வருகின்ற 2012-13 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் பொது பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது . அதில், வீட்டுக் கடன் வாங்கிய தனிநபர்கள் செலுத்தும் வட்டிக்காக வழங்கப்பட்டு வரும் வருமான வரிச் சலுகை வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யப்பட்டது.
வீட்டுக் கடன் வட்டிக்கான வருமான வரிச் சலுகை வரம்பு தற்போது ரூ. 1.50 லட்சமாக உள்ளது. அதாவது, வீட்டுக் கடன் வட்டி செலுத்துபவர்கள் அவர்களது ஆண்டு வருமானத்திலிருந்து ரூ. 1.50 லட்சம் வரை கழித்துக் கொள்ளலாம். வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, வாங்கும் கடன் தொகையும் உயர்ந்து வட்டி விகிதமும் அதிகரிக்கிறது.
சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா, புதுடெல்லி மற்றும் மும்பை போன்ற பெரும் நகரங்களில் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக வீட்டு கடன் பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.எனவே, வீட்டுக் கடன் வட்டிக்கான வருமான வரிச் சலுகையை உயர்த்த வேண்டும் என்பது ரியல் எஸ்டேட் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கோரிக்கையாக உள்ளது.

வீட்டுக் கடன் வாங்கியவர்கள்வட்டிச் சலுகையுடன், அசல் தொகைக்கும் வருமான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி&ன் கீழ் இந்தச் சலுகை ரூபாய் ஒரு லட்சம் வரை வழங்கப்படுகிறது. இப்பிரிவின் கீழ் வருங்கால வைப்பு நிதிக்காக பணியாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை, குழந்தைகளுக்கான படிப்பிற்காக செலுத்தும் கல்விக் கட்டணம், ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்காக செலுத்தப்படும் பிரிமியம் போன்றவற்றிற்கும் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
இந்த அனைத்து வகையான வரிச் சலுகைகளும் சேர்ந்து 80சி பிரிவின் கீழ் ரூ.1 லட்சம் வரை மட்டுமே வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. ஆக, வீட்டுக் கடன் வட்டி வருமான வரிச் சலுகை, பிரிவு 80சி&ன் கீழ் வழங்கப்படும் சலுகை ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ.2.50 லட்சத்துக்கு வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதனை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் சந்திரஜித் பானர்ஜி கோரிக்கை விடுத்தார் .
இந்த ஐந்து லட்சம் ரூபாயில், வீட்டுக் கடன் வட்டிக்கான வரிச் சலுகையை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும், வீட்டுக் கடனுக்காக செலுத்தப்படும் அசல் தொகைக்காக மட்டும் தனியே ரூ.2 லட்சத்திற்கு சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்தது.
50 லட்ச ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்குபவர் உயர்வு
சான்றாக, மொத்த வீட்டு வசதி கடனில் ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக கடன் பெறுபவர்கள் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டில் 7% ஆக இருந்தது. இது, 2011 ஆம் ஆண்டில் 12% ஆக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், ரூ.10 லட்சத்துக்கும் குறைவாக வீட்டுக் கடன் பெறுபவர்கள் எண்ணிக்கை 40% லிருந்து 21% ஆக குறைந்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த வீட்டு கடனில், ரூ. 20 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை கடன் பெறுபவர்கள் 35% ஆக உள்ளனர்.
இவ்வளவு அதிக தொகை கடன் வாங்குவதற்கு முக்கிய மூல காரணம் வீட்டின் விலை கண்டபடி உயர்ந்திருப்பதே..!
எஸ்.பி.ஐ. சுலப வீட்டுக் கடன் வசதி!
இந்தியாவில் வீட்டுக்கடன் வழங்குவதில் நம்பர்ஒன் வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(எஸ்.பி.ஐ) திகழ்கிறது. 20 (இருபது) லட்சம் குடும்பங்களுக்கு ஒருலட்சம் கோடி ரூபாய் வீட்டுக் கடனைவழங்கி அந்த குடும்பங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கி உள்ளது.
ஏன் எஸ்.பி.ஐ. தேர்வு செய்ய வேண்டும்?
முப்பது லட்சம் ரூபாய் வரை 10%,
முப்பது லட்சம் ரூபாய் மேல் 10.15%
வட்டியில் வீட்டுக் கடன் வழங்கி வருகிறது.
வேறு எந்த வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்திலும் கிடைக்காத குறைந்தபட்ச பரிசீலனைக் கட்டணம்.
கடனை திரும்ப செலுத்தும் காலம் மிகஅதிகப்பட்சமாக முப்பது (30) ஆண்டுகள் அனுமதிக்கப்படுகிறது.
ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகக்குறைவான இ.எம்.ஐ. தொகை 878 ரூபாய். (முப்பது லட்ச ரூபாய் வரை).
முப்பது லட்சம் ரூபாய்க்கு மேல் இ.எம்.ஐ 889 ரூபாய்
21 முதல் 35 வயது இளைஞர்களுக்கு கூடுதலாக 20% கடன் வழங்குகிறது.வீட்டை தேர்வு செய்யும் முன்பே வீட்டுக் கடன்தகுதியை உறுதிப்படுத்துதல்
.
வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு தனிநபர்கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படும்.வட்டி தினசரி குறையும் முறையில் பாக்கியிருக்கும் அசல் தொகைக்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது.கடன் அசல் தொகையை பகுதியாகவோ அல்லதுமுழுவதுமோ முன்கூட்டியே கட்டினால் அபராதக் கட்டணம் கிடையாது.ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் வங்கியிலிருந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்குவீட்டுக் கடனை மாற்றும் போது, பரிசீலனைக் கட்டணம் 1,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது மற்ற வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு.
எஸ்.பி.ஐ. மாக்ஸ் கெயின் & (மாத சம்பளதாரர்களுக்கு)
எஸ்.பி.ஐ. மாக்ஸ் கெயின் திட்டத்தின் மூலம்உங்கள் சேமிப்பு கணக்கையும், வீட்டுக் கடன்கணக்கையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து கொண்டு,வட்டிக்கு செல்லும் தொகையை குறைக்க முடியும்.உதாரணத்துக்கு, ஒருவர் 20 லட்ச ரூபாய் வீட்டுக்
கடன் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக் கொஷீமீவோம்.அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம்
இருக்கிறதோ அந்தத் தொகையைக் கழித்து கொண்டுகடனுக்கான வட்டியைக் கணக்கிடுவார்கள். அவர் தன்
சம்பளத்தை வங்கி கணக்கில் போட்டு வைத்துவிட்டால்,அது வீட்டுக் கடன் தொகையில் உடனடியாக
குறைத்துக் கொள்ளப்படும். அந்தத் தொகையைகழித்துவிட்டு பாக்கியுள்ள தொகைக்கு வட்டி
கணக்கிடப்படுகிறது. அவர் வங்கிக் கணக்கிலிருந்துசெலவுக்கு பணம் எடுக்க எடுக்க கடனுக்கான வட்டி
கணக்கீடும் மாறும்.இடையே சேமிப்பாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் தொகையும் இந்த வட்டிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்தக் கணக்கு வசதி மாத சம்பளதாரர்களுக்கு மட்டுமானது.
மற்ற வங்கிகளை விட குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது.
இ.எம்.ஐ. சுமையை குறைப்பதற்காக கடன்காலத்தை முப்பது வருடங்களாக நீட்டிப்பு.வீடு / ஃபிளாட் கட்ட ஆரம்பித்ததிலிருந்து 36மாதங்கள் கழித்து கடனைக் கட்ட ஆரம்பிக்கலாம்.
எஸ்.பி.ஐ. க்கு இந்தியா முழுகக் 14,000 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
உங்கள் அருகிலுள்ள எஸ்.பி.ஐ. கிளையை தொடர்புக்கு கொண்டு மேற்கொண்டு தகவல் அறிந்துக் கொள்ளலாம்.
வீட்டுக் கடனுக்கென சிறப்பு விற்பனை பிரிவு அலுவலர்களை தொடர்பு கொள்ள
24 மணி நேரமும் கட்டணமில்லா எண்களான1800-11-22-11 / 1800-425-38-00 அழைக்கலாம்.
ஆக்ஸிஸ் வங்கி: புதிய வீட்டுக் கடன் திட்டம்..
வீட்டுக் கடன் மாத தவணையை (இ.எம்.ஐ ) முறையாக திரும்ப செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, கடைசி 12 தவணைகளை ரத்தும் செய்யும் விதமாக புது வீட்டுக் கடன் திட்டத்தை தனியார் துறையை வங்கியான ஆக்ஸிஸ் வங்கி அறிமுகம் செய்திருக்கிறது.
ஹேப்பி எண்டிங் ஹோம் லோன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின்படி, 20 ஆண்டு கால வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் 15 வருடங்களை கடந்து தொடரும் பட்சத்தில் அவர்களது கடைசி 12 தவணைகள் ரத்து செய்யப்படுகிறது. அதாவது 15 வருடங்களுக்கு முன்னதாக கடனை முழுவதுமாக திரும்ப செலுத்தாமலும், பிற வங்கிகளில் கடன் பெற்று கடன்களை திரும்ப செலுத்தாமலும் தொடர்ந்து நீடிக்கும் வாடிக்கையாளர்கள் இச் சலுகைக்கு தகுதி பெறுவார்கள். அதேநேரத்தில், தவணை தொகையை முறையாக செலுத்துவதும் வீட்டுக் கடன் பிரிவுக்கான இதர நிபந்தனைகளும் இந்த புதுக் கடன் திட்டத்துக்கும் பொருந்தும்.

இந்த புது திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்தை 11% மாறுபடும் வட்டியில் (ஃப்ளோட்டிங்) கடனாக பெறும் ஒரு வாடிக்கையாளர் கடைசி 12 தவணைகள் ரத்து செய்யப்படும்பட்சத்தில் அவர் ரூ.6.19 லட்சம் லாபம் அடைவார்.
தொகுப்பு ; மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment