Friday, 28 February 2014

ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் ஏன் கொலை செய்யப்பட்டார் ?



காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார். அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார். முத்த மிட்ட இந்த படம் மறுநாள் அனைத்து பத்திரிகையிலும் வெளியாகி இருந்தது.அப்போது அவர் காங்கிரஸ் பெண் தொண்டர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு இளம்பெண், ராகுல்காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை வீடியொ எடுத்துக்கொண்டிருந்த ஒருவர் யூடியூபில் பதிவு செய்தார். இணையத்தில் வெளியானதால் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
நேற்று இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் வீட்டிலிருந்து அலறல் குரல்கள் கேட்கவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் கணவனும், மனைவியும் தீயில் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு போன்டி உயிரிழந்தார். அவரது கணவர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் நேற்று  காலை முத்தம் கொடுத்த அந்த பெண், அவரது வீட்டில் மர்மமான முறையில் தீயில் கருகி மரணம் அடைந்தார். அவரது கணவரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அந்த பெண்ணின் கணவர் 40 சதவீதம் எரிந்த நிலையில் இருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை எரித்து கொன்று கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ராகுல்காந்தியை முத்த மிட்டது தொடர்பாக தான் போன்டிக்கும், அவரது கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனைவியை அவர் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.
போன்டி, கணவரால் எரித்து கொல்லப்பட்டரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும். இதற்கிடையே எரித்துக் கொல்லப்பட்ட பெண் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று அசாம் போலீசார் மறுத்துள்ளனர்.

ராகுல் காந்திக்கு தனது மனைவி முத்தமிட்டதால் கோபமடைந்து அவருடன் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தீவைத்துக் கொன்று விட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதை போலீஸார் மறுத்துள்ளனர். அந்தக் கூட்டத்திற்கு போன்டி போனது உண்மைதான். ஆனால் அவர் முத்தம் தரவில்லை. இதை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சிலரும் உறுதிப்படுத்தியுள்ளனர். உண்மையில் என்ன நடந்தது. இது கொலையா, தற்கொலையா என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளனர். 
ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்ததால், அந்த பெண்ணின் கணவரை பலர் கிண்டல் செய்ததாகவும், இதன் காரணமாக அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் சர்சை எழுந்ததாகவும், கூறப்படுகிறது.
முத்தம் கொடுத்த அந்த பெண்ணின் பெயர் போண்டி என விசாரணையில் தெரிய வந்துள்ளது. போண்டியை அவரது கணவரே தீயிட்டு கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் இருவரையும் தீயிட்டு கொளுத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RR3hlaZn58Y











No comments:

Post a Comment