ரயில் நிலையங்களில், நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டியும்; மொபைல் போனில் பேசியபடி, ரயில் பாதையை கடக்கக் கூடாது; ஆளில்லா ரயில்வே கேட்டு களில், ரயில் வரும் பாதையை கவனித்து கடக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே காவல்துறையினர் பொது மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்; விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர்.இருப்பினும், கவனக் குறைவால் ரயிலில் அடிபட்டு உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
தமிழகம் முழு வதும், 2010 ஆண்டு, 2,309 பேரும்; 2011இல், 2,318 பேரும்; இந்த ஆண்டு இதுவரை, 2174 பேர் ரயிலில் அடி பட்டு உயிரிழந்துள்ளனர். இவ்வாண்டு ரயில் மோதி இறந்தவர்களில், 690 பேர் யார் என, அடையாளம் தெரியவில்லை.
அவஸ்தை ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் அடையாளம் தெரிந்து விட்டால் ரயில்வே போலீசாருக்கு நிம்மதி. இல்லாவிட்டால் அவஸ்தை தான். அடையாளம் தெரியாத பிணங்கள்,அரசு பொது மருத்துவமனை பிணவறையில், 21 நாட்கள் வரை வைத்துக் கொள்ளலாம். பிணவறையில் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், ரயில்வே போலீசார் மூலம் வைக்கப்பட்ட பிணங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. அடையாளம் தெரியாதவர்கள் குறித்த, படம் மற்றும் தகவல்களை, ரயில்வே போலீசார், ரயில்வே போலீஸ் இணையதளம் மூலம் வெளியிட்டும், தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே போலீஸ் நிலையங்கள் மற்றும் உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
அப்படியிருந்தும் இவ்வாண்டு, இறந்தவர்களில் 690 பேர் யாரென்று அடையாளம் தெரியவில்லை. இறந்தவர் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பட்டியலிடப்பட்ட பிறகு, அரசு செலவில், அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. ரயில் மோதி காயம் பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிகிறது. இறந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, ரயில்வே போலீசார் மூலம் செய்யப்படவில்லை.
இதனால்,பிணங்களை, புறநகர் மின்சார ரயில்களில், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. இதனால், பயணிகள் பயப்படும் நிலையும், முகம்சுளிக்கும் நிலையும் உள்ளது.
அவஸ்தை ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் அடையாளம் தெரிந்து விட்டால் ரயில்வே போலீசாருக்கு நிம்மதி. இல்லாவிட்டால் அவஸ்தை தான். அடையாளம் தெரியாத பிணங்கள்,அரசு பொது மருத்துவமனை பிணவறையில், 21 நாட்கள் வரை வைத்துக் கொள்ளலாம். பிணவறையில் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், ரயில்வே போலீசார் மூலம் வைக்கப்பட்ட பிணங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. அடையாளம் தெரியாதவர்கள் குறித்த, படம் மற்றும் தகவல்களை, ரயில்வே போலீசார், ரயில்வே போலீஸ் இணையதளம் மூலம் வெளியிட்டும், தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே போலீஸ் நிலையங்கள் மற்றும் உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
அப்படியிருந்தும் இவ்வாண்டு, இறந்தவர்களில் 690 பேர் யாரென்று அடையாளம் தெரியவில்லை. இறந்தவர் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பட்டியலிடப்பட்ட பிறகு, அரசு செலவில், அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. ரயில் மோதி காயம் பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிகிறது. இறந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, ரயில்வே போலீசார் மூலம் செய்யப்படவில்லை.
ரயில் அடிபட்டு இறப்பவர்கள் குறித்து, ரயில்வே போலீஸ் ஐ.ஜி., ஆறுமுகம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், ரயில் பாதைகளில் அதிகம் விபத்துகள் நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில், பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த விளம்பரங்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும், ரயில் பாதைகளில் அதிகம் விபத்துகள் நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில், பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த விளம்பரங்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ரயில் பாதைக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரயில்வே போலீசார், ரயில்வே நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களில், ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்க பாதையை பயன்படுத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டும், பயணிகள் அவர்கள் இஷ்டத்திற்கு ரயில் பாதையில், கண்ட இடங்களில் கடக்க முயற்சித்து ரயில் மோதி இறந்து விடுகின்றனர்.தமிழகத்தில் மற்ற இடங்களை விட, சென்னையில் ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மொபைல் போனில் பேசிக்கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் ரயில் பாதையை கடப்பதாலும் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளன.இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.
தமிழக ரயில் பாதைகளில், அதிகமாக விபத்து நடக்கும் பகுதி மற்றும் அதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சென் னை ரயில்வே காவல் மண்டலத் திற்கு உட்பட்ட ரயில் பாதைகளில், 67 இடங்களும்; திருச்சி ரயில்வே காவல் மண்டலத்திற் குட்பட்ட பாதைகளில், 47 இடங்களிலும் அதிகமாக விபத்துகள் நடப்பது தெரிய வந்துள்ளது.சென்னை ரயில் வே காவல்துறை மண்டலத்தின் கீழ் உள்ள சென்னை, சேலம், திருப்பூர், கோவை நகரங்களிலும்; திருச்சி ரயில்வே காவல்துறை மண்டலத்தில் உள்ள, திருச்சி கோட்டை, சிறீரங்கம், திருவெறும்பூர், மதுரை கூடல் நகர், சமயநல்லூர் பகுதிகளிலும் சாவைத் தழுவியுள்ளனர்.இந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த, ரயில்வே காவல்துறையினர் மூலம் வரை படம் தயாரிக்கப்பட்டு உள்ளதோடு, இங்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவும் திட்டமிடப்பட் டுள்ளது. இதுகுறித்து தமிழக ரயில் வே காவல்துறை டி.அய்.ஜி., தினகரன் கூறுகையில், தமிழகத்தில், ரயில் பாதையை கவனக்குறைவாக கடந்த தில், சென்னையில் தான் அதிகம் விபத்து நடந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்ததில், அலை பேசியில் பேசியபடி ரயில் பாதையை கடந்த வர்கள் முதலிடத்தையும்; ரயில் வரு வது தெரியாமல் பாதையை கடப் பவர்கள், இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
ரயில் போக்குவரத்தில் பயணிகள், பொதுமக்கள் முக்கியம் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்த, 10 தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு வீடியோ சி.டி., ரயில்வே காவல்துறை மூலம் தயாரிக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் ரயில் நிலைய அறிவிப்பு மய்யங்களில் உள்ள ஒளிபரப்பு வசதிகள் மூலமும், ரயில் பாதையை ஒட்டியுள்ள கிராமங் களிலும் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பவும் திட்டமிடப் பட்டுள்ளது. இவ்வாறு டிஅய்ஜி தினகரன் கூறினார்.
நன்றி : தினமலர், விடுதலை
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment