Friday, 14 February 2014

பட்டுச் சேலை பற்றிய சிறப்பு பார்வை ..

Posted Image  பட்டுச் சேலை மீது நமது பெண்களுக்கு உள்ள மோகத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது. பட்டுச் சேலை அணிந்தாலே நம்மூர் பெண்களுக்குத் தனிப் பெருமிதமும், அழகும் வந்துவிடும்.
`மவுசு’ காரணமாகத்தான் பட்டுச் சேலைகளின் விலை பல ஆயிரங்களில் எகிறுகிறது. அதிலும் நமது காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு உலகெங்கிலும் பெருமதிப்பு உள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவின் பட்டு பற்றிய குறிப்புகள் வேத காலத்துக்கு முந்தியவை. கி.மு. 140-ல் சீனாவில் இருந்து இந்தியாவுக்குப் பட்டு அறிமுகமானது என்று கூறப்படுகிறது. கவுடில்யர் தான் எழுதிய `அர்த்தசாஸ்திரம்’ என்ற நூலில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே பட்டு பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.
கனிஷ்கர் காலத்திலேயே, அதாவது கி.மு. 58-ல் பட்டு இந்தியாவில் இருந்து பிரசித்தி பெற்ற ரோமாபுரிக்கு ஏற்றுமதியாகி வந்தது.
மத்திய ஆசிய நாடுகளுக்கும், தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பட்டு ஏற்றுமதி செய்வதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. கி.பி. 16, 17-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பட்டு வளர்ப்பதை மொகலாய அரசர்கள் ஊக்கப்படுத்தி வந்தனர்.
மைசூரில் பட்டு வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர் திப்பு சுல்தான். கர்நாடகம் இன்றைக்கு நாட்டின் 70 சதவிகித கச்சாப் பட்டை அளிக்கிறது. உலகளவில் இன்று பட்டு உற்பத்தி செய்வதில் சீனா முதலிடம் வகிக்கிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பட்டு உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். நம் நாட்டில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பான் நாடும் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இன்றைக்கும் ஜப்பான் அரச குடும்பத்தினர் பட்டுப் புழு வளர்ப்பில் தனிப்பட்ட ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
பட்டு நூலைக் கண்டுபிடித்த கதை மிகவும் சுவாரசியமானது. கி.மு. 2700-ம் ஆண்டில் சீனாவில் ஒருமுறை மகாராஜா தனது அரண்மனை தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தார். அப்போது அங்குள்ள ஒரு தாவரத்தில் இலைகள் சிதைந்திருப்பதைக் கண்டார். அந்தத் தாவரம், மல்பெர்ரி எனப்படும் முசுக்கொட்டைத் தாவரம்.
உடனே அவர் தனது மகாராணியிடம், மல்பெர்ரி இலைகள் சிதைவதற்கான காரணத்தை அறியும்படி கூறினார். அந்த மகாராஜாவின் பெயர், ஹுவாங் டி. மகாராணி உற்றுக் கவனித்தபோது மல்பெர்ரி இலைகளை ஒருவித வெள்ளைப் புழுக்கள் கடித்துக் கொண்டிருப்பதையும், இலைகளில் சில இடங்களில் மட்டும் மின்னும் கூடுகள் இருப்பதையும் கண்டார். அந்த மின்னும் கூடுகளை வினோதப் பொருட்களாகச் சேகரித்து வைத்தார்.
ஒருநாள் மகாராணி தேநீர் அருந்தும் வேளையில் புழுக்கூடுகளை மேலே தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கூடு தவறி தேநீர்க் கோப்பையில் விழுந்துவிட்டது.
உடனே ராணி அந்தக் கூட்டை வெளியே எடுத்தார். அப்போது அவரது கை விரல்கள் மின்னும் இழையைப் பற்றின. அவர் கையைத் தூக்கியபோது, மெல்லிய இழையும் மேலே வந்தது. இப்படித் தற்செயலாகப் பட்டு நூலைக் கண்டுபிடித்தார் அந்தச் சீனத்து ராணி. ஆக, பெண்களின் நன்றியெல்லாம் அவருக்கே உரித்தாக வேண்டும்.
பட்டு என்றாலே, காஞ்சிப் பட்டு என்கிறார்கள். ஆனால், ஆரணி பட்டு காஞ்சிப் பட்டுக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை. ஆரணியில் மட்டும் ஐந்து லட்சம் பேர் இந்த பட்டு நெசவுத் தொழிலை நம்பி இருக்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் பட்டுப் புடவைகளை வாங்கிச் சென்று காஞ்சி புரம் பட்டு என்று விற்கும் விற்பனையாளர்களும் உண்டு!” என்கிறார்கள் ஆரணி ஸ்ரீ லக்ஷ்மி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் முருகனும் சிவராமனும்.
 பட்டு, தமிழகத்தின் அழகு அடை யாளங்களில் ஒன்று.  இந்தப் பட்டுப் புடவைகள்து எப்படித் தயார் ஆகின்றன?
பட்டுப் புடவைக்குத் தேவையான பட்டு நூல், பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படும். மல்பரி புழுவின் கூட்டில் இருந்து இந்தப் பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது. பெங்களூரு நூல் விலை கிலோவுக்கு  ரூபாய் 2,500, சீன நூல் கிலோவுக்கு ரூபாய் 2,800. ஒரு சேலைக்கு சுமார் ஒன்றரைக் கிலோ நூல் தேவைப்படும். கச்சா நூலை ட்விஸ்டிங் ஆலையில் கொடுத்துப் பாவு செய்து, அதன் மீது கலர் சாயம் ஏற்றுவோம். நீளம், அகலத்துக்கு ஏற்ப தனித் தனியாகப் பிரித்து நெசவுக்குக் கொடுத்தால், பட்டுச் சேலை ரெடி. கிட்டத்தட்ட ஒரு லட்சம் சேலை டிசைன்கள் உண்டு. டிசை னைப் பொறுத்து, ஒரு சேலைக்கு 60 கிராம் முதல் ஒன்றரைக் கிலோ வரை ஜரிகை தேவைப்படும். தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜரிகை விலையும் கூடுகிறது. இதனால், சேலையின் விலையும் அதிகரித்துவிடுகிறது.
ஒரு பட்டுப் புடவையைச் செய்து முடிக்க, 10 முதல் 15 நாட்கள் ஆகும். இங்கு பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை, பட்டு சுடிதார் மெட்டீரியல், பட்டு வேட்டி, பட்டு அங்கவஸ்திரம் என்று விதவிதமான பட்டு ஆடைகள் தயாரிக்கிறோம். இங்கு உற்பத்தியாகும் ஆடைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது!” என்று பட்டுப் புராணம் பாடுகிறார்கள் இருவரும்!
ஒரு பட்டுப் புடவையின் விலை அதன் டிசைன், ஜரிகைகளைப் பொறுத்து மாறுபடும். குறைந்தபட்ச விலை ரூ. 3000. அதிகபட்சம் ரூ. 1 லட்சம். பட்டு சுடிதாரின் விலை மீட்டர் ரூ.600 முதல் ரூ. 5000 வரை. பட்டு வேஷ்டிகளின் விலை ரூ. 2000 முதல் ரூ. 8000 வரை. பட்டு சட்டை ரூ. 400 முதல் ரூ. 1000 வரை விற்பனையாகின்றன.
ந்தரை மீட்டர் புடவையின் நிறத்தையும் டிசைனையும் மாற்றுவதைத் தவிர வேறு என்ன புதுமை செய்யமுடியும் என்று நினைப்பவர்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

  1. ஆர்.எம்.கே.வி முன்பு ரிவர்சிபிள் புடவையையும், 50,000கலர் பட்டுப்புடைவையையும் அறிமுகப்படுத்தியது. ஐந்து மாடி ஸ்ரீகுமரன் ஸ்டோர்ஸும் ‘டூ இன் ஒன்’ புடவைகளை அறிமுகப்படுத்தியது.
  2. சமீபத்தில் ஐந்து மாடி ஸ்ரீகுமரன் ஸ்டோர்ஸ் ஜிப் அன்ட் மேட்ச் புடவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வகை புடவையோடு நான்கு பல்லுக்களைத் (முந்தானைகள்) தருகிறார்கள். எந்த பல்லு வேண்டுமோ அந்தப் பல்லுவை ஜிப் மூலம் புடவையுடன் இணைத்து அணிந்து கொள்ளலாம். ஜிப் அண்ட் மாட்ச் புடவைகள் ரூ. 20,000லிருந்து கிடைக்கிறது.
  3. போத்தீஸ் நிறுவனம் பரம்பரா பட்டு, சாமுத்ரிகா பட்டு என்று அறிமுகப்படுத்தியது. ஸ்ரீகுமரனோ நிறம் மாறும் மாயப்புடவை, த்ரீ டி புடவை, டெனிம் பட்டு, ஜோடிப்பட்டு என்று புதுவரவுகள் பட்டுச்சந்தையை வண்ணமயமாக்குகின்றன.
மாயப்புடவை அணிந்துகொண்டு வெயிலில் சென்றால் புடவை வித்தியாசமான வண்ண நிறம் கொன்டதாகத் தெரியும். வீட்டுற்குள் வந்தால் அல்லது நிழலுக்கு வந்தால் அந்த வண்ணம் மாறித் தெரியும். இந்த மாயப்புடவைகள் ரூ.4,500லிருந்து ரூ.7,500 வரையிலான விலைகளில் கிடைக்கிறது.
Saravana Stores Atchaya Pattu Gold in Saree Deepawali Specialபண்களின் பட்டுப்புடவையில் செய்திருக்கும் அதே ம்பிராய்டரி டிசைனை ஆண்களுக்கான பட்டுச் சட்டையில் டிசைன் செய்து ஒரு செட்டாக ‘ஜோடிப்பட்’டை விற்கிறார்கள். எம்பிராய்டரி செய்யப்பட்ட பட்டு வேஷ்டியும் விற்பனைக்கு வந்திருக்கிறது. புடவை, வேஷ்டி, சட்டை கலெக்சன் ரூ. 12,000லிருந்து ஆரம்பிக்கிறது.
தமிழகத்தில் சேலை விற்பனை பற்றி எம்.பி.ஏ மாணவர்கள் பல மார்க்கெடிங் கேஸ் ஸ்டடிகள் செய்யுமளவிற்கு வருடாவருடம் பல உத்திகளைக் களமிறக்குகிறார்கள்.
அடுத்து ஸ்விட்சைத் தட்டினால் டிசைன் மாறும் டிஜிட்டல் புடவை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
1000 மலர்களுடன் பரம்பரா பட்டு  ஆயிரம் அரிய மலர்களைக் கொண்ட பரம்பரா பட்டுச் சேலையை, போத்தீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்து.
Sudha Raghunathan Parampara Pattu Silk Sarees Diwali 2007
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலத்தின் போது, புதுரக பட்டுச் சேலையை போத்தீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு 1000 பூக்கள் கொண்ட பட்டுச் சேலையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதற்காக, 5 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர் குழு, ஒன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தது.
இதன்பின்பு, கடந்த 6 மாதங்களாக பட்டுச் சேலை தயாரிப்புப் பணி நடைபெற்றது. 1 சேலை தயாரிக்க 40 நாள்கள் ஆனது. சேலையின் விலை ரூ.40,000. அதன் எடை 1 கிலோ 40 கிராம். இதுவரை பரம்பரா சேலைக்கு 10 பேர் ஆர்டர் செய்துள்ளனர். இதில், 9 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றார் ரமேஷ்.
எங்கு பார்த்தாலும் புடவை கடைகளாகவே இருக்கு. ஆனால் புடவை கட்டுறவங்க காணமே !!
 முன்பெல்லாம் சினிமாவில்தான் புடவை கட்றவங்க காணாமப் போயிருந் தாங்க… 
எந்தத் தொழிலாக இருந்தாலும் புதுப்புது தாக்கங் கள் வருகிறபோது பழைய முறைகளின் பழைய பொருள்களின் மீதுள்ள மவுசு குறைந்ததுபோல் தோன்றும். ஆனால் மீண்டும் பழைமையே புகழ்பெ றும். அதைப்போலத்தான் புடவை விற்பனையும். சுரி தார், ஜீன்ஸ் போன்ற மாடர்ன் ஆடைகள் வந்தபோது சிறிது பின்னடைவு இருந்தது என்பது உண்மைதான்.இப்போது அப்படியில்லை. புடவைகளின் விற்பனை தான் அதிகமாக இருக்கிறது. கல் லூரிப் பெண்கள்கூட விழாக் கள் என்றால் புட வைதானே கட்டுகிறார்கள்” பட்டாசையே கொளுத்திப் போட்டாலும் பதறமாட் டோம் என்பதுபோல கடையே புரட்டிப்போட்டு புடவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.
“”எடுக்கப் போறது ஆயிரம் ரூபாய் சில்க் புடவை தான். இருந்தாலும் பத்தாயிரம் பதினைந்தாயிரம் ரூபாய் புடவையெல்லாம் புரட்டிப் பார்க்கணும். கட் டிப் பார்க்கணும். இந்த சான்ûஸவிட்டா கிடைக்குமா? ” கடைக்காரர் எடுத்துப் போடப் போட புடவை எடுத்து மேலே கண்ணாடியில் பார்ப்பதும், பிடிக்காததுபோல உதட்டைப் பிதுக்கி நடிப்பதையும் பார்த்தபோது சிரிப்பு வந்தது. கை நோக எடுத்துப் போட்ட கடைக்காரரைப் பார்க்கத்தான் பாவமாக இருந்தது.
“ஜிப் அண்ட் மேட்ச்’ என்று வந்துள்ள புடவையைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ஒரு புடவையில் நான்கு முந்தானை. ஒரே நாளில் நாலு புட வைகளைக் கட்டிய சந்தோஷத்தை இந்த ஒரு புடவை யைக் கட்டுவதன் மூலம் பெறலாம். இதன் விலை இரு பதாயிரம் ரூபாய். இதைப்போல ஃப்ளோரா என்கிற பெயரிலான எம்ப்ராய்டரி புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. மூவாயிரம் ரூபாயி லிருந்து இந்தப் புடவையின் விலை தொடங்குகிறது.
வெளிநாட்டிலிருந்து வந்து புடவை கட்டத் தெரியா மல் கதாநாயகி முழிப்பார். அப்படி இப்படி என்று கதா நாயகன் புடவை கட்டிவிடுகிற காட்சி பத்துநிமிடம் ஓடி பாடல் ஓடத் தொடங்கும். இக்காட்சி இல்லாப் படங்கள் குறைவாகத்தான் இருக்கும். இயக்கு நர்களின் வழக்கமான இந்தக் கற்பனைக்கு முடிவு கட்டுகிறாற்போல் ஒரு புடவை வந் திருக்கிறது. அந்தப் புடவையின் பெயர் “ஒன் மினிட்’ புடவை. இது ரெடிமேட் புடவை. மடிப்பு பி டி க் க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. மடிப்போடு தயாராக இருக்கும். புடவை கட்டத் தெரியாத பெண்க ளுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புடவையை ஃபாரின் பெண்கள் சிலர் வாங்கிச் சென்றபோது, “தீபா வளி சீசன் பாதிப்பா? புடவை பாதிப்பா?’ என்று புரிய வில்லை.
ஏகப்பட்ட டிசைனர் கலெக்ஷன் புடவைகள் இருக் கின்றன. தீபாவளியையொட்டி பிரத்யேக டிசைனர்க ளைக் கொண்டு புதுப்புது டிசைன்களைத் தருவித்தார் கள். எல்லாம் அசத்துகிற டிசைன்கள். ஐநூறு அறுநூறு புடவைகளிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பட்டுபுடவைகள் வரை அனைத்திலும் வித்தியாசம்.
கடையில் பெயருக்கேற்ப சில்க் புடவைகளே இங்கு களை கட்டியது.
வஸ்தரக்கலா பட்டு, சுபமங்கலா சில்க்ஸ், காஞ் சிபுரம் சில்க்ஸ், முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போகிற போது கட்டிக் கொள்வதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட புடவைகள் பக்கமும் கூட்டம் அலை மோதுகிறது.
போத்தீஸ், ஸ்ரீகுமரன் ,போத்தீஸ்  போன்ற பெரிய  கடையில் உள்ள மற்றொரு சிறப்பு :
ஒரு நாள் என்ன இரண்டு மூன்று நாள்கூட மனைவிகள் தொடர்ந்து புடவை தேடிக் கொண்டிருந்தால்கூட கண வர்கள் கவலைப்படாமல் கூலாக இருப்பதற்கு ஏற் பாடு செய்திருக்கிறார்கள். நீர்மோர், பாதம்கீர் போன் றவை இலவசமாகவே கொடுக்கிறார்கள். சிலநேரங்க ளில் வெண்பொங்கல்கூட கிடைக்கிறது. 

56 ஆயிரம் வண்ணங்கள் புடவை, ரிவர்ஸிபல் புடவை எனச் சாதனைப் புடவைகளைத் தயாரித்து சாதனை படைத்த கடைக்காரர்களின் புது வரவு நகாசு எம்போஸ் பட்டு. புடவையில் பொறிக்கப்பட்டிருக்கிற பூக்களைத் தடவிப் பார்க்கிறபோது நிஜப் பூக்களையே தொடுவது போன்ற உணர்வைக் கொடுக்கும். இந்தப் புடவை வாங்குகிறவர்களின் எண்ணிக்கையேபோல வெறுமனே தொட்டுப் பார்த்துவிட்ட செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்தக் கடைகள்போலவே நாயுடு ஹால், விபா, கோ-ஆப்டெக்ஸின் கடைகளில் பெருத்த கூட்டம் மோதிக்கொண்டே இருக்கிறது.

“பேண்ட், சர்டோடு எங்களுடைய பர்சேஸ் முடிந் துவிடுகிறது. உனக்கு புடவை, ஜாக்கெட், பொட்டு, வளையல், நகை என எவ்வளவு வாங்க வேண்டியி ருக்கிறது…” என்று மனைவியை ஒரு கடை வாயிலில் ஒருவர் திட்டிக்கொண்டிருந்தார்.“”வருஷத்துக்கு ஒருதரம்தான் நாங்க எடுக்கிறோம்.நீங்க வருஷம்பூரா எடுக்கிறீங்க… ஏன் உங்க அம்மா வுக்கு எடுத்துக் கொடுக்கலை…?” என்று மனைவி பட் டாசாய் வெடித்துக் கொண்டிருந்தார். 

பட்டுச் சேலை பராமரிப்பு...

1.  விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று  வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது.
2.      நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.
3.      எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.
4.      ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டு.
5.      பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.
6.      அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.
7.      பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.

8. பட்டுப்புடவையின் உடல் பகுதியை இஸ்திரி பண்ணக் கூடாது. ஜரிகைப் பகுதியை மட்டும்தான் செய்ய வேண்டும்.

9. பட்டுப்புடவையை தாராளமாகத் துவைக்கலாம். புடவை ஒரு கலரிலும், பார்டர் ஒரு கலரிலும் இருந்தால், முந்தானையையும், பார்டரையும் ஒரு கயிற்றால் கட்டி, தண்ணீரில் படாமல், உடல் பகுதியை மட்டும் பூந்திக்கொட்டை ஊற வைத்த தண்ணீரில் நனைத்துத் துவைக்கலாம். பிறகு அதைக் காய வைத்து, அடுத்து பார்டர், முந்தானைப் பகுதிகளை வேறு தண்ணீரில் தனியே துவைத்து உலர்த்த

வேண்டும். 

10.பட்டைத் துவைக்காமலோ, பாலீஷ் போடாமலோ அப்படியே உடுத்தினால், வியர்வை பட்டு, அதிலுள்ள உப்பு, ஜரிகைப் பகுதியை அரித்து விடும்.


ஆக்கம் & தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.


No comments:

Post a Comment