Friday, 31 August 2018

தமிழ்மண் மீட்புப் போராளி மங்கலங்கிழார !!

1911ஆம் ஆண்டிற்கு முன்னர் வடவேங்கடம், திருக்காளத்தி உட்பட பல்வேறு பகுதிகள் தமிழ்நாட்டின் வடவெல்லையாக இருந்து வந்தது. அப்போது பிரித்தானிய அரசு நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்கியது. 1911ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளன்று வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகளான திருத்தணிகை, புத்தூர், திருக்காளத்தி, சந்திரகிரி, சிற்றூர், பலமேனரி, புங்கனூர் ஆகிய வட்டங்களைப் பிரித்தும், கடப்பை மாவட்டத்தில் உள்ள தெலுங்கர் பகுதிகளான மதனப்பள்ளி, வாயல்பாடு ஆகிய இரண்டு வட்டங்களைப் பிரித்தும் புதிதாக சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இதன் காரணமாக சிறுபான்மை இனத்தவராகிய தெலுங்கர்கள் பெரும்பான்மையாக மாற்றப்பட்டனர். பனகல் அரசர், பொல்லினி முனிசாமி நாயுடு போன்றோர் சென்னை மாகாண முதல்வராக இருந்த காரணத்தால் சித்தூர் மாவட்ட அதிகார மையங்களில் தெலுங்கர்களே ஆதிக்கம் செலுத்தினர். பெரும்பான்மை தமிழர்கள் மீது தெலுங்குமொழி கட்டாயமாக திணிக்கப்பட்டது. சித்தூர் மாவட்டம் தெலுங்கர் மாவட்டமென்று பொய்யான பரப்புரை செய்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
சித்தூர் மாவட்டத்தில் ஆந்திரர்கள் தந்த நெருக்கடி காரணமாக தமிழ்மொழி மீது தமிழர்களே பற்று கொள்ளாமல் தடுத்து நிறுத்துப்பட்டதோடு, தமிழ்பாடசாலை கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆந்திரர்களின் தெலுங்கு தேசிய உணர்வு அங்குள்ள தமிழர்களை தெலுங்கு மொழியை பேச வைத்தது. அத்தகையச் சூழ்நிலையில், வளரும் தலைமுறை மாணாக்கர்களுக்கு தமிழ் மொழிக் கல்வியை அளித்து இலட்சக்கணக்கான தமிழர்களை தெலுங்கராக மாறிப் போகாமல் தடுத்து நிறுத்தினார் ஒரு தமிழர். அவர் தான் 'மாத்தமிழர்' மங்கலங்கிழார்.
வட ஆற்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்து ஒரு கல் தொலைவில் உள்ள புளியமங்கலம் எனும் சிற்றூரில் 1897ஆம் ஆண்டு ஐயாசாமி- பொன்னுரங்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஐயாசாமி அவ்வூரில் மணியம் (ஊர்த் தலைவர்) வேலை பார்த்து வந்தார். அவர் தம் மகனுக்கு குப்பன் என்று பெயரிட்ட போதிலும், மற்றவர் அவரை குப்புச்சாமி என்றே அழைத்து வந்தனர்.

குப்புச்சாமி தனது தொடக்கக்கல்வியை புளியமங்கலத்தில் கற்று வந்தார்.
அவரின் தமக்கையாருக்கு குழந்தைப்பேறு இல்லாத நிலையில் பத்துவயது நிரம்பிய குப்புச்சாமியை வளர்க்க விரும்பினார். அவர் விரும்பிய படி குப்புச்சாமி தமக்கையார் வசித்த சென்னை புரசைவாக்கத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

1908இல் குப்புச்சாமி அங்குள்ள பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்ததோடு, தேர்வுப் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்றார்.
இதைக் கண்டு இன்புற்ற அவரின் தமக்கையார் எதிர்காலத்தில் குப்புச்சாமி பெரிய வழக்கறிஞராக வரவேண்டும் என்று விருப்பப்பட்டார். அவரின் கனவோ நிறைவேறவில்லை. கணவர் எதிர்பாராமல் இறந்துவிட, குடும்பம் வறுமையில் மூழ்கத் தொடங்கியது. இதன் காரணமாக குப்புச்சாமி படிப்பைக் கைவிட்டு தச்சுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
1914இல் இளமையில் கல்வி கற்க முடியாத நிலையை எண்ணி வருந்திய குப்புச்சாமிக்கு இரவுப் பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இரவுப் பள்ளியை டி.என்.சேஷாசலம் ஐயர் என்பவர் கல்வி இடை நிற்றல் மாணவர்களுக்காக நடத்தி வந்தார். அப்பள்ளியில் குப்புச்சாமி சேர்த்துக் கொள்ளப்பட்டார். டி.என்.சேஷாசலம் ஐயர் சிறந்த வழக்கறிஞர் மட்டுமல்ல; சிறந்த தமிழுணர்வாளர்; ஆங்கிலம், தமிழ், வடமொழியில் புலமை மிக்கவர். இவரின் தமிழுணர்வும் குப்புச்சாமியின் தமிழார்வமும் இரவுப்பள்ளியில் ஒன்றாய்க் கலந்தது.

தமிழ்மொழி மேம்பாட்டுக்காக ஐயர் "கலாநிலையம்" எனும் இலக்கிய ஏட்டை நடத்தி வந்தார். அவர் அவ்வேட்டின் பொறுப்பு முழுவதையும் குப்புச்சாமியிடம் ஒப்படைத்தார். அவ்வேடு தொடர்ந்து வெளிக்கொணர நிதி தேவைப்பட்டதால்
மாணவர்கள் மத்தியில் "கலாநிலையம்" பெயரிலே நாடகம் தயாரிக்கப்பட்டு சென்னை, சிதம்பரம், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் நடத்தப்பட்டது.

இந்நாடகத்தில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு " தமிழ் நாடகக் கலைத் தந்தை" சங்கர தாஸ் சுவாமிகள் பயிற்சியளித்தார். இந்த நாடகத்தில் பெண் வேடமிட்டு குப்புச்சாமி சிறப்பாக நடித்தார். இவரின் நடிப்பைக் கண்டு பிரபல நாடக நடிகர் கிட்டப்பா வியந்து பாராட்டினார். நாடகம் மூலம் கலாநிலையப் பணிகள் பலரின் பாராட்டைப் பெற்றபோதிலும், நிதியுதவி கிடைக்கப் பெறாததால் நின்று போனது.
இதற்கிடையில், 1922-இல் தமது இருபத்தைந்தாம் வயதில் கமலாம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் தமிழ் மீதான ஈடுபாடு கூடியதே தவிர குறையவில்லை.
தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களை பிழையறக் கற்றுக் கொள்ளவும், இலக்கண, உரை விளக்க நூல்களில் சிறப்பெய்திடவும் விரும்பினார். அதன் பொருட்டு "இலக்கணப்புலி" என்று அறியப்பட்ட தமிழறிஞர் கா.ரா.கோவிந்த சாமி முதலியார் என்பவரிடம் போய்ச் சேர்ந்தார். இவரோடு தமிழறிஞர் சிந்தாமணி மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை என்பவரும் இணைந்து படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தச்சுத் தொழிலாளி மிகுந்த ஆர்வத்தோடு இலக்கணம் கற்பதில் சிறந்து விளங்குவதைக் கண்டு வியப்புற்ற கா.ர. கோவிந்தசாமி முதலியார் அவர்கள் பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக நியமனம் செய்யப் பரிந்துரைத்தார். அங்கு பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்து வந்த குப்புச்சாமிக்கு இரத்த அழுத்த நோய் கூடி, பற்கள் கொட்டி விடவே ஆசிரியப் பணியை கைவிட்டார்.
இந்நிலையில், தந்தையார் இறந்து விடவே, அவரின் உறவினர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி "மணியம்" வேலையை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று குப்புச்சாமியும் சென்னையிலிருந்து தம் பிறந்த ஊரான புளிய மங்கலத்திற்கு இடம் பெயர்ந்தார்.
1934இல் ஊர்த்தலைவர் பொறுப்பை ஏற்று திறம்பட பணியாற்றியதால், அவ்வூர் மக்கள் "மங்கலங் கிழார்" என்று அழைக்கலாயினர். இப்பெயரே நாளடைவில் எல்லோரும் அழைக்கும் பொதுப் பெயராக நிலைத்து நின்றது.
மங்கலங்கிழார் தனக்கு கல்வி புகட்டிய டி.என். சேஷாசல ஐயர் வழியில் புளியங்குளத்தில் இரவுநேரப்பள்ளியைத் தொடங்கி தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது இராணிப்பேட்டை சின்மயானந்தா அடிகளோடு தொடர்பு கிடைத்ததால் துறவு நிலைக்கு மாறினார். அதுமுதல் வெண்மையான வேட்டியும், காவி ஜிப்பாவும், கதர் சால்வையும் அணியத் தொடங்கினார். அவரின் புறத் தோற்றம் மாறினாலும் உளத் தோற்றம் மாறவில்லை. சித்தூர் மாவட்டம் முழுவதும் தெலுங்கு மொழி ஆதிக்கத்தால் தமிழ்மொழி அழியும் நிலைகண்டு அவரின் உள்ளம் குமுறியது. உடனடியாக அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் விழிப்புணர்ச்சியூட்டிட "அறநெறித் தமிழ்ச்சங்கம்" என்னும் அமைப்பை நிறுவினார்.
1939-இல் வளர்புரத்தில் முதல் அறநெறி தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக விரிவடைந்து குருவராயப்பேட்டை, அம்மையார் குப்பம் , மின்னல், நரசிங்க புரம், கீழ்ப்புத்தூர், மேல் புத்தூர், நாராயணவனம், சத்திரவாடி, சிந்தலப்பட்டடை, பொதட்டூர் பேட்டை, அத்தி மாஞ்சேரிப் பேட்டை, புதுப்பேட்டை, சுரைக்காய்ப் பேட்டை, மத்தூர், மத்தேரி முதலிய 16 கிராமங்களுக்கு கிளை பரப்பியது.
மங்கலங்கிழார் முயற்சியால் மேற்கண்ட ஊர்களில் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டு நான்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. அவைகள் ஆரம்ப வகுப்பு, ஒளவை வகுப்பு, சிற்றிலக்கிய வகுப்பு, பேரிலக்கிய வகுப்பு என அழைக்கப்பட்டன. முதலிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு இலக்கியம் கற்கும் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தினர்.
அறநெறிக் கழகம் மூலம் தமிழுணர்வு பெற்ற மாணவர்களைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊரிலும் "மாணவர் மாநாடு" பெயரில் விழா நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் தமிழறிஞர்கள் தொ.ப.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் ஆகியோர் பங்கு பெற்று தமிழ் எழுச்சியூட்டினர்.
அது போல், தமிழ் தழைக்கப் பாடுபட்ட சமயச் சான்றோர்களான திருஞான சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரருக்கும் "திருநாள்" பெயரில் விழா கொண்டாடப் பட்டது. அந்நிகழ்வுகளில் 'தமிழ்த்தென்றல்" திரு.வி.க., ச.சச்சிதானந்தம், " சைவப் பெரியார்" சச்சிதானந்தம் , தமிழ் அகராதி தந்த பாலூர் கண்ணப்ப முதலியார், முனைவர் மா.இராசமாணிக்கனார், தென்னிந்திய சீவரட்சகத் தலைவர் ஶ்ரீபால், மறைமலையடிகள் மகள் நீலாவதி அம்மையார் ஆகியோர் பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்தினர். பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற திரு.வி.க. மங்கலங் கிழாரை "வித்தியானந்தர்" என்றே விளிப்பது வழக்கம்.
பல்வேறு விழாக்கள் நடத்தி மங்கலங்கிழார் செய்த தமிழ்த்தொண்டிற்கு நல்ல பலன் கிடைத்தது. சித்தூர் பகுதியில் தமிழ் படித்த பல்லாயிரக்கான மாணவர்கள் உருவானார்கள். பலநூறு மாணவர்கள் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று ஆசியர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அடுத்த கட்டமாக திருத்தணிகையில் தமிழ் வளர்ச்சிக் கழகம், பொதட்டூரில் தமிழாசிரியர் பயிற்சிப் பள்ளி என்று மங்கலங்கிழாரின் தமிழ்ப்பணி விரிவடைந்தது.
மங்கலங் கிழாருக்கு தமிழ்ப்பணி ஒரு கண்ணென்றால், 'தமிழ்மண் மீட்புப் பணி' மறு கண்ணாகும்.
சித்தூர் மாவட்டத் தோற்றத்திற்கு முன்பு இருந்த மக்கள் தொகை விவரம், வரைபடங்கள், கல்வெட்டு, இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றை சேகரித்தார். சித்தூர் குறித்து பல்வேறு செய்திகளை திரு.வி.க. மூலம் உறுதி செய்து கொண்டார். இதற்கிடையில், ம.பொ.சி.யின் "தமிழ்முரசு" ஏடு தமிழ் மாகாண உரிமை பற்றி எழுதி வந்ததையும் கண்ணுற்றார்.
1947ஆம் ஆண்டு வடக்கெல்லை கிளர்ச்சிக்காக ம.பொ.சி. உள்ளிட்ட தோழர்கள் திருவாலங்காடு வந்தபோது வரவேற்பு அளித்ததோடு உடன் சென்று தமிழர்களின் வடக்கெல்லைப் பகுதிகளை அடையாளங் காட்டினார்.
1949இல் திருத்தணிகையில் "தமிழ் வளர்ச்சிக் கழகம்" தொடங்கப்பட்ட போது அங்கு வந்திருந்த மங்கலங்கிழாருக்கு எல்லை மீட்புப் போராளிகள் தளபதி கே. விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணியம், சித்தூர் அரங்க நாத முதலியார் ஆகியோரின் நட்பும் கிடைத்தது.
அதே ஆண்டில் "ஆந்திர கேசரி" என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசம் என்பவர் சென்னை ஆந்திரருக்கு உரியது என்று பேசி வந்தார். அப்போது ம.பொ.சி. ஒருங்கிணைப்பில் சென்னையில் "தமிழர் மாநாடு" கூட்டப்பட்டது. அந்த மாநாட்டிற்கு ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார். அதில் வடக்கெல்லை சார்பில் மங்கலங்கிழார் கலந்து கொண்டு சென்னை தமிழருக்கே என்று முழங்கினார்.
அத்தோடு நின்று விடாது, சித்தூர் ஜில்லா அறநெறித் தமிழ்ச் சங்கம் சார்பில், "தமிழ்ப் பெரு மக்களுக்கொரு வேண்டுகோள் " (சங்க வெளியீடு 1) என்ற பெயரில் வட ஆர்க்காடு தமிழ்ப்பகுதி பறிபோன வரலாற்றைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார்.
மற்றொன்றில், "தமிழ்நாட்டின் வடக்கு" என்று தலைப்பிட்டு (சங்க வெளீயிடு 2 ) விரிவாக வெளியிட்டார். அதில், சங்க இலக்கிய, இலக்கண, செய்யுள், புராண நூல்களிலும், கல்வெட்டுகளிலும் திருப்பதி வரை தமிழக எல்லை குறிப்பிட்டு இருப்பதை விளக்கினார்.
மேலும், தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆந்திரருக்கு தெலுங்கு மொழி கற்கும் வசதியும், காரமான உணவு சாப்பிடுவதற்கு தனி விடுதி வசதியும் அளிக்கப்படும் போது, விசாகப் பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் மட்டும் தமிழுக்கும், தமிழருக்கும் இடமில்லையே? ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்மண் மீட்புப் போராட்டத்தின் போது பின்வரும் முழக்கங்களை தானே கைப்பட எழுதி வெளியிட்டார். அது வருமாறு:
1. வேங்கடத்தை விட மாட்டோம். 2. சென்னை ராஜ்ஜியத்தின் வடவெல்லை திருப்பதி மலை 3. நகரி பிர்க்காவை சென்னையோடு சேர். 4. புத்தூர் பிர்க்காவை சென்னையோடு சேர் . 5. சித்தூர் தமிழ்ப் பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்க்காதே! 6. முன்னே எல்லையைப் பிரி- பின்னே நாட்டைப் பிரி 7. நமது ராஜ்ஜியம் சென்னை ராஜ்ஜியம் 8. நமது தலைநகரம்- சென்னை நகரம் 9. சென்னையோடு சேர்ந்து வாழ்வோம் 10. சென்னை நகரம் சமீபமானது 11. விஜயவாடா- வெகுதூரம் 12. ஐதராபாத்து- அதிக தூரம் 13. சென்னையை விட்டால் - பின்னால் கஷ்டம்.

1952 திசம்பர் இறுதியில் பிரதமர் நேரு ஆந்திரம் தனிமாநிலமாக பிரிக்கப்படும் என்றும், அதில் தமிழ் மாவட்டமான சித்தூரும் உள்ளடங்கும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து ம.பொ.சி. முயற்சியில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. அதில் மங்கலங்கிழார் உறுப்பினராக இருந்து தீவிரமாக செயல்பட்டார். 25.6.1953இல் 144 தடையை மீறி மறியல் நடத்தியதால் மங்கலங்கிழார் கைது செய்யப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டார்.
வடக்கெல்லை பாதுகாப்புக் குழு கூட்டம் மீண்டும் 10.7.1953இல் சென்னையில் கூடி சித்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்புக்கு பாதுகாப்பு வழங்கங் கோரி பிரதமர் நேருவை சந்திக்க முடிவெடுத்தது. இக் கூட்டத்தில் ம.பொ.சி., தளபதி விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணியம், டி.எம்.திருமலைப் பிள்ளை, வேலூர் அண்ணல் தங்கோ ஆகியோரோடு மங்கலங்கிழாரும் பங்கேற்றார். இதுவே மங்கலங்கிழார் இறுதியாக கலந்து கொண்ட நிகழ்வாகும்.
பொதட்டூரில் தமிழாசிரிரியர் பயிற்சிப் பள்ளி கட்டட வேலையில் தீவிரம் காட்டி வந்த நிலையில், மங்கலங்கிழாருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் பள்ளிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி 31.8.1953இல் காலமானார்.
மங்கலங் கிழார் எழுதிய நூல்கள் பத்துக்கும் மேற்பட்டவை. அவற்றுள் வடவெல்லை, தமிழ்நாடும் வடவெல்லையும், தமிழ்ப் பொழில், நளவெண்பா விளக்க உரை, இலக்கண விளக்கம், இலக்கண வினா விடை , நன்னூல் உரை ஆகியவை முதன்மையான நூல்களாகும்.

குறிப்புதவி:
1. தமிழக வரலாற்றில் மாத்தமிழர் மங்கலங்கிழார் - முனைவர் செ.உலகநாதன்
2. தமிழக வடக்கெல்லைப் போராட்டமும்- தணிகை மீட்சியும் -கோல்டன் ந.சுப்பிரமணியம்
3. தமிழ் வளர்த்த மாமுனிவர் மங்கலச் கிழார் - முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன்


நன்றி:

இக்கட்டுரை,தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 அக்டோபர் 16-31இதழில் வெளிவந்தது.

Sunday, 26 August 2018

'குற்றால அருவியில் ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் "ஆஷ்'' என்ற வெள்ளைக்கார கலெக்டர் என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
collector ash durai க்கான பட முடிவு அன்றைய காலத்தில் ''குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது", என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் "ஆஷ்'' என்ற வெள்ளைக்கார கலெக்டர் என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் 
ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் (Robert William Escourt Ashe) ICS (இந்திய நிர்வாகப் பணி) (பிறப்பு நவம்பர் 23, 1872 )பிரித்தானிய அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் இருந்தவர்
ஒரு நாள் ஆஷ் துரை மாலை நேரத்தில்  தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது. 

ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை.
அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். "ஏன்" என்று வினவிய துரைக்கு " அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள்
அங்கு போகக் கூடாது என்றும் சொல்லுகிறார்....!!!
உடனே ஆஷ் துரை ராவுத்தரை பார்த்து "சரி நீ போய் பார்த்து வா" என்றார். சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார், " முதல் பிரசவம் துரை. சின்ன பொண்ணு ரெண்டு நாளா கத்திக்கிட்டு இருக்காளாம், பிள்ளை வயித்துல தலை மாறிக் கிடக்காம். பரிதாபம், இனி எங்கிட்டு துரை பொழைக்கப் போகுது" என்றார்.
ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக் கேட்க ,அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா. பின்ன எப்படி வண்டி கட்டி டவுனுக்கு கொண்டு போறது?, என்றார் ரவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி. ஆஷ்துரை இறங்கி அக் குடிசை நோக்கி போனார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் ஒரு உயிரையேனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று 
உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையோட்டியைப் பணித்தார் துரை. அந்த வழியாய் செல்ல வண்டிப்பாதை பிராமணர்களின் அக்கிரஹாரத்தை தாண்டித்தான் சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டி மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றிப் போகும் வண்டி இப் பாதை வழியே போகக் கூடாது என்று பார்ப்பணர்கள் வழி மறித்து வழி விட மறுக்கிறார்கள்...!!!வண்டி கொண்டு வரச் சொன்னது துரையும் அவரின் மனைவியும் தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள்.
இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார்ராவுத்தர். இதைக் கேட்ட ஆஷ் துரை அவர்கள்,தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.
collector ash durai க்கான பட முடிவுகுதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்தும் கொண்டார். வண்டி அக்கிரஹாரத்திற்குள் நுழைகிறது.பார்ப்புகள் கூட்டமாய் வழி மறிக்கிறார்கள். "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்கிறார்கள்.
வழி விட சொல்லிப் பார்த்த துரை அவர்கள் வழி விட மறுக்கவே, வண்டியைக் கிளப்பு என்று உத்தரவிடுகிறார். மீறி வழி மறித்த பார்ப்புகளின் முதுகுத் தோல் துரை அவர்களின் குதிரை சவுக்கால் புண்ணாக்கப்படுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.
ஆஷ் துரை அவர்களிடம் அடி வாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான்.அவன் பெயர் வாஞ்சிநாதன் திருவிதாங்கூர் சமத்தானத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்கிற சங்கர அய்யர். .அப்போது வாஞ்சிநாதன் எடுத்தசபதம் தான்.  திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள மணியாச்சி தொடருந்துச் சந்திப்பில்,17.06.1911 அன்று ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட வஞ்சகமாக அமைந்து விட்டது.
ஆஷைக் கொன்றபின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். கொலை நடந்தபோது வாஞ்சியுடன் இருந்த சங்கர கிருஷ்ண அய்யர் என்ற இளைஞர் தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் அவர் சீக்கிரமே பிடிபட்டு தண்டனையளிக்கப்பட்டார். 

இந்தியச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போது தென்னிந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் ஒருவர் மட்டும்தான்.

மனித உயிரை விட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கப்பட்டு வருகிறது.

 பிரித்தானிய அரசு 1913ல் தூத்துக்குடியில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியது. இப்பொழுது அந்த நினைவுச் சின்னம் பாழடைந்த நிலையிலுள்ளது
இதுவும் "ழான் வோனிஸ் எழுதிய "Ash. Official Notes"என்னும் குறிப்புகளில் அரசு ஆவணக் காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக் கொண்டிருக்கிறது...

மேலும் அறிய..
https://www.youtube.com/watch?v=w6cao4bkUYY

தொகுப்பு மு.அஜ்மல் கான்.

Tuesday, 21 August 2018

அவசர உதவிக்கு கட்டணமில்லாத் தொலைபேசி !!

1033 - அவசர உதவி
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவசரக் காலங்களில் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக, நான்கு இலக்கம் கொண்ட கட்டணமில்லாத் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகரமயமாக்கல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம், சாலை விரிவாக்கம் போன்றவற்றால் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 1.37 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 4 லட்சம் பேர் காயமடைகின்றனர்.

இந்தியாவில் தற்போது 90 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகள் மூலம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நுழைவுக் கட்டணங்களை வசூலிக்கும் பெரும்பாலான சுங்கச் சாவடிகள் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் சில சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. சாலை விபத்து நேரிடும் காலங்களில், பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை மீட்பதற்கான அவசரகால தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து வசதிகளும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தாலும், அந்தந்த மாநில அரசுகளாலும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இருப்பினும், அவசர கால தொலைபேசி எண் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதால் அவற்றை நினைவில் கொள்வது கடினமாகவும், உடனடியாக தொடர்பு கொள்வது பெரும் சவாலாகவும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவசர காலங்களில் எளிதில் நினைவு கொள்ளும் வகையில் நான்கு இலக்கம் கொண்ட கட்டணமில்லாத் தொலைபேசி எண் சேவையை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையின் புள்ளி விவரப்படி, நாடு முழுவதும் கடந்த 2013-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4.86 லட்சம் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 1,37,572 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

நிமிஷத்துக்கு ஒரு விபத்து

அதாவது, ஒவ்வொரு நிமிஷத்துக்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது. நான்கு நிமிஷங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். "கோல்டன் ஹவர்' என்று குறிப்பிடப்படும் நேரத்திற்குள் விபத்தில் சிக்கும் நபருக்கு சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

தேசிய நெடுஞ்சாலையில், ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கு இடையிலும் அனைத்து விதமான அவசரகால வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அதேபோல, நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் சாலையின் இருபுறமும் அவசரக் கால தொலைபேசி எண்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.மேலும், சுங்கச் சாவடிகளில் வழங்கப்படும் வாகன நுழைவுச் சீட்டிலும் அந்த எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். இருப்பினும், ஒவ்வொரு சுங்கச் சாவடிக்கும் இந்த அவசரகால தொடர்பு எண்கள் மாறுபட்டிருக்கும். இதன் காரணமாக, விபத்தின் காலத்தில் சாலைப் பயன்பாட்டாளர்கள் அந்தத் தொடர்பு எண்ணை நினைவில் கொள்வது கடினமாக உள்ளது.

நான்கு இலக்க எண்


எனவே, தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் வசதிக்காக நாடு முழுவதும் நான்கு இலக்கம் கொண்ட ஒரே எண் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 1033 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்தின் போது வாகன ஓட்டிகள் எளிதாக நினைவில் வைத்து, உடனடியாக தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.


6 கால் சென்டர்கள்


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு அவசர உதவியை உடனடியாகப் பெறலாம். இதற்கென தெற்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு, தில்லி, சண்டீகர் ஆகிய 6 மண்டலங்களுக்கு உள்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை இணைக்கும் விதமாக, 6 கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர உதவிக்காக, இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் முதல் உதவிக்கான அனைத்து விதமான வசதிகளையும் கட்டணமில்லாத் தொலைபேசி மையப் பிரதிநிதிகள் மேற்கொள்வார்கள்.

அதாவது, அருகிலுள்ள சுங்கச் சாவடி, தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஆம்புலன்ஸ், 108 சேவை மையம், காவல் நிலையம், அவசரச் சிகிச்சை மையம் ஆகியவற்றுக்குத் தொடர்பு கொண்டு விபத்து பற்றி உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

ஆதாரம் : இந்திய அரசு - தகவல் மையம்

Thursday, 16 August 2018

ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை !!

ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை.

அப்படியெனில்,

1. தரமான ஹெல்மெட்டுகள் மட்டுமே சந்தையில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா?

2. பல்வேறு அளவுகளில் ஹெல்மெட்டுகள் தயாரிக்க நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளதா?
3. விதி மீறல்களின் போது போலீசார் லஞ்சம் வாங்காமல் தடுத்திட என்ன ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன?
4. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றால், அதற்கு கீழுள்ளவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா அல்லது அவர்கள் இருசக்கர
வாகனத்தில் பயணிக்கக்கூடாதா?
5. விபத்துகள் நேராமல் இருக்க, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதா?
6. கனரக வாகனங்களின் போக்குவரத்துகள் கட்டுக்குள் உள்ளனவா?
7. வாகன ஓட்டுனர் உரிமம் முறையான தேர்வில்தான் வழங்கப்படுகின்றதா?
8. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் அவர் வேறு ஒரு போக்குவரத்து அலுவலகத்தில்
உரிமம் எடுக்க முடியாமல் இருக்க ஏற்பாடு இருக்கின்றதா?
9. அலுவலகங்கள், போகுமிடங்களில் வண்டிகளுக்குப் பார்க்கிங் இருப்பது போல்ஹெல்மெட்டுகளைப் பாதுகாக்கவோ வைக்கவோ வசதி இருக்கிறதா?

நடைமுறையில் சேர்ந்துக்கொண்டால்
1. கொண்டை வைத்துள்ளோர்கள் ஹெல்மெட் போடுவது சிரமம்.
2. சிறுவர்களின் அளவிற்கு ஹெல்மெட் இல்லை.
3. நடுத்தரவர்க்கத்தினர், கணவன் மனைவி இரு குழந்தைகள் என ஒரு இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர். (அதுவே தவறு.) நான்கு ஹெல்மெட்டுகள் போட்டுக்கொண்டு போய் எங்கே கழட்டி வைப்பார்கள், அதனை எப்படிப் பாதுகாப்பார்கள்?
4. ஹெல்மெட் அடிக்கடி தொலையவும் திருடு போகவும் வாய்ப்பு உள்ள நிலையில் திரும்பத்திரும்ப வாங்கிட மக்களால் முடியுமா?
5.பெட்ரோல் விலை உயர்வோடு ஹெல்மெட் விலையும்  சேர்ந்துகொண்டால் என்னதான் செய்வார்கள்?
இது போலீசார் லஞ்சம் வாங்கவும், லஞ்சம் கொடுத்தால் தப்பு செய்யலாம் என்று பொதுமக்களின் எண்ணம் வளரவும்தான் வழி
செய்யும்.
6.மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு, புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்றெல்லாம் சொல்லி மக்கள் உடல் நலத்தைக் கெடுக்கும் அரசு,ஹெல்மெட் போடாமல் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என்று தெருவெங்கும் அறிவிப்பு வைப்பதோடு நின்று கொள்ளலாம்.
பிடுங்க வேண்டிய ஆணிகள் நிறைய இருக்கும்பொழுது இந்த தேவையற்ற ஆணியைப் பிடுங்க வேண்டியதில்லை.
மொத்தத்தில் இது ஒரு பொதுஜனவிரோதப் போக்கு.
இனி உங்கள் கருத்துகள்.....

Wednesday, 15 August 2018

மோமோ ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் !


பதின்வயதுகளுக்கு உரியவர்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கும் ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் மோமோ!


momo game image க்கான பட முடிவு உயிர்க்கொல்லி விளையாட்டு என்றவுடன் சட்டென உங்கள் நினைவுக்கு புளூவேல் விளையாட்டு வந்திருக்கும். கடந்த 2016, 2017களில் சுமார் 130 உயிர்களைப் பலிவாங்கிய விளையாட்டு அது. ஐம்பது நாட்கள், ஐம்பது சவால்கள். ஐம்பதாவது சவால் தற்கொலை செய்து கொள்வது என்பது தான் புளூவேல் விளையாட்டின் அடிப்படை. அந்த வலையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் தான்.
சமீப காலங்களில் நீல திமிங்கல விளையாட்டு, கிக்கி நடனம் ஆடும் சவால் என இளம் தலைமுறையினருக்கு ஆபத்து விளைவிக்கும் விசயங்கள் டிரென்டிங் ஆகி வருகிறது.
புளூவேல் சேலஞ்ச் எனப்படும் நீல திமிங்கலம் ளையாட்டு ஆனது ரஷ்யாவில் இருந்து பிரபலம் அடைந்தது.  இந்த விளையாட்டின்படி 50 நாள்களில் நிர்வாகிகள் தரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  இறுதி சவாலில் விளையாடுபவர் தற்கொலை செய்ய வேண்டும் என இருக்கும்.
இந்த விளையாட்டால் உலகம் முழுவதிலும் சிறுவர்கள், இளைஞர்கள் என 130 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.  மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் இதற்கு பலர் அடிமையாகி தற்கொலை செய்துள்ளனர்.
இதேபோன்று கிக்கி சவால் சமீபத்தில் பிரபலம் அடைந்து வருகிறது.  காரில் இருந்து இறங்கி சாலையோரம் நடனம் ஆட வேண்டும் என்பது இந்த சவால்.  இதனை செய்ய வேண்டாம் என இந்தியாவில் பல மாநிலங்களில் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கிக்கி நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் அவற்றை வெளியிட்டு பலரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.


இந்த நிலையில், இன்டர்நெட்டில் புதிய சவால் ஒன்று டிரென்டிங் ஆகி வருகிறது

இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட் பண்ண தேவையில்லை, வாட்ஸ்அப்மூலம் வந்து உயிரை விலைபேசுகிறது என்பது தான். இப்போது தகவல் தொழில்நுட்பம் எல்லோரது கையிலும் ஸ்மார்ட்போனைக் கொடுத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் இருக்கும் எல்லோரது கையிலும்வாட்ஸ் அப் இருக்கிறது. அது இல்லாமல் இருக்க முடிவதில்லை. அர்ஜெண்டினாவில் ஒரு பன்னிரண்டு வயது சிறுமி உற்சாகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய அண்ணனும், பெற்றோரும் அவள் மீது மிகவும் செல்லமாக இருந்தார்கள். ஒரு நாள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென போனை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றாள். சற்று நேரத்துக்குப் பின் அவளுடைய சகோதரன் பார்த்தபோது அவள் பக்கவாட்டில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தொங்க நினைப்பது தெரிந்தது. அலறியடித்த அண்ணன் ஓடிப் போய் அவளைக் காப்பாற்ற முனைந்தான். அதற்குள் அவள் தூக்கில் தொங்கி விட்டாள். அலறல் கேட்டு ஓடிவந்த பெற்றோரும் ஓடிச்சென்று அவளை கீழே இறக்கினார்கள். ஆனால் பாவம் அவள் அதற்குள் இறந்துவிட்டிருந்தாள். அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. பன்னிரண்டு வயதான தங்களுடைய செல்ல மகளுக்கு தூக்கு போடுமளவுக்கு என்ன மன அழுத்தம் ? எனும் கேள்வி அவர்களை நிலை குலைய வைத்தது.அப்போது தான் அவர்களுடைய பார்வை அருகிலிருந்த அவளது போன் மீது போனது. அந்த போன் அங்கே நடக்கின்ற விஷயங்களையெல்லாம் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அதிகரிக்க காவல் நிலையத்துக்கு ஓடினார்கள். அவர்கள் வந்து போனை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போது தான் ‘மோமோ‘ எனும் உயிர்க்கொல்லி விளையாட்டின் வீரியம் உலகிற்குப் புரிந்தது.

.  ஒரு வாளியில் கொதிக்க வைத்த நீரை எடுத்து கொண்டு மக்களிடம் செல்ல வேண்டும்.  அவர்கள் அறியாத நிலையில், வாளி தண்ணீரை அவர்கள் மீது ஊற்ற வேண்டும்.  அவர்கள் வலியால் அழும்பொழுது அதனை படம் பிடிக்க வேண்டும்.
இதுபோன்ற சவாலால் சமீபத்தில் இண்டியானா பகுதியை சேர்ந்த கைலேண்ட் கிளார்க் என்ற 15 வயது சிறுவனுக்கு 2வது நிலை தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.
இதேபோன்று மற்றொரு சவாலும் உள்ளது.  கொதிக்கும் நீரை ஒருவருக்கு தெரியாமல் ஸ்டிரா வைத்து குடிக்க செய்ய வேண்டும்.  இதில் பலருக்கு 2வது மற்றும் 3வது நிலை தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த முட்டாள்தனம் நிறைந்த சவாலால் 8 வயது சிறுமி உயிரிழந்து உள்ளாள்.  அவரது மாமாவே இந்த சவாலை செய்யும்படி சிறுமியிடம் கூறியுள்ளார்.  இளம் வயதினர், குழந்தைகள் இதுபோன்ற செயல்களை செய்யாமல் தடுக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், உலகையே அதிர செய்த நீல திமிங்கலம் சவால், சமீபத்தில், டிடெர்ஜெண்ட் பேக்கெட்டுகளை அப்படியே சாப்பிடுவது என்ற டைடு போட் சவால் ஆகியவை ஆபத்தினை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விசயங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன.

“ஹாய்“ என வெகு சாதாரணமாக ஏதோ ஒரு எண்ணிலிருந்து வருகின்ற வாட்ஸ்அப் மெசேஜ் தான் மோமோவின் தொடக்கப் புள்ளி. பதிலுக்கு ஒரு ஹாய் அனுப்பினால், ‘என் பெயரை மோமோ என பதிவு செய்து கொள். நாம் நண்பர்களாக இருப்போம்“ என அடுத்த மெசேஜ் வரும். பதிவு செய்தால் ஒரு பயமுறுத்தும் பெண்ணின் படம் டிஸ்ப்ளே பிக்சராக தெரியும். அந்த படத்தை வடிவமைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த மெடோரி ஹாயான்ஷி எனும் கலைஞர். ஆனால் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. சரி, விஷயத்துக்கு வருவோம். கள்ளம் கபடமில்லாத பிள்ளைகள் அந்த எண்ணைச் சேமித்து வைத்தால் அடுத்தடுத்த மெசேஜ்கள் வரும். முதலில் வெகு சாதாரணமாக ‘உனக்குப் பிடித்த நிறம் என்ன?‘ என்பது போல உரையாடல்கள் ஆரம்பித்து வளரும். ஒரு சின்னப் பெண் பூசணிக்காய் ஒன்றை வைத்திருப்பது போலவோ அல்லது மக்கள் கூட்டம் போலவோ வெகு சாதாரணமான சில புகைப்படங்களும் வரும்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு திசை மாறும். செல்பி எடுத்து அனுப்பு, அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பு என்பது போல உரையாடல் நீளும். சில நாட்களுக்குப் பின் விபரீதமான செயல்களைச் செய்யச் சொல்லி மெசேஜ் வரும். அதை மறுக்கும் போது அந்தரங்கத்தை வெளியிடுவேன் என்றோ, நெருக்கமானவர்களை ஏதாவது செய்து விடுவேன் என்றோ மிரட்டல் வரும். தலையில்லாத மனிதர்கள், கோரமான அச்சுறுத்தும் புகைப்படங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும். “இதோ செத்துப் போனவர்களுடைய புகைப்படங்கள்“ இதே போல நீயும் செத்துப் போ என்பது போல புகைப்படங்கள் மன உளைச்சலை அதிகரிக்கும். நான் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறேன், உன் தோழி இன்னும் வீடு போய் சேரவில்லை என தற்போதைய தகவலைச் சொல்லி வெலவெலக்க வைக்கும். கடைசியில் மன அழுத்தத்தின் உச்சத்தில் போய் தற்கொலை செய்ய வைக்கும். அதை வீடியோவாகவும் பதிவு செய்யவும் வைக்கும். மெக்சிகோ, கொலம்பியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இத்தகைய வாட்ஸ் அப் எண்கள் வலை வீசுகின்றன. இவை ஒரு சில எண்கள் அல்ல. ஒரு சில எண்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற ஒரு மிகப்பெரிய குழு என்பதை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பார்ப்பதற்கு எளிதான விஷயம் போல தோற்றமளிக்கும் மோமோ வில் கண்ணுக்குத் தெரியாத பல பகீர் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.

முதலாவதாக, மோமோ அனுப்புகின்ற படங்கள் சாதாரண படங்கள் அல்ல. அவை மால்வேர் எனப்படும் வைரஸ்களைத் தாங்கி வருகின்ற படங்கள். இணையத் தாக்குதல் வெறுமனே நடக்காது. நாம் உள்ளிருந்து கதவைத் திறக்காமல் யாரும் வீட்டுக்குள் நுழைய முடியாது இல்லையா ? அதே போல, நாம் அனுமதி கொடுக்காமல் யாரும் நமது நெட்வர்க்கை உடைக்க முடியாது. மோமோ அனுப்புகிற படங்களை நாம் டவுன்லோட் செய்யும் போது அந்த மால்வேர் நமது மொபைலுக்குள் புகுந்து சமர்த்தாய் அமர்ந்து கொள்கிறது. முதலில் நமது முன்பக்க கேமராவை அது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. அது இங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நம்மையறியாமலேயே மோமோவுக்கு வீடியோவாகக் காண்பித்துக் கொண்டே இருக்கிறது. நமது முக பாவனைகள், நாம் யாரிடம் பேசுகிறோம், நமது மனநிலை எப்படி இருக்கிறது, பயப்படுகிறோமா என்பதையெல்லாம் அது கண்காணிக்கிறது. இரண்டாவதாக நமது மொபைலுக்குள் இருக்கின்ற தகவல்களையெல்லாம் அப்படியே அபேஸ் செய்கிறது. தனிநபர் ரகசியங்கள் வெளியே செல்லும் போது அது எத்தகைய அச்சுறுத்தலுக்கும் விதையாகி விடுகிறது. மூன்றாவதாக, அடுத்தவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சைக்கோ மனநிலை கொண்டவர்களுக்கு மோமோ விளையாட்டு ஒரு திரில்லான அனுபவமாக இருக்கிறது. தாங்கள் கவனிக்கப்படுகிறோம், தங்களைப் பற்றி உலகமே பேசுகிறது, தாங்கள் நினைத்தால் ஒருவரை சாகடிக்க முடியும் என்பதெல்லாம் அவர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது.

சரி, இந்த மோமோவிலிருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி ?

குழந்தைகளுக்கு மோமோ பற்றி சொல்லுங்கள். தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாருக்கும் அனுப்பக் கூடாது என்பதை புரிய வையுங்கள். புதிய எண்ணிலிருந்து என்ன மெசேஜ் வந்தாலும் பதிலளிக்காதீர்கள். உடனடியாக பிளாக் செய்யுங்கள். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே எனும் அசட்டுத் துணிச்சல் உயிரைப் பலிவாங்கலாம்.எந்த படம் வந்தாலும் அனுப்பினவரைப் பற்றித் தெரியாவிட்டால் திறக்கவோ, தரவிறக்கம் செய்யவோ வேண்டாம். அட்மின் யார் என்று தெரியாத குழுக்களில் தங்காதீர்கள், வெளியேறிவிடுங்கள். வாட்ஸப்பில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை ஆஃப் செய்தே வையுங்கள். பாதுகாப்பு பகுதிக்குச் சென்று, நமது காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களுக்கு நமது புரஃபைல் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். குழந்தைகள் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல உற்சாகப்படுத்துங்கள். குழந்தை சோர்வாகவோ, கலக்கமாகவோ, பதட்டமாகவோ, சரியாகச் சாப்பிடாமலோ, இரவில் தூங்காமலோ இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அவர்களிடம் உடனடியாகப் பேசுங்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதை குறையுங்கள். அவர்களுடைய செயல்பாட்டைக் கவனியுங்கள். உங்களுக்குத் தெரியாதபடி அவர்கள் இரவில் பேசுவதை தடை செய்யுங்கள். எந்தத் தவறை குழந்தை செய்திருந்தாலும் நீங்கள் மன்னிப்பீர்கள் எனும் உண்மையை அவர்களுக்குப் புரியவையுங்கள்.

மேலும்  அறிய..


https://www.youtube.com/watch?v=dQnaGmOeJRU

தெரிந்த பிள்ளைகள் இந்த விபரீதத்தில் இருந்தால் உடனே வெளியே கொண்டு வர முயலுங்கள். முடியாவிடில் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

Tuesday, 14 August 2018

நிர்வாகம் முடிவு பண்ணா அதுல மாற்றமே இருக்காது !!!

ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.
எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.
அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த  நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.
Image result for ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.
"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"
சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.
அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.
முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார்.
பத்து நாட்கள் முடிந்தது.
அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான்.
சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான்.
அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.
"இது எப்படி சாத்தியம்.?"
அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார்.
"அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா.?"
மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது.
வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன்,
இந்த முறை மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.
.
நீதி:
நிர்வாகம் (Minority Management)உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா...
அதுல மாற்றமே இருக்காது 

Monday, 13 August 2018

கொள்ளிடம் ஆறு காவிரியின் இயற்கையான நீர் வடிகால் 'கொள்ளிடம்'

கொள்ளும் + இடம் = கொள்ளிடம்.
எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அது தாங்கும், ஏற்றுக்'கொள்ளும்' அதனால் அதன்பெயர் 'கொள்ளிடம்'

கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 1 கி.மீ அகலமுள்ள கொள்ளிடம் ஆற்றில் நீர் கரைபுரண்டோடுகிறது.


காவிரியின் இயற்கையான நீர் வடிகால் கொள்ளிடம் ஆறு.

திருச்சிக்கு மேலே முக்கொம்பு எனும் இடத்தில் காவிரி ஆறு இரண்டாக பிரிகிறது. (கல்லணையின் தொழில்நுட்பட்பத்தில் வியந்த பிரிட்டிஷ் பொறியாளர் சர்.ஆத்தர் காட்டன் திருச்சியை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க மேலணையை முக்கொம்பில் கட்டினார்.

இதுதான் கொள்ளிடத்தின் பிறப்பிடம். இங்கு இரண்டாக பிரியும் காவிரி ஆறு கொள்ளிடம் என்ற பெயரில் ஸ்ரீரங்கத்திற்கு வடக்கேயும், காவிரியாக ஸ்ரீரங்கத்திற்கு தெற்கேயும் ஓடுவதால் ஸ்ரீரங்கம் தனித் தீவாகிறது.

முக்கொம்பிற்கு வரும் அதிகப்படியான வெள்ள நீர் கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படுவதால் திருச்சி நகரம் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

இதனை கடந்து வரும் காவிரியிலும் அதிகமான த
ண்ணீர் வந்தால் காவிரி டெல்டா பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க கல்லணையிலிருந்து வெள்ளநீர் உள்ளாறு என்ற கால்வாய்மூலம் கொள்ளிடத்தில் மடைமாற்றி விடப்படும்.
Image may contain: sky, outdoor, nature and water
வெள்ளத்திலிருந்து தஞ்சையையும், காவிரி பாசன பகுதிகளையும் பாதுகாக்கத்தான் சோழர்கள் காவிரியில் கல்லணையை கட்டினார்கள்.

கடந்த இரு தினங்களாக அதிகப்படியாக வந்த 40,000 கனஅடி தண்ணீர் திருச்சி முக்கொம்பிலிருந்தே நேரடியாக கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டதால் கொள்ளிடத்தில் கரைபுறண்டோடுகிறது தண்ணீர்.கல்லணையிலிருந்து கொள்ளிடத்திற்கு 7000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இந்த கொள்ளிடம் நீர் நேரடியாக கடலுக்கு போவதில்லை. கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள அணைக்கரையில் தேக்கப்பட்டு அங்கிருந்து வடவாற்றில் திருப்பிவிடப்படும். வடவாற்றுக்கு போக மீதம் உள்ள தண்ணீர்தான் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு நேரடியாக கடலுக்கு போகும்.

கொள்ளிடக்கரையிலிருக்கும் பெரிய நகரம் சிதம்பரம். சிதம்பரத்தை கடந்து பரங்கிப்பேட்டை அருகே கொள்ளிடம் கடலோடு கலக்கிறது.

வடவாற்றிக்கு போகும் நீர் வீராணம் ஏரியை நிரப்புகிறது. வீராணம் ஏரியை நிரப்பியதும் கடலூர் மாவட்டத்தின் இன்னொரு பெரிய ஏரியான பெருமாள் ஏரியையும் நிரப்பும்.

கொள்ளிடம் நதியால் ஒரு லட்சம் ஏக்கர் பாசனம் நடைபெறுகிறது. அதன் பிறகுதான் கடலோடு கலக்கிறது. கொள்ளிடம் கடலோடு கலக்கும் இடத்தில் மீன்வளம் மிக அதிகம்.

அலையாத்தி காடுகள் எனப்படும் 'மேங்குரோவ் காடுகள்' கொள்ளிட நதியின் கழிமுகத்தில்தான் உள்ளது. சுனாமியிலிருந்து இந்த பகுதியை பாதுகாத்தது இந்த அலையாத்தி காடுகள்.

நதி நிலத்திற்கும் கடலிற்குமான தொப்புள் கொடி.

தன் பெயருடன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்திற்கு!

நம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப்பின் தமது கணவனின் பெயரைப்போடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தைப்பொருத்த வரை இது அனுமதிக்கப்படாத செயலாகும். 
ஏனெனில் நாளை மறுமை நாளில் எங்களின் பெயர்கள் தந்தைமாருடைய பெயருடன் இனைத்தே அழைக்கப்பட இருக்கின்றது. அது மட்டுமன்றி இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியும் அல்ல.
Related imageஅதிகமான நமது பெண்கள் கணவனின் பிரபல்யத்திற்காக தனது பெயருடன் கணவனின் பெயரை இணைப்பதையே கௌரவமாக நினைக்கிறார்கள். அதுவே தனது பெயருடன் இஸ்லாம் கூறித்தந்துள்ள முறைக்கு மாற்றமாக தனது தந்தையின் பெயரை உபயோகிக்காமல் கணவனின் பெயரை உபயோகிப்பதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொள்கின்றார்கள்.
சரி இப்படி மார்க்கத்திற்கு மாற்றமாக நடப்பவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேற்க வினைகிறேன்.....
உலகையே மாற்றிய மாபெரும் மனித மாணிக்கமான எமது உயிரிலும் மேலான கண்மனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிகளின் பெயர்களில் எவருடையதாவது பெயருக்குப்பின்னால் நபிகளாரது பெயர் உபயோகிப்படுகின்றதா? 
மாற்றமாக அவர்களது தந்தைமார்களது பெயர்களே உபயோகிக்கப்படுகின்றது. உமது கணவர் நபிகளாரைவிட எந்தவிதத்திலும் மேலாகப்போவதில்லை. இஸ்லாம் இப்படி கணவர்மார்களுடைய பெயர்களை பாவிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தால் உண்மையில் நபியவர்களின் மனைவிமார்களல்லவா முதன்முதலின் கணவனின் பெயரை தமது பெயருக்குப்பின்னால் உபயோகித்திருப்பார்கள்.
உண்மையில் இது மிகத்தரங்குறைந்த இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான அனுகு முறையாகும். தற்காலத்தில் இத்தகைய தவறுகள் திருமன அழைப்பு அட்டைகளில் பரவலாக காணக்கூடியதாக உள்ளது. 
இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். யாரும் பெரிதாக கவனித்திராத மிகப்பெரிய தவறாகும். உதாரணமாக மணமகனின் தந்தையின் பெயர் முஹம்மத் என்றால் பெற்றோரின் பெயரை இடும் போது MR & MRS முஹம்மத் எனப்போட்டு விடுகின்றார்கள். அதை விட கொடுமையான விடயம் இன்னும் சில அழைப்பு அட்டைகளில் மனமகளின் பெயருக்குப் பின்னால் மனமகனின் பெயரை இட்டு விடுகின்றார்கள்.
இவை அனைத்தும் இஸ்லாம் காட்டித்தந்திடாத கீழ்த்தரமான நடைமுறைகளாகும். இதன் பிறகாவது இத்தகைய தவறுகளை விடுவதில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்வோம். 
அடுத்தவர்களுக்கும் இதனை எத்தி வைப்போம். இவ்வுலகம் நிரந்தரமற்றதாகும் வெறுமனே பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இஸ்லாத்தை விட்டுகொடுத்தால் நாளை மறுமையில் கைசேதப்படுவதை விட வேறு வழி இருக்காது.
எனவே இஸ்லாம் கூறிய பிரகாரம் எமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் இன்ஷா அல்லஹ் வல்லவன் அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக.

Sunday, 12 August 2018

இன்று உலக யானைகள்தினம்,,, யானைகள் பற்றிய 13 தகவல்கள் !!

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்
யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான 13 தகவல்களை மட்டும் உலக யானைகள் தினமான இன்று பகிர்கிறோம்.

1,உலகத்தில் 24 வகையான யானைகள் இருந்தன. அதில் 22 வகைகள் அழிந்து விட்டன. தற்போது யானைகளில் இருவகைகள் தான் உள்ளன. ஒன்று ஆப்ரிக்க யானை, மற்றொன்று இந்திய (ஆசிய) யானை. ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர், சீனா, தாய்லாந்து, ராபோஸ், கம்போடியா, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.

2,யானைகள் சமூக வாழ்க்கை முறை கொண்டவை. யானை கூட்டத்திற்கு தலைவன் கிடையாது. தலைவி மட்டும்தான். யானைகளுக்கு அதிக உணவு மற்றும் தண்ணீர் தேவை. எனவே, போதிய உணவும், தண்ணீரும் கொண்ட காட்டுப் பகுதிகளே அவை வாழ ஏற்ற வாழ்விடமாக அமையும். யானைக்கு தந்தங்கள் உண்டு. தந்தங்கள் இல்லாத ஆண் யானையைத் தான் 'மக்னா' என்கிறோம். எனவே, யானையின் வலிமை என்பது தும்பிக்கை மற்றும் தந்தங்கள்தான். தும்பிக்கை, வாசனை உணர்வுகளை அறிந்து கொள்ள உதவுகிறது. ஒன்றரை கி.மீ.,க்கு அப்பால் உள்ள ஒரு மனிதனின் வாசனையை யானை அறிந்து கொள்ள முடியும்.
3,பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.

4,யானைகளுக்கு கண் இமைகள் உள்ளன.

5,ஆஃப்ரிக்க யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. டைனோசர் எல்லாம் நாம் நினைவில் வேண்டுமானால் வாழலாம். இப்போது நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகள்தான் பிரம்மாண்டமானவை.6,யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ'
7,மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.
8,யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும்.

9,யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.
10,யானை‌க்கு‌ட்டி‌க்கு 3 முத‌ல் 5 வயது‌க்கு‌ள் த‌ந்த‌ம் முளை‌க்‌கிறது.

10,யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. பொதுவாக மனிதர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இடது கை பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள் தானே... அது போல யானைகளையும் நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, எந்த பக்க தந்தத்தை அது அதிகம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து அதனை அடையாளப்படுத்த முடியும்.
11,உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15,000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அருகிவரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல் தான்.


12,முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.

'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

13.ஆசிய யானைகளின் எண்ணிக்கை 35 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 32 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் சுமார் 2250 ல் இருந்து 3750 வரை இருக்கிறது. எனவே, புலிகளை போல், ஆசிய யானைகளும் உலக எண்ணிக்கையில் இந்தியாவில்தான் அதிகம். எனவே, பிற்கால சந்ததிகள் யானைகளை பார்க்க, நாம் அவற்றை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். தும்பிக்கை வடிவில் மூக்கினைப் பெற்றுள்ள ஒரே விலங்கு யானை தான். பாலை வனப் பகுதி மற்றும் சதுப்பு நிலங்களை தவிர மற்ற எல்லா நிலத்தோற்றங்களிலும் புலிகளை போல் யானைகளும் வசிக்கின்றன.


அழிவின் விளிம்பில் யானைகள்: எப்போதுமே யானைகள் நமக்கொரு அலாதியான அனுபவத்தையே தந்து இருக்கிறது. ஆனால், நமக்கு சந்தோஷத்தை தரும் யானைக் கூட்டம் இப்போது சந்தோஷமாக இல்லை. சரி, சந்தோஷத்தைக் கூட விடுங்கள்... அதில் பெரும்பாலும் இப்போது உயிரோட கூட இல்லை. 

ஆரோக்கிய காடுகள் :
ஒரு காடு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அங்கு யானைகள் வாழ்வது மிகவும் அவசியம். காடு என்ற சுற்றுச்சூழலில் யானைகளின் பங்கு அவசியம். காட்டில் தாவரங்களை உண்டு (சுமார் 120 வகை தாவரங்களின்) விதைகளை பரப்புகின்றன. வெகுதுாரம் செல்வதால் விதைகள் பல கி.மீ., துாரம் வரை பரவும். காட்டில் பல்லுயிரின பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது. யானையின் எச்சத்தில் பல வகையான பூஞ்சைகள் வளர்கின்றன. யானைகள் பல கி.மீ., நடந்து செல்வதால், காட்டில் வழிப் பாதைகளை உருவாக்குகின்றன. இன்று நம் காட்டில் இருக்கும் பல வழிகள் யானைகளால் உருவாக்கப்பட்டவை. யானையின் 'லத்தி' (சாணம்) மக்கும் போது, அதை மக்கச் செய்யும் பூச்சிகள், பல்வேறு பறவை இனங்களுக்கு உணவாகின்றன. மான் போன்ற பிற தாவர உண்ணிகளுக்கு காட்டில் உணவு கிடைக்க யானைகள் வழி வகுக்கின்றன. யானையின் உருவம் மிகப் பெரியது. இவை நடந்து சென்று உணவு உட்கொள்ளும் பொழுது, அங்கு இடைவெளி கிடைக்கிறது. இது மற்ற விலங்குகளுக்கு பயனாகிறது.


ஆக்கம் மற்றும்  தொகுப்பு : மு,அஜ்மல் கான்.

Saturday, 11 August 2018

தமிழக அரசு அறிமுகபடுத்தியுள்ள காவலன் கைபேசி செயலி !!!

இன்றைய சூழலில் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு மிகக் குறைவாகவே உள்ளது. செய்தித்தாளை திறந்தாலே கொலை, திருட்டு, பலாத்காரம் என ஏகப்பட்ட அசம்பாவித சம்பவங்கள். ஆபத்து எப்பொழுது நம்மை நெருங்கும் என்று தெரியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் ’காவலன் டயல் 100’ மற்றும் ’காவலன் SOS’ என்னும் இரண்டு கைபேசி செயலியை அறிமுகம் படுத்தியுள்ளது தமிழக அரசு.தொழில்நுட்பம் நம் கைநுனியில் கைபேசி வழியாக இருக்கிறது; ஆபத்தான நேரங்களில் உதவ காவலன் செயலியை உங்கள் கைபேசியில் ஏற்றிக் கொள்ளுங்கள். இந்த ஆப் மூலம் எளிதாகவும் நேரடியாகவும் மாநில தகவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசலாம்.
காவலன் SOS மற்றும் காவலன் டயல் 100 செயலியின் நோக்கம்:
தமிழக காவல் துறை ஆபத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்த இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயிலி மூலம் பொது மக்கள் காவல் துறையின் உதவியை உடனடியாக நாடலாம். காவல் துறையை அணுக எந்த எண்ணை பயன்படுத்த வேண்டும் என்று குழம்பாமல் காவலன் செயலி மூலம் சில நொடிகளில் நீங்கள் இருக்கும் இடத்தையும் உங்கள் சிக்கலையும் காவல் துறைக்கு தெரியப்படுத்தி விடலாம்.
அவசர தேவையின்போது அதாவது இயற்கை சீரழிவு, பலாத்காரம், கடத்தல், திருட்டு, ஈவ் டீசிங் போன்ற சிக்கல்களில் இருந்து விடுப்பட இந்த செயலியை நாடலாம் என தமிழக காவல் துறை தெரியப்படுத்தியுள்ளது. மேலும் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடாமலும் புகார்களை அளிக்கலாம்.
காவலன் SOS செயலியின் செயல்பாடு:
இந்த செயலியை கூகுள் பிளே அல்லது IOSல் பெற்று உங்கள் முகவரி, கைபேசிய எண், ஆபத்தின் போது தொடர்புகொள்ள கூடிய இரண்டு உறவினர் அல்லது நண்பர்கள் எண்ணை குறிப்பிட்டு உங்கள் கணக்கை துவங்கலாம்.
ஆபத்து நேரத்தில் உங்களுக்கு உதவி வேண்டும் என்றால் செயலியின் SOS பொத்தனை அமுக்கினால் போதும் நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரி, உங்கள் கைபேசி பின் கேமிராவில் மூலம் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு 5 நொடிகளில் காவலர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். தகவல் பெற்ற சில நிமிடங்களிலே உதவி உங்களை தேடி வரும்.

செயலிகளை பதிவிறக்கம் செய்ய: Kavalan Dial 100 | Kavalan SOS

Friday, 10 August 2018

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள்!!

Image result for PAN card

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு இந்திய வருமானவரித் துறையினரால் பான் அட்டை வழங்கப்படுகிறது  நிரந்தரக் கணக்கு எண் (PAN – Permanent account number) பெற்றவர்களின் வருமானத்திற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது வருமான வரி வசூலித்தல் மற்றும் சட்டப்பூர்வமற்ற வருமானத்தைக் கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்குப் பான் அட்டை பெரிதும் உதவுகிறது
அதே சமயத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் பெற்றிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது ஆகும்.ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் எண் மற்றும் எழுத்துக்களால் ஆன 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை வருமான வரிச் சட்டப் பிரிவு 139A-ன் படி வருமானவரித் துறை வழங்குகிறது வழங்கப்படுகின்ற ஒவ்வொரு எண்ணும் தனித்த அடையாளத்தைக் கொண்டது. சிலர் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளைப் பெறுகின்றனர். உள்நோக்கம் இல்லாமல் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பிக்கும் பொழுது இரண்டு பான் எண்கள் ஒருவருக்கு ஒதுக்கப்படலாம். சிலர் வரி ஏய்ப்புச் செய்வதற்காகத் தெரிந்தே இரண்டு பான் அட்டைகளைப் பெற்றிருக்கலாம்

ஒன்றுக்கும் மேற்பட்ட (PAN)

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளால் ஏற்படும் விளைவுகள் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருத்தல் மோசடிக் குற்றமாகும். தங்களுடைய வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் வைத்திருப்பதை வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள் கண்டறிந்தால் அந்தத் தகவலை உரிய அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவார்கள். அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை 1961 ஆம் ஆண்டைய வருமான வரிச் சட்டத்தின் 272B – பிரிவின்படி, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளைப் பெற்றிருந்தால், அதனுடைய நோக்கத்தைப் பொறுத்து அவருக்கு ரூபாய் 10,000 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளின் மூலமாக வரி ஏய்ப்புச் செய்தல், முறையற்ற பணப் பரிமாற்றம் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களையும் அவர்களுடைய நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கிறது. வங்கி அல்லது நிறுவனங்கள் புகார் செய்தால் வாடிக்கையாளர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும்
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் சிக்கலைத் தீர்ப்பது எவ்வாறு ?
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்களை நீங்கள் பெற்றிருந்தால் அவற்றில் ஒன்றை நீக்கிவிட வேண்டும். அதற்கு வருமான வரித்துறை இணையத் தளத்திற்குச் (NSDL’s website) செல்ல வேண்டும். அத்தளத்தில் உள்ள “change or correct existing PAN data” என்னும் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குக் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் அல்லது, வருமானவரித் துறை இணையத் தளத்திலிருந்து விண்ணப்பித்தினைப் பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்திச் செய்து அருகில் உள்ள UTI அல்லது NSDL PAN அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 8 அல்லது 10 நாட்களுக்குள் உங்களுடைய இரண்டாவது பான் எண் நீக்கப்பட்டு விடும்…