Monday, 29 February 2016

சூரிய விளக்கு செய்ய ரூ.20 !! ஒரு தவகல்..ரூ.20 மதிப்புள்ள சூரிய விளக்கு செய்யும் முறை:

முதலில் ஏ4 சீட் அளவில் புதிய அலுமினிய தகடு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலியான பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். பாட்டில் அளவு தகட்டில் துளையிட்டு, அதனுள் பாட்டிலை பொருத்த வேண்டும். கீழ்பகுதி முக்கால் பரப்பும், மேல் பகுதி கால் பங்கும் கொண்டிருக்க வேண்டும்.


பின்னர் பாட்டிலில் 90% சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும். அந்த நீரில் 20 எம்.எல், பிளீச்சிங் கலவையை சேர்க்க வேண்டும். இதன் பிறகு அந்த பாட்டிலை வீட்டின் மேற்கூரையில் துளையிட்டு பொருத்த வேண்டும். பாட்டிலின் கீழ்பகுதி வீட்டிற்குள்ளும், மேல் பகுதி சூரிய வெளிச்சம் படும்படி கூரையின் மேற்பரப்பிலும் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் பாட்டிலின் கலவை மேல்பட்டு, பாட்டிலின் கீழ் பகுதி 50 வால்ட் வெளிச்சத்தை கொடுக்கும். 

இந்த விளக்கு 5 வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். இத்தகைய சூரிய ஒளி விளக்குகளை தாராவி ராஜீவ்காந்தி நகரில் சுமார் 50 வீடுகளுக்கு பொருத்தியுள்ளார் தாஜூதீன். இதனிடையே இரவிலும் எரியும் வகையில் சூரிய விளக்கை இப்போது கண்டுபிடித்துள்ளார் என்பதுதான் ஹைலைட். இதற்கு ரூ.500 மட்டுமே செலவாகும்.

செய்யும் முறை:


ஏ4 சீட் புதிய அலுமினிய தகடு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலியான பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். தகட்டில் பாட்டில் அளவு துளையிட்டு, அதில் பாட்டிலை பொருத்த வேண்டும். கீழ்பகுதி முக்கால் பரப்பும், மேல் பகுதி கால் பங்கும் கொண்டிருக்க வேண்டும். காலியான பாட்டிலுக்குள் 90 விழுக்காடு சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதனுள் 20 எம்.எல், பிளீச்சிங் கலவையை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் 5 வால்ட் எல்இடி பல்புகள் 6 வாங்கி அதை ஒயர் மூலம் சால்டிரிங் கொண்டு இணைக்க வேண்டும். பிறகு இதை வெள்ளை நிற டியூப்புக்குள் வைத்து பாட்டிலுக்குள் பொருத்த வேண்டும்.

அந்த வெள்ளை டியூப்பை 2 அடி பிளாஸ்டிக் குழாயோடு இணைத்து, அந்த குழாயை பாட்டில் மேற்பரப்பில் இருக்கும்படி செய்ய வேண்டும். குழாயின் மேற்பரப்பில் பசையுடன் கூடிய செல்போன் ரீ ஜார்ஜபிள்
பேட்டரியை இணைக்க வேண்டும். சோலார் பேனலை (சூரிய ஒளியை உள் வாங்கும் தகடு) பொருத்த வேண்டும். பாட்டிலின் பக்கவாட்டில் ஆன், ஆஃப் சுவிட்ச் ஒன்றை இணைத்துவிட்டு பாட்டிலின் கீழ்பகுதி வீட்டிற்குள்ளும், மேல் பகுதி சூரிய வெளிச்சம் படும்படியும், கூரையின் மேற்பரப்பில் பொருத்த வேண்டும்.

‘‘சூரிய ஒளியை சோலார் பேனல் உள்வாங்கி பேட்டரில சேமிக்கும். நைட் சுவிட்ச் போட்டதும் வெளிச்சம் வரும். இதுக்கான செலவு வெறும் ரூ.500தான். ஆனா, ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்து வெளிச்சம் தரும்...’’ என்கிறார் தாஜூதீன். ‘‘இதை இந்தியா முழுக்க கொண்டு போகப் போறோம். இளைஞர்களுக்கு செய்முறை பயிற்சி கொடுத்து அவங்கவங்க பகுதில இதை மக்களுக்கு செய்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப் போறோம்...’’ சிரித்தபடி சொல்கிறார் தாஜூதீன்.

இது போன்ற கண்டுபிடிப்பு களுக்கு government சலுகை செய்யாவிட்டாலும் ஊக்கம் கொடுத்து தடை செய்யாமல் இருந்தாலே போதும் நம் நாட்டில் இளம் விஞ்ஞானிகள் பல ஆயிரம்பேர் உள்ளனர்

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

மதுரை பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்!!

Image result for அன்பார்ந்த பெற்றோர்களே!அன்பார்ந்த பெற்றோர்களே!
*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*
*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம். எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*
*பரிச்சையில் வெற்றி பெறாத மாணவர்களில், ஒரு கலைஞன் இருப்பான் அவனுக்கு கணிதம் தேவைப்படாது.*
*அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான் அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*
*ஒரு இசைஞானி இருப்பான் அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.*
*ஒரு விளையாட்டு வீரனிருப்பான் அவனது உடல் நலனே முக்கியமன்றி பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*
*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன் என்று தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*
*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே. நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன. உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை என்றும், நீ என் பிள்ளை என் உயிர், இப்படி சொல்லி பாருங்கள், பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*
*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்துவிடக்கூடாது. மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*
*உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.*

Saturday, 27 February 2016

பாத்திரமரிந்து பிச்சையிடு! கோத்திரமரிந்து பெண்ணைக்கொடுன்னு சும்மாவா சொன்னாங்க! கோத்திரம் (Gotram)கோத்திரம் (Gotram) என்றால் என்ன ?

கோத்திரம் என்றால்அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள்.. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர்.
கோத்திரம் என்பது இவர்கள் எந்த முனிவருடைய வழியில் வந்தவர்கள் என்பதைக் குறிக்கும். இந்துக்கள் எல்லோருமே ரிஷி பரம்பரையினர் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோத்திரம் உண்டு.
இந்த ரிஷிகளின் பெயர்கள் பின்வருமாறு
1. பிருகு 2. அங்க்ரஸர் 3. அத்ரி 4. விச்வாமித்ரர் 5. வஸிஷ்டர் 6. கச்யபர் 7. அகஸ்த்யர்
பிரவர்த்தகர்கள்
ஒரு சில கோத்திரங்கள் ஒரு ரிஷியையும் சில இரண்டு ரிஷிகளையும் சில மூன்று ரிஷிகளையும் சில ஐந்து ரிஷிகளையும் சில ஏழு ரிஷிகளையும் பிரவரமாகக் கொண்டவை.
கோத்ரம் பிராமணாளுக்கு மட்டுமே உரியது என்பதே நடைமுறையாக உள்ளது. அவர்களே ரிஷிகளின் வம்சாவளிகள் என்பது அவர்களால் தீர்மானிக்கப்பட்ட விஷயம்.
இந்தக் கோத்திரங்கள் எல்லா இனத்தவருக்கும் உண்டு. குறிப்பாகப் பிராம்மணர்கள் இடையே இது அதிகமாகப் பழக்கத்தில் உள்ளது. கோத்திரம் தெரியாதவர்கள் சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திரம் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது.
ஆண்களுக்கு மட்டும்தான் கோத்திரம் என்பது இல்லை. பெண்களும் தங்களின் கோத்திரத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின் கணவனுடைய வம்சத்தைச் சார்ந்தவர்களாகி, அந்த வம்ச ஸந்ததியை விருத்தி செய்பவர்கள் என்பதால் கணவனுடைய கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
ஆண்கள் கோத்திரம் திருமணத்தால் மாறுவதில்லை. ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்குத் தத்து (ஸ்வீகாரம்) அளிக்கப்பட்டுவிட்டால் அந்த வம்சத்து வாரிசாக மாறிடுவதால் அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவராகி விடுவதால் பிறந்த கோத்திரம் மாறிவிடும். ஆண் பெண்
களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கோத்திரத்தின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது. ஒரே கோத்திரத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கோத்திரத்திற்காக அல்லது பெண்ணின் கோத்திரத்திற்காக அன்னியமான கோத்திரத்தில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
பிரவரத்தில் உள்ள ரிஷியின் பெயர் ஆண், பெண் கோத்திரங்களில் ஒன்றாக இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை.
உதாரணத்திற்கு ஒன்றைக் காட்டலாம். ஆணின் கோத்திரம் ஓமதக்னி. பெண்ணின் கோத்திரம் கர்கிய. ஓமதகனியும், கர்கியரும் வேறு வேறு ரிஷிகள் என்றிருந்தாலும் இவர்கள் பிருகு வம்சத்தில் வந்தவர்கள் என்பதால் பிரவரத்தில் பகுதி ரிஷியின் பெயர் கட்டாயம் இருக்கும். ஆக, இந்த இரண்டு கோத்திரங்களைச் சார்ந்த ஆண் பெண்களுக்கும் திருமணம் செய்ய கோத்திரப் பொருத்தம் இல்லை.
ஆண் பெண் திருமணத்திற்குப் பார்க்கும் பத்து வித பொருத்தங்களில் முதன்மையானது கோத்திரப் பொருத்தம். இது இல்லை எனில் மற்ற எல்லா வகையிலும் நூறு சதம் சரியாகப் பொருந்தி இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை. அங்ஙனம் திருமணம் செய்வது சகோதர சகோதரிக்கு இடையே செய்த திருமணமேயாகும்.
ஆண் தன்னுடைய கோத்திரத்தைத் தெரிந்துகொள்வதுடன் தன் மனைவியின் தந்தை கோத்திரத்தையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
விஸ்வகர்மா
கோத்திரங்கள் பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன.
தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இரும்பு , மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர்.
1) இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள் – சானக ரிஷி கோத்திரம்
2) மர வேலைக் கலைஞர்கள் – ஸநாதன ரிஷி கோத்திரம்
3) உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு – அபுவனஸ ரிஷி கோத்திரம்
4) கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம்
5) பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம்
இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்
1) தமிழகம் :
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.
2) ஆந்திர மாநிலம் :
விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.
3) கேரளம் :
கேரள தேசத்தில் ஆச்சாரிகள், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
4)கர்நாடகம்:
கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.
5) கோவா:
கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.
6) ராஜஸ்தான்:
ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள். பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள்..
தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.
கோத்திரம்
நமது கோவிலில் ஐந்து கோத்திர குடி மக்கள் உள்ளனர். அவைகளின் விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
பருத்திக்குடையான் மகரிஷி கோத்திரம் - ஸ்ரீ வீரிய பெருமாள் ஸ்வாமி வழி வந்தவர்கள்
தென்னவராயன் மகரிஷி கோத்திரம் - ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் வழி வந்தவர்கள்
பயிராலழக மகரிஷி கோத்திரம் - நமது பெரிய நாச்சியம்மனிடம் பிள்ளை வரம் வேண்டி, பெற்று பின்னாளில் இணைந்தவர்கள்
பாக்குடையான் மகரிஷி கோத்திரம் - நமது கோவிலில் தாம்பூலம் மடித்து கொடுத்து பின்னாளில் இணைந்தவர்கள்
மாத்துடையான் மகரிஷி கோத்திரம் - நமது கோவிலில் விரிப்பு , ஜமுக்காளம் கொடுத்து பின்னாளில் இணைந்தவர்கள்
விஞ்ஞான ரீதியிலேயே கோத்திரம்
கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு
பெண் திருமணம் ஆகிக் கணவன் வீடு வருவதையும், அவளுக்குக் கணவனின் கோத்திரமே தான் கோத்திரமாக மாறுகிறது.
விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள்.
பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.
இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை
ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.
முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. .
இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை.
பெண் எப்போதும் பெண்; 100% பெண். ஆனால் ஆணோ 50% பெண் எனலாம்.
மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.
பெண்கள் மட்டுமே பிறக்கும் குடும்பத்தில் அந்தத் தந்தையுடன் அவர் கோத்திரம் முடிவடையும். இதனால் தான் கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்று சொல்லி இருக்கிறார்கள்.

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

பெண்களின் வாழ்வில் டீன் ஏஜை விடவும் மிகவும் ஆபத்தான தருணம் நாற்பது வயது !!இதோ அதிர்ச்சி அளிக்கும் அட்வைஸ்...தூக்கம் வரல... உருப்படியா என்ன செய்யலாமென்று யோசிக்கும் போது, இதைச் செய்யலாமே என்ற நல்லெண்ணத்திலும், பெண்களின் பாதுகாப்பிற்கும் உதவலாமே என்ற நற்சிந்தனையிலும் கைவலிக்க நானே டைப் செய்த பதிவு....


பொதுவாக பெண்களுக்கு20 -25 வயதில் திருமணமாகிவிடும் .பின் கணவன், குழந்தைகள், குடும்பம், school, வேலை என நாற்பது வயது வரை மிகவும் busy யாக இருப்பார்கள்,


நாற்பதை தொடும்போது 20 வருட குடும்ப வாழ்க்கை முடிந்திருக்கும், அஜித் மாதிரி கனவு கண்டவர்கள் எல்லாம் அப்புகுட்டி போன்றவருக்கு வாக்கப்பட்டு, அவர் சாயலில்
இரண்டு மூன்று குழந்தைகளையும் பெற்றிருப்பார்கள்,

அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் +2 படிக்கும் வரை பின்னாலேயே சுற்றிவந்துவிட்டு college ல் கால் வைத்ததும் அவர்களுக்கு என தனியாக நண்பர்கள், அவர்களோடு வெளியே போவது அம்மாவிடம் share பண்ணிய விஷயங்கள் எல்லாம் இப்போது நண்பர்களிடம் share பண்ணுவார்கள்

அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் இடையே தவிர்க்கமுடியாத ஒரு இடைவெளி உருவாகும்,

குழந்தைகள் வளர்ந்து வர வர அவர்களின் எதிர்காலம், படிப்பு என சிந்தனை திசைதிரும்பி கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான நெருக்கமான தருணங்களும், காதலும் ரொமான்ஸ் ம் கூட குறைந்து இரண்டு பேருக்கும் இடையேவும் ஒரு இடைவெளி உருவாகும்,

இருந்த தோழிகளையும் கல்யாண மேடையிலேயே கழட்டி விட்டிருப்பீர்கள்!

கணவன் பணம் சம்பாதிக்க ஓட, குழந்தைகள் மார்க்கை தேடி ஓட பெண்கள் மட்டும் அந்த ஆபத்தான நாற்பது வயதில் தனிமையில் இருப்பார்கள்

தன்னுடன் நேரம் செலவழிக்கவோ, தன் சமையல் குறித்தோ தனித்தன்மை குறித்தோ பாராட்ட ஆள் இருக்காது இதுபோன்ற தனிமையில் தூக்கம் வருவது தடைபடும்

இந்த தனிமையின் கொடுமை போதாதென்று.. ப்ரீ மெனொபாஸ் சங்கடங்கள் வேறு வரிசை கட்டி நிற்க..

TV, phone தவிர்த்து கொஞ்சம் படித்தவர்கள் நண்பர்கள் சோல்லியோ அல்லது தனக்கே தெரிந்தோ இன்டர்நெட் பயன்படுத்த தொடங்குவார்கள்

அதிலும் Facebook போன்ற சமூக வலைதளங்கள் தான் முதல் choice, முன்பின் தெரியாத நபர்களுடன் பொழுதுபோக்காக பேச ஆரம்பித்து நாளடைவில் அதற்கு அடிமையாகி நள்ளிரவுவரை பேச்சுக்கள் போட்டோ பறிமாற்றங்கள் என தான் என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத அளவுக்கு அந்த நட்பு சென்றுகொண்டு இருக்கும்

பெரும்பாலும் பெண்கள் தான் அதில் பாதிக்கப்படுகிறார்கள் நன்கு பழக்கமான நம்பிக்கையான நண்பர்களிடம் எந்த நேரத்தில் பேசினாலும் தவறில்லை, ஆனால் இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு புதிதாக வருவோர் நள்ளிரவில் online ல் இருப்பது மிகுந்த ஆபத்தான ஒன்று,

பொதுவாக இரவு 10 மணிக்கு மேல் நன்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் chat பண்ணும் பெண்களை ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்,

குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாத ஒரு பெண் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பேசவேண்டிய அவசியமே இல்லை என்பது ஆண்களின் கணக்கு,

பெண்கள் குடும்ப பிரச்சனையிலோ, மனஅழுத்தத்திலோ இருக்கும் போது யாராவது ஆறுதல் சொன்னால் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும்,

அதே நேரத்தில் சொல்பவரின் உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்

ஆடு நனைவதற்காக ஓநாய் ஆறுதல் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும், நள்ளிரவில் online ல் இருக்கும் பெண்களை ஆறுதல் வார்த்தை சொல்லியோ, அன்பாக இருப்பதுபோல் நடித்தோ, அழகாக இருப்பதாக பொய்சொல்லியோ, பணத்தாசை காட்டியோ, ஆபாசமாக பேசியோ தன் வலையில் சிக்கவைக்க ஆயிரக்கணக்கான ஓநாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன,

முன்பின் தெரியாதவர்களின் புகழ்ச்சிக்கு ஒருபோதும் மயங்காதீர்கள், உங்கள் குடும்பத்து பிரச்சனையில் மற்றவர்களை குளிர்காய அனுமதிக்காதீர்கள், உங்கள் தனிமைக்கு குடைபிடிக்க சாத்தான்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்,

தனிமைக்கு குடைபிடிக்கும் அதே நேரத்தில், உங்கள் குடும்பம்,உங்கள் மதிப்பு,
உங்கள் குழந்தைகள் எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நல்ல நண்பர்களை
மட்டும் உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் தற்காலிக ஆறுதல் தேடல் நிரந்தரமான குடும்பத்தில் சலசலப்பை எற்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனம் கொள்ளுங்கள்!


உஷார் தாய்க்குலமே! உங்களுக்கு ஒரு எடுத்துகாட்டை சொல்ல ஆசைபடுகிறேன்

உண்மையில் என் தோழியின் friend listல் இருந்த Veronica என்ற சகோதரிக்கும், Meena மாமிக்கும் ஏற்பட்ட விபரீதம். Now, Both are not in FaceBook.

பெண்களே! தேவையா உங்களுக்கு இந்த அவல நிலை:

கணவர் முன்போ, ஈன்றெடுத்த பெற்றோர் முன்போ, நீங்கள் ஈன்றெடுத்த வயது வந்தக் குழந்தைகள் முன்போ இப்படிக் கூனிக் குறுக வேண்டுமா? அவர்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டுமா?

West Bengalலிருந்து, பல வருடங்கள் கழித்துத் தன் பிறந்த வீட்டிற்குப் போவதை ஒரு பெண், Facebookல் update செய்கிறார்.

அதை Facebook இப்படிக் காட்டுகிறது.

Jaya Bachchan travels with Amitab Bachchan & 16others to Chidambaram, TamilNadu.

