சமீபத்தில் எனது கல்லூரி நண்பனைக் காண பூந்தமல்லி சென்றிருந்தேன். அவன் ஸ்ரீபெரம்பதூரில் உள்ள ஒரு கொரியன் கம்பெனியில் வேலையில் இருந்தான். பார்த்து பேசிக்கொண்டு இருந்தபோதுதான் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொன்னான்.
அது..... இந்தப் பகுதிகளில் தங்கு தடையின்றி நடைபெற்றுவரும் 'விபச்சாரம்'.
இந்திய தொழிற் நகரங்களில் சென்னை முக்கியமான நகரமாக மாறிவருகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது சின்னதும் பெரிதுமாய் நிறைய வெளிநாட்டு தொழிற் நிறுவனங்கள் சென்னையில் கால் பதித்துள்ளன. இதனால் சென்னையை சுற்றி தொழிற்சாலைகள் அணிவகுத்து நிற்கின்றன. அந்த வகையில். ஹூண்டாய், ஃபோர்ட், நிசான் போன்ற உலக புகழ்பெற்ற கார் கம்பெனிகள் இங்கு அமைந்திருப்பதால் சென்னையை அடுத்த ஸ்ரீபெரம்புதூர் இந்தியாவின் 'டெட்ராய்டாக' மாறிவருகிறது.
இதனால் உலகின் பல பாகங்களிலிருந்தும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னைக்கு வந்தவன்னம் உள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, வேலைவாய்ப்பு என்று ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும். நாம் அதிர்ச்சி அடையவும் செய்திகள் இருக்கின்றன.
கொரியன்கள் ஆதிக்கம்....
கார் உதிரி பாகங்கள் தாயரிப்பில் அதிக அளவில் கொரியன் கம்பெனிகள் ஈடுபட்டுவருகின்றன. சென்னை சுற்றுப் பகுதிகளில் ஹூண்டாய், சாம்சங், எல்ஜி., உட்பட 160க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு துறையில் ஈடுபட்டுவருகின்றன. மாதத்திற்கு சராசரியா 100 கொரியன்கள் சென்னையில் கால் பதிக்கின்றனர். ஸ்ரீபெரம்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் நிறைய கொரிய குடியிருப்புகள் முளைத்துள்ளன. கொரியன் என்றில்லை உலகின் பல பாகங்களிருந்து தொழிலாளர்கள் சென்னைக்கு வந்தவன்னம் உள்ளனர்.
இவர்கள் வீட்டை விட்டு பல மாதங்கள் தனியாக இருப்பதால், இவர்களுக்கு பெண் துணை தேவைப்படுகிறது. அதனை இங்கு உள்ள ஏஜெண்டுகள் பயன்படுத்தி பெண்களை சப்ளை செய்து காசு பார்க்கின்றனர். கொரியன்களுக்கு இயல்பாகவே இரண்டு நாளுக்கு ஒரு முறை பெண் துணை தேவைப்படுமாம் (நண்பன் சொன்னது) . இவர்களது தேவை நமது கலாச்சாரத்தை பதம் பார்க்கிறது. இதனால் தமிழ் நாட்டின் மானம் விமானம் ஏறுகிறது.
நண்பன் சொன்ன செய்தி!...
நண்பனது அலுவலகத்தில் படுக்கை அறைகளும் இருந்தது. கார் கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அது. இங்கு இருக்கும் படுக்கை அறைகளைக் காட்டி, உயர் அதிகாரிகள் தங்கி ஓய்வு எடுக்கும் அறை என்றான். ஓய்வு என்றால் தனியாக அல்ல இளம்பெண்களோடு!?.
இத்தகைய வெளிநாட்டு பணியாளர்களுக்கு பெண்களை சப்ளை செய்யவே தனியாக இந்தப் பகுதிகளில் ஏஜெண்டுகள் இருக்கின்றார்களாம். வெளி நாட்டினர் எந்த வகை பெண்களை விரும்புகின்றனறோ அந்த வகை பெண்களை அவர்கள் சப்ளை செய்கின்றனர். கல்லூரிப் பெண்கள், வழக்கமான பாலியல் தொழிலாளர்கள் , குடும்பம் பெண்கள் (?) துணை நடிகைகள் என்று பல வகைகளிலும் சப்ளை நடக்கிறதாம்.
வெளிநாட்டினர் தங்கி இருக்கும் வீடுகளுக்கோ அல்லது பங்களாவிற்கோ சென்று இந்தகைய பெண்கள் சேவை ஆற்றுகின்றனர். அதனால் இவர்களை போலீஸ் பிடிப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. அதுவும்போக வெளி நாட்டினர் மீது நமது காவல்துறை அவ்வளவு சுலபமாக நடவடிக்கை எடுத்துவிடமுடியாது.
இதுபோக கொரியன் ஒருவரே இங்கு பங்களாவை வாடகை எடுத்து, கொரிய பெண்களை வைத்து தொழிலில் ஈடுபட்டு வருகிறாராம். இங்கு வரும் கொரியன் மற்றும் ஜப்பானியர்களுக்கு நம்மூர் பெண்களை அவ்வளவாக பிடிப்பதில்லையாம். அதனால் மணிப்பூர், மேகாலயா நேபாளம் போன்ற இடங்களிலிருந்து பெண்களை தருவித்து தருகிறார்களாம்" என்றான். எனக்குத் தலை சுற்றியது.
இதுபோக வித்தியாச அனுபவத்திற்கு ஆசைப்பட்டு நிறைய சென்னை வாழ் இளம்வட்டங்கள் ஸ்ரீபெரம்புதூருக்கு படையெடுக்கின்றனர். இதனால் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் சென்னையில் விபச்சாரம் பெருகும் ஆபத்து ஏற்படும் நிலைமையில் உள்ளது.
நாணும் கொரியனும் ....
நான் கடந்த மூண்டறை ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள சாம்சுங் இன்ஜினியரிங் கம்பெனியில் (கொரியன்)வேலை பார்த்து வருகிறேன்.அவர்கள் பழக்கவழக்கங்கள் என் நண்பன் கூறியது போலவே தன இருந்தது.ஒவ்வொரு வாரமும் அவர்கள் தப்பு செய்வதற்காக அருகே உள்ள பக்ரைன் நாட்டிற்கு சென்று வருவார்கள்.
காவல்துறை நடவடிக்கை தாமதமா?
இரண்டு மூன்று மாதத்திற்கு முன் இந்த பகுதிகளில் பெரிய அளவில் விபச்சார வேட்டையை நடத்தியது புறநகர் காவல்துறை. அதில் ஒரு கொரியன் ஒருவன் சிக்கினான். இன்னும் விபச்சார வேட்டையை தீவிரப் படுத்தினால் இந்த பகுதியில் விபச்சாரத்ததை அடியோடு ஒழித்துவிடலாம்.
அதுவும் இல்லாமல் ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களையும் இந்த கும்பல் விபச்சாரத்தில் ஈடுபடுத்திவருகிறது. வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறி, ஸ்ரீபெரம்பூதூரை சுற்றி உள்ள இளம் கிராமப்புற பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் சுற்றி வருகிறது. இதை தடுக்க இப்போதே தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய நகரங்களோடு சென்னையை ஒப்பிடும்போது சென்னையில் மட்டும்தான் விபச்சாரத்திற்கு என்று தனியாக பகுதி இல்லை. மும்பையில் காமந்திபுரா, மீரா ரோடு , நல்பஜார் கல்கத்தாவில் சோனாகஞ், தில்லியில் சில பகுதிகள் என்று விபச்சாரதிற்குகேன்றே சில இடங்கள் வரையிறுக்கப்பட்டு அங்கு தொழில்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் கோடம்பாக்கத்தை அப்படிபட்ட இடமாக மாற்ற 80ளில் சிலர் முயற்சி செய்தனர். ஆனால் நமது காவல் துறையினர் திறமையாக செயல்பட்டு அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டனர். அத்தகைய ஆற்றல் பெற்றது தமிழ்நாடு காவல் துறை.
இங்கேயும் அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை எடுத்து, சென்னையை சுற்றி அப்படி ஒரு அவலம் ஏற்படாவன்னம் காக்கவேண்டியது காவல்துறையினரின் கடமை. செய்வார்களா......?
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
Nalla thagaval
ReplyDeleteNandri