Friday, 30 March 2012

புதிய பாஸ்போர்ட் சட்டம்! சவூதி வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவிப்பு!


புதிய பாஸ்போர்ட் சட்டம்! சவூதி வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவிப்பு!ரியாத்: இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் களுக்கான புதிய பாஸ்போர்ட் சட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று ரியாத் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இது குறித்து  வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் புதிய தொழில்நுட்ப முறைகளில் ஒன்றான பார் கோட் (Bar code) ரீடிங் முறையில் புதிய தொழிlநுட்பத்துடன் உலகளவில் பல நாடுகளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

அந்த வகையில் பார்கோட் இல்லாத பாஸ்போர்ட்டுகளில் ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் செல்பவர்களுக்கு சிரமங்கள் இருப்பதாகவும் மேலும் அந்நாடுகளில் பார் கோட் இல்லாத பாஸ்போர்ட்களை அனுமதிப்பதில்லை என்ற பிரச்சனை எழுவதாகவும் கூறிய அதிகாரிகள் அதிகமான நாடுகளில் பார் கோட் நடைமுறைக்கு வந்து விட்டதால் சவூதியில் வசிக்கும் இந்தியர்களும் தங்களது பாஸ்போர்ட்களை புதிய பார் கோட் முறைக்கு மாற்றிக் கொள்ளும்படி இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே சவூதி வாழ் இந்தியர்கள், இப்புதிய சட்டத்தின்படி பார் கோடு உள்ள பாஸ்போர்ட் இல்லாதவர்கள் பிறநாடுகள் பயணிப்பதற்கு முன் இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு புதிய சட்டதிட்டங்களின் படி தங்களது பாஸ்போர்ட்களை மாற்றிக்கொள்ளும்படியும் அறிவுறுத்தபட்டுள்ளது..
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 29 March 2012

வெற்றி உனக்குள்ளே இருக்கிறது!!!...

எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் முன்னேற ஒரே வழி, உழைப்புதான். அடுத்து யார் நம்மைத் தாழ்த்திப் பேசினாலும் அதற்கெல்லாம் மனம் தளர்ந்துவிடாமல் நம் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

  
தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 சங்கதிகளே காரணமாக இருக்கின்றன.

1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி
2.வரையறுக்கப்பட்ட இலக்கு
3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
4.சரியான கண்ணோட்டம்
5.தன் மீதான முழு நம்பிக்கை

1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி:

நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும்.உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும்.

மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது 'வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம்தான் இறுதியில் ஜெயித்தது.

2.வரையறுக்கப்பட்ட இலக்கு:
தீர்க்கதரிசனமான குறிக்கோளை(clearly defined goal)மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும்.'குறிக்கோள்' அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப்பட்ட முயற்சி,திறமை,ஆர்வம்,ஈடுபாடு,ஞானம்,உழைப்பு மற்றும் நம்மால் எம்பக்கூடிய உயரத்திற்குள்(சாத்தியப்படுவதாக) நிர்ணயிக்கப்பட வேண்டும்.

3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:

நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும்பாலும் பிறறைத்தான் குறை சொல்கிறோம்.இது தவறில்லை என்று சிலருக்கு தோன்றும்.அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன்.ஹானஸ்டாக இன்றோ,நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுய மதிப்பீடு செய்து பார்த்து விடுங்களேன்.சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால்,அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று.மாற்று வழி புலப்படும்.இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்த முறை உதவும்.

4.சரியான கண்ணோட்டம்:

நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பயணத்திறு சமமானது. அந்த பயணத்தை தொடங்கும் போதும்,பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும். இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப்பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்.

5.தன் மீதான முழு நம்பிக்கை:

வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள்ளுங்கள். 'நம்மால் முடியும்' என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளை இடுங்கள்.
' இது ஒன்றும் எனக்கு பெரிய விஷயமில்லை; நான் நினைத்தது நடக்கப் போகிறது; என்னை சுற்றி உள்ளவர்கள் எனது வெற்றிக்கு துணை புரிகிறார்கள், எனது வெற்றிகளை பாராட்டுகிறார்கள்' என்று திரும்பத் திரும்ப மனக்கண் முன்பாக உங்களது இலக்கை நிறுத்தி வைத்து கற்பனை செய்யுங்கள்.

நன்றி : ஹிப்னோ ஜி.கெ கட்டுரையிலிருந்து... 

உங்களுக்காக மு.அஜ்மல் கான்.

கர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....


Picture of uterine fibroids* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix)


 - உடல்பகுதி


 - கருக்குழல்


 - கருப்பை


 எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்ச்சி ஏற்படலாம்.


 * கர்ப்பப்பை கட்டி - பினைன் (Benign Tumor) (ஆபத்தில்லாத கட்டி)


 - மாலிக்னன் (Malignant Tumor)  (புற்று நோய் கட்டி)


Myomata


 * ஆபத்தில்லாத கட்டி


 * கர்ப்பப்பை தசைப்பகுதியில் இருந்து வளரும் கட்டி தசையில் இருந்து எழுந்த வளர்ச்சி நர் மயோமேட்டா (அல்லது) மயோமா


 * இதை ஸ்க்லிரோமேட்டா, பைப்ராய்ட் என சொல்லாம்.


யார் யாருக்கு வர வாய்ப்புள்ளது?


 * மாதவிலக்கு நின்ற பெண்களில் 60% பெண்களுக்கு காணப்படுகிறது.


 * மணமாகி குழந்தையில்லாத பெண்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்த தாய். இவர்களில் 60% பெண்கள் வர வாய்ப்பு


 * சதை வளர்ச்சி 1 செ.மீ - 15 செ.மீ. அளவு இருக்கும்.


 * 30% பெண்கள் பாதிப்பு - 30 வயது - 40 வயது


 * 60% பெண்கள் பாதிப்பு - 40 வயது - 50 வயது


 * 30% பெண்கள் பாதிப்பு - பிள்ளையில்லாத பெண்கள்


 * 20% பெண்கள் பாதிப்பு - ஒரு குழந்தை பெற்ற பெண்கள்


 * 40% பெண்கள் பாதிப்பு - பல குழந்தைகள் பெற்ற பெண்கள்


 * 10% பெண்கள் பாதிப்பு - முதர் கன்னிப்பெண்கள்


 * 20 வயதுக்கு கீழ் உள்ள பெண்களிடம் Fibroids தோன்றுவதில்லை.


Except in Afro-Caribbean பெண்களிடம் 20 வயது கீழ் teenageல் தோன்றுகிறது.


(Fibroids) கர்ப்பப்பை கட்டிகளில் 4 வகைகள்


Submucus Fibroids :


 கர்ப்பப்பையின் உள்ளே கரு எங்கே வளருமோ அங்கு வளரும். எண்டோ மெட்டிரியம் அடுக்கினால் இந்த Fibroids மூடப்பட்டிருக்கும்.


Intramural Fibroids


 * கர்ப்பப்பையின் சுவர் பகுதியில் வளரும் கட்டிகள்.


 * கர்ப்பப்பையின் இருபக்கங்களிலும் தோன்றக்கூடியது.


 * 5 செ.மீ. மேல் கட்டி வளர்ந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.


 Subserous Fibroids


 * கர்ப்பப்பையின் வெளிப்பாகத்தில் தோன்றக்கூடியது


 * சில மயோமேட்டாக்கள் காம்பு போன்ற பகுதியால் கர்ப்பப்பையுடன் இணைந்திருக்கும்.


 * கர்ப்பப்பை வெளிபகுதியில் தோன்றுவதால் குழந்தை பிறப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது.


Fundal Myoma


 * கர்ப்பப்பையின் மேல், நடுப்பகுதிகளில் கட்டிகள் வருவது. இம்மாதிரி கட்டிகள் வருவது மிகவும் அரிது.


 * சில மயோமா ப்ராட்லிகமெண்டுடன் இணைந்திருக்கும் ப்ராட்லிகமெண்ட்


 * Penduculated Fibrods can be attached either to the inside or outside wall of the womb and they are characterize by a stalk


* Cervical Myoma


 மிக மிக ஆபூர்வமாக தோன்றுவது 4% காணப்படும்


Intramural Fibroids - 73%


Submucons - 16.6%


Subserous - 10.4%


கட்டிகள் உள், வெளிப்புற தோற்றம்


 * வட்ட வடிவம் (அல்லது) முட்டை வடிவம்


 * கேப்சியூல் போன்ற உறை. தொட்டால் ரப்பரி மாதிரி இருக்கும்


 * கேப்சியூல் உள்ள இணைப்புத்தி மயோமாவை கர்ப்பப்பை சுவருடன் இணைகிறது.


 * கேப்சியூல் - விசிறி போன்ற அமைப்பானது ரத்தக்குழாய் இதன் மூலம் ரத்தம் பெற்று மயோமா கட்டிகள் வளர்கிறது.


 * கட்டியின் ஒரங்களில் ரத்தஒட்டம் மிகுதி. அங்கு கால்சியம் அடைப்பட்டு கல்  மாதிரி தோன்றும்.


 * கட்டியின் நடுப்பகுதிக்கு மிக குறைந்த ரத்தம் தான் செல்லும்


 * கட்டியின் நடுப்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக சேர்ந்து இறுகி விடும்.


Myomaவின் அறிகுறிகள்


 * முக்கிய குறி அதிக மாதப்போக்கு ஏற்படுதல்


 * கர்ப்பப்பையின் உள்ளே (அல்லது) கர்ப்பப்கையின் இருபக்கங்களிலும் வருவது மாதப்போக்கில் தன்மை ஒழுங்கற்று இருக்கும்.


 * மாதப்போக்கு விட்டு விட்டு (அல்லது) ஒழுங்கற்று (அல்லது) அதிகமாக வெளிப்படலாம். கட்டிகளாகவும் வெளிப்படலாம்.


 * கட்டியின் அளவு பெரியதாக இருப்பின் கர்ப்பப்பை கட்டி சிறுநீர்ப்பை (அல்லது) மலக்குடல் அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். மலச்சிக்கல் ஏற்படும். முதுகுவலி ஏற்படலாம்.


 * பெரும்பாலான பெண்களுக்கு மயோமாவால் அதிக மாதப்போக்கு ஏற்படுகிறது. வலி அவ்வளவாக இல்லை.


 * சில பெண்களுக்கு அடிவயிறு கனத்து இருக்கும் இருக்கும் உணர்வு தோன்றுதல்


 * சில பெண்களுக்கு அதிக போக்கின் காரணமாக இரத்த சோகை தோன்றலாம்.


 * தொடர்ந்து இருபது நாட்களுக்குள் அதிக மாதப்போக்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் மாதப்போக்கு ஏற்படலாம்.


 * பல கேசுகளில் கர்ப்பப்பை கட்டிக்கான அறிகுறியே வெளிப்படாது.


 * 25 - 30 வயதில் தோன்றும் Myoma கர்ப்பம் தரிப்பதை தடுக்கிறது.


 * கர்ப்பம் தரித்த பின் ஏற்பட்டால் Myoma கருச்சிதைவு ஏற்படலாம்.


 * பெரிய கட்டிகள் அழுத்தம் இரத்தக் குழாய்களைத் தாக்குவதால் இடுப்புக்குழியில்


 வீக்கம், வலி ஏற்படும்.


 * மாதப்போக்கு முற்றும் பெறும் காலம் மற்றும் முற்றும் பெற்றபின் சில கர்ப்பப்பை கட்டிகள் சுருங்கி விடும்.


Myoma ஏற்படக் காரணம்


 * திட்டவட்டமான காரணம் அறியப்படவில்லை. பரவலான காரணம்


 * நாடப்பட்ட கர்ப்பப்பை தொற்று


 * குழந்தையின்மை


 * ஒரு குழந்தை மட்டும் பெற்ற பெண்கள்


 * நாற்பது வயது வரை உள்ள கன்னிப்பெண்கள்


Homoeo Medicine


 1. வயதானவர்கள் – Ars. Iod


 2. இளம் வயதுபெண்கள் - Aurmur


 3. அடிவயிறுகனம் எடை தொங்குவது போன்ற உணர்வு + திடீர் வலி - Calendula


 4. குழந்தை பிறந்தவுடன் கட்டி தோன்றி வலியுடன் கூடிய M + வயிறு கனம் – Fraxinus Americans


 5. தைராய்ட் சுரப்பி அதிக வளர்ச்சி – Cal.யோத்


நன்றி : கீற்று.காம்

கர்ப்பப்பையில் கட்டி 
                                             பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சதாரணமான ஒன்றே. குழந்தையை கர்ப்பபையில் சுமக்கும் காலத்தில் யூட்டரின் பைபராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் பொதுவாக புற்று நோய்க் கட்டிகளாக மாறும் என்று கருதப்படுவதில்லை.

பல நேரங்களில் இந்த கட்டிகள் ஆபத்தானவை அல்ல என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நான்கில் மூன்று பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது என்பதால் பலருக்கு இது இருப்பதே தெரியவராது. இடுப்பெலும்புச் சோதனையில் உங்கள் மருத்துவர் இதன் இருப்பை எதேச்சையாக கண்டுபிடிக்கும் தருணங்கள் உண்டு.

பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே தோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் திடீரென இடுப்பு வலியை தோற்றுவிக்குமேயானால் அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதாகும். இது பொதுவாக ஆபத்தை விளைவிக்காது என்றாலும் வலியை ஏற்படுத்தலாம் என்பதால் அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்றுவது வழக்கம்.

அறிகுறிகள்:

கருப்பையில் கட்டி இருக்கும் போது பொதுவாக கீழ்வரும் அறிகுறிகளை கவனிக்க வேண்டும். மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக காணப்படும். மாத விடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப் போக்கு ஏற்படுவது. இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம், சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது சிறுநீர் சேருதல், மலச்சிக்கல், முதுகு வலி அல்லது கால்வலி.

தனக்கு வரும் ரத்த அளவைவிட கட்டி அதிக வளர்ச்சியடைந்திருந்தால் கட்டி அரிதாக வலியை ஏற்படுத்தலாம், ஊட்டசத்து இல்லாமல் கட்டி பொதுவாக கரைந்து விடுவது இயல்பு. இது போன்று அழியும் கட்டியிலிருந்து வெளிவரும் துணைப் பொருட்கள் சுற்றியுள்ள தசைகளில் ஊடுருவி வலியையும் காய்ச்சலையும் ஏற்படுத்தலாம்.

கருப்பையின் உள்துவாரத்தில் வளரும் கட்டி அல்லது சதை தான் நீண்ட நாள் மற்றும் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். கருப்பையின் புறப்பகுதியில் நீட்டி கொண்டிருக்கும் கட்டி பிளாடரையோ சிறு நீரை அகற்றும் குழாயையோ அழுத்தும், இதனால் சிறுநீர்ப்பாதை உபாதைகள் ஏற்படலாம்.

கருப்பையின் பின் பகுதியில் கட்டி ஏற்பட்டால் பெருங்குடலை அழுத்தும். இதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இது முதுகு தண்டு நரம்புகளை அழுத்தும் போது முதுகுவலி ஏற்படுகிறது.

காரணங்கள்:

மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச் செய்கிறது. கட்டிகள் கண்களுக்கு தெரியாத அளவு முதல் கருப்பையையே பெரிதாக்கும் அளவு வரை வேறுபட்ட அளவுகளில் தோன்றலாம். இவை ஏன் தோன்றுகின்றன என்பது குறித்து தெரியாது. ஆனால் கிளினிக்கல் அனுபவமும், ஆராய்ச்சியும் பல காரணிகளை எடுத்துரைக்கின்றன.

மரபணு மாற்றத்தால் ஏற்படும்:

மரபணுக் கூறுகளின் மாற்றங்களால் இது ஏற்படலாம். கருத்தோற்றத்தை சாத்தியமாக்கும் எஸ்ட்ரோஜென், ப்ரொகெஸ்ட ரோன் என்ற இரண்டு மறு உற்பத்தி ஹார்மோன்கள் கட்டியை தோற்றுவிக்கலாம் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் திசுக்களை பராமரிக்கும் சில பொருட்கள் அதாவது இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணி கட்டி வளர்ச்சிக்கு காரணமாகலாம்.

கருப்பை கட்டி சிகிச்சையில் ஒரே அணுகுமுறை என்பது இல்லை. பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. கட்டிகள் இருப்பது தெரியவராத பட்சத்தில் பொறுத்திருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த கட்டிகள் நிச்சயமாக புற்று நோய் கட்டிகள் அல்ல. மேலும் மகப்பேற்றில் இது ஒரு போதும் இடையூறு செய்யப் போவதில்லை.

இவை மெதுவாக வளரும். மாதவிடாய்க்கு பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே கட்டிகள் சுருங்கி விடும். இது தவிரவும் பல விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. கருப்பையை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகள் பல்வேறு பக்க ஆபத்துகளை உருவாக்கலாம் என்பதால் மருத்துவர்கள் வேறு வழியே இல்லாத பட்சத்தில் தான் இதற்கு பரிந்துரை செய்வார்கள்.

அல்லது கட்டிகளை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சையும் உள்ளது. இதுவல்லாமல் மயோலைஸிஸ் என்று அழைக்கப்படும் சிகிச்சை முறை உள்ளது. இதில் மின்சாரத்தை பாய்ச்சி கட்டிகளை அழித்து, கட்டிகளை ஊட்டி வளர்க்கும் ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கும் சிகிச்சை உதவிகளுமாக இருக்கும் என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் ஜெயராணி.  

பெண்களின் கர்ப்பப்பை கட்டிகளை நீக்க நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகியுள்ளன. உலகில் குழந்தைப்பேறு இல்லாத பெண்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு கர்ப்பக் குழாயில் கட்டிகள் ஏற்படுவதே முக்கியமாக காரணமாக உள்ளது. இதை குணப்படுத்துவதில் நவீன எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறை நல்ல பலனைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை முறையில், கருப்பையில் செலுத்தப்படும் நுண்ணிய கேமரா மூலம் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை சிறிய கட்டிகளாக வெளியே கொண்டு வரப்படுகிறது. இதனால் கருப்பை குழாயில் இருந்த அடைப்பு முற்றிலும் நீக்கப்படுவதால் கர்ப்பம் சாத்தியமாகிறது. இந்த சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் 60 முதல் 70 சதவீதம் வரையிலான பெண்கள் கருத்தரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

நவீன சிகிச்சைகள்:

பெண்களுக்கு சுரப்பியில் கோளாறு, சினைப்பையில் நீர்க்கட்டிகள், ரத்தக் கட்டிகள், குழாயில் அடைப்பு, அல்லது நீர் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இதை தவிர கர்ப்பப்பையில் கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி இருக்கலாம்.

விஞ்ஞான வளர்ச்சியினால் இவை அனைத்தும் சரி செய்யலாம். ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் பெரும்பாலும் இப்பிரச்சினைகளை 99 சதவீதம் சீராக்கலாம். எல்லா குறைபாடுகளுக்கும் சோதனைக் குழாய் சிகிச்சை அவசியம் என்று சொல்ல முடியாது. 90 சதவீதம் குறைபாடுகளை லேப்ரோஸ் கோபி, ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் சரி செய்ய முடியும்.

இந்த சிகிச்சை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கிறார் டாக்டர் ஜெயராணி.

தாய்மை அடையலாம்:

முட்டைப் பையில் உள்ள கட்டிகள், கர்ப்பப்பையில் 10 செ.மீ. கட்டிகள் என்பனவற்றை ஒரு செ.மீட்டர் அளவேயான சிறு துளையிட்டு நீக்கலாம். ஹார்மோனிக் ஸ்கேஸ்பெல், மோர் சிலேட்டர் என்ற அதிநவீன கருவிகளால் சிறிய அளவு ரத்தப் போக்கோடு சிறு துளையையிட்டும் அகற்றலாம்.

தையலே இல்லாமல் ஒரே நாளில் தெம்போடு வலியில்லாமலும் வீட்டிற்குச் செல்லலாம். இரண்டே நாளில் வேலைக்கும் செல்லலாம். டியூப்பில் உள்ள நீர் அடைப்பு இவை இரண்டும் குழந்தை உருவாவதைத் தடுக்கும். இவற்றை இந்த மகத்தான சிறு துளை சிகிச்சையினால் சரி செய்யலாம்.

சரி செய்த பிறகு 90 சதவீதம் பெண்கள் தாய்மை அடைவதற்கு வாய்ப்பு உண்டு. இதை தவிர கர்ப்பப்பையில் சதை வளர்ச்சி இருப்பதால் குழந்தை வளர இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சையினால் இதையும் நீக்கலாம். கட்டிகளையும் நீக்கலாம், நீக்கிய பின் 95 சதவீதம் பெண்களுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு உண்டாகிறது.


நன்றி : மாலைமலர் நாளிதழ் ..

கர்ப்பப் பை கட்டியை அகற்ற நவீன சிகிச்சை.. 
                                                                                                    கர்ப்பப் பை கட்டியை அகற்ற சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்"ஹைபு' என்ற நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது என புற்றுநோய் நிபுணர் டாக்டர்ரத்னாதேவி தெரிவித்தார்.நெய்வேலியில் செயல்படும் சென்னை அப்பல்லோ
மருத்துவமனையின் தகவல் மையத்தில் நேற்று எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர்ஜெயமூர்த்தி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரத்னாதேவி மற்றும்அப்பல்லோ அதிகாரிகள் லதா மகேஸ்வரி, லட்சுமி பிரியா ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.அப்போது டாக்டர் ரத்னாதேவி கூறியதாவது:கர்ப்பப்பை கட்டிஎன்பது குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களிடம் பொதுவாக காணப்படுகிறது.


இக் கட்டிகளை அகற்ற வழக்கமாக அடி வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை
அல்லது நுண் துளை லேப்ராஸ்கோப் மூலம் சிகிச்சை ளிக்கப்படும்.இம்முறை
சிகிச்சை தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் 'ஹைபு' என்ற புதிய அதிநவீனசிகிச்சை வாயிலாக, துளையில்லாமல், மயக்க மருந்து இல்லாமல் 2 மணிநேரத்திற்குள் சிகிச்சை அளித்து கட்டியை முழுமையாக அகற்றி குணப்படுத்தமுடியும்.ரேடியேஷன், தழும்பு எதுவுமின்றி உடனடியாக வீட்டிற்குத்திரும்பலாம்.இவ்வாறு டாக்டர் ரத்னாதேவி கூறினார்.எலும்பு சிகிச்சை நிபுணர்டாக்டர் ஜெயமூர்த்தி கூறுகையில், "இளம் பருவத்தினர் தொடர்ந்துகம்ப்யூட்டர் மற்றும் "டிவி' பார்ப்பதால் கழுத்து, முதுகுவலி போன்ற எலும்புதொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.ஓய்வின்றி உட்கார்ந்த நிலையிலேயே நீண்டநேரம் பணி செய்வது. சூரிய வெளிச்சமே உடலில் படாமல் அறைக்குள்ளேயே செய்யும்பணிகள் மேற்கொள்வதை இளம் பருவத்தினர் தவிர்க்க வேண்டும்' என்றார்.


நன்றி:தமிழ் யாஹூ.காம் 


கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்!
பொதுவாக ஹோமியோபதி மருத்துவமுறையில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்தமுறை மருந்துகளால் தீங்கு ஏற்படுவதில்லை. இந்த மருந்துகள் பக்க விளைவுகளையோ அல்லது பின் விளைவுகளையோ ஏற்படுத்துவதில்லை என்பதும் ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை என்பதும் இந்த மருத்துவ முறையின் கூடுதல் தனிச்சிறப்பு எனலாம்.


கர்ப்பிணிப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஹோமியோபதி மருந்துகள் முழுப் பாதுகாப்பானவை. மருந்துகளை உட்கொள்ளும் முறை மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இனிமையான சுவையுடன் இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


எல்லாவகையான நோய்களுக்கும் நிரந்தர குணம் அளிக்கும் வகையில் ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அந்த வகையில் கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் பற்றிப் பார்ப்போம்.


இன்றைய நவீனயுகத்தில் படித்த பெண்களும், அனுபவம் மிக்க நடுத்தர வயதுப் பெண்களும் மாதவிலக்குக் கோளாறுகள் (Menstrual Disorders), கர்ப்பப்பை கோளாறுகள் (Uterine Problems), பாலியல் பிரச்னைகளுக்கு (Sexual Disorders) முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அந்தரங்கமாகக் கருதி சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். வெளியே சொல்வதற்கு சங்கடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.


Menorrhagia எனப்படும் அதிகளவு மாதப்போக்கு, Metrorhagia எனப்படும் இடைக்கால மாதப்போக்கு, Dysmenorrhea எனப்படும் வலிமிக்க மாதப்போக்கு, Amenorrhea எனப்படும் தடைப்படும் மாதப்போக்கு, Leucorrhea எனப்படும் வெள்ளைப்பாடு, Oophoritis, Salpingitis, Metritis போன்ற கர்ப்பப்பை சார்ந்த அழற்சிகள், Cysts எனப்படும் நீர்க்கட்டிகள் Uterine Fibroids எனப்படும் கர்ப்பப்பை நார்க்கட்டிகள், Cervical Polyp, Uterine, Tumours, Myoma எனப்படும் சிறிய, பெரிய தசைக்கட்டிகள், வீக்கம் போன்றவை பரவலாகப் பெண்களிடம் காணப்படும் வியாதிகளில் ஒன்றாக உள்ளது. இதுவே கர்ப்பப்பை கட்டிகள் எனப்படுகின்றன.


பேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ள கர்ப்பப்பை கூபக எலும்பானது (Pelvis) அதன் நடுவில் பாதுகாப்பாக உள்ளது. பெண்களைத் தாய்மையடையச் செய்யவும், இனப்பெருக்கத்திற்கும் கர்ப்பப்பை அவசியமானதாகும். கர்ப்பப்பையின் ஆரோக்கியமே ஒரு பெண்ணின் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது.


எனவே கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண நிலையில் நோய் இருக்கும்போது அலட்சியப்படுத்தி விட்டால் அந்நோய் முற்றிய நிலையில் வேதனை அதிகரித்து உடல் பலவீனப்பட நேரிடலாம். நோய் முற்றிப்போனால் எந்த மருத்துவ முறையானாலும் குணப்படுத்துவது சிரமம்.


காரணங்கள்


இன்றைய நவீன வாழ்க்கைச் சூழ்நிலைகளாலும், பதற்றம், பரபரப்பு, அவசரங்களாலும், உரங்கள், பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றாலும், உணவுப் பழக்க வழக்கங்களாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாகக் கூட இருக்கலாம். 


அதிலும் கடந்த தலைமுறையினரைக் காட்டிலும் இந்த தலைமுறையினரில் குறைவான வயதுடைய பெண்களுக்கு இதுபோன்ற கட்டிகள் அதிகளவில் காணப்படுகின்றன.


கர்ப்பப்பை கட்டிகளைப் பொருத்தவரை அலோபதி மருத்துவமுறையில் மருந்து, மாத்திரைகள் மூலம் குணமாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பப்பை அறுவைசிகிச்சை (Hysterectomy) மூலம் அகற்றப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க் கட்டிகள் தவிர மற்ற அனைத்து வகைக் கட்டிகளையும் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். ஹோமியோபதி மருந்துகள் இதுபோன்ற கட்டிகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதுடன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்தும், கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியும் கர்ப்பப்பை இயக்கத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வருகின்றன.


சினைப்பைகளிலோ (Ovaries), கருக்குழாய்களிலோ (Fallopian Tubes) கர்ப்பப்பையிலோ (Uterus) வீக்கம் (Enlargement) அல்லது கட்டிகள் இருந்தால் அதனால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். மாதவிலக்கு தடைபடுதல் (Suppression of Menses), கட்டுக்கடங்காத அதீத இரத்தப்போக்கு (Profuse Bleeding) இடுப்பு வலி, அடிமுதுகுவலி, அடி வயிற்றுவலி, கால்களில் வலி, நடக்க இயலாத பலவீனம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், பிறப்புறுப்பில் உஷ்ணம், வலி, அதிக வெள்ளைப்பாடு, குளிர்ச்சுரம், தலைவலி, இரைப்பைக் கோளாறுகள், உடலிலும் மனதிலும் அமைதியற்ற நிலை (Restlessness) போன்ற பிரச்னைகளால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை துயரமாகி விடும்.


மிகவும் குறைந்த வயதுடைய பெண்களின் சினைப்பையில் நீர்மக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் அலோபதி மருத்துவத்தை விட ஹோமியோபதி மருந்துகளே சிறந்த பலனைத் தரும். சினைப்பையில் நீர்மக் கட்டிகளுக்கு அலோபதி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டும் எவ்விதப் பயனும் இல்லாத நிலையில் ஹோமியோபதி மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை அளித்ததற்கான முன்உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.


சிகிச்சை முறைகள்


ஹோமியோபதி மருத்துவத்தில் விபத்து காலங்கள் தவிர பெரும்பாலான வியாதிகளுக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை.


கர்ப்பப்பை வீக்கத்தை, வலி அல்லது கட்டிகளைக் குணப்படுத்த கோனியம், ஆரம்மெட், கார்போ அனிமாலிஸ், கியோசோட்டம், தைராய்டின், அபிஸ்மெல், லாச்சஸிஸ், கல்கேரியா கார்ப், காலிபுரோம், மூரக்ஸ் போன்ற ஏராளமான மருந்துகள் நோயின் தன்மைக்கேற்ப உள்ளன.


மேலும் லக்கானினம், தூஜா, கல்கேரியா புளோர், சிமிசிபியூகா போன்ற மருந்துகளும் கர்ப்பப்பை கட்டி உள்ளவர்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. 


இயற்கையான வழிமுறைகளில் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் எந்த இழப்புமின்றி நோய்களைக் குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவமே மிகவும் சிறந்தது.


-நன்றி: ஹோமியோபதியும், மனித நலமும்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 28 March 2012

உங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் !!!


தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்.பி.ஜி என்னும் சமையல் எரிவாயுவின் பற்றாக்குறை இருக்கிறது.விலை உயர்ந்து கொண்டே போவதும் நேர்கிறது. இந்த நிலையில் மாற்று எரிபொருளை தேடி வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இயற்கையில் பூமியில் கிடைக்கும் இந்த எரிவாயுவும் இன்னும் சில கால அளவுக்கு மேல் கிடைக்க போவதில்லை. இதனால் வருங்காலத்தில், எதையெல்லாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதே வேளையில் உயிர்க்கழிவுகள் என்று கூறப்படும் மனிதன் வெளியேற்றும் மலஜலம், காய்கறி கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், விவசாய கழிவுகள் போன்ற அழுகிவிடும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தையும், எரிவாயுவையும் பெற முடியும் என்று பல காலங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது. இந்த கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்க உருவாக்கப்படும் கட்டமைப்புக்கு அரசு மானியமும் வழங்குகிறது.
ஆனால் இதனை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் குறைவு என்பது தான் துரதிர்ஷ்டம். கீழ்வரும் பயோகேஸ் என்ற மனித மலக்கழிவிலிருந்தும், வேறுபல உயிர்க்கழிவுகளிலிருந்தும் எரிவாயுவையும், மின்சாரத்தையும் எடுக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் எரிவாயு பற்றாக்குறை தீரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
பயோகேஸ்
இது போன்ற உயிர்க்கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு அரசின் மரபுசாரா எரிசக்தி முகமையின் முகவரான மனோகரன் விளக்குகிறார். ” மனிதனின் மலஜலம் உள்பட மடிந்து போன அனைத்து உயிர் பொருள்களிலிருந்தும் எளிதாக எரிவாயுவை பெற முடியும். இப்படி பெறப்படும் எரிவாயுவை பயோகேஸ் என்கிறோம்.
தற்போது நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் எல்.பி.ஜி சமையல் சிலிண்டர் வாயு, பெட்ரோல், டீசல் உள்பட பூமியில் இருந்து கிடைக்கும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தான் கிடைக்கும். இவை கிடைக்காமல் போகும் நிலையில் நாம் அடுப்பு எரிக்கவும், வாகனத்தை ஓட்டவும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் இப்போது உள்ள கேள்வி. விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் இதனை கருத்தில் கொண்டு தண்ணீரில் கூட கார் ஓட்டலாமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆனால் நம்மை போல் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதிக அளவு கிடைக்கும் மூலப்பொருளை வைத்து முதலில் சமையல் உள்பட அதிமுக்கியமான தேவைக்கு எரிவாயுவையும், மின்சாரத்தையும் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் மலத்திலிருந்தும், உயிர்க்கழிவுகளில் இருந்தும் எரிவாயுவை பெறும் “பயோகேஸ்” அமைப்பு. இந்த பயோகேஸ் அமைப்பு மூலம் மின்சாரத்தையும் பெற முடியும். எரிவாயுவையும் பெற முடியும் என்பது தான் சிறப்பு.
எப்படி உருவாகிறது?
பொதுவாக மனித மற்றும் விவசாயகழிவுகள் நமக்கு எளிதாக கிடைக்கின்றன. இந்த கழிவுகள் அனைத்தும் எளிதில் மக்கிவிடக்கூடியது. இயற்கையில் இந்த கழிவுகள் மக்கும் போது ஒரு ரசாயன மாற்றம் நடக்கிறது. மலமாக இருந்தாலும், வேறு தாவர இலை,தழை, இறைச்சி உள்பட எந்த உயிர்க்கழிவாக இருந்தாலும், அது பூமியில் விழும் போது மக்கி அழுக தொடங்குகிறது. இந்த அழுகுதல் என்பது தான் ரசாயன மாற்றம்.
அதாவது இந்த கழிவுகளில் கண்ணுக்கு தெரியாத உயிரினமாக பாக்டீரியாக்கள் என்று நுண்ணுயிரகள் பரவி அவற்றை தின்று ஜீரணிக்க முயல்கின்றன. அப்போது இந்த கழிவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்கள் ஆகிய பொருட்கள் வெப்பத்தினால் உலர்ந்து போகின்றன. அப்போது இவற்றிலிருந்து அசிட்டிக் அமிலம், புரோபியனிக் அமிலம், மற்றும் பிட்யூட்ரிக் அமிலம் என்ற ரசாயனங்கள் உருவாகின்றன.
இந்த மூன்று அமிலங்களும் கடைசியில் மீத்தேன் என்ற வாயுவாக மாறி விடுகின்றன. இந்த மீத்தேன் வாயு நன்றாக எரியும் தன்மை கொண்டது. இந்த வாயு மற்ற எரிவாயுக்களை விட மிகவும் வெப்பத்துடன் எரியும் தன்மை கொண்டது என்பதால் சமையல் உள்பட அனைத்து எரிக்கும் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி கழிவுகளை ஒரு இடத்தில் சேர்த்து அதிலிருந்து மீத்தேன் வாயுவை பெறுவது தான் “பயோகேஸ்” பிளாண்ட் என்ற எரிவாயுவை பெறும் கலன் அமைப்பு. இந்த எரிவாயு கலன்களை பெறும் அமைப்பை தான் நாங்கள் உருவாக்கி தருகிறோம்.
எரிவாயு கலன் அமைப்பு

இந்த எரிவாயு கலன் என்பது, குறிப்பிட்ட விதிமுறைகளின் படி பூமிக்கு அடியில் அமைக்கிறோம். ஏறக்குறைய இது 15 கியூபிக் மீட்டர் விட்டத்தில் சிறிய கிணறு போன்ற அமைப்பில் இது இருக்கும். நாம் எந்த பொருளிலிருந்து எரிவாயுவை தயாரிக்க நினைக்கிறோமோ அந்த கழிவுகளை இந்த கிணறு போன்ற அமைப்பில் இடவேண்டும்.
முழுவதும் காற்று புகாமல் மூடப்பட்டிருக்கும் இந்த அமைப்பினுள் இடப்படும் கழிவுகள் நொதித்தல் முறையில் மேலே சொன்ன பாக்டீரியாக்களால் அழுக வைக்கப்பட்டு அது கடைசியில் மீத்தேன் வாயுவாக உருவாகி இந்த கலனின் மேல்புறத்தை நோக்கி வந்து தேங்கும். பிறகு அங்கிருந்து குழாய்கள் மூலம் சமையலறைக்கு கொண்டு செல்லப்படும்.
மனித கழிவில் இருந்து உருவானது என்பதால், இதில் நாற்றம் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் இந்த வாயுவை பற்ற வைப்பதற்காக திறக்கும் போது எந்த நாற்றமும் இருக்காது என்பது தான் உண்மை. குறைந்தபட்சம் 15 நபர்கள் இருக்கும் வீட்டில் இது போன்ற எரிவாயு கலன்களை அமைத்து வீட்டிற்கு தேவையான எரிவாயுவை பெறமுடியும். ஏன், 15 நபர்கள் வரை இருக்கும் வீட்டில் தான் இதை அமைக்க முடியும் என்று சொல்கிறோம் என்றால், எரிவாயு உருவாக தேவைப்படும் போதுமான மனிதகழிவை குறைந்தபட்சம் 15 நபர்கள் இருந்தால் தான் பெறமுடியும்.
எங்கெல்லாம் அமைக்க முடியும்?
அதாவது 15 நபர்கள் வசிக்கும் அல்லது தொடர்ந்து புழங்கும் எந்த இடத்திலும் பயோகேஸ் எரிவாயு கலன்களை அமைக்க முடியும். 15 நபர்கள் இருக்கும் இடத்தில் அமைக்கப்படும் ஒரு கலனிலிருந்து தற்போது நாம் பயன்படுத்தும் வீட்டு எரிவாயு எல்.பி.ஜி சிலிண்டர் அளவு கேஸை பெற முடியும்.
இது போன்ற இடங்கள் என்று எடுத்துக் கொண்டால், தியேட்டர்கள், தொழிற்சாலைகள், கேண்டீன்கள், கல்லூரி விடுதிகள், பேருந்து நிலையங்கள், அபார்ட்மெண்ட்கள் போன்ற அதிகம் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் இருக்கும் செப்டிக் டேங்குகளிலிருந்து எரிவாயுவை 24 மணி நேரமும் பெறும் வகையில் பயோகேஸ் கலன்களை அமைக்க முடியும். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரையில் இருக்கும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பெரிய அளவிலான 3 பயோகேஸ் கலன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்படும் எரிவாயு கலனிலிருந்து எந்த செலவும் இல்லாமல் 100 ஆண்டுகள் வரை சமைக்க மற்றும் வேறு தேவைகளுக்கான எரிவாயுவை பெற முடியும்.
இந்த செப்டிக் டேங்கிலிருந்து பெறப்படும் மீத்தேன் எரிவாயுவின் சிறப்பம்சம் என்னவென்றால், இது மிகவும் அழுத்தம் குறைந்த வாயு என்பதால் எல்.பி.ஜி வாயுவைப் போல் அபாயகரமானதோ, வெடிக்க கூடியதோ அல்ல. மேலும் இந்த எரிவாயு கலனிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு இந்த கலனில் தேங்கும் தண்ணீர் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியதாக இருப்பதால் அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும் இந்த வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டரை இயக்கி மின்சாரமும் தயாரிக்க முடியும். இந்த பயோகேஸ் கலன்களை அமைக்க அரசு சார்பில் 5 ஆயிரம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை மானியமாகவும் தரப்படுகிறது.
எனவே, தமிழக மாவட்டங்களில் உள்ள இது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் உடனே பயோகேஸ் கலன்களை அமைத்து எரிவாயுவை பெற்றோ, மின்சாரம் தயாரித்தோ செலவை மிச்சப்படுத்த முன்வந்தால் மிகப்பெரிய அளவுக்கு தங்களது எரிவாயு மற்றும் மின்சார செலவை குறைக்கலாம்” என்கிறார் இவர். இவரை தொடர்பு கொள்ள 94431 86572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: பசுமை இந்தியா

மாணவமணிகளே! சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்!
கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்விமற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய‌, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை! எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நம‌க்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.


கல்லூரி மாணவர்களுக்கான‌ உதவித் தொகைகள்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை/அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 10 வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன‌.

மாணவிகளுக்கு: முதுநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விவசாயிகள் பிள்ளைகள்: இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,750 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை ஆவணத்துடன் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குந‌ர்களுக்கு எழுதி அனுப்பவேண்டும். இவர்களின் அலுவலகங்கள் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன.

படை வீரர்களின் பிள்ளைகள்: பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குன‌ருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம். முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், அனைத்து வகையான பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பணிக் காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, விடுதிச் செலவுகளும் வழங்கப்படுகின்றன. இவை கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்களின் பிள்ளைகள்: முதுநிலைப் பட்டப் படிப்புகள், எம்.பில்., பி.எச்டி. படிக்கும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம்.

வகுப்பு வாரியாக: இது தவிர, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மூலம், அந்தந்த நலத்துறைகளின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ் உதவித்தொகைப் பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ஒரே பெண் குழந்தை: தவிர, குடும்பத்தின் முதல் பட்டதாரி/ஒரே ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையைப் பெற சேப்பாக்கத்தில் உள்ள பி.சி./எம்.பி.சி. நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், ஒரு மாணவர் ஒரு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மட்டுமே பெற முடியும். இது தொடர்பாக மேலும் விவரங்களை அறியவும், உதவித் தொகைகளைப் பெறுவதில் ஏதேனும் பிரச்ச‌னை இருந்தாலோ அது குறித்து ஆலோசனைப் பெறவும்,

தொலைபேசி எண்கள்: 044 -28271911/6792/28212090 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இலவசக் கல்வி:

குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும்போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை சென்ற கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்டது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில்,'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்விப் படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்' என சென்ற வருடம் ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ/மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக்கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் ஏற்கனவே சேர்ந்து படித்துவரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களைச் சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

'குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்கவேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெறவேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்த‌து.

குறிப்பு: மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இவை அனைத்தும் பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் உள்ள இந்த தகவல்களைப் பார்க்க முடியாத/அறிய வாய்ப்பில்லாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு, அவரவர்களுக்கு முடிந்தவரை இந்தச் செய்திகளை கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

மனைவியை மயக்க தாரக மந்திரம் என்ன?- ஒரு அலசல்...


கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் எப்படி மயக்குவது என்பதை 60 டெக்னிக்குகளாக விவரிக்கும் புத்தகம் ஒன்று தமிழில் வெளிவந்துள்ளது. அந்த புத்தகத்தை ஒவ்வொரு திருமணத்தம்பதியும் அவசியம் படிக்கவேண்டும். ஏன் எனில் இன்று காமம்-மனைவியைப்பற்றி- அவளை/அவனை எப்படி வளைத்துப் போடுவது என்பது பற்றி சொல்லித்தர ஆளில்லை. அப்படியே இருந்தாலும் சொல்லித்தருபவர்கள் அவமானம் அடைகிறார்கள் அல்லது அவமானமாக கருதுகிறார்கள்.

அந்த புத்தகத்தை விகடன் பிரசுரம் ரூ.100க்கு வெளியிட்டுள்ளது.அந்த புத்தகத்தின் பெயர்:ரொமான்ஸ் ரகசியங்கள்.

இதில் விளக்கப்பட்டுள்ள 60 டெக்னிக்குகளில் 20 மட்டும் பின்பற்றினாலே கணவன் மீது மனைவிக்கும் மனைவி மீது கணவனுக்கும் காமவெறியே உண்டாகும்.முடிவாக சிறந்த தம்பதியாக வாழ்வார்கள்.இது அனுபவ உண்மை.

இதே புத்தகம் 60 வயதைக்கடந்த தம்பதிக்கும் பல அரிய யோசனைகளைக்கூறுகிறது.

தம்பதிகளுக்கு திருமணமான 7ஆம் வருடம் செவன் இயர் இட்ச் ( 7 years hitch ) என்ற ஒன்று உருவாகிறது என மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறிந்துள்ளனர். 7ஆம் வருடம் தனது இல்லற வாழ்வில் ஒருவித சோர்வு உண்டாகிறது. சிலருக்கு இது 7ஆம் வருடம் உண்டாகாமல் 9 அல்லது 10 அல்லது 12 ஆம் வருடம் உண்டாகிறது. இந்த சமயத்தில்தான், மூன்றாம் ஆள் உள்ளே நுழைந்து கள்ளக்காதல் பிறக்கிறது. இதை சரிசெய்ய, அந்த வருடங்களில் 7,9,10,12 ஆம் வருடங்களில் 10 நாட்களுக்கு ஏதாவது கடலோரம் அல்லது மலையோரம் உள்ள சுற்றுலா ஸ்தலம் ஒன்றிற்குச் சென்று அங்கே ஜாலியாக இருந்துவிட்டு வர வேண்டும்.குழந்தைகளை உடன் அழைக்காமல் சென்றால் நல்லது.

உயரில் பாதியாக இருந்தவர் , இன்னொருவருடன் சென்று விட்டால் நெஞ்சம் நொறுங்கிப் போகும்  அல்லவா... உங்கள் வேலைப் பளுவை மறந்து கொஞ்சம் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்...

மலர்ந்த பூவை போல் மனைவி எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எல்லா கணவர்களுமே ஆசைபடுகின்றனர். ஆனால் அந்த மாதிரியான சூழலை கணவர்தான் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகின்றனர்.


கல்யாணம் ஆயி பல வருஷம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் ஆணினமே!

கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!

ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!!

மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பின்னிட்ரீங்க இல்ல. அதுபோல ''இது அப்பாவி ஆண்களுக்கு மட்டும்!'' அப்படீன்னு சொன்னா பெண்கள் இதை படிக்காமல் விட்டு விடப் போகிறார்களா என்ன! ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சா ஒரே கலகலப்புதான்! சரி, மேட்டருக்கு வருவோம்...   

எப்படித்தான் மனைவியை மயக்குவது ? 


1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு" உனக்கு ஹல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் "செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!"என்ன சரியா?

2. மனைவி முன் எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!

காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.

3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி, பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்ப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுக.

4. மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.

5. மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப்பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும். அப்படியில்லாமல் "இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே" அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை"" இப்படிச் சொல்லனும்!

6. ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும். அதே சமயம் சீரியலிலேயே அவர்கல் மூழ்கும்படி விட்டுவிடாதீர்கள்.

7. அம்மிணிக்கு ஸ்கூட்டி இருந்தால், வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க. அவர்களின் முகம் அதைவிட பளபளப்பாக ஆசையான காதல் பார்வையுடன் உங்களை நன்றியுடன் நோக்கும் என்பதற்கு நூற் சதவீதம் கேரண்டி!

8. ''வீட்டில் ஆணி அடிக்கணுமா?''ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.

9. அடுப்படிசாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது!!

10. ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!

11. எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.

12. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!

13. வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க.நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.

14. வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடணும். ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.

15. அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும், முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேடஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.

16. ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள், பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளனும்.

17. மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..

18. மனைவியைப் பற்றியோ உங்கள் கலயாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.

19. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து "இப்ப என்ன சொன்னே"ன்னு அசால்டா கேட்கக்கூடாது.

20. முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 27 March 2012

ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! 
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16.04.2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


ஹஜ் பயணம் செல்பவர்கள் வசதிக்காக, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் ஏற்பாட்டில், சிறப்பு பாஸ்போர்ட் முகாம் சென்னையில் நேற்று நடந்தது.

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக, ஒரே இடத்தில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு வசதியாக, சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் செய்திருந்தார். இந்த முகாமை தொடங்கிவைத்து, பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் பேசும்போது கூறியதாவது:

ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக, இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை பாஸ்போர்ட் அலுவலகம் விடுமுறை என்றபோதிலும், ஹஜ் புனித பயணம் செல்பவர்களின் வசதிக்காக, இன்று இந்த முகாம் நடத்தப்படுகிறது. ஹஜ் பயணம் செல்வோர் அதிக ஆர்வத்துடன் வந்துள்ளதால், 
31ந் தேதி(சனிக்கிழமை)யும் இதுபோன்று சிறப்பு முகாம் நடைபெறும். இது அல்லாமல், சாலிகிராமம் பாஸ்போர்ட் அலுவலகத்தில், 31ந் தேதி வரையில், தினசரி மிகக்குறைந்த அளவில் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப மனுக்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செந்தில் பாண்டியன் கூறினார்.

நன்றி : தினத்தந்தி.

ஐ.நா.மனித உரிமை கவுன்சில்19வது கூட்டத்தொடர்- ஒரு பார்வை ...


ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது இலங்கைக்கு எதிரானது – நாட்டின் இறைமைக்கு எதிரானது என்கிறது அரசாங்கம்.

அதேவேளை, இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்காவோ, ஆதரித்த நாடுகளோ அல்லது சரத் பொன்சேகாவோ ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற எதிர்க்கட்சிகளோ இது இலங்கைக்கு எதிரானது அல்ல என்கின்றன.
இந்தத் தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில், 24 நாடுகள் தான் ஆதரித்துள்ளன கிட்டத்தட்ட அதற்குச் சமமான (23) நாடுகள் இதனை எதிர்த்துள்ளன என்று நடுநிலை வகித்த நாடுகளையும் தன்பக்கம் சேர்த்துக் கொண்டு இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்கிறது.
இது விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதற்கு ஒப்பானது. என்ன தான் நியாயம் சொன்னாலும் இலங்கை அரசினால் ஜீரணிக்க முடியாத தீர்மானம் ஒன்று சர்வதேச அமைப்பு ஒன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சம்பவம். சர்வதேச கண்காணிப்பு வளையத்துக்குள் முதல்முறையாக இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது. இதற்கு இந்தத் தீர்மானம் வழிசெய்துள்ளது.
அமெரிக்கா சமர்ப்பித்த இந்தத் தீர்மானத்துக்கு 40 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன. அதில் 13 நாடுகள் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள்.
ஏனைய 27 நாடுகளும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பார்வையாளர் நிலையில் இருப்பவை.  ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பார்வையாளர் நிலையில் உள்ள நாடுகளாலும் இணை அனுசரணை வழங்க முடியும்.
இவை தவிர, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்காமல்- ஆதரித்து வாக்களித்த மேலும் 11 நாடுகளையும் சேர்த்தால் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 51 ஆகி விட்டது. இது நடுநிலை வகித்த நாடுகளையும் சேர்த்து எடுக்கப்பட்ட கணக்கல்ல.
எவ்வாறாயினும் உலகில் உள்ள மொத்த நாடுகளில் நான்கில் ஒரு பங்கு நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன என்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
இந்தநிலையிலும் கூட, அரசாங்கம் பெரும்பாலான நாடுகள் தம்முடன் இருப்பதாக கூறிக் கொண்டிருப்பது விந்தை தான். சர்வதேச அரங்கில் இலங்கை தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறியுள்ளது என்பதற்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆதரவுத் தளத்தை இழந்து போயுள்ளது என்பதற்கும் இந்தத் தீர்மானம் தெளிவான ஆதாரமாகியுள்ளது.
போர் முடிவுக்கு வந்த சில நாட்களில், 2009 மே 26-27ம் திகதிகளில் கூட்டப்பட்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 11வது சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தன.
அப்போது அந்தத் தீர்மானத்தை நிராகரித்து விட்டு, அதற்குப் பதிலாக இலங்கை அரசுக்கு முற்றிலும் சார்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.
ஐரோப்பிய நாடுகளால் கொண்டு வரப்பட்டது, போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குற்றங்களை விசாரிக்கக் கோரும் வகையிலான ஒரு கண்டனத் தீர்மானம்.
ஆனால் அதனைத் தோற்கடித்து விட்டு, இந்தியா, ரஸ்யா, சீனாவின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம், போரை முடிவுக்குக் கொண்டு வந்த இலங்கை அரசுக்குப் பாராட்டு வழங்கும் விதத்தில் அமைந்திருந்தது.
அப்போது அந்தத் தீர்மானத்தை- அதாவது இலங்கைக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் மொத்த எண்ணிக்கை 29. அங்கோலா, அசர்பைஜான், பஹ்ரைன், பங்களாதேஸ், பொலிவியா, பிரேசில், புர்கினா பாஸோ, கமரூன், சீனா, கியூபா, டிஜிபோட்டி, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, ஜோர்டான், மடகஸ்கார், மலேசியா, நிக்கரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, செனகல், சவுதி அரேபியா, தென்ஆபிரிக்கா, உருகுவே,சாம்பியா ஆகியனவே அவை.
இந்தத் தீர்மானத்துக்கு எதிராக,அதாவது இலங்கைக்கு எதிராக பொஸ்னியா ஹெர்சிகோவினா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மெக்சிக்கோ, நெதர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, சுவிற்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய 12 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன.
ஆர்ஜென்ரீனா, காபோன், ஜப்பான், மொரிசியஸ், தென்கொரியா, உக்ரைன் ஆகிய 6 நாடுகள் நடுநிலை வகித்தன.
இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த அல்லது இலங்கைக்கு எதிராக நின்ற நாடுகளின் எண்ணிக்கை 24.
வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:
01.அவுஸ்திரேலியா
02.பெல்ஜியம்
03.பெனின்
04.கெமரூன்
05.சிலி
06.கொஸ்டரீக்கா
07.செக் குடியரசு
08.கோத்தமாலா
09.ஹங்கேரி
10.இந்தியா
11.இத்தாலி
12.லிபியா
13.மொரிடஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.நோர்வே
17.பெரு
18.போலந்து
19.மோல்டோவா
20.ரோமானியா
21.ஸ்பெயின்
22.சுவிட்ஸர்லாந்து
23.ஐக்கிய அமெரிக்கா
24.உருகுவே
அதேவேளை,இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-

01.பங்களாதேஷ்
02.சீனா
03.கொங்கோ
04.கியூபா
05.ஈக்குவாடோர்
06.இந்தோனேசியா
07.குவைத்
08.மாலைத்தீவு
09.மைவுரிடானியா
10.பிலிபைன்ஸ்
11.கட்டார்
12.ரஸ்யா
13.சவுதி அரேபியா
14.தாய்லாந்து
15.உகாண்டா 
அங்கோலா, பொற்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
2009 இல் இலங்கைக்கு ஆதரவாக நின்ற இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இப்போது கட்சி மாறிவிட்டன.  இவை ஒன்றில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன அல்லது நடுநிலை வகித்தன.
2009 இல் இலங்கைக்கு ஆதரவாக நின்ற எந்தவொரு நாடுமே இம்முறை தீர்மானத்தை ஆதரிக்க முன்வரவில்லை. இது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் இலங்கை தனது நன்மதிப்பையும் நம்பகத்தையும் இழந்து வருகிறது என்பதையே காட்டுகிறது.
இம்முறை நடுநிலை வகித்த நாடுகளும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று காரணம் சொல்லிக் கொண்டு அரசாங்கம் தனது பக்கத்தில் 23 நாடுகள் இருப்பதாக கூறிக் கொள்கிறது.
ஆனால், அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பது உறுதியானால்- ஏன் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது.
இன்னொரு பக்கத்தில் அமெரிக்காவின் அழுத்தத்தினால் தான் பல நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் கருத்து முற்றிலும் தவறானது.
அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால் அது ஒவ்வொரு நாட்டினதும் தனிப்பட்ட இறைமையை மீறுகின்ற அளவுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனென்றால், இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதேநாளில் தான், இஸ்ரேல் தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேல் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை.  இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க அமெரிக்கா விரும்பினாலும், அதற்காக அமெரிக்காவினால் ஒரு வாக்கைக் கூடத் திரட்ட முடியவில்லை.
இஸ்ரேல் விடயத்தில் அமெரிக்காவுக்காக எந்தவொரு நாடும் வாக்களிக்கவில்லை. தனியே அமெரிக்கா மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது.
36 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 10 நாடுகள் நடுநிலை வகித்தன.
இந்த நிலையில் அமெரிக்காவின் அழுத்தங்களினால் தான் தோல்வியடைய நேரிட்டதாகவும்,  இந்தியாவே கவிழ்த்து விட்டது என்றும் அரசாங்கத் தரப்பினால் கூறப்படும் நியாயங்கள் வலுவிழந்து போகின்றன.
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உள்ள நியாயத்தன்மைக்கு ஒருவிதமாகவும், இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதுள்ள நியாயத்தன்மைக்கு இன்னொரு விதமாகவும் கற்பிதம் செய்ய முடியாது.
எவ்வாறாயினும் இந்தத் தீர்மானம் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிடக் கூடியதொன்றாகவே இருந்தாலும், உண்மையில் இது ஒன்றும் நாட்டின் இறைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல.
அத்துடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வழிவகுக்கும் ஒன்றாகவும் இது அமையவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தீர்மானமே இது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவே இந்தத் தீர்மானம்.
இந்த அறிக்கை கையளிக்கப்பட்டு மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ளன, காலஅவகாசம் தேவை என்றெல்லாம் அரசாங்கம் ஜெனிவாவில் காரணங்களை அடுக்கியது.
ஆனால், கொழும்பில் வைத்து அதே அரச பிரதிநிதிகள், எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது என்றார்கள்.
இந்த இரட்டைவேடம் தான் ஜெனிவா தீர்மானத்துக்கான அடிப்படை. இந்தத் தீர்மானம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிவிட்டது அரசாங்கம் தான்.
நாட்டுக்கு எதிரான மிகப்பெரிய சர்வதேச சதியாகவும் இறைமையைப் பறிக்கின்ற செயலாகவும் பயங்கரவாதத்துக்கு மீளவும் உயிர் கொடுக்கின்ற  முயற்சியாகவும், இனநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற நடவடிக்கையாகவும் காண்பித்து பிரச்சினையை பூதாகாரப்படுத்தியது அரசாங்கமே.
அதேவேளை இந்தத் தீர்மானத்தினால் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  பிளவுகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இன்னமும் போரின் காயங்கள் ஆற்றப்படவில்லை அது நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது என்பதை இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
வெறுமனே மீளக்குடியமர்வும், நிவாரணங்களை வழங்கலும், பொருளாதார அபிவிருத்தியும் மட்டும் தான் நல்லிணக்கம் என்று அரசாங்கம் தவறாகக் கருதிக் கொள்கிறது.
அதற்கும் அப்பால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குதலும், பொறுப்புக் கூறுதலும் நல்லிணக்கத்துக்கு முக்கியமானவை.
இதனைப் பழிதீர்க்கும் முயற்சி என்று கூறுவது, அனைத்துலக மனிதாபிமான, மனிதஉரிமைச் சட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்ற அரசாங்கம் தவறிவிட்டது. அதனை ஆற்றமுடியும் என்று நம்பிக்கை ஊட்டத் தவறிவிட்டது.
இந்த ஆறாவடு நீண்டகால நோக்கில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலேயே, அதற்கு சர்வதேச சமூகம் ஆதரிக்கிறதே தவிர, பிரச்சினையைப் பெரிதாக்கி அதில் குளிர்காய்வதற்காக அல்ல.
நல்லிணக்கத்துக்கு எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.  ஆனால், தான் எதையும் மறந்து விடத் தயாரில்லை. இப்போதும், போர்க்காலத்தில் புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் பற்றியே பேசுகின்ற அரசாங்கம், அரச படைகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றிப் பேசத் தயாரில்லை.
எல்லாவற்றையும் மறந்து விட்டு நல்லிணக்கத்தை உருவாக்குவது இப்படியல்ல.
தமிழர்கள் மட்டும் தான் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்ற அரசினதும் அரசுக்குச் சார்பாக குரல் கொடுப்போரினதும் விருப்பம் நல்லிணக்கத்தைத் தராது.
எல்லாவற்றையும் மறந்து விட்டு நல்லிணக்கத்தைத் தேடும் வழிமுறை நடைமுறைக்கு ஒத்துவராது. அதற்கான மனப்பக்குவம் சாதாரண மக்களிடம் இருக்கிறதோ இல்லையோ மக்களை வழிநடத்தும் அரசியல் தலைமைகளிடம் இல்லை.
அதேவேளை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் உள்ள சர்வதேச அழுத்தங்களை நிராகரித்துள்ள அரசாங்கத்தினால் நீண்டகாலத்துக்கு இதே நிலைப்பாட்டில் பயணிக்க முடியாது.
இப்போதைக்கு ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தாலும் விரும்பியோ விரும்பாமலோ அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது.
அவ்வாறு செய்யாது போனால் அது இன்னொரு தீர்மானத்தை தேடிப் பிடித்து தலையில் கொட்டிக் கொள்வதற்கு காரணமாகி விடலாம்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.