பெண் குழந்தைகளின் பெற்றோரே...
1) உங்கள் பெண் குழந்தைகளைக் கண்காணியுங்கள். கண்காணிப்பு என்றால் திருடனைப் போலீஸ் பெண் குழந்தைகளின் பெற்றோரே கண்காணிப்பது போல் அல்ல! ஒரு தாய் விலங்கு தன் குட்டியை மற்றவர்களிடமிருந்து கண்காணிக்குமே அப்படி!
2) உங்கள் பெண் குழந்தைகள் பருவம் எய்தும் போது சீர் - செனத்தி- சடங்கு செய்வதில் காட்டும் அக்கறையை விட, அவளை ஒரு நல்ல டாக்டரிடம் 'அப்பாயிண்ட்மெண்ட்' பெற்று, பருவமடைதல் என்ற இந்நிலையின் முக்கியத்துவத்தை விளக்கச் செய்வதில் காட்டுங்கள்.
3) காமம் என்பது எப்படி எல்லா உயிரினங்களுக்கும் இயல்பானது - அது வம்ச விருத்திக்கான கருவியாக மானுட இனத்துக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிர்களுக்கும் எப்படி ஒரு தூண்டு கோலாக உள்ளது என்பதைப் பொறுமையாக விளக்குங்கள்.
4) எப்படிப் படிப்பதற்கு ஒரு வயது, உழைப்பதற்கு ஒரு வயது, பொருள் ஈட்டுவதற்கு ஒரு வயது, ஓய்வெடுக்க ஒரு வயது உள்ளதோ... அதே போல் காமம் துய்க்கவும் ஒரு வயது உள்ளது என்பதைப் புரிய வையுங்கள். மேற்கண்ட வயதுகளில் ஒன்று மாறி அமைந்தாலும் எப்படி வாழ்க்கை தடம் புரளுமோ அப்படியே காமம் துய்க்கும் வயது மாறியமைந்தாலும் வாழ்க்கை சருகாகிவிடும் என்பதை விவாதியுங்கள்.
5) இப்போது வரும் படங்கள் - ஒரு சாதாரண ஆட்டோ மெகானிக்கை, கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பெண் காதலிப்பது, தனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற 'நீதி போதனை' படங்கள், 'என்னை மாதிரிப் பசங்களைப் பார்த்தால் பிடிக்காது- பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்'-... என்னும் கழிசடைக் கதாநாயகன்கள் நடித்த படங்களை வீட்டில் முற்றிலுமாகத் தவிருங்கள்!
6) உடலியல் சார்ந்த வாழ்வியல் விளக்கங்களை ஒரு தகப்பனை விடத் தாய்தான் அணுக்கமாக நெருங்கி ஒரு பெண்ணிடம் பேச முடியும்.
7) உங்கள் பெண்ணின் நண்பிகளை கவனியுங்கள். ஒரு சில கழிசாடைப் பெண்களிடம் பழக விடாதீர்கள். ("எங்க அண்ணன் ரொம்ப நல்லா கிடார் வாசிப்பாண்டி- என் கசின் டான்ஸ் சூப்பரா ஆடுவாண்டி"). பெரும்பாலும் இப்படிப்பட்ட கழிசாடைப் பெண்கள்தான் தங்கள் அண்ணன்/ கசின்/ ஏதோ ஒரு பொறுக்கிக்காகத் தன் தோழியைக் 'கோர்த்து விடும்' வேலையைப் பார்க்கும்.
8 - 'ஆண்-பெண் சகஜ பாவம், இணக்கமான தோழமை, கள்ளமற்ற ஆண் - பெண் நட்பு'-... இவையெல்லாம் Super Ideals. ஆனால் பேப்பரில் மட்டுமே எழுதி ரசிக்க முடியும். இன்றைய சினிமா வளர்த்து விட்டுள்ள ரசனையில் ஒரு ஆண், பெண்ணின் மீது காட்டும் நட்பு , தோழமை எல்லாம் அவளுடைய கழுத்துக்குக் கீழேதான் பதிகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மரியாதையான நட்பு, கௌரவமான மனித அணுக்கம் இதற்கெல்லாம் காலமும் வயதும் நிரம்ப உள்ளது என்பதைப் புரிய வையுங்கள் உங்கள் பெண்ணுக்கு!
9) முதலில் நீங்கள் டிவி சீரியல்கள், ஆபாச அசைவுகள் கொண்ட திரை நடனங்கள், வக்கிரமான ரசனை கொண்ட சீரியல்கள் இவற்றை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்.
10) புத்தகம் படிப்பதில், அதிலும் காமம் என்ற உணர்வை மிகப் பக்குவமாக எடுத்துக் கூறும் புத்தக ஆசிரியர்களை பெண்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்! காமம் என்பது மிகப் பெரும் சக்தி - அதை அடக்கி வைப்பதை விட மடை மாற்றம் செய்து நடனமாக, ஓவியமாக, இசையாக... ஒரு பேராற்றலாக வெளிக் கொணரப் பழக்குங்கள்.
11) 'காமமும் பசியும் மனிதனைச் சமைக்கும் நெருப்புகள் - அவற்றால் பக்குவப்படும் அதே நேரத்தில் கருகிவிடாமலும் பார்த்துக் கொள்வதில்தான் வாழ்க்கையின் போராட்டம் அடங்கி உள்ளது'- என்ற அப்துல் ரகுமான்!
விதி வசத்தால் கல்லூரி வாசலில் மழையில் காத்திருந்த போது முன் பின் தெரியாதவனோடு அவன் 'லிஃப்ட்' கொடுத்ததால் காரில் ஏறி அவனால் சீரழிக்கப்பட்ட அவளைக் காட்டிய 'அக்னிப் பிரவேசம்'- பிறகு அவளுக்குத் தலையில் தண்ணீர் ஊற்றி அவளின் தாய் தரும் உபதேசம் (ஜெயகாந்தன்),
மற்றும் தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்'- 'மரப்பசு'- 'மோகமுள்'-... போன்று காமத்தை வெவ்வேறு பரிமாணங்களில் நுட்பமாகக் கையாண்ட எழுத்துக்களைப் பரிச்சயப்படுத்துங்கள்!
12) காமம் அருவெறுக்கத் தக்க சாக்கடையும் அல்ல - அதற்காக எங்கு கிடைத்தாலும் அள்ளிப் பூசிக் கொள்ளும் சந்தனமும் அல்ல! அது உரிய நேரத்தில் உறையிலிருந்து எடுக்கப்பட வேண்டிய வாள் என்பதைப் புரிய வையுங்கள்.
13) காமம் - காதல் - குடும்பவியல் இவைகளை வெளிப்படையாக உங்கள் மகளிடம் பேசத் தயங்காதீர்கள். ("ஐயோ அவளுக்கு ஒண்ணுமே தெரியாது - Marriage ஆகிற வரைக்கும் So Innocent!) அதெல்லாம் உங்கள் தலைமுறையோடு காலாவதி ஆகி விட்ட வசனம்! இப்போது கூகிளும், ஃபேஸ்புக்கும் வீடியோக்களால் மலிந்து கிடக்கிறது.
14) இப்போது நீங்கள் காமத்தைப் பற்றி எடுத்து உரைக்கத் தவறிவிட்டால் எவனோ ஒரு ஜீன்ஸ் பேன்ட் - காதில் ஒற்றை வளையம் போட்ட கழிசடை அவளுக்குக் காமத்தை உரைத்து எடுப்பான்.
15) SO, NEVER HESITATE TO DISCUSS LOVE/LUST/LIFE WITH YOUR GROWN UP DAUGHTERS. PARENTAL DISCUSSION WILL ENRICH THEM. BOYFRIEND's DISCUSSION WILL SPOIL THEM!
No comments:
Post a Comment