Friday, 3 May 2019

ஜெர்மன் நாட்டில் கோர்லிபன் அணு க்கழிவு மையம்.


ஜெர்மன் நாட்டில் கோர்லிபன் அணு க்கழிவு மைய பாதுகாப்பு மற்றும் அணுக்கதிர் தாக்காத பிரத்தியேக உடை மாற்றி சுரங்கத்திற்குள் (590 மீட்டர் ஆழம்) அழைத்துச் சென்றனர். மொத்தம் 8000 அணுக்கழிவுகள் கொண்ட பீப்பாய்கள் குவிக்கப்பட்டு அவற்றின் மீது இரண்டு அடி உயரத்திற்கு உப்பு தூவி இரு ந்தார்கள்.


1967 ம் ஆண்டிலிருந்து 1978 ஆண்டு வரை அணுக்கழிவுகளை இங்குதான் நிர ப்பினார். 1988 ம் ஆண்டு சுரங்கத்திற்குள் தண்ணீர் அதிகமாக சுரக்க ஆரம்பித்து விட்டது.



2008 ம் ஆண்டு சுரங்க தண்ணீரில் சீசி யம் 137 எனும் கதிர்வீச்சு கனிமம் அதிகம் உருவாகி இருப்பதை கண்டு பிடித்தனர். உப்புச் சுரங்கம் முழுவதையும் கூடுதல் தண்ணீரால் நிரப்பினால் அணுக்கழிவு கள் இன்னும் ஆழத்துக்கு சென்றுவிடும். அந்த ஆழ்நிலக் கருவூலம் இன்னும் பாது காப்பானதாக மாறும் என்ற விபரீத யோ சனை தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த கழிவுகளை வேறு எங்கே எடுத்துச் செல்வது என்று திகைத்து நின்றனர் ஜெர்மன் விஞ்ஞானிகள்.


அந்த சுரங்கத்திற்குள் 650 மீட்டர் ஆழமான ஒரு பகுதியில் விசேஷ கருவி (Hand Fuss Monitor) மூலம் என் உடலில் படிந்திருந்த கதீர்வீச்சை அளித்தனர். மீண்டும பழைய அறைக்கு போய் உடைகளை முற்றிலும் களைந்து விட்டு நீண்ட நேரம் குளித்துவி ட்டு என் சொந்த உடைகளை அணிந்து கொண்டு மேலே கூட்டி வந்தனர்.

இந்த பேரதிர்ச்சியிலிருந்து விடுபட்டு இய ல்பு நிலைக்கு வர எனக்கு வெகு நேரம் தேவைப்பட்டது. அறிவியல் தொழில்நு ட்பம் பொருள்வளம் லஞ்ச லாவண்யமற்ற அரசியல் என் அனைத்திலும் உயர்ந்து விளங்கும் ஜெர்மன் நிலையே இப்படி என்றால் நம்நாட்டின் நிலையை சிந்தித்த படி இருந்தேன். இந்த அணுக்கழிவு பிர ச்சினை என் வீட்டு முற்றத்தில் கூடங்கு ளத்தில் வந்து விடியும் என்று நான் கன வில் கூட நினைக்கவில்லை.

1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகள் வெளியாகிறது. இவ்வாறு வெளியாகும் அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. அவற்றினை 7 வருடங்களுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor -AFR) கொண்டுச் செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் என்பது ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலக்கட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழகமே மிகப்பெரியப் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இந் நிலத்தில் உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்.


நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை இந்தியா பெறாத நிலையில் கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்கஇந்திய அணுசக்தித் துறை முடிவு செய்திருப்பது என்பது மத்திய அரசு நேரடியாக தமிழர்கள் மீது தொடுக்கின்ற சூழலியல் போர்.

அணுக்கழிவு கதிர்வீச்சு வெளிப்பட்டதால் தற்காலத்தில் ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் நடந்த பேரழிவைக் கண்கூடாகக் கண்டும்கூட அதிலிருந்து படிப்பினைகள் கற்றுக்கொள்ளாத இந்திய அரசு தமிழகத்தை சோதனைக் கூடமாக மாற்ற விரும்புவது எதனாலும் அனுமதிக்க முடியாது.எனவே, தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிரந்தரமாக மூட வழிவகைகளைச் செய்ய வேண்டும்

இயற்கைத்தாய் நம்மை காத்து அருளட்டும் !!


என் அருமை தமிழ் மக்களே, எவ்வளவு பெ ரிய ஆபத்து நம் தலைக்கு மேல் தொங்கி கொண்டு இருக்கிறது என்பது தெரிகிற தா?. கப்பலின் எண்ணெய் கசிவை வாளி யால் மொ ண்டு ஊற்றிய அபாரமான தொ ழில்நுட்பம் நம்மால் அறியப்பட்டது அல்ல வா?. இந்த விபரீதம் எதையும் புரியாமல் தமிழிசையும் நமது மங்குனி அமைச்சர்க ளும் இதனால் ஆபத்து எதுவும் இல்லை என்று பொத்தாம் பொதுவாக அறிவுகெட்ட தனமாக உளறி வருகிறார்கள். இதைப்ப ற்றிய கவலையோ பொருப்போ ஆளும் அரசுக்கு ஒரு சதவீதம் கூட தெரியாது. அவர்களுக்கு தேவை பதவியும் ஆட்சி யும் மட்டுமே. சிங்கப்பூரில் உல்லாச பய ணம் மேற்கொண்டு இருக்கும் சுடலை இதைப்பற்றி எல்லாம் வாயே திறக்க மாட்டார். ஆக அவருக்கும் மக்களைப் பற்றி யோ நாட்டை பற்றிய கவலை எதுவும் கிடை யாது.

No comments:

Post a Comment