Saturday 28 December 2019

விமானப்படை பயிற்சியில் சேர AFCAT - 2020 பொதுச் சேர்க்கை தேர்வு !!!

Image result for air force jobsமுப்படைகளில் ஒன்றாக உள்ளது விமானப்படை. இந்தியாவின் விமானப்படை உலகின் நன்காவது பெரிய விமானப்படையாகும். இப்படைப் பிரிவுகளுக்கான அதிகாரி பணியிடங்களை நிரப்ப பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் இந்திய விமானப்படையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு Air Force Common Admission Test (AFCAT) எனும் பொதுச் சேர்க்கைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்தியா முழுவதும் பொதுச் சேர்க்கைத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்தப் பொதுச் சேர்க்கைத் தேர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்திய விமானப்படையால் பயிற்சியளிக்கப்பட்டு அதிகாரிகளாக பணியமர்த்தப்படுவர்.  இந்நிலையில் AFCAT- 2020 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய விமானப்படையின் Flying மற்றும் Ground Duty பணி சார்ந்த Technical & Non-Technical பிரிவுகளில் சுமார் 249 காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

பணி விவரம்

Commissioned Officer எனப்படும் இவ்வதிகாரி பணிகளுக்கான மொத்தம் 249 காலியிடங்கள் Permanent Commission (PC), Short service Commission (SSC) ஆகிய இருமுறைகளில் ஆள்சேர்ப்பு நடத்தப்படுகிறது.  

கல்வித் தகுதி

இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் +2-ல் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை எடுத்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் ஃபிளையிங் பிரிவு பணிக்கு ஏதேனும் ஒரு மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி மதிப்பெண் குறைந்தது 60% இருக்க வேண்டும். அல்லது 4 வருட பி.இ/பி.டெக் பட்டப்படிப்பை முடித்து 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் பிரிவு பணிக்கு, 4 வருட பி.இ/பி.டெக் பட்டப்படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் அல்லாத பிரிவு பணிக்கு, ஒரு மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி மதிப்பெண் குறைந்தது 60% இருக்க வேண்டும். அல்லது எம்.பி.ஏ/எம்.சி.ஏ/எம்.ஏ/எம்.எஸ்சி போன்ற பட்டப்படிப்புகளைப் படித்து, 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

உடற்தகுதி

உடற்தகுதியில் 1.6 கிலோமீட்டர் தூரத்தை பத்து நிமிடங்களில் ஓடிகடக்கும் திறனை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும். 10 push ups, 3 chin ups எடுக்கும் திறன் பெற்றிருப்பது அதிகாரி பணிக்கான உடற்தகுதியாக கருதப்படுகிறது. மேலும் இந்திய விமானப்படையால் நடத்தப்படும் நீச்சல் போட்டி மற்றும் கயிறு ஏறுதல் ஆகிய போட்டிகளில் விண்ணப்பதாரர்கள்  தேர்ச்சி பெறுவது அவசியம்.உடலில் பச்சை (Tattoos) குத்தியிருந்தாலோ, போதைப் பொருள் பழக்கப்படுத்துபவராக இருந்தாலோ பயிற்சிக் காலத்தின்போது தெரியவந்தால் பாதியிலேயே பயிற்சியிலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள்.

வயதுவரம்பு


விண்ணப்பதாரர்களுக்கு 1.1.2021 தேதியின்படி 20 முதல் 24 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். அதாவது, 2.1.1997-க்கும் 1.1.2001-க்கும் இடைப்பட்ட நாட்களில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். The Directorate General of Civil Aviation (DGCA) ஆல் வழங்கப்படும் Commercial Pilot Licence வைத்திருப்பவர்களுக்கு உச்ச வயதுவரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது. விமானப்படையின் Ground Duty பணிக்கு 1.1.2021 அன்றின்படி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 26 வயதிற்குள் இருத்தல் வேண்டும். அதாவது 2.1.1995-க்கும் 1.1.2001-க்கும் இடைப்பட்ட நாட்களில் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை


இந்தியா முழுவதும் உள்ள சுமார் 106 தேர்வு மையங்களில் ஆன்லைன் வழியாக விமானப்படையின் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். AFCAT-2019 தேர்வு 2020 பிப்ரவரி 22 அல்லது 23ம் தேதிகளில் நடைபெறும். காலை 9.24 முதல் 11.45 வரையிலும் மாலை 2.15 முதல் 4.15 வரையில் என இரண்டு ஷிப்டுகளில் தேர்வுகள் நடத்தப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொதுச் சேர்க்கைத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தவிர உடற்தகுதி தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு, நேர்காணல் போன்ற தேர்வுகளுக்குப் பின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி


பொது நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு 1.1.2021-லிருந்து பயிற்சிகள் வழங்கப்படும். Flying பிரிவில் சேர விரும்புவர்களுக்கு 74 வாரங்களும் Ground Duty பிரிவிற்கு 52 வாரங்களும் இந்திய விமானப்படையின் பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.afcat.cdac.in என்ற இணையதளம் சென்று ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.12.2019.மேலும் அதிக தகவல்களுக்கு https://careerindianairforce.cdac.in அல்லது www.afcat.cdac.in என்ற இணையதளப் பக்கங்களைப் பார்க்கவும்.


நன்றி குங்குமம் கல்வி - வழிகாட்டி

No comments:

Post a Comment