"புவிசார் குறியீடு' என்றால் என்ன?:
ஒரு குறிப்பிட்ட இடத்தையோ (புவியியல்) அல்லது தோற்றத்தையோ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ), குறிப்பிடும் பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம், "புவிசார் குறியீடு' (ஜியாகிரபிக்கல் இண்டிகேஷன்) எனப்படுகிறது. இக்குறியீடு, அந்த பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும், நன்மதிப்பையும் பறை சாற்றும் சின்னமாக விளங்கும். இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு, மத்திய அரசு அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது. இச்சட்டம் 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, செப்.15, 2003ம் ஆண்டு அமலுக்கு வந்தது.
இதன்படி மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட தமிழக பொருட்கள்:
* சேலம் பேப்ரிக்
* காஞ்சிபுரம் பட்டு
* பவானி ஜமுக்காளம்
* மதுரை சுங்குடி
* கோவை வெட் கிரைண்டர்
* தஞ்சாவூர் வண்ண ஓவியங்கள்
* நாகர்கோவில் கோவில் நகைகள்
* தஞ்சாவூர் கலை தகடுகள்
* ஈஸ்ட் இந்தியா லெதர்
* சேலம் வெண்பட்டு
* கோவை கோரா பட்டு
* ஆரணி பட்டு
* சுவாமிமலை வெண்கலப் பொருட்கள்
* ஈத்தாமொழி நெட்டை தென்னை
* தஞ்சாவூர் பொம்மை
* விருப்பாச்சி மலை வாழை
* சிறுமலை மலை வாழை
* மதுரை மல்லி
* காஞ்சிபுரம் பட்டு
* பவானி ஜமுக்காளம்
* மதுரை சுங்குடி
* கோவை வெட் கிரைண்டர்
* தஞ்சாவூர் வண்ண ஓவியங்கள்
* நாகர்கோவில் கோவில் நகைகள்
* தஞ்சாவூர் கலை தகடுகள்
* ஈஸ்ட் இந்தியா லெதர்
* சேலம் வெண்பட்டு
* கோவை கோரா பட்டு
* ஆரணி பட்டு
* சுவாமிமலை வெண்கலப் பொருட்கள்
* ஈத்தாமொழி நெட்டை தென்னை
* தஞ்சாவூர் பொம்மை
* விருப்பாச்சி மலை வாழை
* சிறுமலை மலை வாழை
* மதுரை மல்லி
மதுரை மல்லி வாசம் என்றே சிறப்புடன் காலம் காலமாக போற்றப்படுவதே, மதுரை மல்லிகைக்கு சிறப்பு. தமிழகத்தின் பல இடங்களில், பரவலாக மல்லிகைப் பூக்கள் விளைந்தாலும், மதுரையின் சிறப்பு வேறிடத்தில் இல்லை. மதுரை மார்க்கெட்டிற்கு மட்டும் பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் 15 முதல் 20 டன் பூக்கள் வரத்து இருக்கும். நவம்பர், டிசம்பரில் வேறெங்கும் பூக்கள் உற்பத்தி இருக்காது; மதுரையில் மட்டும் குறைந்தளவு உற்பத்தி இருக்கும். இந்த சிறப்புகளுக்காக, மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு' கிடைத்துள்ளது. நாட்டில் ஒரு பூவிற்கு "புவிசார் குறியீடு' கிடைத்தது, இதுவே முதல்முறை.
கடந்த வருடத்தில் 11 புதிய பொருட்களுக்கு புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஷாம்பெய்ன், அமெரிக்க நபா வேலி ஒயின், திருவாங்கூர் வெல்லம், கேரளாவின் வயநாடு கண்டகசாலா அரிசி, ஜீரகசாலா அரிசி, சட்டீஸ்கரின் சம்பா பட்டுசேலை, ராஜஸ்தானின் கோட்டா டோரியா கைவேலைப்பாடு, மகாராஷ்ராடிராவின் நாசிக் திராட்சை, குஜராத்தின் ஜரி வேலைபாடு, ஆந்திராவின் செரியல் பெயின்டிங் மற்றும் பெம்பார்த்தி மெட்டல் வேலைப்பாடு ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும்.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில்பத்தமடை எனும் ஊரில் தயாரிக்கப்படும் பாய், திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.
தாமிரபரணி ஆற்றின் கரையில் விளையும் கோரைப் புல் கொண்டு, இந்தப் பாய், தயாராகிறது. அதேபோல், கும்பகோணம் அருகில் உள்ள, நாச்சியார் கோவிலில், குத்துவிளக்கு தயாரிக்கப்படுகிறது. வண்டல் மண், "மெட்டல்' கொண்டு, இந்த விளக்கு தயாரிக்கப்படுகிறது. பத்தமடை பாய், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, இரண்டையும், புவிசார் குறியீடு பதிவேட்டில், பதிவு செய்வதற்காக, தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழகம் சார்பில், விண்ணப்பிக்கப்பட்டது.
தற்போது, பத்தமடை பாய், நாச்சியார் கோவில் விளக்கு, இரண்டும், இதழில் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு மாதங்கள் முடிந்த பின், இவற்றுக்கு சான்றிதழ் கிடைக்கும்.
கலப்படம் செய்தால் "காப்பு'
* புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு, குறிப்பிட்ட விலையை இனி நிர்ணயிக்க முடியும்.
* விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
* இப்பெயரில், மற்ற பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்களை கலப்படம் செய்ய முடியாது. அப்படி செய்தால், 2 லட்சம் ரூபாய் அபராதம், ஐந்தாண்டு சிறை தண்டனை உண்டு.
*இந்தப் பொருட்களை, வேறு எந்தப் பகுதியிலும் தயாரித்து, அவைகளை பத்தமடை பாய் என்றோ, நாச்சியார் கோவில் விளக்கு என்றோ, யாராவது விற்பனை செய்தால், அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்.
ஆக்கம் : மு. அஜ்மல் கான்.
*இந்தப் பொருட்களை, வேறு எந்தப் பகுதியிலும் தயாரித்து, அவைகளை பத்தமடை பாய் என்றோ, நாச்சியார் கோவில் விளக்கு என்றோ, யாராவது விற்பனை செய்தால், அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்.
ஆக்கம் : மு. அஜ்மல் கான்.
No comments:
Post a Comment