Wednesday 13 January 2016

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்ற பெயரை மாற்றி ஏறு தழுவல் என்ற பெயரில் போட்டியை நடத்துங்கள் !!

Image result for ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், 'அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்' என, மத்திய, மாநில அரசுகள் மாறி, மாறி வலியுறுத்தி வருகின்றன.இதைப் பார்க்கும் போது, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வராது என்பது தெளிவாகி விட்டது. 

கிராமத்தில், ஒரு பழமொழி உண்டு; 'தும்பை விட்டு, வாலை பிடிப்பது' என்பது. 2014ல், உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய கோரிய மனுவை, விசாரணைக்கு கொண்டு வந்திருக்க, நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.இந்த தடை 11-07-2011 ஆம் அன்று காங்கிரஸ்-இல் மத்திய சுற்று சூழல் அமைச்சராக இருந்த JAIRAM RAMESH என்ற தெலுங்கர்... அதை முதலில் சிங்கம் புலி போன்ற காட்டு விலங்குடன் இந்த வீட்டு விலங்கை பட்டியலில் இட்டதே மிகபெரிய தவறு.... இதில் எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லை, ஏன் என்றால் உலகத்திலேயே எருமைகள் கூட காட்டு எருமைகள் (BISON) என்று உள்ளது???... இந்தியன் காட்டு எருமைக்கு GUAR -என்று பெயர். ஆனால் உலகத்திலேயே காட்டு மாடுகள் என்று ஒன்று கிடையவே கிடையாது???... இது தான் நமக்கு உள்ள ஒரே வாய்ப்பு.... இதை வைத்து இதனை காட்சி பட்டியலில் இருந்து இதனை நாம்மால் நீக்கி விட முடியும்???.... இதனை சட்டமாக இயற்றிவிட்டு அந்த தெலுங்கர் 12-07-2011- வரை இருந்து விட்டு 13-07-2011 ஆம் நாள் அன்று ஊரகத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்???... அன்று 2004-இல் இருந்து அன்று 11-07-2011 வரை மத்திய காங்கிரஸ் கட்சியில் திமுக -வும் அங்கம் வகித்தது???... ஆனால் திமுக வைக்கும் குற்றசாட்டு அன்று தமிழகத்தில் முதல்வராக இருந்த அம்மா அவர்கள் எதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, மேலும் அவர்கள் ஆட்சியில்தான், அதானால் இதற்கு அவர்கள்தான் பொறுப்பு என்று???... அப்படி என்றால் அன்று ஏன் கேட்கவில்லை, இன்று ஏன் கேட்கிறார்கள் என்பது அப்புறம் இருக்கட்டும்???.... நீங்கள் மத்திய அமைச்சர் அவையில்தானே அப்பொழுது நீங்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பது கூட எனது கேள்வி இல்லை???.... அன்று 11-07-2011-ஆம் நாளன்று இந்த தடை கொண்டு வந்தது ஜனவரி 2011 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் நீங்கள் தானே ஆட்சியில் இருந்து வந்தீர்கள்???.... அப்படி என்றால் இந்த தடைக்கு யார் காரணம்???... இன்னொரு கேள்வி, அவரின் அந்த மத்திய சுற்று சூழல் அமைச்சர் பதவி 12-07-2011 அன்று முடிகிறது????... அப்படி என்றால் அந்த தெலுங்கு அமைச்சர் அந்த தடையை ஒரு நாளுக்கு முன்பு, அதாவது 11-07-2011 அன்று ஏன் அதை கொண்டு வந்தார்???.... அதில் ஏன் காளையை அதோடு சேர்த்தார்???... அதற்கு என்ன காரணம்???.... அதற்கு வேறு யாராவது தெலுங்கர்கர் துணையாக இருந்தார்களா???.... இது எல்லாம் விசாரித்தால் தெரிந்து விடும் இது பன்னாட்டு சதியா, இல்லை உள்நாட்டு சதியா என்று????..

ஐல்லிகட்டுக்குத்தானே இடைக்கால தடை, ஏறு தழுவல் போட்டியை நடத்துங்கள்!!



ஜல்லிகட்டு நடத்த இடைக்கால தடை. மத்திய அரசு பட்டியிலில் உள்ள காட்டு காளைகளை வைத்து ஜல்லிகட்டு நடத்த தடை. அவ்வளவு தானே. தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு என்ற பெயரை மாற்றுங்கள். மாட்டு பொங்களன்று “வீட்டுக்காளை ஏறு தழுவுதல் மாட்டுப் பொங்கல் விளையாட்டு போட்டி” என்ற நிகழ்ச்சியை நடத்துங்கள். யாரும் எந்த தடையும் செய்ய முடியாது. இப்படி செய்யலாம் என்று நீதி அரசர் மார்கண்டேய கட்ஜீ பொங்கல் விளையாட்டு போட்டி நடத்த மாநில அரசிற்கு அதிகாரம் உண்டு என்று சொல்லியிருக்கிறார். அவரது கருத்தை ஒட்டி. “வீட்டுக்காளை ஏறு தழுவுதல் மாட்டுப் பொங்கல் விளையாட்டு போட்டி” என்ற நிகழ்ச்சியை நடத்த யாரும் தடை செய்ய முடியாது. தமிழக அரசு உச்ச நீதி மன்ற உத்திரவின் படி காட்டு காளைகளை வைத்து ஜல்லிகட்டு நடத்தினால் தான் உங்களுக்கு அனுமதி மறுக்கும். வீட்டு காளைகளை வைத்து ஏறுதழுவுதல் போட்டிக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அப்படி வேண்டுமென்றால் அவரகள் சட்டத்தை சரியாக இயக்கி விட்டு தடை செய்யட்டும். இது ஒட்டைச் சட்டம். அந்த காலத்தில் எம். ஆர். ராதாவின் இரத்த கண்ணீர் நாடகத்திற்கு தடை போட்டவுடன், எம்.ஆர். ராதா பெயர் மாற்றி இழந்த காதல் என்று இரத்த கண்ணீர் நாடகம் போட்டார். அதற்கும் தடை போட்டவுடன், வேறு பெயரில் அதே நாடகத்தை நடத்தினார். எனவே தமிழக மக்கள் நிம்மதியாக வீட்டு ஏறுதழுவுதல் போட்டி நடத்தலாம். காட்டு விலங்குகள் பட்டியலில் இதுவரை புலி, சிங்கம், கரடி போன்ற விலங்குகள் இருந்தது. ஒரு அதிமேதாவி அதிகாரி சோரம் போய், காளையையும், ஜல்லிகட்டையும் இணைந்து பட்டியலில் சேர்த்து விட்டார். அதாவது காட்டில் இருக்கும் காளைதான் காட்டு விலங்கு பட்டியலில் இடம் பெறும். எனவே அதை மத்திய அரசு அதை செய்துள்ளது. எனவே தமிழக மக்கள் காட்டு காளையை ஜல்லிகட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு நினைவு தெரிந்த வரை தமிழகம் காட்டு காளையை ஜல்லிகட்டில் ஈடுபடுத்த வில்லை. எனவே உச்ச நீதி மன்றம், காட்டுவிலங்கான காட்டு காளையை ஈடுபடுத்தி ஜல்லிகட்டு நடத்த தடை விதித்திருக்கிறது என்று தான் அர்த்தம். எனவே வீட்டு காளைகளை வைத்து ஏறு தழுவதல் என்பதற்கு தடை கிடையாது, அது நீதி மன்ற உத்திரவை மீறுவதாகாது. அரசு மக்களின் மனநிலை அறியாமல் உத்திரவின் வார்த்தை ஜாலங்களால் நீதிமன்றம் தடை செய்யும் அளவுக்கு உத்திரவு போட்டால், அதே வார்த்தை ஜாலங்கள் காட்டி, அந்த தடையை தாண்டி விளையாட வேண்டியது தான். வேறு என்ன செய்ய முடியும். காவிரி தண்ணீர் பிரச்சினையில் சுப்ரீம் கோட்டின் உத்திரவை மீறி நடக்கும் கர்நாடக அரசை எத்தனை முறை சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் பண்ணியிருக்கிறது. காளையை, காட்டு விலங்கு என்ற வரிசையில் வரைமுறை படுத்தாமல், சேர்த்துயார், யார் சொல்லி சேர்த்தார்கள். முதலில் அப்படி சேர்த்தவர்களை, அறிவிலி என்று சொல்வதா, இல்லை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆசைக்காக கைகூலியாக செயல்பட்ட அறிவார்ந்த அதிகாரி என்று சொல்லுவதா. அதை அனுமதித்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களை, அவர்களது கடமைகளை அறிவார்ந்து செய்ய தவறியவர்கள் என்று சொல்வதா. நம் நாட்டில் வீட்டு யானை இருக்கிறது, காட்டு யானை என்று இருக்கிறது. வீட்டு காளை என்று இருக்கிறது, காட்டு காளை என்று இருக்கிறது. பாரம்பரியமாக மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணியாக வைத்திருக்கும் காளை மாட்டை வீரியமிக்க சக்தி வாய்ந்த இனப்பெருக்கத்திற்கு தயார் செய்யும் ஜல்லிகட்டு காளையை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஒரு அதிகாரி, யாருக்கும் தெரியாமல் காட்டு விலங்கு என்ற பட்டியலில் சேர்ப்பார். அதில் காட்டு காளையா, வீட்டு காளையா என்ற வரைமுறை இல்லை. எனவே அதை நாம் காட்டு விலங்கு – அதாவது காட்டு காளை என்று தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும். தனக்கு இட்ட வேலையையே ஒழுங்காக செய்ய தெரியாத அதிகாரி, யாருக்கும் தெரியாமல் காளையை காட்டு விலங்கு என்று வரைமுறை படுத்துவாராம். நாம் அதை புரிந்து கொள்ளாமல், வீட்டில் வளர்க்கும் காளையை வைத்து விளையாடுவதற்கு அனுமதி கேட்க வேண்டுமாம். என்ன வேடிக்கை இது. காளையை காட்டு விலங்கு பட்டியலில் சேர்த்து இப்படி பட்ட குழப்பத்தை உருவாக்க காரணமான அதிகாரி, யார் சொல்லி செய்தார், ஆனால் அதை விலக்குவதற்கு மக்கள் வீதியில் இறங்கி போராடவேண்டுமாம். போராடினாலும் அதை நீக்க முடியாது என்று சொன்னால். யார் யாரை இயக்குவது என்று கேள்வி வருகிறது அல்லவா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், அதில் சட்ட சிக்கல் உள்ளது என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியுமா. எந்த ஒரு சட்டமும், தெளிவான சட்டமாக இல்லாமல், Ambiguity அதாவது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தால், அது செல்லு படியாகாது. ஒரு சாதாரண அதிகாரி செய்த தவறை சரி செய்ய கூட முடியாத அரசியல் தலைவர்களை நமக்கு எதற்கு. ஆனால் மக்கள் எல்லோரும் போராடிய பின்பு கூட,, பட்டியலில் இருந்து முழுமையாக நீக்காமல் பிராணிகள் வதைச் சட்டப்பிரிவு 3, 11 மற்றும் 22ன் படி, ஜல்லிகட்டு நடத்த உச்ச நீதி மன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. அதாவது, பிராணிகள் வதைச் சட்டப்பிரிவு – 3,11 ஆகியவை பிராணிகள் வதை, காயம் ஏற்படுத்துதல், ஆகியவற்றிற்கு தடை விதிக்கின்றன. ஜல்லிகட்டு என்பது காளைகளை துன்புறுத்துவது என்ற நோக்கத்தில் ஏற்பட்ட தல்ல. If the intention is to harm the animal, then it can be stopped. If the intention is to test, enrich the capability of the animal, how Jallikattu will fall under this purview. It cannot. எனவே 3,11ல் கூட ஜல்லிகட்டு வரவில்லை. இது வரை ஜல்லிக்கட்டில் எந்த காளையும் துன்புறுத்தப்பட்டு மடிந்த்து என்று ஏதாவது ஒரு நிகழ்வை காட்ட முடியுமா. எனவே 3,11 ம் இதற்கு பொருந்தாது. சட்டப்பிரிவு – 22, பிராணிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டை தடுக்கிறது. இதில் 22க்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு ஒரு நீர்த்த அரசு ஆணையை பிறப்பித்தது. 3 மற்றும் 11 வது பிரிவுகள் பற்றி எதுவும் கூறவில்லை. இந்நிலையில் மத்திய அரசின் ஆணையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், 3 மற்றும் 11வது சட்டப் பிரிவுகளை மையமாக வைத்து, இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாளும் தூங்கி விட்டு, மத்திய அரசு ஜல்லிகட்டு நடத்த வேண்டிய நாள் வரும் போது, ஒப்புக்கு சப்பாக பிராணிகள் வதை சட்ட பிரிவு 22 க்கு மட்டும் விலக்கு அளித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்து விட்டு, 3 மற்றும் 11 வது சட்ட பிரிவுகள் பற்றி ஒன்றுமே சொல்லாமல், ஒரு ஏமாற்று ஆணையை, மத்திய அரசு பிறப்பிக்கும் வகையில் ஒரு அதிகாரி ஏமாற்றி எழுதிய பைலை, கோர்டில் தடை கிடைக்கும் வகையில் அரசு ஆணையாக பிறப்பித்திருக்கிறது என்று சொன்னால், இங்கு மக்கள் அல்ல எஜமானர்கள், அரசை வழி நடத்தும் மறைமுக சக்திகள் தான் அதிகாரிகளுக்கு எஜமானர்கள்.

 எங்கள் கிராமங்களில் ஜல்லிகட்டு நடந்து முடிந்ததும், பசு மாடுகள் சினைக்கு தயாராக இருக்கும். எந்த காளை ஜல்லிகட்டில் வெற்றி பெறுகிறதோ, அந்த காளையை வைத்து பசு மாடுகளை சினைக்கு போடுவார்கள். பிறக்கின்ற கன்று வீரியம் மிக்கதாக, ஆரோக்கியம் மிக்க தாக இருக்கும். ஜல்லிகட்டை தடை செய்தால், வெண்மைப்புரட்சியில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை கீழ் நிலைக்கு தள்ள வேண்டும் என்ற பீட்டாவின் முயற்சிக்கு, அடிபணிந்த ஒரு சில அதிகாரிகளின் நீர்த்துப்போன உத்திரவுதான் ஜல்லி கட்டு காளைகளுக்கு விலக்கு என்ற அரசியல் வாதிகளை சமாளிக்கும் உத்திரவு. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால். சந்தேகத்திற்கிடமான ஒரு அரசாணை, காளையை பட்டியலில் நாட்டு, காட்டு காளை என்று வகைப்படுத்தாமல் சேர்த்தது ஒரு தப்பு, பிராணிகள் வதைச் தடுப்பு சட்டப் பிரிவில் 3,11, 22ல் இருந்து நாட்டு காளைக்கு முழுமையாக விலக்கு அளிக்காமல் சந்தேகத்திற்கு இடமளித்து பிறப்பிக்கப்பட்ட ஆணை தப்பு. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைவர்கள் அறிவை பயன்படுத்தியிருந்தால், இதய சுத்தியோடு இந்த பிரச்சினையை அணுகவேண்டுமென்றால், வீட்டு மாட்டை, காட்டு மாடு என்று சொன்ன தான்தோன்றித் தனமான பட்டியிலில் இருந்து காளை மாட்டை நீக்கி இருக்க வேண்டும். அந்த பட்டியலில் காட்டு காளையை சேர்த்து, வீட்டில் வளர்க்கும் காளைக்கு இந்த தடை யில்லை என்று சட்டம் இயற்ற வேண்டும். இதை செய்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்திருந்தால், இனி மேல் அதிகாரிகள் விலை போக மாட்டார்கள். எனவே, இந்த சட்ட சிக்கல்களை எல்லாம் சரி பண்ணி விட்டு ஆட்சியாளர்கள் வரட்டும். அது வரை, தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு என்ற பெயரை மாற்றிவிட்டு மாட்டு பொங்களன்று “வீட்டுக்காளை ஏறு தழுவுதல் மாட்டுப் பொங்கல் விளையாட்டு போட்டி” என்ற நிகழ்ச்சியை நடத்துங்கள். யாரும் எந்த தடையும் செய்ய முடியாது.  மாற்றி  

உங்கள் அனைவருக்கும் தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment