Tuesday, 14 February 2012

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு கோடைகால ஃபெல்லோஷிப்...

   என்ஜினீயரிங் மாணவர்களுக்கு கோடைகால ஃபெல்லோஷிப்வள்ளியூரான்
கோடைகால விடுமுறையில் சிறிய ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட விரும்பும் பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்துகிறது சென்னை  ஐ.ஐ.டி.
எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் உள்ள மாணவர்களுக்கு மேலும் கண்டுபிடிப்புத்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக கோடைகால ஃபெல்லோஷிப் பயிற்சியை வழங்குகிறது சென்னை ஐ.ஐ.டி. இந்த கோடைகால ஃபெல்லோஷிப் பயிற்சி மே 15 முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இரண்டு மாதகாலப் பயிற்சியில் சேரும் மாணவர்கள் பொறியியல், மேனேஜ்மெண்ட், அறிவியல் போன்ற தங்கள் துறை சார்ந்த ஏதேனும் ஒரு சிறிய கண்டுபிடிப்பு ஆய்வை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு மாணவருக்கும், கோடைகாலப் பயிற்சியில் ஈடுபடும் ஒவ்வொரு மாதத்திற்கும் தலா ரூ.6,500 வீதம்  ஃபெல்லோஷிப் வழங்கப்படும். இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு காலத்தில் தேர்வில் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்கள், படிப்புக்காலத்தில் மாணவர்கள் உருவாக்கிய ஆய்வுக் கட்டுரைகள், ஏதேனும் புதுமையான வடிவமைப்பு, டிசைன் போட்டிகளில் பங்கெடுப்பு, கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் பங்களிப்பைப் பொருத்து இந்த ஃபெல்லோஷிப் பயிற்சியில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பி.இ., பி.டெக்., பி.எஸ்சி.(என்ஜினீயரிங்), ஒருங்கிணைந்த எம்.இ., எம்.டெக்.,படிப்புகளில்  மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள்  இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.ஏ., எம்.பி.ஏ. போன்றப் படிப்புகளில் முதலாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த ஃபெல்லோஷிப் பயிற்சியில் விண்ணப்பிக்கலாம்.
மேனேஜ்மெண்ட் படிப்பு, கலைப்புலம் மற்றும் சமூக அறிவியல் (ஹியூமானிட்டிஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ்), அறிவியல் துறையைப் பொருத்தவரை இயற்பியல், வேதியியல், கணிதம், பொறியியல் துறையைப் பொருத்தவரையில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், அப்ளைடு பிசிக்ஸ், பயோ டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், என்ஜினீயரிங் டிசைன், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஓசன், மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல் என்ஜினீயரிங்  படிப்புகளை மேற்கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த கோடைகால  ஃபெல்லோஷிப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். ஐ.ஐ.டி. கல்வி நிலைய வளாகத்தில் படிக்கும் மாணவர்கள் இந்த ஃபெல்லோஷிப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பங்களை ஆன்லைன்  மூலமே விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 17.விவரங்களுக்கு : http://www.iitm.ac.in/

No comments:

Post a Comment