Saturday, 16 January 2016

தமிழர் மரபில் இல்லாத பழக்கம்தான் பஃபே விருந்து !!

Image result for buffet tableவிருந்துனு சொன்னாலே தலை வாழை இலை போட்டு வித‌ விதமா பரிமாறி பாத்த‌ உடனே சாப்பிட‌ தூண்டுறது தான்,
உட்கார்ந்து சாப்பிடற‌து தான் நம்ம‌ கலாச்சாரம்.அது தான் சிறந்ததும் கூட‌.
அறிவியல் படியும் உட்கார்ந்து தான் சாப்பிடனும். சில‌ வேலைகள் இப்படி தான் செய்யனும் முறை இருக்கு .

விருந்தும் விருந்தோம்பலும் தமிழர் மரபில் கலந்தவை. பண்டிகை, திருவிழா, திருமண விழாக்களில் மட்டுமே விருந்து என்ற நிலை இன்று மாறிவிட்டது. பஃபே எனச் சொல்லப்படும் மாடர்ன் விருந்து பிரபலமாகிவிட்டது. காலை, மதியம், இரவு என எந்த நேரமும் பஃபே எளிதில் கிடைக்கிறது. பொதுவாக, இந்த வகை விருந்துகளில் பலதரப்பட்ட உணவுகள் இருக்கும் என்பதால், எதில் இருந்து தொடங்குவது என்பதில் இருந்து, எதைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும் என்பது வரை கவனத்துடன் இருந்தால், ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராது.

விருந்து இரண்டு வகை. வீட்டில் பரிமாறப்படும் விருந்து, வெளி இடங்களில் பரிமாறப்படும் விருந்து. இந்த இரண்டு விருந்துகளில் சிறந்தது, வீட்டில் பரிமாறப்படும் விருந்து பந்தி முறையே.

வீட்டில் பரிமாறப்படும் பந்தி முறை முன்பு இருந்தது, கூட்டு குடும்பமாக இருந்தபோது அனைவரையும் வரவேற்று பந்தி முறையில் உணவு பரிமாறப்பட்டது. அதில் உணவோடு சேர்ந்து அன்பும் பரிமாறப்படும். உதாரணதுக்கு மாப்பிள்ளைக்கு சாதம் போடு, கறித்துண்டு வையுங்க. மச்சானுக்கு
பாயசம் போடு, என்று உறவு முறைகளை சொல்லி பரிமாறுவோம். சாப்பிட்டதும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து வெத்தலை தாம்பூலம் போடுவது ஒரு தனி சுகம். அப்பொழுதான் என் பையன் படித்துவிட்டான் உன் பெண்ணை அவனுக்கு தருகிறயா? என்று பல கல்யாணங்கள் அந்த தருணங்களில் நிச்சயம் செய்ததும் உண்டு.


ஹெல்த்தி பஃபே

மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த பழக்கம்தான் பஃபே விருந்து. ஆனால், ஹெல்த்தியாகச் சாப்பிடுவது எப்படி என இன்னும் நாம் கற்றுக்கொள்ளவில்லை.
பஃபே விருந்தில் கொஞ்சம் கொஞ்சமாக எத்தனை முறை வேண்டுமானாலும்  சாப்பிடலாம். இதுபோன்ற நிகழ்வுகளில் சாப்பிடுவதைவிட மற்றவர்களோடு அறிமுகமாவதுதான் முக்கியம்.  அதற்காகவே, அதிக நேரம் சாப்பிடும் வகையில் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

பஃபேவில் உணவு வகைகளைக் கண்டதும் ஓடிச்சென்று எல்லா உணவுகளையும் எடுப்பது தவறு. சூப், ஸ்டார்ட்டர், பிரியாணி, அசைவ உணவுகள் என எதுவாக இருந்தாலும் அளவாகச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் வறுத்த, எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக இனிப்புச்சுவைகொண்ட கேக் முதலானவற்றைக் குறைவாகச் சாப்பிடுவதுதான் நல்லது. சாலட்கள், ஆவியில் வேகவைத்த உணவுகள், நீராவியில் வேகவைத்த சிக்கன் போன்றவற்றைச் சற்று கூடுதலாகச் சாப்பிடலாம். குறைந்தது அரை மணி நேரம் முதல், இரண்டு மணி நேரம் வரை உட்கார்ந்து, நன்றாக ரசித்துச் சுவைத்து மெள்ள மெள்ள உணவை விழுங்க வேண்டும்.

விருந்துக்கு முன்
முன்பு எல்லாம், பலரும் விருந்துக்குச் செல்வதற்கு முந்தைய நாளில் இருந்தே அதற்குத் தயாராகிக்கொண்டு இருப்பார்கள். விருந்தை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். சிலர், மதிய விருந்துக்குச் செல்வதாக இருந்தால், காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள், இது தவறு. என்னதான் அமர்க்களமான விருந்தாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற மனஉறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும். காலை உணவையும் இரவு உணவையும் எந்தக் காரணம்கொண்டும் தவிர்க்கவே கூடாது. மதிய விருந்துக்குச் செல்வதாக இருந்தால், நான்கு மணி நேரத்துக்கு முன்னர், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை அளவாகச் சாப்பிடுவது நல்லது. இரவு விருந்துக்கு ஆரோக்கியமான இளம் வயதினர் மதிய உணவைத் தவிர்த்து, ஏதோ ஒரு ஜூஸ், பழம் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு விருந்துக்குச் செல்வதில் தவறு இல்லை. உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை உள்ளவர்கள், எந்த வேளை உணவையும் தவிர்க்கக் கூடாது.
பிளேட்டில் கவனம்


வீட்டு விருந்துகளில் நிறைய‌ டிஷ் செஞ்சு வைச்சிருப்பாங்க‌. நானும் பபே முறைக்கே வாரேன் ஒரு தட்டில் சாதம் அனைத்து விதமான‌ கறி வகைகள் சாம்பார், தயிர், ரசம், பாயாசம், அப்பளம் அப்புறம் உங்களுக்கு பிடித்தமான வடை இதையெல்லாம் எப்படி ஒரே தட்டில் வைக்க‌ முடியும் நடுவரே. முதல்ல‌ இதையெல்லாம் நாமலே எடுத்து வைச்சி சாப்பிடுரதுக்குள்ள‌ கை வலிக்கும் அப்புறம் எங்க‌ சாப்பிடுறது நடுவரே. அப்படியே சாம்பார் முடிச்சி, தயிர் , ரசம் இப்படி ஒவ்வொன்னா நாம‌ எடுத்து சாப்பிட‌ முடியுமா நடுவரே. கூடவே குழந்தைகள் வந்திருந்தாங்கனா அவங்களுக்கும் யாருங்க‌ வச்சி தருவாங்க‌ நாமதான் வச்சி கொடுக்கனும்
பபே முறை பிரியானி, சிக்கன் இதுக்குலாம் வேனா சரியா வரும் நம்ம‌ அறுசுவை உணவுக்கு சரியா வராதுங்க‌ நடுவரே. பபே முறையிலும் உட்கார்ந்து சாப்ப்டுவதாவே இருக்கட்டும் ஒவ்வொரு தடவையும் எந்திருச்சி போய் சாப்பாடு போட்டு கொள்ள‌ முடியுமா 


பஃபே முறைல‌ எவ்ளோ கஸ்டம் இருக்கு தெரியுங்களா, கேட்டு வாங்கி சாப்பிடவே சங்கட‌மா இருக்கும் பட்சத்தில‌, தேவையானதை போயி , போயி வாங்கி சாப்பிடறது இன்னும் எவ்ளோ தர்ம‌ சங்கடமா இருக்கும் நீங்களே சொல்லுங்க‌, ஒரு டைம் போவாங்க‌, 2 டைம் போவாங்க‌ அப்புறம் யாராவது பார்ப்பாங்களானு மனசுக்கு ஒரு நெறுடல் இருக்கும்.சொல்லுங்க‌ இது தேவையா,


பஃபே போன்ற விருந்துகளில் பங்கேற்கும்போது, பிளேட்டில் கவனம் செலுத்துவது அவசியம். எப்போதுமே சிறிய பிளேட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். பஃபேயில் இருக்கும் எல்லா உணவு வகைகளையும் பிளேட்டில் எடுத்துக்கொண்டு சென்று, பின்னர் அமர்ந்து சாப்பிட வேண்டாம். எந்த உணவை விரும்புகிறீர்களோ, அவற்றை மட்டும் பிளேட்டில் அளவாகவைத்து, பொறுமையாகச் சாப்பிட வேண்டும். பஃபேவில் வேகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீணாக்காமல் சாப்பிடுவதுதான் முக்கியம். எத்தனை முறை வேண்டுமானாலும் விரும்பிய உணவை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், தட்டையும் வயிற்றையும் அளவாக நிரப்ப வேண்டும்.

தண்ணீர் அருந்துங்கள்

தண்ணீர் அருந்தினால் அதிகமாகச் சாப்பிட முடியாதோ என, பலர் தண்ணீர் அருந்துவது இல்லை, இது தவறு. எப்போது எல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போது எல்லாம் அளவாக, சீரான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டே இருப்பது அவசியம். தண்ணீருக்குப் பதில் கோலா பானங்கள், சோடா அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழர் விருந்து

எத்தனையோவிதமான விருந்துகள் இருந்தாலும், தமிழர் விருந்துதான் செரிமானத்துக்கு ஏற்றது. முதலில் சிறிது பாயசம் போன்ற இனிப்பு வகைகளைச் சாப்பிட வேண்டும். பின்னர் அரிசி, பருப்பு, நெய், ரொட்டி போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். பிறகு, கலவை சாதம், மீண்டும் சிறிதளவு இனிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும், பின்னர் ரசம், அப்பளம், சாலட், தயிர், ஐஸ்க்ரீம் என விருந்தை முடிப்பதுதான் காய்கறிகளை மட்டும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். 


சாப்பிட வருபவர்களை வரவேற்று, பந்தியில் உரிய இடத்திற்கு அழைத்துச் சென்று அமரச் செய்து, அவர்கள் விரும்பி உண்பதை விசாரித்துச் சாப்பிடச் செய்வது இவற்றின் சிறப்பு

கலோரி கவனம்

பஃபே விருந்துகளில் நிறைய சாப்பிட்டால், எக்கச்சக்க கலோரி உடலில் சேர்ந்துவிடும். எனவே, அடிக்கடி பஃபேயில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பஃபே விருந்துக்கும் இன்னொரு பஃபே விருந்துக்கும் இடையில் இரண்டு வாரங்கள் முதல் நான்கு வாரங்கள் வரை இடைவெளி இருப்பது நல்லது. பஃபேவில் பங்கேற்கும்போது, அந்த விருந்துக்கு முந்தைய வேளையும், அந்த விருந்துக்கு அடுத்த வேளையும், வழக்கமாகச் சாப்பிடும் அளவில் பாதி அளவு மட்டும் சாப்பிடுங்கள். நிறைய உணவுகளை உண்டிருந்தால், அடுத்த இரண்டு நாட்களுக்குக் கூடுதல் உடற்பயிற்சிகளைச் செய்து, உடலில் சேர்ந்த தேவையற்ற கலோரிகளை எரிப்பது நல்லது.

சூப் சாப்பிடலாமா?

சூப் பசியைத் தூண்டும் ஆற்றல்கொண்டது. பஃபே, விருந்துகளில் பங்கேற்கும்போது, சாப்பிடச் செல்வதற்கு குறைந்தது அரை மணி நேரத்துக்கு முன்னதாக சூப் பருகினால்தான் பலன் கிடைக்கும். வேகவேகமாக சூப்பைப் பருகிவிட்டு, உடனடியாக மற்ற உணவுகளையும் சாப்பிட்டால், சூப் குடிப்பதில் எந்தவிதப் பயனும் கிடையாது.


பஃபே முறைல‌ குழ‌ந்தைங்க‌, பெரியவங்க‌ யார் நம்ம‌ மேல‌ கொட்டுவாங்கனே தெரியாது,நிறையா வேஸ்ட் ஆகும், எங்க‌ தான் வேஸ்ட் ஆகாது, விருந்து அப்படினா இதெல்லாம் சகஜம்.
வேஸ்டான‌ என்னா விடுங்களேன் வாய் இல்லா ஜீவ‌ ராசிகளும் சாப்பிடட்டுமே ,அதுங்களும் வயிறார‌ சாப்பிட்டு வாழ்த்தட்டுமே.
நம்ம‌ முன்னோர்கள் எதையுமே காரணமில்லாம‌ செய்யல‌, எல்லா விசயங்களையும், முறைகளையும் அர்த்தம் இருக்கும்.

பேஷனுக்காக‌ வேணா பஃபே முறை சரி வ‌ருமே தவிர‌ , எல்லா விதமான‌ மக்களுக்கும் பொருந்த‌ கூடியது,விரும்பதக்கது பந்திமுறையே,நம்ம‌ பாரம்பரிய‌ தமிழ் கலாச்சார பந்திமுறையே விருந்துகளில் விரும்பதக்கது.

 ஆக்கம்மற்றும்தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment