Thursday, 31 October 2013

இந்தியாவின் இலவசக்கல்வி முறை சரிதானா? ஒரு சிறப்பு பார்வை...

இந்திய  மட்டும்  மாநில அரசுகள்  மக்களிடம் ஒட்டு வந்குவதர்க்காஹ   இலவசமாய் அரிசி கொடுக்கிறார்கள், 100 நாள்  வேலை என்ற பெயரில் பணம் ,தொலைக்காட்சி பெட்டி, மிக்சி, கிரைந்தர்,  தவிர சாப்பாடும் போடுகிறார்கள். இதெல்லாம் விட்டு இலவசமாய் கல்வி கொடுத்தால் என்ன கேடு வந்துவிடும்.
உலகில் அனேக நாடுகளில் அனைவருக்கும் கல்வி, மின்சாரம், மருத்துவம் இலவசமாக உள்ளது . ஆனால் இங்கு 
அனைவருக்கும் கல்வியும் மருத்துவமும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று ஒரு அரசியல் வாதிக்காவது தோன்றுமா?  ஒவ்வரு ஐந்தாண்டு திட்டதிலும் கல்விக்குபணம் ஒதுக்குவார்கள் . அது  நம்மளை  அடைவது இல்லை. கடந்த 2006ம்  ஆண்டில் கல்விக்கு Cess என்று ஒன்று  போட்டார்கள். என்ன ஆயிற்று அந்த பணம்? யாருக்காகவாது இலவசக்கல்வி கொடுப்பார்களா? கொடுத்தார்களா?.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போனால் Donation என்றும் வருடாந்திர கட்டணம் என்று இன்றும் கொடுக்கவேண்டி இருந்தது. இன்றும் இருக்கும். ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டுமென்றால் கட்டாயம் கொடுக்க வேண்டும். அங்கேயே பிரிவினை. காசுள்ளவன் ஆங்கிலம் படிப்பான் காசில்லாதவன் தமிழ் படிப்பான் என்று. அரசாங்கப்பள்ளிகளிலேயே இந்த நிலைமை.

எனக்கு தெரிந்து என் நண்பனின் அம்மா வீட்டு வேலை செய்து தான் படிக்கவைத்தாள். அவளிடம் ஆயிரம் ரூபாய் இல்லை. அதற்காக நாயாய் பேயாய் அலைந்து அந்த தாய் பணம் கட்டியது இன்றும் நினைவில் நிற்கிறது. கொடுமை என்னவெனில் மற்ற செலவுகளுக்கு அந்த அம்மா தலைமை ஆசிரியர் வீட்டிலேயே வேலை செய்து தான் 2 வருடம் மேல்நிலைக்கல்வி படிக்கமுடிந்தது என் நண்பனால்.
வியாபாரக் கல்வி, இட ஒதுக்கீட்டுக் கல்வி( பணம், சமூகம்) என்று என்ன என்ன வழி உண்டோ அவ்வளவிலும் பிரிந்து தான் கிடக்கிறோம். எல்லோரும் மறந்துவிடும் மற்றொரு பிரிவினை வட்டார அளவில் கல்வி. வடநாட்டு மக்களை கேளுங்கள், பாரதியாரை தவிர உருப்படியாய் ஒரு தமிழ்நாட்டு சுதந்திர போராட்டவீரர் பேர் தெரியாது.


அடுத்தது இந்த கல்வித்திட்டப்பிரிவினை. CBSE படித்தவனுக்கு IIT entrance சுலபம். மாநிலக்கல்வி படித்தவனுக்கு பொறியியல், மருத்துவம் சுலபம் என்று குழப்படியான கல்வி முறை. இதில் ஆங்கிலோ இந்தியன் என்று கல்வி முறை வேறு. தமிழ், ஊறுகாய் மாதிரி அந்த கல்வி முறையில் இருக்கிறது.
சுதந்திரம் வாங்கி 65 வருடம் ஆகிறது இன்னும் என்ன ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை. இதில் படித்த ஒரு நண்பனுக்கு தமிழ் படிக்க வராது. நம்பினால் நம்புங்கள், ஆங்கிலோ இந்தியன் கல்வி படித்த அவனால் ஒரு கட்டுரையோ கவிதையோ தமிழில் படிக்க இயலாது. நான் மிகவும் வருந்தி சொன்னதன் பேரில் பல முறை புத்தகத்தை திணித்து படி படி என்று படுத்தியதின் பேரில் என்னை திருப்திபடுத்த பொன்னியின் செல்வன் படித்தான் அவன், ஆங்கிலத்தில். ஆங்கிலத்தில் பொன்னியின் செல்வன் படித்த ஒரே(எனக்குதெரிந்து) தமிழன் அவனாகத்தான் இருக்கும். ஷேக்ஸ்பியரிலும் ஷெல்லியிலும் வித்தகன் அவன். என்ன மாதிரியான் ஒரு கல்வி முறை இது?  


அதற்கு நேர் எதிராக கிராமத்தில் எனக்கு மற்றொரு நண்பன். ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராது. கடைசியில் ஆங்கில தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்று காவல்துறையில் ரிப்போட்டராக போக வேலை கிடைத்த போது ஒரு முழு லிப்கோ அகரமுதிலியை நாம் பாட புத்தகம் படிப்பது மாதிரி படித்தான். ஏதாவது பக்கத்தை பிரித்து ஏதாவது சொல்லைக்கேள் அர்த்தம் சொல்கிறேன் என்று படுத்தி இருக்கிறான். 


ஒரு ஒழுங்குபட்ட கல்வி முறை இல்லை இதனால் பாதிக்கப்படுவது எல்லோருமே தான். ஏழைகளுக்கும், கிரமத்தானுக்கும் தமிழைவிட்டால் நாதி இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கு தெரிந்து பல பேர் நல்ல ஆங்கில அறிவில்லாத்தால் நேர்முகத்தேர்வில் தோற்றவர்கள் அதிகமாக  இருக்கிறார்கள். என்ன ஒரு குழப்படியான செயல்திட்டம் இது.


வருடம் போய் வருடம் வந்தால் படித்த மாணவர்களின் வேலை இல்ல திண்டாட்டம் ஒருபுறம், கல்லூரிகள் அதிகளவு  உள்ளதால் தொளில்நுட்ப அறிவு குறைவவே காணப்படுகிறது.மேலும்  
ஒரு மராட்டிய மாநில கல்வி முறையில் 60 மதிப்பெண் வாங்கியவனையும் தமிழ்நாட்டில் 60 மதிப்பெண் வாங்கிவனையும் ஒரே நிகரில் வைக்கமுடியுமா? முதலில் எந்த சிஸ்டத்தில் படித்தவன் என்று கேள்வி அல்லவா வருகிறது!!! கல்லூரிகள் வியபரமாக்கபடுவதால் ஒவ்வொரு மாநிலத்திலும் , பொறியியல் கல்லூரிகள்  மதிப்பு குறைந்து காணப்படுகிறது.


இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம், ஒரே கல்லூரி நுழைவு முறை என்றல்லவா இருக்கவேண்டும். அப்படி இருந்தால் என்ன மாறிவிடும். அதில் சாதகம் என்ன, பாதகம் என்ன? வெறும் கேள்விகளாய் இருக்கிறதே அன்றி பதில் தான் இல்லை...No comments:

Post a Comment