Thursday, 15 November 2012

60ம் கல்யாணம்(சஷ்டியப்த பூர்த்தி) !! ஒரு சிறப்பு பார்வை .....

Temple images
இன்று பரவலாக பிள்ளைகளால் பெற்றவர்களிற்க்கு 60-ம் கல்யாணம் நடாத்தி வைக்கும் பண்பாடு நிலவுகின்றது. இருந்தும் பலருக்கும் 60-ம் ‌பிற‌ந்த நா‌ள் ம‌ட்டு‌ம் அ‌வ்வளவு ‌சிற‌ப்பு ஏ‌ன், அ‌ந்த ஆ‌ண்டி‌ல் ம‌ட்டு‌ம் ‌‌மீ‌ண்டு‌ம் ‌திருமண‌ம் அதாவது 60-‌ம் க‌ல்யாண‌ம் நடாத்தப்படுகின்றது என்பதன் காரணம் தெரிவதில்லை.கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம்.  இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர்.

 ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது எ‌ன்று பொரு‌ள், அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் கருதலா‌ம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கசஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) , 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க (ஆங்கில காலண்டர்படி அல்ல). ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப்பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும்.நீங்க முதல்ல உங்க அப்பாவின் நட்சத்திரபடி என்னைக்கு பிறந்த நாள் வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அன்னைக்குதான் நடத்தணும். ஆங்கில வருடத்தை பார்க்காமல் பஞ்சாங்கம் பார்த்து, இந்த நாளில்தான் 60ம் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். 
இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு.ள். உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக்கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

அவன்தனது இந்திரியங்களின் இச்சைகளுக்கும் உட்பட்டு வாழ்கிறான்.ஆனால் அறுபதாவது வயது அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமைய வேண்டும்.  அதற்குப் பிறகு அவன் உலகபந்தங்களை விட்டுவிட முயல வேண்டும்.  இதை நினைவு படுத்தவே அவனுக்கு அறுபதாவது வயதில் மனைவியைப் பக்கத்தில் உட்காரவைத்துப் பக்குவமாக ஒரு கல்யாணத்தையும் நடத்துகிறார்கள்.  எழுபது வயதில் அவன் மனமுதிர்ச்சி பெற்று,சப்தரிஷிகளைப் போன்ற பக்குவ நிலையைஅடைகிறான். என்பதாவது வயதில் எட்டுத் திசைகளையும்பாதுகாக்கும் காவலர்களானதெய்வங்கள்அவனுக்கு வழிகாட்டுகிறார்கள்.அப்போது அந்த தம்பதியர் நல்லகதிபெற மீண்டும் ஒரு கல்யாணமே செய்து கொள்கிறார்கள்.  தொண்ணூறாவது வயதில் நவக்கிரங்களின் முழு ஆசியும் அவனுக்கு கிடைக்கிறது.  நூறாவது வயதைஅடைவது மிகவும் சிரமம்.  அப்படி அடைந்தவர்களுக்கு ஐம்புலன்கள் - உண்பது (ருசி), நடப்பது, மறுப்பது (கழிவு), காண்பது, உணர்வது ஆகிய ஐந்து செயல்களுமே - கட்டுப்பட்டு அடங்கி விடுகின்றன.  இது உன்னதமான நிலை.  இதை அடக்குவது சிரமம்.  இதை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத்தான் "நீ நூறு வயது வாழவேண்டும்"என்று கூறி பெரியோர்கள் வாழ்த்துகின்றனர்.

 முக்கியமாக 60 ஆம் கல்யாணம் நடத்துவது அவர்களோட சந்ததியினரின் நன்மைக்காகத்தான்னு சொன்னாங்க. இது அவங்க பிள்ளைகளோட கடமையும் கூடன்னு சொன்னாங்க.அன்று கல்யாணத்திற்கு வந்தவர்கள் கல்யாணம் முடிந்ததும், மணமக்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வது முறை. அவர்களுக்கு சின்ன கிப்ட்(குங்குமச்சிமிழ், ஜாக்கெட் துணி) வாங்கி பழம், தாம்பூலம் வைத்து கொடுக்கலாம்.பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் நடாத்தி வை‌‌ப்பது போக, ‌பி‌ள்ளைக‌ள் பெ‌ற்றவ‌ர்களு‌க்கு நடாத்தி வைப்பதுதான்  60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் ‌மற்றுமொரு சிற‌ப்பாகு‌ம்.

ஆக்கம் : மு.அஜ்மல்கான்.



No comments:

Post a Comment