தொழில்நுட்பம் வளரவளர பிரச்னைகளும் கூடவே சேர்ந்து வளருகிறது. முன்பெல்லாம் காவல் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது, சைபர் க்ரைம் பிரிவு களில்தான் கூட்டம் நெட்டித்தள்ளுகிறது. செல்போனில் மிரட்டல், ஆபாச எஸ்.எம்.எஸ்., நைஜீரியர்களின் மோசடியில் சிக்கி ஏமாறுகிறவர்கள் என்று இங்கே படை யெடுப்பவர்கள் ஏராளம். இதில் சிக்கிக்கொள் பவர்களும் ஏராளம். விடுபட முடியாமல் தவிர்ப்பவர்களும் ஏராளம். !
இந்தியாவில் இணையதளம் தொடர்பான குற்றங்களால் நடப்பாண்டில் 24,630 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது. சைமன்டெக் நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2013 ஆண்டு ஜூலை வரை ஆய்வு நடைபெற்றது. 1000 இந்தியர்கள் உள்ளிட்ட 24 நாடுகளைச் சேர்ந்த 13000 இளைஞர்கள் இதில் பங்கேற்றனர்.மொபைல்போன் மூலமான திருட்டு 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இ.மெயில் ஐடி, பாஸ்வேர்ட் போன்றவைகளை ஹேக் செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.நாடும் நகரமும் டிஜிட்டல் வயப்படுவதைத் தொடர்ந்து அனுபவிக்கும் அவஸ்தைகளைப் பற்றித்தான் இந்த சிறப்புக் கட்டுரை
இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.
1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.
2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.
3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.
4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.
6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]
7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.
பாதுகாப்பு வழிகள்:
1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.
2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.
3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.
4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.
5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.
6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.
7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.
8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.
9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.
10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள்.https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.
13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.
பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.
சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு
2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்
3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].
4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்
5. கடன் அட்டை எண் திருட்டு
6. வலைத்தள ஹேக்கிங்
சைபர் க்ரைம் குற்றங்களுக்காண தண்டனை..
1.ஹேக்கிங் [ HACKING ]
2.ஆபாசமாக மெஸ்சேஜ் அனுப்புதல். [ PORM SMS ]
3.கம்ப்யூட்டர் இன்டர்நெட் வழியாக திருடப்பட்டதை வாங்குவது.
4.அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது.
5.போலி ID உருவாக்கி தன்னை வேருவர் போல் காட்டிக்கொள்வது.
6.ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது.
7.சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல்.
8.ஆபாச போட்டோ வெளியிடுதல்.
9.ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல்.
10.குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல்.
சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் ஐ.டி சட்டம் 2008 ன் படி மூன்று ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை வழங்கப்படும்.
ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இவர்களில் ஆபாச மெசேஜ் அனுப்புவது, ஆபாச போட்டோ போடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது, போலி ID உருவாக்கி தன்னை வேருவர் போல் காட்டிக்கொள்வது, ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது, சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல், ஆபாச போட்டோ வெளியிடுதல், ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால் அவர்கள் ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:
சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32
மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in
சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32
தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in
புகார்களை sms அனுப்ப : 95000 99100.
சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்ய
phone: 044-23452350
Cyber Crime Cell
Chennai
******
Sri Sudhakar
Assistant Comissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore, Chennai- 600008
(044) 55498211
cbcyber@tn.nic.in
EMail: cidap@cidap.gov.in
EMail: info@cidap.gov.in
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32
தொலை பேசி எண்: 044-22502512
Chennai for Rest of Tamil Nadu,
Cyber Crime Cell
CB, CID
Off: 044 25393359
Delhi
****
Supdt. of Police,
Cyber Crime Investigation Cell Central Bureau of Investigation,
5th Floor, Block No.3, CGO Complex,
Lodhi Road,
New Delhi - 3, Phone: 4362203, 4392424
கவனிக்க: இந்தியாவில் 10ல் 7 இளைஞர்கள் சைபர் கிரைம் மூலம் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகி தங்களின் வாழ்க்கையை தொலைக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 4.2 கோடி மில்லியன் பேர் சைபர் குற்றங்களினால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை இன்டர்நெட் செக்யூரிட்டி த்ரெட் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிப்பிற்கு ஏற்ப அது தொடர்பான குற்றங்களும் அதிகரிக்கிறது. நாடு முழுவதும் 52 சதவிகிதம் பேர், ஏமாற்றப்படுதல், ஹேக்கிங், திருட்டு, வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட சைபர் குற்றங்களினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.தைரியமா புகார் கொடுங்க இதுபோல் பிரச்சினை வரும்போது, பெண்கள் தவறான முடிவுக்கு போகக்கூடாது. துணிச்சலாக போலீசுக்கு புகார் கொடுக்க வரவேண்டும். இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை.
ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment