தமிழகத்தைப் பொறுத்தமட்டில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 20, 30 ஆண்டுகளாக பதிந்து வைத்து வேலைக்காக காத்திருக்கும் பல்வேறு வகை சுமார் 1,05,000 என அரசு தெரிவிக்கிறது. அதே வேளையில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய பணியிட வாய்ப்புகளை தராமல் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றுவதில் தமிழக அரசும் அரசும் கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு,ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1107 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. எனவே, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்குரிய இட ஒதுக்கீட்டை சட்டத்தின்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் அளித்திட தமிழக அரசு முன்வரவேண்டு
தமிழகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளி பிரச்சனைகளை கவனிக்க திறமையுள்ள துறையாக மாற்றுத்திறனாளி துறை மாற்றப்பட வேண்டும்.குறிப்பாக மாற்றுத்திறனாளி சட்டப்படி மாநில ஆணையருக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதிக்கு இணையான அதிகாரம் தரப்பட்டுள்ளன.இருப்பினும், நியமிக்கப்படுகிற மாநில ஆணையம் இந்த சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. எனவே, மத்திய மாற்றுத்திறனாளி ஆணையர் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளி உரிமைகளில் ஆர்வம் உள்ள ஆணையமாக செல்பட உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்.
1.மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : மாதாந்திர நிதி உதவியாக 40%-65% - ரூ.1500/- 66%-85% - ரூ.2000/- 86%-100% - ரூ.3000/- வழங்கப்படுகிறது. தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 2. கை, கால் ஊனம், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை, கண் பார்வை குறைவு : 40% மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். 3. மனவளர்ச்சி குன்றியவர் : ஐ .க்யூ. 69மற்றும் அதற்கும் குறைவாக . 4. ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 2. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தோறும் இலவச அரிசி வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : மாற்றுதிறனாளிகளுக்கு மாதாந்தோறும் இலவசமாக 15 கிலோ அரிசி வழங்குதல். தகுதிகள் : 1.மாற்றுதிறனாளி மாதாந்திர நிதி உதவி பெறுபவராக இருத்தல் வேண்டும். 2. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 3. 40% மேல் இருக்க வேண்டும். 4.ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 3. மாற்றுதிறனாளி மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : கிழ்கண்டவாறு மாற்றுதிறனாளி மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை ஆண்டு ஒன்றிற்கு வழங்கப்படுகிறது. 1- முதல் 5-ஆம் வகுப்பு வரை - ரூ.1000/- 6- முதல் 8-ஆம் வகுப்பு வரை - ரூ.2000/- 9- முதல் 12-ஆம் வகுப்பு வரை - ரூ.3400/- இளங்கலை பட்டப்படிப்பு - ரூ.5000/- முதுகலை பட்டப்படிப்பு - ரூ.6800/- தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 2. ஊனத்தின அளவு 40% க்கு மேல் இருக்க வேண்டும். 3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 4. கண் தானம் செய்பவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : கண் தானம் செய்த நபரின் குடும்பத்திற்கு ஊக்கத்தொகையாக ரூ.5000/- கண் ஒன்றிற்கு வழங்கப்படுகிறது. தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் கிடையாது. 2. புதுவை ஆட்சி பரப்பில் 5 வருடத்திற்கு குறையாமல் வசித்தல் வேண்டும். 3. ஊக்கத்தொகையை பெற விண்ணப்பிப்பவர் கண் தானம் கொடுத்தவரின் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும். 4. கண் மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 5. கண் மாற்று அறுவை சிகிச்சை செய்த 90நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும். 5. மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி இலவசமாக வழங்குதல்: கிடைக்கும் உதவி : மாற்றுதிறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி இலவசமாக வழங்குதல். தகுதிகள் : 1. 65% மேல் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும். 2. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 3. மாற்றுத்திறனாளி வேலை செய்பவராக / கல்வி பயிலுபவராக இருத்தல் வேண்டும். 4. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 5. இத்துறையின் மூலமாக போக்குவரத்து பயணப்படி பெறாதவராக இருத்தல் வேண்டும். 6. ஒரு மாற்றுதிறனாளி மற்றொரு மாற்றுதிறனாளியை மணந்து கொண்டால் திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : ஊக்கத்தொகை ரூ.50,000/- (ரொக்கத்தொகையாக ரூ.20,000/-மும் தேசிய சேமிப்பு பத்திரமாக ரூ.30,000/- வழங்கப்படும் : தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 2. வயது ஆணுக்கு 21-ம் பெண்ணுக்கு 18-ம் இருத்தல் வேண்டும். 3. ஊனத்தின் அளவு : இருவருக்கும் 40% மேல் இருத்தல் வேண்டும். 4. குடியிறுப்பு : மாற்றுதிறனாளிகள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 5. தம்பிதியருக்கு முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். 6. திருமணத்தை பதிவு செய்தல் வேண்டும். 7. திருமணம் நடந்த 120 நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும். 8. தம்பதியர் திருமணத்திற்கு பிறகு புதுவை ஆட்சி பரப்பில் வசிக்க வேண்டும். 7. ஒரு மாற்றுதிறனாளி ஊனம் இல்லாதவரை திருமணம் செய்து கொண்டால் - திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : ஊக்கத்தொகை ரூ. 25,000/- (ரொக்கத்தொகையாக ரூ.5,000/- மும் தேசிய சேமிப்பு பத்திரமாக ரூ.20,000/- வழங்கப்படும் : தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 2. வயது ஆணுக்கு 21-ம் பெண்ணுக்கு 18-ம் இருத்தல் வேண்டும். 3. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 4. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 5. தம்பிதியருக்கு முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். 6. திருமணத்தை பதிவு செய்தல் வேண்டும். 7.திருமணம் நடந்த 120 நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும். 8. தம்பதியர்கள் திருமணத்திற்கு பிறகு புதுவை ஆட்சி பரப்பில் வசிக்க வேண்டும். 8. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு முடநீக்கு கருவிகள் வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிக்கு நலவழித்துறையின் பரிந்துரையுடன் மூன்று சக்கர வண்டி, முடநீக்கு கருவிகள், செயற்கை உறுப்புகள் மற்றும் காது கேட்கும் கருவிகள் வழங்குதல். தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 4. வயது வரம்பு கிடையாது. 5. கல்வி தகுதி தேவையில்லை 9. பார்வையற்றவர்களுக்கு குளிர்கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் மற்றும் கைத்தடி வழங்குதல்: கிடைக்கும் உதவி : முற்றிலும் பார்வையற்றவர்களுக்கு குளிர்கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் மற்றும் கைத்தடி வழங்குதல் தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 2. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 3. கண் பார்வை இல்லாதவரின் ஊனத்தின் அளவு 100% இருத்தல் வேண்டும். 10. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பெறும் கண்பார்வையற்ற மாணவ / மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைபெறும் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை முதல் பரிசு ரூ.15,000/- இரண்டாம் பரிசு ரூ.10,000/- மூன்றாவது பரிசு ரூ.5,000/- தகுதிகள் : 1. கண்பார்வையற்ற மாணவ / மாணவியராகஇருத்தல் வேண்டும். 2. ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 11. இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எரிபொருள் செலவில் 50% மான்யம் வழங்குதல் : கிடைக்கும் உதவி : இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எரிபொருள் செலவில் 50% மான்யம் வழங்குதல் தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 4. வயது வரம்பு கிடையாது. 5. கல்வி தகுதி தேவையில்லை 6. சொந்த வாகனம் வைத்திருக்க வேண்டும். 7. ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 12. மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வண்டியின் பராமரிப்பு செலவு வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வண்டியின் பராமரிப்பு செலவிற்கு ஒரு ஆண்டிற்கு ரூ. 200/- வழங்கப்படுகிறது : தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் கிடையாது. 2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 4. மூன்று சக்கர வண்டியை இலவசமாகவோ அல்லது அன்பளிப்பாகவோ பெற்றிருத்தல்வேண்டும். 5. மூன்று சக்கர வண்டியை பழுது பார்த்ததிற்கான ரசீதை தங்கள் பெயரில் சமர்ப்பிக்க வேண்டும். 13. மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து செலவிற்காக மாதந்திர பயணப்படி திட்டம் : கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து செலவிற்காக மாதந்திர உதவித்தொகையாக ரூ.100/- வழங்கப்படுகிறது. இது அருகில் உள்ள அங்கன்வாடி மையம் மூலம் மாதமாதம்வழங்கப்படும். தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 3. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் வசித்தல் வேண்டும். 4. ஐந்து வயதிற்கு மேல் உள்ளவராக இருத்தல் வேண்டும். 14. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து பயண அட்டை வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து பயண அட்டை வழங்குதல். தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 3. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராகஇருத்தல் வேண்டும். 15. கண்பார்வையற்றவர்களுக்கு இலவச வானொலி பெட்டி வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : கண்பார்வையற்றவர்களுக்கு இலவச வானொலி பெட்டி வழங்குதல். தகுதிகள்: 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 3. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராகஇருத்தல் வேண்டும். 16. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : தீபாவளி அல்லது பண்டிகை காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது . தகுதிகள் : 1. 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். 2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 3. மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெயரை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவுசெய்திருத்தல் வேண்டும். 4. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராகஇருத்தல் வேண்டும். 17. மாற்றுத்திறனாளிகளுக்கு வருடாந்திர சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் : கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலமாக இலவசமாக வருடாந்திர சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். சுற்றுலாவில் தங்க இடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. தகுதிகள் : 1. 18-50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 3. அரசு ஊழியராக இருத்தல் கூடாது. 4. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும். 5. கடந்த 10 ஆண்டுகளில் இச்சுற்றுலாவில் கலந்து கொள்ளாதவராக இருத்தல்வேண்டும். 6. தொழுநோய் / காசநோய் போன்ற பரவும் நோய் இல்லாதவராக இருத்தல் வேண்டும். 7. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 8. மது மற்றும் போதை பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. 18. பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் மாற்றுத்திறனாளிகள் ஈமச்சடங்கு உதவித்தொகை திட்டம் : கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறும் நபர் இறந்து விட்டால் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000/- வழங்கப்படுகிறது. தகுதிகள் : 1.இறந்த மாற்றுத்திறனாளி மாதந்திரஉதவித்தொகை பெறுபவராக இருத்தல்வேண்டும். 2.மாற்றுத்திறனாளி இறந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 19. மாற்றுத்திறனாளி நலனுக்கான மாநில விருதுகள் வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : 1. அரசு ஊழியர் / தனியார் நிறுவன ஊழியர் சுய வேலை வாய்ப்பு செய்பவர் ஆகியவர்களுக்கு ரூ.10,000/-மும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.2.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்பவர்களுக்கு ரூ.15,000/- ம், சான்றிதழும் வழங்கப்படுகிறது.3.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்யும் மாற்றுத்திறனாளி நலச்சங்கங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனகளுக்கு ரூ.25,000/- மமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.4.மாநில விருதுகள் மாநில குழுவால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. தகுதிகள் : 1. ஆண்டு வருமானம் கிடையாது. 2. வயது வரம்பு கிடையாது. 3. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 4. சாதனை புரிந்ததற்கான ஆவணங்களும் மற்றும் விரிவான விளக்கங்களும் சமர்ப்பிக்கவேண்டும். 20. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடுதல் : கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகள் தின விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல்வேறு நலத்திட்ட உதவிகள், விருதுகள், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. தகுதிகள் : 1.புதுச்சேரியை சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்ளலாம். 21. மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் : கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். தகுதிகள் : 1. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும். 22. மாற்றுத்திறனாளிகளுக்கான நலச்சங்கங்களுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டம் : கிடைக்கும் உதவி : பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி நலச்சங்கங்களுக்கு இசை மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது. தகுதிகள் :மாற்றுத்திறனாளி நலச்சங்கங்கள் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான். |
No comments:
Post a Comment