செவிலியர்களும் ,தொடர் போராட்டங்களும் ஏன்?
செவிலியம் என்பது சேவை சார்ந்த தொழில்.வெறும் சேவை எனில் அவர்கள் குடும்பத்திற்கு யார் பொறுப்பு?அது தான் அவர்களின் வாழ்வாதாரம்.
செவிலியர்கள் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வீடுகளில் இருந்து படித்து வெளியேறும் பெண்களாக இருப்பார்கள் .ஆண்களும் இதே நிலையில் இருக்கும் குடும்ப பின்னனியோடே இருக்கும்.
முறையாக கற்று வெளியேறுபவர்களுக்கு அரசு வேலைக்காக போராடினார்கள் ..வேறு எந்த துறைக்கும் இல்லா அதிசயமாக அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கும்.அதை உடைக்கப் போராடினார்கள்.கிடைத்தது.
நாளொன்றுக்கு 8(9) மணி முதல் 12(14) மணி நேரம் வேலை.,அரசு விடுமுறை இல்லை,ஞாய்றுவிடுமுறை இல்லை.எந்த விழாக்களும் இல்லை.
1 வாரம் முதல் 10 நாள் வரை தொடர் இரவு நேரப் பணி.நோயாளிக்கும் ,செவிலியருக்குமான விகிதம் 1:1 என தீவிரசிகிச்சைபிரிவுகளிலும்,1:4 என சாதாரண வார்டுகளிலும் இருக்க வேண்டும்.அப்படி இருக்கும் அரசு தனியார் மருத்துவமனை எத்தனை?
சம்பளம் எவ்வளவு தெரியுமா rs.4000_5000.அதற்கும் கீழ் வாங்கிய அனுபவமும் உண்டு.[பயிற்சி மருத்துவர்கள் நிலையும் இதெ}.பிற நாடுகளை நோக்கி சென்றவர்கள் ஏராளம். பணியை தொடர் முடியாமல் முடங்கியவர்கள் ஏராளம்.
பிற சிறிய ,பெரிய நாடுகளில் எல்லாம் 2நாள் இரவுப்பணி செய்தால் 2 நாள் விடுமுறை.உழைப்புக்கு ஊதியம் கிடைக்கிறது..ஏன் இந்த விடுமுறை தேவை எனில் உடலும்,மூளையும் பெருமளவு இயங்க வேண்டும்.சரியா இயங்கனும்.இல்லைனா நோயாளியின் உயிருக்கு ஆபத்தாகும்..தீவிர சிகிச்சைபிரிவில் ஒரு நிமிடம் நிற்க நேரமில்லாமல் ஓடும் நிலை இருக்கும்..
இங்கே போராடினாலும் பயன் ஏதும் பெருமளவில் இல்லை.முறையாக மதிப்பெண் எடுத்தவர்களும் 2லட்சம் லஞ்சம் கொடுத்தாலே வேலை,8 லட்சம் லஞ்சம் கொடுத்தாலெ பணி நிரந்தரம் என்ற நிலை..தனியார் மருத்துவமனைகளோ இவர்களை சுரண்டுவதில் சிறந்தவர்கள்..உள்ள சம்பள்மும் ஒழுங்காக கிடைப்பதில்லை.அதிகமாக பார்க்கும் வேலை நேரங்கள் எல்லாம் நிராகரிக்கப்படுகின்றன.அதற்கான விடுமுறை ,ஊதியம் எல்லாம் காந்தி கணக்கு தான்..
பெண்களுக்கான பாதுகாப்பு, எந்த துறையாக இருப்பினும் அது அவரவர் கையிலும் சமூகமே!! உன் பார்வை மாற்றத்திலும் இருக்கிறது..
படித்தும் சமூக அவலத்தால் பாதிக்கப்படும் பல பெண்கள் இருக்கும் துறைகளில் இதுவும் ஒன்று.
உள்ளிருப்பு போராட்டம் மூலமாக அழுக்கு உடைகளுடனும் அத்யாவசிய தேவைகளைத் துறந்தும் பட்டினி கிடந்தும் அரசுக்கு தங்களின் கோரிக்கைகளை சொல்லத் துடிக்கும் செவிலியர்கள் கேட்பாரற்ற நிலைக்கு ஆளாகித் தவிக்கிறார்கள். கண் முன்னால் இத்தகைய போராட்டம் நடந்தும் தேர்தல் பேரங்களில் மூழ்கி கிடக்கும் கழகங்களும் அரசுத் தரப்பும் அதனைக் கண்டுகொள்ளாமல் உதாசினப்படுத்தி வருகிறது. தனியார் கல்லூரிகளில் படிக்க வசதியற்ற நடுத்தர வர்க்கத்தினர்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். மருத்துவராகும் கனவோடு படிக்கும் மாணவிகள் படிக்க வசதியற்ற நிலையில், அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பயிற்சியில் சேருகிறார்கள். அவர்களுக்கான முன்னுரிமையை அரசே மறுப்பது எவ்விதத்தில் நியாயமாக இருக்கும்?
அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் பணி கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில், அரசுப் பணி நியமனத்தில் அவர்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்குவதுதான் நியாயமானதாக இருக்கும். இதைத்தான் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் வலியுறுத்துகிறார்கள். அரசு பள்ளிகளில் படிப்பதையும் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறுவதையும் அவமானமாக நினைக்கும் காலகட்டத்தில் அரசை நம்பி பயிற்சி பெற்ற செவிலியர்கள் தங்களுக்கான முன்னுரிமையைக் கேட்பது நூற்றுக்கு நூறு நியாயமானது. எனவே போராட்டம் நடத்தும் செவிலியர்களை உடனடியாக அரசுத் தரப்பு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். தாய்க்கு நிகரான சேவையாற்றும் செவிலியர்களுக்கு தக்க தீர்வைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. நியாயமான போராட்டங்களை அடக்க நினைப்பது ஒருபோதும் தீர்வாகாது; அது திசைகளெங்கும் படரும் நெருப்பாகத்தான் மாறும் என்பதை அரசும் அதிகாரிகளும் உடனடியாக உணர்ந்து செவிலியர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க வேண்டும்.
.
இந்த அடிப்படை பணி சிக்கல்கள் மாறினால் எல்லாத்துறையும் போல் செவிலியப் பெண்களும் முடங்காமல் வேலையைத் தொடரலாம்.
சிஸ்டர் என்றழைக்கப்படுவதே பெருமை..[all indians are my brothers and sisters} except hubby என்ற வரிக்குப் பொருத்தமான துறை.
சமூகத்தின் பார்வையில் ,சினிமாத்துறையின் பார்வையில் கேலிப்பொருளாகவும் ,காமப் பொருளாகவும் உருவகப்படுத்தப்படும் துறை.
குறிப்பு: மத, சாதிகளைக் கடந்த மனித உடல் மனம் சார்ந்த பயிற்சி பெற்றவர்கள் என்பதால் பெரியாரியம் கற்றதும் பெரும்பாலோனுருக்குப் புரியும்.பிடிக்கும்..
அது தினந்தோறும் சந்திக்கும் துறை சார்ந்த பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காக்கும்.சேவையை செம்மைப்படுத்தும்.போராட்டங்களில் வெல்ல வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment