Friday, 28 May 2010

நமக்குத் தேவைதானா இந்த போலியான சந்தோஷம்!.


போலி மகிழ்ச்சியில்தான் நம்மில் பெரும்பாலோர் வாழ்கிறோம். அசல் மகிழ்ச்சி என்னவென்று நமக்குத் தெரிவதே கிடையாது. இப்படிப்பட்ட போலியான திருப்தி நமக்குத் தேவையா? அறியாமையினால் ஏற்படுவது செயற்கையான சந்தோஷம். உண்மையில் அது சந்தோஷமே அல்ல.

போலியான சந்தோஷங்களை அடைந்து, அவைதான் மெய்யான சந்தோஷங்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்ற கருத்தை வலியுறுகிறார் ஸிர் ஷ்ரீ என்ற அறிஞர்.

ஒரு ஊரில் மனைவிக்கு பயந்த கணவன் ஒருவன் இருந்தான் (எல்லா ஊர்களிலும் அப்படித்தான்). அவனுடைய மனைவி கல்யாணத்துக்குப் பிறகு முதன் முதலாக தன் தாயாரின் வீட்டுக்குப் போகவிருந்தாள்.
'ஒரு தங்கச் செயினை வாங்கிப் போட்டுக் கொண்டு போனால் என் வீட்டில் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள்' என்றாள் கணவனிடம். 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே என்ன பண்ணுவது ?' கேட்டான் கணவன்.

அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. 'என்னிடம் இரண்டு பவுனில் வளையல்கள் இருக்கின்றன. அதை எடுத்துப் போய் அழகான ஒரு தங்கச் செயினாக மாற்றிக் கொண்டு வாருங்கள்' என்றாள்.

நகை கடைக்காரரிடம் அவன் போனான். அவர் இரெண்டே இரண்டு வளையல்களை வைத்துக் கொண்டு எப்படி செயின் வாங்க முடியும்?' என்றவர் நான் ஒரு இமிடேஷன் செயின் தருகிறேன். அசல் தங்கச் செயினைப் போலவே இருக்கும். இந்த வளையல்களுக்கு பதில் அதைத் தருகிறேன்' என்றார்.

அவனும் அதை வாங்கிக் கொண்டு மனைவியிடம் தந்து, உண்மையையும் சொன்னான். 'இப்போதைக்கு இதைப் போட்டுக் கொண்டு போ. கொஞ்ச நாட்கள் கழித்து அசல் செயின் வாங்கித் தருகிறேன்' என்றான்.

இமிடேஷன் செயினைப் போட்டுக் கொண்டு அவள் தாய் வீட்டுக்குப் போனாள். எல்லோரிடமும் அது தங்கம் என்றே சொன்னான் தன் கௌரவம் குறையக் கூடாதென்று.

அவளுடைய அண்ணிக்கு அந்தச் செயின் ரொம்பவும் பிடித்து விட்டது. அவளும் அது போல ஒன்றை வாங்கித் தரும்படி தன் கணவனை நச்சரித்தாள்.

அவனிடம் போதிய பணம் இல்லை. ஒரு நகைக் கடைக்காரரிடம் போய்க் கேட்டான். அவர் 'இதோ பார். இப்போதெல்லாம் இமிடேஷன் நகை அணிவதுதான் ஃபாஷன். அதனால் நீ இமிடேஷன் செயினை வாங்கிப் போ. உன் மனைவி சந்தோஷப்படுவாள்' என்றான்.

அவனும் ஒரு இமிடேஷன் செயினை வாங்கிக் கொண்டு போனான். தன் மனைவியிடம் கொடுத்து, 'யாரிடமும் சொல்லாதே. இது இமிடேஷன் செயின். இப்போதைக்கு இதை அணிந்து கொள் !' என்றான்.

ஊரிலிருந்து வந்தவன் ஒரு நாள் தன் செயினை கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கப் போனாள். அதைப் பார்த்த அண்ணிக்குத் திருட்டு புத்தி ஏற்பட்டது.

'என் இமிடேஷனை வைத்துவிட்டு இந்த தங்கச் செயினை எடுத்துக் கொண்டாள் என்ன? இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால் அவளுக்குத் தெரியாது' என்று எண்ணி அதை எடுத்துக் கொண்டாள்.

ஒரே சந்தோசம் அவளுக்கு. 'அசல் தங்கச் செயினைப் போட்டுக் கொண்டிருக்கிறோம்' என்று ஆனந்தப்பட்டாள்.

அடுத்த நாள் அவள் தன் செயினைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கப் போகையில் ஊரிலிருந்து வந்தவள் தன் செயினை வைத்துவிட்டு அவளுடைய செயினை எடுத்துக் கொண்டாள்.

அசல் தங்கச் செயின் தனக்குக் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தாள்.
இப்போது இரண்டு பேருக்குமே சந்தோசம் தாங்கள் அணிந்திருப்பது அசல் தங்கச் செயின் என்று!

ஆயுட்காலம் பூராவும் போலியான மகிழ்ச்சியிலேயே இருவரும் வாழ்ந்தார்கள்!

இதைப் படிக்கும் நமக்குப் புரியும் எவ்வளவு முட்டாள்தனமான மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தார்கள் என்று.

இப்படிப்பட்ட போலி மகிழ்ச்சியில்தான் நம்மில் பெரும்பாலோர் வாழ்கிறோம்.

அசல் மகிழ்ச்சி என்னவென்று நமக்குத் தெரிவதே கிடையாது.

இப்படிப்பட்ட போலியான திருப்தி நமக்குத் தேவையா?-

நன்றி :ரா.கி.ரங்கராஜன்..

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 27 May 2010

ஒரு மனிதனுக்கு சூனியமோ செய்வினையோ செய்யமுடியுமா?சில தினங்களுக்கு முன் எனது ஆன்மீக ஆசிரியரின் சொற்பொழிவைக் கேட்க சென்றிருந்தேன்.

தாவா சென்டரில்  மாதத்திற்கு ஒருமுறை தினங்களுக்கு ஜுபைலில்  சொற்பொழிவாற்றுவார்கள்.

பலதரபட்ட கேள்விகள் பலரும் கேட்பார்கள்.எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்.ஆனால் கேட்கப்படும் கேள்வியை விளங்கி கேட்கப்படும்போது அதற்கான பதிலும் நம் மனதில் பதியும் இருள் விலகி அறிவுத் தெளியும்.
எல்லோரும் கேட்கிறார்கள் என்று நாமும் எதையாவது கேட்டால் பதில் கிடைக்கும் ஆனால் அந்த பதில் நம் மனதில் தரிபடாது.

ஏத்தனையோ நூற்களை நாம் வாசிக்கின்றோம் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு நூலும் ஒரு அறிவுதான்.ஆனால் அந்த நூற்கள் அறிவின் பூரணத்தை விளக்குவதில்லை.ஏட்டுக்கல்வியினால் எல்லாவற்றையும் விளக்க முடியாது.

விளக்கம் கொடுப்பதற்கு ஒரு ஆசான் தேவை.விளக்கமில்லாத படிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

ஞானிகளிடம் பூரணத்தை கேட்டு தெளியலாம்.கேட்கப்படும் நம்மிடம் தேடல் இருக்கவேண்டும்.இல்லையெனில் எந்த பதிலும் நம்மை திருப்தி படுத்தாது.
எல்லாவற்றிகும் ஒரு வழி இருக்கிறது.அந்த வழியில் தான் எதையும் பெறவேண்டும்.வழிமாறினால் வாழ்க்கையும் மாறிவிடும் சிந்தனையும் மாறிவிடும்.

இது அவசரக்காலம் எதையும் அவசரமாக செய்யப் பழகுகிறோம்.இந்த அவசரம் மனிதனை போட்டி மனப்பான்மையை உண்டாக்கி பொறாமைகளை வளர்த்து வருகிறது.

இந்த பொறாமை ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அழிப்பதற்கும் அவனைக் கெடுப்பதற்கும் பல யுக்திகளை கையாளுகிறான்.
அப்படிப்பட்ட யுக்திகளில் ஒன்று தான் செய்வினை செய்வதும் சூனியம் வைப்பதும்.இதில் பெரும்பாலும் பெண்கள் கவரப்படுகிறார்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

உண்மையில் ஒரு மனிதனுக்கு சூனியமோ செய்வினையோ செய்யமுடியுமா? அப்படி செய்வதினால் அதில் மனிதன் பாதிக்கப்படுகிறானா?

இந்த கேள்விகள் என் ஆன்மீக ஆசிரியரிடம் கேட்கப்பட்டது.

ஒரு கதை மூலம் விளக்கம் அளித்தார்கள்.

ஒரு சாலை ஓரத்தில் இருவர் எதிர் எதிரே ஒரேவிதமான கடை வைத்திருந்தார்கள்.ஒருவருக்கு நல்லவியாபாரம் அவர் நியாயமான விலையில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.மற்றவருக்கோ அந்தளவு வியாபாரமில்லை.எதிர் கடைக்காரனைக் கண்டு அவர் பொறாமைக் கொண்டார்.

ஒரு நாள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.உன்னை என்ன செய்கிறேன் பார் உனக்கு சூனியம் வைக்கிறேன் என்று வியாபாரம் இல்லதவர் கூற உன்னால் முடிந்ததை செய் என்றார் நியாயக் கடைக்காரர்.

மறுதினம் காலையில் கடைத் திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி.அவர் கடை வாசலில் கருப்பாக மணி உதிர்ந்து கிடைப்பதைப் போல கடுகு கிடைப்பதைக் கண்டதும் பொறாமை கடைக்காரர் ஏதோ சூனியம் செய்வினை வைத்துவிட்டார் என்று இவரே ஒரு பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டு கவலையடைந்தார்.அந்த கவலை வியாபார சிந்தனையிலிருந்து அவரை திசைத்திருப்பியது.அவருக்கு வியாபாரம் மந்தமானது அவர் உடல் நிலையும் மோசமானது.

இவரின் நண்பர் இவரைக்காண வந்தபோது தனக்கும் தனது எதிரி கடைக்காரனுக்கும் நடந்த பிரச்சனையை கூறி அவர்தான் எனக்கு செய்வினை செய்துவிட்டார்.என்னுடைய வியாபாரமும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்று அவர் கூறியதும் அந்த நண்பர் கூறினார்
உன்னுடைய எதிரையை பார்த்துவிட்டுதான் உன்னைக்காண வந்துள்ளேன்.
அவர் உனக்கு செய்வினையோ சூனியமோ வைக்கவில்லை. ஆனால் ஒரு ஐம்பது கிராம் கடுகை மட்டும் உன் கடை வாசலில் கொட்டிஇருக்கிறார் அதைக்கண்ட உனக்கு பயம் உண்டாகி நீயே உனக்கு சூனியத்தை செய்வினையை வைத்துக் கொண்டுள்ளாய் என்றார்.
இப்படித்தான் பலர் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.என்ற கதையை ஆன்மீக ஆசிரியர் கூறினார்கள்.

பல பெண்களிடம் சூனியத்தின் நம்பிக்கை நிறைந்திருக்கிறது.எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்.சூனியம் என்றாலே ஒன்றும் இல்லை என்பதுதானே பொருள்.ஒன்றுமில்லத ஒன்றினால் என்ன செய்ய முடியும். ஆனால் நம்பிக்கை எதையும் செய்யும்.
இறைவன் ஆதியில் சூனியமாக இருந்ததை அமாவாக இருந்தேன் என்கிறான்.ஒன்றுமில்லா ஒன்றுதான் இந்த பிரபஞ்சமாக இருக்கிறது.

செய் என்றால் செயல்பாடு
வினை என்றாலும் செயல்பாடுதான்; செய்வினை என்ற சொற்சொடருக்கு செயல் என்பதுதான் பொருளாக இருக்கிறது.

செய்வினை சூனியம் என்பது மனிதர்களை முட்டாளாக்குவதற்கும் பொருளை அபகரிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்று கண்கட்டு வித்தை.
சூனியம் மூலம் ஒருவரை பழிவாங்க முடியுமென்றால் நம்நாட்டு அரசியல்வாதிகளை எண்ணிப்பாருங்கள்.
சூனியம் வைத்தே ஒட்டையும் ஆட்சியையும் பிடித்துவிடுவார்கள் எதிர்கட்சி என்பதே இல்லாமலாகிவிடும்.எதிர்ப்பனுக்கெல்லாம் சூனியம்தான்.
இது சாத்தியமா?

சில இல்லங்களில் மாமியார் மருமகள் பிரச்சனை கூட சூனியம் என்ற பாட்டையில்தான் நடைப்பெறுகிறது.

இந்த நம்பிக்கையை பேணக்கூடியவர்களுக்கு சூனியம் எல்லாமும் செய்யும் இதை ஏற்காதவர்களுக்கு சூனியம் தனக்கே சூனியமாக்கிக் கொள்ளும்.

நம்பிக்கை என்பது மனிதன் தெளிவுவடைவதற்குதானே தவிர மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கல்ல.!

Wednesday, 19 May 2010

வெண்குஷ்டம், வெண்புள்ளி பற்றிய சிறப்பு விழிப்புணர்வு தவகல்!!

ஆரோக்கியம்தான் மிகப் பெரிய சொத்து என்பதை, நோயின் கையில் சிக்கி சித்ரவதைப்படும் போதுதான் புரிந்துகொள்ள முடியும். நோயாளியாக இருப்பது அந்த அளவுக்கு ஒரு நரக வேதனை.
உடல் உறுப்புகளில் கோளாறு என்றால், நாம் சொன்னால்தான் தெரியும் பிறருக்கு. ஆனால், தோல் நோய் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களின் நிலை பரிதாபத்திலும் பரிதாபம். "நான் ஒரு நோயாளி" என்பதைப் பார்ப்பவர்களின் முதல் பார்வைக்கே "பளிச்" எனக் காட்டிவிடும் தோல் நோய் பாதிப்பு. இதனால், பரிதாபம், பரிகாசம் என்று அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.
அவர்களையெல்லாம் பார்த்து, "கவலை வேண்டாம். உங்கள் நோயைக் குணப்படுத்த நாங்களாச்சு" என்று நம்பிக்கையூட்டுகிறார் மருத்துவர் தெ.வேலாயுதம். இவர், சென்னை, தாம்பரம் - சானடோரியத்தில் இயங்கி வரும் "தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன"த்தில் உள்ள "அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனை"யில் பணியாற்றி வருகிறார்.
மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனத்துக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகள், தங்கி சிகிச்சைப் பெறுபவர்களுக்கு உணவு உட்பட அனைத்தும் இலவசம். இங்கு அனைத்து தோல் வியாதிகள், முடக்குவாதம், மூட்டுவலி உள்ளிட்ட பல நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
"தோல் நோய்க்குச் சித்த மருத்துவத்தை விட்டால் வேறு சிறந்த மருத்துவம் இல்லை. ஆங்கில மருந்தில் இருக்கும் சில வேதிப் பொருட்கள், அதை நீண்ட நாள் சாப்பிட்டு வருபவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், சித்தாவில் உங்களின் ஆரோக்கியம் மட்டுமே உங்களிடம் மீட்டு அளிக்கப்படும். இலவச இணைப்பாக வேறு எந்த பக்க விளைவுகளும் இல்லை!" என்று அடித்துச் சொல்கிறார் வேலாயுதம்.
குறிப்பாக, தோல் வியாதியிலேயே வீரியமாகக் கருதப்படுகிற, சிகிச்சைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கிவிடாத "வெண்குஷ்டம்" நோய்க்கு இங்கு வழங்கப்படும் சிகிச்சை, மிகவும் பிரபலம். ஆம்... இங்கு வரும் வெண்குஷ்ட நோயாளிகளில் 85% மேல் முழு குணம் பெற்று உள்ளனர் என்பது கவனத்துக்கு உரியது! அந்த வெண்குஷ்டம் நோய் பற்றி விளக்கமாகப் பேசினார் வேலாயுதம்.
"ஆங்கிலத்தில் "லூக்கோடெர்மா" (Leuco-derma) என்று வழங்கப்படும் இந்த நோய்க்கு தமிழில் வெண்புள்ளி, வெண்குட்டம், வெண்படை என்று பல பெயர்கள் உண்டு. சித்த மருத்துவத்தில் பதினெட்டு வகையான தோல்நோய்களில் ஒன்றாக இதைக் கருதுகிறோம். வெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்:-


நமது உடல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்கலங்கள் தான் மெலனின் நிறப்பொருட்களை உருவாக்கும். நிறப்பொருட்கள்அதிகமாக இருந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் சிவப்பாகவும்தோன்றுவோம்.


ஆனால் சிலருக்கு குறிப்பிட்ட இடங்களில் உள்ள கலங்கள் ஏதோவொருகாரணத்தால் பாதிப்படைவதால், அவ்விடத்தில் இருக்கும் நிறப்பொருட்கள் குறைந்து வெண்புள்ளிகளை ஏற்ப டுத்துகிறது.இந்தக் குறைபாடு உடலின் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம் 


வெண்புள்ளிகளில் இரண்டு வகைகள் உண்டு. 1.`விட்லிகோ' 2.`லூக்கோ டெர்மா'. 


இதில் 'விட்லிகோ' எனப் படுவது உடல் முழுவதும் வேகமாகப் பரவக்கூடியது.பெரும்பாலும் உதடு, கைகள், கால்கள், தொப்புள், பிறப்புறுப்புகள், மார்புக் காம்பு,காது போன்ற இடங்களில் தோன்றி படிப்படியாக வளரத் தொடங்கும். இதில் ஒருசிலருக்கு உடல் முழுவதும் வேகமாகப் பரவி, வெள்ளைகாரர் போல்மாறிவிடுவதும் உண்டு. 


`லூக்கோ டெர்மோ' எனப்படுவது உடலின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும்பாதிக்கும் வகையைச் சேர்ந்தது. உடலில் எங்கேனும் தீயால் சுட்ட புண்கள்இருந்தாலோ அல்லது இறப்பர் செருப்பை உற்பத்தி செய்யும் தொழிற்சலைகளில்பணிபுரிந்தாலோ இவ் வகையான வெண்புள்ளி வரும். 


இத்தகைய குறைபாடுகளுக்கு முக்கிய காரணம், உடலில் உள்ள நோய் எதிர்ப்புசக்தி குறைந்து, எதிர் வினையை ஏற்படுத்துவதால், நிறப்பொருள் அணுக்கள்தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன. இது ஒரு சிலருக்கு பரம்பரைகாரணமாகவும் ஏற்படலாம். தைரொய்ட் சுரப்பிகளின் சமச்சீரற்ற செயற்பாடுகள்,நீரிழிவு வியாதி, நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைவு, கலங்களுக்குக் கிடைக்க வேண்டிய விட்டமின் குறைபாடுஆகியவைகளால் இவை உருவாகும்.


மேலும் ஒரு சிலருக்கு அமீபியாஸ், குடல் நோய்கள், குடற் பூச்சிகள், இரத்தச்சோகை, தைபொய்ட் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றின்தாக்குதலாலும் இவை ஏற்படும். அத்துடன் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல்இயல்பு நிலைக்கு மாறாக குறையுடன் செயற்பட்டாலும் நிறப்பொருள் அணுக்கள்தம்முடைய பணியைச் சரிவரச் செய்யாது. இதனால் இந்தக் குறைபாடு எப்போதுவேண்டுமானாலும், எந்த வயதிலும் தோன்றும். உடலியக்கத்தைச் சீராகச் செயற்படவைப்பதுதான் இதற்கான சரியான சிகிச்சைமுறை . அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்ததால் வந்ததா? பரம்பரையின்காரணமாக ஏற்பட்டதா? வேறு சில நோய்களின் பின்விளை வினால்உருவானதா? என்பதை ஆராய்ந்தறிந்து, உடல் திறனுக்கு ஏற்பசிகிச்சையளிக்கவேண்டும். உடலின் இயக்கம் சீரடைந்தால், சருமத்தில் உள்ளமெலனோசைட் கலங்கள் பணியாற்றத் தொடங்கும். தோலின் மீது சூரிய ஒளிபட்டால் கூட நிறப்பொருட்கள் வேலை செய்யும். அதனால் சில மருத்துவமுறைகளில் சில வெளிப் பூச்சுகளை பூசிக்கொண்டு, சூரியனின் ஒளி உடலில்படுமாறு நில்லுங்கள் என்று பரிந்துரைப்பார்கள். 


பொதுவாக உதடுகளில் தோன்றும் வெண்புள்ளிகள் விரைவில் குணமடையும்.உடல் முழுவதுமாகத் தோன்றும் வெண்புள்ளிகளுக்கும், ஒரு சில இடங்களில்மட்டும் இருக்கும் வெண்புள்ளிகளுக்கும் சிகிச்சை பெற்றால்தான் குணமாகும்.அத்துடன் பொறுமையுடனும் சிகிச்சையை எடுத் துக்கொள்ளவேண்டும். 


உடலில் எங்கேனும் வெண்புள்ளிகள் தோன்றினால் விட்டமின் C சத்துஅதிகமாக இருக்கும் எலுமிச்சை , திராட்சை , ஒரேஞ்ச், ஊறுகாய், மீன், முட்டை,மாமிசம் ஆகிய வற்றைத் தவிர்த்துவிடவேண்டும். அத்துடன் பொதுவாகபுளிப்புச் சுவையையே தவிர்த்து விடவேண்டும். அதற்கு மாறாக கரட், பீட்ரூட்,முள்ளங்கி, பனை வெல்லம், பேரீச்சை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். 


வெண் குஷ்டம் என்பது தொழுநோயின் அறிகுறியாகும். இதற்கும்,வெண்புள்ளிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொழுநோய் ஒருவிதவைரஸ் கிருமிகளின் தாக்குதலால் உருவாகிறது. அதற்கான சிகிச்சை முறைமுற்றிலும் வேறுபட்டது. 


வெண்புள்ளிக்கு மற்றைய மருத்துவ முறைகளை விட ஹோமியோபதிமருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்தால் நல்ல பலன், நிரந்தரமாக உண்டு.


"பகர்பித்த விந்தையிலாது மேகம் வராது" என பதினெட்டு சித்தர்களில் ஒருவரான தேரையர் ஒரு பாட்டில் குறிப்பிடுகிறார். அதாவது, பித்தத்தின் ஆதிக்கம் இன்றி எந்த மேகநோயும் வராது என்று அர்த்தம். குறிப்பாக உடலில் உள்ள பிரகாச பித்தம் (ஒள்ளொளித்தீ), வண்ணப்பித்தம் (வண்ண அழல்)... இந்த இரண்டின் குறைபாடு காரணமாக தோலில் வெண்புள்ளி தோன்றும். ஆங்கிலத்தில் இதை "மெலனின் நிறமி குறைபாடு" என்பார்கள்.
இந்த நோய் ஆரம்பத்தில் சருமத்தில் சின்னபுள்ளிகள் போல் தோன்றும். சிலருக்கு புள்ளிகளில் அரிப்பு, தோல் வறட்சி, மரத்துப்போதல், கூடுதலான வியர்வை, முழு உணர்ச்சி இல்லாதது போன்ற குணங்கள் இருக்கும். சிலருக்கு இந்த குணங்களில் ஏதாவது ஒன்றிரண்டு குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருக்கும்.
இந்த வெண்குட்டம் நோய்க்கு வாத வெண்படை, பித்த வெண்படை, கப வெண்படை என மூன்று உட்பிரிவுகளும் உண்டு. வாத வெண்படை சிறிது சொரசொரப்பாக, சிவந்து வெளுத்திருக்கும். பித்த வெண்படை செந்தாமரை இதழ் போல் சிவந்து, வெளுப்பாகப் பரவும். பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சல் இருக்கும். முடி உதிரும். கப வெண்படை தும்பைப்பூப் போல் வெண்மையாக தடித்துப் பரவும். நமைச்சல் உணர்வு இருக்கும்" என்று அறிகுறிகள் சொன்னவரிடம், இவற்றுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டோம்.
"இந்த வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு. இதுக்கு அடிப்படையான மூலிகைகள் கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை. இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் தருகிறோம். வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.
மருந்து சாப்பிடும்போது உணவில் பத்தியம் உண்டு. புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும். மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மீன், மாமிசம் தவிர்க்கவேண்டும். முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்" என்றார்.
இந்த நோய் குறித்து தனியாக ஆய்வு நடத்தி முடித்திருக்கிறார் மருத்துவர் ஏ.சதீஷ்குமார். "பதின்மூன்று வயது வரையுள்ள குழந்தை நோயாளிகளை ஆய்வு செய்ததில், அதில் மூன்று சதவிகிதத்தினருக்கு பெற்றோர் வழியாக வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அதிகம் வருகிறது" என்ற சதீஷிடம்,
பொதுவாக சித்த மருந்துகள் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் பிற்காலத்தில் பாதிப்பு வரும் என்று ஒரு கருத்து நிலவுவது உண்மையா?
"இது மிக தவறான ஒரு கருத்து" என்று மறுத்தவர், "சித்த மருத்துவம், மூலிகைகளின் சுத்தி முறைகளைப் பற்றி தான் முதலில் வலியுறுத்துகிறது. பல மூலிகைகளுக்கு சுத்தி முறைகள் இருக்கின்றன. அதோடு மருந்து தயாரிப்பில் நட்புச் சரக்கு, பகைச் சரக்கு என கலவை விகிதாச்சார அளவுகள் உள்ளன. அரசு அங்கீகாரம் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இந்த கணக்கீடுகளின் அடிப்படையில் கவனமுடன் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிக்கத் தேவையான குடுவை உள்ளிட்ட அனைத்துமே சுகாதாரமான முறையில் அங்கே பராமரிக்கப்படும். எனவே, நாங்கள் தரும் சித்த மருந்துகளால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது" என்றார்.
சரி, வெண்குஷ்டத்தை சித்த மருத்துவத்தால் குணப்படுத்துகிறோம் என்று இவர்கள் சொல்வது எந்த அளவுக்கு உண்மை?
தொடர் சிகிச்கைக்காக காஞ்சிபுரத்தில் இருந்து தன் மகளை அழைத்து வந்திருந்த ஆனந்தன், "பத்து வயசுல, என் மகளுக்கு காலுல சிறு புள்ளியா ஆரம்பிச்சுது. முதல்ல இங்கிலீசு வைத்தியம்தான் பார்த்தோம். அந்த மருந்து சாப்பிட, சாப்பிட குறையறதுக்குப் பதிலா, உடம்பு முழுவதும் பரவ ஆரம்பிச்சிடுச்சி. ரெண்டு லட்ச ரூபா செலவானதுதான் மிச்சம். இங்க இலவசமா மருந்து கொடுக்கறாங்க. ரெண்டு வருஷமா அதைச் சாப்பிட்டு நல்ல குணம் தெரியுது. முகம், தலை எல்லாம் முழுசா மாறிடுச்சு. பக்கவிளைவெல்லாம் எதுவும் இல்ல. செலவும் கிடையாது. நாங்க இந்த ஆஸ்பத்திரியை கோயிலா பாக்குறோம் என்றார் நன்றிப் பெருக்கோடு.
கேரளாவில் இருந்து இங்கே வந்து கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை எடுத்துவரும் சல்மான் "பல இடங்கள்ல சிகிச்சை எடுத்தும் குறையல. இங்க வந்தபிறகு நல்ல முன்னேற்றம். குணமாயிடுவேன்கிற நம்பிக்கை வந்துடுச்சு சார்!" என்றார் கண்கள் ஒளிர.


ஆக... புற அழகை பாதிக்கும் வெண்குஷ்டம் நோயால் மன உளைச்சல் அடைந்து, வாழ்நாள் முழுவதும் தாழ்வு மனப்பான்மையோடு கடக்கத் தேவையில்லை. நோயாளிகளைக் குணப்படுத்த சித்த மருத்துவம் காத்திருக்கிறது!

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Tuesday, 18 May 2010

இறைவனின் எதிரியா -இப்லிஸ்?

        
     குர்-ஆனையும் இஸ்லாம் கூறும் கோட்பாடுகளையும் சரிவர புரிந்துக்கொள்ளாமல் குறை காணும் நோக்கிலோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ அணுகும் பலரின் அறிவின் மிகுதி உருவாக்கிய  வாதம் தான் \
இப்லிஸ் இறைவனுக்கு எதிரி  ,இப்லிஸ் இறைவனுக்கு எதிரியாக இருக்கிறான் எனும்போது அனைத்தும் முடியுமென்று சொல்லும் கடவுளுக்கே எதிரியா...? பார்த்தீர்களா இங்கு கடவுளுக்கே எதிரி இருக்கும் போது நம்மை எவ்வாறு காப்பாற்றுவார்  என்று தங்களது திரிபுத்துவ வாதத்தை நிறுவ முயல்கின்றன சில நாத்திக சிந்தனைகள்

  உண்மையாக இப்லிஸ் இறைவனின் எதிரியா? அவன் குறித்த குர்-ஆன் வசனங்கள் என்ன சொல்கிறது ... பார்ப்போம்.


 இறைவனின் படைப்பினங்களை மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம்


1. மலக்குகள் (வானவர்கள்)
2. ஜின்கள்                
3. மனிதர்கள்       
       

இப்லிஸ் குறித்து இப்னு கஸீர் இவ்வாறு விளக்கமளிக்கிறது

  சைத்தான்களின் தந்தையின் பெயர்.ஜின் இனத்தைச் சேர்ந்தவனான இவனுக்குச் சந்ததிகளும் சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துக்கொண்டு மனிதர்களை வழி கெடுப்பதே இவர்களின் தலையாய பணியாகும்.

     இப்லிஸ் என்ற பதம் ஜின்னினத்தின் மூல பிதாவை குறிக்கப் பயன்படுத்த பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக தீய செயல் புரிய தூண்டும் ஜின்களுக்கு இப்பெயர் பொருந்தும்.மேலும்


நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (55:15)

  இறை படைப்பில் இரண்டாம் நிலை படைப்பான ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதாக குர்-ஆன் இயம்புகிறது. இத்தகைய படைப்பான இப்லிஸ் மீது இறைவன் கோபமுற காரணமென்ன?

    இறைவன் மலக்குகளையும், ஜின்களையும் படைத்தபிறகு மூன்றாம் படைப்பான மனித படைப்பின் முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை படைத்த போது அந்த முதல் மனிதருக்கு மலக்குகள் மற்றும் ஜின்களின் தலைவனாக இப்லிஸை சிரம் பணிய பணித்தான். மலக்குகள் சிரம் பணிந்தார்கள் இப்லிஸோ சிரம் பணிய மறுத்தான் அந் நிகழ்வை குர்-ஆன் சூரா அல்-ஹிஜ்ரில் பின்வருமாறு எடுத்துரைக்கிறது

   (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
"இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.
அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.
"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்."
"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான். (15:28 லிருந்து 35 வரை)
   
   இப்லிஸ் இங்கு இறைவன் புறத்திலிருந்து கோபமுற காரணம் அவனை வணங்கவில்லையென்பதற்காக அல்ல மாறாக தன்னை விட தாழ்ந்த படைப்பாக மனிதப் படைப்பை கருதி ஆதமுக்கு சிரம் பணிய மறுத்தால் தான். ஆக அவனது ஏவலுக்கு கட்டுபடாததே இங்கு இறைவனின் சாபம் அவன் மீது உண்டாக பிரதான காரணம் (பார்க்க குர்-ஆன் 07:12)

இவ்விடத்தில் இரு முக்கிய கேள்வி தோன்றலாம்

(1) மலக்குகள் போல் ஏன் இப்லிஸ் சிரம் பணியவில்லை?
(2)இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் இங்கு இப்லிஸ்  அஃது சிரம் பணியாமல் இருந்தற்கு இறைவன் தானே காரணம்?


   * மலக்குகள் இறைவனின் சொல்லுக்கு சிறிதும் மாறு செய்யாத நிலையுடனே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இறைவன் ஏவியவற்றை செய்வார்கள்.அவன் தடுத்தவற்றை விட்டு விலகி கொள்வார்கள்.


  அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 ன் சுருக்கம்)

  அஃதில்லாமல் ஜின்கள் மலக்குகள் போலன்றி மனிதன் போன்று எதையும் சிந்தித்து செயல்படுத்தும் முறையில் இறைவனால் சிந்தனையுடன் படைக்கப்பட்ட படைப்பு. எனவே தான் மலக்குகள் இறை சொல்லுகிணங்க ஆதம்(அலைக்கு) சிரம் பணிய இப்லிஸோ (ஜின்) இறைவன் சொல்கிறான் என்றும் பாராமல் தன்னைவிட கீழ் நிலை படைப்புக்கு சிரம் தாழ்த்துவதா என இருமார்பு கொண்டான்.

 அவனது சிந்தனை இறைவன் சொல்லுக்கு மாறு செய்ய தூண்டியது.


"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:12)

  * அடுத்து இறை நாட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.,என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இறைவன் நன்மை -தீமைகளை ஆராய்ந்து உணரும்  பொருட்டு  சில சோதனைகளை ஜின் -மனித  மனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறான். ஏனெனில் நாம் அவற்றை பகுத்து ஆய்ந்து இது சரியானதா? அல்லது தவறானதா? என்று அறிந்து அதை செயலாற்றுவதற்காக.,

     உதாரணத்திற்கு இப்போதும் நாம் காண்கிறோம் சிலர் இறை மறுப்பாளானாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் செயல்களும் அவர்கள் சரியென்று காணும் அவர்களின் எண்ணமுமே தான் காரணமே தவிர இறைவன் அல்ல ஏனெனில் இறைவனின் ஏவல்களும் -விலக்கல்களும் மிக தெளிவாக நம்மை வந்தடைந்துவிட்டது மேலும் எவர்களுக்கும் எந்த ஒரு செயல் குறித்தும் சுயமாய் முடிவுகளை எடுக்கும் உரிமைகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான்.

  எனவே தமது அறிவுக்கு உட்பட்டே இது நல்லது இது கெட்டது என நம்மால் முடிவெடுக்கும் நிலை இருக்கிறது இதே நிலையே தான் இறைவன் அங்கு இப்லிஸுக்கும் கொடுத்தான். தனது சிற்றறிவால் படைத்தவன் கூற்றை ஏற்க தயங்கினான்

      அவ்வாறு இறைவனின் கோபத்திற்கு ஆளான இப்லிஸ் அடுத்து இறைவனிடம் கேட்டது குறித்து குர்-ஆன் கூறுகிறது.ஆதி மனிதருக்கு சிரம் தாழ்த்த மறுத்ததால் தன்னை சபித்த இறைவனிடம் இப்லிஸ் அவகாசம் கேட்கிறான் எதற்கு? இறுதி நாள் வரை வருகின்ற மனிதர்கள் யாவரையும் வழிகெடுத்து இறைவனுக்கு மாறு செய்வதற்காகவே... அதற்கு இறைவனும் ஒப்புதல் அளிக்கிறான்.

     "என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான். (15:36)
"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;" (15:37)  
(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:39)

       இங்கு ஒரு விசயம், இப்லிஸூக்கென்று எந்த ஒரு பிரத்தியேக சக்தியும் இல்லை. மாறாக இறைவனிடத்தில் வேண்டி இறைவன் அவனுக்கு அத்தகைய அவகாசத்தை தருகிறான். எனவே இங்கு ஆற்றல் இறைவனால் தான் இப்லிஸூக்கு வழங்கப்படுகிறது என்பது தெளிவு!.அவ்வாறு இப்லிஸூக்கு அத்தகைய ஆற்றல் வழங்கப்பட்ட போதிலும் அவன் குறித்தும் அவனது செயல்களின் விளைவு குறித்தும் மனித சமுதாயத்திற்கு மிக தெளிவாக எச்சரிக்கை செய்கிறான்.


மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168) 

மேலும் பார்க்க:2:208, 5:91, 6:142, 7:27, 7:200, 16:36, 19:44)

    இவ்வாறு மிக தெளிவாக வழிகெடுக்கும் ஜின்கள் குறித்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்து அவனது சூழ்ச்சிக்கு இரையாகாமல் உங்களை காத்துக்கொள்ள்ளுங்கள் என்றே  கட்டளை பிறப்பிக்கிறான்., காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் திருட்டு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க சொல்வார்களோ அதுப்போல.
  ஏனெனில் திருடன் காவல் நிலையத்தில் திருட முனைவதில்லை மாறாக ஊர் மக்களின் வீடுகளில் தான் திருடுவான். (இது ஒரு அளவுகோல் அல்ல ஒரு உதாரணமே) ஆக,இங்கு மனிதர்களுக்கும் -தீய செயல் புரிய தூண்டும் இப்லிஸூக்கும் (ஜின்களுக்கும்) தான் பிரச்சனையே ஒழிய இறைவனுக்கும் இப்லிஸுக்குமல்ல...

   சுமார் நூறு வசனங்களுக்கு மேலாக குர்-ஆனில் இப்லிஸ் (ஜின்கள்) குறித்து இறைவன் மனிதர்களுக்கு தான் எச்சரிக்கை விடுக்கிறானே தவிர தன்னின் இயலாமையால் உருவான எதிரியாக எங்கேணும் இப்லிஸ் கூறப்படவே இல்லை.

Sunday, 16 May 2010

We ( Muslim Scientists) always contributed to the civilization!!

Assalaamu alaikum,
Who says Islam and Muslims did not contribute to the civilization!!
We just need to ask ourselves the following two questions however…
 
1)     What went wrong that stopped us from achieving the same success now?
2)     How can we achieve the same glory again? (the answer to the first question will give us 50% of the clues to this question.)
 
Read on…
 
A century-wise list of renowned Muslim scientists during Medieval Islamic Civilization. Latinized names, where applicable, are given in brackets. A very impressive and fascinating fact is that during the Islamic Golden era, a large number of Polymaths (a person whose expertise fills a significant number of subject areas) emerged. For example, Ibn Sina (latinized as Avicenna) made major contributions in medicine, Astronomy, Chemistry, Geology, physics, Philosophy, Theology, Engineering and Poetry!
 
According to the famous Historian of Science, George Sarton (regarded as 'Father of History of Science') in his well-recognized book the 'Introduction to the History of Science' he writes…:
 
"It will suffice here to evoke a few glorious names without contemporary equivalents in the West: Jabir ibn Haiyan, al-Kindi, al-Khwarizmi, al-Fargani, al-Razi, Thabit ibn Qurra, al-Battani, Hunain ibn Ishaq, al-Farabi, Ibrahim ibn Sinan, al-Masudi, al-Tabari, Abul Wafa, 'Ali ibn Abbas, Abul Qasim, Ibn al-Jazzar, al-Biruni, Ibn Sina, Ibn Yunus, al-Kashi, Ibn al-Haitham, 'Ali Ibn 'Isa al-Ghazali, al-zarqab, Omar Khayyam. A magnificent array of names which it would not be difficult to extend. If anyone tells you that the Middle Ages were scientifically sterile, just quote these men to him, all of whom flourished within a short period, 750 to 1100 A.D."
 
 
List of Muslim Scientists
 
 
7th century
 
Jabir Ibn Haiyan (Geber)
Ahmad Nahavandi
 
 
8th century
 
Al-Asmai
Al-Khwarizmi (Algorizm)
Amr ibn Bahr Al-Jahiz
Al Balkhi, Ja'Far Ibn Muhammas (Albumasar)
Al-Fazari,Ibrahim Ibn Habeeb
Al-ajjāj ibn Yūsuf ibn Maar
Ibrahim al-Fazari
Muhammad al-Fazari
Yaqūb ibn Tāriq
 
 
9th century
 
Ibn Ishaq Al-Kindi (Alkindus)
Thabit Ibn Qurrah (Thebit)
Abbas Ibn Firnas
Ali Ibn Rabban Al-Tabari
al-Hasan al-Hamdānī
Al-Battani (Albategnius)
Al -Farghani (Al-Fraganus)
Al-Razi (Rhazes)
Al-Farabi (Al-Pharabius)
Abul Hasan Ali Al-Masu'di
Al-ʿAbbās ibn Saʿid al-Jawharī
Abd al-Hamīd ibn Turk
Hunayn ibn Ishaq
Banū Mūsā Brothers:
 1. Ja'far Muhammad ibn Mūsā ibn Shākir
 2. Ahmad ibn Mūsā ibn Shākir
 3. Al-Hasan ibn Mūsā ibn Shākir
 
Abū anīfa Dīnawarī
Al-Mahani
Ahmed ibn Yusuf al-misri
Al-Hashimi
Abu Kamil
Sinan ibn Tabit
Al-Nayrizi
Ja'far ibn Muhammad Abu Ma'shar al-Balkhi
Ahmed ibn Sahl al-Balkhi
Abu Sa'id al-Darir al-Jurjani(Gorgani)
Ibn al-Jazzar (Algizar)
Ibn Khordadbeh
Ibn Wadih al-Ya'qubi
Ibn Saeed Ibn Aswad
Ibn al-Faqih
Al-ajjāj ibn Yūsuf ibn Maar
Qusta ibn Luqa
 
 
10th century
 
Al-Sufi (Azophi)
Al-Saghani
Abu Al-Qasim Al-Zahravi (Albucasis)
Abu Rayhan Biruni
Abū Ja'far al-Khāzin
Al-Uqlidisi
Al-Saghani
Abū Sahl al-Qūhī
Abu Nasr ibn `Iraq
Abu-Mahmud al-Khujandi
Al-Karaji
Abū al-Wafā' Būzjānī
Al-Karabisi
Al-Sijzi
Al-Jayyani
Abu Nasr Mansur
Abolfadl Harawi
Al-Muqaddasi
Ali ibn Abbas al-Majusi(Haly Abbas)
Ibn Al-Haitham (Alhazen)
Ibn Tahir al-Baghdadi
Ibrahim ibn Sinan
Ikhwan al-Safa'
Ibn Miskawayh
Al-Mawardi (Alboacen)
Abu Raihan Al-Biruni
Abul Hasan al-Tabari
Ibn Sina (Avicenna)
Ibn Sahl
Ibn Yunus
Kushyar ibn Labban
Labana of Cordoba
Najab ud-din Muhammad
 
 
11th century
 
Al-Zarqali (Arzachel)
Al-Mu'taman ibn Hud
Omar Al-Khayyam
Hibat Allah Abu'l-Barakat al-Baghdaadi
Abu Bakr Muhammad Ibn Yahya (Ibn Bajjah)
Ibn Zuhr (Avenzoar)
Ibn al-Zarqalluh
Ibn Jazla
Al-Idrisi (Dreses)
Alī ibn Amad al-Nasawī
Ali ibn Ridwan Al-Misri
Maslamah Ibn Ahmad al-Majriti
Yusuf al-Mu'taman ibn Hud
 
 
12th century
 
Abu Bakr Muhammad Ibn Yahya (Ibn Bajjah)
al-Maghribī al-Samaw'al
Al-Hassār
Al-Bitruji (Alpetragius)
Al-Khazini
al-Baghdadi
Anvari
Ibn Tufayl (Abdubacer)
Ibn Rushd (Averroes)
Ibn Jumay
Muhammad al-Idrisi
Ibn Al-Baitar
Ibn al-Yāsamīn
Ibn Bajjah(Avempace)
Nur Ed-Din Al Betrugi (Alpetragius)
Sharaf al-Dīn al-ūsī
Jalal Al-Din Rumi
 
 
13th century
 
Al-Marrakushi
Al-Fida (Abdulfeda)
Ibn Al-Nafis Damishqui
Ibn Mun`im
Ibn Baso
Ibn al-Quff
Muyi al-Dīn al-Maghribī
Mo'ayyeduddin Urdi
Nasir Al-Din Al-Tusi
Shams al-Dīn al-Samarqandī
Qotb al-Din Shirazi
 
 
14th century
 
Muhammad Ibn Abdullah (Ibn Battuta)
Abdur-Rahman Ibn Khaldun
Ibn al-Banna'
Ibn al-Shatir
Ibn Khatima
Lisan al-Din ibn al-Khatib
Kamal al-Din Al-Farisi
Mansur ibn Ilyas
Al-Khalili
Cheng Muhammad Zheng He
ī Zāda al-Rūmī
Ulugh Beg
 
 
15th century
 
Jamshīd al-Kāshī
Abū al-Hasan ibn Alī al-Qalasādī
Piri Reis
 
 
16th century
 
Taqi al-Din
 
More details click below link

Saturday, 8 May 2010

கோலாலம்பூர் பத்துமலைக் குகை முருகன் கோயில்!! ஒரு சிறப்பு பார்வை...


நீங்கள் எந்த நாடு, நகரம், ஊர், கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி.. வெளிநாட்டுக் கோயில் ஒன்றின் பெயரைச் சொன்னால் அநேகமாகத் தெரியும் என்றுதான் சொல்வீர்கள்.

அந்தக் கோயில் இருக்குமிடம், கோலாலம்பூர்.மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன்,இந்துக்களைப் போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாகிப் போய் விட்ட இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


ஒரு காலத்தில் ஒரு ஒற்றையடி பாதையாக சென்று மலையில் இருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்ப்பெற்று விளங்குகிறது பத்துமலை திருத்தலம். இறைவழிப்பாட்டிற்கு மட்டுமே இத்தலம் என்ற காலம் கடந்து இன்று மலேசியாவில் புகழ்ப்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது பத்துமலை.ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக தற்போது விளங்குகிறது.

சுற்றுப்பயணிகளிடையே பத்து கேவ்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் பத்துமலை, தைப்பூச திருநாளுக்கு புகழ்பெற்றது என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு தைப்பூசத் தினத்தன்றும் இந்த பத்துமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி முருகப் பெருமானை தரிசனம் செய்வார்கள்.சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இப்படியாக தைப்பூசத் திருநாளுக்கு பத்துமலை திருத்தலம் புகழ்ப்பெற்றது. நாட்டின் சுற்றுலா காலண்டரில் பத்துமை திருத்தலத்தின் தைப்பூசத் திருநாள் இடம்பெற்று நீண்ட  காலமாகிறது.


தல வரலாறு

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்கள் மலேசியாவில் கூலித்தொழிலாளர்களாக பணி செய்து வந்தனர். அப்போது தொழிலாளர் தலைவராக இருந்தவர் காயாரோகணம்பிள்ளை. இவரது முயற்சியால் கோலாலம்பூரில் 1873ல் மாரியம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. ஒருநாள் கனவில் தோன்றிய அம்பிகை,"" என் இளையமகன் முருகனுக்கு பத்துமலைக்குகையில் கோயில் கட்டு,'' என்று உத்தரவிட்டாள். இதையடுத்து, காயாரோகணம் பிள்ளையின் மகனான தம்புசாமிப்பிள்ளையுடன் கந்தப்ப தேவர் என்பவர் இணைந்து காடாக அடர்ந்து கிடந்த பத்துமலையில் 1888ல் வேல் ஒன்றினை வைத்து வணங்கத் தொடங்கினார். இவ்விடம் வழிபாட்டுக்குரிய கோயிலாகி மக்கள் மத்தியில் புகழ்பெற்றது. பத்துமலை முருகன் கோயிலை அப்புறப்படுத்தும்படி கோலாலம்பூர் ஆட்சியாளர் ஜோஸ்துரை கட்டளையிட்டார். ஆனால், பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். 1920ல் கோயிலுக்குச் செல்வதற்கான படிகள் அமைக்கப்பட்டன. 1939ல் இருவழி சிமெண்ட்படிகளாக மாற்றப்பட்டது. இன்று மூன்று வழிகளைக் கொண்ட 272 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.


மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள். தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்திருக்கிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார். இந்த மூன்று ஆலய
ங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.
இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது என்கிற வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

கோயில் அமைப்பு

கோயிலில் நுழைந்தவுடன் விநாயகப்பெருமான் அருள்பாலிக்கிறார். மீனாட்சி, சொக்கநாதர், வேலாயுதமூர்த்தி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஆறுபடை முருகன் சந்நிதிகள் உள்ளன. பிரதான சந்நிதியாக சுண்ணாம்புப்பாறைகளுக்கு நடுவில் உள்ள குகையில் முருகப்பெருமான் வள்ளிதெய்வானையுடன் வீற்றிருக்கிறார்.

இந்த முக்கியமான பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.மிகப் பெரிய முருகன் சிலை:
மனதாலும் நிறத்தாலும் பொன்வண்ணம் கொண்டவராக முருகப்பெருமான் பத்துமலையின் அடிவாரத்தில் பக்தர்களை வரவேற்கக் காத்து நிற்கிறார். இந்த சிலையின் உயரம் 42.7 மீ,  அதாவது 140.09 அடி. உலகளவில் இன்று பத்துமலையை அடையாளம் காட்டும் சின்னமாக இது அமைந்துள்ளது. 30 தமிழக சிற்பிகள் இதை வடிவமைத்தனர். இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. தாய்லாந்தில் இருந்து தயாரிக்கப்பட்ட விசேஷ பொன்நிறக்கலவை பூச்சால் முருகனின் மேனி மின்னுகிறது. 2006, ஜனவரி 29ல் திறந்து வைக்கப்பட்டது. உலகத்தையே தன்வசப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமான் அருட்பார்வை அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

கண்கவரும் கலைக்கூடம்: தமிழர்கலை பண்பாட்டினை வெளிப்படுத்தும் விதத்தில் கலைக்கூடம் ஒன்று 1971 முதல் செயல்பட்டு வருகிறது. கந்தபுராணம், விஷ்ணுபுராணம், ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராண, இதிகாச காட்சிகள் இங்கு இடம்பெற்றுள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கீதோபதேச காட்சி, விநாயகர், அவ்வை, சிதம்பரம் நடராஜர், ஆறுபடை வீடு முருகன் சிலைகள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கின்றன.


வள்ளுவர் கோட்டம்: தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். திருக்குறளின் அறம்,பொருள், இன்பம் ஆகிய முப்பால் பிரிவுகளும், 133 அதிகாரங்களும், 1330 குறள்களும் பளிங்குக்கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விளக்கங்களும், ஓவியங்களும், சுதைச் சிற்பங்களும் பிரமிக்க வைக்கின்றன. 1980ல் அமைக்கப்பட்ட இக்கோட்டத்தில், 5 அடி உயர வள்ளுவர் சிலையும் உள்ளது.


ராமாயணக் குகை: கம்பராமாயணத்தின் பெருமையை நிலைநாட்டும்வகையில், 1995ல் இங்கு ராமாயணக்குகை அமைக்கப்பட்டது. குகையின் முகப்பில் 60அடி உயர ஆஞ்சநேயரின் சிலை வரவேற்கிறது. பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரையிலான காட்சிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இயற்கையும் செயற்கையும்: பத்துமலையில் விநாயகர் சந்நிதி அருகில் குளம் ஒன்று அமைந்துள்ளது. மலைக்குகையில், பச்சை பசேல் என்று மரங்கள் உள்ளன. புறாக்களின் சரணாலயமாக இது திகழ்கிறது. படியேறிச் செல்லும் போது எதிர்ப்படும் குரங்குகள் பக்தர்களை மகிழ்விக்கின்றன. முடிகாணிக்கை செலுத்தும் இடங்கள், சைவ உணவு விடுதிகள், பூஜை பொருள் விற்கும் கடைகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் என்று எல்லா வசதிகளும் உண்டு. பத்துமலை பழமை மாறாமல் இயற்கை பொலிவோடும், அதேசமயத்தில் புதுமையின் சின்னமாகவும் அமைந்துள்ளது.
சிறப்பு விழாக்கள்..

முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.  

தைப்பூசத் திருவிழா: முருகப்பெருமான் கோயில்கள் அனைத்திலும் தைப்பூசம் சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா 1891ம் ஆண்டு முதலே பத்துமலையில் நடத்தப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்நாளில் பத்துமலையில் கூடி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். தைப்பூசத்திற்கு முதல்நாள் 21அடி உயர வெள்ளி ரதத்தில் முருகப்பெருமான் எழுந்தருள்வார். இந்த தேர்பவனி கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலில் இருந்து பத்துமலை அடிவாரத்தை வந்தடையும். அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் உடன்வருவர். "முருகனுக்கு அரோகரா' எங்கும் மக்கள் கோஷம் விண்ணைத் தொடும். தொடக்க காலத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே நடைபெற்ற இவ்விழா, ஒருவாரகாலம் தொடர்ந்து நடக்கிறது.


பால்குடம் காவடி: பழங்காலத்தில் மலைமேல் இருக்கும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு பால், பன்னீர், சந்தனம் என்று பல்வேறு திரவியங்களைப் பக்தர்கள் காவடியில் எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வழக்கமே காவடி வழிபாடாக பின்னாளில் மாறிவிட்டது. காவடியைச் சுமந்து வரும் பக்தர்கள் காவடியோடு தங்கள் மனச்சுமையையும் முருகப்பெருமானிடம் இறக்கி வைத்து நிம்மதி பெறுகின்றனர்.
பயண வசதிகள்..

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பத்துகுகை அல்லது பத்துமலைக் குகை எனும் இந்தப் பகுதி அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால் பயண வசதி சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.

நன்றி : திரு.கேசவன் பெருமாள்,கோலாலம்பூர்.மலேசியா மற்றும்  தினமலர் நாளிதழ்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, 7 May 2010

Top 5 Star Hotels in Chennai City..
S.No

Hotel

Address
1
Taj Coromandel
37, Mahatma Gandhi Road Nungambakkam Chennai - 600 034, India
Web: 
www.tajhotels.com
Tel: (91-44) 6600 2827
 Fax: (91-44) 6600 2089
2
Taj Connemara
No.2 Binny Road, Chennai 600 002.
3
Trident Oberaoi Hotel
Trident, Chennai 1/24 G.S.T Road, Chennai 600 027, India
Tel : +91 44 2234 4747
Fax : +91 44 2234 6699
Website : www.tridenthotels.com
4
The Park-Chennai
Mr. Lemuel Herbert Ass. Vice President & General Manager 601, Anna Salai, Chennai 600006, India 
Tel : +91 (0)44 4267 6000
Fax : +91 (0)44 4214 4100 
Website : www.theparkhotels.com
5
Redisson GRT
RADISSON HOTEL GRT CHENNAI 531 GST Road, Saint Thomas Mount, Chennai 600016, India 
Tel : + 91 44 2231 0101
Fax : + 91 44 2231 0202 
Website : www.radisson.com
6
Taj Mount Road
Taj Mount Road No. 2 Club House Road Chennai - 600 002 Tamil Nadu India
Tel : : (91-44) 66313131
Fax : (91-44) 66313030
Website : www.tatahotelgroup.com
7
Sheraton Chola
Cathedral Road, Chennai 600 086 Tamil Nadu, India
Tel :Tel : (91) (44) 28110101
 Fax : (91) (44) 28110202
Website : www.itcwelcomgroup.in
8
The Sheraton Park Hotel & Towers
T.T.K. Road Chennai 600 018 Tamil Nadu, India
Tel :Tel : (91) (44) 24994101
 Fax : (91) (44) 24997101/24997201
Website : www.itcwelcomgroup.in
9
Le Royal Meridien
1 GST Road St Thomas Mount Chennai, Tamil Nadu 600 016 India
Tel :(91) (44) 2231 4343
Fax : (91) (44) 2231 4344
Website :