இதற்கு 999 likes, 110 comments. அத்தனையும் வெட்டி., டம்மி, உடான்ஸ்.

அதில் அப்பெண்ணின் ஆண் நண்பர்கள் கேட்கும் எப்படி வாறீங்க, என்ன color dress ல் வாறீங்க, Saree or chudi, bus or train or flight எத்தனை மணிக்கு Reach ஆகும் போன்ற கேள்விகளுக்குப் பொறுமையாக, துல்லியமான முறையில் அப்பெண் பதிலளிக்கிறார்.

இதன் விபரீத விளைவு, அப்பெண் வந்து reach ஆகக் கூடிய இடத்திற்கு, அந்த கேள்விகள் கேட்ட ஆண்கள் கூட்டமே வந்து நின்று, ஒருத்தன் luggage தூக்குகிறான், ஒருத்தன் face dullஆ இருக்கீங்க, wash பண்ணிக்கோங்க என்று சொல்லி Water Bottle கொடுக்கிறான்.

இது அத்தனையும் அப்பெண்ணுடன் பயணம் செய்த கணவர், குழந்தைகள்,உறவினர் முன்பே நடக்கிறது.

அவ்விடத்திலேயே, கணவர், குழந்தைகள் முகம் கோவத்தால் கருகி, வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் அப்பெண்ணுக்கு அவள் பெற்ற மகன், மகள், உட்பட அனைவர் முகத்தையும் பார்க்க கூசுகிறது.

என்ன ......க்கு status போடுற? அவன் யாரு... எனக்கு மேல அக்கறையா இருக்கான்? இது போன்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கும் போது, சந்தோஷம் சிதறுகிறது. என்ன purposeக்காக ஊருக்கு வந்தோமோ அது..... ஏன் டா வந்தோம் என்று மாறுகிறது!

உங்களுக்கு இது தேவையா?

Likes & Commentsக்கு ஆசைப்பட்டு, life & commitmentsஐத் தொலைத்துவிடாதீங்க தாய்க்குலமே...

இன்னொரு மீனா, இன்னொரு வெரோனிகா வேண்டாம்.

கணவன் மனைவி அந்நியோன்யத்தைப் Publicல் கை பிடித்து அல்லது கை கோர்த்துக் கொண்டு அல்லது bikeல் போகும்போது இறுக்கிக் கட்டிக் கொண்டு போவது போன்ற செய்கைகளால் பறைசாற்றலாமா?

கணவன் மனைவி கருத்தொருமித்தக் காதலை, அன்பை ஊருக்குத் தெரியப்படுத்த அவசியமோ, கட்டாயமோ இல்ல. public places ல் எப்படி கண்ணியமாக நடக்கனுமோ அப்படி நடந்தால் போதும்.

முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்?
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்.

இதை விட இன்னொரு கேவலமான விஷயம் என்னவென்றால், TVல் ஒருத்தி/ஒருவன் Mike எடுத்துட்டு வந்து பேட்டி எடுப்பான்.

நீங்கள் முதன் முதலாக பார்த்த படம்?

முதலில் யார் propose செய்தீங்க?

யார் ரொம்பக் கோவப்படுவீங்க? யார் விட்டுக் கொடுத்துப் போவீங்க?

இது போன்ற கேள்விகளுக்கு, உண்மையான கருத்தொருமித்தத் தம்பதியராக இருந்தால் என்ன செய்வாங்க தெரியுமா?

நான் என் மனைவியை நேசிப்பது அவளுக்குத் தெரியும்.
அவள் என்னை நேசிப்பது எனக்குத் தெரியும்?

நடுவுல நீ யாரு நாயே இதை மைக், video camera எடுத்துட்டு வந்து ஊரு பூரா போட்டுக் காட்டுற என்று நம்ம வில்லன் ரகுவரன் மாதிரி சொல்லி விரட்டி அடிப்பாங்க.

This is the original bond between husband &wife.

அந்தரங்கம் புனிதமானதுங்க. அதை வெளியே சொல்லிக் கேவலப்படுத்தாதீங்க.

கணவன்-மனைவிக்குள் இருக்கும் எந்தவொரு விஷயமும், பெர்சனல் டைரி போல இருக்கனுமே தவிர, சுவரொட்டி போல இருக்கக் கூடாது.

Thursday, 25 February 2016

Be Careful Our Self !! What Are We Doing Front of Our Childrens!! Our Children Will Follow What We Do..

Yes, that's right. If you have a hot temper, more than likely, your children will have one too. Now that's not in all cases, but the majority.Kids sit back in silence and watch everything we do. They watch to see how we handle stress. They watch to see how we interact and respect our friends. They listen in on our business and personal phone chats. They will even eat what we eat. So if you sit back and eat chocolate bars while watching movies, they will do the same. They are extremely observant and soak it all in like sponges.
There are time when I am out and about and my little Captain will repeat something to me that I may have shared during a phone conversation with a friend. It totally throws me off guard because I usually have my chats away from the kids. I don't spend much time at all on the phone outside of business, however it's those couple times he over hears me. 
What led me to write this post today?

A couple of days ago, My Captain and I went grocery shopping at The Superstore and I noticed he had a candy in his mouth and I asked, "Captain where did you get that candy from?" He replied, "the bin over there" confident that it was perfectly fine to take the candy from the bin. I stood there speechless because I am at fault for doing the same. So I said to him, "Captain you can't do that sweetie we have to pay for them first" Well well well his smart and accurate reply was, "but mom you do it too." Om Goodness  The rest was history.

Modeling appropriate behavior is an important part of discipline. Even when we think they aren't aware of what we're doing, they ARE! If we act in a way that we want our kids to act, they’ll learn just from watching us. We've got to be the person we want our children to be.

It doesn't take rocket science to know this is truth. How many times have you seen your daughters or little girls (period) putting on their mother's high heal shoes and if given the freedom to do so, they even put lipstick on their lips and nail polish on their nails. You will also see boys imitating their father's habits by hammering things all over the house with their tool box. They will even pretend to shave to be just like their daddies. If you sit back and observe you will see many pieces of YOU in your children. Just hope they are the good pieces and not the bad.

Children know when we're doing something wrong. Even if they sit there in silence, they know it's wrong. 


So again, BE THE PERSON YOU WANT YOUR CHILDREN TO BE!


Collection  & Written by M.Ajmal Khan.

தமிழ் மொழியை உலக அரங்கில் முன்னெடுத்து செல்வதில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ள சிங்கப்பூர் !!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்னும் கூற்றிக்கு இணங்க சிங்கப்பூர் நாடு அளவில் சிறியதாக இருந்தாலும் தமிழ் மொழியை உலக அரங்கில் முன்னெடுத்து செல்வதில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது.சிங்கப்பூரில் தமிழர் எனப்படுபவர், தமிழைப் பேசும் ஒரு மக்கள் கூட்டத்திலிருந்து தோன்றியவர் என்பதைப் பலரும் ஏற்றுவந்துள்ளனர். தமிழர் எனப்படுபவர் தமிழ்மொழிப் புழக்கத்தால் மட்டுமே அறியப்படக் கூடியவர் என்று மற்றுமொரு விளக்கமும் உண்டு.

சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது. இந்தியாவில் கூட தேசிய அளவில் தமிழுக்கு அந்த தகுதி கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் பல மொழி கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழுக்கு முதல் மொழித் தகுதி அளிக்கப்பட்டு இருந்தது.

*தமிழில் முதன்முதலாக (Singapore’s Pioneering Efforts In Tamil Language)

-தமிழ் நாட்டு அரசாங்கம் அறிவித்த 13 தமிழ்ச் சீர்திருத்த எழுத்துகளை அமலாக்கம் செய்த நாடு சிங்கப்பூர்.(1983)


-தமிழ்மொழியில் தொடக்கப் பள்ளிகளுக்காக மின்னியல் பாடங்களை(SMART) முதன்முதலில் உருவாக்கிய நாடு சிங்கப்பூர்.(1991)

-உலகத் தமிழாசிரியர் மாநாட்டை முதன்முதலில் தோற்றுவித்த நாடு சிங்கப்பூர்.(1992)

-அனைத்துலகத் தமிழ் இணைய மாநாட்டை முதன்முதலில் தொடக்கி வைத்த நாடு சிங்கப்பூர். (1997)

-உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முதன்முதலில் கூடிய நாடு சிங்கப்பூர்.(2011)

-உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாட்டை முதன்முதலில் தொடக்கி வைத்த நாடு சிங்கப்பூர்.(2012)
நடைபெற்றது.(1971)

-ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களால் முதன் முதலில் சிங்கப்பூர்ப் பள்ளிகளுக்காக தமிழ்ப்பாடநூல்களும், பயிற்சிநூல்களும் உருவாக்கப்பட்டன.(1973)

-சிங்கப்பூரில் பல்கலைக்கழக அளவில் முதன்முதலாகத் தமிழ்க் கருத்தரங்கம் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையால் நடத்தப்பட்டது.(1977)

-கல்வி அமைச்சு, பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் என்ற பிரிவு ஒன்றைத் தோற்றுவித்தது. அதில் முதன்முதலாகத் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ்ப்பாடநூல், பயிற்சிநூல், பயிற்று கருவிகள் உள்ளூர் ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.(1983)

-தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்க் கருத்தரங்கு யீசூன் தொடக்கக் கல்லூரியில் முதன்முதலாக நடத்தப்பட்டது.(1986)

-சிங்கப்பூரில் முதன்முதலாக ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் பற்றி ஆய்வரங்கு.


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்

Friday, 19 February 2016

தமிழ் மொழியின் வகைகள்..


Image result for தமிழ் மொழியின் வகைகள்கொடுந்தமிழ்

 தமிழ் மொழி சீர்தரப்படுத்தப்பட்ட செந்தமிழில் இருந்தோ அல்லது பொதுத்தமிழ் வழக்கில் இருந்தோ சற்று வேறுபட்டு பேசப்படும் பொழுதோ அல்லது எழுதப்படும் பொழுது கொடுந்தமிழ் எனப்படும். கொடுந்தமிழ் ஒரு மரபுச் சொல் வழக்கே இன்றி மொழியின் உயர்வு தாழ்வினைச் சுட்ட இல்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் கொடுந்தமிழ் மொழியை மட்டுமல்லாமல்அது பேசப்பட்ட நிலத்தையும் குறித்து நின்றது. "பொதுமொழி வேரூன்றியிருந்த நாட்டை செந்தமிழ் நிலம் என்றும்அதிலிருந்து வேறுபட்டுக் கிளைமொழிகள் செழித்திருந்த தமிழ்நாட்டுப்பகுதிகளைக் கொடுந்தமிழ் நிலம் என்றும் பழங்காலத்துப்புலவர் பாகுபாடு செய்தனர் எனக் கொள்ளலாம்." கொடுந்தமிழ் பிற மொழி கலப்பினால் களங்கம் கண்ட தமிங்கிலம் போன்ற தமிழ் வழக்குகளை சுட்ட பயன்படுத்தப்படுவதில்லை.


செந்தமிழ்

சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது செப்பம் செய்யப்பட்ட பேச்சுத் தமிழையும் உரைநடைத் தமிழையும் செந்தமிழ் எனலாம். செந்தமிழ் வட்டார மொழி வழக்குகளை தாண்டி அனைத்து தமிழர்களும் தமிழ் மொழியைப் பேச எழுத உதவுகின்றது. இது ஒரு வழக்கே தவிரஅரச நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட சீர்தரம் அல்ல. சீனம் போன்ற பிறமொழிகளைப் போலன்றி வட்டார மொழிக்களுக்கும் செந்தமிழுக்கும் இருக்கும் இடைவெளி சிறியதேஆகையால் செந்தமிழைதமிழர்கள் இயல்பாகவே பயன்படுத்துகின்றார்கள்.

"மதுரையை
 மையமாக கொண்டுஇந்தப் மிகப் பழங்காலத்திலேயே ஒரு செப்பமான மொழி உருவாகி வந்தது. இந்த மொழி பாண்டிய நாட்டில் பேசப்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்டுமற்றைய பிரதேச வழக்குகளின் அம்சங்களை உட்கொண்டதாக இருந்தது. இதன் கட்டுத் திட்டங்களைஇடைக்கால உரையாசிரியர்களின் காலத்திலிருந்தே சங்கம் என்று அழைக்கப்பட்ட, (கூட்டம்அவைமதச் சங்கம்கல்லூரி என்ற பொருள்படும் சொல்லால் குறிக்கப்பட்ட) ஒரு இலக்கியகலாச்சார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டன. இது மிகவும் உற்று நோக்கப்படவேண்டிய செய்தி. ஏனெனில்மதுரையின் செப்பமான இலக்கிய மொழியிலிருந்து தற்கால தமிழ் வரை ஒரு நேரடியான வளர்ச்சி முறையை நாம் படிப்படியாக காட்டுதல் கூடும்." 
"இந்த செந்தமிழ் நிலத்தில் பேசப்பட்ட வட்டார மொழி பிற்காலத்தில் செந்தமிழ் என்று குறிப்பிடப்பட்டதுஅதன் வளர்ச்சிக் காலத்தில் அது வாய்ப் பேச்சுக்கள் பெறும் வளர்ச்சியைப் பெற்றதுஅது நிலைத்து "இலக்கிய" மொழியாகச் செந்தமிழ் என்ற நிலையை அடைந்த பிறகு மக்களால் பேசப்பட வில்லைஅது இலக்கியத்திற்கே உரியமொழியாகிவிட்டது..." 

தனித்தமிழ்

பிறமொழிச் சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியை தனித்தமிழ் எனலாம்.தனித்தமிழ் தமிழில் மிகுதியாகிவரும் ஆங்கில சொற்களையும்நீண்டகாலமாகக் கலந்து நிற்கும் வடமொழிச் சொற்களையும் தவிர்த்து எழுதுவதை இலக்காக்க் கொண்டது. தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. இது ஒரு கருத்தியல்இலக்கே. தமிங்கிலம், மணிப்பிரவாளம் போன்றவற்றின் எதிர்நிலை எனலாம்.

நற்றமிழ்

இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திநடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கிவெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லத் தமிழ் எனலாம். நல்லதமிழும் தனித்தமிழ் போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. ஆனால்சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளை கொண்டது. அனைத்துலக அறிவியல் சொற்கள் (எ.கா உயிரினங்களை வகைப்படுத்தலுக்கு பயன்படும் சொற்கள்)அனைத்துலக கணித இலக்கங்கள்ஆங்கில மாதங்கள் போன்ற பரவலான பயன்பாட்டில் இருக்கும் வழக்கங்களை ஏற்றுக்கொள்கின்றது. தனித்தமிழ் இலக்கை நோக்கியும்களங்கப்பட்ட தமிழைத் தவர்த்தும் எடுக்கப்படும் ஒர் இடைப்பட்ட நிலையே நல்லதமிழ் எனலாம்.

முத்தமிழ்

இயல் (இயற்தமிழ்)இசை (இசைத்தமிழ்)நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும்நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.

இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ். இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ். இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ். கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

தமிழக மற்றும் புதுவை மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டம் !! ஒரு தவகல்..


தமிழகத்தைப் பொறுத்தமட்டில்,  வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 20, 30 ஆண்டுகளாக பதிந்து வைத்து வேலைக்காக காத்திருக்கும் பல்வேறு வகை சுமார் 1,05,000 என அரசு தெரிவிக்கிறது. அதே வேளையில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய பணியிட வாய்ப்புகளை தராமல் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றுவதில் தமிழக அரசும் அரசும் கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு,ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1107 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. எனவே, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்குரிய இட ஒதுக்கீட்டை சட்டத்தின்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் அளித்திட தமிழக அரசு முன்வரவேண்டு


தமிழகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளி பிரச்சனைகளை கவனிக்க திறமையுள்ள துறையாக மாற்றுத்திறனாளி துறை மாற்றப்பட வேண்டும்.குறிப்பாக மாற்றுத்திறனாளி சட்டப்படி மாநில ஆணையருக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதிக்கு இணையான அதிகாரம் தரப்பட்டுள்ளன.இருப்பினும், நியமிக்கப்படுகிற மாநில ஆணையம் இந்த சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. எனவே, மத்திய மாற்றுத்திறனாளி ஆணையர் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளி உரிமைகளில் ஆர்வம் உள்ள ஆணையமாக செல்பட உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்.


1.மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டம் :கிடைக்கும் உதவி மாதாந்திர நிதி உதவியாக 40%-65% - ரூ.1500/-
66%-85% - ரூ.2000/- 86%-100% - ரூ.3000/- வழங்கப்படுகிறது.


தகுதிகள் 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. கை, கால் ஊனம், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை, கண் பார்வை குறைவு : 40% மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்.

3. மனவளர்ச்சி குன்றியவர் : ஐ .க்யூ. 69மற்றும் அதற்கும் குறைவாக .

4. ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.2. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தோறும் இலவச அரிசி வழங்கும் திட்டம் :

கிடைக்கும் உதவி : மாற்றுதிறனாளிகளுக்கு மாதாந்தோறும் இலவசமாக 15 கிலோ அரிசி வழங்குதல்.

தகுதிகள் :
1.மாற்றுதிறனாளி மாதாந்திர நிதி உதவி பெறுபவராக இருத்தல் வேண்டும்.

2. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

3. 40% மேல் இருக்க வேண்டும்.

4.ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.


3. மாற்றுதிறனாளி மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் :

கிடைக்கும் உதவி : கிழ்கண்டவாறு மாற்றுதிறனாளி மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை ஆண்டு ஒன்றிற்கு வழங்கப்படுகிறது.

1- முதல் 5-ஆம் வகுப்பு வரை - ரூ.1000/-
6- முதல் 8-ஆம் வகுப்பு வரை - ரூ.2000/- 

9- முதல் 12-ஆம் வகுப்பு வரை - ரூ.3400/-
இளங்கலை பட்டப்படிப்பு - ரூ.5000/- 

முதுகலை பட்டப்படிப்பு - ரூ.6800/-

தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.
2. ஊனத்தின அளவு 40% க்கு மேல் இருக்க வேண்டும்.
3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 


4. கண் தானம் செய்பவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும்
திட்டம் :


கிடைக்கும் உதவி : கண் தானம் செய்த நபரின் குடும்பத்திற்கு ஊக்கத்தொகையாக ரூ.5000/- கண் ஒன்றிற்கு வழங்கப்படுகிறது.


தகுதிகள் :

1. ஆண்டு வருமானம் கிடையாது.

2. புதுவை ஆட்சி பரப்பில் 5 வருடத்திற்கு குறையாமல் வசித்தல் வேண்டும்.

3. ஊக்கத்தொகையை பெற விண்ணப்பிப்பவர் கண் தானம் கொடுத்தவரின் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.

4. கண் மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

5. கண் மாற்று அறுவை சிகிச்சை செய்த 90நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும்.5. மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி இலவசமாக வழங்குதல்:கிடைக்கும் உதவி : மாற்றுதிறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி இலவசமாக வழங்குதல்.


தகுதிகள் :
1. 65% மேல் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

3. மாற்றுத்திறனாளி வேலை செய்பவராக / கல்வி பயிலுபவராக இருத்தல் வேண்டும்.

4. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

5. இத்துறையின் மூலமாக போக்குவரத்து பயணப்படி பெறாதவராக இருத்தல் வேண்டும்.


6. ஒரு மாற்றுதிறனாளி மற்றொரு மாற்றுதிறனாளியை மணந்து கொண்டால் திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : ஊக்கத்தொகை ரூ.50,000/- (ரொக்கத்தொகையாக ரூ.20,000/-மும் தேசிய சேமிப்பு பத்திரமாக ரூ.30,000/- வழங்கப்படும் :


தகுதிகள் :


1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. வயது ஆணுக்கு 21-ம் பெண்ணுக்கு 18-ம் இருத்தல் வேண்டும்.

3. ஊனத்தின் அளவு : இருவருக்கும் 40% மேல் இருத்தல் வேண்டும்.

4. குடியிறுப்பு : மாற்றுதிறனாளிகள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

5. தம்பிதியருக்கு முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.

6. திருமணத்தை பதிவு செய்தல் வேண்டும்.

7. திருமணம் நடந்த 120 நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும்.
8. தம்பதியர் திருமணத்திற்கு பிறகு புதுவை ஆட்சி பரப்பில் வசிக்க வேண்டும்.


7. ஒரு மாற்றுதிறனாளி ஊனம் இல்லாதவரை திருமணம் செய்து கொண்டால் - திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : ஊக்கத்தொகை ரூ. 25,000/- (ரொக்கத்தொகையாக ரூ.5,000/- மும் தேசிய சேமிப்பு பத்திரமாக ரூ.20,000/- வழங்கப்படும் :


தகுதிகள் :

1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. வயது ஆணுக்கு 21-ம் பெண்ணுக்கு 18-ம் இருத்தல் வேண்டும்.

3. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

4. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

5. தம்பிதியருக்கு முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.

6. திருமணத்தை பதிவு செய்தல் வேண்டும்.

7.திருமணம் நடந்த 120 நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும்.

8. தம்பதியர்கள் திருமணத்திற்கு பிறகு புதுவை ஆட்சி பரப்பில் வசிக்க வேண்டும்.
8. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு முடநீக்கு கருவிகள் வழங்கும் திட்டம் :

கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிக்கு நலவழித்துறையின் பரிந்துரையுடன் மூன்று சக்கர வண்டி, முடநீக்கு கருவிகள், செயற்கை உறுப்புகள் மற்றும் காது கேட்கும் கருவிகள் வழங்குதல்.


தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.


4. வயது வரம்பு கிடையாது.

5. கல்வி தகுதி தேவையில்லை9. பார்வையற்றவர்களுக்கு குளிர்கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் மற்றும் கைத்தடி வழங்குதல்:கிடைக்கும் உதவி : முற்றிலும் பார்வையற்றவர்களுக்கு குளிர்கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் மற்றும் கைத்தடி வழங்குதல்

தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.
2. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

3. கண் பார்வை இல்லாதவரின் ஊனத்தின் அளவு 100% இருத்தல் வேண்டும்.


10. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பெறும் கண்பார்வையற்ற மாணவ / மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைபெறும் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
முதல் பரிசு ரூ.15,000/-
இரண்டாம் பரிசு ரூ.10,000/-
மூன்றாவது பரிசு ரூ.5,000/-தகுதிகள் :
1. கண்பார்வையற்ற மாணவ / மாணவியராகஇருத்தல் வேண்டும்.

2. ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.11. இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எரிபொருள் செலவில் 50% மான்யம் வழங்குதல் :

கிடைக்கும் உதவி : இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு
எரிபொருள் செலவில் 50% மான்யம் வழங்குதல்

தகுதிகள்
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.
2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

4. வயது வரம்பு கிடையாது.
5. கல்வி தகுதி தேவையில்லை
6. சொந்த வாகனம் வைத்திருக்க வேண்டும்.
7. ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
12. மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வண்டியின் பராமரிப்பு செலவு வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வண்டியின் பராமரிப்பு செலவிற்கு ஒரு ஆண்டிற்கு ரூ. 200/- வழங்கப்படுகிறது :

தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் கிடையாது.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

4. மூன்று சக்கர வண்டியை இலவசமாகவோ அல்லது அன்பளிப்பாகவோ பெற்றிருத்தல்வேண்டும்.

5. மூன்று சக்கர வண்டியை பழுது பார்த்ததிற்கான ரசீதை தங்கள் பெயரில் சமர்ப்பிக்க வேண்டும்.

13. மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து செலவிற்காக மாதந்திர பயணப்படி திட்டம் :


கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து செலவிற்காக மாதந்திர உதவித்தொகையாக
ரூ.100/- வழங்கப்படுகிறது. இது அருகில் உள்ள அங்கன்வாடி மையம் மூலம் மாதமாதம்வழங்கப்படும்.

தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் வசித்தல் வேண்டும்.


4. ஐந்து வயதிற்கு மேல் உள்ளவராக இருத்தல் வேண்டும்.  14. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து பயண அட்டை வழங்கும் திட்டம் :

கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து பயண அட்டை வழங்குதல்.


தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராகஇருத்தல் வேண்டும்.15. கண்பார்வையற்றவர்களுக்கு இலவச வானொலி பெட்டி வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : கண்பார்வையற்றவர்களுக்கு இலவச வானொலி பெட்டி வழங்குதல்.

தகுதிகள்
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.
2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.
3. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராகஇருத்தல் வேண்டும்.16. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் :

கிடைக்கும் உதவி : தீபாவளி அல்லது பண்டிகை காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது .

தகுதிகள் :

1. 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெயரை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவுசெய்திருத்தல் வேண்டும்.
4. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராகஇருத்தல் வேண்டும்.


17. மாற்றுத்திறனாளிகளுக்கு வருடாந்திர சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் :

கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலமாக இலவசமாக வருடாந்திர சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். சுற்றுலாவில் தங்க இடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.


தகுதிகள் :
1. 18-50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. அரசு ஊழியராக இருத்தல் கூடாது.

4. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.
5. கடந்த 10 ஆண்டுகளில் இச்சுற்றுலாவில் கலந்து கொள்ளாதவராக இருத்தல்வேண்டும்.
6. தொழுநோய் / காசநோய் போன்ற பரவும் நோய் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.


7. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராக
இருத்தல் வேண்டும்.

8. மது மற்றும் போதை பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை.

18. பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் மாற்றுத்திறனாளிகள் ஈமச்சடங்கு உதவித்தொகை திட்டம் :

கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறும் நபர் இறந்து விட்டால் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000/- வழங்கப்படுகிறது.


தகுதிகள்

1.இறந்த மாற்றுத்திறனாளி மாதந்திரஉதவித்தொகை பெறுபவராக இருத்தல்வேண்டும்.

2.மாற்றுத்திறனாளி இறந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.19. மாற்றுத்திறனாளி நலனுக்கான மாநில விருதுகள் வழங்கும் திட்டம் :
கிடைக்கும் உதவி :
1. அரசு ஊழியர் / தனியார் நிறுவன ஊழியர் சுய வேலை வாய்ப்பு செய்பவர் ஆகியவர்களுக்கு
ரூ.10,000/-மும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.2.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்பவர்களுக்கு ரூ.15,000/- ம், சான்றிதழும்
வழங்கப்படுகிறது.3.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்யும் மாற்றுத்திறனாளி நலச்சங்கங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனகளுக்கு ரூ.25,000/- மமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.4.மாநில விருதுகள் மாநில குழுவால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் கிடையாது.


2. வயது வரம்பு கிடையாது.

3. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

4. சாதனை புரிந்ததற்கான ஆவணங்களும் மற்றும் விரிவான விளக்கங்களும் சமர்ப்பிக்கவேண்டும்.20. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடுதல் :
கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகள் தின விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல்வேறு நலத்திட்ட உதவிகள், விருதுகள், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
தகுதிகள்

1.புதுச்சேரியை சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்ளலாம்.21. மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் :


கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல்.

தகுதிகள்
1. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.22. மாற்றுத்திறனாளிகளுக்கான நலச்சங்கங்களுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி நலச்சங்கங்களுக்கு இசை மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது.


குதிகள் :மாற்றுத்திறனாளி நலச்சங்கங்கள் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 18 February 2016

சமுதாய அவலங்களை தட்டிக்கேட்கும் யார் இந்த வெங்கடேஷ்?வெங்கடேஷ் போன்ற சமுதாய அவலங்களை தட்டிக்கேட்கும் பொருப்புள்ள இளைஞர்கள் நம்மில் பலர் உள்ளார்கள். சமுதாய அக்கரையும் ஊழலை ஒழிக்கும் வல்லமை படைத்த இளைஞர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இவர்கள் கையில் தான் எழுச்சி மிகு பாரதத்தின் எதிர்காலம் உள்ளது. காலமௌ காலமாக மக்களை ஏமாற்றி அஆதாயம் அடையும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து சாமானியரையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் பெரிய பொருப்பு இன்றைய இளைஞர்களிடம் உள்ளது என்பதைஉணர்ந்து செயலாற்ற வேண்டும்.


யார் இந்த வெங்கடேஷ்.?

ஒல்லீயான தேகம். விடாமுயற்ச்சி. அசாத்திய துணிச்சல் யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்ட இளைஞர்.
சமுதாய அவலங்கலை சகித்துக்கொள்ள முடியாமல் ஊர் ஊராய் பிரச்சனைகளை தேடி பயணிக்கிறார். தினம் RTI போடுகிறார். சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிடப்பில் கிடக்கும் அரசு வேலைகளை ஏன் செய்யவில்லை என்று குடிமகனுக்கு உள்ள மக்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கேள்வி கேட்கிறார். எந்த காரியம் யாரால் முடியும் எந்த அதிகாரியால் இந்த பணி தாமதமாகிறது. அந்த பணி முடிய என்ன செய்ய வேண்டும். என்பதெல்லாம் விரல் நூனியில் வைத்துள்ளார்.


பட்ட படிப்பு படித்த இவர் அனைத்துறைகள் பற்றி ஆணி வேர் முதல் அறிந்து வைத்திருக்கும். இவர் திருநெல்வெலி மாவட்டத்தில் அனைத்து அதிகாரிக்கும் பரிச்சயமானவர். இவர் நூழைந்தாலே தவறு செய்த அரசு அதிகாரிகள் வயிற்றில் புளியை கரைக்க வைத்துவிடுகிறார். இவர் இடுக்குபிடியில் தப்பிக்க முடியாமல் ஓரு நகராட்சியே கூடி சிறையில் தள்ள தீர்மானம் போட்டது.
சுயஒழுக்கத்தில் சிறப்பானவரான வெங்கடேஷ் எதிலும் சிக்க வைக்கமுடியவில்லை. எதிரிகளை விட 9 அடி கூடுதல் பாய்கிறார். ரோடு போடுறாங்களாம்பா.! பாலம் கட்டுறாங்களாம்ப்பாம்.! ஆக்கிரமிப்பை அகற்றுராங்களாம்பா.! லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டாராம்ப்பா.! பொய் சான்றிதழ்ல வேலையில் சேர்ந்து மாட்டிகிட்டாராம்ப்பா .! என்று திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் பேசும் இந்த பேச்சின் அடித்தளத்தின் அஸ்திவாரம் வெங்கடேஷ் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறது என்பது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.

சுதந்திர போராட்டத்தின் போது இத்தகைய இஞைஞர்களை பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம். இந்த நூற்றாண்டிலும் சொந்த வாழ்க்கையை பற்றி கவலைபடாமல் தேசப்பற்று கொண்ட இளைஞராக வலம் வருகிறார்.

தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கதவுகளை உரக்க தட்டும் இளைஞர் எந்த ஓரு பிரச்சனையும் சிங்கம் போல சிங்கிளாக சந்தித்து வெற்றி பெரும் வரை விடுவதில்லை. அரசியல் கட்சிக்கோ அதிகாரிகளுக்கோ விலை போகாத இவர் இளையபாரதம் என்ற அமைப்பை நிறுவி நாட்டு பற்று கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தி வருகிறார்.

வெங்கடேஷின் ஆசை ஓன்றே ஒன்று மட்டும் தான். என்னைப்போல சமூக அக்கரை உள்ள இளைஞர்கள் ஓவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றனர். முதலில் அவர்களை அடையாளம் கண்டு கொண்டுவிட்டேன் என்றால் நாட்டை கொடியவர்கள் கையில் இருந்து காப்பாற்றி விடமுடியும் என்று முழு நம்பிக்கையோடு சொல்கிறார்.
சமூக அக்கரை கொண்ட இளைஞர்கள் இந்த நெல்லை மைந்தனுடன் கரம் கோர்கலாமே.!

வெங்கடேஷ் - 9500 922 922