Sunday 12 August 2018

இன்று உலக யானைகள்தினம்,,, யானைகள் பற்றிய 13 தகவல்கள் !!

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்
யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான 13 தகவல்களை மட்டும் உலக யானைகள் தினமான இன்று பகிர்கிறோம்.

1,உலகத்தில் 24 வகையான யானைகள் இருந்தன. அதில் 22 வகைகள் அழிந்து விட்டன. தற்போது யானைகளில் இருவகைகள் தான் உள்ளன. ஒன்று ஆப்ரிக்க யானை, மற்றொன்று இந்திய (ஆசிய) யானை. ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர், சீனா, தாய்லாந்து, ராபோஸ், கம்போடியா, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.

2,யானைகள் சமூக வாழ்க்கை முறை கொண்டவை. யானை கூட்டத்திற்கு தலைவன் கிடையாது. தலைவி மட்டும்தான். யானைகளுக்கு அதிக உணவு மற்றும் தண்ணீர் தேவை. எனவே, போதிய உணவும், தண்ணீரும் கொண்ட காட்டுப் பகுதிகளே அவை வாழ ஏற்ற வாழ்விடமாக அமையும். யானைக்கு தந்தங்கள் உண்டு. தந்தங்கள் இல்லாத ஆண் யானையைத் தான் 'மக்னா' என்கிறோம். எனவே, யானையின் வலிமை என்பது தும்பிக்கை மற்றும் தந்தங்கள்தான். தும்பிக்கை, வாசனை உணர்வுகளை அறிந்து கொள்ள உதவுகிறது. ஒன்றரை கி.மீ.,க்கு அப்பால் உள்ள ஒரு மனிதனின் வாசனையை யானை அறிந்து கொள்ள முடியும்.




3,பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.

4,யானைகளுக்கு கண் இமைகள் உள்ளன.

5,ஆஃப்ரிக்க யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. டைனோசர் எல்லாம் நாம் நினைவில் வேண்டுமானால் வாழலாம். இப்போது நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகள்தான் பிரம்மாண்டமானவை.6,யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ'
7,மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.
8,யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும்.

9,யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.
10,யானை‌க்கு‌ட்டி‌க்கு 3 முத‌ல் 5 வயது‌க்கு‌ள் த‌ந்த‌ம் முளை‌க்‌கிறது.

10,யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. பொதுவாக மனிதர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இடது கை பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள் தானே... அது போல யானைகளையும் நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, எந்த பக்க தந்தத்தை அது அதிகம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து அதனை அடையாளப்படுத்த முடியும்.
11,உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15,000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அருகிவரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல் தான்.


12,முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.

'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

13.ஆசிய யானைகளின் எண்ணிக்கை 35 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 32 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் சுமார் 2250 ல் இருந்து 3750 வரை இருக்கிறது. எனவே, புலிகளை போல், ஆசிய யானைகளும் உலக எண்ணிக்கையில் இந்தியாவில்தான் அதிகம். எனவே, பிற்கால சந்ததிகள் யானைகளை பார்க்க, நாம் அவற்றை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். தும்பிக்கை வடிவில் மூக்கினைப் பெற்றுள்ள ஒரே விலங்கு யானை தான். பாலை வனப் பகுதி மற்றும் சதுப்பு நிலங்களை தவிர மற்ற எல்லா நிலத்தோற்றங்களிலும் புலிகளை போல் யானைகளும் வசிக்கின்றன.


அழிவின் விளிம்பில் யானைகள்: எப்போதுமே யானைகள் நமக்கொரு அலாதியான அனுபவத்தையே தந்து இருக்கிறது. ஆனால், நமக்கு சந்தோஷத்தை தரும் யானைக் கூட்டம் இப்போது சந்தோஷமாக இல்லை. சரி, சந்தோஷத்தைக் கூட விடுங்கள்... அதில் பெரும்பாலும் இப்போது உயிரோட கூட இல்லை. 

ஆரோக்கிய காடுகள் :
ஒரு காடு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அங்கு யானைகள் வாழ்வது மிகவும் அவசியம். காடு என்ற சுற்றுச்சூழலில் யானைகளின் பங்கு அவசியம். காட்டில் தாவரங்களை உண்டு (சுமார் 120 வகை தாவரங்களின்) விதைகளை பரப்புகின்றன. வெகுதுாரம் செல்வதால் விதைகள் பல கி.மீ., துாரம் வரை பரவும். காட்டில் பல்லுயிரின பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது. யானையின் எச்சத்தில் பல வகையான பூஞ்சைகள் வளர்கின்றன. யானைகள் பல கி.மீ., நடந்து செல்வதால், காட்டில் வழிப் பாதைகளை உருவாக்குகின்றன. இன்று நம் காட்டில் இருக்கும் பல வழிகள் யானைகளால் உருவாக்கப்பட்டவை. யானையின் 'லத்தி' (சாணம்) மக்கும் போது, அதை மக்கச் செய்யும் பூச்சிகள், பல்வேறு பறவை இனங்களுக்கு உணவாகின்றன. மான் போன்ற பிற தாவர உண்ணிகளுக்கு காட்டில் உணவு கிடைக்க யானைகள் வழி வகுக்கின்றன. யானையின் உருவம் மிகப் பெரியது. இவை நடந்து சென்று உணவு உட்கொள்ளும் பொழுது, அங்கு இடைவெளி கிடைக்கிறது. இது மற்ற விலங்குகளுக்கு பயனாகிறது.


ஆக்கம் மற்றும்  தொகுப்பு : மு,அஜ்மல் கான்.

No comments:

Post a Comment