Friday, 30 November 2012

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு!!ஒரு பார்வை....

"வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்"

முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 171972,கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார்.இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (Test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளைவீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார்

. 22 சூலை 2010 அன்று தேர்வுக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்[2]. இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின்தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். 
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்துக்கொண்டார்


கிரிக்கெட் உலகில் ஏராளமான வீரர்களினதும் ரசிகர்களினதும் நன்மதிப்பைப் பெற்ற கிரிக்கெட் விளையாட்டின் சுழல்பந்து ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நேற்றைய போட்டியோடு தனது கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி பிறந்த இவர், தனது 20ஆவது வயதில் அதாவது 1992ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகிற்குள் காலடி வைத்தார். இவர் தனது கல்வியை கண்டி கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் தொடர்ந்தார். 

பாடசாலைக் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு அணியில் வேகப்பந்து வீச்சாளராகவே விளையாடினார். ஆயினும் தனது 14 ஆவது வயதில் பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான சுனில் பெர்னாண்டோவால் ஓவ்ப் ஸ்பின்னராக பந்து வீச பயிற்றுவிக்கப்பட்டார். 
இதனடிப்படையில் 11 பேர் கொண்ட குழுவில் பாடசாலை சார்பாக விளையாடியதுடன் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரராகவே களமிறங்கினார். பாடசாலை மட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய முரளி, 1990 / 91 களில் நூற்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, அவ்வாண்டின் Bata வின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டார். 

இலங்கை A அணியில் இடம்பிடித்த இவர் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டைக் கூட முரளி வீழ்த்தவில்லை. 
இதன் பின்னர் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயற்பட்டதனால் 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுடனான தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். 

தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். சிறப்பாக செயற்பட்டு வந்த முரளிக்கு பல சோதனைகள் அடுத்தடுத்து காத்திருந்தன. 

முரளியின் கிரிக்கெட் வரலாற்றில் Boxing Day என கருதப்படும் நாள் 1995 ம் ஆண்டு டிசெம்பர் 26 ம் திகதி. அன்றைய தினம்தான் முரளிதரன் பந்து வீசிய போது நடுவராக கடமையாற்றிய டெரல் ஹெயார் அவர் பந்தை எறிகிறார் Chuck Ball என்று கூறி குற்றம்சாட்டினார். 

அதன் பின் 10 நாட்கள் கழித்து 1996 ஆம் ஆண்டு ஜனவரி 5 ம் திகதி அன்று மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியின்போது முரளிதரன் தனது முதலாவது ஓவரை வீசிய போது 3 முறை Chuck Ball என்று நோபோல் வழங்கப்பட்டது. அன்று நடுவராக கடமையாற்றியவர் ரொஸ் எமர்சன். 

முரளியின் பந்துவீச்சு Chuck Ball எனக் கருதக் காரணம், ஓவ்ப் ஸ்பின் முறையிலேயே பந்துவீசும் முரளிதரன் லெக் ஸ்பின் முறையிலும் பந்து வீசுவதினால் ஏற்பட்ட தடுமாற்றமே. எவ்வாறாயினும் இப்போட்டியின் போது துணை நடுவராக செயலாற்றிய டொனி மெக்கியுலின் அமைதியாகவே இருந்துவிட்டார். 

1996 ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக முரளி உயிரியல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதனடிப்படையில் அவர் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்து வீசுகிறார் என அவர்கள் தெரிவித்தனர். 

இதற்கமைய அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. 1998 1999 காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி விளையாடியது. 

இப்போட்டியின் போது நடுவராக கடமையாற்றியவர் ரொஸ் எமர்சன். முரளி பந்து வீசிய வேளையில் அவர் முறையற்ற விதத்தில் பந்து வீசும் பாணி அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். 

