பெண்களுக்ககெதிரான குற்றங்கள் மெய்நிகர் உலகில் மிக அதிகம்.
இணையத்தில் அந்தரங்க படங்களை பகிர்வது, பயமுறுத்துவது பற்றிய வழக்குகள் ஐந்து வருடங்களில் 200% அதிகரித்துள்ளது. (NCRB)
லாக் டவுன் சமயத்தில் சில பள்ளி குழந்தைகளுக்கிடையிலும் மவுனமாக ஒரு அரக்கன் மொபைல் மூலமாக இறங்கி வதைத்து விட்டான் என்றே சொல்ல வேண்டும்.
WhatsApp, iMessage, இணையத்தில் அந்தரங்கப் படங்களைப் பகிர்தல் என்பது இன்று எல்லா வயதினரிடையேயும் பொதுவான செயல் .
பெண்களுக்கு எதிரான கடுமையான சைபர் குற்றங்களில் ஒன்று பழிவாங்கும் போர்ன் (Revenge Porn). இந்தியாவுக்கு புதிது. ஆனால் வேகமாக உயர்ந்து வருகிறது.
அனுமதியின்றி ஒரு நபரின் பாலியல் (தனிப்பட்ட அல்லது நிர்வாண) படங்களைப் பகிர்வது இதில் அடங்கும்.
முன்னாள் காதலர், அல்லது உங்களுடன் துணை நின்ற தோழி கூட உங்களை பழிவாங்க, அவமானபடுத்த அல்லது மிரட்டி பணம் பறிக்க முயலலாம்.வெளியில் கசியாமல் இதில் உங்களுக்கு உதவ அதற்கென அமைப்புகள் இருக்கின்றன.
தைரியமாக இருங்கள், துணிவாக இருங்கள். இதில் ஐந்து விஷயங்களை தவறாமல் பின்பற்றவேண்டும்.
1. நண்பர் அல்லது பெற்றோரிடம் உடனே பேசுங்கள்
- நடந்ததை உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் - உற்ற நண்பர் அல்லது தாய் தந்தையிடம் பேசுங்கள்.
- உங்களுக்கு முடிந்த அனைத்தையும் செய்ய அவர்கள் உடனிருப்பார்கள். உங்கள் மன பாரமும் குறையும்.
- இந்த கேள்வியை கேட்டவர் பெற்றோராக இருந்தால், உங்கள் பிள்ளை இதிலிருந்து தப்பி வர தைரியத்தை கொடுங்கள். வார்த்தைகளால் வதைத்து அவரது தன்னம்பிக்கையை குறைத்துவிட வேண்டாம்.
2. படங்கள் ஏற்கனவே பகிரப்பட்டிருந்தால்
- உங்கள் புகைப்படங்கள் ஏற்கனவே வாட்ஸ்அப், ஆபாச இணையதளம், ஃபேஸ்புக் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிரப்பட்டிருந்தால், பெரியவர்களின் உதவியோடு விரைவாக காவல்துறையைத் தொடர்புகொள்வது நல்லது.
- தவிரவும் நீங்களே கூட நேரடியாக இந்த தளங்களை அணுகி அந்த படங்களை "Take Down" பண்ண சொல்லி கோரிக்கை வைக்கலாம்.
- இந்த தளங்கள் அனைத்துமே "Take Down" கோரிக்கை வந்ததும் கேள்வி எதுவும் கேட்காமல் அவற்றை நீக்க சட்டப்படி கடமை பட்டவை.
- பழிவாங்கும் போர்ன்க்கு எதிராக நேரடிச் சட்டம் எதுவும் இல்லை.
- ஆனாலும் இந்தக் குற்றங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ் கையாளப்படுகின்றன.
- இந்திய சைபர் கிரைம் காவல் துறை மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு ப்ரொபஸனல் அமைப்பு. அதன் உள்ளூர் பிரிவில் புகார் அளிக்கவும். எஃப்.ஐ.ஆர் பதிய வேண்டியிருக்கும். பயப்படாமல் பதிவு செய்யுங்கள்.
- ஆன்லைன் தளம் இருக்கிறது. அங்கேயும் பதியலாம். விரிவான வழிகாட்டலை இங்கே படியுங்கள்:
- சைபர் கிரைம் காவல் நிபுணர்கள், நாளும் இதுபோன்ற வழக்குகளை கையாண்ட செய்த அனுபவம் உள்ளவர்கள்.
- அம்பலப்படுத்தாமல் ரகசியமாக விஷயத்தை அணுக அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் புகைப்படங்கள், புகார்கள் ரகசியமாக கையாளப்படும்.
- புகாரை தவிர்க்க எண்ணினால் இதற்கான ஹெல்ப்லைன் சேவை பற்றியும் அவர்களே சொல்வார்கள். விரைவாக அதில் தொடர்பு கொள்ளவும்.
- இதுபற்றி ஆலோசனை மட்டும் வேண்டும் என்று தோன்றினால் contact@cyberblogindia.in என்ற தன்னார்வ அமைப்பில் தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் (+919340337396) வசதியும் இருக்கிறது.
- மிரட்டல் செய்தி மிக முக்கியமான ஆதாரம்.
- அதை நீக்குவதன் மூலம் ஆதாரங்களை அழிக்கிறோம், எனவே அவற்றை பத்திரப்படுத்தவும்.
- பெரும்பாலும் அச்சுறுத்துவதற்காக போலி கணக்குகள் தான் பயன்படுத்தபடுகிறது. அதை அழித்துவிட்டால் அல்லது அந்த கணக்கு செயலிழந்த பிறகு, உங்களுக்கு வந்த மிரட்டல் செய்திகளும் அழிந்துபோகலாம் அல்லது அவற்றை மீட்பதில் சிரமம் இருக்கலாம்.
- இதுபோன்ற மெசேஜ்கள் வந்தவுடன் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது நல்லது. இந்த ஸ்கிரீன் ஷாட்கள் புகார்களை பதிவு செய்ய அல்லது விசாரணைக்கான தரவுகளை சேகரிக்க உதவியாக இருக்கும்.
- நேர முத்திரையுடன் (Time Stamp) ஸ்கிரீன்ஷாட் எடுக்க வேண்டும்.
- பிளாக்மெயில் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டாம். ஒரு கோரிக்கையோடு நின்று விடாமல், தொடர்கதையாகி விடும்.
- தவிர்க்க முடியாத நெருக்கடி அல்லது அச்சுறுத்தும் வகையில் கோரிக்கை இருந்தால், சைபர் கிரைம் அதிகாரி அதை எப்படி 'நிறைவேற்றுவது' என்று உங்களுக்கு சொல்லித்தருவார்.
- தேசிய குற்ற ஆவணக் காப்பக (National Crime Records Bureau) தரவுகள்.
- What Would You Do if Your Nude Photos are Used to Blackmail You?
- Someone has threatened to share my nudes. What do I do now?
- SECTION 66E, 67 OF INFORMATION TECHNOLOGY ACT, 2000
- ஆக்கம் & தொகுப்பு : அ .தையுபா அஜ்மல் .
2. நிபுணர் / காவல் துறை உதவியை பெறுங்கள்.
https://www.wikiprocedure.com/index.php/Tamil_Nadu_-_Register_a_Cyber_Crime_Complaint
3. மிரட்டல் செய்தியை நீக்க வேண்டாம்
4. ஸ்கிரீன் ஷாட் எடுக்கவும்.
5. பிளாக்மெயிலுக்கு பணிய வேண்டாம்
மூத்தவர்களின் உதவி பெறுவதில் உள்ள தயக்கத்தால் பலரும் இத்தகைய சேவைகளை அணுகுவதில்லை. பெற்றோர்கள் இதில் உதவ வேண்டும்.
சென்ற தலைமுறை உலகம் இந்தளவு அகண்டதாக, ஆபத்தானதாக இல்லை.
No comments:
Post a Comment