உலகை மிரட்டி வரும், 'ஜிக்கா' வைரஸ் பாதிப்பு, அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவுகிறது. ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இருக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், 2,116 கர்ப்பிணிகள் உட்பட, 20 ஆயிரத்து, 297 பேருக்கு இதன் பாதிப்பு உள்ளது.தென் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜிக்கா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் அவசர நிலையை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. கர்ப்பணிகள் யாரும் தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்று வருவோர் குறைந்தது ஒரு மாதமாவது மனைவிகளுடன் உறவு கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமாகவும் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலகை மிரட்டி வரும் சைகா வைரஸ் எப்படி பரவுகிறது என்று ஒவ்வொவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
.
கருத்தரிக்க வேண்டாம் !!
* 'அமெரிக்காவில், இந்த ஆண்டு, சைகா வைரசால், 40 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
* பிரேசிலில், 3,718 கர்ப்பிணிகள் உட்பட, 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* 'கொலம்பியாவில், ஆறு லட்சம் பேர் பாதிக்கப்படலாம்' என, அரசு எச்சரித்து உள்ளது.
* 'தாயின் மூலம் வயிற்றில் இருக்கும் கரு பாதிக்கப்படும் என்பதால், அடுத்த எட்டு மாதங்களுக்கு கருத்தரிக்க வேண்டாம்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால், சைகா வைரஸ் பரவுகிறது. ஆனால், இது மனிதர்களிடமிருந்து உடலுறவு மூலமாகவும் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பரவாது. தாயிடமிருந்து, கருவில் உள்ள குழந்தைக்கு பரவும்; இந்த வைரசால் பாதிக்கப்படும் கரு, தலை சிறுத்து, மாறுபட்ட வடிவத்துடன் பிறக்கும். அமெரிக்க தேசிய சுகாதார மையத்தின் தகவலின்படி, பிரேசிலுக்கு அடுத்தபடியாக, கொலம்பியாவில் தான் இந்த வைரசின் பாதிப்பு அதிகமாக உள்ளது.
அறிகுறிகள்
ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தற்போது துவங்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் மனிதர்களை வைத்து மருந்து பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஜிக்கா வைரஸால் தாக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தெரிவது இல்லை. இதனால் அவர்களுக்கு தங்களுக்கு வைரஸ் தாக்குதல் இருப்பதே தெரிவது இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
- காய்ச்சல் சிலருக்கு மட்டுமே அறிகுறிகள் தென்படும். அதுவும் வைரஸ் தாக்கி சில நாட்கள் கழித்தே அறிகுறிகள் தெரியும். காய்ச்சல், அரிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, கண் சிவப்பாகுதல் ஆகியவை ஏற்படும். அந்த அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களில் சரியாகிவிடும்.
ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தற்போது துவங்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் மனிதர்களை வைத்து மருந்து பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment