Tuesday 25 August 2020

ஒருவர் அல்லது ஒருவருக்கு மேற்பட்டோர் உங்கள் ஆடையற்ற புகைப்படம் அல்லது வீடியோவை வைத்துக்கொண்டுமிரட்டினால் உடனடியாக செய்யவேண்டியது என்ன? விழிப்புணர்வு பதிவு





பெண்களுக்ககெதிரான குற்றங்கள் மெய்நிகர் உலகில் மிக அதிகம்.

இணையத்தில் அந்தரங்க படங்களை பகிர்வது, பயமுறுத்துவது பற்றிய வழக்குகள் ஐந்து வருடங்களில் 200% அதிகரித்துள்ளது. (NCRB)

லாக் டவுன் சமயத்தில் சில பள்ளி குழந்தைகளுக்கிடையிலும் மவுனமாக ஒரு அரக்கன் மொபைல் மூலமாக இறங்கி வதைத்து விட்டான் என்றே சொல்ல வேண்டும்.

WhatsApp, iMessage, இணையத்தில் அந்தரங்கப் படங்களைப் பகிர்தல் என்பது இன்று எல்லா வயதினரிடையேயும் பொதுவான செயல் .

பெண்களுக்கு எதிரான கடுமையான சைபர் குற்றங்களில் ஒன்று பழிவாங்கும் போர்ன் (Revenge Porn). இந்தியாவுக்கு புதிது. ஆனால் வேகமாக உயர்ந்து வருகிறது.

அனுமதியின்றி ஒரு நபரின் பாலியல் (தனிப்பட்ட அல்லது நிர்வாண) படங்களைப் பகிர்வது இதில் அடங்கும்.

முன்னாள் காதலர், அல்லது உங்களுடன் துணை நின்ற தோழி கூட உங்களை பழிவாங்க, அவமானபடுத்த அல்லது மிரட்டி பணம் பறிக்க முயலலாம்.வெளியில் கசியாமல் இதில் உங்களுக்கு உதவ அதற்கென அமைப்புகள் இருக்கின்றன.

தைரியமாக இருங்கள், துணிவாக இருங்கள். இதில் ஐந்து விஷயங்களை தவறாமல் பின்பற்றவேண்டும்.

1. நண்பர் அல்லது பெற்றோரிடம் உடனே பேசுங்கள்

  • நடந்ததை உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் - உற்ற நண்பர் அல்லது தாய் தந்தையிடம் பேசுங்கள்.
  • உங்களுக்கு முடிந்த அனைத்தையும் செய்ய அவர்கள் உடனிருப்பார்கள். உங்கள் மன பாரமும் குறையும்.
  • இந்த கேள்வியை கேட்டவர் பெற்றோராக இருந்தால், உங்கள் பிள்ளை இதிலிருந்து தப்பி வர தைரியத்தை கொடுங்கள். வார்த்தைகளால் வதைத்து அவரது தன்னம்பிக்கையை குறைத்துவிட வேண்டாம்.

2. படங்கள் ஏற்கனவே பகிரப்பட்டிருந்தால்

  • உங்கள் புகைப்படங்கள் ஏற்கனவே வாட்ஸ்அப், ஆபாச இணையதளம், ஃபேஸ்புக் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிரப்பட்டிருந்தால், பெரியவர்களின் உதவியோடு விரைவாக காவல்துறையைத் தொடர்புகொள்வது நல்லது.
  • தவிரவும் நீங்களே கூட நேரடியாக இந்த தளங்களை அணுகி அந்த படங்களை "Take Down" பண்ண சொல்லி கோரிக்கை வைக்கலாம்.
  • இந்த தளங்கள் அனைத்துமே "Take Down" கோரிக்கை வந்ததும் கேள்வி எதுவும் கேட்காமல் அவற்றை நீக்க சட்டப்படி கடமை பட்டவை.

  • 2. நிபுணர் / காவல் துறை உதவியை பெறுங்கள்.

    • பழிவாங்கும் போர்ன்க்கு எதிராக நேரடிச் சட்டம் எதுவும் இல்லை.
    • ஆனாலும் இந்தக் குற்றங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ் கையாளப்படுகின்றன.
    • இந்திய சைபர் கிரைம் காவல் துறை மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு ப்ரொபஸனல் அமைப்பு. அதன் உள்ளூர் பிரிவில் புகார் அளிக்கவும். எஃப்.ஐ.ஆர் பதிய வேண்டியிருக்கும். பயப்படாமல் பதிவு செய்யுங்கள்.
    • ஆன்லைன் தளம் இருக்கிறது. அங்கேயும் பதியலாம். விரிவான வழிகாட்டலை இங்கே படியுங்கள்:

    https://www.wikiprocedure.com/index.php/Tamil_Nadu_-_Register_a_Cyber_Crime_Complaint

    • சைபர் கிரைம் காவல் நிபுணர்கள், நாளும் இதுபோன்ற வழக்குகளை கையாண்ட செய்த அனுபவம் உள்ளவர்கள்.
    • அம்பலப்படுத்தாமல் ரகசியமாக விஷயத்தை அணுக அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் புகைப்படங்கள், புகார்கள் ரகசியமாக கையாளப்படும்.
    • புகாரை தவிர்க்க எண்ணினால் இதற்கான ஹெல்ப்லைன் சேவை பற்றியும் அவர்களே சொல்வார்கள். விரைவாக அதில் தொடர்பு கொள்ளவும்.
    • இதுபற்றி ஆலோசனை மட்டும் வேண்டும் என்று தோன்றினால் contact@cyberblogindia.in என்ற தன்னார்வ அமைப்பில் தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் (+919340337396) வசதியும் இருக்கிறது.

    3. மிரட்டல் செய்தியை நீக்க வேண்டாம்

    • மிரட்டல் செய்தி மிக முக்கியமான ஆதாரம்.
    • அதை நீக்குவதன் மூலம் ஆதாரங்களை அழிக்கிறோம், எனவே அவற்றை பத்திரப்படுத்தவும்.

    4. ஸ்கிரீன் ஷாட் எடுக்கவும்.

    • பெரும்பாலும் அச்சுறுத்துவதற்காக போலி கணக்குகள் தான் பயன்படுத்தபடுகிறது. அதை அழித்துவிட்டால் அல்லது அந்த கணக்கு செயலிழந்த பிறகு, உங்களுக்கு வந்த மிரட்டல் செய்திகளும் அழிந்துபோகலாம் அல்லது அவற்றை மீட்பதில் சிரமம் இருக்கலாம்.
  • இதுபோன்ற மெசேஜ்கள் வந்தவுடன் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது நல்லது. இந்த ஸ்கிரீன் ஷாட்கள் புகார்களை பதிவு செய்ய அல்லது விசாரணைக்கான தரவுகளை சேகரிக்க உதவியாக இருக்கும்.
  • நேர முத்திரையுடன் (Time Stamp) ஸ்கிரீன்ஷாட் எடுக்க வேண்டும்.

  • 5. பிளாக்மெயிலுக்கு பணிய வேண்டாம்

    • பிளாக்மெயில் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டாம். ஒரு கோரிக்கையோடு நின்று விடாமல், தொடர்கதையாகி விடும்.
    • தவிர்க்க முடியாத நெருக்கடி அல்லது அச்சுறுத்தும் வகையில் கோரிக்கை இருந்தால், சைபர் கிரைம் அதிகாரி அதை எப்படி 'நிறைவேற்றுவது' என்று உங்களுக்கு சொல்லித்தருவார்.

    மூத்தவர்களின் உதவி பெறுவதில் உள்ள தயக்கத்தால் பலரும் இத்தகைய சேவைகளை அணுகுவதில்லை. பெற்றோர்கள் இதில் உதவ வேண்டும்.

    சென்ற தலைமுறை உலகம் இந்தளவு அகண்டதாக, ஆபத்தானதாக இல்லை.


    1. தேசிய குற்ற ஆவணக் காப்பக (National Crime Records Bureau) தரவுகள்.
    2. What Would You Do if Your Nude Photos are Used to Blackmail You?
    3. Someone has threatened to share my nudes. What do I do now?
    4. SECTION 66E, 67 OF INFORMATION TECHNOLOGY ACT, 2000
  • ஆக்கம்  & தொகுப்பு  : அ .தையுபா அஜ்மல் .

Saturday 22 August 2020

மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) பற்றிய சிறப்பு பார்வை !!

சிறீலங்காவில் இனவாதச் செயற்பாடுகள் ...மனித உரிமைகளை முன்னிறுத்தும், ஆயும் கட்சி சார்பற்ற, அரச சார்பற்ற ஓர் அமைப்பு. இவ் அமைப்பின் தலைமையகம் நியூ யோர்க், ஐக்கிய மெரிக்காவில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் பாரிய மனித உரிமைகள் அமைப்பு மனித உரிமைகள் கண்காணிப்பு ஆகும்.



இவ் அமைப்பில் 150 க்கும் மேற்பட்ட திறனர்கள் கடமையாற்றுகின்றார்கள். நம்பிக்கை வாய்ந்த அறிக்கைகளை தாயாரிப்பதுவே இவ் அமைப்பின் ஒரு முக்கிய பணியாகும். இவ் அமைப்பின் அறிக்கைகளுக்கு சர்வதேச மதிப்பு உண்டு.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை இந்தியா உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் புகலிடம் மற்றும் அகதிக் கொள்கை ஆகியவை மதம் உட்பட எந்தவொரு காரணத்திலும் பாகுபாடு காட்டாமல், சர்வதேச சட்டத் தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
'துரோகிகளை சுடு: இந்தியாவின் புதிய குடியுரிமைக் கொள்கையின் கீழ் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு' என்ற 82 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அமைப்பின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி, புதிதாக திருத்தப்பட்ட சட்டம் இனத்தின் அடிப்படையில் குடியுரிமை இழப்பதைத் தடுக்கும் இந்தியாவின் சர்வதேச கடமைகளை மீறுவதாகக் கூறினார்,
"ஏழை, சிறுபான்மை சமூகங்கள், புலம்பெயர்ந்தோர் அல்லது உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் பெண்கள் மீது தேவையற்ற கஷ்டங்களை சுமத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள் மற்றும் உரிய செயல்முறை பாதுகாப்பு ஆகியவற்றை நிறுவுவதற்கான பொது ஆலோசனைகள் இருக்கும் வரை நாடு தழுவிய குடியுரிமை சரிபார்ப்பு திட்டத்திற்கான எந்தவொரு திட்டத்தையும் இந்தியா நிராகரிக்க வேண்டும். , "என்றார் HRW.
நியூயார்க்கை தளமாகக் கொண்ட அமைப்பு, "குடியுரிமை சரிபார்ப்பு செயல்முறைகளிலிருந்து இந்தியா குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை நீக்க முயன்றது, ஆனால் பாஜக தலைவர்களின் முரண்பாடான, பாரபட்சமான மற்றும் வெறுப்பு நிறைந்த கூற்றுக்கள் காரணமாக சிறுபான்மை சமூகங்களுக்கு உறுதியளிக்கத் தவறிவிட்டது" என்றார்.
முகநூல் பதிவிற்க்காக...
இந்தியாவின் சர்வதேச சட்டக் கடமைகளை மீறும் கொள்கைகளை அரசாங்கம் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும், பொலிஸ் துஷ்பிரயோகம் என்று கூறப்படுவது மற்றும் பேச்சு மற்றும் சட்டசபை சுதந்திரத்தை பாதுகாக்கும். பாரபட்சமான சட்டமும் கொள்கைகளும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டியுள்ளன என்று கங்குலி கூறினார்.
"இந்தியாவின் பிரதமர் (நரேந்திர மோடி) கோவிட் -19 க்கு எதிரான ஐக்கியப் போராட்டத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், ஆனால் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் இன்னும் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கவில்லை," என்று அவர் கூறினார்.
எச்.ஆர்.டபிள்யூ தனது அறிக்கையில், அரசாங்கக் கொள்கைகள் "கும்பல் வன்முறை மற்றும் பொலிஸ் செயலற்ற தன்மைக்கான கதவைத் திறந்துவிட்டன, அவை நாடு முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன" என்று குற்றம் சாட்டியது.  
துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் டெல்லி மற்றும் அசாம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் 100 க்கும் மேற்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது என்று சர்வதேச உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனவரி 10 ம் தேதி அறிவிக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையை 2014 டிசம்பர் 31 வரை வழங்குகிறது.

Friday 21 August 2020

இஸ்லாம் கூறும் மனிதர்களுடனான நற்பண்புகள்!!!

ஸ்லாம் கூறும் நற்பண்புகளுள் சக மனிதர்களுடனான உறவு மிகவும் முக்கியமானதாகும். சக மனிதர்கள் நம் உறவினர்களாக இருக்கலாம் அல்து அண்டை வீட்டினராக இருக்கலாம், அல்லது நம்முடன் பணி புரிபவர்களாக இருக்கலாம். இன்னும் நம்முடன் பயணம் செய்பவர்களாகவோ, அல்லது வழிப்போக்கர்களாகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரை, மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றதும், ‘உங்களில் நற்குணமுடையவரே’ என்று அருளினார்கள்.
‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணத்தை விடவும் கனமானது எதுவும் கிடையாது’ என்றும் பெருமான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பிறருக்கு உதவி செய்வது மட்டுமல்ல, இன்முகத்துடன் இருப்பது, அடுத்தவர்களை வார்த்தைகளால் புண்படுத்தாமல் இருப்பது, கோபம் வரும் பொழுது அதை அடக்குதல் என்று நற்குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
‘நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
‘ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு, அறிவுரை வழங்கும் பொழுது, உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ், உனக்கு அநீதம் செய்தவரை மன்னித்து விடு, உனக்குத் தர மறுத்தவருக்கு நீ கொடு, இவையே நற்குணங்களாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘இன்னும் இரவெல்லாம் நின்று வணங்குபவர்களுக்கும், பகலெல்லாம் நோன்பு வைத்து வருபவர்களுக்கும் கொடுக்கப்படும் அந்தஸ்து இப்படிப்பட்ட அழகிய நற்குணங்களைப் பெற்றவர்களுக்கும் கொடுக்கப்படும்’ என்றும் மொழிந்துள்ளார்கள்.
‘எந்தக் காரணமாக இருந்தாலும் மற்றவர்களுடனான நம் உறவைத் துண்டித்துக் கொள்ளக்கூடாது’ என்பதை இறைவன் மட்டுமல்லாது, நபி (ஸல்) அவர்களும் விரும்புகிறார்கள்.
இன்று எத்தனையோ பேர் பெரிதாக எந்தக் காரணமும் இன்றி உறவுகளைத் துண்டித்து வாழ்கிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் கொண்ட பிணக்கு காரணமாக, அவர்களைப் பிரிந்து வாழ்வது மிகவும் வருத்தம் தரும் விஷயமாகும். இன்னும் உடன்பிறப்புகளிடம் சண்டை போட்டு எதிர் எதிரே சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் அறியாத மனிதர்கள் போன்று பொது இடங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் நடந்து கொள்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் குறைந்த பட்சம் ‘ஸலாம்’ கூட சொல்வதில்லை. ‘தான்’ என்னும் அகங்காரம் மக்களைப் பாடாய்ப் படுத்துவதே இதற்குக் காரணம்.
நபி (ஸல்) அவர்கள் ‘மக்களே ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள், உணவளியுங்கள், உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள், இரவில் மக்கள் உறங்கும்பொழுது நீங்கள் எழுந்து தொழுங்கள், நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்’ என்று உபதேசம் செய்துள்ளார்கள்.
உறவினர்களுள் வறுமையில் வாடுபவர்களைக் கண்டால் எங்கே நம்மிடம் பண உதவி கேட்டு விடுவார்களோ என்று எண்ணி ஒதுங்கிச் செல்லும் மனப்பான்மை மிகவும் மோசமானது. விருந்து, உபசாரங்களில் கூட வறிய நிலையில் உள்ள உறவினர்களைத் தவிர்த்து, செல்வ நிலையில் உள்ள உறவினர்கள் அழைக்கப்படும் வழக்கத்தைக் காண்கிறோம்.
நற்குணம் உடையவர்களே, சக மனிதர்களை பாரபட்சமின்றி நடத்துவர். செல்வச்செழிப்புடன் வாழ்பவர்கள் வறுமையில் வாடும் உறவினர்களுக்கு, தொழில் கற்றுக் கொடுத்து, தொழில் தொடங்குவதற்கு உதவி செய்தால் அவர்களும் வாழ்க்கையில் உயர்ந்து தங்களைப் போன்றவர்களுக்கும் உதவும் நிலை ஏற்படும்.
நம்முடன் அலுவலகத்தில் சேர்ந்து பணி புரிபவர்களுடன், அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் அடிக்கடி வாதம் செய்வது அல்லது தர்க்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அது போலவே மற்றவர்கள் பேசும் பொழுது ஆர்வத்துடன் கவனிப்பதுடன், அவர்கள் சொல்வது சரியாக இருந்தால் ஆமோதிக்கவும் வேண்டும். ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் வாதம் செய்வதால் நம்முடன் பேசுவதற்கு மற்றவர்கள் தயங்குவார்கள். நம்முடன் பேசுவதையே குறைத்தும் கொள்ளலாம்.
அவ்வாறு இல்லாமல், பிற மனிதர்களுடனான நட்பை நாம் மேம்படுத்திக் கொள்வதால், நம்மை நாடி வரும் மனிதர்களின் முகத்தில் மலர்ச்சியும், நிம்மதியும் தெரியும். கேலிப்பேச்சுகளும், ஏளனப் பார்வையும் சக மனிதர்களை நம்மை விட்டும் விலக்கி விடும்.
நம்முடைய அருகாமை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும் விதத்தில் நம்முடைய நடைமுறைகளை மாற்றுதல், அவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மைகளை அள்ளித் தரும். சக மனிதர்களிடம் நம்முடைய இனிமையான வார்த்தைகள் நரகத்தை விட்டும் நம்மைப் பாதுகாக்கும். இன்னும் நல்ல வார்த்தைகள் தர்மம் செய்வதற்கு சமம்.
‘அண்டை வீட்டினர் பசியோடு இருக்கும் பொழுது யார் வயிறு நிரம்பச் சாப்பிடுகிறாரோ அவர் இறை நம்பிக்கை உடையவராக இருக்க மாட்டார் என்றும், அண்டை வீட்டினரை நிம்மதியற்று இருக்கச் செய்பவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அதுபோலவே உங்களுடன் பயணம் செய்பவர்களுடன் அன்புடன் உரையாடுங்கள், உணவினை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடன் பணி புரிபவர்கள் ஏதாவது நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்களுக்காக இறைவனிடம் கையேந்துங்கள்.
இப்படிப்பட்ட பண்புகள் சக மனிதர்களை உங்களின் பக்கம் ஈர்க்கும். அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு பெறுவதால் உங்களின் மீதும் அவர்கள் அன்பு கொள்வார்கள். இதனால் மற்ற மக்களுடனான சகோதரத்துவமும், உறவும் பலப்படும். இன்ஷா அல்லாஹ் இவற்றை நாம் வாழ்க்கையில் கடைபிடிக்கும்பொழுது நம்முடைய வாழ்வும் மகிழ்ச்சியாக அமையும்.

Thursday 6 August 2020

உலக வரலாற்றில் மக்காவில் புனித ஹஜ் கடமைநடைபெறாத பத்து சந்தர்ப்பங்கள் !!



மக்காவில் புனித ஹஜ் கடமைநடைபெறாத பத்து சந்தர்ப்பங்கள் :

1. ஹிஜ்ரி 251 / கி.பி 865 : அல் சஃபாக் என்று அழைக்கப்படும் இஸ்மாயில் பின் யூசுப் அல்-அலவி மற்றும் அவரது படைகள் அப்பாஸிய கலிபாவுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை வழி நடத்தியதுடன், மக்காவிற்கு அருகிலுள்ள அராபத் மலையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை படுகொலை செய்தனர், இதனால் அந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்பட்டது.
2. ஹிஜ்ரி 317 / கி.பி 930: ஹஜ் பருவ கால சடங்குகளை அபு தாஹிர் கராமிதானி தலைமையிலான அணியினர் இணை வைப்பு சடங்காக கருதினர். இதன் காரணமாக கராமிதா (Karmathian, Qarmatī, (இஸ்மாயிலிய ஷியா பிரிவினர்) என்ற பிரிவு ஹஜ் காலத்தில் மக்கா மீது கொடூரமான தாக்குதலை நடத்தினர். வரலாற்று விவரங்களின்படி 30,000 ஹஜ் யாத்ரீகர்கள் இதில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் 3,000 பேரின் உடல்களை ஸம் ஸம் புனித கிணற்றில் போட்டு மூடி அதை முற்றிலுமாக அவர்கள் அழித்தனர். அது போல கஃபாவிலிருந்த கருப்புக் கல்லைத் ( ஹஜ்றுல் அஸ்வத் கல்)திருடிச் சென்று, சவுதியின் கிழக்கில் உள்ள ஹஜ்ர் (நவீன கால கதிஃப்) என்று அழைக்கப்படும் தங்கள் பிரதேசத்தில் 22 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தனர். இந்த கொடிய நிகழ்விற்கு நிகழ்வுக்குப் பிறகு 10 ஆண்டுகளாக ஹஜ் நடத்தப்படவில்லை.
3. ஹிஜ்ரி 357 / கி.பி 968 : மக்காவில் “அல்-மஷிரி” எனப்படும் ஒரு நோய் பரவல் காரணமாக அந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்பட்டது. இந்த நோய் காரணமாக யாத்ரீகர்கள் பலர் இறந்து போனார்கள். அவர்களின் ஒட்டகங்கள் தாகத்தினால் வழியில் இறந்தன.
4.ஹிஜ்ரி 390 மற்றும் 419/ கி.பி 1000 & 1028 : அதிக பொருட் செலவு மற்றும்பணவீக்கம் காரணமாக ஹஜ் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. அதே காரணத்திற்காக ஹிஜ்ரி 419 இல் கிழக்கிலிருந்தும், எகிப்திலிருந்தும்யாரும்ஹஜ்செய்ய வரவில்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
5. ஹிஜ்ரி 492 / கி.பி 1099 : இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சி மற்றும் போர்கள் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பினால் பாதுகாப்பு இல்லாமையினால் இந்த ஆண்டும் ஹஜ் நடைபெறவில்லை. இது ஜெருசலேம் சிலுவைப்போராட்டக் காரர்களின் கைகளுக்கு வீழ்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
6. ஹிஜ்ரி 654 / கி.பி 1256: ஹிஜாஸ் மாகாணம் (மக்கா மதீனா உட்பட்ட பிரதேசம்) தவிர வேறு எந்த நாட்டவர்களும் நான்கு ஆண்டுகளாக ஹஜ் செய்ய வரவில்லை.
7. ஹிஜ்ரி 1213 / கி.பி 1799: போக்குவரத்து வழிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் பிரெஞ்சு புரட்சியின் போது ஹஜ் பயணங்கள் நிறுத்தப்பட்டன.
8. ஹிஜ்ரி1246 / கி.பி1831: இந்தியாவில் இருந்து வந்த ஒரு வகை பிளேக் பரவலினால், முக்கால்வாசி ஹஜ் யாத்ரீகர்கள் இறந்து போயினர் . அதன்காரணமாக அந்த ஆண்டும் ஹஜ் தடைபடுத்தப்பட்டது
9. ஹிஜ்ரி 1252 - 1310/கி.பி 1837 -1892 : இந்த ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் தொற்றுநோய்கள் பரவியிருந்தன. 1871 இல் அது மதீனாவையும் தாக்கியது. இந்த காலரா தொற்று ஹஜ் காலத்தில் பரவிய தனால் அரபாவில் பெருமளவில் மரணங்கள் நிகழ்ந்தன அவை மினாவில் அதிகரித்த எண்ணிக்கையை அடைந்தன. இதன் காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையினரே ஹஜ் கடமையில் ஈடுபட்டனர்.
10. ஹிஜ்ரி 1441 / கி.பி 2020 : கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) ஹஜ் நிகழ்வு சர்வதேச யாத்ரீகர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.