நான் தினமலரில் இந்த கட்டுரையை படித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தேன்.முதலில் ஆய்வு என்ன தான் கூருகிறது என்று பார்போம் .
திறமையான இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து, 16 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம் கிடைத்துள்ளது. டில்லி, பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திறமை மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் உள்ளவர்களாக இருப்பதால், இவர்களுக்கே அதிகளவில் உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.
22 மாநிலங்களில் ஆய்வு: தனியார் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தும், "ஆஸ்பையரிங் மைன்ட்ஸ்' என்ற நிறுவனம், "தேசிய அளவிலான வேலை வாய்ப்பு அறிக்கை - 2011'யை, சமீபத்தில் வெளியிட்டது. வட மண்டலத்தில், டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள்; கிழக்கு மண்டலத்தில் அசாம், சத்திஸ்கர், மேகாலயா, ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம்; மேற்கு மண்டலத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா. தென் மண்டலத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் என, மொத்தம், 22 மாநிலங்கள், 250 பொறியியல் கல்லூரிகள், 2011ல் படிப்பை முடித்த, 55 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் ஆகியோரைக் கொண்டு, மிகப்பெரிய ஆய்வை இந்நிறுவனம் நடத்தியது.
17 சதவீத பேருக்கே வேலை: நாடு முழுவதும் உள்ள, 3,000 பொறியியல் கல்லூரிகள், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால், இவர்கள் அனைவரிடமும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கல்வித்தரமோ, திறமையோ இல்லை என்பது தான் வேதனை! இவர்களில், வெறும், 17.45 சதவீதம் பேருக்கு மட்டுமே, ஐ.டி., தொழில் துறையில், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வகையான பட்டதாரிகளும், 70 சதவீதம் பேர், கேம்பஸ் இன்டர்வியூ மூலமே தேர்வு செய்யப் பட்டு விடுகின்றனர்.
சாதிக்கும் பீகார்: ஐ.டி., துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில், முதல் இடத்தை டில்லி பிடித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, ஒட்டுமொத்த வளர்ச்சி என, எல்லாவற்றிலும் மிகவும் பின் தங்கிய மாநிலமாக பேசப்படும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலம், இரண்டாம் இடம் வகிக்கின்றன.
கடைசியில் தமிழகம்: தமிழகத்தை மாற்றி, மாற்றி ஆண்டு வரும் தி.மு.க.,வும் - அ.தி.மு.க.,வும், "எல்லா வகையிலும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவதே நோக்கம்' என, சபதம் போடுகின்றனரே தவிர, எதையும் சாதித்துக் காட்டவில்லை என்பதை, ஐ.டி., வேலை வாய்ப்புகளில், தமிழகத்திற்கு கடைசி இடம் உள்ளது மூலம் தெரிந்து கொள்ளலாம். தெற்கு பிராந்தியத்தில், கர்நாடகமும், கேரளாவும் தான், முன்னணி மாநிலங்களாக விளங்குகின்றன. பி.பி.ஓ., வேலை வாய்ப்புகளை எடுத்துக் கொண்டாலும், தமிழகத்திற்குத் தான் கடைசி இடம்! தமிழக பொறியியல் பட்டதாரிகளில், வெறும், 10 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
கல்லூரிகளின் தரம்: வேலை வாய்ப்பில் முன்னணி இடங்களை வகிக்கும் மாநிலங்களில், பீகார், உத்தரகாண்ட், சத்திஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில், குறைந்த எண்ணிக்கையில் கல்லூரிகள் இருக்கின்றன. எனினும், இவை தரமான கல்லூரிகளாக விளங்குகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள், ஆங்கில பேச்சாற்றலுடன், பிரச்னைக்கு தீர்வு காணும் ஆற்றல் உடையவர்களாகவும், படைப்புத்திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாகவே, இம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என, ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் புற்றீசல் போல், 600 பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டன. கல்விக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம், பொறியியல் கல்லூரிகளை துவக்கினர். ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து வருபவர்களையும், தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, "எப்படி' கவனிக்க வேண்டும் என்ற வித்தைகளை தெரிந்து, அங்கீகாரம் பெற்று கல்லூரிகளை துவக்கி, கல்லா கட்டி வருகின்றனர். ஆனால், தரமான கல்வியைப் பற்றி, ஒருவரும் சிந்திப்பதில்லை.
நன்றி : தினமலர் நாளிதழ்.
உண்மை நிலையை உள்ளது உள்ள படி சொன்ன தினமலருக்கு நன்றி....
இப்போது நாம் விசயத்துக்கு வருவோமே....
தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு விழிப்புணர்வு- ஒரு ஆய்வு
இன்று இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வி கற்க சிறந்த மாநிலமாக விளங்குகிறது.அதனால்தான் 3 லட்சத்திறகுமா அதிகமான வெளிமாநில மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பயின்று வருகிறார்கள் என்று நினைக்ககூடாது.
தமிழகத்தில் கல்வி ஒரு வியாபாரமாக அல்லவா நடந்து கொண்டு இருக்கிறது , குறிப்பாக இன்ஜினியரிங் கல்லூரிகள் .. இந்த 600 கல்லூரிகள் 1000 மாக ஆகி இன்ஜினியரிங் என்ற அருமையான துறைக்கு மொத்தமாக மதிப்பு இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் அரசியல்வாதிகள் மற்றும் பண முதலாளிகள் .
பொறியியல் பட்டப்படிப்பு மட்டுமே ஒரு மனிதனை பொறியியல் வல்லுநர் ஆக மாற்றிவிடாது. இன்றைய சூழ்நிலையில் எந்த தொழிலும் குறிப்பிட்ட தனித்திறன் தேவைபடுகின்றது. மொழி என்பது இன்னுமொரு பாலம். பீகார் மாநிலம் என்று தவறான கண்ணோட்டம் நமக்கு இருக்கின்றது. பாட்னா கல்வியில் பல இடங்களில் சிறந்து விளங்குகின்றது. I .I .T . மாணவர்கள் பலர் உள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.நாம் ஆங்கிலத்தை தமிழ் வழியாகவே கற்கின்றோம். english is a polite language. இன்றும் நம்மில் பலருக்கு ஆங்கிலத்தில் நேரம் (மணி) என்ன என்று கேட்க தெரியாது. அதிகபட்சம் what is the time now? என்று கேட்டு விடுவோம். ஆனால் இப்படி கேட்பது தவறு என்று அவர்களுக்கு தெரியாது. வெளிநாட்டினரிடம் இப்படி நாம் கேட்டால் நம்மை நாகரிகம் அற்றவர் என்று முதலிலேயே நினைத்துவிட வாய்ப்புக்கள் அதிகம். முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகிவிடும். சரி ஆங்கிலத்தில் எப்படி முறையாக கேட்பது. Excuse me, What is the time Please? என்று எத்தனை நபர்களுக்கு தெரியும்? Excuse me, Please & Thank you என்று இடத்திற்கு ஏற்றவாறு பேசினாலே உங்களுக்கு முன்னேறுவதற்கு வழி பிறக்கும். ஆங்கிலம் ஒரு மருந்தாகவே பார்க்கப்படுகின்றது.
இது வேதனையான விஷயம்.
இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளின் விபரங்களை மற்றும் அதன் விபரங்களையும் ://www.studyguideindia.com/Colleges/Engineering/ ல் காணலாம்.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சுய நிதி கல்லூரிகள் சகட்டு மேனிக்கு திறந்து விடப்பட்டது. கல்வியின் தரம் பற்றி கவலைப்படவில்லை. தமிழ் நாட்டை பொறுத்த வரை ஒரு பத்து கல்லூரிகள் தான் தரம் வாய்ந்தவை. சென்னை அண்ணா மெயின் காம்பஸ், திருச்சி என்.ஐ.டி, கோவை பி.எஸ்.ஜி, கோவை சி.ஐ.டி இப்படி வைத்து கொள்ளலாம். சமீப காலங்களில் ஐ.ஐ.டி, பிட்ஸ் பிலானி போன்ற கல்லூரிகளில் நம் மாணவர்கள் சேருவது மிக குறைவாகி விட்டது. இப்படி ஒரு ரிபோர்ட் வந்தது ஆச்சர்யம் இல்லை. ஜெயலலிதா, கருணா நிதியும் போட்டி போட்டு கொண்டு, தமிழ் நாட்டை முதல் மாநிலம் ஆக்குவேன் என்று சொல்வது எல்லாம் வெறும் குப்பை வாதம். உண்மையில் கடைசி நிலைக்குதான் கொண்டு வந்துள்ளார்கள்.
இன்று தமிழகத்தில் நடப்பது கல்வி சேவை அல்ல.. வெறும் கீழ்த்தரமான வியாபாரம் என்பது உலகறிந்த விஷயம்.. இதில் வாங்கிய காசுக்கு தரமான கல்வி அளிக்கவேண்டும் என்று நினைப்பது மிக சில விரல் விட்டு எண்ணக்கூடிய கல்லூரிகளை.. மீதமுள்ள கல்லூரிகள் எல்லாம். முன்னால் அரசியல் அடியாட்கள், இன்னல் ஜாதீய மாற்றும் மத வெறி கொண்ட தலைவர்களால் நடத்தபடுகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது..திலுமே தகுதி இல்லாதவர்களை விட்டால் இப்படி தான் நடக்கும். அரசியலில் தரம் இல்லாதவர்களை விட்டோம். அதன் விளைவு, நம் அரசியல் சாக்கடை ஆகி விட்டது. சாராயம் காசும் வியாபாரிகளை கல்லுரி நடத்த விட்டோம். அதன் விளைவையும் பார்த்து விட்டோம். தகுதி இல்லாதவன் எந்த துறையில் புகுந்தாலும், அதை நாசம் செய்வான். இதுதான் இன்றைய பள்ளி கல்வி நிலையும்.. பின்னர் தரம் எங்கிருந்து கிடைக்கும்.. ? தரமற்ற நிறுவனர், தரமற்ற ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர்கள் அல்லது முனைவர்கள் .. அதிக பணம் அல்லது சிறப்பு அந்தஸ்து உள்ளதால் சீட்டு வாங்கிய மாணவர்கள்.. இதுதான் இன்றைய தமிழகத்தின் கல்வி நிலை.
இப்பொது ஐ.டி கம்பனிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மிக குறைவாகவே தேர்வாகின்றனர். அதற்க்கு காரணம் குறைவான கணித, ஆங்கில அறிவே ஆகும். குக் கிராமங்களில் கூட இங்கு இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன.ஆனால் மிக தரமற்ற கல்வி கொடுக்கபடுகிறது. கடந்த ஆட்சியில் ஏறக்குறைய அணைத்து அமைச்சர்களும் இன்ஜினியரிங் கல்லூரி வைத்து நடத்தினர். இவர்கள் நோக்கம் பணம் பறிப்பது ஒன்றே ஆகும். தவிர தற்போது உள்ள பல பெரிய ஐ.டி கம்பனிகளான இன்போசிஸ்,TCS , விப்ரோ , CTS என பல நிறுவங்கள் இன்ஜினியரிங் மாணவர்களை விட மூன்றாண்டு BSC கணிதம், இயற்பியல், புள்ளியல், கணிபொறி சார்ந்த மாணவர்களை தேர்வு செய்கின்றனர். இந்த மாணவர்கள் அரசாங்க கல்லூரிகளில் படிபவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போதெல்லாம் வருடத்திற்கு 30000 , 40000 இன்ஜினியரிங் சீட்டுகள் காலியாகவே உள்ளன. அதற்க்கு காரணம் தரமான கல்லூரிகள் இல்லாதது, மற்றும் இந்த 4 வருட இன்ஜினியரிங் படிப்பிக்கு லட்சகணக்கில் செலவழித்து படித்து வீனா போவதைவிட அரசாங்கம் மற்றும் அரசாங்க உதவி பெரும் கல்லூரிகளில் மூன்றாண்டு BSC படித்துவிட்டு முதுகலை, ஆராய்ச்சி என்று செல்வது எவ்வளவோ மேல் என்று கருதுவதுதான். அதுதான் உண்மையும் கூட. 4 இன்ஜினியரிங் படிப்பதற்கு 4 லட்சத்தை வீணாக்குவதை விட அரசாங்கம்/அரசாங்க உதவி பெரும் கல்லூரிகளில் 3 வருட படிப்பை 10000 முதல் 15000 ல் முடித்து விட்டு நல்ல தரமான கல்வியை பெற்று வேலைக்கு செல்வது எவ்வளவோ மேல். வெறும் என்ஜினீயர் என்று பீற்றி கொள்வதற்காகவே பல மாணவர்கள் இதை படிகிறார்கள். வீண் செலவு, வெட்டி பந்தா, இதை இன்ஜினியரிங் கல்லூரிகள் நன்றாகவே பயன்படுதிகொள்கிரார்கள்.
நாட்டில் உள்ள 3000 பொறியியல் கல்லூரிகளில் 600 கல்லூரிகள் மட்டும் தமிழகத்தில் இருப்பது வியாபார நோக்கத்தைதானே காண்பிக்கிறது. ஒரு மாநிலத்திற்கு எதற்கு இத்தனை கல்லூரிகள்? கல்லூரி உரிமையாளரை தவிர அரசுக்கோ,அதற்க்கு அனுமதி வழங்கும் அமைப்புக்கோ கூட தெரியாது.ஏன் ?எதற்கு என்று ஆராய்ந்து கொடுக்க வேண்டாமா அனுமதி? கல்லூரி உரிமையாளர்,அரசுகள், அனுமதி வழங்கும் அமைப்பு இவை சமுதாயம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று நினைத்து லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கி இன்று தமிழகத்தை கேவலமான நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளனர். கல்வி விஷயத்தில் மாநில அரசு எந்த முடிவும் எடுக்க கூடாது மத்திய அரசு மட்டுமே முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுக்குள்ள உரிமையை தவறாக பயன்படுத்தி கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்கள் ஒட்டு வங்கி அரசியலுக்காக வெறும் 35 மதிப்பெண் பெற்றாலும் பொறியியல் கல்லூரியில் அனுமதி கொடுத்து பொறியாளர்களின் தரத்தை தாழ்த்துகிறார்கள் விபரம் தெரியாத மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டு படிக்கமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு 4 ஆண்டுகளில் முடிக்கவேண்டிய படிப்பை 6 , 7 வருடங்களில் முடித்துவிட்டு வெளியே வரும்போது அவனுடைய படிப்புக்கும்,அவனுக்கும் என்ன மதிப்பு இருக்கும் இன்றைய போட்டிமிக்க சூழ்நிலையில். அதே மாணவன் அவனால் முடிந்த துறையில் சேர்ந்தால் அந்த படிப்பை முடித்து ஏதேனும் ஒரு வேலையில் சேரலாம். இதை கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்கள் உண்மையான அக்கறையுடன் யோசித்து பார்க்காமல் சுமாராக படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல நம் மாநில பெயரையும் ஏன் கெடுக்கிறார்கள் ?
இதில் மாணவர்களும்,பெற்றோரும் ஒரு காரணம் தான் தன மகன் 50 % மார்க் எடுத்து பாஸ் ஆகிவிட்டு அவனை பொறியியல் படிப்புக்கு சேர்த்தால் அவன் எப்படி படிப்பான் அவனால் முடியுமா என்று யோசிபதில்லை பக்கத்துக்கு வீடு பைய்யன் படிக்கிறான் அதனால் இவனும் படிக்கணும்...ஏன் இன்ஜினியரிங் படித்தால் தான் ஒருவன் வாழ்கையில் முன்னேற முடியமா வேறு படிப்பு படித்தவர்கள் முன்னேற வில்லையா,,,,,,,மக்கள் அறிவுக்கு இது எப்போது எட்டுகிறதோ அப்போது தான் இந்த அவல நிலை வராது அது வரை தொடரும்.
தீர்வு
தற்போதுள்ள பள்ளி கல்வி தரத்துக்கு, பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியில் மற்றும் கணிதம் படங்களில் 70 % மதிப்பெண்கள் மேல் பெரும் மாணவர்களே பொறியியல் படிப்புக்கு ஏற்றவர்கள். 70 % குறைவாக பெரும் மாணவர்களால் கண்டிப்பாக ஒரு தரமான பொறியாளராக உருவாக முடியாது. இதை தமிழ்நாடு அரசு உணராத வரையில் பொறியியல் கல்வியில் தமிழ்நாட்டில் மாற்றம் வராது. வெறும் ஒட்டு அரசியலுக்குகாக 50 % மதிப்பெண்கள் பெரும் மாணவர்களை பொறியியல் கல்வி பெற அரசு அனுமதிப்பது நமது மனித வளத்தை நாமே அழிபதற்க்கு சமமாகும்....
No comments:
Post a Comment