Thursday, 31 October 2013

இந்தியாவின் இலவசக்கல்வி முறை சரிதானா? ஒரு சிறப்பு பார்வை...

இந்திய  மட்டும்  மாநில அரசுகள்  மக்களிடம் ஒட்டு வந்குவதர்க்காஹ   இலவசமாய் அரிசி கொடுக்கிறார்கள், 100 நாள்  வேலை என்ற பெயரில் பணம் ,தொலைக்காட்சி பெட்டி, மிக்சி, கிரைந்தர்,  தவிர சாப்பாடும் போடுகிறார்கள். இதெல்லாம் விட்டு இலவசமாய் கல்வி கொடுத்தால் என்ன கேடு வந்துவிடும்.
உலகில் அனேக நாடுகளில் அனைவருக்கும் கல்வி, மின்சாரம், மருத்துவம் இலவசமாக உள்ளது . ஆனால் இங்கு 
அனைவருக்கும் கல்வியும் மருத்துவமும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று ஒரு அரசியல் வாதிக்காவது தோன்றுமா?  ஒவ்வரு ஐந்தாண்டு திட்டதிலும் கல்விக்குபணம் ஒதுக்குவார்கள் . அது  நம்மளை  அடைவது இல்லை. கடந்த 2006ம்  ஆண்டில் கல்விக்கு Cess என்று ஒன்று  போட்டார்கள். என்ன ஆயிற்று அந்த பணம்? யாருக்காகவாது இலவசக்கல்வி கொடுப்பார்களா? கொடுத்தார்களா?.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போனால் Donation என்றும் வருடாந்திர கட்டணம் என்று இன்றும் கொடுக்கவேண்டி இருந்தது. இன்றும் இருக்கும். ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டுமென்றால் கட்டாயம் கொடுக்க வேண்டும். அங்கேயே பிரிவினை. காசுள்ளவன் ஆங்கிலம் படிப்பான் காசில்லாதவன் தமிழ் படிப்பான் என்று. அரசாங்கப்பள்ளிகளிலேயே இந்த நிலைமை.

எனக்கு தெரிந்து என் நண்பனின் அம்மா வீட்டு வேலை செய்து தான் படிக்கவைத்தாள். அவளிடம் ஆயிரம் ரூபாய் இல்லை. அதற்காக நாயாய் பேயாய் அலைந்து அந்த தாய் பணம் கட்டியது இன்றும் நினைவில் நிற்கிறது. கொடுமை என்னவெனில் மற்ற செலவுகளுக்கு அந்த அம்மா தலைமை ஆசிரியர் வீட்டிலேயே வேலை செய்து தான் 2 வருடம் மேல்நிலைக்கல்வி படிக்கமுடிந்தது என் நண்பனால்.
வியாபாரக் கல்வி, இட ஒதுக்கீட்டுக் கல்வி( பணம், சமூகம்) என்று என்ன என்ன வழி உண்டோ அவ்வளவிலும் பிரிந்து தான் கிடக்கிறோம். எல்லோரும் மறந்துவிடும் மற்றொரு பிரிவினை வட்டார அளவில் கல்வி. வடநாட்டு மக்களை கேளுங்கள், பாரதியாரை தவிர உருப்படியாய் ஒரு தமிழ்நாட்டு சுதந்திர போராட்டவீரர் பேர் தெரியாது.


அடுத்தது இந்த கல்வித்திட்டப்பிரிவினை. CBSE படித்தவனுக்கு IIT entrance சுலபம். மாநிலக்கல்வி படித்தவனுக்கு பொறியியல், மருத்துவம் சுலபம் என்று குழப்படியான கல்வி முறை. இதில் ஆங்கிலோ இந்தியன் என்று கல்வி முறை வேறு. தமிழ், ஊறுகாய் மாதிரி அந்த கல்வி முறையில் இருக்கிறது.
சுதந்திரம் வாங்கி 65 வருடம் ஆகிறது இன்னும் என்ன ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை. இதில் படித்த ஒரு நண்பனுக்கு தமிழ் படிக்க வராது. நம்பினால் நம்புங்கள், ஆங்கிலோ இந்தியன் கல்வி படித்த அவனால் ஒரு கட்டுரையோ கவிதையோ தமிழில் படிக்க இயலாது. நான் மிகவும் வருந்தி சொன்னதன் பேரில் பல முறை புத்தகத்தை திணித்து படி படி என்று படுத்தியதின் பேரில் என்னை திருப்திபடுத்த பொன்னியின் செல்வன் படித்தான் அவன், ஆங்கிலத்தில். ஆங்கிலத்தில் பொன்னியின் செல்வன் படித்த ஒரே(எனக்குதெரிந்து) தமிழன் அவனாகத்தான் இருக்கும். ஷேக்ஸ்பியரிலும் ஷெல்லியிலும் வித்தகன் அவன். என்ன மாதிரியான் ஒரு கல்வி முறை இது?  


அதற்கு நேர் எதிராக கிராமத்தில் எனக்கு மற்றொரு நண்பன். ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராது. கடைசியில் ஆங்கில தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்று காவல்துறையில் ரிப்போட்டராக போக வேலை கிடைத்த போது ஒரு முழு லிப்கோ அகரமுதிலியை நாம் பாட புத்தகம் படிப்பது மாதிரி படித்தான். ஏதாவது பக்கத்தை பிரித்து ஏதாவது சொல்லைக்கேள் அர்த்தம் சொல்கிறேன் என்று படுத்தி இருக்கிறான். 


ஒரு ஒழுங்குபட்ட கல்வி முறை இல்லை இதனால் பாதிக்கப்படுவது எல்லோருமே தான். ஏழைகளுக்கும், கிரமத்தானுக்கும் தமிழைவிட்டால் நாதி இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கு தெரிந்து பல பேர் நல்ல ஆங்கில அறிவில்லாத்தால் நேர்முகத்தேர்வில் தோற்றவர்கள் அதிகமாக  இருக்கிறார்கள். என்ன ஒரு குழப்படியான செயல்திட்டம் இது.


வருடம் போய் வருடம் வந்தால் படித்த மாணவர்களின் வேலை இல்ல திண்டாட்டம் ஒருபுறம், கல்லூரிகள் அதிகளவு  உள்ளதால் தொளில்நுட்ப அறிவு குறைவவே காணப்படுகிறது.மேலும்  
ஒரு மராட்டிய மாநில கல்வி முறையில் 60 மதிப்பெண் வாங்கியவனையும் தமிழ்நாட்டில் 60 மதிப்பெண் வாங்கிவனையும் ஒரே நிகரில் வைக்கமுடியுமா? முதலில் எந்த சிஸ்டத்தில் படித்தவன் என்று கேள்வி அல்லவா வருகிறது!!! கல்லூரிகள் வியபரமாக்கபடுவதால் ஒவ்வொரு மாநிலத்திலும் , பொறியியல் கல்லூரிகள்  மதிப்பு குறைந்து காணப்படுகிறது.


இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம், ஒரே கல்லூரி நுழைவு முறை என்றல்லவா இருக்கவேண்டும். அப்படி இருந்தால் என்ன மாறிவிடும். அதில் சாதகம் என்ன, பாதகம் என்ன? வெறும் கேள்விகளாய் இருக்கிறதே அன்றி பதில் தான் இல்லை...Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன?


எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)
அப்போது ஒரு மாணவர் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...
மாணவர் : இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.
ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?
மாணவர் : சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.
ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.
மாணவர் : ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.
ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.
இருப்பினும் மாணவர் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து மாணவர் வகுப்பில் உள்சென்றார்
இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.
மாணவரின் தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். மாணவரின் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணி மாணவரிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற மாணவர் எழுத வேண்டும்.
அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் மாணவரை நெருடியது. அவ்வாக்கியம்,
ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.
இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக மாணவருக்கு நினைவுக்கு வர, தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினான்.
பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.
அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.
இந்த விளக்கம் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். மாணவரும் சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டான் . அதற்கு தாத்தா கூறிய வார்த்தைகள் தான் மாணவர் மிகவும் பாதித்தது.
அவ்வார்தைகள்.....
உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ....
ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைவோம் .
ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???
பண்டைய கனிதம் இன்றும் நமக்கு வியப்புதான்,இன்றும் சிவற்றை நம்மைவிட விரைவாக அவர்கள் விடையம் விரைவாக துள்ளியமாக இருப்பதை பார்க்கிறோம் ,அவர்கள் கணிதம் அன்றாட வாழ்கைக்கு ஏதுவானதாக இருந்த்து இன்றைக்கு பயிற்றுவிக்கப்படுபவை......
இதைதான் ஏடு சுரைக்காய் கறிக்கு உதவாது !!கற்று தரும் வாத்தியார் தனக்கு தெரியாத விஷயத்தைக் மாணவர் கேட்டால் அதட்டி மக்கு என சொல்லி உட்கார் என்பார் இதில் யார் மக்கு ???
எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????வாத்தியா௫க்கு புரியாத/தெரியாத கணக்கு நம் முன்னோர்களுக்கு தெரியுமல்லவா?
உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன?

சிந்தியுங்கள் நண்பர்களே???
*நாகரீகம். அறிவியல் மற்றும் சமூகஅறிவியலில் மேம்பட்டு வாழ்ந்த சமூகம் மேலைநாட்டு கலாச்சாரத்தை தூக்கிப்பிடிப்பதை பெருமையாகக் கொள்ளும்போது இங்கிருந்து திருடிச்சென்ற்வறை தங்களது சொத்தாக அறிவித்துக்கொண்டனர் மேலைநாட்டினர் எத்தனையோ நூற்றாண்டுகளாக நாகரீகமற்றவர்கள் இந்தியாவுக்கு வந்தேறியபிறகுதான் அணைத்தையும் கண்டறிந்துள்ளனர் உதாரணமா வீரமாமுணிவர் எண்ற ஐரோப்பியர் தமிழில் உள்ள விஷயங்களில் ஏற்ட்ட ஆர்வத்தால்தான் தமிழறிஞர் ஆக மாறிணார். இப்போது உள்ள கல்வி முறை ஆங்கிலேயர்கள் நம்மை சிந்திக்க விடாமல் நம்மை அடிமையாக அலுவலக உதவியாளர் பணிக்கு தயார் படுத்திட உருவாக்க பட்ட பாடத்திட்டம் தான் இன்றைய போதனை வழி கல்வி முறையும்,**புரிந்து கொள்ளாத மொட்டை மனப்பாட கற்றல் முறையும்.*

Tuesday, 29 October 2013

தலைபாரம், தும்மல், மூக்கடைப்பை போக்க புதிய வைத்தியம் காட்டுக்கடுகு (canola) !! ஒரு தவகல்...


குளிர்காலம் ஆரம்பித்ததும் பலருக்கு மூக்கடைப்பு, தும்மல், மூக்கு ஒழுகல் என ஒவ்வொரு உபாதைகளாக தோன்ற ஆரம்பிக்கும். பெரும்பாலானோருக்கு குளிர்காலத்தில் தலைக்கு குளிப்பதே பெரும் போராட்டம் ஆகிவிடும். தலைக்கு குளித்தால் தலைபாரம், தும்மல், மூக்கடைப்பு என பல சிரமங்கள் உண்டாகும். குளிக்காமலும் இருக்க முடியாது. பை  போக்க  புதிய வைத்தியம் 

விலங்குகளின் மூக்கு பாதை சற்று நீளமானது. ஆகையால் அவற்றிற்கு அடிக்கடி சளிப் பிடிப்பதில்லை.மனிதர்களின் தலை எலும்பு பரிணாம வளர்ச்சி காரணமாக அழகாக அமைந்திருந்தாலும் கூட குறுகிய மூச்சுப் பாதை காரணமாக அடிக்கடி சளித்தொ�ல்லைக்கு ஆட்படும் வாய்ப்பு ஏற்படுவதாக உள்ளது.
அதே நேரம் மூக்குப்பாதையின் இரண்டு புறங்களிலும் உள்ள கபால என்பு குழிவுகள் தூசிகள் உள்ளே நுழையா வண்ணம் பாதுகாப்பதுடன் தலையில் நீரும், நுண்கிருமிகளும் சேரா வண்ணம் தடுப்பதுடன் தலையில் பாரம் ஏறிவிடாமல் பாதுகாக்கின்றது. இவைகள் சைனஸ் அறைகள் என்ற அழைக்கப்படுகின்றன.
வெறும் காற்று மட்டுமே நிறைந்திருக்கும் இந்த சைனஸ் அறைகளில் நீரும் சேரும் பொழுது தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு போன்ற பல தொல்லைகள் உண்டாகின்றன. ஒவ்வாமையின் காரணமாகவும் ஏற்படும் இந்த சளித்தொல்லையானது கபால நீர் என எளிய வார்த்தைகளால் அழைக்கப்படுகிறது.
மூக்கின் இரண்டு புறம், மூக்குப்பாதை, நடுநெற்றி, காதின் இரண்டு பக்கங்கள் மற்றும் மண்டையோட்டின் பின்புறம் என அமைந்துள்ள இந்த கபால அறைகளில் காற்றுக்கு பதிலாக நீர் தேங்கும் பொழுது மண்டைக் கனம் அதிகரித்து, தலைபாரம் ஏற்படுகிறது.
தேங்கிய கலாப நீரில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளின் தொற்று ஏற்படும்போது மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல், சுரம் போன்ற உபாதைகள் உண்டாகின்றன. கபால அறையில் தங்கியுள்ள நீரை வெளியேற்றாவிட்டால் கிருமித்தொற்று அதிகரித்து பார்வை மங்கல், காது மந்தம், குறட்டை, தொண்டைக் கட்டு போன்ற தொடர் உபாதைகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. கபால அறைகளில் தங்கியுள்ள நீரை வெளியேற்ற தைல
மர இலை, நொச்சியிலை, வேப்பிலை ஆகியவற்றை கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். விராலி மஞ்சல், ஊமத்தன்பூவிதழ்களை சுட்டு அதன் புகையை உள்ளிழுக்கலாம்.
சுக்குத்தூள், சாம்பிராணித்தூள், கஸ்தூரி மஞ்சள்தூள் போன்றவற்றை வெந்நீரூடன் குழப்பி நெற்றி, மூக்குப் பகுதிகளில் பற்று போடலாம். இவற்றிலும் கட்டுப்படாத கடினமான கபால நீரை வெளியேற்ற உதவும் மூலிகை தான் காட்டுக்கடுகு, நாய்க்கடுகு என்ற பல பெயர்களில் அழைக்கப்படும் நாய்வேளை.
கிலியோம் ஐகோ�ன்டிரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட கெப்பாரிடேசியே குடும்பத்தைச் சார்ந்த காட்டுக்கடுகின் இலைகளில் டைபெர்பின்கள், கிலேயோமார்டிக் அமிலம், கௌமாரினோலிக்னான்கள், கிலியோமிசிக்கோசின் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்கிருமிகளை எதிர்க்கும் வல்லமை படைத்துடன், வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையவை.

நாய்க்கடுகு இலைகளை நன்கு மைய இடித்து, பிழிந்து, சாறை நீக்கி விட வேண்டும். நீர்ச்சத்து நீங்கிய இலைகளை மட்டும் உச்சந்தலையில் வைத்து அதன் மேல் உலர்ந்த வெள்ளைத் துணியை தலைப்பா போல் இறுகக் கட்டி 15 நிமிடங்கள் வைத்திருந்து இலைகளை வெளியே எடுத்து, நீரை பிழிந்து, நீக்கிவிட வேண்டும். இவ்வாறு தலையில் ஏறிய நீர் இறங்கும். அதுமட்டுமின்றி இலையை லேசாக வதக்கி வெநீநீர் விட்டு அரைத்து சற்றும் மஞ்சள் தூளுடன் குழப்பி நெற்றியில் பற்று போட தலைவலி, தலைபாரம் நீங்கும்.

மேலும் அறிய :
 http://en.wikipedia.org/wiki/Canola
http://www.uscanola.com/what-is-canola/
http://www.stylecraze.com/articles/amazing-health-benefits-of-canola-oil/
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 24 October 2013

நமது நிலத்தடி நீரை அதிகரிக்கும் பிளாஸ்டிக் சாலைகள்!! ஒரு சிறப்பு பார்வை...

நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையிலான பிளாஸ்டிக் கலந்த, கான்கிரீட் சாலைகள் அமைத்து, அந்த சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளது நெதர்லாந்து நிறுவனம். நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் தான் இந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் 25,000 வீடுகள் உள்ளன. குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில், நீரை எளிதில் உறிஞ்சும் வகையிலான கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. துளைகள் கொண்ட, பிளாஸ்ட் கலந்த கான்க்ரீட் டைல்ஸ் கொண்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் ஒரே நேரத்தில் சுமார் 4000 லிட்டர் தண்ணீரை ஊற்றி சோதனை செய்யப்பட்டது. 4000 லிட்டர் தண்ணீரும், நீர் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் ஒரு நிமிடத்தில் நிலத்திற்கு அடியில் சென்றுள்ளன. 


குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் கேரி பேக், டீ கப், தெர்மாகோல், ஆவின் கவர், சோப்புத் தூள் அடைக்கப்பட்ட பிளாஸ் டிக் கவர்கள் ஆகிய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படும். இவை அனைத்தும் இயந்திரத் தின் மூலம் 2 முதல் 3 மி.மீ. அளவிற்கு துகள் களாக மாற்றப்படும். இந்த துகள்கள் மிக்சின் மிஷினில் போட்டு கருங் கல் ஜல்லியுடன் கலக்கி சூடாக்கப்படும். இத்து டன் தார் கலவை கலந்து சாலை அமைக்கப்படும். இப்படி அமைக்கப்படும் சாலை தரமானதாகவும், பராமரிப்பு செலவு குறை வானதாகவும், நீண்ட காலம் நீடித்தும் இருக்கும்.
துளைகள் கொண்டதால் அமைக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்படுவதுடன், நிலத்தரி நீர்மட்டம் எளிதில் உயரும் வகையில் திட்டமிட்டு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் எவ்வளவு தண்ணீர் கொட்டினாலும் சேதமடையாத வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை சேதமடைந்தாலும், இந்த பிளாஸ்டிக் சாலைகளை எளிதில் சீரமைத்து விடலாம் எனவும் இந்த சாலையை வடிவமைத்த நிறுவனத்தினர் உறுதிபட கூறுகின்றனர். சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து இந்த பிளாஸ்டிக் சாலைகளை குறைந்த செலவில் அமைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
நிலத்தடி நீரை உயர்த்தும், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை ரோட்டர்டம் பெற்றுள்ளது. இந்த சாலை குறித்து இதை அமைத்த வோல்கர்வெஸ்லஸ் நிறுவனம் கூறுகையில், நமது வழக்கமான சாலை அமைக்கும் பணிகள், பராமரிப்பிற்கு கடினமானதாக இருந்தது. மேலும் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியதாக இல்லை. ஆனால் இந்த பிளாஸ்டிக் சாலைகள் மிக லேசானதாக இருப்பதால், நிலத்திற்கு அதிக பாரத்தை தராது. இதில் உள்ள துளைகளை பயன்படுத்தி கேபிள்கள் மற்றும் பைப்களை நிலத்திற்கு அடியில் எளிதில் பதிக்க முடியும். கழிவுநீர் குழாய்களும் இதற்கு அடியில் அமைக்கப்படுவதால் நிலத்தின் நீர்மட்டம் உயர வழிவகை செய்யும்.
நகர்புறப்பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். இதனால் தட்பவெப்பமும் குறையும். தட்வெப்ப மாற்றத்தையும் இந்த சாலைகள் தாங்கக் கூடியவை. இதனால் மழை அளவும் அதிகரிக்கும். நிலத்தில் எளிய முறையில் அதிக அளவிலான நீர் சேமிக்கப்படுவதால், சுற்றுச்சூழலும் குளுமையாக இருக்கும். இந்த கான்கிரீட்கள் 60 ஆண்டுகள் வரை கூட சேதமடையாமல் இருக்கும் என கூறுகின்றனர்.

 சென்னையில் 1498 உட் புற சாலைகள், பேருந்து கள் செல்லும் சாலைகள் 118 என 1616 சாலைகள் 1104 கி.மீ. தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகளாக ஆக்கப்படவுள்ளன. மிகவிரைவில் குப்பை யில்லாத, மழைநீர் தேங் காத சென்னையாக உரு வாக்கப்படும். 


 தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.