Saturday, 24 November 2012

சுவிஸ் வங்கியில் இந்திய கறுப்பு பணம்!! ஒரு பார்வை....


சுவிஸ் வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த 700 பேர் ரூ.6 ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு வெளியிட்டார். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல் அடங்கிய சி.டி.யை பிரான்சு அரசு, இந்தியாவிடம் கொடுத்ததாகவும், ஆனால் மத்திய அரசு இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

இந்தியர்கள் சுவிஸ் நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்க எச்.எஸ்.பி.சி. வங்கி உதவியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தீவிரவாதிகள் பண பரிமாற்றம் செய்து கொள்ள எச்.எஸ்.பி.சி. உதவி செய்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

வருமான வரித்துறையும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் சுவிஸ் நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஒரு வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான ரூடால்ப் எல்மர் கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பாக பரபரப்பு தவகல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- 

சுவிஸ் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை குவித்து வைத்திருப்பவர்களில் 90 சதவீதம் பேர் அரசியல் வாதிகள்தான். அவர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பதுக்கி வைத்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய விஐபிக்களும் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் வைத்துள்ளனர். 

இந்த தகவல்களை நான் விக்கி லீக்சுக்கு கொடுத்துள்ளேன். ஆனால் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய எந்த தகவல்களையும் நான் இந்திய அரசுக்கு விற்க வில்லை. 

இவ்வாறு டோல்ப் எல்மர் கூறினார். 

சுவிஸ் வங்கி அதிகாரியின் இந்த தகவல் அரசியல் வாதிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் மூலம் பிரபலமான சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராமத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரிரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி என பல பிரபலங்கள் மீது தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்களைக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்இந்த நிலையில் டெல்லியில் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால்மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணுடன் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம்
சுவிஸ் நாட்டில்ஜெனிவா நகரில் அமைந்துள்ள எச்எஸ்பிசி வங்கியில் 2006&ம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி 700 இந்தியர்கள் பணம் குவித்து வைத்துள்ளனர். இதுதொடர்பான விவரங்கள் அடங்கிய சி.டி.யை இந்திய அரசிடம் பிரான்சு வழங்கியது.கணக்கில் வராத பணத்தை (கறுப்பு பணத்தை) சட்டவிரோதமான ஹவாலா முறையில் சுவிஸ் வங்கி கணக்கில் கொண்டுபோய் சேர்த்துள்ளனர். இப்படி கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கியுள்ள 700 பேரின் பட்டியல் மத்திய அரசிடம் உள்ளது. அவர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாகஅவர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.சுவிஸ் வங்கியில் இப்படி 700 தனி நபர்கள் ரூ.6 ஆயிரம் கோடியை குவித்துள்ளனர். இது 2006&ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரம் ஆகும். இந்த பட்டியலை காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் எனக்கு வழங்கினார்.
அம்பானி சகோதரர்கள்
அதன்படிமுகேஷ் அம்பானி ரூ.100 கோடிஅனில் அம்பானி ரூ.100 கோடிரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது) ரூ.500 கோடி குவித்துள்ளனர். முகேஷ் அம்பானி&அனில் அம்பானி சகோதரர்களின் தாயார் கோகிலா பென் அம்பானிக்கும் கணக்கு உள்ளது. ஆனால் அன்றைய தேதியில் கணக்கில் பணம் இல்லை.அம்பானி சகோதரர்களுக்கு பங்கு உள்ள மோட்டெக் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் ரூ.2 ஆயிரத்து 100 கோடி குவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனரும்அமலாக்கப்பிரிவு முன்னாள் அதிகாரியுமான சந்தீப் தாண்டன் ரூ.125 கோடியும்அவரது மனைவியும்காங்கிரஸ் எம்.பி.யுமான அனு தாண்டன் ரூ.125 கோடியும் சுவிஸ் வங்கியில் குவித்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் தலைவர்
சந்தீப் தாண்டன்மத்திய அமலாக்கப்பிரிவில் அதிகாரியாக இருந்த காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதிரடி சோதனைகள் நடத்தினார். ஆனால் பின்னர் அவர் முகேஷ் அம்பானிக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார். அவரது இரண்டு மகன்களும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் உயர் பொறுப்புகளில் உள்ளனர். 
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல்சுவிஸ் வங்கியில் ரூ.80 கோடி குவித்து இருக்கிறார்.

வருமான வரி சோதனை
சுவிஸ் வங்கியில் 2006 டிசம்பர் நிலவரப்படி கறுப்பு பணத்தை குவித்து வைத்துள்ள 700 இந்தியர்களில் 150 பேர் வருமான வரித்துறை சோதனைகளை சந்தித்தவர்கள் ஆவார்கள்.நம் முன் உள்ள பெரிய கேள்விசிறிய தொகைகளை குவித்து வைத்துள்ளவர்கள் மீது சோதனைகள் நடத்திய வருமான வரித்துறையினர்பெரிய தொகைகளை குவித்துள்ளவர்கள் மீது ஏன் சோதனை நடத்தவில்லை?அப்போதைய நிதி மந்திரியும்,இப்போதைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜியை முகேஷ் அம்பானி சந்தித்தார். பிரணாப் முகர்ஜியிடம் (சுவிஸ் வங்கியில் குவித்துள்ள கறுப்பு பணத்துக்கு) தான் வரி செலுத்தத் தயாராக இருப்பதாகவும்தன் நிறுவனம் மீது சோதனை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.பிரணாப் முகர்ஜிஇந்த 700 நபர்களுக்கு உதவுவதற்காக தாமாகவே முன்வந்து வருமான விவரம் தெரிவிக்கும் Ôவிடிஐஎஸ்Õஎன்ற திட்டத்தை கொண்டு வரதிட்டமிட்டிருந்தார். ஆனால் பின்னர் இந்த எண்ணத்தை அவர் விட்டுவிட்டார்.

ஹவாலா இயக்கம்
அம்பானி சகோதரர்கள்நரேஷ் கோயல்பர்மன்கள்பிர்லாக்கள் மீது ஏன் அதிரடி சோதனைகள் பாயவில்லைஅவர்களது வாக்குமூலங்கள் ஏன் பதிவு செய்யப்படவில்லைபட்டியலில் இடம் பெற்றிருந்த சிறிய நபர்கள் மீது சோதனை நடத்தி இருக்கின்றனர். பெரிய நபர்கள் மற்றும் அதிகாரம்மிக்கவர்களை விட்டு விட்டனர்.சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 3 நபர்கள் அளித்த வாக்குமூலத்திலிருந்துநமது நாட்டில் இந்திய ஸ்டேட் வங்கியில் ஒரு கணக்கு தொடங்குவதை விட சுவிஸ் வங்கியில் ஒரு கணக்கு தொடங்குவது எளிதானது என்று தெரிகிறது.அவர்களது வாக்குமூலங்களிலிருந்து எச்எஸ்பிசி வங்கி பகிரங்கமாகவும்ஆணவமாகவும் ஹவாலா எந்திரத்தை இந்தியாவில் இயக்கியதும்,சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்ததும் அம்பலமாகி 
உள்ளது.

வழக்கு தொடர வேண்டும்
ஹவாலா வசதியை ஏற்படுத்தி இந்தியாவில் எச்எஸ்பிசி வங்கி கடத்தல்லஞ்ச ஊழல்தீவிரவாதம் போன்றவற்றை ஊக்குவித்து வருகிறது. இதற்காக நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க முயற்சித்ததாக அந்த வங்கியின் மூத்த அதிகாரிகள் மீது வழக்கு தொடர வேண்டும்.எச்எஸ்பிசி வங்கியின் ஜெனிவா கிளையில் பணம் குவித்துள்ள 700 பேர் மீது வருமான வரி சோதனைகள் நடத்த வேண்டும். அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவேண்டும். அதன்படி அவர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

விடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...
www.dailymotion.com/video/xv1la3_indian-black-money-in-swiss-bank_news

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment