Wednesday, 21 October 2009

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்....

ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)   நூற்கள்: புஹாரி, முஸ்லிம்
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”
பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.
எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:
ஆழ் கடலில் அலை
இரு கடல்களுக்கிடையே தடுப்பு
நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை
திருப்பித் தரும் வானம்
பெருவெடிப்புக் கொள்கை
முகடாக வானம்
வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி
விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்
வானத்திலும் பயணம் செய்ய வழிகள்
முளைகளாக மலைகள்
பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை
பூமி உருண்டை
பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்
ஓரங்களில் குறைந்து வரும் பூமி
மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்
புவி ஈர்ப்பு சக்தி
விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்
கலப்பு விந்து
கர்ப்ப அறையின் தனித்தன்மை
வேதனையை உணரும் நரம்புகள்
தேன் உற்பத்தி
இவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.
தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:
அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்து விடாதீர்கள்!  (அல்குர்ஆன் 55:7-9)
balance
மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.
அடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில், நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.
வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:
வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்!  (அல்குர்ஆன் 21:32)
பூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.
meteorite2
இவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்? விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.
இறைவன் வழங்கிய அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா அல்லாஹ்.
ரியாத் ஃபெய்ஸல்

Monday, 19 October 2009

மழை நீர் சேகரம்(Rain Water Harvesting)...

மழை

தமிழக மழைப்பொழிவு
மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.

மழை பெய்யச் செய்யும் பாக்டீரியா

"அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகு கிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர் கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்."

 மழைமானி

மழையையோ அல்லது பனியையோ சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100mm (4in பிளாஸ்டிக்) அல்லது 200mm(8in உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0mm முதல் 25mm (0.98in) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செல்லுமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்பட

அளவிடும் முறை
பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லிமீட்டர் அளவில் எடுக்கவேண்டும். மழை ஒரு திரவம் என்பதால் மில்லிமீட்டர் என்ற அளவைவிட லிட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும்.
ஒரு மில்லிமீட்டர் மழை அளவு என்பது ஒரு லிட்டர் / ஒரு சதுர மீட்டருக்கு சமம்.
எனவே, 10mm மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ளவும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு (சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும். சென்னையின் பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர் (174 x 10,00,000 சதுர மீட்டர்). எனவே சென்னையில் 1mm மழை என்பது 17,40,00,000 லிட்டர் மழை பெய்ததாகக்கொள்ளலாம்.

 மழையின் வகைகள்

 • ஆலி - மழை துளி
 • சோனை - விடா மழை
 • தூறல் - சிறிய மழை,
 • சாரல் - மலையில் பட்டு விழும் மழை.
 • அடைமழை - ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும்.; கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள்.
 • கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை.
 • மாரி - மாரி அல்லது காரியம் இல்லை என்று கூறுகின்றார்கள். மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது.
 • ஆலங்கட்டி மழை - பனி கட்டி கட்டியாக மழையுடனோ அல்லது தனியாகவோ விழும் மழை.
 • பனிமழை - பனி மழையாக பொழிவது. இது பொதுவாக இமயமலை போன்ற சிகரங்களில் காணப்படும்.
 • ஆழிமழை - ஆழி என்றல் கடல் இது கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும்.
 • துளி - மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள். இதில் மழையை துளி என்று கூறப்பட்டுள்ளது. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன், அளியின்மை வாழும் உயிர்க்கு (திருக்குறள்).
 • பெய் - நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, காலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். இதில் மழையை பெய் என்று கூறப்பட்டுள்ளது. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட, பெயலும் விளையுளும் தொக்கு (குறள்).
 • புயல் - புயல் என்பது காற்றுடன் வரும் மழையை குறிக்கும். இதை குறைவில்லாத மழை என்று வள்ளுவர் தருகின்றார். ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும், வாரி வளங்குன்றிக் கால் (குறள்). மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
 • வருணன் - மழையின் கடவுள் இதுவும் மழையே.
மழை நீர் சேகரம்(Rain Water Harvesting)

மழை நீர் சேகரம்
பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்பு முறைகள்.
சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

சேகரிக்கும் முறைகள்:நெரிசலான பெரு நகரங்களில், வீடுகள், கட்டிடங்களின் கூரையில் விழும் மழை நீரை குழாய்கள் மூலமாக பூமியில் அமைக்கப்படும் 'சம்ப்' நீர்தொட்டியில் சேகரிக்கலாம். மழை பருவத்திற்கு முன் கூரைகளை சுத்தம் செய்வதும், பொதுவாகவே கூரை, மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.

உறிஞ்சு குழிகள் (Percolation Pits):தற்போது நகரங்களில் அபார்ட்மெண்ட் கட்டிடங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி காம்பவுண்டு சுவர் வரை சிமெண்ட் தளங்கள் அமைத்து விடுவதால் அங்கு பெய்யும் மழை முழுவதுமாகவே பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள் மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் இவை முழுவதுமாக கடலில் சென்று கலந்து விடுகிறது.

இதை தவிர்த்து நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடங்களச் சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, அவற்றை கூழாங்கல், மணல் முதலிவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட 'சிலாப்'கள் கொண்டு மூடி விடலாம்.

இந்த முறையில் சுமார் ஒரு கிரவுண்டு (ஐந்தரை செண்ட்) இடத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி சுமார் 5 அல்லது 6 உறிஞ்சு குழிகள் அமைப்பது நிலத்தடி நீரின் அளவையும், தரத்தையும் உயர்த்த உதவும். சாதாரணமாக இவ்வாறு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்ட பின் அருகிலுள்ள வற்றிய கிணறுகளில் நீர் மட்டம் உயர 2 வருடங்கள் ஆகும்.

மகாத்மா காந்தி பிறந்த வீட்டில் மழை நீர் சேகரிக்கப்பட்ட முறை.போர்பந்தரில் (குஜராத் மாநிலம், இந்தியா) மஹாத்மா காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக வீட்டின் மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் இருபதாயிரம் காலன்கள் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில் மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி வந்தனர்.பருவ மழை தொடங்குமுன் மேல் தளங்களின் கூரையை கவனமாக கழுவி விடுவார்கள். இங்கு விழும் மழைநீர் குழாய்கள் வழியாக கீழே இறங்கி, குழாய் முனையில் சுண்ணாம்பினால் வடிகட்டி சுத்தம் செய்யப்பட்ட பின் கீழ்த் தொட்டிக்கு செல்லும். இந்த வீட்டில் தான் ஐந்து தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

Source : Center for Science and Environment, New Delhi

Thursday, 15 October 2009

Why are luxury watches so expensive?

 

I was reading an article over at Forbes the other day and wanted to share some of the information they wrote up.  It delas with the difference between a a watch that costs a couple hundrend dollars vs a watch that costs tens of thousands of dollars.

Most of the price of these watches deals with the hand finishing.


finishing a watch by hand

An appreciation of finishing is an insider passion even today. But a basic understanding of it can give the nonfanatic a new perspective on the price-value relationship of timepieces. Here are key points to remember.


Robotics have lowered the cost significantly for all luxury watches - A modern CNC cutter or spark- erosion machine can turn out parts that without further finishing can be assembled into high-precision micromachines. The 'bots make possible entry-level mechanical watches from Swatch, Seiko, Citizen, Orient, and Timex of a precision that would have been impossible at such a price point (often less than $500) a few decades ago.

Your watch is not more accurate from more finishing - Top-grade hand-finishing is really the connoisseur's delight--beauty in the eye of the beholder who knows how to recognize it.

Quality of finish and price tag don't always match - If a particular model becomes a collectors' darling (like the stainless steel Rolex Daytona chronograph), or if a brand is just plain hot, price follows suit, even if the watch has little or no hand-finishing.

Precious metals and gemstones (like diamonds) can quickly up the price - A machine-finished watch with one or both can cost more than one that is hand-finished. Rarity and peculiarities can make a watch expensive regardless of finishing.

Absent those factors, higher price means more finishing. A $12,000 watch, as a rule, has more hand-finishing than a $8,000 one.

At the high end, it's the finisseur. His painstaking work & skill bestows a pedigree price. A $1,000 chronograph with industrial finishing becomes a $25,000 one with hand-finishing.Above that, complication comes into play. At the very high end, it drives price as much as finishing.

Finally, finishing is a three-tiered cake: basic (robot), machine, and hand.
 1. Basic Finish - Mechanical watches that sell for less than $1,000 compose the base. They have little or no finish beyond that produced by the robots that manufacture the movement.
 2. Machine Finish - ($1,000–$12,000) are mechanical models with varying degrees of machine-executed decorative finish: attractive beveling, blued-finish screws, gleaming countersinks, and engraving. Watches at the upper end of this layer also have some hand-finishing.
 3. Hand Finishing ($12,000 and up) in the top tier starts to predominate. North of $20,000, you're getting the full-on haute treatment, horology's equivalent of haute couture. A premium-grade movement like Vacheron's caliber 1400, the caliber 215 from Patek, or the caliber 3120 automatic from Audemars Piguet, is a singular object: The hand-finishing means no two are exactly alike.

One of the top watch finisseurs in the world is Maik Pfeiffer, the gentleman who finishes Lange watches.  He actually used modified dentals tools to hand finish watches at Lange.  See a picture of him below at work.

Maik Pfeiffer is a finisseur, he is one of the best watch finishers and finishes Lange watchesWe understand why people ask,  "Why is a top-notch timepiece so expensive". But when you multiply the number of hours it takes to hand-finish just one part--more than half a day in some cases--by the number of components in the movement (easily 115 pieces in a Rolex watch) and then by the number of years it takes to learn how to finish a piece of metal the size of a fly antenna, it's easier to see how the price starts to add up. It's the hundreds of hours of niche expert human labor concentrated in a small universe on your wrist.

Wednesday, 14 October 2009

அறுவகைச் சுவை என்றால் என்ன என்ன??...

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

அறுவகைச் சுவைகள் இவையே:
1     இனிப்பு
2     கசப்பு
3     புளிப்பு
4     உவர்ப்பு
5     கார்ப்பு
6     துவர்ப்பு


இந்த சுவைகளின் பயன்களும் அவை அடங்கியுள்ள உணவுப் பொருட்களும் பார்க்கலாமா..!!!

இனிப்பு:
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாததைக் கூட்டும்.
உணவுப் பொருட்கள்:
உருளை, காரட், கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகள், கரும்பு போன்ற தண்டு வகைகளிலும் இச்சுவை உள்ளது.


புளிப்பு:
இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாததைக் கூட்டும்.
உணவுப் பொருட்கள்:
எலுமிச்சை,, புளிச்சக் கீரை,, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.


கசப்பு:
உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டுகிறது. சளியைக் கட்டுப்படுத்துகிறது.
உணவுப் பொருட்கள்:
பாகற்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.


உவர்ப்பு:
உடம்பின் ஊக்கத்தைக் குறைத்து ஞாபகச்க்தியைக் கூட்டும்
உணவுப் பொருட்கள்:
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய்,பீர்க்கங்காய் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.

கார்ப்பு:
 உடலுக்கு சூட்டைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளைக் கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
உணவுப் பொருட்கள்:
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


துவர்ப்பு:
இரத்தம் உறைவதைத் தடுக்கவல்லது.
உணவுப் பொருட்கள்:

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.


உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.
எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

உண்பது நாழி என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

Tuesday, 6 October 2009

நீங்கள் புகை பிடிப்பதால் ஏற்படும் உருப்புடாத 25 தீய நன்மைகள் !! ஒரு சமூக பார்வை..

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவுதான் நாம் எடுத்து சொன்னாலும் அதனால் எந்த பலனும் உண்டாகப்போவதில்லை. நம் அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக எதற்கு நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன (தீய)நன்மைகள் என்பதைப்பார்ப்போம்!  

1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு வயிறாரஉணவு கிடைக்கும்.
2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரிகளால் நாட்டுக்கு நன்மை.
3. (சென்னைகூவம் போல) நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.
4. கவலையேபடாதிர்கள்சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் நம்மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் என்ன குறையிருந்தாலும் நமக்கு ஒன்றும் பெரிதாக தெரியாது.
5. சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
6. சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி பிறநட்புகளை வளர்த்துக்கொள்ளலாம். அவ்வளவு ஏன் முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
7. எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது அதுவும்கூட தமிழ்நாட்டில் இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக மிக உதவியாக இருக்கும்.
8. சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் அடுத்த முறை புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
9. பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரேயொரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி நம்ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
10. சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சுலபமாக சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.
11. அதிகம் சிகரெட் பிடிப்பதால் கூடிய சீக்கிரமே நமக்கு முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . ஏன் பஸ்ஸில் கூட இடம் கிடைப்பது எளிது.
12. தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட அதுவே உதவும்.
13. இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வருவார்கள் என்ற பயமில்லை. தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.
14. வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
15. எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.
16. வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.
17. புகை பிடிப்பதால் கேன்சர் வந்து பிறகு நாம்படும் அவஸ்தையை பார்க்கும் நம்பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே தலைவைத்துப்படுக்காமல் நல்ல பிள்ளைகளாக வளர அதுவே உதவும்.
18. மிகவும் அத்தியாவசியமாக தேவை இருந்தாலொழிய யாரும் நம்அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.
19. சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்(கேடு)காலத்தை உருவாக்கித் தரலாம்.
20. வாழ்க்கையின் பிற்பகுதியில் டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் பணத்தை அள்ளி அள்ளி தந்து நாமும் வள்ளலாகலாம்.
21. சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து கின்னஸ் சாதனை படைக்கலாம்.
22. வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு தனியாகவேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.
23. மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.
24. சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.
25. நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

புகை திருக்குறள் 
இழுக்க இழுக்க இன்பம்தான்இழுத்தப்பின்

வேறு என்ன கேன்சர்தான்
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு தீய நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கடப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.

நன்றி : சக்கரை பீர்  என்ற சாதிக்.

ஆக்கம் மட்டும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Sunday, 4 October 2009

ஒரு ஏகத்துவ நம்பிக்கையாளன் சுவனத்தில் நுழைய வேண்டுமானால்விலை பொறுமை!

Image result for பொறுமைகனவுலக விளக்கம் கூறுகின்ற மமேதை இப்னு ஸீரின் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒருவர் தான் கண்ட கனவுக்கு விளக்கம் கேட்டார். "நான் தரையில் நீச்சலடிப்பது போலவும் இறக்கையின்றி வானத்தில் பறப்பது போலவும் கனவு கண்டேன். இதன் விளக்கம் என்ன?" என்று கேட்டார். பேரறிஞர் இப்னு ஸீரின் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்கள்: "நிறைவேராத வீணான கற்பனைகளில் மிதப்பவன்"
முயற்சிகள் அதில் ஏற்படும் சிரமங்களில் பொறுமை ஏதுமின்றி வெறும் கற்பனைகளில் திளைப்பவர்கள் இவனைப்போல் தான் கற்பனைவாதியாக இருக்க முடியும். தத்துவக்கவிதை ஒன்று இப்படி கூறுகிறது.
"அந்தஸ்து என்பது பேரித்தம்பழம் அல்ல. சுவைத்துத் தின்பதற்கு! பொறுமையைச் சுவைக்காமல் அதை அடைய முடியாது"
பதவியின் மீது மோகம் கொண்டு அலைந்த முத்னபீ பாடுகிரார்:
"எந்தத் தலைவனும் ஏற்றிடத்தயங்கும் கஷ்டங்களைத் தாங்குபவனே பதவியை அடைய முடியும்.
புத்திசாலிக்கும் தலைவனுக்கும் தவிர அது வாய்க்காது. கஷ்டம் ஏதும் இல்லையெனில் அனைவருமே தலைவராகி இருப்பார்கள் அல்லவா?
எல்லாவற்றையும் வாரி இறைப்பது வறுமையில் தள்ளிவிடும். நிதானமில்லாத வேகமான முயற்சி ஆளையே "காலி செய்துவிடும்". இதே முதனபீ இன்னொரு கவிதையில் தன்னிடம் பேசுகிறார்.
"மனமே என்னை விட்டுவிடு. யாருமே அடைந்திடாத உயர்வை நான் அடைய வேண்டும். கஷ்டங்களோடுதான் உயர்வை அடைய முடியும். எளிதான சிரமத்தில் எளிதான பதவியே கிடைக்கும்.
உயர்பதவியைப் பெறுவது எளிதென்று எண்ணுகிறாயா? தேனடை தேவையென்றால் தேனீக்களின் தீண்டுதல்களை தாங்கியே தீர வேண்டும்."பொறுமை இன்றி சிரமங்களைத் தாங்கிட இயலுமா? எனவே பொறுமைசாலிகள் அன்றி வேறொருவரும் உயர்வை அடைந்திடவே முடியாது.
லட்சியத்தின் திறவுகோல் பொறுமை தான். பொறுமை இருந்தால் எல்லாக் கஷ்டங்களும் எளிதாகும். நாட்கள் போனால் என்ன? காத்திரு. பொறுத்திரு. விலை போகாதவை கூட விற்றுத்தீரும். வாய்ப்பே இல்லை எனக் கூறப்பட்டவை கூட நிறைவேறும். அழிந்து போகும் இவ்வுலக வெற்றிக்கே இப்படி என்றால், என்றும் நிலைத்த நிரந்தர மறுமையின் வெற்றிக்கு பொறுமை எவ்வளவு அவசியம்?
ஒரு அறிஞர் கூறுகிறார்: "சுவனத்தில் நுழையவும் நரகத்தில் நுழைந்திடாமல் பாதுகாப்பு பெறவும் பொறுமை அவசியம். ஏனெனில் அண்ணல் நபி (ஸல்) கூறுகிறர்கள்: "சுவனம் வெறுப்புக்குரியவற்றால் வேலியிடப்பட்டுள்ளது. நரகம் இச்சைகளால் வேலியிடப்பட்டுள்ளது."
எனவே, ஒரு ஏகத்துவ நம்பிக்கையாளன் சுவனத்தில் நுழைய வேண்டுமானால் அறச் செயல்கள் புரியும்போது ஏற்படும் மனச்சங்கடங்களை பொறுமையுடன் ஏற்பது நரகினில் நுழையாமல் பாதுகாப்புப் பெற வேண்டுமானால் மன இச்சைகளை அடக்குவதில் ஏற்படும் சிரமங்களை பொறுமையுடன் சகித்துக் கொள்வதும் அவசியம்.
"மனிதர்களில் பெரும்பாலான குற்றங்கள் இரு வகையில் அமைகின்றன. விரும்புவதை அடைவதில் பொறுமை இழந்து (ஹராமில் விழுந்து) விடுவது. தடுக்கப்பட்டவைகளை விடுவதில் பொறுமை இழந்து (அதைச் செய்து) விடுவது" என்கிறார் ஒரு அறிஞர்.
மனிதனுக்குப் பொறுமை அவசியம். இறை நம்பிக்கையாளர்களுக்கு அது மிக அவசியம். மனிதன் படைக்கப்பட்ட விதம் பற்றியும் அவனைச் சுழ்ந்துள்ள பிரச்சனைகள் பற்றியும் குர்ஆன் இப்படிக் கூறுகிறது.
"(ஆண், பெண் இருவரின்) கலவையான இந்திரியத்திலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம் அவனை நான் சோதிப்போம்" (அல்குர் ஆன் 76:2)
மேலும் கூறுகிறது: நிச்சயமாக மனிதனை கஷ்டத்தில் (உழல்பவனாகவே) நாம் படைத்துள்ளோம். (அல் குர் ஆன் 90:4)
மனித வாழ்க்கை துன்பங்கள் கலந்த இன்பமாகவே உள்ளது. பருவ வயதை அடைந்தவன் அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பேணுவது என்ற அமானிதத்தாலும் விசாரணைக்குட்படுத்தப்பட்டவன் என்ற பொறுப்பாலும் சோதனைக்குள்ளாகிறான். அந்த அமானிதங்களை வானங்களும் பூமியும் கூட ஏற்க மறுத்தன. மேலும் சக மனிதனின் நாவினால் கரத்தினால் பொறாமையினால் ஏற்படும் சோதனையும் சந்திக்க வேண்டியுள்ளது.
சோதனை எல்லா மனிதர்களுக்கும் பொதுவான விஷயமாகிவிட்டது. ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றவர்களுக்கு அது இன்னும் கடுமையாக இருக்கிறது.
சுவனம் ஒரு வில உயர்ந்த பொருள். அதற்கென ஒரு வில உண்டு அந்த விலையைத் தராமல் அதை அடைய வேறு வழியில்லை. இதற்கு முன் இஸ்லாத்தின் அழைப்புக்குச் செவி சாய்த்தோர் அந்த விலையைத் தந்தனர். பின்னரும் வரும் சகோதரர்களும் தர வேண்டும். செல்வங்களில் சோதனை ஏற்பட்டு வறுமை வந்தாலும் உடல்கள் சோதனைக்குள்ளாக்கி வியாதியுற்றாலும் ஆன்மாக்கள் பாதிப்புள்ளாகி நிலைகுலைந்தாலும் பொறுமை காக்க வேண்டும். இதுவே சுவனத்தின் விலை.
நன்றி - சிந்தனை சரம் ஆகஸ்ட் 2005

Friday, 2 October 2009

மஸ்ஜிதுந்நபவிக்குச்சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ?

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ?
மதீனா முனவ்வராவுக்குப் பயணம் செல்லும் பெரும்பாலோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை ஹஜ்ஜூ வணக்கங்களில் ஒன்றாகவே கருதுகின்றனர்.

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்களைச் சார்ந்ததா? ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா? போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு இன்றும் எழுகின்றன. கேட்கவும் செய்கின்றனர்.

மதீனா ஸியாரத் என்பது ஹஜ்ஜூ நிறைவேறுவதற்குரிய கடமைகளில் ஒன்றல்ல. அதன் ஸூன்னத்தான ஒரு வணக்கமுமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

பின் எதற்காக அங்கே செல்ல வேண்டும் ?
‘தொழுவதற்காக’ என்ற எண்ணத்தில் (நிய்யத்தில்) மட்டுமே மஸ்ஜிதுன் நபவீக்குப் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
இந்த என் பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத்தவிர உள்ள ஏனைய பள்ளிவாசல்களில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு மேலானது. (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)

மேலும் தெரிவித்துள்ளார்கள்:
மூன்று பள்ளிவாசல்களுக்கே தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக்கூடாது. ஒன்று (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம். மற்றொன்று (மதீனாவிலுள்ள) எனது பள்ளிவாசல். புpறிதொன்று (ஜெரூஸலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் பள்ளிவாசல்.
இந்த இரு நபிமொழிகளின் மூலம் 'மூன்றே முன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அதுவும் நன்மையை நாடி, தொழுகை என்னும் வணக்கத்தை நிறைவேற்றுதற்காகவே செல்ல வேண்டும். ஸியாரத் செய்யும் நோக்கத்துடன் அல்ல’ என்பது தெளிவாகிறது.

இதிலிருந்து ’ஹஜ்ஜூக்கு முன்னரோ பின்னரோ மதீனா ஸியாரத்துக்குச் செல்வது ஹஜ்ஜூக் கடமையைச் சார்ந்ததல்ல’ என்பதையும் ‘ஹஜ்ஜூக்கும் இதற்கும் தொடர்பில்லை’ என்பதையும் நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.

மஸ்ஜிதுந்நபவிக்குச் சென்றால் நமது கடமைகள் என்னென்ன?

1. மஸ்ஜித் நபவியில் தொழுவதுஏனைய பள்ளி வாசல்களில் கடைப் பிடிப்பதையே இங்கும் கடைப் பிடிக்கவேண்டும்.

2. வலது காலை முன்வைத்து உள்ளே நுழைய வேண்டும். உள்ளே செல்லும்போது ‘ பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி, அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க’ என்ற துஆவை ஓதவேண்டும்.

3. பின்னர் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜிது தொழவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) , ஆதாரம் : புகாரி-1163)

உள்ளே சென்றதும் ஃபர்ளான தொழுகைக்கு ஜமாஅத் ஆரம்பிக்கப் பட்டு விட்டால் நேராகச் சென்று அதில் சேர்ந்து கொள்ளவேண்டும்.

அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?

2. ஸியாரத் செய்வது.
தொழுகை முடிந்ததும் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கும் அவர்களின் அருகே அடக்கமாயிருக்கும் அவர்களின் இரு தோழர்களான அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரின்ன் இரு கப்ருகளுக்கும் சென்று ஸலாம் சொல்வது முஸ்தஹப்- விரும்பத் தக்கதாகும்.

எவ்வாறு ஸலாம் சொல்ல வேண்டும்?
"அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ!" என்று நபி (ஸல்) அவர்களுக்கும், அடுத்து, அங்கு அடங்கப் பட்டிருக்கும் அவர்களின் தோழர் அபூபக்ரு அவருகளுக்கு,  "அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்கருஸ் ஸித்தீக் கலீஃபத்த ரஸூலில்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ !" என்றும், அடுத்து "அஸ்ஸலாமு அலைக்க யா உமர் ஃபாரூக் கலீஃபத்த ரஸூலில்லாஹி,  வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ!" என்று உமர் (ரலி) அவர்களுக்கும் ஸலாம் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பிவிட வேண்டும்.

பெருமானார் (ஸல்)அவர்களின் ஒவ்வொரு செயலையும் வழிமுறைகளையும் அணுவளவும் பிசகாது பின்பற்றிவந்த அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்துள்ளார்கள் என்பதை ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களிலே காணமுடிகிறது.
இதுவே ஸியாரத் செய்யும் முறையாகும்.

அங்கே நீண்ட நேரம் நிற்பதோ, அவர்களிடம் துஆ கேட்பதோ, குரலை உயர்த்திக் கோரசாக துஆக்களை ஓதிக்கொண்டிருப்பதோ கூடாது.
கிப்லாவை முன்னோக்கி நமது தேவைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும்.

அங்கே ரவ்லாவுக்கருகே நின்று தொழுவதோ, தொட்டு முத்துவதோ கூடாது.
ஸியாரத்தின் நோக்கம் - நினைவிற் கொள்க!

1. மதீனா ஸியாரத் ஹஜ்ஜூக் கடமைகளில் ஒன்றல்ல.
2. பெருமானார் (ஸல்) அவர்களின கப்ரை ஸியாரத் செய்யும் நோக்கத்தை முன்வைத்து அங்குச் செல்வது கூடாது.
3. தொழுவதற்காகவே செல்லவேண்டும்.
மஸ்ஜிதுத் தக்வா-குபா பள்ளி வாசலில் தொழுவது
அடுத்தபடியாக, மதீனாவுக்கு வந்திருப்போர் மஸ்ஜிது குபாவுக்குச் சென்று தொழுவது நபி வழியாகும். இது, "தக்வா அடிப்படையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல்" என்று இதற்கு ஓர் அங்கீகாரத்தையும் வழங்கி இறைவன் சிறப்பித்துள்ளான். (குர்ஆன்:9:108).

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"யார் தமது வீட்டில் உளுச் செய்துவிட்டு, பின்னர் குபா பள்ளிவாசலுக்கு வந்து இரு ரகஅத்துகள் (இன்னொரு அறிவிப்பில் ஒரு தொழுகையை) தொழுகிறாரோ அவருக்கு ஒரு உம்ரா செய்த நன்மைகிடைக்கும்"(ஆதாரம்:அஹ்மது,நஸயீ,அப்னுமாஜா,ஹாக்கிம்)

நபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமை தோறும் வாகனத்திலோ, கால்நடையாகவோ இங்கு வந்து செல்வார்கள்.
ஜன்னத்துல் பகீஃ, உஹது ஷுஹதாக்களை ஸியாரத் செய்வது.
நபி (ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று ஸியாரத் செய்து அவர்களுக்காக துஆ செய்து வருவார்கள்.

நபி (ஸல்) அவர்கள், மக்கள் கப்ருகளுக்குச் செல்வதன் நோக்கத்தைப் புரியாமலிருந்ததால் ஆரம்பத்தில் தடை செய்திருந்தார்கள். பின்னர் அதற்கு அனுமதி வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"கப்ருகளுக்குச் சென்று ஸியாரத் செய்வதை தடை செய்திருந்தேன். இப்போது (அதன் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொண்டதால்) ஸியாரத் செய்து வாருங்கள்" ஆதாரம்: முஸ்லிம்.

கப்ருகளுக்குச் சென்றால் எவ்வாறு ஸியாரத் செய்வது.? அங்கு என்ன செய்யவேண்டும் ? என்பதை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு மிகத் தெளிவாகவே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

ஃபாத்திஹா ஓதச் சொல்லவில்லை. யாஸீன் ஓதச் சொல்லவில்லை. 

இறந்தவர்களிடம் துஆ கேட்கச் சொல்லவில்லை. பின் என்ன சொன்னார்கள் ?
பின் வரும் துஆவை மட்டும் ஓதச் சொன்னார்கள்:-

‘அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன்! வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியா’ - ஈமான் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து அடக்கமாகியிருக்கும் நல்லடியார்களே! நிச்சயமாக விரைவில் நாங்களும் (மரணமடைந்து) உங்களோடு சேரவிருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் நன்மையை வழங்க அல்லாஹ்வை வேண்டுகிறோம். ஆதாரம்: முஸ்லிம்.
இதைத்தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. பாத்திஹா ஓதுவதோ, யாஸீன் ஓதுவதோ, நேர்ச்சை நேருவதோ, இறந்தவர்களிடம் துஆ கேட்பதோ கூடாது.
இதையடுத்து உஹது சுஹதாக்களின் கப்ருகளுக்குச் சென்று இதைப்போன்றே ஸியாரத் செய்யவேண்டும்.

செய்யக் கூடாதவை:-
1. ஆண்களுக்கு மட்டுமே ஸியாரத் அனுமதியே தவிர பெண்களுக்கல்ல.
2. நமது தேவைகளுக்காக நபிகள் நாயகத்திடம் பிரார்த்திப்பது கூடாது.
3. கப்ரு திசையை நோக்கிப் பிரார்த்திப்பதும் கையை உயர்த்துவதும் கூடாது.
4. அங்கே நீண்ட நேரம் நிற்பதும் கூடாது.
5. அங்கு நுழையும்போதோ, உள்ளே சென்ற பிறகோ குறிப்பிட்ட துஆக்கள், விசேச துஆக்கள் ஓதவேண்டுமென்பது எதுவும் கிடையாது.
6. கூட்டாக (கோரஸாக) துஆ ஓதுவதும் கூடாது.
7. ஒவ்வொரு முறையும் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் கப்று ஸியாரத் செய்யவேண்டும் என்பதும் கிடையாது.
8. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கப்று ஸியாரத் என்பதும் இல்லை.
9. பெருமானாரின் கப்ருக்கருகே (மட்டுமல்ல; எந்தக் கப்ருக்கருகிலும்) தொழுவது கூடாது.
10. மிஹ்ராபில் தொழவேண்டும் என்பதும் அங்கே முண்டியடித்துக் கொண்டு தொழுவதும் கூடாது.
11. ரவ்லா தூண்களின் எல்லைக்குள்தான் தொழுது தீரவேண்டும் என்பதும் கிடையாது.

அங்கே எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இந்த இரு இடங்களிலும் தொழுவதற்காக மக்கள் முண்டியடித்துக் கொள்வதையும் தாமும் சரிவரத் தொழாது பிறரையும் தொழவிடாது சிரமப்படுத்தும் செயல்களையும் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பிறருக்குத் துன்பம் விளைவிப்பது ஹராமாகும். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு ஹராமைச் செய்ய வேண்டுமா? நாம் சிந்திக்கவேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டதும் கை நகம் தொட்டு முத்தி நுகர்ந்து கண்களில் ஒற்றிக் கொள்வதும் மார்க்கத்தில் அனுமதி கிடையாது.வேறு ஸியாரத் செய்யவேண்டிய முக்கியமான இடங்கள் ஏதேனும் உண்டா? என்றால் எதுவும் இல்லை.

Courtesy: http://albaqavi.com/home/?p=701
               http://www.satyamargam.com/1359

by Dr. Ahmad Baqavi PhD

இந்த கட்டுரைக்கு பதியபெற்ற ஒரு கருத்துபரிமாற்றம் உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும்
மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றென்று பெரும்பாலானவர்கள் எண்ணாவிட்டாலும் இன்று நமது நாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்பவர்களில் அதிகமானோர் வழிகேட்டைப் பின்பற்றுபவர்களாக இருப்பதனால் ஹஜ்ஜை விட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுரை ஸியாரத் செய்வதை முக்கியமான ஓர் அமலாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரே ஒரு கதையை இங்கு மேற்கோள் காட்டியுள்ளேன். வாசித்துச் சிந்தித்தால் நம்மில் அநேகமானோர்களின் நம்பிக்கையின் தன்மை என்ன என்பது நிதர்சனமாகத் தெரியும்.
இது ஹஜ்ரத் மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது ஜகரிய்யா சாஹிப் குத்திஸ ஸிர்ருஹு என்றவர் எழுதிய 'ஹஜ்ஜின் சிறப்பு' என்ற புத்தகத்தில் - மன்னிக்கவும் - கிதாபில் 210ம் பக்கத்தில் 4) ல் உள்ள கதை.
இனி கதையை வாசிப்போம்:
4) ஹஜ்ரத் ஹஸன் பஸ் ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். பிரபல் சூபி மஹான் ஹஜ்ரத் ஹாத்திம் அஸம் பல்கி (ரஹ்) அவரகள் முப்பது வருடங்கள் ஒரு தனி மாடத்தில் (தனித்து) சில்லா இருந்தார்கள். அவரகள் தேவையில்லாமல் எவருடனும் பேசியதில்லை. அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீபின்முன் ஆஜரான போது "யா அல்லாஹ்! நாம் உன்னுடைய ஹபீப் முஹம்மது (ஸல்) அவர்களின் கப்ரில் ஜியாரத்திற்கு பிரசன்னமாகியுள்ளோம். நீ என்னைப் புறக்கணித்து விடாதே!" என்று மட்டும் பிரார்த்தித்தார்கள்; மறைவிலிருந்து ஓர் அசரீரி சப்தம் கேட்டது. "நாம் உமக்கு எமது ஹபீப் (ஸல்) அவர்களின் கப்ரின் ஜியாரத்தின் நஸீபை அளித்ததே அதனை ஏற்றுக் கொள்வதற்காக வேண்டியே. செல்லும், நாம் உம்முடையவும் உம்முடன் உள்ள அனைவருடையவும் மஃபிரத் செய்து விட்டோம்!" (ஜர்கானி அலல் மவாஹிப்)

கதை கேட்டீர்களா!!! இந்தக் கப்ஸாக்கள் நிறைந்த புத்தகங்கள்தான் நமது பள்ளிகளிலே குர்ஆனை விடவும் கண்ணியமும் மரியாதையும் கொடுத்து வாசிக்கப் படுகின்றன! இவ்வாறான வழிகேட்டின் கதவுகளை அல்லாஹ்வின் மஸ்ஜித்களிலிருந்து உடைத்தெறியாத வரை அனாச்சாரங்களை மார்க்கமாக நம்பும் மக்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
மஸ்ஜித்களிலிருந்து இவ்வாறான குப்பைகள் எடுத்தெறியப்பட வேண்டும்..

http://www.satyamargam.com/1359