அப்போது இலங்கை அணியின் தலைவராகக் கடமையாற்றிய அர்ஜுன ரணதுங்க நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்தோடு நின்றுவிடவில்லை, இந்தப்போட்டியை இத்தோடு நிறுத்திவிடுகிறோம் என்று கூறிய அர்ஜுன அணியை பெவிலியன் நோக்கி அழைத்துச் சென்றார். 


அப்போது குறுக்கிட்ட இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் போட்டியை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு போட்டி மீண்டும் ஆரம்பமானது. இந்தச் சம்பவத்தை அடுத்து அர்ஜுன ரணதுங்கவுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டது. நடுவராக செயலாற்றிய ரொஸ் எமர்சனும் சுகயீன விடுமுறை என்று காரணம் காட்டி போட்டித் தொடலிருந்து விலகிக் கொண்டார். 

முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 500 வது விக்கெட்டை 2004 ம் ஆண்டு மார்ச் 16 ம் திகதி கண்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது வீழ்த்தியிருந்தார். இப்போட்டித் தொடரில் “துஸ்ரா' முறையில் பந்து வீசியிருந்தமை தொடர்பாக போட்டி நடுவராகக் கடமையாற்றிய கிறிஸ் பிரோட் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்திருந்தார். 

அதனால் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கமைய மருத்துவ தீர்வுகள் முரளிதரனுக்கு சாதகமாக அமைய, “துஸ்ரா' பந்து வீச்சினை வீசுவதற்கு முடியும் என ஐசிசி யினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி மீண்டும் ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் முரளி. 

இதனடிப்படையில் “தூஸ்ரா' பந்து வீசப்படும் வேளையில் 12.2 பாகையில் கை மடங்கும் போது சராசரியாக மணிக்கு 86 கிலோ மீற்றர் வேகத்திலும் ஓவ் பிரேக் பந்து வீச்சின் போது 12.9 பாகையில் கை மடங்கும் அதேவேளை மணிக்கு 99.45 கிலோ மீற்றர் வேகத்திலும் பந்து வீசுகிறார் என்பது அறியப்பட்டது. 
இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியினால் சிறப்பாக செயற்பட்ட முரளி பல அரிய சாதனைகளையும் நிலைநாட்டி விட்டுதான் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முரளியின் சாதனைகள் :-

1. டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (800) 
2. ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (534) 
3. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (1,334) 
4. டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் பெறுமதிகளை அதிக தடவைகள் கொண்டவர் (67) 
5. 10 விக்கெட் பெறுமதிகள் அதிக தடவைகள் கொண்டவர் (22) 
6. 10 விக்கெட் பெறுமதியான அனைத்து அணிகளுக்கு எதிராகவும் பெற்ற ஒரு வீரர். 
7. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 350 விக்கெட்டுகளை பெற்றவர். 
8. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 400 விக்கெட்டுகளை பெற்றவர். 
9. டெஸ்ட்போட்டிகளில் விரைவாக 450 விக்கெட்டுகளை பெற்றவர். 
10. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 500 விக்கெட்டுகளை பெற்றவர். 
11. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 550 விக்கெட்டுகளை பெற்றவர். 
12. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 600 விக்கெட்டுகளை பெற்றவர். 
13. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 650 விக்கெட்டுகளை பெற்றவர். 
14. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 700 விக்கெட்டுகளை பெற்றவர். 
15. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 750 விக்கெட்டுகளை பெற்றவர். 
16. டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட் பெறுமதியைத் தொடர்ந்து 4 தடவை புரிந்த ஒரே வீரர். 
17. டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராக 50 விக்கெட்டுகளுக்கு அதிகமாக பெற்ற ஒரே வீரர். 
18. இங்கிலாந்தின் jim laker உடன் 9 விக்கெட் பெறுமதியான இரு தடவைகள் வீழ்த்தியுள்ளார். 
19. டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் போட்டி ஒன்றில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர்.
இன்னம் நிறைய உள்ளது. YouTube இணைய தளத்தில் தேடிப்பார்க்கவும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
உலக எய்ட்ஸ் நாள் பற்றிய விழிப்புணர்வு பார்வை....எ‌ச்ஐ‌வி ‌எ‌ன்ற ‌கிரு‌மியேஎய்ட்ஸ் நோய்க்குக் காரணமாகும். இ‌ந்த ‌‌கிரு‌மி ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ம‌ற்றவரு‌க்கு பரவு‌ம் ‌கிரு‌மியாகு‌ம். 

எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மி நமது உட‌‌லு‌க்கு‌ள் வ‌ந்தது‌ம், அது தனது இன‌ப்பெரு‌க்க‌த்தை செ‌ய்து உட‌ல் முழுவதையு‌ம் ஆ‌க்ர‌மி‌த்து‌க் கொ‌ள்‌கிறது.

பி‌ன்ன‌ர் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை சிறிது சிறிதாக அழித்து விடுகின்றன. இ‌ந்த ‌நிலையை‌த்தா‌ன் எய்ட்ஸ் நோ‌ய் எ‌ன்‌கிறா‌ர்க‌ள்.

பொதுவாக எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மி மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது என்றாலும் கூட, இரத்தம், விந்து, பெண்ணுருப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலாகத்தான் பரவுகின்றது. 

எ‌ச்ஐ‌வி பின்வரும் நான்கு வழிகளில் ஒருவரைத் தொற்றிக் கொள்கிறது.

1. பாதுகாப்பற்ற உடலுறவு

எ‌ச்ஐ‌வி பா‌தி‌த்தவருட‌ன்ஆணுறையைப் பயன்படுத்தாமல் மேற்கொள்ளும் புணர்ச்சி, ஆசன வாய்ப்புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி ஆகியவற்றின் மூலம்ம‌ற்றவரு‌க்கஎ‌ச்ஐ‌வி தொற்றிக் கொள்கிறது. எனவே எந்தப் பாதுகாப்பற்ற உடலுறவும் எ‌ச்ஐ‌வி தொற்றைப் பரப்புகிறது.

2. சுத்திகரிக்கப்படாத ஊசியைப் பயன்படுத்துதல்

போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலோ சுத்தம் செய்யாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதன் மூலம் எ‌ச்ஐ‌வி பரவுகிறது. இதே போல் அறுவை சிகிச்சையிலும் சுத்திகரிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதனாலும், எ‌ச்ஐ‌வி பரவுகிறது.

3. பாதுகாப்பற்ற இரத்த பரிமாற்றம்

எ‌ச்ஐ‌வி உள்ள இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் மூலம் எளிதாக பரவுகிறது.

4. பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல்

கர்ப்பகாலம், பேறு காலம், தாய்ப்பால் புகட்டும் காலம் ஆகிய காலங்களில் தாய் மூலம் குழந்தைக்கு எ‌ச்ஐ‌வி பரவுகிறது.

ஆனா‌ல் இத‌ற்கு த‌ற்போது மரு‌ந்துக‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு, எ‌ய்‌ட்‌ஸ் நோய‌் தா‌க்‌கிய தா‌ய்‌க்கு ‌பிற‌க்கு‌ம் குழ‌ந்தை எ‌ய்‌ட்‌ஸ் நோ‌ய் பா‌தி‌ப்‌பி‌ல்லாம‌ல் இரு‌க்க வ‌ழி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கு க‌ர்‌ப்ப‌ம் உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட நா‌ள் முதலே ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.உலகம் முழுவதும் 3 கோடியே 34 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் (15 வயதுக்குட்பட்ட 80,000 குழந்தைகள் உட்பட) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். எச்.ஐ.வி உள்ளவர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள்.

தென் மாநிலங்களில் எச்.ஐ.வி., தொற்று குறைந்து வருகிறது என்ற சமீபத்திய உலக சுகாதார நிறுவன அறிக்கை, நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. விழிப்புணர்வு ஒன்றே எச்.ஐ.வி., பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று உலகம் முழுவதும் அறிந்துள்ள நிலையில், இந்தியாவில் அதற்காக எடுத்த முயற்சிகள் பலன் தரத் தொடங்கியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. உலகம் முழுவதுமே, எச்.ஐ.வி., பரவும் வேகத்தில் குறைவு காணப்படுகிறது. ஏறத்தாழ 17 சதவீதம் குறைந்துள்ளது. பிரசவத்தின் போது எடுக்கப்படும் பரிசோதனையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் 54 சதவீதம் குறைந்திருக்கிறது. அதே சமயம், இந்தியாவில் எச்.ஐ.வி., உள்ளவர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள். ஆசியாவில் எச்.ஐ.வி., உள்ளவர்களில் பாதிப்பேர் இந்தியாவில் உள்ளனர். ஆகவே இந்தியாவில் எச்.ஐ.வி., தடுப்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட "எய்ட்ஸ் வேக்ஸ்' எனும் தடுப்பு மருந்தும் எச்.ஐ.வி., பரவுவதை 31 சதவீதம் கட்டுப்படுத்துகிறது. இது அடுத்து 100 சதவீதம் எச்.ஐ.வி.,யை தடுக்கும் மருந்து உருவாக அடிப்படையாக அமையலாம். எச்.ஐ.வி., மனித உடலுக்குள் பல்கிப் பெருகும் பல்வேறு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் அதை செயல்படவிடாமல் தடுப்பதற்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகின்றனர். அது வெற்றி பெறும் வரை, உலகின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக எச்.ஐ.வி., தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

பல்கிப் பெருகும் எச்.ஐ.வி.,: எச்.ஐ.வி., தொற்றிய பின்னர், அது மனித உடலுக்குள் எப்படி பல்கிப் பெருகுகிறது என்பதை வரைபடம் விளக்குகிறது.

1. மனித உடலுக்குள் புகுந்த எச்.ஐ.வி., வைரஸ், செல்களின் மேற்புறத்தில் "சி.டி.-4' எனும் ஒட்டிக் கொள்ளும் பகுதியை அடைகிறது. அங்கு செல்களின் "சி.சி.ஆர்.5' எனும் கயிறு போன்ற பகுதி எச்.ஐ.வி., வைரசையும் நம் உடல் செல்லையும் பிணைக்கிறது.


2. செல்லின் மேற்புறத்தில் ஒட்டிக் கொண்ட எச்.ஐ.வி., வைரசின் ஒரு பகுதி கரைந்து, செல்லுடன் அப்படியே கலக்கத் தொடங்குகிறது. எச்.ஐ.வி., வைரசுக்குள் உள்ள, அது பல்கிப் பெருகத் தேவையான மரபணுப் பொருட்களான ஆர்.என்.ஏ., மற்றும் என்சைம்கள் செல்லுக்குள் கலக்கின்றன.

3. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போல், மனித செல்லுக்குள், அதை விட சிறிய எச்.ஐ.வி., புகுந்து அந்த செல்லை வைரஸ்கள் பல்கிப் பெருக வசதியான மையமாக மாற்றுகிறது. செல்லுக்குள் புகுந்த ஓர் இழையிலான ஆர்.என்.ஏ., இரு இழைகளுடைய டி.என்.ஏ.,வாக மாறுகிறது.


4. இந்த டி.என்.ஏ., ஏற்கனவே உடல் செல்லில் உள்ள உண்மையான டி.என்.ஏ.,வை "ஆள்மாறாட்டம்' செய்யும் பணியில் ஈடுபடுகிறது. மனித செல்லின் டி.என்.ஏ.,வில் ஒட்டிக் கொள்ளும் எச்.ஐ.வி., வைரஸ் டி.என்.ஏ., கடைசியில் மனித உடல் செல்லின் டி.என்.ஏ.,வை எச்.ஐ.வி., டி.என்.ஏ.,வாக மாற்றி விடுகிறது.

5. இந்த டி.என்.ஏ.,விலிருந்து மீண்டும் எச.ஐ.வி.,க்கான ஆர்.என்.ஏ., உருவாகிறது. இதனுடன் புதிய எச்.ஐ.வி., வைரஸ்கள் உருவாகத் தேவையான பொருட்கள் ஒன்று சேர்கின்றன.

6. செல்லின் சுவரின் அருகே எச்.ஐ.வி., வைரஸ் புதிதாக உருவாகிறது. அது முழுப்பரிமாணம் பெற்ற இன்னொரு வைரசாக உருவாகிறது. செல்லிலிருந்து பிரிந்து புதிய வைரசாக இன்னொரு செல்லை தாக்கப் புறப்படுகிறது. ஒரு செல் முற்றிலுமாக அழியும் வரை அங்கிருந்து நிறைய எச்.ஐ.வி., வைரஸ்கள் உருவாகின்றன.


உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

1988-2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" (The World AIDS Campaign) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


உலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள் 1988 - 2010
Posted Image

தொகுப்பு மு.அஜ்மல் கான்.


உயர்கல்வி படிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்..!(Educational Loans for higher education to handicapped persons!!) ஒரு தவகல்.....NHFDC
மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி படிக்க கல்விக்கடன் பெற்று, வாழ்வில் உயர்ந்திட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்(National Handicapped Finance and Development Corporation ) மூலமாக கல்விக்கடனை பெறலாம். 

40% அல்லது அதற்கு மேல் ஊனமுள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.
பட்டபடிப்பு(Degree), பட்ட மேற்படிப்பு(Graduate), பொறியியல்(Engineering) , மருத்துவம்(Medical), நிர்வாகம்(Administration), ஐடி(IT) போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத் திறனாளிகள் கல்விக் கடன் பெற!!

வெளிநாட்டில் படிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சமும் , இந்தியாவில் படிப்பவர்களுக்கு ரூபாய் 10 லட்சமும் கடனாக வழங்குகிறது இந்நிறுவனம். வழங்கப்படும் கல்விக் கடனுக்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவிகளுக்கு 3.5 % வட்டி வசூலிக்கபடுகிறது.


ஒவ்வொரு மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கென தனிப்பட்ட முகவரி உள்ளது.
தமிழகத்தை சார்ந்த மாணவர்கள் கல்விக்கடன் பெற இந்த முகவரியை அணுகலாம்.


Shri K.M. Thamizharasan
Special Officer,
Tamil Nadu State Apex Cooperative Bank Limited,
No. 4 (Old No. 233)
Netaji Subash Chandra Bose Road,
Chennai 600 001.
(Tamil Nadu)

Email:tnscbank@vsnl.com

Tel No.044-25302345,
Tel Fax: 25340508
URL:www.tnscbank.com


கல்வித் உதவித்தொகைப் பெறுவது குறித்து இந்த பக்கத்தை காணவும்.. http://www.nhfdc.nic.in/sheater/9th.pdfஇது தொடர்பான மேலும் அதிக விபரம் தேவைப்படின் இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.www.nhfdc.nic.in


தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

அமிர்தசரஸ் பொற்கோவில் Vs வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில்!! ஒரு பார்வை...

படிமம்:Punjab Montage India.PNG
அமிர்தசரஸ் பொற்கோவில் ...

அமிர்தசரஸ் என்று சொன்ன மாத்திரத்திலேயே நம் நினைவுக்கு வருவது அங்குள்ள பொற்கோவில்தான். பொன் (தங்கம்) கொண்டு இக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளதால் 'பொற்கோவில்' என்கிறார்கள். 

சீக்கியர்களின் புனித தலமான இங்கு சாதி, மத, இன வேறபாடு இன்றி நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதனால் இதை நாம் 'சமத்துவ கோவில்' என்றே சொல்லலாம்.
பொற்கோவிலுக்குள் செல்வதற்கு என்று தெப்பக் குளத்தின் மீது பாலம் அமைத்திருக்கிறார்கள. இந்த பாலத்தை கடந்து பொற்கோவிலை அடைந்ததும், அக்கோவிலை சுற்றி வரும் வகையில் சுற்றுப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை ஆண்டவனிடம் அழைத்துச் செல்லும் படிக்கட்டாக கருதப்படுகிறது. 


பொற்கோவில் மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. முன் பகுதி பாலத்தை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. முதல் தளத்தின் மேல் பகுதியில் 4 அடி உயரத்திற்கு கைப்பிடி சுவர் நான்கு பக்கமும் கட்டப்பட்டுள்ளது. நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மாடங்கள் சீக்கிய கட்டிடக்கலையை அழகாக பிரதிபலிக்கின்றன. மூன்றாவது தளத்தின் மையப் பகுதியில் பிரதான பிரார்த்தனை மண்டபம் அமைந்துள்ளத. இதில், சிறிய சதுர வடிவிலான அறை மூன்று வாயில்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிராந்த் சாகிப்' வாசிக்கபபட்டு வருகிறது. 

இந்த கோவிலின் கட்டிடக்கலை அமைப்பை நன்கு ஆராய்ந்துப் பார்த்தால், இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்கள் இடையேயான இணக்கத்தை, அது எதிரொலிப்பதை உணர முடிகிறது. 

சிதம்பரம் நடராசர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளதுமதுரை மீனாட்சிபழநி முருகன்புதுச்சேரி மணக்குள விநாயகர்திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பல பெரிய கோயில்களில் கருவறை விமானங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளனபஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களுக்குப் பொற்கோயில் உள்ளது.

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில்....

 வேலூரைச் சேர்ந்த சதீஷ் திருமலைக்கோடி கிராமம் சென்று  புற்றுக்கு 7 கன்னிப்பெண்கள் முன்பு வைக்கப்பட்ட 7  புனித குடங்களுக்கு அவர் பூஜை செய்யும் போதுமஞ்சள் நீரைக் கீழே கொட்டியபோது  பூமியிலிருந்து ஒரு லிங்க வடிவில் சுயம்பு மேலே வந்தது.  அந்த இடத்தில் ஸ்ரீநாராயணி கோயிலை எழுப்பி வழிபாடு செய்தார். இக்கோயிலுக்கு 9-01 -2000ல் குடமுழுக்கு நடந்தது.
சக்கர வடிவத்தில் ஆலயத்தின் சுற்று பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபமும், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சியும், திறந்தவெளி கலையரங்கமும், புல்வெளியும், நீரூற்றுகளும், பூங்காக்களும் இங்கு உள்ளன. இந்த கோயிலில் உலகின் மிகப் பெரிய வீணையும்,  10008 திருவிளக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும்.

தங்கக் கோயில் உருவாக்கப்பட்டதன் காரணம் என்ன?

                    மக்கள் அனைவரும் எளிதில் கோயிலுக்கு வருவதில்லை. மேலும் ஆன்மிக கருத்துக்களை சொன்னாலும் மக்கள் விரும்பி கேட்பதும்மில்லை. அதனால்தான் இந்த பிரமாண்டமான தங்கக்கோயிலை கட்டியிருக்கிறார்கள். இப்படி கட்டியதால் இந்தக்கோயிலை பார்க்க மக்கள் வருவார்கள்.  இந்த கோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதோடு  உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்து செல்வார்கள் என்ற நோக்கத்துடன் இந்த கோயிலை கட்டியிருக்கிறார்கள்.

தங்க கோயிலின் சிறப்பம்சம் என்னன்ன?
 நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்க காரணமாக . திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. .

                    இந்த கோயிலை கட்ட 600 கோடி ரூபாய் செலவானதாக சொல்லப்படுகிறது. 1500கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது என்றும் 55000ம் சதுரடி பரப்பளவுக்கு தங்கக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.   கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரே செயற்கை நீர் ஊற்றுக்களும் உள்ளது. 

                    மண்டபத்துக்கு பின்னால் மனிதனுடைய 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் போவதை உணர்த்தக்கூடிய வகையில் 18 நுழைவு வாயில்களை அமைத்துள்ளனர். இந்த கோயில் 100 ஏக்கர் பரப்பளவிள் உள்ளது. ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் இந்த லட்சுமிநாராயணி கோயில்  உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில் வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்படி கோயிலை அமைத்துள்ளனர்.

                    இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன  10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய  விளக்கு உள்ளது. கோயிலை சுற்றிலும்  புல்வெளியும், அதன் நடுவே சுதையால் ஆன துர்க்கையும், லட்சுமியும், சரஸ்வதியும், மாரியம்மன் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குளே செயற்கையான மலைகளும் , குளங்களும், நீர்வீழ்ச்சிகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. நவீன விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  இவைகள் இரவை பகல் போல மாற்றுகின்றன. கோயிலுக்குளே ஏராளமான மரங்கள் பச்சைப்பசேல் என்று  அருமையாக காட்சியளிக்கின்றன.

                    பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக செல்போன் மற்றும் கேமரா ஆகியனவும், லக்கேஜ்ம், மற்ற பொருட்களையும் வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்று போர்டு வைத்துள்ளனர்.  கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள அனைத்து பகுதிகளும் இயற்கை எழில் சூழ மிக அருமையாக அமைந்துள்ளது.

ஆக்கம் : மு.அஜ்மல் கான்.


You Want to know about the CDC (Continuous Discharge Certificate)...

What is a C.D.C and how do I get it ?
“C.D.C” means a Continuous Discharge Certificate-cum-Seafarer’s Identity Document. Any person who fulfills all the eligibility conditions as specified in rules 4 and 5 of these rules, for the issue of a CDC, may apply to the shipping master at Nau Bhavan, 10, R.K. Marg, Ballard Estate, Mumbai-400001 or The shipping master, Shipping Office, Marine House, Hastings, Calcutta - 700 022 or shipping master, Mercantile Marine Department, Anchorgate Building, 2nd floor, P.B.No.5004, Rajaji Salai, chennai-600001, by registered post. Every application shall be accompanied by two copies of the applicant’s recent photograph, copies of relevant certificates or documents duly attested by a Gazetted Officer as proof of eligibility, and a signed declaration to the effect that the applicant has not previously been issued a CDC and has not submitted an application for CDC to any other shipping master, along with a fee of five hundred rupees (non refundable).
Eligibility conditions for applicant seaman other than Certificated Officers - 

The applicant should be a citizen of India, and his age should be as follows

For Deck ,Engine and Catering (Saloon) rating trainees - between 18 and 25 years of age

For Utility Hand - Between 18 and 40 years

For Petty Officers (Carpenter, Chief Steward, Electrician, Fitter, Machinist, Pump man, Refrigeration Mechanic, Computer Operator, Mechanic (Motor Vehicle), Automobile Engineering, Pipe Fitter, Motor Mechanic, Diesel Mechanic, General Mechanic, Maintenance Mechanic, Mechanic( Tool Engineering), Welder, Electric Arc Welder, Turner, Boiler Attendant, Electronic Mechanic) - Between 18 and 40 years of age

For ex-Naval ratings - Upto 45 years of age

For non-certificated Officers such as Purser/Ship’s clerk, Electrical officer and Electronic Officer - Between 18 and 40 years.

The crucial date for determining the age-limit shall be the closing date for receipt of application. Normally, the date of birth as mentioned in the School Leaving certificate shall be accepted as proof of evidence of date of birth of an applicant. In respect of ex-Naval applicants, the date of birth indicated in Form No. Indian Navy 271 shall only be the proper documentary proof to this effect.

Educational Qualifications :

For Deck, Engine, and Catering(Saloon) Trainees - Xth standard passed


For Utility Hands - VIII standard passed

For Petty Officer - Xth Std. passed with respective trade certificate from ITI (National Trade Certificate)(NTC) or National Apprenticeship Certificate (NAC) or Diploma Certificates approved by the National Council for Vocational Training (NCVT) or All India Council for Technical Education (AICTE). The minimum duration of the courses from any one of the above institutes shall be two years.

For Purser/Ship’s clerk - A graduate with knowledge of accountancy and computer operation.

For Electrical and Electronic Officer - A Diploma or Degree in respective Branch from a Government recognized Polytechnic or recognized University

Note – CDC in the category of Utility Hand shall be issued only if candidate is sponsored by a shipping company.

For Medical fitness, the applicants should possess a certificate in the prescribed form issued in Annexures “E” and “F” of the Merchant Shipping (Medical Examination) Rules, 2000, to the effect that he is medically fit to be employed on board ships.

An applicant for issue of CDC as Deck, Engine and Catering (Saloon) Trainee shall have successfully completed the pre-sea training for ratings from an approved training institute as prescribed under sub-clause (b) of clause (ii) of sub-rule (2) of rule 28 of the Merchant Shipping (Standards of Training, Certification and Watchkeeping for Seafarer’s) Rules, 1998.

An applicant for issue of CDC shall have undergone the basic familiarization training and instructions as prescribed under sub-rule (1) of rule 33 of the Merchant Shipping (Standards of Training ,Certification and Watchkeeping for Seafarer’s ) Rules, 1998

Eligibility for Certificated Officers

A citizen of India who is in possession of a valid certificate of competency or who has been declared successful in the final examination of the three years B.Sc. (Nautical Science) course approved by the Director General of Shipping or who has been declared passed or exempted in Marine Engineer Officer Class-II Part A Examination , is eligible for issue of a C.D.C .

The Trainee Marine Engineer, Trainee Radio Officers and Deck Cadets, who have completed the prescribed pre-sea training and are eligible to proceed to sea shall also be eligible to apply for issue of CDCs .

Navigational Watch-keeping Officer (NCV), Marine Officer Class-IV and ex-Indian Naval Officer in possession of a Watch-keeping Certificate, who have completed written examination and are required to undergo on board training for appearing oral examination shall also be eligible to request for issue of CDCs specifying the incumbent’s rank or category.

A citizen of India who is in possession of a valid Certificate of competency issued by any foreign nation, is eligible to request for issue of a CDC.
All the applicants mentioned in sub rules (1) and (2) above shall have undergone the basic familiarization training and instructions as prescribed under sub-rule (2) of rule 33 of the Merchant Shipping (Standards of Training, Certification and Watchkeeping for Seafarer’s) Rules, 1998.

Issue of C.D.Cs - (1) The Shipping Master shall, after the descriptive particulars of the applicant have been entered in and the photograph affixed to the C.D.C., affix his signature and official seal on the photograph and issue the same to the applicant , who fulfills all the conditions laid down in rules 4 and 5.
A C.D.C. issued under these rules shall be in Form-1 and shall be serially numbered.

Register of C.D.C.s

The Shipping Master shall maintain a register of C.D.Cs issued to seamen from his port, in Form-2, which shall contain all the particulars recorded in the C.D.C.

All subsequent entries in the C.D.Cs issued from the port shall also be recorded in the said Register

Period of ValidityA C.D.C. granted under these rules shall be valid for a period of ten years and may be renewed on expiry or within 6 months prior to date of expiry, on a request from the holder, for a further period up to ten years at a time if the holder is a serving Seamen and his C.D.C. has not been cancelled, withdrawn or suspended under these rules.

If the period of validity of CDC of a Seamen expires during the voyage, it shall continue to be valid till the end of the voyage.

A recent photograph taken within the last three months should be affixed to the CDC at the time of renewal while retaining the old photograph.

ISSUE OF CDC TO SERVING NAVAL OFFICERSThe Naval Headquarters, New Delhi vide their letter No. NA/1387/DG Shipping dated 10 Jul 03 has intimated Director General of Shipping that there is no objection to the issue of CDCs to serving naval personnel.