Saturday, 10 November 2012

குப்பையில் இருந்து மின்சாரம்!!! ஒரு சிறப்பு பார்வை


குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க, தமிழகம் முழுவதும் 60 நகராட்சிகளை, நகராட்சிகளின் இயக்குனரகம் தேர்வு செய்துள்ளது. தமிழகத் தில் உற்பத்தியாகும் மின்சாரத் திற்கும், நமது தேவைக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு, பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் தயாரிக்க, மரபுசாரா எரிசக்தி துறை மூலம் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்றாக, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென, தமிழகம் முழுவதும் 60 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியும் ஒன்றாகும். தினந்தோறும் சேகரமாகும் குப்பையில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன, அது மின் தயாரிப்பிற்கு உதவுமா என்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. கம்பம் நகராட்சியில் குப்பை பரிசோதனைக்கென, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன், மின்சாரம் தயாரிப்பதற்கான முயற்சிகள் தொடங்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் பகுதியில் சேகரமாகும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக, அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவன விஞ்ஞானிகள் குழுவினர், நேற்றுமேயர் செல்வராஜ், கமிஷனர் ஜெயலட்சுமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். இத்திட்டத் திற்காக மாநகராட்சிக்கு சொந்தமான மூன்று இடங்களை அக்குழுவினர் ஆய்வு செய்தனர். திருப்பூரில், சாலை ஆலைகளிலிருந்து தினமும் வெளியேற்றப்படும் 11 கோடி லிட்டர் சாயக் கழிவு நீரால் ஏற்படும் பிரச்னையும், தினமும் வீதிகளில் கொட்டப்படும் 450 டன்னுக் கும் கூடுதலான குப்பையும் பூதாகரமான பிரச்னையாக உள்ளது. இந்த இரண்டு விதமான பிரச்னைக்கும் தீர்வுகாணும் வகையில், அமெரிக் காவை சேர்ந்த தனியார் நிறுவனம்,...
மாநகராட்சியில் தற்போது உரக்கிடங்கு ஏதுமில்லை. அதனால், சேகரிக்கப்படும் குப்பைகள், பயன்பாடற்ற பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வருகின்றன.


அதனால், தினமும் ஐந்து டன் குப்பையில் இருந்து, எரிவாயு தயார் செய்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான உபகரணங்கள் வாங்கவும், பணிகள் மேற்கொள்ளவும் 90 லட்சம் ரூபாய் உத்தேசமாக செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:


தினமும் ஐந்து டன் குப்பையில் இருந்து எரிவாயு தயாரித்து, அதன் மூலம் ஒரு லட்சத்து 68 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். ஒரு யூனிட் ஐந்து ரூபாய் 50 காசு வீதம் மின் சேமிப்பு என்றால், ஒன்பது லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும். எரிபொருளில் கிடைக்கும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கிலோ உரத்தை, கிலோ ஒன்றுக்கு மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம், 5.25 லட்சம் ரூபாய் கிடைக்கும். 1,750 மெட்ரிக் டன் குப்பையை பாறைக்குழிக்கு கொண்டு செல்ல, வாகன செலவினம் மற்றும் மனித சக்தி சேமிப்பு மூலம் 8.75 லட்சம் ரூபாய் என மொத்தம் 23.24 லட்சம் ரூபாய் வருவாய் மிச்சமாகும்.


ஆண்டுக்கு பராமரிப்பு செலவினம் 4.80 லட்சம் ரூபாய், மின்சாரம் உற்பத்தி செய்ய சாதனங்களை இயக்க 13,300 யூனிட் மின்சாரம் தேவை. அந்த மின்சாரம் ஒரு யூனிட் 5.50 ரூபாய் வீதம் வாங்கினால், 73 ஆயிரத்து 150 ரூபாய் செலவாகும். மொத்தம் ஐந்து லட்சத்து 53 ஆயிரத்து 150 ரூபாய் செலவாகிறது. மொத்த வருவாயில் இருந்து செலவை கழித்தால், 17 லட்சத்து 70 ஆயிரத்து 850 ரூபாய், ஓராண்டு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.


இந்த வருவாய் மூலம், திட்ட செலவின தொகையை ஆறு ஆண்டுகளில் கட்டி விடலாம், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கோவில் வழி பகுதியில், மின் உற்பத்தி திட்டம் அமைக்க போதிய இடம் உள்ளது. வரும் 2013-14ல் இத்திட்டத்தை செயல்படுத்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, என்றார். 

வீடியோ வை பார்க்க ...
http://www.youtube.com/watch?v=UjZgtmd1kko

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment