2019

ஈரோடு மாவட்டத்தில் ஒரு இன்பச் சுற்றுலா !!


kodiveri_dame

தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஈரோடு மாவட்டம் 5692 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இதனைச் சுற்றிலும் வடக்கில் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டமும், பிற பகுதிகளில் தமிழகத்தின் சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களும் சூழ்ந்து உள்ளது.
நிர்வாக வசதிக்காக இம்மாவட்டம் ஈரோடு, மோடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்திய மங்களம், தாளவாடி என ஒன்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மாநகரே இம்மாவட்டத்தின் தலைநகரமாகவும், பெரிய நகரமாகவும் விளங்குகிறது.
1
வரலாற்றுச் சிறப்பு: தற்போதைய ஈரோடு மாவட்டம் பண்டைய கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இங்குள்ள கொடுமணல் கிராமத்தில் நடந்த தொல்லியல் ஆய்வின் மூலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே இப்பகுதியில் அறிவும், திறமையும் பொருளாதார வளமும் கொண்ட மக்கள் வாழ்ந்திருந்தது நிரூபணமாகியுள்ளது.
இங்குள்ள கோபிசெட்டிபாளையம் சங்க காலத்தின் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் பாரி வள்ளலின் நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. பின் வந்த காலங்களில் இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்களிடம் இருந்து இப்பிரதேசத்தை ராஷ்டிரகூடர்கள் கைப்பற்றினர். அவர்களைத் தொடர்ந்து சோழர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், மதுரை சுல்தான், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், மைசூர் பேரரசு, ஹைதர் அலி, திப்பு சுல்தான் என பலராலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.
1799-இல் திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின்னர், கிழக்கிந்திய கம்பெனியர் வசம் வந்தது. அவர்கள் இந்நிலப்பகுதியை நொய்யல் ஆற்றை மையமாக வைத்து “நொய்யல் தெற்கு மாவட்டம்” மற்றும் “நொய்யல் வடக்கு மாவட்டம்” என இரண்டாகப் பிரித்தனர். பின்னர் 1804-இல் கோயம்புத்தூரை தலைநகரமாகக் கொண்ட மாவட்டமாக மாற்றி அமைத்தனர். அப்போதைய ஓலைச்சுவடி ஆவணங்களில் கோயம்புத்தூர் ஜில்லா பெருந்துறை தாலுகாவைச் சேர்ந்த ஈரோடு கிராமம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பின் 1979-இல் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெரியார் மாவட்டம் உருவானது. அதுவே பின்னர் 1996-இல் ஈரோடு மாவட்டம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 2009-இல் இம்மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் வட்டங்கள் புதிதாக உருவான திருப்பூர் மாவட்டத்தின் பகுதிகளாக மாறின.
10
மலை வளம்:
மாவட்டத்தின் வடபகுதி கர்நாடக பீடபூமியின் தொடர்ச்சியாக உள்ளதால், இங்கு 900 மீ முதல் 1700 மீ வரை உயரம் உள்ள தாளவாடி மலை, திம்பம் மலை, தல மலை, தவள கிரி, பவள மலை, பச்சை மலை, பெருமாள் மலை, பருவாச்சி மலை, பூனாச்சி மலை, அந்தியூர் மலை, வட்ட மலை, சென்னி மலை, எழுமாந்தூர் மலை, பாளையம்மன் மலை, எட்டி மலை, அருள் மலை, சிவகிரி, அறச்சலூர் நாக மலை, அரசனா மலை, திண்டல் மலை, விஜயகிரி, ஊராட்சி கோட்டை மலை என பல மலைகள் உள்ளது.
மேலும் வரட்டுப்பள்ளம், வழுக்குப் பாறை பள்ளம், தென்வாரிப் பள்ளம், கோரைப் பள்ளம் போன்ற பெரிய பள்ளங்களும் உள்ளன.
நீர்வளம்:
தமிழகத்தின் பெரிய நதிகளாகிய காவிரி, பவானி நதிகளுடன் நொய்யல் மற்றும் மோயாறு நதிகள் இம்மாவட்டத்திற்கு வளம் சேர்க்கிறது.
காவிரி: மேட்டூர் அணை மற்றும் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தைக் கடந்து தெற்கு நோக்கிப் பாயும் காவிரி ஈரோடு மாவட்டத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் இடையே எல்லைக்கோடாக பாய்கிறது. இங்குதான் பவானி நதி காவிரியுடன் கலக்கிறது.
பவானி நதி: காவிரி ஆற்றின் முக்கிய துணையாறுகளில் ஒன்று. இந்நதி 217 கி.மீ. தூரம் ஓடி காவிரியுடன் கலக்கிறது. தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி கேரள மாநிலத்திற்குள் பாய்கிறது.
இந்நதி கேரளம் நோக்கிச் செல்லும் பாதையில்தான், தமிழக – கேரள எல்லையில், மேல் பவானி அணையும், அதனையொட்டிய பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கமும் உள்ளது.
அணையைக் கடந்து கேரள மாநிலத்திற்குள் செல்லும் பவானி, அங்குள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் (பாலக்காடு மாவட்டம்) உள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை கிழக்கு நோக்கித் திரும்பி மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்குள் வருகிறது. (இப்பொழுது கேரள அரசு 6 தடுப்பணைகள் கட்டி நீரைத் தடுக்க நினைப்பது இப்பகுதிக்குள்தான்).
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) அருகே சமவெளிப் பகுதிக்கு வரும் இந்நதியில் ஈரோடு மாவட்டத்தின் கொத்தமங்கலம் அருகே கீழ் பவானி அணைக்கட்டும், அதனையொட்டிய பவானி சாகர் நீர்த்தேக்கமும் அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில்தான் மோயார் ஆறு பவானியுடன் சங்கமிக்கிறது. இங்கிருந்து கோபிசெட்டிபாளையம் வழியாக பவானி நகருக்கு அருகில் கூடுதுறையில் காவிரியுடன் கலக்கிறது. இங்கு அணை தோப்பு என்ற குட்டி அணையும், பழமையான அழகிய சங்கமேஸ்வரர் கோயிலும் உள்ளது.
இந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணையும், நதி நீரைக் கொண்டு செல்வதற்காகக் கட்டப்பட்ட காளிங்கராயன் வாய்க்காலும் தனிச்சிறப்பும் பெருமையும் கொண்டது. இந்நதி ஈரோடு மாவட்டத்தில் 160 கி.மீ. தூரம் கிழக்கு நோக்கிப் பயணிக்கிறது.
11
மோயாறு: பவானி ஆற்றின் துணையாறு. நீலகிரி மாவட்டத்தில் மோயர் என்ற சிறுநகரில் தோன்றி முதுமலை வழியாக கிழக்கு நோக்கி 50 கி.மீ. தூரம் பாய்ந்து பவானி ஆற்றுடன் கலக்கிறது. இந்நதி தன் பாதையில் 20 கி.மீ. தூரம் “மோயர் பள்ளத்தாக்கு” எனப்படும் மலைகளுக்கு இடையில் உள்ள இடுக்கு வழியாக பாய்ந்து “தெப்பகாடு’ என்ற இடத்தில் மோயர் அருவியாக கீழிறங்குகிறது. இந் நதி பந்திப்பூர், முதுமலை சரணாலயங்களைப் பிரிக்கும் இயற்கை எல்லையாகவும் இருக்கிறது.
நொய்யல் ஆறு: சங்க காலத்தில் காஞ்சிமாநதி என்றழைக்கப்பட்ட இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலையில் தோன்றி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. தற்போது இந்நதி மிகவும் மாசடைந்து தன் சுயத்தை இழந்து காணப்படுகிறது.
இந்நதியின் சமவெளிப் பகுதிகளில் பழமையான மக்கள் குடியிருப்பு இருந்துள்ளது. இதனை வரலாற்று அறிஞர்கள் நொய்யல் ஆற்று நாகரிகம் என்று குறிப்பிடுகிறார்கள்.
அணைகள்: 
ஈரோடு மாவட்டத்தில் பவானி சாகர் அணை, கொடிவேரி அணை, வறட்டு பள்ளம் அணை, குண்டேரி பள்ளம் அணை, ஒரத்துப்பாளையம் அணை, பெரும்பள்ளம் அணை உள்ளிட்ட சில நீர்த்தேக்கத்துடன் கூடிய அணைகளும், பல தடுப்பணைகளும் உள்ளன. இவற்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நீர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
காளிங்கராயன் வாய்க்கால்: 
இந்த வாய்க்கால் உலக அளவில் நமக்குப் பெருமை சேர்த்த ஒரு பெரிய சாதனை. 13-ஆம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தின் தலைவராக இருந்த காளிங்கராயனால் 1271 – 1283-இல் இந்த காளிங்கராயன் அணைக்கட்டும் (தடுப்பணை), அதனையொட்டிய காளிங்கராயன் வாய்க்காலும் கட்டப்பட்டது.
இந்த வாய்க்காலின் சிறப்பே இது தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதுதான். இதற்காக இந்த வாய்க்கால் மட்டசரிவு மற்றும் பாம்புபோல் வளைந்து நெளிந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
பவானி ஆறு காவிரியுடன் கூடுவதற்கு கொஞ்சம் முன்னரே அணை கட்டி, பவானி ஆற்று நீரைத் தடுத்து, காளிங்கராயன் வாய்க்காலுக்குத் திருப்பி விடப்படுகிறது. இது ஆவுடையாப்பாறை என்னுமிடத்தில் நொய்யல் ஆற்றுடன் சேர்கிறது. இதனால் நதிகள் இணைப்பு திட்டமாகவும் உள்ளது. இரு இடங்களுக்கும் இடையில் உள்ள இயற்கையான தூரம் 36 மைல்கள்தான். ஆனால் வளைந்து வளைந்து செல்வதால் 56 மைல்கள் செல்கிறது. இந்த வாய்க்காலின் மூலம் 17,776 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது.
நவீன வசதிகள் இல்லாத அந்நாள்களிலேயே, சிறந்த நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு உதாரணமாகவும், இயற்கை சார்ந்த அறிவியல் திட்டமாகவும் காளிங்கராயன் வாய்க்கால் போற்றப்படுகிறது. இதை உலகின் பழமையான கால்வாய்களில் ஒன்றாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
கனவில் வந்த தீர்வு
காளிங்கராயன் அணை மற்றும் வாய்க்கால் கட்டப்பட்டது பற்றி பல்வேறு செவிவழி தகவல்கள் சொல்லப்படுகிறது. பரம்பரை பரம்பரையாய் வாய் வார்த்தைகளாகச் சொல்லப்படுவனவற்றில் பலரும் சொல்வது இந்த வரலாறுதான்!
காளிங்கராயன் கி.பி. 1240இல் பிறந்தவர். இவர் பாண்டிய மன்னர் “சத்தியவர்ம வீர பாண்டியன்’ 1265-1280) பிரதிநிதியாக கொங்கு நாட்டை ஆட்சி செய்தார். இவரின் சொந்த ஊர் வெள்ளோடு. வெள்ளோடு மேடான பகுதி என்பதால் ஆற்று பாசனம் கிடையாது. சுற்றிலும் காவிரியும், பவானியும், நொய்யல் ஆறும் பாய்ந்தோடியும் கிணற்று பாசனம் மட்டுமே. புன்செய் பயிர்கள் மட்டுமே விளைந்தது.
ஒரு சமயம் காளிங்கராயன் தன் மகனுக்கு பெண் கேட்பதற்காக தஞ்சைப் பகுதியில் வசித்த தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அந்த வீட்டின் சமையற்காரர் விருந்தினருக்கு(காளிங்கராயன் குடும்பத்தினருக்கு) சமையல் செய்ய பழைய அரிசி போடுவதா?…புதிய அரிசி போடுவதா? என்று சகோதரியின் குடும்பத்தவர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு “நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த அரிசியில் செய்தால் என்ன? என்று கேலி செய்து சிரித்திருக்கிறார்கள்.
இதனால் கோபமடைந்த காளிங்கராயன் தனது நாட்டின் புன்செய் நிலத்தை நன்செய் நிலமாக மாற்றி நெல் விளைவித்து காட்டுகிறேன் என்று சபதம் செய்திருக்கிறார்.
நாடு திரும்பிய காளிங்கராயன் பவானி ஆற்றின் நீரை தனது தேசமான மேட்டு நிலத்திற்கு கால்வாய் வெட்டி கொண்டுவர திட்டமிடுகிறார். பல ஆண்டுகள் ஆய்வுகள் பல செய்தும் அது சாத்தியம் இல்லை என்று பொறியாளர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதே சிந்தனையுடன் இருந்த காளிங்கராயனுக்கு ஒரு நாள் கனவு வருகிறது. அதில் ஒரு பாம்பு தாழ்வான பகுதியில் இருந்து மேட்டை நோக்கி வளைந்து நெளிந்து மேலேறுகிறது. விழித்துக் கொண்டபின் தண்ணீரையும் இதுபோல் கொண்டு செல்லலாம் என்ற யோசனை வருகிறது. அதன்படி தனது சொந்த செலவில் வாய்க்காலையும், பாம்பு போல் வளைந்து நெளிந்து கட்டி முடிக்கிறார். பவானியும் மேட்டுப் பகுதிக்குப் பாய்ந்து வந்து சேர்ந்தது. புன்செய் நிலங்கள் நன்செய் நிலமாகி நெல் விளையும் பூமியாகியது.

Thursday, 16 May 2019

நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ள புதிய பாடத்திட்டம்...


Image result for நீட் தேர்வு பாடத்திட்டம்

நீட் தேர்வில் முழு மதிப்பெண்ணைப் பெறும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைத்திருப்பதாகப் பெருமைகொள்கிறது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும்பாலும் புதிய பாடத்திட்டத்தில் இடம்பிடித்திருப்பதே பெருமைக்கான காரணம்.

தமிழக மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர். இதற்குக் காரணம் 12 வருடங்களாக மாற்றப்படாமல் இருக்கும் பாடத்திட்டங்களே' என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. 
கடந்த மாதம் 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதர வகுப்புக்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட 11-ம் வகுப்புப் பாடப்புத்தகங்களில், நீட் தேர்வுக்கான கேள்விகள் எத்தனை இடம்பெற்றிருக்கின்றன என்பது குறித்து தமிழகப் பள்ளிக்கல்வித்துறை ஆராய்ந்தது. 

பொதுவாக, நீட் தேர்வில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிலிருந்து சம அளவில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேட்கப்படும் 80 கேள்விகளில் தலா 45 கேள்விகள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திலிருந்தும், 90 கேள்விகள் உயிரியல் பாடத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன. இதில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில், பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளில் 100 சதவிகிதமும், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்புத்தகத்திலிருந்து 99 சதவிகித கேள்விகளும் இடம்பிடித்துள்ளன. 
இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ``புதிதாகத் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் எந்தளவுக்குப் போட்டித்தேர்வுக்கு உதவும் என்பதை நடந்து முடிந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கொண்டு ஆய்வு செய்தோம். பதினொன்றாம் வகுப்பிலிருந்து கேட்கப்படும் கேள்விகளில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திலிருந்து 100 சதவிகிதமும், உயிரியல் பாடத்திலிருந்து 99 சதவிகித கேள்விகளும் புதிய பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. போட்டித்தேர்வுகளுக்குப் புதிய பாடத்திட்டம் உதவுமா என்ற முதல் தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறோம். `நீட்' தேர்வைத் தவிர, இதர தகுதித்தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில், மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துகளும், உதாரணங்களும் புதிய பாடத்திட்டத்தில் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் பயன்பாட்டு வகையில் கேட்கப்படும் கேள்விகளும் சேர்த்துள்ளோம்" என்றார். 

ஐ.ஐ.டி மற்றும் இதரப் போட்டித்தேர்வுகளில் இடம்பிடித்துள்ள கேள்விகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில் புதிய பாடப்புத்தகத்திலிருந்து எத்தனை கேள்விகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் கேட்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது, பள்ளி ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டத்தை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த கையேடு தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளது பள்ளிக் கல்வித்துறை. 
மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பு படிக்கச் செல்லும்போது, தேர்வில் தோல்வியடையாமல் இருக்கும் வகையில் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாடங்கள் குறித்து இணையதளங்களில் கூடுதல் தகவலையும், வீடியோக்களையும் பெறும் வகையில் QR கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

``நீட் தேர்வில் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இயற்பியல் பாடநூலில், இயக்கவியல் பாடத்திலிருந்துமட்டும் 11 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 13 கேள்விகள் இரண்டாவது பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருக்கின்றன" என்கிறார் இயற்பியல் பாடநூல் தயாரிப்பில் வழிகாட்டியாக உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு இயற்பியல் துறையின் இணை பேராசிரியர் ரீட்டா ஜான். 
உயிரியல் பாடத்திட்டங்களை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், ``பயோடெக்னாலஜி, ஜெனடிக்ஸ் மற்றும் குளோனிங் குறித்தும், இதுகுறித்த தற்போதைய ஆய்வு நிலைகள் குறித்தும் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது மாணவர்களுக்கு உயிரியல் பாடம் சார்ந்த அறிவை மேம்படுத்துவதுடன், ஆராய்ச்சி குறித்து யோசிக்கவும் வைக்கும். புதிய மாற்றங்களைப் பள்ளி ஆசிரியர்கள் உள்வாங்கும் வகையில் தமிழக அரசு தொடர் கருத்தரங்கு கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் அறிவு நிலை மேம்படுத்தப்படும்" என்றார்.

தமிழக மாணவர்கள் அதிகளவில் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றால் அது புதிய பாடத்திட்டத்தின் வெற்றியே!

நன்றி : விகடன் 

Thursday, 9 May 2019

நாம் என்ன படித்தால், எங்கு படித்தால் உடனே வேலை கிடைக்கும் பற்றிய பார்வை !!

நாம் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் பற்றிய  இங்கு பார்ப்போமா..
Image result for tamilnadu college studentsதேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து மாணவர்களும் பெற்றோர்களும் எந்த படிப்பை படிப்பது, எந்த கல்லூரியில் சேர்வது என ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள். கல்வி நிறுவனங்களோ "உயர்தர கல்வி, உடனடி வேலைவாய்ப்பு" என மக்களை கவரும் வாக்குறுதிகளோடு விளம்பரங்கள் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பற்றிய தெளிவு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இருப்பது அவசியம்.
என்ன படித்தால், எங்கு படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கான எளிதான விடை, எந்த படிப்பையும் எங்கு படித்தாலும் கவனமாக, சிறப்பாக படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். படிப்பில் கவனமில்லாமல் படித்தால் வேலைவாய்ப்பு என்பது சிரமமே.
படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதோடு நிறுத்திகொள்ளாமல், அந்த படிப்பிற்க்கான திறனையும் வளர்த்து கொண்டால், நிச்சயம் வேலை கிடைக்கும். கல்வி அறிவை வளர்ப்பதற்க்கும், சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்க்கும் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் படிக்கும் படிப்பு மட்டுமோ, அல்லது படிக்கும் கல்லூரி மட்டுமோ நமக்கு வேலை வாங்கி தருவதில்லை, மாணவரின் திறமை , அறிவு, ஆற்றல், ஆங்கில மொழி அறிவு, தொடர்பு திறன் ஆகியவைதான் வேலை வாய்ப்பை பெறுவதற்க்கான பிரதான காரணிகளாக இருகின்றன.
அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளை தேர்ந்தெடுத்தால் அதில் போட்டி (Competition) அதிகமாக இருக்கும், போட்டி (Competition) குறைவாக இருக்கும் படிப்புகளை தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைவாக இருகும். எனவே எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும் சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இதற்க்கான தீர்வு எளிதானது, எந்த படிப்பதாக இருந்தாலும் சிறப்பாக படிப்பதே வெற்றிக்கு வழி.
என்ன படிக்கலாம் ?
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இது எல்லோரும் சொல்லும் அறிவுறை இதற்க்கான காரணம் என்ன வென்றால் விருப்பமில்லாத படிப்பை படிக்க மாணவர்களை நிர்பந்தித்தால் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் கல்வியில் பின்தங்ககூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
விரும்பிய படிப்பை படிகும்போது ஆர்வம் இருக்கும், கவனம் இருக்கும், மாணவர்கள் பெற்றோர்கள் மீது பழி போட முடியாது, அவசியம் ஏற்படும் போது மாணவர்களே கடினமாக உழைத்து படிப்பார்கள்.
மிக முக்கியமாக மாணவர்களுக்கு ஆர்வமிருக்கின்றது என்பதற்க்காக பயனற்ற படிப்பை படிக்க அனுமதிக்ககூடாது. சில மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும், விளையாட்டு சம்மந்தமாக நிறைய படிப்புகள் இருக்கின்றன, இவற்றில் பெரும்பாலானவை மாணவர்களின் எதிர்காலத்திற்க்கு உதவாது. எனவே விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அதில் பயனளிக்கும் படிப்புகளாக தேர்வு செய்து படிக்கலாம்.
எங்கு படிக்கலாம் ?
உங்கள் மதிப்பெண்ணிற்க்கு எங்கு படிக்க இடம் கிடைக்குமோ அங்கு சேர்ந்து படியுங்கள், பல்லாயிரக்கணக்கான , பல லட்ச கணக்கான ரூபாய்களை கொடுத்து தேடி சென்று எந்த கல்வி நிறுவனத்திலும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவை விலை கொடுத்து வாங்க முடியாது, நாம் நல்ல மதிப்பெண் எடுத்தால் நல்ல கல்லூரியில் குறைந்த செலவில் படிக்க இடம் கிடைக்கும், மதிப்பெண் குறைவாக எடுத்தால் தரமில்லாத கல்லூரியில் இடம் கிடைக்கும். எவ்வளவு மோசமான கல்வி நிறுவனத்தில் படித்தாலும் மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தால், கடினமாக உழைக்க தயாராக இருந்தால் நல்ல கல்வியை பெற முடியும், நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும்.
குறைந்த மதிப்பெண் எடுத்து இருந்தாலும் குறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள் பற்றிய விளக்க வீடியோ இந்த https://www.youtube.com/watch?v=4zbaXWu5-kw&t=6s லின்கில் உள்ளது அதையும் பார்த்து பயன்பெறுங்கள்
பெற்றோர்களுக்கு : லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கேட்கும் கல்லூரிகளை தேர்வு செய்யாதீர்கள். கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ சக்திக்கு மீறி சிரமபட வேண்டாம். வருடத்திற்க்கு 15 ஆயிரம் செலவு செய்து படிக்கும் எவ்வளவோ சிறந்த படிப்புகள் தமிழகத்தில் உள்ளன. இப்படிபட்ட படிப்புகளை படித்து மாதம் பல்லாயிரகணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் எண்ணற்ற இளைஞர்கள் இருக்கின்றார்கள். அதிகமான பொருளாதாரம் இருந்தால் லட்சங்கள் செலவு செய்து படிக்க வைக்கலாம். பொருளாதாரம் குறைவாக இருந்தால் வசதிக்கு ஏற்றவாறு படிக்க வையுங்கள்.
படிப்பை தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை :
1. மாணவர்களுக்கு ஆர்வமுள்ள படிப்புகளை தேர்ந்தெடுங்கள், அல்லது மாணவர்களுக்கு சிறந்த படிப்பை பற்றி ஆர்வமூட்டுங்கள்.
2. இஸ்லாம் தடை செய்த படிப்புகளையும், பயனற்ற படிப்புகளையும் தவிர்த்துவிடுங்கள்.
3. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறைந்த கல்வி கட்டணம் உள்ள படிப்பை தேர்ந்தெடுங்கள்.
4. எந்த நோக்கத்திற்க்காக படிக்கின்றோம் என்பதை இறுதி செய்து கொள்ளுங்கள். கல்வி அறிவை வளர்த்து கொள்ள, அல்லது நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை பெற, அல்லது மத்திய, மாநில அரசு பணியில் சேர, அல்லது வெளி நாடுகளில் ஆராய்ச்சி படிப்புகள் படிக்க, அல்லது மார்க்கம் மற்றும் சமூக பணியாற்ற என நமது இலக்கை தீர்மானித்து அதற்க்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுங்கள்.
5. எந்த கல்வி நிறுவனதில் சேர முடிவு செய்துள்ளீர்களோ அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் சீனியர் மாணவர்களிடம் கல்வி நிறுவனத்தை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.
இறுதியாக மாணவர்களுக்கு : நாம் சில படிப்பை படிக்க விருப்பபடலாம், அல்லது குறிபிட்ட கல்லூரியில் படிக்க வேண்டும் என விரும்பலாம், நமது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது நாம் எடுத்த மதிப்பெண் காரணமாகவோ அது இயலாமல் போகலாம். அதற்க்காக கவலைபட்டு நமக்கு கிடைத்த படிப்பை சரியான முறையில் படிக்காமல் விட்டுவிட கூடாது, நமக்கு எந்த படிப்பு, எந்த கல்லூரியில் கிடைததோ அதையே இறைவன் நமக்கு நாடியுள்ளான் என்பதை உணர்ந்து, கிடைத்த படிப்பை சிறந்து படித்தால் நிச்சியம் வாழ்கையில் சிறந்த நிலை அடையலாம்..

1400 ஆண்டுகளுக்கு முன்னரே குர்ஆனில் சினிமாவைப் பற்றி.?

ஒருமுறை (World Students Association) உலக மாணவர் கழகத்தைச் சார்ந்த மாணவர் குழு ஒன்று அப்துல் அலீம் சித்தீக்கி அவர்களைப் பேட்டி கண்டனர்.
அவர்களில் ஒரு மாணவர்,
குர்ஆனில் உலகிலுள்ள அனைத்தும் கூறப் பட்டிருக்கிறது என்று நீங்கள் கூறுவது உண்மையென்றால் இக்காலத்திலுள்ள சினிமாவைப்பற்றி கூறப்பட்டிருக்கிறதா?என்று கிண்டலாகக் கேட்டார்.
அப்போது சினிமா அறிமுகமகாத காலம். ஸித்தீக்கீ அவர்கள், சினிமா என்றால் என்ன என்றும் சற்று விளக்மாகக்கூறுங்கள். பின்னர் நான் பதில் சொல்கின்றேன் என்றார்கள்.
அந்த மாணவர்,
“கற்பனைக் கதைகளை விலைக்கு வாங்கி அதில் கூத்தாடிகளை நடிக்க வைத்து, மக்களை சிரிக்கவைத்துப் பொழுது போக்குவது தான் சினிமா என்று விளக்கம் கூறினார்"
உடனே மௌலானா அவர்கள் “ஆம்! இது பற்றி குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறதே என்றார்கள். அம்மாணவர்களோ வியப்பு மேலீட்டால், "எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் என மீண்டும் வினாவைத் தொடர்ந்தார்கள்" அந்த மாணவர்கள்.
அதைக் கேட்ட மௌலானா சிறிதும் தயங்காமல், குர்ஆனின் 31வது அத்தியாயத்தில் சூரா லுக்மானில் ஆறாவது வசனத்தில்
وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُواً أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ
(அல்குர்ஆன் : அத்தியாயம் -லுக்மான், வசனம்- 33)
"மனிதர்களில் சிலர் உள்ளனர்.அவர்கள் வீணான செய்திகளை பொய்யான கட்டுக் கதைகளை) விலைக்கு வாங்கி அறிவின்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுத்து அதனை பரிகாசமாக்கிக்கொள் கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனையுமுண்டு" (31:6)
என்ற திருமறை வசனத்தை ஓதிக்காண்பித் து கேள்வி கேட்டவரையே வாயடைக்கச் செய்தார்கள். உடனே அந்த மாணவர் அனைவரும் “1400 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமாவைப்பற்றியும் கூறப்பட்டி ருக்கிறதே” என்று அதிசயித்து இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றனர்.
சினிமாவை சென்ற நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தார்கள்.ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அதைப்பற்றி மிகத்துல்லியமாகக் கூறப்பட்டிருக்கிறது என்றால் அது முக்காலத்தையும் அறிந்த இறைவனின் வேத வாக்காகத்தான் இருக்கமுடியும் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்?
இதுவும் குர்ஆன் இறைவேதம் என்பதற்கும், அல்லாஹ் கூறும் வீணாணவர்கள் யார் என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.

இதனுடன் மற்றுமொரு பதிவையும் இணைக்கின்றேன்.

சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள்தான் என்ன...?
1,சகோதரிகளாகப் பார்க்க வேண்டிய நமது இளம் பெண்களை காதலிகளாக பார்க்க வைத்ததும், சகோதரர்களாகப்பார்க்க வேண்டிய நமது இளைஞர்களை காதலனாகப்பார்க்க வைத்ததும் இந்த சினிமாதான் ??

2,பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா ??

3,திருட்டின் வகைகளை கற்றுக்கொடுத்தது இந்த சினிமா ??

4,நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனிதன் பண்பாக மாற்றியது இந்த சினிமா ?

5,இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா ??

6,வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா ??

7,காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா ??

8,தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது  இந்த சினிமா ??

9,Fashion என்ற பெயரில்  பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம், பண்பாடுகளை அழித்தது  இந்த சினிமா ??

10,ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா ??

11,உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது இந்தசினிமா ??

12,உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது* இந்த சினிமா ??

13,திரையில் பெண்களை போகப் பொருளாக ஆக்கியது இந்த சினிமா ??

14,*"அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே"* என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களை கண்களால் "விபச்சாரம்" செய்ய கற்றுக்கொடுத்தது இந்த சினிமா ??

15,வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது இந்த சினிமா??

16,ஒழுக்கக் கேட்டைத் தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை  என்பதுதான் நிதர்சனமான உண்மை??

17,இன்னும் பல வன்செயல்களை மக்கள் மனதில் விதைத்தது* இந்த சினிமா ??
மேற்கூறிய அனைத்து பெருமைகளும் இந்த பாழாப்போன சினிமாவையே சாரும்...

மொத்தத்தில் சினிமா  என்பது
ஒழுக்கச்சீர்கேட்டின் - "கையேடு"
விபச்சாரத்தின் - "நுழைவாயில்"
சமூக சீர்குலைவிற்கான - "ஆயுதம்"

என் அன்பு சகோதர சகோதரிகளே நண்பர்களே இந்த சினிமாவில் 1000 நல்ல காட்சிகள் இருந்தாலும் அது எமது வாழ்கைக்கு ஒரு துளியும் உதவாது என்பது தான் உண்மையானது இப்பதிவு யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல.

இன்று எமது சகோதர,சகோதரிகள் அதிகமாக விரும்பக் கூடிய ஒன்றுதான் ​சினிமா​ மற்றும் கவிதைப் புகைப்படங்கள்....

​தற்காலத்து எமது முஸ்லிம் ஆண்களும் ,பெண்களும் அவர்களின் மார்க்கமும்​ஹராமான ஒரு காரியத்தை அல்லாஹ் எம்மை பார்த்த வண்ணமாக உள்ளான் என்று பயம் இல்லாமல் வெளிப் படை யாகவே செய்கின்றார்கள். அதுதான் அவர்களின் whatsapp profile and whatsapp status...
ஒரு விபச்சாரி அதுவும் காசுக்காக தன் உடம்பை உலக மக்களுக்கு காண்பிக்கும் ஒரு கேவலமான ​சினிமா கூத்தாடியின்​ புகைப் படங்களையும் அவர்களின் அசிங்கமான பாடல் காட்சிகளையும் ​கொஞ்சம் கூட வெட்கம், அருவருப்பு இன்றி உங்கள் whatsapp இலும்Facebookஇலும் பதிவிடுகிறீர்கள்.​
​இதுதான் நமக்கு நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாம் மார்க்கமா ? கூத்தாடிகளுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்...?
ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்துவிட்டு மானம் கெட்ட ஒரு விபச்சாரியின் புகைப்படத் தையோ அல்லது வீடியோவையோ பதிவிடுகிறீர்களே நீங்கள்தானா உத்தம நபியின் உம்மத்துகள்?
நீங்கள் இன்று மரணித்தால் உங்களை ​மண்ணறையில்​ அடக்கிவிடுவார்கள் ஆனால் நீங்கள் பதிவிட்ட அசிங்கமான, ஹராமான பாடல்கள், புகைப்படங்கள் உங்களின் ​whatapp status​ ஆக 24 மணி நேரமும் இருக்கப் போகிறது. இதுமட்டுமா வருடாந்த நினைவுவாகக் கூட வருடா வருடம் அப்போதெல்லாம் இப்பதிவுகள் வலம் வந்து கொண்டே இருக்கும் இதை யார் யாரெல்லாம் பார்க்கிறார்களோ பகிர்கிறார்களோ ​அவர்களின் பாவங்களும் உங்கள் பாவங்களுடன் சேர்ந்து மண்ணறைக்கு வரும்​ இப்போது உங்களுக்கு புரிகிறதா? இதன் விளைவுகள்...
​நல்லவற்றை பதிவிடுங்கள் மற்றவர்களுக்கு அது பயன் படும் ( இவ்வுலகம் மறுமையின் விளை நிலம் ) ஆனால் இப்படி விபச்சாரிகளின் பாடல்களை யோ அல்லது புகைப்படங்க ளையோ பதிவிட்டு மறுமை யில் உங்களின் தங்கும் இடத்தை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள்....

நாளை மறுமையில் அந்தக் கூத்தாடிகளுடன் தான் உங்களையும் எழுப்பப்படும் என்ற ​நபி (ஸல்) அவர்களின்​ வார்த்தை பொய் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்.....
​அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்....

அவனது பிடி மிகவும் பயங்கரமானதாக இருக்கும் அதில் இருந்து அல்லாஹ் என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள் புரிவானாக...ஆமீன்​
இப்போதே உங்களின் profile and status என்பவற்றை மாற்றி விடுங்கள்!! அல்லாஹ்வின் கோபப் பார்வையில் இருந்து தப்பி விடுங்கள்!!
இது ​நமது இஸ்லாமிய சமுதாயத்திற்கான நவீன காலத்திற்கேற்ற பதிவாக அமைய வேண்டுமென்பதே எனது அவாவும் நோக்கமும் ஆகும்.
யாரையும் காயப்படுத்துவதற்காகவும் அல்ல கருணைக்கடலான எல்லாம் வல்ல அல்லாஹ் நம் மன்னித்து அருள்புரிவானாக!

ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்,

Monday, 6 May 2019

பசுமைகிராமம் உருவாக்க சிலவழிமுறைகள்..

வனபாதுகாப்பு
ஊரின் எல்லையை வனமாக மாற்றுங்கள் அரசாங்க நிலமாக இருப்பினும் அதனை பாதுகாக்க தவறாது தனி குழுகளை அமையுங்கள் வரும் காலங்களில் இந்த வனமே உங்கள் கேடயம்..
தேனீ_பட்டாம்பூச்சி_பாதுகாப்பு
காடுகள் மற்றும் அனைத்து இயற்கை மீண்டும் தழைத்து வர தேனீக்கள் தேவை இதற்கென சமூகத்தை கட்டமைப்பு செய்வது மிக மிக மிக அவசியம் இதனை வளர்க்க கற்று கொள்ளுங்கள்.. இதில் வருவாயும் இருக்கிறது.. இதனை அந்த குழுக்கள் சார்ந்த தொழிலாக தெளிவாக கட்டமைப்பு செய்யுங்கள்.. இதனை தவிர்த்தால் மனிதனின் அழிவும் நிச்சயம்..
பாரம்பரிய_மரங்கள்_பாதுகாப்பு
வனங்கள் இருந்தாலும் நம் பாரம்பரியம் மன்னின் மரபு உண்டு.. நம் தட்ப வெப்பத்திற்கு ஏற்ற பாரம்பரிய மரங்களில் எண்ணை வித்துகள் மரம் அதிகம் அதனை பராமரித்து வளர்த்து அதன் மூலமாக வருவாய் வருமாறு மரங்கள் பாதுகாப்பு சமூகம் உருவாக்குங்கள்
மூலிகை_பாதுகாப்பு
செடிகள் வளர்ப்பில் மூலிகை என்ற ஒன்று தமிழன் இவ்வுலகிற்கு கண்டு சொன்னதே அதனை பாதுகாத்து வளர்த்து ஒவ்வாரு கை வைத்திய முறையை அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுங்கள்.. 18 வகை மூலிகை 1800 வீடுகளிலும் வைக்க கட்டாயமாக்குங்கள்.. ஒரு குழந்தை இரவில் அதற்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லாத போதும் முதலுதவிக்கு பயன் பெறும்.. இது அல்லாமல் குழந்தைகளுக்கு பல்வேறு மூலிகை பற்றிய விழிபனர்வு பள்ளிகளில் அதனை வளர்க்க இக்குழு துணையுடன் செயல்படுத்துங்கள்..
இதில் மற்ற மூலிகை பொடியாக, இலையாக வருவாய் வர குழுவை கட்டமைத்து கொள்ள வேண்டும்
பறவைகள்_பாதுகாப்பு
பறவைகள் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று மழை வருவது மற்றும் செடி கொடிகள் மரங்கள் இயற்கையாக அமைய பறவைகள் தான் முடியும்.. இதனை பாதுகாக்க சமூகம் ஒன்றை அமைத்து கொள்ளுங்கள் முதலில் கணக்கெடுத்து பின்பு இவை வரவுகள் அதிக படுத்து வேண்டும்.. ஊரில் இவைகள் எங்கு அதிகமாக உள்ளது என்பதை கண்டு அந்த இடத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்...
இந்த ஐந்து இருந்தால் இதனை தொடர்ந்து.. மழை மற்றும் நீர் நிலை ஆதாரங்கள் பெருக்கி கொள்ள முடியும்..
குடிநீர்_பாதுகாப்பு
உங்கள் ஊர் நீர்நிலைகள் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அவ்வாறு செய்யும் போது நீர்நிலைகள் அக்கிரமிப்பு இருப்பின் அதனை கண்டிப்பாக மாற்றி அமைக்க பட வேண்டும்.. குறைந்தது கிணறுகள் குளம் எத்தனை என கணக்கெடுத்து நீர்நிலைகள் புதுப்பிக்க வேண்டும்.. அவை குறைவாக இருப்பின் புதிய நீர்நிலை உருவாக்கி பின்பு அதனை பழமையும் சேர்த்து நீர்நிலைகள் வற்றாமல் பாதுகாக்க பட வேண்டும்.. நீர்நிலைகள் வருவாய் ஈட்ட குழுக்கள் அதனை சார்ந்த தொழில்கள் கட்டமைக்கபட வேண்டும்
தாணிய_பாதுகாப்பு
தாணியங்கள் பருவ காலம் பார்த்து பயிர் செய்ய வேண்டும்.. நாம் உணவு பழக்கத்தில் இதனை சேர்க்க வேண்டும்.. இதனை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி வருவாய் குழுவுக்கு வர நடைமுறைபடுத்துவது அவசியம்
விதை_வங்கி
அங்கு வரும் பயிர் மற்றும் ஏற்ற காலங்களில் தட்டுபாடு இன்றி விதைகள் கிடைக்க பயனடைய விதைகள் வாங்கி விற்க விதை வங்கி உருவாக்க வேண்டும்.. வெவ்வேறு விதைகள் தரமானதாக சரி பார்த்து கலபடம் இல்லா நாட்டு ரகங்களை விற்பது சிறப்பு..
நுண்ணுயிர்_பாதுகாப்பு
கழிவுகளை மற்றும் மண் வளப்படுத்த இயற்கை உரங்கள் இட.. இந்த நுண்ணுயிர் பாதுகாப்பு அவசியம்.. இதனை கொண்டு குழு வருவாய் பெற நடைமுறை படுத்த வேண்டும்
பாரம்பரிய_உணவு_பழக்க_வழக்கங்கள்_பாதுகாப்பு
இதனை உற்பத்தி செய்ய மற்றும் விற்க.. இதற்கான சமூகம் வேண்டும் முதலில் தொலைந்த அந்த உணவுகள் கண்டறிந்து புத்துயிர் கொடுக்க வேண்டும் அதனை எவ்வாறு மாற்றம் செய்ய முடியும் என ஆராயந்து அக்குழு வருவாய் ஈட்டும் பொருட்டு அவர்களுக்கு கட்டமைத்து தர வேண்டும்.. இந்த பத்தும் புதிதாக மீண்டு வர.. மீட்டதை பாதுகாக்க இதனுடன் ஆரம்பத்தில் இருந்தே இன்னும்14 சமூகத்தை சேர்த்து கட்டமைக்க பட வேண்டும்.

இயற்கை_விவசாயம்
தேனீக்கள் மற்றும் மண்ணை மலடாக்காது இயற்கை பூச்சி விரட்டி, இயற்கை உரம் என இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்

எண்ணெய்_உற்பத்தி_பாதுகாப்பு
எண்ணெய் வித்துகள் பயிரிட்டு அதனை உபயோதபடுத்த இயற்கை முறையில் உற்பத்தி செய்ய வேண்டும்.. தேங்காயில் காய வைக்க சல்பர் பயன்படுத்தாமல் சோலார் டையர் பயன்படுத்தி எண்ணெய்க்கு தேவையான கொப்பரையை காய வைக்க வேண்டும்.. எண்ணையில் கலபடமில்லா முன்னோர்கள் வைத்திருந்த அனைத்து வகையும் சந்தை படுத்த வேண்டும்

மரபுசாரா_எரிசக்தி_பாதுகாப்பு
நமக்கான எரிவாயு மற்றும் எரிசக்தி யை நாமே உற்பத்தி செய்ய வேண்டும்.. இதனை அனைவரும் ஒருகினைந்து நடைமுறைப்படுத்த பட வேண்டும்.. அதன் தேவைகள் ஏற்றார் போல மாற்றி அமைக்க வேண்டும்..

பாசன_மேம்பாட்டு_பாதுகாப்பு
புதிய நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழை தூவுவான் மூலம் நீரினை சிக்கணமாக செலவிட உத்திகளை கையாள வேண்டும்..

பசுமை_ஆய்வகம்
அடுத்த தலைமுறை மற்றும் இன்றைய நிலையில் உள்ள வேளாண்மை மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் கொண்டு உழவர்களுக்கு வழிகாட்ட தன்மைகளை கண்டறிய ஆய்வகம் நிறுவ வேண்டும்.

சுற்றுசூழல்_பாதுகாப்பு
சுற்றுசூழலை பாதுகாத்து.. கேடு விளைவிக்கும் வகையில் காற்று, நீர், மண் எவ்வாறு காப்பாற்ற பட வேண்டும் என பயிற்சிகள் உங்களை சார்ந்தவர்களுக்கு தந்து ஊரை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை

பசுமை_வாழ்கைமுறை
இனணயம் என்பது கட்டாயம் ஆனதால் இதனை உபயோகிக்க கம்பி வழி மற்றும் Optic Fibre cable யை பயன்படுத்த வேண்டும்.. இதற்கான கட்டமைப்பை ஒவ்வொரு கிராமமும் அவர்கள் பெயரில் பெற்றிப்பது அவசியம்..

ஒருகினைந்த_கழிப்பறை_மேம்பாட்டு
ஒருகினைந்த கழிப்பறைகள் இருக்க வேண்டும்.. அதனை கண்காணித்து பராமரிப்பு செய்ய குழுவினர் மற்றும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.. கட்டாயம் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட வேண்டும்..

கழிவுநீர்_சுத்திகரிப்பு_மேம்பாட்டு
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊரில் அமைத்து அதனை குழுவினர் முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.. கழிவு நீர் மற்றபடி திறந்த வெளியில் ஒட விடுவதை தடுக்க வேண்டும்..

கலை_மற்றும்_ஒப்பனை_மேம்பாட்டு
கலைகள் வளர்க்க வேண்டும்.. இதற்கான பெண்கள் குழுவினர் ஆண்கள் குழுவினர் மற்றும் அதில் இயற்கை சார்ந்த பயன்பாடுகளை அனைவரும் உபயோகிக்க இயற்கையாக இந்த பொருட்கள் தயாரித்து சந்தை படுத்த வேண்டும்..

பசுமை_விளையாட்டு
விளையாட்டு மற்றும் போட்டிகள் தொலைந்த போன நிகழ்ச்சிகள் மீண்டும் புத்துணர்வுடன் விளையாட அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும்..

நீர்வள_ஆதார_மேம்பாட்டு
நீர் ஆதாரங்கள் உள்ளடக்கிய வேளாண்மை, தொழில்துறை, ஊரின்
சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க குழு வேண்டும்.. நீர் வளங்களை பாதுகாக்க இவர்கள் பங்கு முக்கியமானது

திடக்கழிவு_மேலாண்மை
வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் தேவையில்லாத பயன்படுத்தப்பட்ட திடப் பொருள்களை சரியான முறையில் கழித்து அதனை அழிக்க வேண்டும்.. சேகரித்தல் பிரித்தல் அழித்தல் என குழுவினர் பிரிவாக செயல்வடிவம் பெற வேண்டும்..
பாரம்பரிய_நாட்டுமாடு_பாதுகாப்பு
இவை அனைத்தும் வர உழவுக்கு ஒவ்வொரு உழவனுக்கும் நாட்டு மாடு இருக்க வேண்டும்.. இதில் கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய், நெய், கோமியம் சானம் மற்றும் இயற்கை முறையில் பூச்சி மருந்து உற்பத்தி செய்ய கற்று கொள்ள வேண்டும்..
இதனை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு பசுமையான சூழலை உருவாக்க வேண்டும்.

உங்க தோட்டத்துல பாம்பு இருக்கா? கொஞ்சம் கவனிங்க!
தோட்டத்தில் புதர்போல செடிகள் இருந்தால்தான் பாம்பு, தேள், பூரான் போன் விஷ ஜந்துகள் குடி புகும். எனவே புதர் செடிகளை வெட்டிவிடுவங்கள்.
அதிக அளவில் இலை, தலைகளையும், காய்ந்த சருகுகளையும் குவித்து வைக்காமல் அவ்வப்போது அகற்றுங்கள். தோட்டத்தில் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில்தான் பாம்புகள் குடிபுகும் எனவே சுத்தமாக தோட்டத்தை பராமரியுங்கள்.
அதேபோல் மரப்பொந்துகள், உடைந்த ஓடுகள் போன்றவைகளை குவித்து வைத்திருந்தாலும் அவை பாம்புகளுக்கு பிடித்தமான இடமாகிவிடும். எனவே முடிந்த வரை உடைந்து போன பொருட்களை தோட்டத்தில் குவித்து வைக்காதீர்கள்.
பாம்புகளுக்கு பூண்டு வாசனை அலர்ஜி எனவே பூண்டினை நசுக்கி தண்ணீரில் கரைத்து செடிகளின் மீது கரைத்து விடலாம்.
தோட்டத்தின் மூளையில் புதினா செடிகளை வளர்க்கலாம். ஏனெனில் புதினா வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது என்பதால் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பாம்புகள் வர வாய்ப்பே இல்லை என்கின்றனர் தோட்டக்கலைத்துறையினர்.
பேபி ஷாம்புவை தண்ணீரில் கலந்து அதனை தோட்டத்தில் ஸ்ப்ரே செய்து விடலாம். மூன்று மணிநேரம் கழித்து மறுபடியும் செடிகளின் மீது தண்ணீர் தெளித்து விடலாம். இந்த வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது
எனவே தோட்டத்தில் பாம்புகள் இருந்தாலும் அவை ஓடிவிடும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் உங்கள் தோட்டத்தில் அச்சமின்றி பொழுதை கழிக்கலாம்.

நன்றி : வசந்த் வெள்ளைத்துரை,
                தமிழர்ஆய்வுக்கூடம்.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Friday, 3 May 2019

ஜெர்மன் நாட்டில் கோர்லிபன் அணு க்கழிவு மையம்.


ஜெர்மன் நாட்டில் கோர்லிபன் அணு க்கழிவு மைய பாதுகாப்பு மற்றும் அணுக்கதிர் தாக்காத பிரத்தியேக உடை மாற்றி சுரங்கத்திற்குள் (590 மீட்டர் ஆழம்) அழைத்துச் சென்றனர். மொத்தம் 8000 அணுக்கழிவுகள் கொண்ட பீப்பாய்கள் குவிக்கப்பட்டு அவற்றின் மீது இரண்டு அடி உயரத்திற்கு உப்பு தூவி இரு ந்தார்கள்.


1967 ம் ஆண்டிலிருந்து 1978 ஆண்டு வரை அணுக்கழிவுகளை இங்குதான் நிர ப்பினார். 1988 ம் ஆண்டு சுரங்கத்திற்குள் தண்ணீர் அதிகமாக சுரக்க ஆரம்பித்து விட்டது.2008 ம் ஆண்டு சுரங்க தண்ணீரில் சீசி யம் 137 எனும் கதிர்வீச்சு கனிமம் அதிகம் உருவாகி இருப்பதை கண்டு பிடித்தனர். உப்புச் சுரங்கம் முழுவதையும் கூடுதல் தண்ணீரால் நிரப்பினால் அணுக்கழிவு கள் இன்னும் ஆழத்துக்கு சென்றுவிடும். அந்த ஆழ்நிலக் கருவூலம் இன்னும் பாது காப்பானதாக மாறும் என்ற விபரீத யோ சனை தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த கழிவுகளை வேறு எங்கே எடுத்துச் செல்வது என்று திகைத்து நின்றனர் ஜெர்மன் விஞ்ஞானிகள்.


அந்த சுரங்கத்திற்குள் 650 மீட்டர் ஆழமான ஒரு பகுதியில் விசேஷ கருவி (Hand Fuss Monitor) மூலம் என் உடலில் படிந்திருந்த கதீர்வீச்சை அளித்தனர். மீண்டும பழைய அறைக்கு போய் உடைகளை முற்றிலும் களைந்து விட்டு நீண்ட நேரம் குளித்துவி ட்டு என் சொந்த உடைகளை அணிந்து கொண்டு மேலே கூட்டி வந்தனர்.

இந்த பேரதிர்ச்சியிலிருந்து விடுபட்டு இய ல்பு நிலைக்கு வர எனக்கு வெகு நேரம் தேவைப்பட்டது. அறிவியல் தொழில்நு ட்பம் பொருள்வளம் லஞ்ச லாவண்யமற்ற அரசியல் என் அனைத்திலும் உயர்ந்து விளங்கும் ஜெர்மன் நிலையே இப்படி என்றால் நம்நாட்டின் நிலையை சிந்தித்த படி இருந்தேன். இந்த அணுக்கழிவு பிர ச்சினை என் வீட்டு முற்றத்தில் கூடங்கு ளத்தில் வந்து விடியும் என்று நான் கன வில் கூட நினைக்கவில்லை.

1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகள் வெளியாகிறது. இவ்வாறு வெளியாகும் அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. அவற்றினை 7 வருடங்களுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor -AFR) கொண்டுச் செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் என்பது ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலக்கட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழகமே மிகப்பெரியப் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இந் நிலத்தில் உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்.


நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை இந்தியா பெறாத நிலையில் கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்கஇந்திய அணுசக்தித் துறை முடிவு செய்திருப்பது என்பது மத்திய அரசு நேரடியாக தமிழர்கள் மீது தொடுக்கின்ற சூழலியல் போர்.

அணுக்கழிவு கதிர்வீச்சு வெளிப்பட்டதால் தற்காலத்தில் ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் நடந்த பேரழிவைக் கண்கூடாகக் கண்டும்கூட அதிலிருந்து படிப்பினைகள் கற்றுக்கொள்ளாத இந்திய அரசு தமிழகத்தை சோதனைக் கூடமாக மாற்ற விரும்புவது எதனாலும் அனுமதிக்க முடியாது.எனவே, தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிரந்தரமாக மூட வழிவகைகளைச் செய்ய வேண்டும்

இயற்கைத்தாய் நம்மை காத்து அருளட்டும் !!


என் அருமை தமிழ் மக்களே, எவ்வளவு பெ ரிய ஆபத்து நம் தலைக்கு மேல் தொங்கி கொண்டு இருக்கிறது என்பது தெரிகிற தா?. கப்பலின் எண்ணெய் கசிவை வாளி யால் மொ ண்டு ஊற்றிய அபாரமான தொ ழில்நுட்பம் நம்மால் அறியப்பட்டது அல்ல வா?. இந்த விபரீதம் எதையும் புரியாமல் தமிழிசையும் நமது மங்குனி அமைச்சர்க ளும் இதனால் ஆபத்து எதுவும் இல்லை என்று பொத்தாம் பொதுவாக அறிவுகெட்ட தனமாக உளறி வருகிறார்கள். இதைப்ப ற்றிய கவலையோ பொருப்போ ஆளும் அரசுக்கு ஒரு சதவீதம் கூட தெரியாது. அவர்களுக்கு தேவை பதவியும் ஆட்சி யும் மட்டுமே. சிங்கப்பூரில் உல்லாச பய ணம் மேற்கொண்டு இருக்கும் சுடலை இதைப்பற்றி எல்லாம் வாயே திறக்க மாட்டார். ஆக அவருக்கும் மக்களைப் பற்றி யோ நாட்டை பற்றிய கவலை எதுவும் கிடை யாது.

Thursday, 2 May 2019

இதோ வகைவகையான 30 ஸ்வீட்ஸ் / காரம் உங்களுக்காக ...

Image may contain: foodலட்டு..
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.
செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.
கடலைப்பருப்பு சுய்யம்
தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ
மேல்மாவுக்கு: மைதா மாவு - 75 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

தேங்காய் சுகியன் 
தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
மேல் மாவுக்கு: தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு - 100 கிராம், உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெயில் சிதறிவிடும்.

உக்காரை 
தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 250 கிராம், நெய் - 100 கிராம், வறுத்த முந்திரி - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

மூங்தால் ஃப்ரை 
தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.
இது ஒரு மாதம் வரை கெடாது.

சன்னா தால் ஃப்ரை
தேவையானவை: கடலைப் பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் - தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்க வும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி
தேவையானவை: டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், பால் பவுடர் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.
செய்முறை: ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.
இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

மைசூர் பாகு
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.
குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.
காராபூந்தி 
தேவையானவை: வீட்டில் அரைத்த கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
இஞ்சி முரப்பா
தேவையானவை: சுக்குப் பொடி - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். பாகு பூத்து வருகையில் சுக்குப் பொடி, நெய் விட்டு நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.
குறிப்பு: சுக்குப் பொடி கடைகளில் கிடைக்கும். கிடைக்காதபட்சத்தில் சுக்கு வாங்கி, நன்கு நசுக்கி, மிக்ஸியில் பொடித்து, சலித்து உபயோகப்படுத்தவும். பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் வாயுத்தொல்லைக்கு இது நல்ல நிவாரணம் அளிக்கும்.
பாம்பே காஜா
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, கலர் கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி கலர் - சிறிதளவு.
செய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.
மோகன் தால்
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம், நெய் - முக்கால் கப், வறுத்த முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்
செய்முறை: நெய்யை சூடாக்கி கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... கடலை மாவு - கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட... மோகன் தால் ரெடி!
குறிப்பு: செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.

கோதுமை அல்வா
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், கேசரி கலர் - சிறிதளவு, நெய் - 100 கிராம், எண்ணெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை - தலா ஒரு டீஸ்பூன், பால் - ஒரு கப்
செய்முறை: நெய் - எண்ணெயை ஒன்றுசேர்க்கவும். கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவைவிட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டி கொட்டி, மேலே வறுத்த முந்திரி, வெள்ளரி விதையால் அலங்கரிக்கவும். ஆறியபின் துண்டுகள் போடவும்.

தேன்குழல்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், முழு உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.
செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

பாதாம் டிலைட்
தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பாதாம் துருவல் - 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை - 75 கிராம், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - அரை கிலோ, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.

மகிழம்பூ முறுக்கு
தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழ லில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, எண் ணெய் - கால் கிலோ, பெருங் காயத்தூள் - சிறிதளவு, காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும்.

சீப்பு ரோல்ஸ்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், தேங்காய்ப்பால் - கால் கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பாசிபருப்பை வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மாவாக்கிக்கொள்ளவும். மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேங்காய்ப்பால், தேவையான நீர் விட்டுப் பிசையவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சிப்ஸ் தேய்க்கும் கட்டை / எவர்சில்வர் சிப்ஸ் கட்டரின் பின்புறம் (வரிவரியாக இருக்கும்) மாவை அழுத்தி தேய்த்து உருட்ட, சங்கு போல் சுருண்டு வரும். இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. மணம் மிக்க, ருசியான சீப்பு ரோல்ஸ் தயார். சோழி வடிவத்தில் இருக்கும் இது, சீப்பு சீடை என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர்
தேவையானவை: கெட்டி அவல் - 200 கிராம், பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 25 கிராம், வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், நறுக்கிய கொப்பரைத் துண்டுகள் - சிறிதளவு (நெய்யில் வறுக்கவும்), எண் ணெய் - 250 கிராம், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் (நிறம் மாறாது) பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளற... ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.
குறிப்பு: நெய் - சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.

ஜாங்கிரி
தேவையானவை: முழு உளுந்து - 200 கிராம், அரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 300 கிராம், கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், சீவிய முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை: உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.
துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

ரவா லாடு
தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை - கால் கிலோ, பொடித்த சர்க்கரை - கால் கிலோ, நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

ஓமப்பொடி
தேவையானவை: கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, பச்சரிசி மாவு - 100 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் - அரை கிலோ.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள் / மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.
டூ இன் ஒன் லட்டு
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், பாசிபருப்பு - 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 200 கிராம், நெய் - 150 கிராம், வறுத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: நெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்.

டபுள் கலர் மைதா கேக்
தேவையானவை: மைதா - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் அல்லது வனஸ்பதி - 100 கிராம், பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு, வெனிலா எசென்ஸ் - சில துளிகள், பால் பவுடர் - 50 கிராம்,
செய்முறை: நெய் (அ) வனஸ்பதியை வாணலியில் நன்கு சூடாக்கிக்கொள்ளவும். மைதா, பால் பவுடரை சேர்த்து நன்கு சலித்து, உருக்கிய நெய் / வனஸ்பதியில் விட்டு, இட்லி மாவு பதத்தில் தயாரித்துக்கொள்ளவும். இதை இரண்டு சரிபாகமாக பிரிக்கவும். சர்க்கரையில் பாதி அளவு எடுத்து சிறிதளவு நீர்விட்டுக் காய்ச்சி, நன்கு நுரைத்து வருகையில் பாதி மைதா மாவு கலவை சேர்த்து நன்கு கிளறவும். இது இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.
மீதி சர்க்கரையுடன் சிறிதளவு நீர் விட்டு, பச்சை ஃபுட் கலர் சேர்த்து நுரைத்து வரும்போது, மீதி உள்ள மைதா கலவை சேர்த்து நன்கு கிளறி, இறுகும்போது வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இதை நெய் தடவிய தட்டில் இருக்கும் மைதா கலவை மீது நன்கு பரவலாக சேர்த்து, சமன் செய்து, லேசாக சூடு இருக்கையில் விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும்.

கேஷ்யூ ஃப்ரை
தேவையானவை: பாதியாக இருக்கும் முந்திரி - 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) - அரை கப், ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி - பச்சை மிளகாய் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், இளம் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிது, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ.
செய்முறை: ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.

பாதுஷா...
தேவையானபொருட்கள்...
மைதா - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, நெய் - ஒன்றரை டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு, ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.
செய்முறை...
உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து, கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

பாதாம்மில்க்அல்வா...
தேவையானபொருட்கள்...
பாதாம் பருப்பு - 100 கிராம், பால் - 100 மில்லி, சர்க்கரை - 150 கிராம், பாதாம் எசன்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை, நெய் - 50 கிராம்.
#செய்முறை...
பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்
குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.

காராசேவ்...
தேவையானபொருட்கள்...
கடலை மாவு - 200 கிராம், பச்சரிசி மாவு - 50 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, ஓமம் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை...
கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.
இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

பந்தர்லட்டு...
தேவையானபொருட்கள்...
கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 150 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை...
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.

டிரைஃப்ரூட்அல்வா...
தேவையானபொருட்கள்...
விதை நீக்கிய பேரீச்சை - 100 கிராம், கர்ஜூர் - 8 (விதை நீக்கியது), நெய் - 100 கிராம், எண்ணெய் - 50 மில்லி, சர்க்கரை - 250 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 25 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.
செய்முறை...
பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

அசோகாஅல்வா...
தேவையானபொருட்கள்...
பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) - 100 கிராம், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை...
சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

நவதானியஅப்பம்...
தேவையானபொருட்கள்...
நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.
செய்முறை...
நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை தூவிப் பரிமாறவும்.
அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.

வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி?
கடலைப்பருப்பு – 2 கப், பச்சரிசி – கால் கப், காய்ந்த மிளகாய் – 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து
அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம்.
எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும். ஆனால், புகைவரும் அளவு காய்ந்துவிடக் கூடாது. எண்ணெய் காயாமல் போட்டால், பஜ்ஜி, பக்கோடா ‘சதசத’வென்று ஆகிவிடும்.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல் .