Sunday, 11 November 2012

ஆப்பிள் சிடர் வினிகர் பற்றிய சிறப்பு மருத்துவ பார்வை... ...



ஆப்பிள் சிடர் வினிகர் உடலுக்கு ரொம்பவே நல்லது. உடலின் பி எச் லெவலை சரியா வெச்சுக்கும். டாக்சின் வெளியேற்ற உதவும்.
உடலின் எடையையும் கணிசமாக குறைக்கும். உடனே பலன் தெரியாது.தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஒரு மாதம் கழித்து தெரிய தொடங்கும். கிருமி நாசினி, பொடுகு தொல்லைக்கு நல்ல மருந்து. ஸ்கின் அலர்ஜிக்கு பயன்படுத்தலாம். இன்னும் பல வழிகளில் பயன்படும். வீட்டில் ஒவ்வரு வீட்டிலும் இருக்க வேண்டிய மருந்து பொருள் அது.
Apple Cider Vinegar Usesஆர்கானிக் தான் வாங்க வேண்டும். பில்டர் செய்யாதது தான் நல்லது. பாட்டலின் கீழே துகள்கள் படிந்து இருக்கும். ப்ராக் ஒரு சிறந்து பிராண்ட். Bragg organic ஆப்பிள் cider vinegar...

1,தினமும் ஒரு டம்பளர் கிரீன் டி அல்லது டம்பளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கலாம். இல்லைனா ஒரு பாட்டில் தண்ணியில் இரண்டு ஸ்பூன் கலந்து கொஞ்சம் கொஞ்சமா நாள் முழுதும் சிப் பண்ணலாம். ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் வரை தான் எடுத்துக்கணும். நேரிடையா அப்படியே அதை பயன்படுத்த கூடாது. வாய் வழியே குடிக்க எதில் வேணாலும் ஒரு ஸ்பூன் மட்டும் கலக்கலாம்.ஆனால் தலைக்கே, ஸ்கின்க்கோ போட ஒரு ஸ்புனுக்கு மூன்று ஸ்பூன் 1 ஈஸ்ட் 3 என்ற வீதத்தில் கலந்து தான் தேய்க்கணும். பொடுகு ஓடியே போயிடும். அனைவரும் பயன்படுத்த வேண்டியே ஒரு அருமருந்து. எந்த பிரான்ட் என்றாலும், அன் பில்டர் ஆர்கானிக் பயன்படுத்ததும்.
2,தினமும் ஓவ்வொரு முறையும் சாப்பிட்ட பின் ஒரு பெரிய ஜூஸ் குடிக்கும் டம்பளர் நீரில் ஒரு ஸ்பூன் அலது சுவைக்கு ஏற்ப குறைத்து , கலக்கி குடிங்க.ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமாக இருக்கலாம் . இது போல மூன்று வேளையும் செய்யலாம்.இல்லைனா கிரீன் டீயில் இதே போல கலக்கி குடித்தால் இன்னும் நல்லது. இப்படி செய்ய பிடிக்கவில்லை எனில், ஒரு பாட்டில் வாட்டர் கேனில் ஒன்னரை ஸ்பூன் (நார்மல் சைஸ் ஸ்பூன் தான் ) சேர்த்து அந்த தண்ணியை அப்பப்ப நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சம் சிப் பண்ணி குடிங்க. லிட்டர் அளவெல்லாம் கிடையாதுங்க. உங்களுக்கு பிடித்த மாதிரி செய்யலாம். ஆனால் அப்படியே குடிக்க கூடாது , ஒரு நாளைக்கு 2 இல்லையெனில்  3 டி ஸ்பூன் தான் சேர்த்துக்கனும். இந்த இரண்டை மட்டும் கடைபிடிங்க.
3,தலைக்கோ இல்லையெனில் உடம்பு, முகத்துக்கோ பயன்படுத்துவதாக இருந்தால், நான் சொன்னது போல 1 ஈஸ்ட் 3 , அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் எடுத்துக் கொண்டு, அதில் மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து தேய்க்கணும். கண்ணில் படாம பார்த்துக் கொள்ளனும்.பரு இருந்தால் போன உடன் பயன்படுத்தவும். அவ்வளவு தான்.இதன் பலன் எல்லாம் ஆர்கானிக் அன்பில்டரில் மட்டுமே கிடைக்கும்.

4,பளபளக்கும் கூந்தல் வேண்டுமா?

குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குளிக்கலாம் கூந்தல் 

மிருதுவாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.மேலும் தேனில் பாலாடை கலந்து தேய்த்தால் மிக அழகான கூந்தல் கிடைக்கும்.ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து அதனுடன் சம அளவு வினிகரை சேர்த்து கலக்கவும். இதனை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். எங்காவது வெளியில் போய்விட்டு வந்தாலோ, மேக் அப் போடும் முன்போ இந்த கலவையை உபயோகித்து முகத்தை சுத்தம் செய்யலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.  

 5,சிசேரியன் தழும்பை இயற்கையா மறைய வைக்கணுமா?

ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து காய்ந்த உடன் அதன் மேல் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கழுவவும். இது சில மாதங்களிலே காயத்தழும்பை மறையச் செய்து விடும்.

6,அக்குள்களை வெண்மையாக்கும் இந்த வழிமுறைகள் 
சமையல் சோடா கிளீன்ஸர் - சமையல் சோடாவையும், ஆப்பிள் சிடர் வினிகரையும் கலந்து நீங்களாகவே உங்களுக்குத் தேவையான வெண்மைப்படுத்தும் முகமூடியை (Whitening Mask) செய்யலாம். இந்த பசைக்காக நீங்கள்  ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி, நாளொன்றுக்கு இருமுறை போட்டுக் கொள்ளலாம். நீங்கள் வினிகர் மற்றும் சமையல் சோடாவை போடும் போது வரும் குமிழிகளைக் கண்டு குழப்பமடைய வேண்டாம். அந்த குமிழிகள் உடனடியாக வருவது குறைந்து விடும். மாறாக, நீங்கள் எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடாவை கலக்கலாம். அதனை சாதாரணமாக போட்டு விட்டு, அது காயும் வரை பொறுத்திருந்து, பின்னர் கழுவி விடவும்.அக்குள்களை வெண்மையாக்கும் இந்த வழிமுறைகளை நீங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். ஒரே இரவில் அற்புதங்களை இது நிகழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மேலும், ரேஸர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்ப்பது நலம். ஏனெனில், கருப்பான அக்குள் உருவாக இவைதான் முக்கிய காரணங்களாக உள்ளன. முடிகளை நீக்குவதற்கு மெழுகை பயன்படுத்த தொடங்குங்கள். நீங்கள் வெண்மையான அக்குளைப் பெற வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் சொல்லும் வகையில் பொறுமையும் அவசியம்.


More Information...

http://ajmal-mahdee.blogspot.com/2012/10/special-report-of-apple-cider-vinegar.html
http://www.mindbodygreen.com/0-3598/7-Reasons-to-Love-Apple-Cider-Vinegar.html

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment