Tuesday 12 January 2016

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடும் வீழ்ச்சி !!


பெட்ரோல் என்பது இந்தியாவின் மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு பொன் முட்டையிடும் வாத்து. 350 பர்சென்டேஜ் வரி போட்டுதான் ஜனாதிபதி முதல் கடைநிலை ஊழியர் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இன்றைக்கு 2 ரூபாய் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும் அரசுகள் உடனே அந்த 2ரூபாய்க்கும் எதாவது ஒரு பெயரில் வரி கணக்கை எழுதி 350 பர்சென்டேஜை 375 ஆக மாற்றி பொதுமக்கள் தலையில் மிளகாய் அரைக்கின்றன.

அமெரிக்காவில், பாறை இடுக்குகளில் கிடைக்கும், 'ஷேல்' வாயுவில் இருந்து, அபரிமிதமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுபோல, எண்ணெய் உற்பத்தி செய்யும் பிற நாடுகள், வழக்கம் போல், உற்பத்தியை தொடர்கின்றன. 13 ஆண்டு பொருளாதாரத் தடையிலிருந்து மீண்டுள்ள ஈரான், முழு அளவில் எண்ணெய் உற்பத்தியை துவக்கிஉள்ளது. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் கச்சா எண்ணெய், சர்வதேச சந்தையில் நேற்று, 3 சதவீதம் சரிந்து, ஒரு பீப்பாய், 30.41 டாலராக வர்த்தகம் ஆனது; இது, 2003, டிசம்பரில் இருந்த குறைந்த விலை. அதன்பின், பிற்பகலில் சற்று ஏற்றம் கண்டது.




ஒரு காலத்தில், அதாவது ஜூலை 2008-இல் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 145 டாலராக வர்த்தகம் ஆனது, அன்று கடும் உச்சத்தில் இருந்தது. இன்று 30.41 டாலராக வர்த்தகம் ஆனது, கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருக்கிறது... விலைவாசி உயர்வு என்பதே DEMAND AND SUPPLY பொறுத்தே எந்த ஒரு பொருளுக்கும் விலை நிர்ணயம் செய்ய படுகிறது.... அதாவது தேவை அதிகரிக்கும் பொது விலை உயருகிறது???... தேவை குறையும்போது விலை குறைகிறது???.... ஆனால், இந்த கச்சா எண்ணெய் விலை குறைவு என்பது பொருளாதார விதிகளுக்கே இன்று பொருந்தவில்லை???.... அன்று 145 டாலராக வர்த்தகம் ஆனபோது ஒரு பீப்பாய்க்கான உற்பத்தி செலவு 20 டாலர்... அப்படி என்றால் அது போக மீதி லாபம் 125 டாலர்.... இன்று 30 டாலராக வர்த்தகம் ஆகிற போது ஒரு பீப்பாய்க்கான உற்பத்தி செலவும் அதே 20 டாலர்தான் ... அப்படி என்றால் அது போக மீதி லாபம் 10 டாலர் மட்டுமே.... அப்படி என்றால் இன்று லாபம் 100 சதவிகதம் என்றால் அன்று லாபம் 1250 சதவிகிதம்...., இல்லை அன்று லாபம் 100 சதவிகிதம் என்றால் இன்று லாபம் வெறும் 8 சதவிகிதம் மட்டுமே.



எண்ணெய் நிறுவனகளுக்கு மத்திய அரசு 1 லிட்டர் பெட்ரோலுக்கு வெறும் ரூ.22.58 தான் தருகிறது. டீசலுக்கு 1 லிட்டர் வெறும் ரூ.18.45 . டைம்ஸ் ஆப் இந்தியா என்று ஒரு பத்திரிகை இருக்கிறது, அதில் கடந்த வாரம் இந்த செய்தி வந்தது. அப்போ மீதி பணம்? பாதி மத்திய அரசுக்கும் மீதி மாநில அரசுக்கும் வரிகளாக மக்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் எல்லாமே அரசு நிறுவனங்கள் தான் (ரிலையன்ஸ் தவிர). உங்களைப் போலத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வரி, சுங்க வரி, கல்விச் சந்தா (educational cess), ஸ்வச் பாரத் சந்தா, துறைமுக உபயோகக் கட்டணம், ப்ரீமியம், அந்த வரி இந்த வரி என்று ஏற்க்கனவே கச்சா எண்ணெய் வாங்கும் போதே, எண்ணெய் நிறுவனங்களைப் பிழிந்து பல வரிகளை அரசுகள் வாங்குகிறார்கள். கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, LPG , பெட்ரோல் டீசல் இன்ன பிற பொருட்களாக மாற்றி விற்கும்போதும், ஏகப்பட்ட வரிகள் எண்ணெய் நிறுவனங்கள் மீது.நீங்கள் பெட்ரோலுக்கு தரும் அமவுன்ட்டில் கிட்ட தட்ட 45% மாநில மத்திய அரசுகளுக்கு வரிகளாக எண்ணெய் நிறுவனங்கள் ஏற்க்கனவே கட்டிவிட்ட்டுத் தான் பங்க்குகளில் தருகின்றனர்.



2008 இல் ஒரு டாலர் இந்திய ரூபாய் 48 . இன்று ஒரு டாலர் 66 ரூபாய் நம் நாடு பண மதிப்பு . 48% குறைந்து உள்ளது காரணம் பண வீக்கம் 6% அதற்கு காரணம் வட்டி 8% . நம் நாடு வட்டி இல்லா நாடு ஆகிறதோ அன்று தான் விலை வாசி உயராது . பண மதிப்பு குறையாது .அமெரிக்கா நினைத்தால் விலையை கூட்டவோ குறைக்கவோ செய்ய முடியும் ஆனால் தற்போது செய்யமாட்டார்கள்...இறக்குமதியை குறைத்து விட்டார்கள், சந்தைக்கு அதிக வரவு விலையோ குறைவு...எண்ணை ஏற்றுமதியை நம்பியிருக்கும் நாடுகளின் பொருளாதாரம் சரியும் சூழ்நிலை...இந்தியாவிற்கு விலை குறைவு நன்மையாக அமையும்..பாறை இடுக்குகளில் கிடைக்கும், 'ஷேல்' எரிவாய்வு எடுப்பதற்கும் சிலவுகள் உள்ளன அதனால் பாரல் $ 10 ற்கு வருவது சந்தேகமே..எண்ணை விலை குறைய குறைய அமேரிக்க டாலர் மதிப்பு கூடிவிட்டது...


சர்வதேச அளவில், மோசமான சூழ்நிலை காணப்படுவதால், கச்சா எண்ணெய் விலை, பீப்பாய், 10 டாலர் வரை வீழ்ச்சி அடையக்கூடும் என, நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் கரன்சியான டாலர், நம் இந்திய ரூபாய் மதிப்பில், 66 ஆக உள்ளது.


பெரும்பாலான வாசகர்கள் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

1. பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவனங்கள் அல்ல. மத்திய அரசு தான்.

2. மக்களிடம் வாங்கும் விலையில் கிட்ட தட்ட 46% மாநில மத்திய அரசுக்களுக்கு பல பேரில் வரிகளாக எண்ணெய் நிறுவனங்கள் கட்டியாக வேண்டும்.

3. இந்த வரிகளைக் கட்டிய பிறகே எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் மக்களின் மார்க்கெட்டுக்கு வருகின்றன.

4. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் வெறும் ரூ.23.48 தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசுகளால் கிடைக்கின்றன. பிற உற்பத்திப் பொருட்களிலும் இதே விகிதம் தான்

.5. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 30 டாலர் என்றாலும் எண்ணெய் நிறுவனங்கள், கப்பல் கட்டணம், நுழைவுக்கட்டணம், கப்பல் பெர்த்திங் சார்ஜ், மூரிங் சார்ஜ், கேஸ்ட் அவே சார்ஜ், இறக்குமதி வரி, துறைமுக கலால் வரி, அந்த வரி , இந்த வரி என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு கிட்ட தட்ட 45 டாலர் ஆகிறது.


கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததால் மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை குறைக்கவில்லை;இதன் மூலம் 150 ரூபாவை இலாபமாக ஆக்கிக் கொண்டது அரசு .மக்களுக்கு பயனில்லை,கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் சமையல் கியாஸ் விலை குறையவில்லை. மானியம்தான் ரூ.105 குறைந்துள்ளது.

சமையல் கியாஸ்

தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 54 லட்சம் சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள் போலி இணைப்புகள். அதாவது ஒரு வீட்டுக்கு இரட்டிப்பான இணைப்புகள் இருக்கும். இப்படிப்பட்ட இணைப்புகள் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளன.

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் சமையல் கியாஸ் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலக செய்தி தொடர்பு முதுநிலை மேலாளர் வி.வெற்றிசெல்வகுமார் கூறியதாவது:-

சிலிண்டர் விலை எவ்வளவு?

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை முன்பு ரூ.705 ஆக இருந்தது. இது மானியத்துடன் சேர்ந்த விலையாகும். இதில் கியாஸ் விலை ரூ.410. மானியம் விலை ரூ.295. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அதன் காரணமாக கியாஸ் சிலிண்டர் விலையும் குறைந்துள்ளது. அதாவது தற்போது மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.600 ஆக விற்கப்படுகிறது. இதில் கியாஸ் விலை ரூ.410, மானியம் விலை ரூ.190 ஆகும்.

கச்சா எண்ணெய் விலை குறைப்பினால் அறிவிக்கப்பட இருந்த கியாஸ் விலை குறைப்பு, மானியத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.705-ல் இருந்து ரூ.600 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மானியம் குறைந்தது

ஆனால் வீடுகளில் சமையல் கியாஸ் மானியத்துடன் வாங்குவோர் அதே ரூ.410 கொடுத்து தான் வாங்கவேண்டி உள்ளது. ஆனால் மானியம் ரூ.105 குறைந்ததே தவிர சிலிண்டர் விலை குறையவில்லை. சமையல் கியாஸ் மானியத்தை வங்கி கணக்கில் பெறுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆதார் அட்டை கொண்டு மானியத்திற்கான அடிப்படை தொகையை வங்கி கணக்கில் பெற்றுள்ளனர்.

உலக பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் விலை, கடும் வீழ்ச்சியை சந்தித்தது. நேற்று, 3 சதவீதம் சரிவை கண்ட கச்சா எண்ணெய், 12 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, 30 டாலராக குறைந்தது. 

No comments:

Post a Comment