Thursday 24 October 2013

நமது நிலத்தடி நீரை அதிகரிக்கும் பிளாஸ்டிக் சாலைகள்!! ஒரு சிறப்பு பார்வை...

நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையிலான பிளாஸ்டிக் கலந்த, கான்கிரீட் சாலைகள் அமைத்து, அந்த சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளது நெதர்லாந்து நிறுவனம். நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் தான் இந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் 25,000 வீடுகள் உள்ளன. குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில், நீரை எளிதில் உறிஞ்சும் வகையிலான கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. துளைகள் கொண்ட, பிளாஸ்ட் கலந்த கான்க்ரீட் டைல்ஸ் கொண்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் ஒரே நேரத்தில் சுமார் 4000 லிட்டர் தண்ணீரை ஊற்றி சோதனை செய்யப்பட்டது. 4000 லிட்டர் தண்ணீரும், நீர் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் ஒரு நிமிடத்தில் நிலத்திற்கு அடியில் சென்றுள்ளன. 


குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் கேரி பேக், டீ கப், தெர்மாகோல், ஆவின் கவர், சோப்புத் தூள் அடைக்கப்பட்ட பிளாஸ் டிக் கவர்கள் ஆகிய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படும். இவை அனைத்தும் இயந்திரத் தின் மூலம் 2 முதல் 3 மி.மீ. அளவிற்கு துகள் களாக மாற்றப்படும். இந்த துகள்கள் மிக்சின் மிஷினில் போட்டு கருங் கல் ஜல்லியுடன் கலக்கி சூடாக்கப்படும். இத்து டன் தார் கலவை கலந்து சாலை அமைக்கப்படும். இப்படி அமைக்கப்படும் சாலை தரமானதாகவும், பராமரிப்பு செலவு குறை வானதாகவும், நீண்ட காலம் நீடித்தும் இருக்கும்.
துளைகள் கொண்டதால் அமைக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்படுவதுடன், நிலத்தரி நீர்மட்டம் எளிதில் உயரும் வகையில் திட்டமிட்டு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் எவ்வளவு தண்ணீர் கொட்டினாலும் சேதமடையாத வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை சேதமடைந்தாலும், இந்த பிளாஸ்டிக் சாலைகளை எளிதில் சீரமைத்து விடலாம் எனவும் இந்த சாலையை வடிவமைத்த நிறுவனத்தினர் உறுதிபட கூறுகின்றனர். சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து இந்த பிளாஸ்டிக் சாலைகளை குறைந்த செலவில் அமைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
நிலத்தடி நீரை உயர்த்தும், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை ரோட்டர்டம் பெற்றுள்ளது. இந்த சாலை குறித்து இதை அமைத்த வோல்கர்வெஸ்லஸ் நிறுவனம் கூறுகையில், நமது வழக்கமான சாலை அமைக்கும் பணிகள், பராமரிப்பிற்கு கடினமானதாக இருந்தது. மேலும் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியதாக இல்லை. ஆனால் இந்த பிளாஸ்டிக் சாலைகள் மிக லேசானதாக இருப்பதால், நிலத்திற்கு அதிக பாரத்தை தராது. இதில் உள்ள துளைகளை பயன்படுத்தி கேபிள்கள் மற்றும் பைப்களை நிலத்திற்கு அடியில் எளிதில் பதிக்க முடியும். கழிவுநீர் குழாய்களும் இதற்கு அடியில் அமைக்கப்படுவதால் நிலத்தின் நீர்மட்டம் உயர வழிவகை செய்யும்.
நகர்புறப்பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். இதனால் தட்பவெப்பமும் குறையும். தட்வெப்ப மாற்றத்தையும் இந்த சாலைகள் தாங்கக் கூடியவை. இதனால் மழை அளவும் அதிகரிக்கும். நிலத்தில் எளிய முறையில் அதிக அளவிலான நீர் சேமிக்கப்படுவதால், சுற்றுச்சூழலும் குளுமையாக இருக்கும். இந்த கான்கிரீட்கள் 60 ஆண்டுகள் வரை கூட சேதமடையாமல் இருக்கும் என கூறுகின்றனர்.

 சென்னையில் 1498 உட் புற சாலைகள், பேருந்து கள் செல்லும் சாலைகள் 118 என 1616 சாலைகள் 1104 கி.மீ. தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகளாக ஆக்கப்படவுள்ளன. மிகவிரைவில் குப்பை யில்லாத, மழைநீர் தேங் காத சென்னையாக உரு வாக்கப்படும். 


 தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment