கடந்த 2013 ஆண்டு துபாய் மாநகருக்கு ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதால் துபாய் சாதனை படைத்துள்ளது.
என்னடா அந்த பாலைவனத்தில செயற்கையான கட்டிடத்தைதவிர வேற என்ன இருக்குன்னு கேட்டிங்கனா பதில் சொல்றது கஷ்டம் தான் இயற்கை வளமும் பசுமையும் இல்லாத இடம் தான். அதுகாக அதையே குறையா சொல்றதை விட இருக்குறதை ரசிக்கலாமுன்னு ஒரு சிறு முயற்சிதாங்க இந்த பதிவு.
தேரா படகு சவாரி (DEIRA BOAT)
படகில் செல்வதென்பது மிகச் சிறந்த ஓர் அனுபவம். நீங்கள் படகில் செல்லச் செல்ல பறவைகள் பறந்து வந்து நீரில் அமர்வதைப் பார்க்க பார்க்க உங்கள் கண்கள் பூரித்துவிடும். (இங்கே இருப்பவர்களுக்கு கோடை காலத்திற்கு பிறகு நவம்பர் தொடக்கத்தில்தான் பறவைகள் கண்ணுக்கே தென்படும்!). அனைத்து படகுகளும் தற்காப்பு உடைகளைக் கொண்டிருக்கின்றன. இறங்கும்வேளையில் உங்களுக்கு உதவ ஒருவர் காத்துக் கொண்டிருப்பார்.நெடுந்தூரம் செல்ல வாட்டர்பஸ்சும் உண்டு. இவை அனைத்தும் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன..
இந்த வண்டியில தான் பாலைவணத்துல கூட்டிட்டு போராங்க. வண்டி(Toyota - Land Cursier) பாக்க சாதுவா தெரிஞ்சாலும் சிறுத்தை மாதிரி சீறி பாயுதுங்க.
பாலைவன பயணம் (Desert safari).
தண்ணியில்லா பாலைவனத்தையும் ரசிச்ச தருணணங்கள் தான் இந்த desert safari.
ஆமாங்க தான் கிட்ட இருக்குற பாலைவணத்தையும் வியாபார படுத்திய விசயம் தான் இந்த desert safari.வெறும் மணல் தான் ஆனா கடல் மாதிறி எவ்வள்வு அழகா இருக்கு பாருங்க.
பிறகு ஒரு அருமையான ஒட்டக சவாரி.....................
அப்புறம் இஸ்லாமிய பாரம்பரிய உடையில் போட்டோ எடுத்துகலாம்.........
ஆண்களுக்கு வேறு உடை.........
கடைசியா belly dance ங்க இந்த நடனத்தை பற்றி சொல்லனுமுன்னா தனியா ரெண்டு பதிவே போடலாம். (அரேபிய/பாரசிக பாரம்பரிய நடனம்)
பெல்லி டேன்ஸ் பழைய பாபிலெனியார்கள் காலத்தில் உருவானதாகவும், சிலகாலம் இஸ்லாம் இதற்க்கு தடை விதிசிருந்ததாகவும் சொல்றாங்க. ஆனா இந்த நடனத்தால் மனதாலையும் உடலாலையும் பெண்கள் வலுபெருவதாக சொல்றாங்க.
கண்டிப்பக Dubai Museum பற்றி சொல்லியே அகனுங்க ஏன்னா பெறிய எதிபார்பு எதுவும் இல்லாம உள்ளே போயி ஆச்சிரிய பட்ட இடம்ன்னா அது இந்த மியுசியமும் ஒன்னுங்க.
வெளிய இருந்து பத்தப்ப ரொம்ப சின்ன கோட்டையா இருகுறதால் உள்ள என்ன இருக்க போகுதுன்னு முதல்ல நினைச்சேங்க அப்புறம் தான் தெரிஞ்சது 75% மியுசியமே under groundல தான் இருக்குதுன்னு.
என்ன உள்ள வறிங்களா. என்கிட்ட 3திராம் டிக்கட் வாங்கிட்டாங்க
இருந்தாலும் உங்களுக்கு இலவசம் தாங்க.
இதுதான் கோட்டையோட நுழைவாயில்
இந்த கோட்டை கிபி 1787ஆம் ஆண்டு கட்டபட்டதாகவும்
இந்த கட்டிடம் தான் துபாயில் பழமையான கட்டிடமுன்னு சொல்ராங்க.
இது எல்லாம் அவங்க பயன்படுத்திய ஆயுதங்கள் -1
18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்ப இருக்குற
இராஜ பரம்பரை தோன்றியதா சொல்ராங்க.
இது எல்லாம் அவங்க பயன்படுத்திய ஆயுதங்கள் -3
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மொத்தம்
100 போர் வீரர்கள் இருந்ததாக சொல்ராங்க.
இது சிறிய கப்பல் வந்த அதை இழுத்து கட்டுவதற்க்கு பயன்படுத்திய கருவி.
இது கோட்டைக்கு உள்ள இருக்க ராஜா வோட வீடுங்க.
இதுல உயரம புகைகூண்டு மாதிரி இருக்குறது wind tower.
இந்த wind tower தான் துபாயோட architectல முக்கிய பங்கு வகிக்குறது.
கோட்டை உட்புரத்திம் இன்னும் ஒரு தோற்றம்.
இப்ப பாதாள அறைக்கு போகபோறோம் இங்க நுழைந்த உடனே ஒரு வீடியோ ஓடுதிங்க
அதுல ஒவ்வொரு பத்தாண்டுகளும் அவங்க எப்படி முன்னேறுனாங்கன்னு காட்டுறாங்க
அப்புறம் தாங்க ஆச்சரியம் 1950ல துபாய் எப்படி இருந்ததுன்னு
அப்படியே லைவாக செட்டு போட்டிருக்காங்க.
சில படங்கள் உங்களுக்காக.
கடை வீதி பல தரபட்ட கடைகள்.
இன்னோரு விசயம் என்னன்னா இவ்ங்க 1960 வரை இவங்க
இந்திய ருபாய்தான் பயன்படுத்தியதா சொல்றாங்க
பாட சாலைங்க. பசங்க எல்லாம் குரான் படிக்குறாங்க பாருங்க.
அப்ப எல்லாம் குரான் மட்டும் தான் படிப்பாங்களாம்.
இவரோட இடகையில் இருக்குறது தாங்க falcon
இந்த நாட்டோட தேசிய பறவை. இந்த பறவையை
முன்பெல்லாம் வேட்டையாட பயன்படுதினாங்களாம்
அவரோட வல்கையில் இருப்பது வேட்டையாடபட்ட பறவை.
கப்பல் கட்டுறாங்க பாருங்க.
ஜுமேரா கடற்கரை (JUMEIRA BEACH)
எனக்கு துபாய்ல பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று.
எனக்கு துபாய்ல பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று.
முதல் காரணம் எந்த குப்பையும் இல்லாம சுத்தமாக இருபதனால்
வெய்யில் அதிகமாக இருக்குறது கூட பெரியதா பாதிக்கலிங்க.
கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியா (சத்தியமா கடலதான் சொல்றேங்க)
இருபதும் இன்னொரு காரணம்.
ப்ருஜ் கலிபா எனும் ப்ருஜ் துபாய(Burj Khalifa (Burj Dubai), UAE )
புர்ஜ் கலிபா (Burj Khalifa ) என்பதை முன்னர் புர்ஜ் துபாய் (Burj Dubai) என பெயரிட்டு இருந்தார்கள். உலகிலேயே மிக அதிக உயரமான கட்டிடம் UAE யின் ( United Arab Emirates) துபாய் நகரில் உள்ள இதுவே ஆகும். முழுவதுமே இயந்திரம் இல்லாமல் மனிதர்களால் கட்டப்படும் இந்த கட்டிடத்தின் உயரம் 828 மீட்டர்.
இந்த கட்டிடம் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று கட்டப்படத் துவங்கியது. தைபெய் (Taipei) எனுமிடத்தில் உள்ள 509.2 மீட்டர் உயர கட்டிடத்தை விட அதிக உயரமான கட்டிடம் இது.
இந்த கட்டிடம் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று கட்டப்படத் துவங்கியது. தைபெய் (Taipei) எனுமிடத்தில் உள்ள 509.2 மீட்டர் உயர கட்டிடத்தை விட அதிக உயரமான கட்டிடம் இது.
12 -08 -2007 அன்று இது உலகின் மிக உயர அதாவது 527.4 மீட்டர் உயர கட்டிடமான சியர்ஸ் டவர் அன்ட்டேன்னா (Sears Tower's antenna) வை விட அதிக உயரமான கட்டிடமாக ஆக மீண்டும் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று 553.33 மீட்டர் உயர கட்டிடமான டோரோண்டோவின் CN டவர் (CN Tower) கட்டிடத்தை விட உயரமான கட்டிடமாக ஆயிற்று. முடிவாக 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியன்று இந்த கட்டிடமே உலகின் மிக அதிக உயர கட்டிடமாக அமெரிக்காவில் 646.38 மீட்டர் உயரமாக இருந்த KVLY-TV மஸ்ட் எனும் கட்டிடத்தை விட அதிக உயரமாக ஆகியது. ஆனால் 1991 ஆம் ஆண்டு அந்த அமெரிக்க கட்டிடம் இடிந்து விழுந்தது.
துபாயின் இந்த மிக அதிக உயரக் கட்டிடம் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதியன்று புர்ஜ் கலிபா எனும் பெயரில் திறந்து வைக்கப்பட்டது. சுமார் இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த இடம் துபாய் நாட்டின் புரனகரமாக உருவாகி உள்ளது. கட்டிடம் கட்ட மட்டும் US$1.5 பில்லியன் செலவு ஆகியது. அந்த புறநகர் பகுதி முழுவதையும் கட்டி முடிக்க US$20 பில்லியன் செலவு ஆகும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த கட்டிடத்திற்கான வரை படத்தை ஒவிங்க்ச்ஸ் அண்ட் மெரில் {Owings and Merrill (SOM)} என்ற நிறுவனத்தை சேர்ந்த அட்ரியன் ஸ்மித் (Adrian Smith ) என்பவர் தயாரித்து உள்ளார். அந்த நிறுவனத்தினரே தைபெய் 101 (Taipei 101 ) மற்றும் பெட்ரோனாஸ் டுவின் டவர்களைக் (Petronas Twin Towers) கட்டியவர்கள். இந்த செய்தியை வெளியிடும் சமயத்தில் ப்ருஜ் துபாயின் சதுர அடி நிலத்தின் விலை $4,000 அளவில் இருக்க ஆர்மானி ரேசிடன்சஸ் எனும் இடத்தில் உள்ள நிலத்தின் விலை சதுர அடிக்கு $3,500 ஆக உள்ளது.
புர்ஜ் துபாய் உள்ள இடத்தைக் காட்டும் படம்
புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)
புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)
புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)
ப்ருஜ் துபாய் தெரியுமாறு எடுக்கப்பட்ட படம்
by Imre Solt (GFDL)
புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)
புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)
புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Imre Solt (GFDL)
புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Hierakares (GFDL)
புர்ஜ் துபாய் கட்டப்பட்டு வந்த போது
by Aheilner (GFDL)
படங்களுக்கான அனுமதி : Approval for the use of photos taken by Imre Solt can be found at Dubai Construction Update Part 7 Page 12 at Post 223. The Imre Solt's exact statement is: "I, Imre Solt, put all my images found on the Dubai Construction Update sites on the GFDL (GNU Free Documentation License). I agree to the terms that my images may be freely redistributed and used, that they may be freely modified (and modified versions may also be freely redistributed and used), that any redistribution must include the full text of the GFDL itself, that the work (and modified versions of it) must be attributed to me (the creator), and that the images can be re-used for commercial purposes (as long as the use is under the terms of the GFDL and that the full text of the GDFL goes along with the work). I acknowledge that I cannot withdraw from this agreement." He gave this statement on 17 August 2007.
துபாய் மால் (DUBAI MALL)
உலகின் மிகப் பெரிய வணிக வளாகம். புர்ஜ் கலிஃபாவிற்கு அருகாமையில் உள்ளது. இதனுள் உள்ள நீர்வாழ் கண்காட்சியகம் பிரசித்தி பெற்றது. உலகிலுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் கடைகள் இங்கு உள்ளது..
கடல் நடுவே மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் ரூ குடியிருப்புகள் பாம் ஜுமேரா (பனை மாற வடிவில் இருக்கும் தீவுகள், வோல்ர்ட் ஐலன்ட் – உலக வரைப்படம் போன்று தோற்றமளிக்கும் தீவுகள்)உலக தீவுகள், பாம் தீவுகள் (WORLDMAP ISLANDS, PALM ISLANDS)
மனிதால் கட்டப்பட்ட கட்டிடங்களைப் பார்க்க இங்கு வந்தால் போதும்! அனைத்து கட்டிடக் கலை நிபுணர்களும் ஒருமுறையாவது இங்கு வர வேண்டும் ( நிபுணர்கள் சரி! நீ அங்க என்ன பண்ணுறே?)
உலக தீவுகள் – ஒரு உலக வரைபடத்தை, துபாய் கடற்கரையில் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் கட்டப்பட்ட300 தீவுகளில் கட்டியுள்ளனர்.. இவை அனைத்தும் செயற்கைத் தீவுகள், மனிதால் உண்டாக்கப் பட்டவை.
பாம் தீவுகள் – பனை மர வடிவிலான தீவுகள்.
உலகத்தின் மிகப்பெரிய 7 ஸ்டார் ஹோட்டல் (புர்ஜ்-அல்-அராப்)
Dragon Mart:
துபாயில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று டிராகன் மார்ட் (Dragon Mart). துபாய்க்கு வெளியில், ஏறத்தாழ 40 கி.மீ தூரத்தில் இண்டர் நேஷனல் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப் பட்டிருக்கிறது. அதன் கட்டிட அமைப்பே டிராகன் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது ஒரு வியப்பாகத் தானிருக்கிறது. 4000க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், ஷோ ரூம், 2500 கார்கள் நிறுத்தும் அளவுக்கு கார் பார்க்கிங் என பறந்து விரிந்து காணப் படுகிறது. இதன் மொத்த நீளம் 1.2 கி.மீ என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதன் பிரமாண்டத்தை. இது 2004ல் கட்டி முடிக்கப் பட்டது.
அனைத்துமே சைனாப் பொருட்களின் விற்பனை நிலையங்கள். பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் அதி நவீன கண்டுபிடிப்புகள். உண்மையில் தொழில் நுட்பச் சந்தையில் சைனா நம்மை பின் தள்ளி எங்கோ சென்று விட்டது எனலாம்..
ஏதோ சைனாவே துபாயை முழுவதுமாக ஆக்ரமித்து விட்டது போல மௌனமாக தன் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான கடைகள் அனைத்திலும் சைனா முகங்கள் தான்.
வழக்கம் போல் அங்கும் ஆளாளுக்கு வேறு பாடு காட்டப் படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
நாம் கொஞ்சம் அதிகமாக விவரங்கள் கேட்டால், ஒருவித அலட்சியப் போக்கு அவர்களிடம் காணப் படுகிறது அதே வேளை ஒரு அரபியோ, வெள்ளையரோ கேட்டால் அவர்களுக்கு ஒரு தனி மரியாதை கலந்த வரவேற்பு, கனிவான பேச்சுக்கள் எல்லாம்.
