குளிர்காலம் ஆரம்பித்ததும் பலருக்கு மூக்கடைப்பு, தும்மல், மூக்கு ஒழுகல் என ஒவ்வொரு உபாதைகளாக தோன்ற ஆரம்பிக்கும். பெரும்பாலானோருக்கு குளிர்காலத்தில் தலைக்கு குளிப்பதே பெரும் போராட்டம் ஆகிவிடும். தலைக்கு குளித்தால் தலைபாரம், தும்மல், மூக்கடைப்பு என பல சிரமங்கள் உண்டாகும். குளிக்காமலும் இருக்க முடியாது. பை போக்க புதிய வைத்தியம்
விலங்குகளின் மூக்கு பாதை சற்று நீளமானது. ஆகையால் அவற்றிற்கு அடிக்கடி சளிப் பிடிப்பதில்லை.மனிதர்களின் தலை எலும்பு பரிணாம வளர்ச்சி காரணமாக அழகாக அமைந்திருந்தாலும் கூட குறுகிய மூச்சுப் பாதை காரணமாக அடிக்கடி சளித்தொ�ல்லைக்கு ஆட்படும் வாய்ப்பு ஏற்படுவதாக உள்ளது.
அதே நேரம் மூக்குப்பாதையின் இரண்டு புறங்களிலும் உள்ள கபால என்பு குழிவுகள் தூசிகள் உள்ளே நுழையா வண்ணம் பாதுகாப்பதுடன் தலையில் நீரும், நுண்கிருமிகளும் சேரா வண்ணம் தடுப்பதுடன் தலையில் பாரம் ஏறிவிடாமல் பாதுகாக்கின்றது. இவைகள் சைனஸ் அறைகள் என்ற அழைக்கப்படுகின்றன.
வெறும் காற்று மட்டுமே நிறைந்திருக்கும் இந்த சைனஸ் அறைகளில் நீரும் சேரும் பொழுது தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு போன்ற பல தொல்லைகள் உண்டாகின்றன. ஒவ்வாமையின் காரணமாகவும் ஏற்படும் இந்த சளித்தொல்லையானது கபால நீர் என எளிய வார்த்தைகளால் அழைக்கப்படுகிறது.
மூக்கின் இரண்டு புறம், மூக்குப்பாதை, நடுநெற்றி, காதின் இரண்டு பக்கங்கள் மற்றும் மண்டையோட்டின் பின்புறம் என அமைந்துள்ள இந்த கபால அறைகளில் காற்றுக்கு பதிலாக நீர் தேங்கும் பொழுது மண்டைக் கனம் அதிகரித்து, தலைபாரம் ஏற்படுகிறது.
தேங்கிய கலாப நீரில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளின் தொற்று ஏற்படும்போது மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல், சுரம் போன்ற உபாதைகள் உண்டாகின்றன. கபால அறையில் தங்கியுள்ள நீரை வெளியேற்றாவிட்டால் கிருமித்தொற்று அதிகரித்து பார்வை மங்கல், காது மந்தம், குறட்டை, தொண்டைக் கட்டு போன்ற தொடர் உபாதைகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. கபால அறைகளில் தங்கியுள்ள நீரை வெளியேற்ற தைல
மர இலை, நொச்சியிலை, வேப்பிலை ஆகியவற்றை கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். விராலி மஞ்சல், ஊமத்தன்பூவிதழ்களை சுட்டு அதன் புகையை உள்ளிழுக்கலாம்.
சுக்குத்தூள், சாம்பிராணித்தூள், கஸ்தூரி மஞ்சள்தூள் போன்றவற்றை வெந்நீரூடன் குழப்பி நெற்றி, மூக்குப் பகுதிகளில் பற்று போடலாம். இவற்றிலும் கட்டுப்படாத கடினமான கபால நீரை வெளியேற்ற உதவும் மூலிகை தான் காட்டுக்கடுகு, நாய்க்கடுகு என்ற பல பெயர்களில் அழைக்கப்படும் நாய்வேளை.
கிலியோம் ஐகோ�ன்டிரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட கெப்பாரிடேசியே குடும்பத்தைச் சார்ந்த காட்டுக்கடுகின் இலைகளில் டைபெர்பின்கள், கிலேயோமார்டிக் அமிலம், கௌமாரினோலிக்னான்கள், கிலியோமிசிக்கோசின் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்கிருமிகளை எதிர்க்கும் வல்லமை படைத்துடன், வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையவை.
நாய்க்கடுகு இலைகளை நன்கு மைய இடித்து, பிழிந்து, சாறை நீக்கி விட வேண்டும். நீர்ச்சத்து நீங்கிய இலைகளை மட்டும் உச்சந்தலையில் வைத்து அதன் மேல் உலர்ந்த வெள்ளைத் துணியை தலைப்பா போல் இறுகக் கட்டி 15 நிமிடங்கள் வைத்திருந்து இலைகளை வெளியே எடுத்து, நீரை பிழிந்து, நீக்கிவிட வேண்டும். இவ்வாறு தலையில் ஏறிய நீர் இறங்கும். அதுமட்டுமின்றி இலையை லேசாக வதக்கி வெநீநீர் விட்டு அரைத்து சற்றும் மஞ்சள் தூளுடன் குழப்பி நெற்றியில் பற்று போட தலைவலி, தலைபாரம் நீங்கும்.
http://en.wikipedia.org/wiki/Canola
http://www.uscanola.com/what-is-canola/
http://www.stylecraze.com/articles/amazing-health-benefits-of-canola-oil/
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment