Tuesday 5 January 2016

சிம் கார்டு பற்றிய ஒரு சுவாரசியமான விழிப்புணர்வு தகவல்கள் !!



உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.சிம் என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்ட ஒரு சிறிய சிப் ஆகும். இதனுள் பாதுகாப்பட்ட சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் தனிப்பட்ட வரிசை எண், பாதுகாப்பு அங்கீகார அம்சம், இடுதல் தகவல், உள்ளூர் வசதிகளுக்கான தற்காலிக தகவல்கள் சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்

அதுமட்டுமல்லாது பயனர்களுக்கு சாதாரண பயன்பாட்டுக்காக தனிப்பட்ட அடையாள எண் (PIN), தனிப்பட்ட நீக்கல் குறியீடு (PUK) என்ற இரண்டு கடவுச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிம்மில் உள்ள முக்கியமான சில Key சந்தாதாரர்களை அடையாளம் காணப் பயன்படுகிறது.





தற்போது 900 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சிம் கார்டு மூலம் தொலைத்தொடர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சிம் கார்ட்டின் மையப்பகுதியில் சிப் உள்ளது. இந்த Active chip side-ல் தான் மேற்புரப் பரப்பான Metal contact, Bond Wire-ஆல் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே நமது போனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது.

சிப் பகுதியின் அருகில் Chip Adhesive என்ற அமைப்பும், அதன் மேலே Substrate என்ற அமைப்பும், அதை சுற்றி Encapsulation என்ற அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

hot melt என்ற பகுதி Substrateக்கு கீழே கொடுக்கப்பட்டு, இந்த ஒட்டு மொத்த அமைப்பும் card Body உடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது தான் கண் இமைக்கும் நேரத்தில் பரிமாற்றப்படும் தகவல்களுக்கு காரணமாக உள்ளது.

மொபைல்போனில், 'சிம் கார்டில்' என்னென்ன இருக்கிறது?





'சிம்' கார்டு இல்லாமல் எந்த ஒரு மொபைல் போன் சேவையின் நெட்வொர்க்குடனும் தொடர்பு கொள்ள முடியாது. சிம் உள்ள போனில் எண்களை அழுத்தியதும், என்ன விதமான மொபைல், அதன் தொடர்பு எண் என்ன, யாருக்கு அழைப்பு போகிறது. அது எந்த மொபைல் சேவை, எந்த இடத்திலிருந்து அழைக்கப்படுகிறது போன்ற தகவல்களை பதிவு அறிய சிம்கார்டு உதவுகிறது. 'சிம்' கார்டுக்குள் ஒரு சிலிக்கன் சில்லு இருக்கும். அதை ஒரு கெட்டி பிளாஸ்டிக் அட்டையில் பதித்திருப்பார்கள். சில்லுடன் பதிக்கப்பட்டுள்ள உலோக, 'சர்க்யூட்' மொபைல்போனின் தொடு முனையுடன் பட்டதும் தொடர்பு ஏற்படும். 'சிம்' கார்டுகள், மினி (25 மி.மீ., நீளம், 15 மி.மீ., அகலம், 0.76 மி.மீ., தடிமன்), மைக்ரோ (15 மி.மீ., நீளம், 12 மி.மீ., அகலம், 0.76 மி.மீ., தடிமன்) மற்றும் நேனோ (12.30 மி.மீ., நீளம், 8.80 மி.மீ., அகலம், 0.67 மி.மீ., தடிமன்) ஆகிய மூன்று அளவுகளில் வருகின்றன.
சிம் கார்டில் ஐ.சி.ஐ.சி.டி., என்ற அடையாளம் காட்டும், 'சர்க்யூட்' இருக்கும். இதில் முதன்மை கணக்கு எண் என்ற 19 இலக்க எண் உள்ளது. மேலும், மொபைல்போன் சேவையைத் தரும் நிறுவனத்தின் அடையாள எண், பயன்படுத்துவோரின் அடையாள எண் ஆகியவை பதிந்திருக்கும்.இது தவிர, ஐ.எம்.எஸ்.ஐ., என்ற சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாள எண்ணும் உண்டு. இந்த 19 இலக்க எண்ணில், முதல் மூன்று இலக்கங்கள், ஒரு தேசத்தை குறிக்கும், அடுத்த மூன்று இலக்கங்கள் மொபைல்போன் சேவை நெட்வொர்க்கின் எண்ணை குறிக்கும். அடுத்து சந்தாதாரரின் அடையாள எண் இருக்கும். மேலும், மொபைல்போன் நெட்வொர்க்கில் சிம்கார்டு முறையாக வாங்கப்பட்டது தான் என்பதை அடையாளம் காட்டும், 'ஆத்தென்டிகேஷன்' எண்ணும், 128 'பிட்' தகவலாக பதிவாகியிருக்கும்.தவிர, குறிப்பிட்ட அளவுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் நீங்கள் பதிந்து வைக்கும் பிறரது மொபைல்போன் எண்கள்ஆகியவையும் இதில் சேமிக்கப்படும்.    
தொகுப்பு : அ.தையுப அஜ்மல்.

No comments:

Post a Comment