அனைத்து கடைகளையும் பார்த்து முடிக்க நிச்சயமாக ஒரு நாள் போதாது தான். இடை இடையே Food Court எனும் சாப்பாட்டு கடைகள் வேறு. என்ன விலை தான் கொஞ்சம், கொஞ்சமென்ன அதிகமாகவே இருக்கிறது.
இங்கு கடை விரித்திருக்கும், வேலை பார்க்கும் சைனாக் காரர்களுக்கு அருகிலேயே அருமையான வில்லாக்கள், பல மாடி கட்டிடங்கள் சகல வசதிகளுடன் அமைத்திருக்கிறார்கள். இன்னும் இதை விரிவாக்கும் பணியும் நடந்து வருகிறது. டிராகன் மார்ட் இரண்டு, 175,000 sq.m பரப்பளவில் இதன் அருகிலே ஓமன் சாலையில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஹைப்பர் மார்க்கெட், திரையரங்கங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள், மொத்த, சில்லரை வளாகங்கள் என பிரமாண்டமாக அமைக்கப் படுகின்றன.
டேய்ரா, ரசீதியா போன்ற இடங்களில் இருந்து இங்கு போய் வர RTA பஸ் வசதியும் உண்டு. என்னால் பாதியளவு கூட பார்க்க முடியவில்லை. இன்னொரு தடவை செல்ல வேண்டும்.
மொபைல் கடைகள் பாதிக்கு மேல் ஆக்ரமித்திருக்கின்றன. அதி நவீன செல் போன்கள் கடைக்கு கடை குவித்திருக்கிறார்கள்.பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. வண்ண சர விளக்குகள், மின் சாதனங்கள், துணி வகைகள், இயந்திரங்கள் என தனித் தனி பிரிவாக அமைத்திருக்கிறார்கள். எங்கும் சைனா மயம். எதை வாங்குவது என்று தெரியாத அளவுக்கு பொருட்கள் குவிந்து கிடைக்கின்றன. என்ன சட்டைப்பையை கொஞ்சம் நிறைத்து செல்ல வேண்டும் அவ்வளவு தான். நம்மைப் போல் விஸிட்டில் வருபவர்கள் காசை எண்ணித் தான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
டேய்ரா, ரசீதியா போன்ற இடங்களில் இருந்து இங்கு போய் வர RTA பஸ் வசதியும் உண்டு. என்னால் பாதியளவு கூட பார்க்க முடியவில்லை. இன்னொரு தடவை செல்ல வேண்டும்.
மொபைல் கடைகள் பாதிக்கு மேல் ஆக்ரமித்திருக்கின்றன. அதி நவீன செல் போன்கள் கடைக்கு கடை குவித்திருக்கிறார்கள்.பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. வண்ண சர விளக்குகள், மின் சாதனங்கள், துணி வகைகள், இயந்திரங்கள் என தனித் தனி பிரிவாக அமைத்திருக்கிறார்கள். எங்கும் சைனா மயம். எதை வாங்குவது என்று தெரியாத அளவுக்கு பொருட்கள் குவிந்து கிடைக்கின்றன. என்ன சட்டைப்பையை கொஞ்சம் நிறைத்து செல்ல வேண்டும் அவ்வளவு தான். நம்மைப் போல் விஸிட்டில் வருபவர்கள் காசை எண்ணித் தான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அனைத்து கடைகளிலும் பேரம் உண்டு. கண்ணை மூடிக் கொண்டு சொன்ன விலைக்கு வாங்கி விடாதீர்கள். நன்றாக பேரம் பேசி வாங்குங்கள். ஒரு பொருளுக்கு கடைக்கு கடை விலை கூட குறைய இருக்கிறது. கவனம். ஆனால் வெளி மார்க்கெட்டை விட இங்கு விலை கம்மி தான். மொத்தமாக வாங்குபவர்களுக்கு இன்னும் சௌகரியம்.
துபாய், சார்ஜா போன்ற இடங்களில் உள்ள சிறு வியாபாரிகளும் இங்கிருந்து தான் பொருட்களை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். எதிலும் பிரமாண்டங்கள் எனும் வரிசையில் இந்த டிராகன் மார்ட்டுக்கும் ஒரு இடம் உண்டு.
துபாய், சார்ஜா போன்ற இடங்களில் உள்ள சிறு வியாபாரிகளும் இங்கிருந்து தான் பொருட்களை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். எதிலும் பிரமாண்டங்கள் எனும் வரிசையில் இந்த டிராகன் மார்ட்டுக்கும் ஒரு இடம் உண்டு.
சிந்தகா சுரங்கப் பாதை(Al shindagha tunnel)
துபாயில், டெய்ரா வையும் பர் துபாயையும் இணைக்கும் விதமாக கடலுக்கு அடியில் 1975 ல்ஒரு பிரமாண்டமான சுரங்கப் பாதைகட்டப் பட்டுள்ளது. டெயிராவிலிருந்து பர் துபாய்க்கு இடைய கிரீக் எனும் கடல் வழியை கடக்க ஏற்கனவே படகு போக்கு வரத்து இருக்கிறது.
முன்பு 1977 களில், இதற்கு கட்டணமாக 25 ஃபில்ஸ் வசூலித்து வந்தது தற்போது ஒரு திர்ஹமாக உயர்ந்துள்ளது. இந்த சுரங்கம் 5 மீட்டர் உயரத்தில் நான்கு வழிச் சாலைகளால் அமைக்கப் பட்டுள்ளது. கடலுக்கு அடியில் செல்கிறோம் என்ற உணர்வு, அச்சம் சிறிதளவும் இல்லாத வகையில் ஏறத்தாழ 40 வருடங்களுக்கு முன்பே இவ்வளவு நேர்த்தியாக கட்டியிருப்பது வியப்பினைத் தருகிறது.
மிதக்கும் பாலம்:
இதே போல் மற்றொரு இடத்தில் இந்த கடல் வழியை கடக்க மிதக்கும் பாலத்தினை அமைத்திருக்கிறார்கள் 2007ல் இப் பாலம் திறக்கப் பட்டு போக்குவரத்துக்கான பயன்பாட்டில் உள்ளது. இப் பாலம் ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தான் கட்டப் பட்டுள்ளது. இன்னும் (2015ல்) 2×3 ஆண்டுகளில் இந்த பாலம் அகற்றப் படும். இதற்கு மாற்றாக “Dubai Smile” புன்னகை துபாய் என்ற பிரமாண்டமான பாலம் ஒன்று கட்ட திட்டமுண்டு. இவர்கள்
தான் நினைத்ததை உடனுக்குடன் செயல் வடிவம் கொடுப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே. இந்த பாலத்தையும் விரைவில் கட்டி முடிப்பார்கள் என எதிர் பார்க்கலாம்.
இந்த மிதக்கும் பாலம் 6 வழி சாலைகளைக் கொண்டுள்ளது. தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இதை மூடி விடுகிறார்கள்.
ஹாலோ பிளாக்குகள் கொண்டு 20மீ அகலத்தில் 300 மீ நீளத்திற்கு இது அமைந்துள்ளது. இதில் சிறியப் படகுகள்,சிறு சிறு வணிக கப்பல்கள் செல்ல ஏதுவாக ஒரு இடத்தில் திறந்து மூடும்படியும் அமைத்திருக்கிறார்கள். இதில் காரில் செல்லும் போது ஏற்படும் சிறு,சிறு அசைவுகளால்,
உண்மையில் நம் காரும் மிதந்து செல்கிற மாதிரி ஒரு உணர்வினை அனுபவிக்க முடிகிறது.
தான் நினைத்ததை உடனுக்குடன் செயல் வடிவம் கொடுப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே. இந்த பாலத்தையும் விரைவில் கட்டி முடிப்பார்கள் என எதிர் பார்க்கலாம்.
இந்த மிதக்கும் பாலம் 6 வழி சாலைகளைக் கொண்டுள்ளது. தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இதை மூடி விடுகிறார்கள்.
ஹாலோ பிளாக்குகள் கொண்டு 20மீ அகலத்தில் 300 மீ நீளத்திற்கு இது அமைந்துள்ளது. இதில் சிறியப் படகுகள்,சிறு சிறு வணிக கப்பல்கள் செல்ல ஏதுவாக ஒரு இடத்தில் திறந்து மூடும்படியும் அமைத்திருக்கிறார்கள். இதில் காரில் செல்லும் போது ஏற்படும் சிறு,சிறு அசைவுகளால்,
உண்மையில் நம் காரும் மிதந்து செல்கிற மாதிரி ஒரு உணர்வினை அனுபவிக்க முடிகிறது.
Gold Souk
துபாயில் பார்க்க வேண்டிய இடங்களில் துபாய் கோல்டு மார்க்கெட்டும் முக்கிய இடங்களில் ஒன்று. உலகின் தங்க நகரம் என துபாய்க்கு பெயர் வரக் காரணமே இங்குள்ள தங்க நகை கடைகள் தான். டேய்ராவில் பன்யாஸ் ஸ்கொயர்க்கு பக்கத்தில் அமைந்துள்ளது. நூற்றுக் கணக்கான கடைகள் தங்க ஆபரணங்களால் குவிக்கப் பட்டிருக்கும் அழகினை காண கண் கோடி வேண்டும். உலகில் தங்கம் விலை குறைவாக கிடைக்கும் இடமும்
துபாய் தான். இங்கு மற்ற நாடுகளைப் போல் குறிப்பாக இந்தியாவைப் போல் செய் கூலி, சேதாரமெல்லாம் கிடையாது. எடைக்கு மட்டுமே விலை. தங்கத்தின் தரமும் நம்பி வாங்கும்படி இருக்கிறது. வெளி நாட்டவர்களால் எப்போதும் நிரம்பியிருக்கிறது இந்த கோல்டு மார்க்கெட்.
18,21,22,24 காரட்டுகளில் நகைகள் கிடைக்கின்றன. பிளாட்டினம், வைரங்கள் என நகைகள் ஜொலிக்கின்றன. தரக் கட்டுப்பாடு விசயத்தில் இங்குள்ள அரசு மிகவும் கவனமாக, கண்டிப்புடன் செயல் படுவதால் தரத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் தைரியமாக நகைகளை வாங்கலாம்.
35 வருடங்களுக்கு நான் பார்த்த இந்த இடம் இன்று முற்றிலுமாக மாறிப் போயிருக்கிறது. முன்பு இங்கு தான் பாகிஸ்தான் பஜார் இருந்தது. வெளி நாட்டு சாமான்கள் வாங்க இங்கு தான் வரவேண்டும். சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த பஜாரில் உள்ள நடை பாதைகள் எல்லாம் வெளி நாட்டு பொருட்களால் நிரம்பியிருக்கும். கடைகள் குறைவு தான். துணிமணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்தும் பிளாட்பாரக் கடைகளிலேயே வாங்கலாம் அந்த காலத்தில் சிங்கப் பூரில் சாமு சாட்டின் என்ற சேலை ரெம்பவும் பிரசித்தம். நான் துபாய் வந்து முதன் முதல் வாங்கிய பொருள் இந்த சாலையோரக் கடைகளில் வாங்கிய சாமு சாட்டின் சேலை தான். பிளாட்பாரக் கடையில் சாமு சாட்டின் சேலையா என்று அப்போது வியந்து போனேன். அப்போதெல்லாம் அனேகமாக அனைத்து பொருட்களும், ஜப்பான்,சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வருபவை தான். சைனா அயிட்டம் பெயருக்கு கூட கிடையாது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் முதல்10 நாடுகளில் 9ஆவது இடத்தை துபாய் பிடித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் துபாய்க்கு சுற்றுலாவாக வந்துள் ளனர். இதற்கு அடுத்த படியாக நியூயார்க் நகருக்கு 7.9 மில்லியன், ஆம்ஸ்டர்டாம் நகருக்கு 7.4 மில்லியன் மக்கள் சுற்றுலாவாக வருகை தந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக கோலாலம்பூர் இடம்பிடித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் லண்டனில் இருந்து வந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் லண்டனுக்கு அடுத்த படியாக சுற்றுலாபயணிகளின் மனதில் இடம் பிடிப்பது குவைத் மற்றும் பெய்ஜிங் நகரமாகும். தற்போது மூன்றாவது இடத்தை துபாய் பிடித்துள்ளது. முக்கிய தலங்களில் முதல் 20 இடங்களை பொறுத்த வரையில் அய்ரோப்பிய நாடுகள் 10 இடங்களை பிடித்துள்ளன. அதில் லண்டனுக்கு ஆண்டு தோறும் 20.1 மில்லியன் மக்களும், பாரீஸ் நகருக்கு 18.1 மில்லியன் மக்களும் வருகை தருகின்றனர்.
இதை தவிர ஆசிய கண்டத்தை பொறுத்த வரையில் பாங்காங், சிங்கப்பூர்,மற்றும் ஹாங்காங் நகரங்கள் இடம் பிடித்துள்ளன. முதல் 20 நாடுகளின் வரிசையில் ஆசிய பசிபிக் நாடுகள் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் நியூயார்க் நகருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் அவை 12 இடத்தையே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது
மேலும் 2013 ல் சுற்றுலா பயணிகளின் வருகை 9.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். நகர நிர்வாகத்தில் காணப்படும் ஒருமித்த திறமைகள், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள், கிழக்கத்திய நாடுகளுக்கும்,மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் அத்துறையினரின் இடைவிடா முயற்சிகளும், அதனால் பயணிகளுக்கு கிடைக்கும் பலன்களும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
ஹோட்டல்களில் தங்குவோரின் எண்ணிக்கையும், தங்கும் நாட்களும் அதிகரிப்பது ஹோட்டல் தொழிலின் வருமானத்தைப் , பெருக்கியுள்ளதால் இந்தத் துறையில் முதலீடுகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட கிரீக்சைட், ஹயாத் போன்ற ஹோட்டல்கள் 2012 ஆம் ஆண்டில் செயல்படத் துவங்கியுள்ளன. இந்த ஆண்டு இதன் தொடர்ச்சியாக சோபிடேல் துபாய், தி பால்ம் & ஸ்பா மற்றும் தி ஒபராய் போன்றவை இந்த வருடம் ஆரம்பிக்கப்பட உள்ளன.
வளர்ந்து வரும் நாடுகளான சீனா போன்றவற்றுடன் செய்யும் எல்லை தாண்டிய வர்த்தகமும், முதலீடுகளும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. மேலும்,சுற்றுலாத் துறையின் கிளைகள் இருக்கும் இடங்களிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உற்சாகம் தரக்கூடியதாக உள்ளது.
மேலும், அரபுக் குடியரசின் பொருளாதார வளத்தில் முதலிடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பா ,ரஷ்யா மற்றும் சீனப் பயணிகளின் வருகையும் கணிசமாகக் கூடியுள்ளது. பயணங்களுக்காக சீனர்கள் ஆண்டுதோறும் செலவிடும் அதிகபட்ச தொகை இவர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
ஆக்கம் & தொகுப்பு :மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment