Thursday, 24 October 2013

இருதய பைபாஸ் சிகிச்சை ரூ 1000 மட்டுமே!!

 நமது வயது அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. நம் நாட்டில் பிறந்ததினாலேயே ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு, மரபு முறை, மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி போன்ற உணவு மற்றும் தேவையான உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை காரணங்களாக இருக்கலாம். ஆனால் இன்னமும் இவை ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
மாரடைப்பினால் ஏற்படும் தொல்லைகள் என்ன?
வயதான காலத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டால் அது வாயுத் தொல்லை என்று அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். அதனால் சிகிச்சையில் காலதாமதம் ஏற்பட்டு மரணம் அடைய வாய்ப்புள்ளது. இதைத் தவிர இதயம் வலிமையிழத்தல், இதய ஓட்டம் மாறுபடுதல், நுரையீரலில் நீர்க்கோத்தல் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புண்டு. இரத்த ஓட்டம் திடீரென்று மற்ற உறுப்புகளுக்குக் குறைந்தால் பக்கவாதம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவையும் அதிகம் வரும். நெஞ்சுப் பகுதியில் இனம்புரியாத ஒரு வேதனை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாது டாக்டரிடம் சென்று இ.ஸி.ஜி. இரத்தப் பரிசோதனை மற்றும் தேவைப்பட்டால் எக்கோ போன்ற பரிசோதனைகள் செய்து கொண்டு தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

என்ன சிகிச்சை?: மருந்தா? ஆஞ்சியோ பிளாஸ்டியா? பைபாஸ் சர்ஜரியா?
சுமார் 70 - 80 வயது தாண்டிய முதியவர்களுக்கு மாரடைப்பிற்குப் பின்பு நெஞ்சு வலியோ மூச்சு வாங்குவதோ இல்லையென்றால் மருந்துகள் மூலமாகவே நல்ல பலன் கிடைக்கும்.

சுமார் 60-70 வயதுள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் பி.பி., கொழுப்புச்சத்து போன்றவற்றோடு அடிக்கடி நெஞ்சில் வலியும் ஏற்படுமேயானால் அவர்களுக்கு ஆஞ்சியா பிளாஸ்டி சிகிச்சை முறை தேவைப்படும். ஆஞ்சியோகிராம் என்பது கை அல்லது காலில் உள்ள ஒரு இரத்தக் குழாயின் வழியாக மருந்ததைச் செலுத்தி, இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாயின் ஏற்பட்டுள்ள அடைப்புகள் பற்றி அறியும் ஒரு பரிசோதனை.

இந்தப் பரிசோதனை மூலம் இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தால் அதை ஆஞ்சியோகிராம் செய்யும் முறை போலவே அடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஒரு பலூனை விரிவடையச் செய்து அடைப்பு நீக்கப்படும். மறுபடியும் அடைப்பு வராமல் இருக்க, அந்த இடத்தில் ஊதுகுழல் போன்ற ஒரு சிறு குழாயைப் பொருத்தி விடுவார்கள். இரத்தக் குழாயிலுள்ள அடைப்பு விரிவு செய்யப்பட்டு இரத்தம் ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் மயக்கமோ, தையலோ கிடையாது. இச்சிகிச்சையின் மூலம் மாரடைப்பின் தொல்லையின்றி பல ஆண்டுகள் நலமாக வாழ முடியும். ஆனால் டாக்டரின் ஆலோசனைப்படி 6-12 மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரிடம் சென்று மறுபரி சோதனை செய்து அதற்குத் தக்கவாறு மருந்துகளைச் சாப்பிடுவது அவசியம். 

பைபாஸ் சர்ஜரி:
இருதய பைபாஸ் சர்ஜரி என்பது நவீன அறுவை சிகிச்சை முறை. ஆஞ்சியோ கிராம் பரிசோதனை மூலம் ஒருவருக்கு இருதய இரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால், இருதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படும். இதற்கு காலிலுள்ள இரத்தக் குழாயை எடுத்து இருதய இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொருத்தி, இரத்த ஓட்டம் மாற்று வழியில் சீராகச் செல்ல அறுவை சிகிச்சை செய்யப்படும். முதுமைக் காலத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வயது ஒரு தடை இல்லை. எப்பொழுதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும், சுமார் 60 வயதுள்ள ஒரு பெண்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து இரண்டு இரத்தக் குழாய்களுக்கு மேல் அடைப்பு இபுருந்தால் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் நேரமின்மை மற்றும் வேலை பளுவினால் ஒழுங்கான உணவுக் கட்டுப்பாடு முறையோ அல்லது தவறாமல் உடற்பயிற்சியோ அவரால் செய்ய முடியாது. இவர் அறுவை சிகிச்சையின் மூலம் சுமார் 10-15 ஆண்டுகள் வரை முன்பு இருந்ததைப் போலவே ஆரோக்கியமாக வாழ முடியும்.

ஆகையால் வயதான காலத்தில் மாரடைப்புக்கு மருந்தா? ஆஞ்சியோ பிளாஸ்டியா அல்லது பைபாஸ் சர்ஜரியா என்பதை அந்தந்த நோயாளியின் நோயின் தன்மை, வயது, அவருக்கு இருக்கும் பிற நோய்கள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்தே முடிவெடுக்க முடியும். இவற்றை தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம். 


தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். 

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினா
ர்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப்
பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.  நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். 
எலுமிச்சைபற்றி அறிய

இஞ்சிபற்றி அறிய


புண்டுபற்றி அறிய

ஆப்பிள் சைடர் விநிகர் பற்றி அறிய

நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால் மருத்துவமனை வாங்கும்  பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.


நன்றி  :  டாக்டர் சையது சாகிப்
                       டாக்டர். வி.எஸ். நடராஜன்..
                       டாக்டர் பி.ஸி.ராய்.
                        .தையுபா அஜ்மல்.

ஆக்கம் & தொகுப்பு :  மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment