Wednesday, 26 September 2007

ஹலோவுக்கு உரிய இறைவன் (அல்லாஹ்) மிகப் பெரியவன் !

இறை என்ற தமிழ் சொல்லுக்கு பொருந்தும் வகையில் வேற்று மொழிகளில் இறையின் பொருள் அவ்வளவு சிறப்பாகக் கூறப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. தேடல் என்கிற சொல்லின் தன்மையுடன் 'இறை' (அழை), தொழு, வேண்டு, நினைவில் கொள் என்ற பொருளாக இறைவன் > நினைக்கப்பட்டவன், நினைக்கபடுகிறவன், நினைக்கப்படுபவன் அல்லது அழைக்கப்பட்டவன், அழைக்கப்படுகிறவன், அழைக்கபடுபவன் என்னும் வினைத் தொகையாக (முக்கால வினைச் சொல் பகுதி) தனிச் சிறப்பு வாய்ந்த சொல்லாக பயன்படுத்தபடுகிறது. மற்ற மொழியின் சொற்களில் இத்தகைய தனிச் சிறப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

மொழி காட்டும் பொருளை விட எந்த ஒரு மதம் சார்ந்த சொல்லும் அந்த ஒரு தனிப் பொருளை தருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் இறைவன் என்ற சொல்லை தத்தம் மதத்தின் (காட்)கடவுளைக் குறிப்பதாக தமிழர்கள் நம்புகிறார்கள். இன்றைக்கு பெரிய மதங்கள் என்றால் நான்கே நான்கு தான் மற்றவை உலக மக்கள் தொகையில் சுமார் 17 விழுக்காடு கத்தோலிக்கர்கள் இருக்கிறார்களாம், அதே போன்று தான் இஸ்லாமியர், இந்து, பவுத்த மதத்தினரும் இருப்பார்கள், மீதம் உள்ள விழுக்காடு உதிரி மதங்களைச் சார்ந்தவையாக இருக்கும். வருங்காலத்தில் இந்த மத இறைவன் தனிச் சிறப்பு வாய்ந்தவன் என்று சொல்லி மதம் மாற்றுவது கடினமாகத்தான் இருக்கும், காரணம் மக்கள் ஆதாரத்தின் படியே முடிவு எடுப்பவர்களாக உள்ளனர். மதக் கொள்கைகளைக் காட்டலாம், ஆனாலும் அதிலும் சிக்கல் உதாரண புருஷன் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய மதப் பற்றாளர்கள் எவருமே இல்லை. அதனால் தான் மதவாதிகள் அறிவியல் அறிஞர்கள் பின்னே ஓடுகிறார்கள், ஒரு அறிவியலாளர் மதம் சார்ந்த நல்ல கருத்துச் சொல்லிவிட்டால் அவரது அறிவியல் அறிவு முழுவதும் மதத்தை தாங்கிப் பிடிக்கும் கேடயம் என்பது போல் பேசுகிறார்கள்.  இறை நம்பிக்கை உடைய ஒருவன் தான் குழப்பம் அடைக்கிறான், ஒருவேளை இவர்கள் சொல்வது தான் சரியோ என்பது போன்ற குழப்பம் அடைகிறான்.

நேற்று படித்த ஒரு பதிவு செய்தி உண்மையிலே வியப்படைய வைத்தது. 'வணக்கம் தமிழகம்', 'காலை வணக்கம்' போன்ற வணக்க சொற்களை இறைவனுக்கு இணை கற்பிக்க தடை விதிகப்பட்ட இஸ்லாமிய வானொலி, தொலைகாட்ச்சி அறிவிப்பாளர் பயன்படுத்தலாமா ? அப்படி அவர்களை சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்துவது மத நல்லிணக்கத்தை குலைப்பதாகும், இஸ்லாமியர்களை இழிவு படுத்துவது ஆகும் என்றெல்லாம் படித்தேன். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்பதைத் தவிர்த்து வேறெதும் தோன்றவில்லை.

'வணக்கம்' என்ற ஒரு சொல்லை பொதுவாக இந்துக்கள் 'கும்பிடுதல்' என்ற சொல்லின் மாற்றாக பயன்படுத்துவதில்லை. வணக்கம் என்பது ஒரு மதிப்பு குறித்து தனக்கு முன்னால் இருப்பவர்களுக்கு 'அறிமுகச்' சொல் தான். அதற்கு மேல் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. வணங்குதல் என்றால் பக்தி குறித்த சொல்லாகவும் அது பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அந்த சொல் வெறும் பக்தி சார்ந்தது மட்டுமே இல்லை. உள்ளேன் ஐயாவுக்கு பதில் 'வணக்கம் ஐயா' என்று சொல்லும் மாணவர்களும், பள்ளிகளும் உண்டு, இவை வெறும் பழக்கம் சார்ந்தவை தான். ஆங்கிலத்தில் இருக்கும் 'Sir' க்கு மாற்றாக 'ஐயா' வைப் பயன்படுத்துகிறோம், அதே போன்று தான் 'வணக்கம்' 'Hello' என்பது போல் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் தொலைபேசியில் அழைக்கும் போது 'ஹலோ' க்கு பதிலாக 'வணக்கம்' சொல்லுவார்கள். கண்டவர்களையெல்லாம் வணங்கி இறைவனுக்கு இணை வைக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ? இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் வணக்கம் பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது.

வணக்கத்துக் குரியவன், வணங்கத்தக்கவன் இறைவன் ஒருவனே என்பதற்கு பதிலாக கும்பிடுவதற்கு உரியவன், கும்பிடத்தக்கவன் இறைவன் என்று மாற்றிக் கொண்டால் 'வணக்கம்' சொல்வது ஒரு பெரும் குற்றமாகிவிடாது என்று நான்  நினைக்கிறேன். இறைவன் மிகப் பெரியவன் ஆனால் அவன் மொழி ஆராய்ச்சி செய்து இணை வைக்கிறார்களா என்று பார்த்து 'வணக்கம்' சொல்லும் இஸ்லாமியர்களுக்கு மறுமையில் தண்டனை விதிப்பானா என்று தெரியவில்லை. அப்படி அச்சப்பட்டால் வணக்கத்தை பின் தள்ளிவிட்டு வேண்டத்தக்கவன் அல்லது கும்பிடத்தக்கவன் இறைவன் என்று மாற்றிக் கொள்ளலாமே. நான் மற்றும்  எனக்கு தெரிஞ்ச இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பேர்  வணக்கம் தெரிவித்து அலைபேசியில் தொடங்குகி றோம்.  எங்களுக்கெல்லாம்  இறைவனுக்கு இணை வைப்பதாக நான் நினைக்கவில்லை.  ஏனெனில் மேலே சொன்னது போல் 'இறை'வன் என்று சொன்னாலே அதில் வேண்டுதல், அழைத்தல், கும்பிடுதல் என பல பொருள்களை உணர்த்தும் 'இறை' என்ற வினைத் தொகையுடன் தான் இருக்கிறது.

இறைவன் அல்லா, ஆண்டவராகிய ஏசு கிறித்து, இந்து கடவுள் என இறைவன், ஆண்டவன், கடவுள் என்ற சொல்லை மூன்று மதங்களும் பயன்படுத்துகின்றன. இந்த மூன்றும் தற்காலத்தில் ஒரே பொருளைக் குறித்தாலும் அரபியில் அல்லா எனச் சொல்லப்படுகின்ற சொல்லுக்கு நேரடி பொருள் கொண்டது தானா 'இறைவன்' என்ற சொல் என்று எத்தகைய ஆராய்ச்சியும் நடந்தது போல் தெரியவில்லை. ஏன் கடவுள் என்றோ, ஆண்டவன் என்றொ சொல்லுவதில்லை என்று தெரியவும் இல்லை. ஆனால் கும்பிடுதல், வேண்டுதல் என்ற பொருளில் 'வணக்கத்தை' எடுத்துக் கொண்டு அதை அவ்வப்போது விவாதமாக மாற்றி வருவதற்கு  நாம் முற்றுப் புள்ளி வைப்பது நல்லது.

இறைவன் மிகப் பெரியவன் தான், வணக்கம் மிகச் சிரியது இதற்கெல்லாம் இவ்வளவு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டுமா ? இறையச்சம், இறை வேண்டுதல் போன்ற அரபியில் பொருள் தரும் ஒரு சொல்லுக்கு (அரபி சொல் எது என்று தெரியவில்லை) பதிலாக 'வணக்கத்தை' பயன்படுத்துவது வெறும் மொழிப் பெயர்ப்பு சிக்கல் மட்டும் தானே.

வணக்கம் சொல்லுவது தவறு என்றால் 'ஹலோ' சொல்லுவது கூட தவறு தான். எனக்கு தெரிந்து ஹலோவுக்கு பதிலாகத்தான் பல இடங்களில் வணக்கம் பயன்படுகிறது. இஸ்லாமிய நண்பர்களில் பலர் கூட வணக்கம் என்றே அலைபேசியில் பேசத் தொடங்குகிறார்கள். இஸ்லாமியர்கள் எடுத்துக் கொள்ளும் வணக்கப் பொருள் 'ஹலோ' என்றால், ஹலோவுக்கு உரியவன் அல்லா, அல்லாவைத்தவிர யாருக்கும் ஹலோ சொல்லக் கூடாது என்று சொன்னால் அது சரியா ? வணக்கத்தை (மத)அரசியல் ஆக்குவது வெறும் மதவாதமாகத்தான் தெரிகிறது.

  தவறு இருந்தால் மன்னிக்கவும். அல்லாஹ்  மிகப்பெரியவன்.
இது முழுக்க முழுக்க என்னுடைகருத்து.
 
 
By- M.Ajmal Khan.

Tuesday, 11 September 2007

மனிதர்களின் பாதையும் பயணமும்....

படைப்பின் நோக்கம்
இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த பேரருளாளனின் படைப்புகள் அனைத்திற்கும் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. “மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர வேறொன்றுக்கும் படைக்கவில்லை “(திருக்குர் ஆன் 51 : 56) என்று இறைவன் திருமறையில் குறிப்பிடுவது போல் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் தங்களை படைத்த இறைவனை அறிந்து, அவனை வணங்கவும் அவனுடைய கட்டளைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, அவனுடைய கட்டளைகள் இப்பூமியில் நிலைபெற பாடுபடுதலேயாகும்.
செயல்களில் சிறந்தவர் யார் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு நாம் வாழ்வையும் மரணத்தையும் படைத்தோம்” என அல்லாஹ் கூறுகின்ற படி நம் வாழ்வின் நோக்கமே நம் அதிபதி நம்மை படைத்த நோக்கத்தை அறிந்து, அவனுடைய கட்டளைக்கு ஏற்ப வாழக் கூடிய மக்களாக மாற வேண்டும். இறைவனின் பேரருளால் நாம் அனைவரும் முஸ்லீம்களாக இருக்கிறோம். ஏனென்றால் நாம் முஸ்லீமாக இருப்பது அல்லாஹ்வின் மாபெரும் அருளாகும். மனிதர்களில் புனிதர்களான நபிமார்களின் உறவுகளுக்கு முஸ்லீமாக வாழக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. நபி நூஹ் (அலை) அவர்களின் மகன், நபி லூத் (அலை) அவர்களின் மனைவி, நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தந்தை, ஏன் நமது உயிரினும் மேலான முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தைக்கு கிடைக்காத பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிறான்.
முஸ்லீமாக உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளல், ஐவேளை தொழுதல், நோன்பு நோற்றல், அவர்களின் பொருளாதார சக்திக்கேற்ப ஜகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல் ஆகியவை கண்டிப்பாக செய்ய வேண்டிய கடமை என்பதை நாம் அனைவரும் தெரிந்திருக்கிறோம். ஆனால் ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டிய கடமையை பற்றி திருமறையில் கீழ் காணும் வசனத்தில் இறைவன் குறிப்பிட்டு காட்டுகிறான் : “நம்பிக்கையாளர்களே ! நீங்கள் தான் மனிதர்களில் தோற்றுவிக்கப்பட்டவர்களில் மிகச் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் மனிதர்களை நன்மையான காரியங்களை செய்யும் படி ஏவி, தீமையான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்” (திருக்குர்ஆன் 3 : 110) .

முஸ்லீம் என்றால் ?
முஸ்லீம் எனும் சொல்லுக்கு கட்டுபட்டவன் என்று நேரடியாக பொருள்படும். நாமும் கட்டுபட்டவர்களாக தான் இருக்கிறோம். யாருக்கு என்பதில் தான் தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறோம். நம்மில் சிலர் நம் தலைவர்களுக்கு, முன்னோர்களுக்கு, மனிதனின் மனோ இச்சைகளுக்கு, மனித சபலங்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம். இஸ்லாமோ முஸ்லீமை எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும் விடுதலை செய்து இறைவனுக்கு மட்டும் முழுமையாக கட்டுபட்டவர்களாக ஆக்கவே விரும்புகிறது. இறைவனும் திருமறையில் ”அல்லாஹ்வுடைய நேரான வழியை விட்டும் தன் மனோ இச்சையை பின்பற்றுபவனை விட வழி கெட்டவன் எவனுமுண்டா?” (திருக்குர் ஆன் 28:50) என்று கேள்வி எழுப்புகிறான்.
“நம்பிக்கையாளர்களே ! நடுநிலை சமுதாயமாக உங்களை நாம் ஆக்கினோம், நீங்கள் பிற மனிதர்களுக்கு சாட்சியாக இருப்பதற்காகவும், நம்முடைய தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பதற்காகவும்” என்று இறைவன் திருமறையின் 2:143-ல் சொல்லிக் காட்டுகின்ற படி நாம் நம்முடைய சொல்லாலும், செயலாலும் இம்மார்க்கத்திற்கு சாட்சியாளர்களாக விளங்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது எப்படி அவர்களின் வாழ்வு திருக்குர்ஆனாக இருந்தது என்று சொன்னார்களோ அது போல் நம்முடைய சொல், சிந்தனை, எழுத்து, பணி, போராட்டம், ஒன்றுகூடல் என அனைத்துமே குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அமைய வேண்டும். சுருங்க சொன்னால் நாம் நடமாடும் திருக்குர்ஆனாக, திருக்குர்ஆனின் விளக்கவுரைகளாக திகழ வேண்டும். நம் ஓட்டு மொத்த வாழ்வும் பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கிய வழித்தடத்திலேயே அமைய வேண்டும்.

நபிகளாரின் பயணம்மனிதர்களை வழிநடத்த இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு நபிமார்களை வெவ்வேறு பிரதேசங்களுக்கு அனுப்பினாலும் அனைவரும் ”அல்லாஹ்வை தவிர வேறு யாரும் வணங்காதீர்கள்” என்ற ஓரே அடிப்படை செய்தியை தான் சொன்னார்கள். எனவே எல்லோரின் அடிப்படை நோக்கமும் இறைவனுக்கு முற்றிலும் கட்டுபடக் கூடிய மக்களை உருவாக்குவதாக தான் இருந்தது. நபி (ஸல்) அவர்களும் தன் தூதுத்துவ பயணத்தில் முதலில் தனிப்பட்ட நபர்களை தூய்மைப்படுத்தி, அவர்களின் பண்புகளை செம்மைபடுத்தி அவர்களை செதுக்குகின்ற வேலையை தான் செய்தார்கள். அதன் பிறகு அந்த தனிப்பட்ட நபர்களை கொண்டு நன்மையை ஏவி, தீமையை தடுக்கின்ற குர் ஆனின் படி வாழும் ஒரு ஒப்பற்ற சமூகத்தை சமைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக தீனை மேலோங்க செய்யும் விதமாக இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள்.
இஸ்லாத்தின் அடிப்படையிலான ஆட்சி நிலைபெறும் போது தான் தீன் முழுமைப்படுத்தப்படும் என்பதை அல்லாஹ்வின் தூதர் நன்றாக உணர்ந்திருந்ததால் தான் அதை இலக்காக கொண்டே அவரது பாதையின் ஒவ்வொரு எட்டும் இருந்ததை ஸீராவை ஆழமாக படித்தால் உள்வாங்கி கொள்ளலாம். அதிகாரம் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் அஞ்சுபவர்களின் கையில் கொடுக்கப்படும் போது தான் தவ்ஹீதை கூட ஒரு மனிதனால் முழுமையாக கடைப்பிடிக்க முடியும். அவ்வாறு இல்லையென்றால் நம் வாழ்வின் பெரும்பகுதி தவறான சட்ட திட்டங்களுக்கு பலியாகி நம் வாழ்வின் சிறிய பகுதியில் மட்டுமே அல்லாஹ்வின் அடிமைகளாக இருக்க முடியும், அதுவும் அரசு அனுமதி கொடுக்கும் வரையில் மட்டுமே. உதாரணத்துக்கு நீதி வழங்குதல், அமைதியை ஏற்படுத்துதல் போன்றவை ஓர் அரசால் மட்டுமே முடியும். தனி மனிதனாகிய நம்மால் அதிகபட்சம் மது அருந்தாமல், விபசாரம் செய்யாமல் இருக்கலாமே தவிர அவைகளை முற்றிலும் ஒழிப்பது என்பது ஓர் அரசாங்கத்தால் மட்டுமே முடியும். எனவே ஒரு மனிதன் இஸ்லாமிய அடிப்படையில் வாழ ஆசைப்பட்டால் அதற்கேற்ற சூழ்நிலையை ஒரு இஸ்லாமிய அரசால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

தீனை மேலோங்க செய்யல்அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து அவர்கள் வெறுத்த போதிலும் எல்லா மார்க்கங்களையும் அது மிகைத்தே தீரும் என்று திருமறையின் 61 : 9 –ல் எல்லாம் வல்ல இறைவன் குறிப்பிடுவது போல் அவன் தன்னுடைய தூதரை அனுப்பியதின் நோக்கம் தீனை முழுமைப்படுத்துதல் என்பதை தெளிவாக உணரலாம். இதை மேலும் வலுப்படுத்தும் செய்தியை பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வில் நாம் காணலாம். நபி (ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாமிய பிரசாரத்தை மக்கத்து மண்ணில் முழு வேகத்துடன் எடுத்து சென்ற போது அதை தடுத்த நிறுத்த எத்தனையோ வழி முறைகளை கையாண்டு தோற்று போன குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு சமரசத் திட்டத்தை கொண்டு வருகின்றனர். இப்பிரசாரத்தை பெருமானார் அவர்கள் நிறுத்தி விட்டால் அதற்கு பகரமாக மக்காவில் உள்ள அழகான பெண்ணை மணமுடித்து கொடுப்பதாகவும் அல்லது செல்வக்குவியலையே அளிப்பதாகவும் அல்லது மக்கத்து ஆட்சியை கொடுப்பதாகவும் பேரம் பேசினர். அப்பேரத்துக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில் வரலாற்றில் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றால் அது மிகையான ஒன்று அல்ல. நபி (ஸல்) அவர்கள் தீர்க்கமாக சொன்னார்கள் “ இந்த குறைஷிகள் என்னுடைய ஒரு கையில் சூரியனையும் ஒரு கையில் சந்திரனையும் கொடுத்தாலும் இந்த பணியை நான் விட மாட்டேன். ஒன்று அப்பாதையிலே என்னுடைய உயிர் போக வேண்டும் அல்லது இந்த தீன் இவ்வையகத்திலே மேலோங்க வேண்டும்”.
மேற்காணும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் விளக்கத்தின் அடிப்படையில் சிந்தித்து பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் சென்ற பாதையின் இலக்கு தீனை மேலோங்க செய்வதே என்பதை நன்கு உணர்ந்து கொள்ளலாம். ஒரு கொள்கை வெற்றி பெற வேண்டுமானால் அதை எதிர்க்கும் பிற கொள்கைகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். இஸ்லாம் அல்லாத அனைத்து கொள்கைகளும் இஸ்லாத்துக்கு எதிரானவையே. இஸ்லாத்தின் தாரக மந்திரமான லாயிலாஹ இல்லல்லாஹ் என்பது வெறும் சொல்லல்ல. வெறும் சொல்லாக இருந்தால் வானங்களையும் பூமியையும் படைத்தது அல்லாஹ் என்று நம்பிக்கை கொண்ட குறைஷிகள் நிச்சயம் இவ்வளவு தீவிரமாக எதிர்த்திருக்க மாட்டார்கள். மாறாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இனி செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை கொண்டு ஏழைகளை அடிமைப்படுத்த முடியாது, கோத்திரத்தின் பெயரை சொல்லி எளியவர்களை சுரண்ட முடியாது, அனைத்து அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமாகி விடும் என்பதை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் எதிர்த்தார்கள்.
தீனை மேலோங்க செய்யும் பணிக்காக தூதரை அனுப்பியதாக சொல்லும் இறைவன் அப்பாதையில் செல்ல துடிக்கும் முஸ்லீம்களுக்கு அதற்கான வழியையும் அடுத்தடுத்த வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான். அழகான வியாபாரத்துக்கு அதனை ஒப்பிட்டு விட்டு தீனை மேலோங்க செய்ய ஆசைப்படுபவர்கள் முதலில் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் நம்பிக்கை கொள்வதோடு இப்பாதையில் தங்களது பொருட்களையும், உயிர்களையும் கொண்டு போராட வேண்டும். ஏனென்றால் நபிமார்கள், ஸஹாபாக்கள் கடந்து சென்ற இப்பாதை மலர்கள் தூவிய மென்மையான பாதையல்ல. நபி (ஸல்) அவர்களை பார்த்து ஒரு மனிதர் நான் தங்களை நேசிக்கிறேன் என்று சொன்ன போது பெருமானார் சொன்ன பதில் நம்மை இப்பாதையில் பயணிப்பதின் கடினத்தை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்கள் சொன்னது என்னவென்றால் அப்படியென்றால் பசி பட்டினிகளை சமாளிப்பதற்குரிய வழிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அப்படி இப்பாதையில் செல்பவர்களுக்கு, தீனை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் புகுத்துவதாக வாக்குறுதி அளிப்பதோடு, அல்லாஹ்வின் உதவியும் அவர்களுக்கு உண்டு என நற்செய்தி கூறுகிறான். இப்படி அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றுதலும், அதனை பரப்புவதும், அதனை இம்மண்ணில் மேலோங்க செய்வதும் ஆகிய இப்பணியை தான் ”நன்மையை ஏவி தீமையை தடுத்தல்”, ”சத்தியத்தை பரப்புதல்”, ”இகாமத்தே தீன்”, “தீனை நிலைநாட்டுதல்” என பல்வேறு பெயர்களில் சொல்லப்படுகிறது.

அனைத்து நபிமார்களின் பணிமேற்காணும் பணியை பற்றிய விரிவான விளக்கத்தை கீழ்காணும் திருமறை வசனத்தை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
“ நூஹ்வுக்கு எதனை உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே (நபியே) நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள். ஆகவே அவர்களை நீங்கள் அழைக்கும் போது, இணைவைத்து வணங்கும் அவர்களுக்கு பெரும் பளுவாக தோன்றும். அல்லாஹ் தான் விரும்பியவர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்” (திருக்குர்ஆன் 42:13).
மேற்காணும் திருமறை வசனத்தை ஆழ்ந்து சிந்தித்தால் எல்லா நபிமார்களின் பணியும் தீனை நிலைநாட்டுவதாக தான் இருந்தது என்பதை நன்கு உணரலாம். இவ்வையகத்திற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் மக்களிடத்தில் சொன்ன செய்தி ஒன்று தான் என்பதை கீழ்காணும் திருமறை வசனத்தின் மூலம் உணரலாம்.
அ நிஹ்புதல்லாஹ் வஜ் தனிபூத் தாகூத் வதாலிக தீய்னுல் கய்யூம்” – அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள், தாகூத்துக்கு அடிபணியாதீர்கள். இது தான் நேரான மார்க்கம். முஜாஹித் போன்ற திருமறை விரிவுரையாளர்கள் தாகூத் என்பதற்கு அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறி நடப்பவன் என்று கூறுகின்றனர். எனவே தாகூத் என்பது அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும், அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்கும் பிர் அவ்ன், நம்ரூத் போன்றவர்களை மட்டுமல்ல மக்களின் மனோஇச்சைகளின் அடிப்படையில் உருவான சட்டங்களை இயற்றும், உருவாக்கும், அதற்காக போராடும் அனைவரையும் குறிக்கும். அப்படிப்பட்ட தாகூத்திய சக்திகளை எதிர்த்து போராடுவது அனைவர் மீதும் கடமையாகும்.
அல்லாஹ் இவ்வசனத்தில் முதலாவதாக குறிப்பிடுகின்ற நூஹ் (அலை) அவர்கள் 950 ஆண்டுகள் இத்தீனை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டும் வெகு சொற்பமானவர்களே அவர்களை பின்பற்றினர். சத்தியத்தை நிலைநாட்டும் பணியில் சிறு குழு மட்டுமே ஈடுபடும். இறைவனே திருமறையில் சொல்வது போல் பெரும்பான்மையினரின் விருப்பங்களை பின்பற்றினால் சத்தியத்தை விட்டு பிறழ்ந்து போகும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. அடுத்ததாக குறிப்பிடப்படும் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு சமுதாயமாகவே திகழ்ந்தார்கள். அந்த ஏகத்துவ ஏந்தலின் தியாகத்தின் சுவடுகள் இன்றளவும் ஹஜ்ஜில் நினைவு கூறப்படுமளவு ஆழமானவை.

மூஸா (அலை) சமர்பித்த செய்தி
மூஸா (அலை) பிர் அவ்னிடம் சென்று தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் (43:46) என்று அறிமுகப்படுத்திய போது பிர் அவ்ன் உடனே அல்லாஹ்வை ஏற்றுக்கொள்வோன் என்றோ ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றோ கூறவில்லை. மூஸா (அலை) அவர்கள் வெறும் இறைவனை ஸுஜீது செய்வதற்கோ அல்லது சில சடங்குகளை செய்வதன் பால் மாத்திரம் அழைக்கவில்லை, மாறாக முழுமையான அதிகாரம் அல்லாஹ்விடத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனும் முழக்கத்துடனே வந்திருக்கின்றார்கள் என்பதை தெளிவாக பிர் அவ்ன் உணர்ந்ததால் தான் பிர் அவ்ன் உடனே தன் மக்களை பார்த்து கேட்டான் “என்னுடைய மக்களே ! இந்த தேசத்தின் ஆட்சி என்னுடையதல்லவா?” (43:51) என்று தான் கேட்டான். சுருங்கச் சொன்னால் நம் சமுதாய தலைமைகளை விட பிர் அவ்ன் இகாமத் தீனை தெளிவாக புரிந்து வைத்திருந்தான்.

முஹம்மது (ஸல்) சமர்பித்த செய்திநபிமார்களின் இறுதி முத்திரை முஹம்மது (ஸல்) சத்திய பிரசாரத்தை மக்கத்து மண்ணில் செய்த ஆரம்பக் கட்டத்தில் வெகு சொற்பமானவர்களே இஸ்லாத்தில் இருந்தார்கள். இஸ்லாத்தில் இருப்பவர்களை துன்பப்படுத்துவது பெரும்பான்மை இஸ்லாமிய எதிரிகளின் வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் பனூஅம்ரு பின் ஹாஷா எனும் கோத்திர தலைவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஸ்லீம்கள் தங்கள் மார்க்க கடமைகளை செய்வதற்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் அதற்கு பதிலாக முஸ்லீம்கள் ஆட்சி அதிகாரம் பெறும் போது தங்கள் கோத்திரத்துக்கு அதில் பங்களிக்க வேண்டும் என்று கோரினார். ஆட்சி, அதிகாரம் கிடைப்பது ஒரு புறம் இருக்க, தங்களை அடித்தால் கூட கேட்பதற்கு ஆளில்லா நம்மை விட வெகு பலவீனமான நிலையில் இருந்த போது கூட அண்ணலார் (ஸல்) அக்கோரிக்கையை மறுத்ததோடு “ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது” என்று முழங்கினார்கள்.
இகாமத்தே தீன் என்பது எல்லா நபிமார்களின் பணி மாத்திரமல்ல, அவர்களை வாய்மையோடு பின்பற்றிய சத்திய சீலர்களும் அவ்வழித்தடத்திலே பயணம் செய்துள்ளனர் என்பதை வரலாற்று சுவடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவ்வுலகை படைத்தவன் எவனோ அவனுடைய சட்டங்கள் தான் இவ்வுலகை ஆளவேண்டும் என்பதை பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும். வானுக்கு அதிபதி தான் பூமிக்கும் அதிபதி எனும் உண்மையை மக்களின் உள்ளங்களில் ஆழப் பதியச் செய்யும் ஒரு செயலே இகாமத்தே தீன் என்றும் சொல்லலாம். முகீரா பின் ஷுஐபா (ரலி) ருஸ்தும் மன்னனிடம் படையெடுத்து சென்ற போது படையெடுப்பின் நோக்கத்தை பற்றி சொன்னார்கள் “மக்களை மனிதர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் அடிமைகளாக மாற்றவே வந்திருக்கின்றோம்” என்று தீனை நிலைநாட்டுதலின் விளக்கத்தை சொன்னார்கள்.

ஒற்றுமை
மேற்கண்ட திருமறையின் 42:13ம் வசனத்தில் தீனை நிலைநாட்டுங்கள் என்று சொல்லி விட்டு அதில் பிரிந்து விடாதீர்கள் என்றும் அல்லாஹ் அறிவுறுத்துகிறான். எனவே இஸ்லாத்தை முழுமையாக பின்பற்ற விரும்புபவர்கள், இஸ்லாத்தை இம்மண்ணில் ஆளும் கொள்கையாக நிலை நாட்ட விரும்புவர்கள் தனித் தனித் தீவுகளாக பிரிந்து இருக்க கூடாது. மாறாக அனைவரும் ஒரு கூட்டமைப்பாக ஒரு தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாத்துக்கு எதிரான ஜாஹிலிய்யா சக்திகள் இஸ்லாத்தை நசுக்க ஓரணியில் திரண்டு நிற்கும் போது இஸ்லாத்தை நிலைநாட்ட போராடும் இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் ”ஜமாத் இல்லாமல் இஸ்லாம் இல்லை, தலைமை இல்லாமல் ஜமாத் இல்லை, அடிபணிதல் இல்லாமல் தலைமைத்துவம் இல்லை” என்று சொன்னபடி இஸ்லாம் ஜமாத்தோடு இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதனால் தான் இஸ்லாத்தின் தலையாய கடமையான தொழுகையை தனியாக தொழுவதை விட ஜமாத்தாக தொழுவதற்கு 27 மடங்கு நன்மை உள்ளது மாத்திரமல்ல, அல்லாஹ்வின் தூதரும் யார் தக்க காரணமின்றி தனியாக வீட்டில் தொழுகின்றாரோ அவர்களின் வீடுகளுக்கு சென்று தீ வைத்து எரித்து விட என் மனம் நாடுகிறது என்று ஜமாத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறதை பார்க்கின்றோம். அது போலவே ஜும்மா தொழுகை, நோன்பு, ஜகாத், சர்வதேச சகோதரத்துவ மாநாடாகிய ஹஜ் அனைத்தும் ஜமாத்தின் அவசியத்தை வலியுறுத்துவதை பார்க்கின்றோம்.

தலைமைத்துவம்
தலைமைத்துவத்துக்கும் இஸ்லாம் அழுத்தமான முக்கியத்துவம் கொடுப்பதற்கு நபிகளாரின் ஸீராவில் பல உதாரணங்களை பார்க்கலாம். பருவ வயதை அடைந்து விட்ட பெண்ணுக்கு திருமணம் செய்வது, ஜமாத் தொழுகையை பிற்படுத்துதல், ஜனாஸாவை அடக்கம் செய்தல் ஆகியவை பிற்படுத்த கூடாத செயல்கள் என்பது நமக்கு நன்றாக தெரியும். நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு மாத்திரமல்ல, எல்லா முஸ்லீம்களுக்கும் உயிரினும் மேலானவர்கள். அந்த அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்து விடுகிறார்கள். குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. சுயநலன்களுக்காக இஸ்லாத்தில் இருந்த ஒரு சிறு கூட்டம் இது தான் சமயம் என்று இஸ்லாத்தை விட்டே வெளியேறுகின்றது. இன்னொரு கூட்டம் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று இஸ்லாத்தின் சில கடமைகளை மறுக்கிறது. உமர் (ரலி) போன்ற ஸஹாபாக்கள் நபி (ஸல்) இறந்து விட்டதை நம்ப முடியாமல் உணர்ச்சி வசப்படுகிறார்கள். யாராவது பெருமானார் இறந்து விட்டதாக சொன்னால் அவரது தலையை கொய்து விடுவேன் என்று எச்சரிக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட நபிகளாரின் உடல் அடக்கப்படும் முன் அங்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மேற்காணும் சம்பவத்தை சிந்தித்து பாருங்கள். நபி (ஸல்) அவர்களின் உடல் அடக்கப்படும் முன்னால் அங்கு ஒரு தலைமை தேர்ந்தெடுக்கப்படுகிறது என்றால் இந்த சமுதாயம் ஒரு நொடி கூட தலைமை இல்லாத சமுதாயமாக நாதியற்று போய் விடக் கூடாது என்பதால் தான். மக்காவில் இருந்த போதும், மதீனாவில் இருந்த போதும், சிறுபான்மையினராக இருந்த போதும், சமுதாயமாக மிளிர்ந்த போதும், போர்க்களங்களிலும், வியாபார பிரயாணங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் ஒரு தலைமை இல்லாமல் இச்சமுதாயம் இருந்ததில்லை. உமர் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டு மரணத்தருவாயில் தன்னை நபி(ஸல்) மற்றும் அபூபக்கர் அடக்கம் செய்த இடத்திற்கு பக்கத்திலேயே அடக்கம் செய்ய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அனுமதி கேட்குமாறு தங்கள் மகன் இப்னு உமரை அனுப்பிய போது அனுமதி கொடுத்து விட்டு அவர்கள் அத்தருணத்திலும் உமர் (ரலி) அவர்களை அவருக்கு பின் ஒரு ஆட்சியாளரை நியமித்து விட்டு செல்ல சொன்னார்கள்.

1924 வரை தொடர்ந்த தலைமைத்துவம்
உதுமானிய கிலாபத்தின் கடைசி கலீபா இரண்டாம் அப்துல் ஹமீது (ரஹ்) அவர்களின் காலத்தில் நாடோடி யூதர்கள் தங்கள் பொருளாதார பலத்தை கொண்டு பலஸ்தீனத்தின் நிலங்களை அபகரித்து கொண்டிருந்த போது இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் யூதர்களுக்கு நிலங்களை விற்பதை தடை செய்து அரசாணை வெளியிடுகிறார்கள். தங்கள் சியோனிஸ கனவுக்கு தடையாக அமைந்த இவ்வரசாணையை விலக்கிக் கொள்ள சுல்தான் அப்துல் ஹமீதை சந்தித்த யூதர்களின் குழு உதுமானிய கிலாபத்தின் அத்துணை கடன்களையும் அடைத்து விடுவதாகவும் மேலும் பொருளாதார உதவிகளையும் அளிப்பதாகவும் வாக்களித்த போது அதற்கு பகரமாக கலீபா சொன்னார்கள் “பலஸ்தீனம் என்னுடைய பரம்பரை சொத்தல்ல, நான் நினைத்த மாதிரி கொடுப்பதற்கு, இது முஸ்லீம்களின் சொத்து. இந்த பகுதி முழுவதும் முஸ்லீம்களின் குருதியால் பயிரிடப்பட்டிருக்கின்றது. பலஸ்தீன மண்ணில் ஒரு பகுதியை கொடுப்பதை விட என் உடம்பில் ஒரு பகுதியை கொடுப்பது எனக்கு எளிதாக இருக்கும். என்னுயிர் உள்ள வரை அரசாணை விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது” என்று தெளிவாக சொன்னார்கள்.

கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு
முஸ்லீம்களின் கிலாபத் உள்ள வரை யூதர்களால் இஸ்ரேலிய கனவு தேசத்தை மெய்ப்படுத்த முடியவில்லை. அது மாத்திரமல்ல கிலாபத்தின் கடைசி கால கட்டங்களில் புதுச்சேரியில் உள்ள நிரவியில் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாயில் வழியாக எடுத்து செல்ல சங் பரிவாரங்கள் திட்டமிட்ட போது நிரவியின் ஜமாத் தலைவர் சுல்தான் அப்துல் ஹமீது (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதி கலீபாவும் புதுச்சேரியை கையகப்படுத்தியிருந்த பிரெஞ்சு அரசாங்கத்திடம் பேசி ஊர்வலப்பாதையை மாற்றியதை வரலாற்றின் ஏடுகளில் காண்கின்றோம். ஆனால் எப்போது கிலாபத் ஜாஹிலிய்யா கொள்கைகளான தேசியவாதம், மதசார்பின்மை போன்றவற்றை முஸ்லீம்களின் உள்ளத்தில் ஊடுறுவி வெட்டி வீழ்த்தப்பட்டதோ, அப்போதிலிருந்தே முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தட்டிக் கேட்கவும் ஆளில்லா நிலைமைகளை பார்க்கின்றோம். 55 முஸ்லீம் நாடுகள் இருந்தும், 4-ல் 1 பங்கு மனித வளம் இருந்தும், கறுப்பு தங்கம் என்று சொல்லப்படும் பெட்ரோல் வளம் உள்ளிட்ட கனிம வளங்கள் இருந்தும் தங்களுடைய சொந்த நாடான பலஸ்தீனத்தில் முஸ்லீம்கள் யூதர்களால் அகதிகளாக்கப்பட்டாலும், ஓரே இரவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தங்கள் உடமைகளை இழந்து இலங்கையில் புலிகளால் வெளியேற்றப்பட்டாலும், கலாசாரத்தை உலகுக்கு கொடுத்த ஈராக் பெட்ரோலுக்காக அமெரிக்காவால் மனிதர்கள் வாழ முடியா காடாக மாற்றப்பட்டாலும், எம் சொந்த நாட்டிலேயே மோடிக்களால் கருவிலிருக்கும் குழந்தை உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டாலும் தட்டிக் கேட்க யாரும் இல்லா அவல நிலையை நிதர்சனமாக பார்க்கின்றோம்.
கிலாபத் வீழ்ச்சிக்கு பிறகு ஓரே தேசமாக இருந்த இச்சமுதாயம் 55 நாடுகளாக பிளவுபட்டு கொண்டிருப்பது மட்டுமல்ல, அதில் பெருமிதமும் கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலத்தை பற்றி முன்னறிவிப்பு செய்தார்களே “ ஒரு காலம் வரும். பிற சமுதாயங்கள் உங்களை நோக்கி இரையை நோக்கி பாயும் பிராணியை போல் பாயும் என்று சொன்ன போது ஸஹாபாக்கள் நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்போமா என்று சொன்ன போது இல்லை உங்களிடத்தில் வஹ்ன் இருக்கும் என்று சொன்னார்கள். வஹ்ன் என்றால் என்ன என்று ஸஹாபாக்கள் கேட்ட போது மரணத்தை கண்டு பயமும் உலகத்தின் மீதான ஆசையும் என்று சொன்ன கால கட்டத்தில் வாழ்கிறோமோ என்று பயப்பட வேண்டி உள்ளது என்றால் அது மிகையானதல்ல.
கிலாபத் வீழ்ச்சிக்கு பிறகு கர்ஸன் சொன்னார் “முஸ்லீம் உம்மத்தின் முதுகை முறித்து விட்டோம்”. இன்று ஏகாதிபத்திய சக்திகள் கிலாபத் மீள் உருவாக்கலை நினைத்தே அஞ்சிக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் ஈராக் போரின் போது அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் அதை சிலுவை போருக்கு அதாவது, பைத்துல் முகத்தஸை ஆக்கிரமித்த கிறிஸ்துவ படைக்கும் தீனை நிலைநாட்ட போராடிய இப்பூமி பெற்றெடுத்த வீரமகன் சுல்தான் ஸலாஹீத்தின் அய்யூபிக்கும் நடந்த போராட்டமாக சித்தரித்தார். அதனால் தான் 42:13 ம் வசனத்தில் அல்லாஹ் அது காபிர்களுக்கு சுமையாக இருக்கிறது என்கிறார். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும், கிலாபத்தின் பால் அழைக்கப்படுதல், அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்று சொல்வது முஸ்லீம்களில் சிலருக்கே பாரமாக இருக்கிறது.

பயணம் செய்ய தேவையான தகுதி
மேற்கண்ட வசனத்தின் இறுதியில் இந்த தீனை நிலைநாட்டும் பணியில் அல்லாஹ் தான் விரும்பியவர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் என்று இறைவன் கூறுகிறான். அல்லாஹ் நம்மை இந்த இகாமத்தே தீனுடைய பணியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு நிபந்தனையாக யார் அவனை நோக்கி வருகிறார்களோ அவர்களை தேர்ந்தெடுப்பதாக கூறுகிறான். எனவே இத்தீனை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுபவர்கள் இறைவனை நோக்கியே தங்களுடைய பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும். அவர்களுடைய எல்லா செயல்களிலும் இறைவனின் திருப்பொருத்தத்தையே நாட வேண்டும். சுருங்கச் சொன்னால் இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட துஆவை போல் இப்பாதையில் பயணிப்பவர்களின் தொழுகை, நேர்ச்சை, குர்பானி, தியாகம், வாழ்வு, மரணம் எல்லாமே அல்லாஹ் ஒருவனுக்காகவே, அவனுடைய திருப்தியை பெறுவதற்காகவே அமைய வேண்டும்.

பயணிக்க வேண்டிய பாதை
தீனை நிலைநாட்டும் பயணத்தில் தங்களை இணைத்து கொண்டவர்கள் தங்கள் பயணத்திற்கான இலக்கை அடைய எப்பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தை பொறுத்த வரை நோக்கத்தை போல் வழிமுறையும் முக்கியமானது. இறைவனின் திருப்தியை நோக்கமாக கொள்வது போல் அதை அடையும் வழிமுறையும் பெருமானாரின் வழித்தடமாக இருக்க வேண்டும். இவ்வுலகில் ஃபிரெஞ்சு புரட்சி, ரஷ்யப் புரட்சி என நிறைய புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இப்புரட்சிக்கான சிந்தனையை பேச்சின் மூலம் எழுத்தின் மூலம் விதைத்தவர்கள் களப்போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஈடுபட்டவர்கள் அப்போராட்டம் முழுமையடையும் வரை அதற்கான தலைமைத்துவத்தை வழங்க முடியவில்லை. உலகிலியே “லா இலாஹ இல்லல்லாஹ் “ எனும் புரட்சி முழக்கத்தை வைத்து இவ்வையக்த்திலேயே மிகப் பெரும் புரட்சியை செய்து மனித குலம் கண்டிராத மிகப் பெரும் சமுதாயத்தை சமைத்த பெருமை அண்ணலாருக்கு மட்டுமே உண்டு. அந்த புரட்சி தூதரின் பயணத்தின் படிநிலைகள் மட்டும் குறிப்பிடப்படுகின்றன.

பயணத்தின் மைல்கற்கள்
1. தஃவத் இலா தவ்ஹீத்
நபி (ஸல்) அவர்கள் மக்கத்து மண்ணில் பிரசாரத்தை ஆரம்பித்த போது எத்துணையோ பிரச்னைகள் இருந்தன. எளியவர்களை வலியவர்கள் சுரண்டிக் கொண்டிருந்தனர். பெண்களை போகப்பொருளாக கருதிக் கொண்டிருந்தனர். குலம் கோத்திரத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. இச்சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்கள் எளியவர்களுக்கு போராடும் ஏழைப்பங்காளானாக இருந்திருந்தால் மக்கள் கூட்டத்தை தன் பின்னால் திரட்டி பின் எளிதாக சத்தியத்தை எடுத்து சொல்லியிருக்கலாம். அதே போல் முதலில் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் பெண்ணுரிமைவாதியாக இருந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பை குறைத்திருக்கலாம். இவையெல்லாம் தற்காலிக தீர்வுகளே என்பதனால் தான் அல்லாஹ் நிரந்தர தீர்வாகிய லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற புரட்சி முழக்கத்தை கொண்டு ஏகத்துவத்தை முழுமையாக நம்பும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவது மட்டும் தான் இப்பாதையின் முதல் மைல்கல் என்று தவ்ஹீதின் பக்கம் அழைப்பை கொடுத்தார்கள்.


2. ரிஸாலத்தின் அடிப்படையிலான ஜமாத்
நபி (ஸல்) மக்கத்து மண்ணில் தனித் தனி மனிதர்களை உருவாக்கிய போது நுபுத்துவத்தின் அடிப்படையிலான சிறந்த தலைமையாக விளங்கினார்கள். மதீனாவில் ஒரு சமூகமாக உருவான போது அவர்களை சகோதரத்துவ உணர்வு கொண்டு பிணைத்தார்கள். திருமறையில் அல்லாஹ் குறிப்பிடுவது போன்று பூமியில் உள்ள எந்த செல்வத்தை செலவு செய்தாலும் உருவாக்க முடியாத பாசத்தை அன்சாரிகளுக்கும் முஹாஜீர்களுக்கும் மத்தியில் ஏற்படுத்தினார்கள். முஹாஜீர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது அன்சாரிகள் தங்களிடமிருந்தவற்றில் பாதியை பங்கு கொடுக்குமளவுக்கு பாசத்தால் பிணைத்தார்கள். பல் வேறு கோத்திர, குல பிண்ணணி உள்ளவர்கள் மத்தியில் எந்த பிணக்கும் ஏற்படாமல், பிணக்கு ஏற்பட்டாலும் உடனே அதை முளையிலேயே கிள்ளி எறிந்து ஒரு அற்புதமான தலைமையை வழங்கினார்கள்


3. ஆஹிரத்தின் அடிப்படையிலான தஜ்கியத்நபி (ஸல்) மக்கத்து குறைஷிகளிடம் தவ்ஹீதை, ரிஸாலத்தை சொன்ன போது சந்தித்த எதிர்ப்புகளை விட மறுமையை பற்றி சொன்ன போது தான் அதிக எதிர்ப்புகளை சந்தித்தார். மண்ணோடு மண்ணாக மக்கி போய் விட்ட பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம் என்பதை நம்ப மறுத்த அதே சமூகத்தில் தான் விபசாரம் செய்த பிறகு அத்தவறை உணர்ந்த காமிதியா எனும் பெண்மணி யாருக்கும் தெரியாவிட்டாலும் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக்கப்படுவதை விட இவ்வுலகில் கல்லால் அடித்து கொல்லப்படுவதை விரும்பக்கூடிய அளவு அச்சமூகத்தை மறுமை நம்பிக்கையை அழுத்தமாக மனதில் பதிய வைத்து வார்த்தெடுத்தார்கள். ஸஹாபாக்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு தான் உருவாக்கப்பட்டார்கள். அதனால் தான் கடுமையான வேதனைகளை அனுபவித்த அம்மார் (ரலி) அவர்களுக்கு, அம்மாரின் எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவியிருக்கிறது என்று சொல்லும் அளவு தியாகம் செய்த அம்மாருக்கு சுவனம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று மறுமையை சொல்லி தான் ஆறுதல் சொன்னார்கள் . அதனால் தான் மக்கத்து சுடுமணலில் தினந்தோறும் கொடுமைப்படுத்தப்பட்ட பிலால் (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியில் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது ஒரு மனிதர் அவரிடம் தற்போது நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் தானே என்று கேட்ட போது பிலால் (ரலி) அவர்கள் “மக்கத்து சுடுமணலில் கொளுத்தப்பட்ட போது அஹதுன், அஹதுன் என்று சொன்னேனே, அப்போது சுவனத்தின் வாடையை நுகர்ந்து கொண்டிருந்தேன், அந்த நிம்மதி இப்போது இல்லை என்று சொன்னார்கள். இப்படியாக மறுமையின் அடிப்படையில் நபிகளார் அவர்களின் பண்பு நலன்களை செதுக்கினார்கள். அதனால் தான் பத்ர் போரின் வெற்றியை பற்றி எழுதும் வரலாற்றாசிரியர்கள் நபி (ஸல்) அவர்களின் பண்பு நலன்களை பற்றி இவ்வாறு எழுதுகின்றனர் “ பத்ரில் நபியை நிமிர்ந்து பார்த்த எதிரிகள் தோல்வியடைந்தனர்” என்று சொல்லும் அளவுக்கு நபிகளார் மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட ஸஹாபாக்களின் பண்பு இருந்தது.

4. சுயகட்டுப்பாடு
தீனை நிலைநாட்டும் பணியில் சுயகட்டுப்பாடு மிகவும் அவசியம். இப்பாதையில் பணியை தொடங்குவதற்கு முன்னமேயே பணியை விட்டு விடும் அளவு எதிர்ப்புகள் அலைகடலென திரண்டு வரும். அவற்றிக்கு உடனே பதிலடி கொடுக்க வேண்டுமென்ற ஆவேசத்தில் இலக்கை விட்டு விலகிடாமல் பொறுமை காக்க வேண்டும். ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) கொடுத்தது Positive (நேர்மறை) பயிற்சி என்றால் அபூஜஹல் போன்ற இஸ்லாமிய எதிரிகள் கொடுத்த Negative (எதிர்மறை) பயிற்சியும் ஸஹாபாக்களை புடம் போட உதவின. பெருமானார் (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் பள்ளத்தாக்கில் 3 வருடங்கள் சமூக பரிஷ்காரம் செய்யப்பட்ட போது புடம் போட்ட தங்கங்களாக மிளிர்ந்தனர். அதனோடு ஒப்பீடு செய்ய முடியாதெனினும் இஸ்லாமிய வாதிகளுக்கு சிறைச்சாலைகளில் மிகப் பெரும் துன்பம் இழைக்கப்படுவதை மறுக்க முடியாது. உண்மையிலேயே நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களை செதுக்கியதில் சிறைச்சாலைக்கும் பங்குள்ளது என்றால் அது மிகையானதல்ல. ஏனென்றால் ஒரு இஸ்லாமியவாதி சிறைச்சாலையின் கொடுமைக்கு உட்படுத்தப்படும் போது ஒன்று இப்பாதையை விட்டும் விலகிப் போய் விடுவான் இல்லையென்றால் இன்னும் புடம் போட்ட தங்கமாக மிளிர்கின்றான் என்பதை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம். அதனால் தான் நவீன பிர் அவ்ன்களால் ஷஹீத் சையத் குதுப் (ரஹ்) அவர்கள் சிறைப்படுத்தப்பட்ட போது அவரிடம் தீனை நிலைநாட்டும் பணியில் இருந்து விலகினால் சிறையிலிருந்து விடுவித்து கல்வி அமைச்சர் பதவி தருவதாக ஆசையுட்டப்பட்ட போது சையது குதுப் அவர்கள் “இந்த இஸ்லாத்தின் எதிரிகள் என்னை என்ன செய்து விட முடியும்?. என்னை சிறையில் அடைத்தால் அது அல்லாஹ்வுடனான உரையாடல், நாடு கடத்தினால் ஹிஜ்ரத், தூக்கிலிட்டால் ஷஹாதத்” என்று இப்னு தைமியா (ரஹ்) அவர்களின் வார்த்தையை மேற்கோள் காட்டினார்கள். ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கேட்கும் அளவு அலைக்கழிக்கப்பட்டார்கள் என்று திருமறை குறிப்பிடுகிறது. பொறுமையோடு இப்பணியில் தங்களை அர்ப்பணித்து கொண்டதால் ”அல்லாஹ்வின் உதவி சமீபத்தில் இருக்கிறது” என்று இறைவன் ஆறுதலளித்ததை பார்க்கின்றோம்.

5. எதிர்த்து போராடுதல்

நிச்சயமாக இஸ்லாமிய உம்மாவானது தனக்கென்று பலத்தை உருவாக்கிய பின்னால் அதை தக்க வைத்து கொள்ளவும், தன் ஆட்சியில் குழப்பம் இல்லாதொழிந்து மார்க்கம் அல்லாஹ்வுக்கு என்று ஆகும் வரை எப்போதும் போராடும் முனைப்புடன் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு சென்றவுடன் செய்த முதல் மூன்று முக்கிய காரியங்கள் 1. முஸ்லீம்கள், யூதர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தல். 2. அன்சாரிகளுக்கும் முஹாஜீர்களுக்கும் மத்தியில் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்துதல் 3. யூதர்கள் மற்ரும் பிற குழுக்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துதல் . ஒரு இஸ்லாமிய அரசு தன் பலம், பலவீனம் அறிந்து தற்காப்பு யுத்தம் நடத்தும் அதே வேளையில் வாய்ப்புகள் கிடைக்கும் போது தானாகவே சென்றும் தாக்குதல் நடத்தும். பத்ரில் கூட எளிதான வியாபார கூட்டம், வலிமையான படை என்று தேர்வு செய்யும் வாய்ப்பு வந்த போது இறைவன் அவர்கள் போரை தேர்ந்தெடுக்க வைத்ததை பார்க்கின்றோம்.

6. விரிவாக்கல்
இஸ்லாமிய ஆட்சியானது எப்போதும் தன் எல்லையுடன் திருப்திபட்டுக் கொள்ளாமல் சத்திய செய்தியை உலகம் முழுவதும் பரப்பி ஒட்டு மொத்த வையகத்திலும் இத்தீனை மேலோங்க செய்யும் வரை திருப்தியுராது. நபி (ஸல்) அவர்கள் மரணித்த வேளையில் கூட உஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை அனுப்பிய பிறகே அவர்களின் உயிர் பிரிந்ததை பார்க்கின்றோம்.


இப்படியாக ஒரு இஸ்லாமிய இயக்கம் மேற்கண்ட ஆறு படிநிலைகளையும் தாண்டாமல் இஸ்லாமிய அரசை நிறுவுவது சாத்தியமல்ல. அது ஓரே சமயத்தில் இரண்டு, மூன்று படிநிலைகளில் பயணிக்க வேண்டியும் வரலாம். எத்துணை சோதனைகள் வந்தாலும் இடர்பாடுகள் வந்தாலும் நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையிலேயே இஸ்லாத்தை நிலை நாட்டும் முயற்சி நடைபெற வேண்டும். ஜாஹிலிய்ய சிந்தனைகள் எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தாலும் எள்ளளவு, எள்ளின் முனையளவு, முனையின் மூக்களவும் சமரசம் செய்ய கூடாது. ஏனென்றால் இஸ்லாமும் ஜாஹிலிய்யாவும் எப்போதும் ஒன்று சேர முடியாது. அல்லாஹ்வின் சட்டங்கள் தான் இப்பூமியை ஆள வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு போதும் குறைமதி கொண்ட மனித சிந்தனையின் மனோஇச்சையின் உருவான சட்டங்களின் அடிப்படையில் போராடவோ, அசத்தியத்திற்கு சான்று பகர்வோர்களாகவோ ஆக கூடாது.


பாதையில் வெற்றி பெற
இறை வேதம், இறை தூதரின் வாக்கு மீது நம்பிக்கை
இஸ்லாமிய ஆட்சி மீண்டும் ஏற்படும் என்ற முழுமையான நம்பிக்கை ஒரு முஃமினுக்கு இருக்க வேண்டும். முஸ்லீம்கள் தற்போது இச்சமூகம் சந்தித்து வரும் சோதனைகளை, வேதனைகளை வைத்து நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் “அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்” (ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378). நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட முன்னறிவிப்பின் படி பார்க்கையில் நுபுத்துவம், கிலாபத்தே ராஷிதியா, பரம்பரை முடியாட்சி அனைத்தும் நீங்கி கொடுங்கோலர்களின் ஆட்சியில் இருக்கும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இஸ்லாமிய ஆட்சி ஏற்படும் என்பது உண்மை. இப்போது நம்முன் உள்ள கேள்வி அல்லாஹ்வும் அவனது தூதரும் அளித்த வாக்குறுதிகளை உண்மையாக நம்பி நம் காலத்தில் வந்தாலும், வரா விட்டாலும் எதிர்கால தொலைநோக்கு அடிப்படையில் அவனுடைய மார்க்கம் மேலோங்க உழைக்க போகிறோமா? அல்லது நம்முடைய பலவீனத்திற்கு நியாயம் கற்பித்து இஸ்லாத்தை இஸ்லாம் அல்லாத வழிமுறைகளின் மூலம் நிலைநாட்டுவதாக எண்ணி இஸ்லாம் ஹராமாக்கிய ஒன்றை செய்ய போகிறோமோ?. அல்லாஹ்வும் தன் திருமறையில் “ மனிதர்களே ! உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களைப் பூமிக்கு அதிபதிகளாக்கி போன்றே இவர்களையும் பூமிக்கு அதிபதியாக்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்” (அல்குர்ஆன் 24:55) என்று உற்சாகமளிக்கிறான்.

தியாகமும் மறுமை நம்பிக்கையும்
இந்தியாவில் வகுப்புக் கலவரங்களில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தை ஒரு கொள்கையாக எடுத்துச் சொன்னதற்காக, இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக நம் உயிரிழப்பும் அர்ப்பணிப்பும் மிக குறைவாகும். மக்காவின் சுடுமணலில் கொடுமைப்படுத்தப்பட்ட போது சுவனத்தின் வாடையை நுகர்ந்த பிலால் (ரலி), எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவியுள்ளது என்று தூதரால் சொல்லப்பட்ட அம்மார்(ரலி), முழு சொத்தையும் அண்ணலாரோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), செல்வந்தராக பிறந்து இறக்கும் போது உடலை மூடவும் வழியின்றி மரணித்த முஸைப் (ரலி) ஆகியோரைப் போல் நாம் மறுமையை மனதிலே சுமந்தால் தீனை நிலைநாட்டும் பாதையில் தியாகங்களும் நமக்கு எளிதாக தெரியும், நம் பாதையும் தெளிவாகும்.

முடிவுரை
”(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் 45:18) என்று இறைவன் குறிப்பிடுவது போல் நிச்சயமாக இஸ்லாம் ஒன்று மட்டுமே அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ள கூடிய மார்க்கமாக இருப்பது போலவே அதை அடையும் வழிமுறையும் ஒன்றாக தான் இருக்க முடியும். “Un Islamic are Anti Islamic” என்று சொல்வது போல் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் தவிர மற்ற அனைத்தும் ஜாஹிலிய்யாவே. அவற்றை விரும்பி பின்பற்றுவதும் அதன் அடிப்படையில் போராடுவதும் அதை நிலை நாட்ட போராடுவதும் நிச்சயமாக தடுக்கப்பட்ட ஒன்றே.

”உலகத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் முதலில் உங்கள் உள்ளத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துங்கள்” என்று ஹஸன் அல் ஹீஸைபி கூறியதை போன்று நாம் தனி நபராக இருந்தாலும் இப்ராஹீம் (அலை) அவர்களை போன்று ஒரு சமுதாயமாக நாம் செயல்பட வேண்டும். முதலில் நம்மை, நம் குடும்பத்தை, மஹல்லாவை, சமூகத்தை இஸ்லாமிய அச்சில் முழுமையாக வார்த்தெடுக்க நம் நேரம், உடல், பொருளாதாரம், உயிரையும் அர்ப்பணிப்போம். அல்லாஹ் திருமறையில் “நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) என்று குறிப்பிடுவது போல் நாம் விளங்கும் போது நிச்சயம் இந்த தீன் உலகை ஆளும் கொள்கையாக மாறும் இன்ஷா அல்லாஹ். எத்துனை அடிகள் எடுத்து வைத்தோம் என்பது முக்கியமல்ல. ஆனால் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழியில் இருக்கிறதா என்பது முக்கியம். பாதை தெரிகிறது என்பதற்காக மேற்கு நோக்கி பயணிப்பவன் ஒரு போதும் சூரிய உதயத்தை காண முடியாது.
.

ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள் !!!

No automatic alt text available.


ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.
1, திங்களூர் (சந்திரன்):
தரிசனம் நேரம் :1மணி நேரம்
காலை 6மணி
ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
2, ஆலங்குடி (குரு) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 7.30மணி
ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்
காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்
3, திருநாகேஸ்வரம் (ராகு) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 9.30
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் ஹ 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
4, சூரியனார் கோவில் (சூரியன்) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 11.00மணி
நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
5, கஞ்சனூர் (சுக்கிரன்) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 12.15
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :
தரிசனம் நேரம் :1மணி நேரம்
மாலை 4மணி
நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
7, திருவெண்காடு (புதன்) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 5.15மணி
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.
8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 6.15மணி
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்
9, திருநள்ளாறு (சனி) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
இரவு 8.00மணி

நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.
9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்….


Sunday, 9 September 2007

ஏங்க வைக்கும் காய் - ஏலக்காய்?

ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: எலெட்டாரியா (Elettaria), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.

ஏலக்காயின் பயன்கள்:உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)சமையலின் நறுமணமாக
ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
வட இரோப்பாவில் இனியங்களில் ஒரு இன்றியமையாத உள் பொருளாக
மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும்.

ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.
மருத்துவக் குணங்கள்:பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.
ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.

ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி.

இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய் இதன் காரணத்தால் மருந்துத் தயாரிப்பாளர்கள் பலரும் பயன்படுத்தி நோய்கள் விரைந்து குணமாகவும் உடலுறுப்புகளை தூண்டிவிடவும் பயன்படுத்துகின்றனர்.

நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.

ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.

இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம்.

நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.
அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5, 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

Saturday, 8 September 2007

“நான் இஸ்லாமியன் தான். “ அறிஞர் அண்ணா கூறுகிறார்..

“நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய ‘ஜமாஅத்’திலே நான் இல்லை”.

நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை. “ அறிஞர் அண்ணா.

பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.

பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.


சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம்.


ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.
இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது.

ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.

பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.

இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.

தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.


இருளும் ஒளியும்

இங்கு எனக்கு முன்பு பேசிய தோழர்கள் எல்லோரும், நல்ல முறையிலே, இஸ்லாமிய கோட்பாடுகளையும், நபிகள் நாயகத்தின் மாண்புகளையும் எடுத்துரைத்தார்கள். இங்கு பேசியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவும், இந்த இளைஞர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களாகவும், இருந்தார்கள் என்பதையறிந்து நான் மூன்று காரணங்களால் மகிழ்ச்சியடைகிறேன்.

இஸ்லாமிய இளைஞர்கள் நல்ல முறையிலே பேசிப் பழகவேண்டும் என்பது என் ஆசை; அதன்படி, பேசிய இளைஞர் அனைவருமே நன்றாகப் பேசினார்கள்.
இரண்டாவதாக, இஸ்லாமியருக்கும்-தி.மு.கழகத்தித் தொடர்பு அதிகம் இருப்பதால் சில முஸ்லிம் பெரியவர்கள் பயப்படுகிறார்கள். “அது தவறு” என்பதை எடுத்துரைத்தார்கள்.

மூன்றாவதாக, இஸ்லாமிய இளைஞர்கள் முகம்மது நபியின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவன் நான்.

இங்கு பேசியவர்கள் முகம்மது நபியைப் பற்றி நல்ல முறையிலே, எல்லோருக்கும் புரியும் வகையிலே, நல்ல தமிழிலே எடுத்துரைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பேசிய நண்பர்கள் கூறினார்கள்- இந்த விழாவில் அண்ணா கலந்து கொள்ளலாமா என்று யாரோ சிலர் கேட்டதாக நினைத்துக் கொண்டு, அதற்கு பதிலளிக்கும் வகையிலே பேசினார்கள்.

இப்பொழுதெல்லாம் அப்படி கேட்பதில்லை. அதற்கு பதிலாக, “இவ்வாண்டு அண்ணாதுரை ஏன் கலந்து கொள்ளவில்லை?” என்று தான் கேட்கிறார்கள். ஒரு 20, 25ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்கள் – முகம்மது நபி விழாவிலே அண்ணாதுரை கலந்து கொள்ளலாமா? என்று! ஆனால் இப்பொழுது கேட்பதில்லை.

எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு இன்று நேற்றல்ல – 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது.

நண்பர் ஒருவர் இங்கு பேசுகையில் நான் வெளியூரில் ஒரு விழாவிலே கலந்து கொண்டபோது யாரோ என்னை ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு நான் இன்ன விதத்தில் பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார். அதை உங்களிடத்திலே விளக்கமாகச் சொல்லுவதும் நல்லது என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டவருடைய பெயர் கூட எனக்கு நினைவிருக்கிறது.

“நீங்கள் இவ்வளவு நன்றாக முகம்மது நபியையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் இஸ்லாமியத்திலே சேர்ந்து விடக்கூடாது?” என்று அவர்கள் கேட்டார்கள்.

அவர்களுக்கு அளித்த பதில் இதுதான்: “இஸ்லாத்தில் மார்க்கக் கட்டளை என்றும், திட்டங்கள் என்றும் சில உண்டு.

இஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு ‘ஜமாஅத்’ என்று பெயர். இஸ்லாமிய கோட்பாடுகளை மார்க்கத் துறையை ஏற்று, அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கையுடையவர்களாக இருக்க வேண்டும்.

ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து, அதற்குப் பூசை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையிலே பார்த்தால் நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய ‘ஜமாஅத்’திலே நான் இல்லை”.

நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை.

என்வீடு மிக நல்ல வீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படிச் சரியில்லையோ, அதைப் போலத்தான் அது அமையும். என் வீட்டைப் பற்றி நான் பெருமைப் படுவதிலே ஆச்சரியமில்லை, ‘ஜமாஅத்’திலே சேராமலே இஸ்லாத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதில் தான் பெருமை.


எனக்கு முன் பேசியவர்கள் எச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியவர்கள் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளதை எடுத்துச் சொன்னார்கள்.

அந்தப் பெரியவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களானதால் அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது. எனவே, ஆயிரத்தோடு ஆயிரத்தொன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதிலே பெருமையில்லை.


யார் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த இனத்தில்-குலத்தில் பிறந்தவரானாலும் நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினால். இஸ்லாமிய சமூகத்தினர் வரவேற்கின்றனர்.

இந்நாட்டிலேயுள்ள இஸ்லாமியர்கள் சிறுபான்மையான மைனாரிட்டி சமூகமாக உள்ளவர்கள்; மற்றவர்கள் பெருவாரியான எண்ணிக்கையுள்ளவர்கள். இந்த இரு மார்க்கத்தாரிடையேயும் ஒற்றுமை நிலவ – அவர்களிடையே நல்ல தொடர்பும், சகோதரபாவமும் ஏற்பட இப்படிப்பட்ட திரு நாட்களை, பலரையும் அழைத்து நடத்துவது நல்லதாக அமையும்.

தென்னாட்டை பொறுத்த வரையில் இந்த ஒரு சமூகத்தாரிடையிலே என்றும் பகை ஏற்பட்டதில்லை. இரு சாராரிடையேயும் நல்ல தொடர்பு தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பார்த்தால் அங்குள்ள முஸ்லிம்களும் மற்ற சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பி என்று முறை வைத்துப் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம்.

வடநாட்டிலே இந்து – முஸ்லிம் கலகம் கொலை வெறியாட்டம் நடந்த போது கூடத் தென்னாட்டில் நல்ல தோழமை நிலவியது. அப்படிப்பட்ட தோழமை உணர்ச்சியும் ஒற்றுமைப் பண்பாடும் வளரச் செய்வது தி.மு.கழகப்பணிகளில் ஒன்றாகும்.

நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அவர் பிறந்த நாடு, அவர் காலத்திலிருந்த சூழ்நிலை, மத நம்பிக்கைகள், பிற்போக்கான சீர்கேடான நிலை, மூடநம்பிக்கைகள், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றிய துணுக்குகளை, நண்பர்கள் இங்கு உங்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார்.

மிகுந்த நெருக்கடியான – ஆபத்தான காலத்திலேயே வெற்றிகரமாக தமது இலட்சியங்களை நிறைவேற்றிக் காட்டினார்.

அதே போல் தி.மு.கழகமும் மூன்று துறைகளில் பணியாற்றி வருகிறது; இதை நான் சொல்வதால் தி.மு.கழகத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றாக்கிக் காட்ட முயலுவதாகக் கருதவேண்டாம்!

ஏனென்றால், தி.மு.கழகம் இக்கருத்துக்களை விஞ்ஞானமும் கல்வியறிவும் நன்கு பரவியுள்ள இக்காலத்தில் சொல்லி வருகிறது. இந்தக் காலத்தில் நல்ல கொள்கைகளை எடுத்துச் சொல்ல அதிகத் தைரியம் தேவையில்லை.

நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் சொல்ல வேண்டுமானால், நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! “பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது” என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத – விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது!

மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்!
இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முகம்மது நபி. அந்த ஒளியின் வெளிச்சத்தை எடுத்துக் காட்டிபவர்கள்தான் நாங்கள்.

சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது, உலகத்தில் நபிகள் நாயகம் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?


நம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயகத்தினுடைய நினைவு வரவேண்டும்.

ஆரம்ப காலத்திலே முகம்மது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக்கொண்டார்களா என்றால் இல்லை.

அரேபிய பாலைவனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்டவர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் “360 உருவங்களும் ஆண்டவனல்ல” என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதிலே ஏற்படக்கூடிய பயம் ஓரளவு நீங்கும்.

பொது வாழ்விலே உள்ள சந்தேகங்களையெல்லாம் நபிகளை நினைத்தால் பறக்கும். அவர் காலத்தில் ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்தால் இக்காலத்து ஆபத்துக்கள் வெறும் துரும்புக்குச் சமானம் ஆகும்.

நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று!சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு!

வேண்டாம் அற்புதங்கள்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.

யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றினவாம்.

அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் – இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் – அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.

அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன்.


காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.

உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு – அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!

அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் – அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் – என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!

எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.
அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!


இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே “இதை நம்பு” என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.

சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.

இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை – கருப்பொருள் – கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.

சொல்லும் செயலும்!

மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.
யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.

இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன?

கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.
அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன?

அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.
இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது?

ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை,

ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும். அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.

மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.

கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.

நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.

சொல்லுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், நடப்பவர்கள் கீழ்த்தரத்திலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

சமத்துவ மார்க்கம்

இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.

இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார்.

நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால்,

1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால்,

1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும்,

அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை ‘மகான்’ என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.


மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.

மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப்பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள்,

தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்டப்பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை, அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை. இனி இருக்கவேண்டிய அவசியமுமில்லை.
அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.

இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறுநாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள்.

ஆனால் நமது நாட்டில் அப்படியிக்கக்கூடாது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும்.

அப்பொழுது தான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள்.
ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால்,

புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீடடு வருகிறோம், நாம் முதலில் இறங்கிவேண்டிய இடத்தைச் சொல்லி, வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறான்.

அப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள்? ‘ அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட!’ என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் ‘ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்’ என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்’ – கடவுளுக்குப் பொதுவாக’ என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?

ஆகையினாலே தான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.

மதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான்.

ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கிறதோ, அப்படியே – அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் கூற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாற நாம் நடந்தால் தனக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழிந்து நல்ல சுற்றுச்சார்புகளை ஏற்படுத்துகிறானோ அவனைத் தான் ‘மகான்’ என்று சொல்லுகின்றோம்.

ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை.

ஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்லமுறையில் அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத்தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும்.

நபிகள் போதித்த இஸ்லாம் மார்க்கம் வைரம் போன்றது. நல்ல வைரத்தைப் பட்டைதீட்டி, அதைக் கையிலே மோதிரமாகவும் செய்து போட்டுக்கொள்ளலாம்.

காதில் கடுக்கனாகவும் அணிந்து கொள்ளலாம். அதே வைரத்தை விற்று, கிண்டி குதிரைப்பந்தயத்தில் வைத்தும் ஆடலாம்.

ஆனால் வைரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தான், அந்தப் பயனின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். ஆதைப் போல இஸ்லாம் மார்க்கம் என்ற வைரம் யாருக்கு, எந்த இடத்ததிலே, எப்படி பயன்படுகிறது என்பதிலே தான் அதன் மாண்பு உணரப்படும்.


இதை எண்ணும் போது நல்லவர்கள் கிடைப்பது என்பது கூட எளிதாகி விடும். ஆனால் அவர்கள் சொல்லி சென்ற கருத்துக்களை பயன்படுத்துவதிலே தான் மதிப்பு உயரும்.

இஸ்லாத்தின் உயர்ந்த மாக்கம் இன்று யாருக்கு பயன்படுகிறது?
இதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆதிக்கக் காரர்களுக்குப் பயன்படுமானால், ஏழையை ஐயோ என்று கதற வைப்பவர்களுக்குப் பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பலன் இல்லை.

இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப்பயன்படவேண்டும். உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்குவதற்குப் பயன்படவேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகிறதோ அன்றைக்குத் தான் மார்க்கத்தின் முழுப்பலன்களை அடைய முடியும்.

திருத்தொண்டு

கடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.

யார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்.
சாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்?

நல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும். அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.

எனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள்.

வேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே! அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்.

சிறந்த மார்க்கம்

இஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.

இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள்.
இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.


நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.

இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன.

நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது” என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.


ஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும்? என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை.

எனவேதான், பழந்தமிழர் மக்கள் “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”. “பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை” என்று கூறியிருக்கிறார்கள்.

கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும்.

அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்! அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின.

கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக “நான்தான்” கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும்.

ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், “நான் அனுப்பியதாகச் சொல்லு!” சொன்னால்தான், மக்கள் “கடவுள்தான் அனுப்பினாரா?” என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப் பார்ப்பார்கள் என்று.


ஒன்றே குலம், ஒருவனே தேவன்

தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.

மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர்.

இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.


மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.

ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.


இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.

ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.

ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான்.

இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.

இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும்.
சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும்.


முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.

இம்மாதிரியான கூட்டங்களிலே இஸ்லாமிய வரலாறு அறிந்தோர் வாயிலாக நபிகள் நாயகத்தின் வீர வரலாற்றை கேட்க விரும்புகிறேன்.

ஏங்களைப் போன்றோரைப் பேசச் செய்து, இஸ்லாத்தைப் பற்றிய எங்கள் ஞானத்தைச் சோதிப்பதைவிட எங்களைப் போன்றோரை கூட்டிவைத்து இஸ்லாமிய தத்துவ விளக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

காட்டுமிராண்டி காலமான அக்காலத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னே நபிகள் நாயகம் அவர்கள் தன்னந்ததனியாக அக்காலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பொய்யானவை என்றும்

அவர்கள் சென்று வழிபட்டக் கோவில், இறைவனின் உண்மையான உறைவிடமல்ல என்றும் எடுத்துக்கூறித் திருத்தினார்கள் என்றால் அதற்காகவாவது சுயமரியாதைக்காரர்கள் அவரை மகான் என்று கொண்டாடுவார்கள்.

அக்கால மக்கள் ஈடுபட்டிருந்த கோட்பாடுகளையெல்லாம் இடித்துரைக்க எவ்வளவோ நெஞ்சுரம் வேண்டும். நபிகள் நாயகத்தின் நெஞ்சுரம் இறுதி வரையிலே கொஞ்சமும் மாறாததாக இருந்தது. அது மாத்திரமல்ல.

அந்த நெஞ்சுரத்தை இஸ்லாமியருடைய பரம்பரைச் சொத்தாக அவர்கள் விட்டு சென்றுள்ளார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறி தழிழ்நாட்டில் பரவி இருந்தது.

ஆனால் பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டிணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.

இதைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்.


மார்க்கத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் மாண்பும் உணரப்படுகிறது.
இஸ்லாம் சிறந்த மார்க்கம். அது உலகத்தில், அக்கரமத்தையும் அநியாயத்தை அடக்கப் பாடுபடவேண்டும்.

மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களுக்கு உபதேசிப்பதாக மார்க்கம் இருந்து வருகிறது. கீழே உள்ளவர்களால் மேலே உள்ளவர்களுக்கும் உபதேசிப்பதாக மார்க்கம் இருக்கவேண்டும்.

பிறரிடமிருந்து பணம் பறிக்கவோ, பேரம் பேசிப் பயனடையவோ அன்றி, அக்கரமத்தை ஒழிக்க, மக்களிடையே அன்பை வளர்க்க மார்க்கம் பயன்படவேண்டும்.

எங்களை நாஸ்திகர்கள் எனக்குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் உருவமற்ற ஒரு தெய்வத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை.

ஆஸ்திகர்கள் எனத் தன்மைத் தாமே அழைத்துக் கொள்வோர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூட்டிய பட்டம் தான் ‘நாஸ்திகர்கள்’ என்பது உண்மையிலேயே உலகத்தில் நாஸ்திகள் என ஒரு கூட்டத்தார் இருந்ததில்லை. அப்படி ஒருவேளை இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல.

ஆண்டவனை ஐயப்படும் அளவுக்கு ஈனப்பிறவிகளாக அந்த ஆண்டவனால் படைக்கப்ட்டவர்களல்ல நாங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.


அறப்பணி

என்னுடைய பொதுவாழ்வில் மதங்களின் ஆராய்ச்சியிலும் அவற்றிலுள்ள குறை நிறைகளை ஒரளவு ஆராய்ச்சியில் கவனம் காட்ட முனைந்ததே சந்தர்ப்பத்தின் சந்திப்புக்களால் சமைந்ததுதான்.

என்னுடைய பொதுவாழ்வின் துவக்கக் காலத்தில் நான் மேடையைத் தேடிப் பிடிக்க வேண்டியவனாயிருந்தேன். வலிய வரும் அழைப்பெல்லாம் பொதுவாக மதாச்சார மேடைகளாகவே இருந்தது.

சில சமயம் அம்மாதிரி மேடைகளில் நிர்ப்பந்தத்துக்காக்கூட ஏறுவதுண்டு. சில நேரம் அதிலுள்ள குறைநிறைகளைக் கூறவும் ஏறுவதுண்டு. இந்த சந்தர்ப்பம், என்னை மத ஆராய்ச்சியில் வலியவே தள்ளிவிட்டது.

ஒன்றினை அறிய, அதில் எழும் ஐயங்களுக்காக – மற்றொன்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு – படிப்படியாக அம்மதங்களின் முக்கிய நூல்களைப் படித்து முடித்து விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.

எனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல!

நான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து,

குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது.

திருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

என்னுடைய பொதுவாழ்வு சுடர்விட என்னுடைய இதயமூச்சின் இலட்சிய மேடையான திராவிடக் கழக மேடையுடன் நபிகள் நாயக மீலாது மேடையும் எனக்குக் கைக்கொடுத்ததை நான் மறந்து விட முடியாது. ஏறத்தாழ முந்நூற்றுக்கதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கிறேன்.

நானும் எனது கொள்கையும் சொல்லி வந்த சமுதாய சீர்திருத்த பிரச்சார பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏகதெய்வக்கொள்கை எங்கட்டு பெரிதும் பிரச்சாரத்துணை நின்றது.
கல்லையும் மண்ணையும் பூசிக்காதீர்,

கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக் கொண்டிருந்த எங்கள் இலட்சியப்பணி, மீலாது மேடையின் மூலம் சுடர்விட நல்லவாய்ப்பு இருந்தது.


ஏகதெய்வக்கொள்கையை “ஒன்றே குலம் ஒருவனேதேவன்” எனும் உண்மை தாத்பரியத்தை, மக்களை ஏற்கச் செய்ய எவ்வளவோ பிரச்சாரம் தொடுத்தும், முழுப்பயனும் எட்ட முடியாமல் உள்ளம் வெதும்பும் நம்முடைய பிரச்சாரத்தையும்,

1400 ஆண்டுகட்கு முன்பு எந்த வித நவயுக பிரச்சார சாதனமும் இல்லாத அந்த நாட்களில் திரும்பும் திசைதோறும் கடவுளின் சிலை வடித்து தினமொரு இறைவனை உண்டு செய்த அறிவாற்றலற்ற அந்த மக்களை –

நபிகள் நாயகத்தின் 23 வருட பிரச்சார பலம் எத்துனை வெற்றிக்கு இழுத்து வந்து, ஒரே இறை, ஒரே மறை என்ற கருத்தை உள்ளத்தால் ஒத்துக்கொள்ளச் செய்து, அதுவும் உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் பரவி, பண்புடன் வாழச் செய்திருக்கிறது என்றால்,

அந்த மனிதப் புனிதரின் நாவன்மைக்கிருந்த நல்ல மதிப்பீட்டை, மகத்துவத்தை எண்ணிப் பூரித்து நன்னயத்திற்கு துணைபோக வேண்டியவர்களாக இருக்கிறோம்.


இத்துணை மகத்துவம் அந்த மாநபிக்கு இருக்கக் காரணமே, அந்த பெருமகன் தன் உயிரினும் மேலாக கட்டிக் காத்து வந்த பொறுமையும், சொல்லும், செயலும் இணைந்த வாழ்வும், நடைமுறை வாழ்க்கையில் தடையின்றிச் செல்லத்ததுணை நின்ற சட்டமும், தன்னையும் தன்னை பின்பற்றுவோருள் ஒருவராக்கி சொன்னதோடல்லாமல் செய்து காட்டும் செம்மலாமல் செம்மலாகவே இருந்ததும் மூல முதல் காரணமாகும்!

மற்றெல்லா மதங்களிடையேயும் இல்லாதிருக்கும் இணையற்ற மதிப்பு, அதன் சட்டத்திட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கேற்ற நல் அமைப்பாகும்.

நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீசும் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சிய பொக்கிஷமான இறைமறை திருக்குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறை வழிகளைக் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன, இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய தூண்டுகோலாகும்!


எழுச்சி இதயம் என்பது அறிவைத் தேடி அலையும் ஆற்றல் உள்ளதாக அமைதல் வேண்டும். நான் இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன் இப்போதும் சொல்கிறேன்.

நல்லவை எங்குதென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழந்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடுவது போல, ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை – அவை இருக்கும் இடம் பற்றி கவலைப்படாமல் எடுத்து வந்து விடுவதுண்டு.

அப்படி இஸ்லாத்தில் நான் எடுத்துக் கொண்டவைகளுள் மிக முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையின் உரிமையை நான் மிகப் பெருமையாக அனுபவித்து வருகிறேன்.

வாய்மையில், வளர்க்கும் மனத்தூய்மையில் சிறக்கும் பொருமை ஒன்றில் தான் உலகம் அளப்பரிய சாதனைகளைக் காண முடிந்தது.

அந்த சாதனைகள் இஸ்லாமிய வரலாறெங்கும் வளர்ந்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

வாளேந்தி, வன்சமர்புரிந்து சாதிக்க முடியாத சாதனைகளைக் கூட நபிகள் பிரானின் இன்சொல்லும், புன்முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுதமான பொறுமையினாலும் வெற்றி கொண்டு இருக்கிற சக்தி அண்ணலின்பால் எனக்கு அளப்பரிய பக்தியை உண்டாக்கி விட்டது.

இஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும்.

இத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் எவ்வாறு இஸ்லாத்தை புரிந்து கொள்ளமுடியும்.?

பலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுபவர்களுக்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்?

அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் என்ற முள்கூட கையிலே குத்தி, குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை.

தெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள்புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பது போல், நல்ல சுவையுள்ள கனி கிடைக்கும் சுந்தரமார்க்கம் இஸ்லாமாகும்.

பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்டதுயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி, இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.


THANKS TO SOURCE: http://vapuchi.wordpress.com/

க‌ட்டுரை புத்த‌க‌ வ‌டிவில்:

அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா

வெளியீடு:
காஜியார் புக் டிப்போ
முஸ்லிம் தெரு, மானம்புச்சாவடி
தஞ்சாவூர்

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 47 வகை நீர்நிலைகளின் பெயர்கள்!! ஒரு சிறப்பு பார்வை..

ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ நேரடியாக சொல்ல முடியாத பல பெயர்கள், சொற்கள் தமிழில் உள்ளன. அதற்கு இதுவே சான்று. நீர் நிலைகளுக்கு எத்தனை வகையான சொல்லாடலை கையாண்டு உள்ளனர் தமிழர்கள். இன்று இத்தகைய சொற்களை தமிழர்கள் பயன்படுத்துவதை குறைத்து கொண்டு வருகின்றனர் என்பது வேதனை. இந்த சொற்களை எல்லாம் மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வருவது தான் தமிழ் மொழியை நாம் மீட்டெடுக்கும் அரும்பணியாகும்.

01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்படட நீர் அரண்
02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி
05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை
08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது
09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்
10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்
11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு
12. கடல் -(Sea) சமுத்திரம்
13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் - (Channel) நீரோடும வழி
16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை
18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படு நீர் நிலை.
24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு
28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை
30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்
31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்
32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்
34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்
37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு
41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்
43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு
44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது
45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்
47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள் களின்  பெயர்கள்  ஒரு சிறப்பு 
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.