Sunday, 18 November 2012

ஹிஜ்ரி நாட்காட்டி மென்பொருள்....


நாம் ஹிஜ்ரி 1431 வருட ரமளான் நோன்பை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் உலக மக்கள் அனைவருக்கும்  பயனுள்ள வகையில்  ஒரு மென்பொருளை  இதன் மூலம் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறோம்.  இதை உருவாக்கிய சகோதரர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அவனுடைய அருளை வழங்க நாம் பிரார்த்தனை  செய்வோம்.
இன்ஷாஅல்லாஹ் இம்மென்பொருள் உங்கள் வாழ்வில் மிகவும்  பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறோம்.   அல்லாஹ்  உலகை படைக்கும் போதே சந்திரனுக்கு  மன்ஸில்களை விதியாக்கி விட்டதாக  அல்குர்ஆன் கூறுகிறது. அந்த மன்ஸில்களின் அடிப்படையில் தான் இந்த நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்காட்டியும் பிறை தேதியும் சரியாக இருந்தால் தான் அது மனித சமுதாயத்திற்கு  அல்லாஹ்  ஏற்படுத்தி தந்தது என்பதை உலகிற்கு உணர்த்த முடியும்.  அதன்பின்  தவறான  அனைத்து நாட்காட்டிகளையும்,  எந்த வித அடிப்படையும் இல்லாத நாட்காட்டிகளையும்  இவ்வுலகில் இருந்து அப்புறப்படுத்தி அல்லாஹ் நிர்ணயித்த நாட்காட்டியை  நாம் நடைமுறைப்படுத்தி ஈருலக வெற்றியை அடைய முடியும் என்ற நன்னோக்கில் இந்நாட்காட்டி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
A.இம் மென்பொருளின் பயன்கள்…..!
1.  இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற விபரங்களை வைத்துசரியான தேதிகிழமைவருடம் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும்.
2. நாம் பிறந்த சந்திர வருடம்பிறை தேதிகிழமை ஆகியவற்றை  சரியாக அறிய முடியும்.
3. அல்லாஹ் கூறும் சந்திர நாட்காட்டி அடிப்படையில் நாம் பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்ற கணக்கை நாம் துல்லியமாக அறிய முடியும்.
4. அல்லாஹ் கூறும் சந்திர நாட்காட்டி அடிப்படையில் அன்றாட வரவு செலவு கணக்குகளை பராமரிக்க இம்மென்பொருள் நம் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
5.இஸ்லாம் கூறும் ஸகாத் கணக்குகளை முறையாக கணக்கிட்டு கொடுப்பதற்கும்கொடுக்கப்பட்ட ஸகாத் கணக்குளை முறையாக இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்ப்டையில் பாதுகாக்க இது மென்பொருள் அனைவருக்கும் மிகவும் பயன்படும்.
6. கிருஸ்தவ நாட்காட்டி அடிப்படையில் வருடத்திற்கு 365.25 என கூறி உழைக்கும் வர்க்கத்தின் 11 நாள் சம்பளத்தை  அவர்களை அறியாமல் அபகரித்து வரும் முதளாளித்துவ நாடுகளின் கொடுமையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
7. சந்திர நாட்காட்டி அடிப்படையில் நமது பிரயாணங்களை முன் கூட்டியே முடிவு செய்ய முடியும்.
8. ஹஜ் செய்வதற்கு தேவையான முன் ஏற்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட்டு செய்ய முடியும்.
9. ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்கள் வாழ்ந்த வருடங்களையும்அவர்களுக்கு இருந்த இடைவெளிகளையும் மிகவும் துல்லியமாக அறிய முடியும்.
10. நமது அன்றாட நிகழ்ச்சிகளுக்கு முன் கூட்டியே சந்திர நாட்காட்டி அடிப்படையில் மக்களுக்கு அழைப்பு கொடுக்க மிகவும் பயனுள்ள மென்பொருள்.
11. பெண்களுக்கான இத்தா காலங்களை மிகவும் சரியாக கணக்கிட இது மிகவும் சிறந்த மென்பொருள் ஆகும்.
12. கடன் கொடுக்கல் வாங்கல்களை சந்திர நாட்காட்டி அடிப்படையில்  சரியான தேதியிட்டு  எழுதி வைக்க இம்மென்பொருள் உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
B. இம்மென்பொருளை உங்கள் எக்ஸெல் பக்கத்தில் நிறுவது எப்படி?

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது
1. உங்கள் எக்ஸெல் மென்பொருளை திறந்து அதில் கீழ்கண்ட மாற்றத்தை செய்ய வேண்டும்.
Macro in Tools Menu. Security Option Change to Medium
2. தற்போது கீழ்கண்ட தளத்தில் உள்ள இந்த பக்கத்திற்கு சென்று உங்கள் எக்ஸெல் மென்பொருள் எந்த வருடத்திற்குரியது என்பதை  அறிந்து  ஏட்ஆன் என்ற மென்பொருளை  உங்கள் கணிணிக்கு  தரவிறக்கம் செய்யவும்.  அதை ஹிஜ்ரி நாட்காட்டி 3000 என ஒரு புதிய போல்டரை உருவாக்கி சேமிக்கவும்.
Download / பதிவிறக்கம் – Microsoft Excel 2007
Download / பதிவிறக்கம் – Microsoft Excel 2003
3. டவுன் லோட் செய்த பைல்கள் இவ்வாறு நீங்கள் உருவாக்கிய போல்டரில் காட்சியளிக்கும்.
Downloaded file Display
4. தற்போது டவுன்லோட் செய்த பைலை ஏற்கனவே உருவாக்கிய  அதே போல்டரில் எக்ஸ்ட்ராக்ட்  செய்யவும்.
Extract Same folder What you created for Download
5. தற்போது உங்கள் போல்டரில் இவ்வாறு பைல்கள் காட்சியளிக்கும்.
Folder View After extract the addin file
6. அதில் இன்ஸ்டால் ஏட்ஆன் பைலை டபுள் கிளிக் செய்தால் உங்களுடைய மென்பொருள் உங்கள் எக்ஸெல் பக்கத்தில் இணைக்கப்பதற்காக கீழ்காண்பவற்றை தெரிவு செய்யுவும்.
Setup File
Close Window
Enable Macros Select Page
7. தற்போது தங்கள் எக்ஸெல் பக்கத்தில் கீழ் உள்ளது போல் காட்சியளிக்கும்.  அதை கிளிக் செய்தால் நீங்கள் எந்த வருடத்துடைய ஹிஜ்ரி தேதியை அறிந்து கொள்ளலாம்.
HIJRI CALENDAR CONVERTER MODEL
மேலும் எந்த  3000 வருடத்திற்கான ஹிஜ்ரி வருட காலண்டரை நீங்களே தயார் செய்யலாம்.
தொகுப்பு :மு .அஜ்மல் கான்.

No comments:

Post a Comment