Monday, 14 October 2013

காந்தி கணக்கு என்றால் என்ன ?

Image result for காந்தி கணக்கு
காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.
வ உ சி க்கு தென்னாப்பிரிக்காவிலுள்ள தமிழர்கள் 5000 ரூபாய் காந்தியாரிடம் தந்து வ உ சிதம்பரனாரிடம் சேர்க்க சொன்ன்னார்களாம்..காந்தியார் அந்தப்பணத்தை தனது ஆஸ்சிரமத்திக்கு வைத்துக்கொண்டாராம்..அதனால் காந்தியார் கணக்கு என்றால் ஏமாற்று கணக்கு என்ற கதையும் உண்டு

இறுதியாக காந்தி பயண்படுத்திய வங்கி கணக்கில், கொஞ்சம் பணம் இருந்துள்ளது.அவர் இறப்புக்கு பின் அந்த வங்கி கணக்கை முடக்காமல் அதை அரசாங்கம் தொடர்ந்தது அவர் நினைவாக, அதுதான் காந்தி கணக்கு.

 ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது.
அதை இப்போது தெரிந்துகொள்வோம்.
மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது,அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது.ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம்.
அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.
ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு.
தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment