Monday, 3 May 2010

உலகசாதனை புத்தகம் (GUINNESS BOOK) உருவான கதை!! ஒரு தவகல்..


உலகசாதனை புத்தகம் (GUINNESS BOOK)
பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்­றில்­லாமல் வாழும் போது தனக்கும் அடுத்­த­வ­ருக்கும் பிர­யோ­ச­ன­மான வாழ்க் கையை வாழ்­வ­துடன் எமது பெயரை நிலை­நாட்டும் சாத­னை­யொன்­றையும் நிலை­நாட்ட முயற்­சிக்க வேண்டும் என்­ப­வர்­க­ளுக்­கான தளமே கின்னஸ் உலக சாத­னைகள்.
ஒவ்­வொரு வரு­டமும் வெளி­வரும் கின்னஸ் புத்­தகம், பல்­து­றை­களில் சாதனை படைத்­த­வர்­களின் பெயர்­களை சுமந்­து­வரும். அந்த சாத­னை­களில் சில வேடிக்­கை­யான சாத­னை­க­ளா­கவும் சாத­ர­ண­மா­ன­தா­கவும் புது­மை­யா­ன­தா­கவும் இருக்கும். அவை முயற்­சித்தால் நாமும் முறி­ய­டித்து விட­லாமே என்ற எண்­ணத்தை தோற்­விக்கும்.
எத்­தனை கன­மான விட­யத்­தையும் தாங்கும் மூளையும் இத­யமும் அத்­தனை கன­மா­ன­தல்­லவே. அது­போ­லவே சாத­னை­யா­ளனும் சாதா­ர­ண­மாக இருக்­கிறான் என்ற நம்­பிக்­கையை ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் மன­திலும் விதைப்­ப­துபோல், கின்னஸ் புத்­த­கத்தின் ஆரம்­பமும் சாதா­ர­ண­மா­கவே அமைந்­தது.

உலகசாதனை புத்தகம் (GUINNESS BOOK) உருவான கதை..
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலை என்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.


எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை. அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.

பலன்தான் இல்லை. இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார். தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது. அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.

இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம். சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும். கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். 

கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது. அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். 

முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
எத்­து­றையில் சாதனை படைக்­கலாம்?
என்ன சாதனை படைப்­பது என்­பது குறித்த ஒரு திட்டம் இருந்தால் அதன் பால் நீங்கள் முயற்­சிக்­கலாம். அது விசித்­தி­ர­மா­ன­தாக இருந்­தாலும் சரி விவே­க­மா­ன­தாக அமைந்­தாலும் சரி அதே­போல வேடிக்­கை­யாக அமைந்­தாலும் அவை அதி உயர் மட்டம் என்றால் சாத­னை­யாக அமைந்­து­விடும்.
ஒரு நிமி­டத்தில் அதிக தட­வைகள் கைதட்டிக் கூட உலக சாதனை படைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே சிறிய விட­யங்­க­ளாக இருந்­தாலும் அவை உலக சாத­னை­யாக கவ­னத்தில் கொள்­ளப்­படும்.
இவ்­வாறு உங்­க­ளுக்கு எது­வி­த­மான யோச­னையும் இல்லை என்றால் பழைய சாத­னை­களை முறி­ய­டிக்க முயற்­சிக்­கலாம். அல்­லது கின்னஸ் இணையப் பக்­கத்தில் Explore Records என்ற பகு­தியில் முயற்­சிக்­கூ­டிய சாத­னை­களை இடம்­பெறும். இதனை ஒரு குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் செய்து முடித்தால் அது சாத­னை­யாக அமையும்.   
அண்­மையில் ஒரு நிமி­டத்தில் முகத்தில் அதி­க­ள­வான கட­தா­சி­களை ஓட்­டினால் சாதனை என்ற அம்­சமும் ஒரு நிமி­டத்தில் அதிக நாணயக் குற்­றி­களை அடுக்­கு­வதும் சாத­னை­யாக நிகழ்த்­து­வ­தற்கு கின்னஸ் வாய்ப்­ப­ளித்­தி­ருந்­தது.
இது போன்ற இன்னும் ஏரா­ள­மான விட­யங்கள் சாத­னைக்­காக காத்­தி­ருக்­கின்­றன. அவை வாரத்­திற்கு சுமார் 1000 என்ற ரீதியில் கின்னஸ் அமைப்­ப­ா­ளர்­க­ளுக்கு கிடைக்­கப்­பெ­று­கின்­றதாம்.
கின்னஸ் உலக சாதனைப் புத்­தகம் தொடர்பில் 2005ஆம் ஆண்டு முதல் அதன் பிர­தம ஆசி­ரி­ய­ராக சேவை புரியும் க்ரேக் கிளண்டே கூறுகையில், புத்தகம், டீ.வி, ஈ புத்தகம், எப்ஸ், புதிய தொழில்நுட்பம் (2014ஆம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகம் 3டி வடிவில் வெளி யாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.) என எதுவாக இருந்தாலும் அங்கெல்லாம் கின்னஸ் புத்தகம் இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் சுமார் 40 ஆயிரம் சாதனைகள் பட்டியலிடப்படுகிறது. ஆனால் அவற்றில் 10 சதவீதமானவையே புத்தகத்தில் இடம்பெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதுவெல்லாம் சாதனையா நினைக்கா மல் இதுவல்லவோ சாதனை நீங்கள் துணிந்து செய்யும் ஒவ்வொரு முயற்சியும் சாதனையாக அமையலாம். இதன் மூலம் உங்களது பெயரும் நாளை பெறுவாய்ந்த கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறலாம்.

தொகுப்பு: அ.தையுப அஜ்மல்.

No comments:

Post a Comment