Sunday 5 February 2012

அவ்லியாக்கள் யார் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்?

அவ்லியாக்கள் யார்?
அவர்களின் இலக்கணம் என்ன?
அவர்களின் மீது நமது கடமைகள் என்ன?
என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் உண்மையான அவ்லியாக்களையும் போலியானவர்களையும் நாம் அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாது போய் விடும். அவ்வாறு இனம் கண்டு கொள்ளமுடியாததால் தான்அப்பாவி மக்கள் போலியானவர்களை அவ்லியாக்கள் என நம்பி ஏமாந்த விடுகின்றனர். அதனால் தடம் புரண்டு வழி கேட்டிற்கே சென்று விடுகின்றனர்.வல்லமையும் ஆற்றலும் மிக்க அல்லாஹ்விடம் வைக்கவேண்டிய நம்பிக்கையை அவ்லியாக்களிடம் வைத்து ஈமானையே இழந்து நிற்கின்ற பரிதாபமான நிலையைக் காணமுடிகிறது. அவ்லியாக்களை நம்புவது நமது நம்பிக்கையைச் சார்ந்தது தான். ஆயினும், அவர்களை நமது சமுதாயம் புரிந்து கொண்ட விதம் தான் தவறானது என்பதைத்
தெளிவுபடுத்துவதே நமது இந்ததலைப்பின் நோக்கமாகும்.
அல்லாஹ்வின் அவ்லியாக்கள் யார் என்பதை திருமறையின் பல்வேறு வசனங்கள்  நமக்குத்தெளிவுபடுத்துகின்றன.
அவ்லியாக்களின் இலக்கணத்தை இறைமைற பின்வருமாறு கூறுவதைப் பாருங்கள்:-
அலா இன்ன அவ்லியால்லாஹி……..
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை.அவர்கள் கவைலப்படவும் மாட்டார்கள்.அவர்கள் இறைவனை  நம்புவார்கள்.(அவனை) அஞ்சுவோராகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன்-10:62,63)
இந்த இறைவசனம் அவர்கள் :-
1) இறைவனைத்தவிர எவருக்கும் பயப்படமாட்டார்கள்.
2) எதைப்பற்றியும் கவைலப்படமாட்டார்கள்
3) இறைவனை உறுதியாக நம்புவார்கள்
4)  உள்ளும் புறமும் இறைவைன அஞ்சுவார்கள் (தக்வா உடன் இருப்பார்கள்.)
இந்த பண்புகளில் ஒருவர் உண்மையாகவும் உறுதியாகவும் இறைவைன நம்புகிறாரா? இறைவைன அஞ்சுகிறாரா? என்பதை எவராலும் அறிய முடியாது. ஏனெனில் ‘ஈமான், தக்வா’ என்னும் இரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் மறைந்து இருப்பைவயாகும். இறைவைனத்தவிர எவரும் இதனை அறிந்து கொள்ள முடியாது. எனவே யார் ‘இறை நேசர்’ என்பதை இறைவன் ஒருவனே நன்கறிவான்.
மேலும் அவலியாவுக்குரிய இலக்கணத்தைப் பாருங்கள்:-
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், ‘வலி என்பவர்,
1.அல் ஆலிமு பில்லாஹ் - இறைவைனப்பற்றி அறிந்தவராக இருப்பார்.
2.அல்முவாளிபு அலா தாஅத்திஹி - அவனது கட்டைளகைள சரியாகக்கடைபிடிப்பவராக இருப்பார்.
3.அல்முக்லிஸ் ஃபீ இபாததிஹி –  அவனை வணங்கி வழிபடுவதில் பரிசுத்தமானவராக இருப்பார’ என விளக்கமளிக்கிறார்கள்.
இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள்,
இறைவேதத்தை முற்றிலும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும்   பின்பற்றுபவராக இருப்பவரே  இறைநேசராக இருக்கமுடியும்’   எனக் கூறுகிறார்கள்.
இவ்வாறிருக்க, நாம் எவ்வாறு ஒருவரை ‘வலீ ‘ என்றும் ‘மஹான்’ என்றும் சான்றிதழ் வழங்க முடியும்?
இன்று நாம் அவ்லியாக்கள் எனக்கூறும்; எவைரப்பற்றியும் எதையும் நாம் அறிந்திருக்கவில்லை. அவர்களின் அகவாழ்வைப்பற்றியோ புறவாழ்வைப்பற்றியோ எதுவும் நமக்குத்தெரியாது. அவர்களின்
உண்மையான வரலாறும் நமக்குத் தெரியாது. அல்லாஹ்வோ, அவனது தூதரோ அவர்களைப்பற்றி அடையாளம் காட்டவும் இல்லை.
குர்ஆனில் இறைதூதர்களைப்பற்றிக் கூறப்படுகிறது. அவர்களையடுத்து இறைவனின் நேசத்தைப் பெற்ற மர்யம் (அலை), ஃபிர்வ்னின் மனைவி (ஆசியா), இம்ரான், லுக்மான், கிள்ரு, கிஜ்பீலு, ஹபீபுந்நஜ்ஜார், அஸ்ஹாபுல் கஹ்ஃபு,ஸைத் (ரலி),துல்கர்னைன் போன்ற நல்லடியார்களைப்பற்றியும்,
பத்ரு, உஹ்து, அஹ்ஸாப், ஹுனைன், அஸ்ஹாபுஷ்ஷஜரா போன்ற தியாகிகளையும்  குறிப்பிடுகிறான். இன்னும் பெயர் குறிப்பிடாமல் சிலரையும், பொதுவாக நபித்தோழர் தோழியர்  பற்றியும் குறிப்பிடுகிறான்.
அதைப்போல் நபி (ஸல்) அவர்களும், தமது காலத்தில் வாழ்ந்த நாயகத் தோழர்கள், தோழியர்கள் பலரையும் சுவர்க்கவாசிகள் என அடையாளம் காட்டியுள்ளார்கள். இவர்களை நாம் தைரியமாக
‘அவ்லியாக்கள்’ எனக் கூறலாம். மற்றவர்களைப்பற்றி  அல்லாஹ்வோ, அவனது தூதரோ அறிவிக்காத வரை நாம் யாரையும் அவ்லியாக்கள் எனக் கூறமுடியாது.
இறைவனை  உள்ளும் புறமும் அஞ்சி வாழ்ந்த அவனது நல்லடியார்கைளப்பற்றிக் குறிப்பிடும் போது,
رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ
‘ரளியல்லாஹு அன்ஹும் வரளூ அன்ஹும்’
‘அவர்கைள அல்லாஹ்வும் பொருந்திக்கொண்டான். அவர்களும் அவைனப்பொருந்திக்கொண்டார்கள்’ (அல்குர்ஆன் 98:8) என இறைமறை குறிப்பிடுகின்றது.
இதன்படி இறை நேசர்கள் என நாம் கூறுவோர் இறைவைனப் பொருந்திககொண்டிருக்கலாம். ஆனால் இறைவன் அவர்கைளப் பொருந்திக் கொண்டானா இல்லையா என்பைத நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்? இறைவனோ, இறை தூதரோ அறிவிக்காத ஒரு செய்தியை நாம் எவ்வாறு நம்ப முடியும்?
எனவே, எவரையும் நாமாக ‘வலி’ என்றோ ‘அவ்லியா’ என்றோ கூறவும் முடியாது, பட்டம் சூட்டவும் முடியாது. அவ்வாறு ஒருவர் தன்னை ‘அவ்லியா’ என்று கூறினால் அவர் பொய்யராகவே கருதப்படுவார்.
("வலி" என்றால் "இறைநேசர்", "அவ்லியா" என்றால் "இறைநேசர்கள்" என்பது பொருளாகும். ஒருமைக்கும் பன்மைக்கும் வேறு பாடு தெரியாமல் அவ்லியா என்றே மக்கள் கூறுகின்றனர். எனேவ வழக்கப்படியே நாம் அவ்லியா என்ற பன்மைச்சொல்லையே பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கவனத்திற் கொள்க!)
இனி இந்த இலக்கணத்தை வைத்து நாம் கொண்டாடி வருபவர்களை அவ்லியாக்கள் எனக் கூறலாமா? என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவ்லியாக்களை நாம் எவ்வாறு மதிப்பது?
உண்மையான அவ்லியாக்கள் யார்? போலியானவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொண்டோம்.
இனி, அவ்லியாக்களைப் பற்றி மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கைகள், ஐயங்கள் குறித்தும்
அவற்றிற்கு மார்க்கம் கூறும் தீர்ப்புகள் என்ன? என்பதையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நாம்
தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
கப்றுகளுக்கு கட்டிடங்கள் கட்டலாமா?
எவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே கியாமத் (மறுமை) நாள் வருகிறதோ அவர்களும்,
கப்றுகளை மஸ்ஜிதாக (வழிபடும் இடமாக) ஆக்கிக் கொண்டவர்களும் மக்களில் மிகவும்
கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)
ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்)
அபிசீனிய நாட்டிற்குச் சென்று திரும்பிய உம்மு ஹபீபா(ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் தாம் கண்ட கிறித்தவக் கோயிலையும், அதில் பொறிக்கப்பட்டிருந்த உருவங்களையும் பற்றி; நபி (ஸல்)அவர்களிடம் தெரிவித்தார்கள்.
அப்போது நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால் அந்த நல்லவரின் மண்ணறை மீது கட்டிடங்கள் கட்டி அவர்களின் உருவங்களை அதில் வரைவார்கள். இவர்கள் தான் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷh (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தடைசெய்த இந்த அடாத செயலை இன்று மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தர்ஹாக்களைக்கட்டி
வழிபட்டு வருவதைக் காணுகிறொம். இதனால் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகின்றனர்.
கப்றுகளை தரைமட்டத்திற்கு மேல் உயர்த்தலாமா?
கப்றுகள் பூசப்படுவதையும், அதன் மீத கட்டிடங்கள் கட்டுவதையும், அதனருகே உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஐhபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( ஆதாரம: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)
நபி (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். ‘தரை மட்டத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ள எந்த கப்றையும் நீ தரைமட்டமாக்காமல் விட்டுவிடாதே! எந்த உருவப்படத்தையும்,சிலைகளையும் அழிக்காமல் விட்டுவிடாதே’ என்று அலி (ரலி) அவர்கள் அபூ ஹய்யான் என்பவருக்குக் கூறினார்கள்.(ஆதாரம் முஸ்லிம்,திர்மிதி)
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் மதீனாவில் உயரமாக கட்டப்பட்ட சில கப்றுகளை இடித்துத் தரை மட்டமாக்கியதைத் தாம் கண்டதாக தமது வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள்.
மேலே கூறப்பட்ட நபிமொழிகள்  இன்று ஒவ்வொரு ஊரிலும் வானளாவ கப்றுகளை கட்டிக் கொண்டாடுவதை வன்மையாகக் கண்டிப்பதைக் காணலாம்.
அவ்லியாக்களுக்கு விழா எடுக்கலாமா?
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذَاتِ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ
‘கப்றுகளை ஸியாரத் செய்யும் பெண்களையும், அதன் மீது கட்டிடம் கட்டுபவர்களையும், அதில் விளக்கு எரிப்பவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்’.                                                                  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அபூதாவூது, திர்மிதி,பைஹகீ: 7457)
நபி(ஸல்)அவர்கள் ‘எனது கப்றை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்’ என தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் எச்செரித்துளார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), ஆதாரம்:அஹ்மத்,அபூதாவூது)கப்றுகளைக் கட்டுவது, விளக்கெரித்து அலங்கரிப்பது, பட்டு விரிப்பது, விழா எடுப்பது, கந்தூரி உரூஸ் கொண்டாடுவது போன்ற அனைத்து ஷிர்க், பித்அத்தானஅனாச்சாரங்களையெல்லாம் நபி(ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிப்பதைப் பாருங்கள்.
இவ்வாறு கட்டுவதற்கு மட்டும் மார்க்கத்தில் அனுமதி இருந்திருந்தால், எண்ணை                     வளங்கொழிக்கும் குபேர நாடான ஸவூதி அரேபியாவில் விண்ணைமுட்டுமளவுக்கு தங்கத்திலும்,வைரக்கற்களிலுமல்லவா சமாதிகளைக்கட்டி அமர்க்களப்படுத்தியிருப்பார்கள்.    மக்காவிற்கு ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஸியாரத்திற்காக மக்கா மதீனாவுக்குச் சென்று வருகிறார்கள்.அங்கே எங்கேனும் இவ்வாறு கப்றுகள் கட்டப்பட்டுள்ளனவா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
நபி (ஸல்)அவர்களுடையவும், நாற்பெரும் கலீபாக்களுடையவும், ஜன்னத்துல் பகீஃயில் அடக்கமாயிருக்கும் உம்முஹாத்துல் முஃமினீன்கள் (விசுவாசிகளின் அன்னையர்) எனப்படும்            நபி (ஸல்) அவர்களின் ஒன்பது மனைவியருடையவும், சுவர்க்கத்துத் தலைவி எனப் போற்றப்படும் பாத்திமா(ரலி)அவர்கள், அவர்களின் மூன்று சகோதரிகளான ஸைனப் (ரலி), ருகைய்யா(ரலி) உம்முகுல்தூம் (ரலி), அவர்களது சகோதரரரும் நபியின் மகனுமாகிய இப்றாஹீம்(ரலி)அவர்கள், இஸ்லாத்திற்காக தங்களின் உயிர்களை அர்ப்பணித்த பத்ரு, உஹுத் தியாகிகள், வலிமார்களுக்கெல்லாம் தலைவராகிய ஸையிதுஷ்ஷ{ஹதா(தியாகிகளின் தலைவர்)ஹம்ஸா(ரலி)
போன்றவர்களுக்கெல்லாம் சமாதிகள் கட்டிவிழாக்கள் எடுக்கிறார்களா? அவ்வாறு எடுக்காதபோது முகவரியும் வரலாறும் இல்லாத யார் யாருக்கோ நமது ஊர்களில் கட்டிடங்கள் கட்டி விழா எடுக்கிறார்களே இதற்கு மார்க்கத்தில்சிறிதேனும் அனுமதியிருக்கிறதா? அங்கீகாரம் இருக்கிறதா என்பதை நமது சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டும்.
கந்தூரி,உரூஸ்,யானை ஊர்வலங்கள் நடத்தலாமா?
பெருமானார்(ஸல்) அவர்களுக்கோ, அவர்களின் அடிவழுவாது வாழ்ந்த நாயத்தோழர்கள், இமாம்கள் ஆகிய எவருக்குமே விழாவோ, யானை,குதிரை ஊர்வலமோ நடந்;தாக எந்த வரலாறும் ஆதாரமும் இல்லை. அவ்வாறிருக்க அவ்லியாக்கள் என்ற பெயரால் சித்தரிக்கப்படும் மனிதர்களுக்கு எவ்வாறு விழாக்கள் எடுக்கமுடியும்? யானை, குதிரை ஊர்வலங்கள் நடத்த முடியும்?
‘எனது மண்ணறையை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்!’ என்ற எச்சரிக்கையையும் மீறி விழா ஊர்வலங்கள் நடத்தலாமா?
மாற்று மததத்தவர் நடத்தும் தேர்த்திருவிழாக்கள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள், காவடி மேள தாளங்கள் என அவர்களை அப்படியே காப்பி அடித்து நடத்தும் அனாச்சாரங்கள் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமானவை. அவை இஸ்லாத்திலிருந்து மக்களை அப்புறப்புடுத்திவைக்கின்றன.
عَنْ عَائِشَةَ – رضى الله عنها – قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم « مَنْ أَحْدَثَ فِى أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால் அது ஏற்றுக்காள்ளப்படமாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.                                                           (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) ஆதாரம்: புகாரி:2697முஸ்லிம்)
அவ்லியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
ஓவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரவேண்டும். (அல்குர்ஆன். 3:185,21:35,21:57)
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவர் சாதரண மனிதனாகட்டும், நல்லடியா ராகட்டும், மஹாhனாகட்டும், அவ்லியாவாகட்டும் யாராக இருப்பினும் மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும் என்பது இறை நியதியாகும். அதிலிருந்து எவரும் தப்பவே முடியாது.
ஆனால், இன்று மார்க்க மேதாவிகளில் சிலர் மண்ணறையில் அடக்கமாயிருக்கும் அல்லியாக்கள் மரணிக்கவில்லை.அவர்கள் உயிரோடு தானிருக்கிறார்கள் என வாதிடுகின்றனர்.
பாமர மக்களை நம்ப வைத்து, அவர்கள் கட்டிவைத்திருக்கும் கப்றுகள், தர்ஹாக்களுக்கு மேல்
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
(விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (குர்ஆன்:10:62)
وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء
அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக அவர்கள் உயிரோடு உள்ளனர். (குர்ஆன்: 2:154)
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ
அல்லாஹ்வின் பாதையில்; போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள்.( குர்ஆன் 3:169)
என்ற திருக்குர்ஆனின் மூன்று வசனங்களை எழுதிவைத்திருப்பதைப் பார்க்கலாம்.
10:62 என்னும் முதல் வசனத்தில் அல்லாஹ்வாலும் அவன் தூதராலும் சிறப்பிக்கப்பட்ட உண்மையான இறைநேசர்களைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் அவ்லியாவென கற்பனை செய்துகொண்டவர்களுக்கெல்லாம் இந்த மறைவசனத்தை தவறாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
இந்த வசனங்களை மக்கள் தவறாகவே புரிந்து வைத்துள்ளதைப் பார்ப்போம்.
நல்லடியார்களும், மஹான்களும் இறந்த பின்னரும் உயிரோடு உள்ளனர். எனவே, அவர்களை வழிபடலாம், அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்கு இவ்வசனங்கள் ஆதாரமாக அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
1. இவ்வசனங்கள் நல்லடியார்கள்,மற்றும் மஹான்களைக் கொண்டாடவோ, அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்வதை ஊக்குவிக்கவே அருளப்பட்டன.
2. இந்த வசனங்கள் அருளப்பட்டபின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை அழைக்கவோ, பிரார்த்திக்கவோ இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
3. இவ்வசனங்களை கூர்;ந்து கவனித்தால் அவர்களின் விளக்கம் தவறு என்பதை அவர்களே புரிந்து கொள்வார்கள்.
2;:154 என்ற வசனத்தில் அவர்கள் உயிரோடு உள்ளனர் என்பதைத் தொடர்ந்து
وَلَٰكِن لَّا تَشْعُرُونَ
‘எனினும் நீங்கள் உணரமாட்டீர்கள்’ என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்போது 2:154 வது வசனத்தை முழுமையாகப்படியுங்கள்.

وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ ۚ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ
அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக அவர்கள் உயிரோடு உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள். (குர்ஆன்: 2:154)
இதில் வரும்; ‘நீங்கள் உணரமாட்டீர்கள்’ என்ற இறுதிப்புகுதியை எழுதுவதில்லை.
அவர்கள் ‘உயிரோடு இருப்பது’ நாம் புரிந்து வைத்திருக்கும் பொருளில் அல்ல. நம்மால்  உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தையே இது தருகிறது.
3:169 வசனமும், அதைத் தொடர்ந்து வரும் 170,171,172,173 ஆகிய நான்கு வசனங்களும் இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
அடுத்து,
عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
3:169-வது வசனதில் ‘ தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர் ‘ என்பதை விட்டுவிட்டு என்ற பகுதியை எழுதுகின்றனர்.

இப்போது 3:169 வது வசனத்தை முழுமையாகப்படியுங்கள்.
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
அல்லாஹ்வின் பாதையில்; போரிட்டுக் கொல்லப்பட்டவாகளை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள். (அவர்கள்) தமது இறைவனிடத்தில் உயிரோடு இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (3:169)
3:169-வது வசனம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட ஷஷஹீதுகள் என்னும் வீரத்தியாகிகளைக் குறித்து சொல்லப்படும் வசனம் என்பதையும் அறியாது அறைகுறையாகப் புரிந்து இந்த வசனத்தை எழுதி மக்களை திசை திருப்புகின்றனர்.
நம்மைப் பொறுத்தவரை அவர்கள் மரணித்துவிட்டாலும், இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் எனத் தெரிவிக்கிறது. இவையனைத்தையும் விட இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் தான் மிகவும் முக்கியமானது.
உயிருடன் இருக்கிறர்கள் என்றால் எப்படி? என நாங்கள் கேட்டபோது ‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சுவர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் விளக்கம் அளித்தனர் என இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் முஸ்லிம் 3500)
நிச்சயமாக சுஹதாக்(கள் என்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர); களின் உயிர் பறவைகளின் உடல் கூட்டில் விடப்பட்டு, சுவர்க்கத்தில் தமது விருப்பத்திற்கேற்ப உலவிக் கொண்டிருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.) அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்)
உங்கள் சகோதரர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டபோது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சைப் பறவையின் உடல் கூட்டில் அமைத்து விட்டான். அவை சுவர்க்கத்துடைய ஆறுகளில் தண்ணீர் அருந்திக் கொண்டும், சுவர்க்கத்தின் (மரங்களின்) பழங்களை புசித்துக் கொண்டுமிருக்கின்றன. (இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்)
அல்லாஹ்வின் பாதையில் மரணமடைந்த ஷஹீத்களைப் பற்றி குர்ஆனின் வசனம் நல்லடியார்களான அவர்களை  மரணித்து விட்டார்கள் என்று நீங்கள் கூறாதீர்கள் என்று கூறிவிட்டு, எனினும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். எனினும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.ஆகவே நாம் கற்பனை செய்வதுபோல் அவர்கள் தமது கப்ருகளில் உயிரோடு இருக்கிறார்கள்; என்பது தவறாகும். ஏனெனில் அவர்களின் நிலையைப்பற்றி நபி(ஸல்) அவர்களின் ஹதீஸிகளின் வாயிலாக நல்லடியார்கள் ‘சுவர்க்கத்தில் பறவை அமைப்பில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள’; என்று கூறியிருப்பதால் இதுவே உண்மை என்பது தெளிவாகிறது.
2:154,3:169) ஆகிய இருவசனங்களிலும் ஷஷஹீதுகளைக் குறித்து மட்டுமே குறிப்பாகக் கூறப்பட்டுள்ளன.
இவர்கள் யாராக இருந்தாலும் இறப்பைத் தழுவித்தான் ஆக வேண்டும். ஆனால் மக்களில் சிலர் அவ்லியாக்கள்  வெளி உலகத்துக்குத்தான் இறந்தவர்கள். உண்மையில் அவர்கள் கப்ருக்குள் உயிருடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்பதை நமது சமுதாயம் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
விபரீதமான பொருள்
நபிமார்களோ, அவ்லியாக்களோ மரணித்து விட்டார்கள் என்று கூறப்பட்டால் அவர்கள் உணமையிலே மரணித்து விட்டார்கள் என்று தான் பொருள்.
1. அவர்கள் மரணித்த பிறகு உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்னால்; உயிருடன் இருந்த ஒருவரை மக்கள் பூமிக்குள் புதைத்து கொலை செய்து விட்டார்கள் என்ற குற்றத்தை செய்ததாக ஆகிவிடும்.
2. அப்படி இவர்கள் மரணிக்கவில்லையென்றால் இவர்களின் சொத்துகளுக்கு யாரும் பங்குதாரராக முடியாது. இவர்களின் மனைவிகள் இத்தா இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று இஸ்லாம் தெளிவு படுத்தியிருக்கும்.
ஆகவே, மனித இனத்தில் மாபெரும் பதவிகளுடைய நபிமார்கள், ஷஹீத்கள், அவ்லியாக்கள் ஆகியோர் மரணித்து விட்டால், அவர்கள் மரணித்து விட்டார்கள் என்றே உறுதி செய்து அவர்களை கழுவி குளிப்பாட்டி கபனிட்டு ஜனாஸா தொழ வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பதை முஸ்லிம்கள் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
‘அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா?
அல்லாஹ் அல்லாத எவரையும் அழைத்துப் பிரார்த்திப்பதும் உதவி தேடுவதும் இஸ்லாத்தில்; கூடவே கூடாது. அதற்கு இம்மியளவும் அனுமதியும் கிடையாது. இவற்றை எச்சரிக்கும் அல்லாஹ்வின் வேத வசனங்களைப் படியுங்கள்.
‘மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும் இறந்துபோன) அவர்கள் (உயிரோடுள்ள) மக்களுக்கு பதில் தரமாட்டார்கள். ஆகவே, அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட மிகவும் வழி கெட்டவர்கள் யார்? இவர்கள் அழைப்பதைக்கூட அவர்கள் அறியமாட்டார்கள்’. (அல்குர்ஆன்-4:5)துயரத்தில் சிக்கித் துடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டழைத்தால் அவர்களுக்கு பதில் கூறி அவர்களுடைய துயரங்களை நீக்குபவர் யார்? அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு எவருமில்லை. அவன் மட்டுமே துயரங்களை நீக்குவான்’. (அல்குர்ஆன்-27: 62).
‘உமக்கு (எவ்வித) நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாத எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின், நீர் அநியாக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்!’  (அல்குர்ஆன்-10:106)
‘அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்கள். (அதுமட்டுமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்’. ( அல்குர்ஆன் 7:192)
‘நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும் (பார்க்கலாம்).’ (அல்-குர்ஆன்-7:194)
‘நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு பதில் தரமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன்- 35: 14)
‘(நபியே) நீர் கூறும். நான் பிரார்த்திப்பதெல்லாம் என் இறைவனைத்தான். அன்றியும், நான் அவனுக்கு (ஒருபோதும்) எவரையும் இணைவைக்கமாட்டேன்;.’ (அல்-குர்ஆன்- 72:20)
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவியும் தேடுகிறோம். (அல்-குர்ஆன்- 01:04)
மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் அல்லாஹ் ஒருவனையே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும். அவனிடமே நம் தேவைகளைக் கேட்கவேண்டும். அவனிடமே உதவியும் தேடவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இவ்வாறிருக்க நாம் இறந்து போன அவ்லியாக்களாகட்டும்; மகான்களாகட்டும் எவரிடமும் பிரார்த்திக்கவோ உதவிதேடவோ நம் தேவைகளைக் கேட்கவோ செய்யலாமா?
அடுத்து அவ்லியாக்களிடம் வஸீலா (உதவி) தேடலாம் என்று கூறுவோர் சொல்லும் ஆதாரத்தையும் அதன் மறுப்பையும், வஸீலாவின் உண்மையான பொருளையும் பார்ப்போம்.
அவ்லியாக்களிடம் வஸீலா  தேடலாமா?
ياأَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَابْتَغُواْ إِلَيهِ الْوَسِيلَةَ
மூமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் (வஸீலா) தேடிக்கொள்ளூங்கள்,  (அல்குர்ஆன் 5:35)
வஸீலா என்றால் அரபி அகராதியில் ஏணி, துணைச்சாதனம் என்ற பொருளைக் கொண்டிருக்கிறது. வல்ல அல்லாஹ் நமக்கு மூன்று வகையான வஸீலாக்களை அனுமதித்துள்ளான்.
1, இறைவனின் அழகிய திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடுதல்.
2, நம்முடுடைய ஸாலிஹான நல்ல அமல்களைக்கொண்டு வஸீலா தேடுதல்
3, ஸாலிஹான செயல்களையுடைய அடியார்களிடம் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது நமக்காக துஆ செய்யச் சொல்லி வஸீலா தேடுதல்.
وَلِلّهِ الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُواْ الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَآئِهِ سَيُجْزَوْنَ مَا كَانُواْ يَعْمَلُونَ
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்.அவனுடய திரு நாமங்களில் தவறிழைப்போரை(புறக்கணித்து) விட்டு விடுங்கள். அவர்களுடைய  செயல்களுக்காக அவர்கள் தக்க கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7:180)  மேற்சொன்ன வசனத்தின் வாயிலாக இறைவனது அழகிய திருநாமங்களைக் கூறி பிரார்த்தித்து “வஸீலா” தேடுவதற்கு அனுமதி இருப்பதை காணலாம்.
وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ 
நீங்கள் பொறுமையைக்கொண்டும், தொழுகையைக்கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் 2:45) பனூ இஸ்ரவேலர்  காலத்தில் நடந்த குகையில் அடைப்பட்ட மூன்று நபர்களின் சம்பவம் ஸாலிஹான நல் அமல்களைக் கொண்டு வஸீலா தேடுவதற்கு ஒரு சரியான எடுத்துக்கட்டாகும்.
கடுமையான  மழையின்  காரணமாக  மூவர்  ஒரு  குகையினுள்  ஒதுங்கிய  போது,  கடுங்காற்று  அத்துடன் வீசியதால் பெரிய கல் ஒன்று உருண்டு வந்து குகை வாயிலை அடைத்துக்கொண்டது. அங்கிருந்த கல்லை நகற்ற முடியாத அம்மூவரும் அவரவர்களின் நல்அமல்களை இறைவனிடம் முறையிட்டு வழி திறக்க துஆ செய்தார்கள். இது நீண்ட சம்பவத்தின் சுருக்கம் (புஹாரி,முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் காணலாம்) மேற்கண்ட நிகழ்ச்சியின் மூலம் நல் அமல்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதை அறிகிறோம்.
ஒரு நல்ல  அடியார் உயிருடன்  இருக்கும் பொழுது  நம்முடைய  தேவைகளுக்காக  துஆ செய்யச் சொல்லி وَسِيلَةَ “வஸீலா” தேடுவதற்கு உமர்(ரழி) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவம் ஒரு சிறப்பான எடுதுக்காட்டாகும். உமர்(ரழி) காலத்தில் மழை இல்லாமல் கடுமையியான பஞ்ஞம் ஏற்பட்டது. அப்பொழுது உமர்(ரழி) அவர்கள் அன்றைய கால கட்டத்தில் நல்லடியாராகக் கருதப்பட்ட நபி (ஸல்)  அவர்களின் சிரியதந்தையாகிய அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டு மழைக்காக பிரார்தனை செய்யச்சொல்லி, மழை வந்து செழிப்புற்று பஞ்சம் நீங்கியது. (புஹாரி)
(Note : இந்த நிகழ்ச்சியில் நாம் நினைவில் கொள்ளவேண்டியது - உமர் (ரலி) அவர்கள் உயிருடன் இருந்த அப்பாஸ் (ரலி) அவர்களின் வாசீலவைத்தான்  தேடினார்களே தவிர இவ்வுலகைவிட்டு பிரிந்த நம் உயிரிலும்  மேலான நபி (ஸல்) அவர்களின் வாசீலாவைத் தேடவில்லை!!!)
வஸீலா தேடுவதற்குரிய வழிகளை இறைவனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இவ்வளவு தெளிவாக்கிய ஒரு விஷயத்தில், தவறான கருத்துக்களைப் புகுத்தி, மார்க்கதிற்க்கு முரணாக இறந்த நமது முன்னோர்களின் பொருட்டால் கேட்டு பலர் வழி தவறிக்கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது நாமும் உயிருடன் விழித்த நிலையில் இருக்கும் ஸாலிஹான நல்லடியார் ஒருவரை அழைத்து துஆ செய்யச் சொல்லலாம். நமது தேவையைக் கேட்டுப் பெறலாம். ஆனால் சிறிய மெளத்தாகிய தூக்கத்தில் இருக்கும் ஒரு நல்லடியாரிடம் நமது தேவைகளைக் கேட்டால் பதில் அளிக்கமாட்டார். இந்நிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து அடக்கமாகிவிட்டவர்களிடம் போய் கேட்டால் பதில் கிடைகுமா? கபுறுகளுக்குச் சென்று முறையிடும் நமது சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டாமா?
وَمَا يَسْتَوِى الاٌّحْيَآءُ وَلاَ الاٌّمْوَاتُ 
உயிருள்ளோரும்,  மரணித்தோரும்  சமமாக  மாட்டார்கள். (அல்குர்ஆன் 35:22) என்ற  தெளிவான  இவ்வசனத்தையும் கவனிக்க வேண்டாமா? இம்மாதிரி நல்லடியார்களிடம் முறையிடுவதை வல்ல அல்லாஹ் வன்மையாக கண்டிப்பதைப் பாருங்கள்.
أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاء إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا
“இந்த காபிர்கள் அல்லாஹ்வாகிய நம்மை விட்டுவிட்டு நம்முடைய அடியார்களை தங்களுடைய அவுலியாக்களாக எடுத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறார்களா? நிச்சயமாக அப்படிப்பட்ட காபிர்களை உபசரிக்க நாம் நரகத்தை சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். (அல் குர்ஆன் 18:102) மேலும் இறைவன்  இவர்களைப் பற்றி கூறுகிறான்.
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا
தங்களுடைய அமல்களில் பெரிய நஷ்டம் அடைந்தவர்களை நாம் அறிவித்து தரட்டுமா (நபியே!) நீர் கேளூம் (அல்குர்ஆன் 18:103)
 الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
அவர்கள் பாவமான கருமங்களைச் செய்து கொண்டு, மெய்யாகவே நாங்கள் மிக நல்ல காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்வார்கள் .(அல்குர்ஆன் 18:104)  இவ்வுளவு தெளிவாக உள்ள இவ்விஷயத்தை உலக ஆதாயம் தேட முனையும் சிலர் பின் வரும் வசனத்தை காட்டி மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ 
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் இதை உண்ர்ந்து கொள்ளமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)
இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ்வின் பாதையில்  இறந்த  நல்லடியார்கள்   இறக்கவில்லை உயிரோடு இருக்கிறார்கள் என்று இறைவன் கூறுகிறான். எனவே அவர்களிடம் உதவி கேட்கலாம், சிபாரிசு செய்யச் சொல்லாம் என வாதிடுகின்றனர். இதே வசன இறுதியில் அவர்கள் எப்படி உயிருள்ளவர்கள் என்பதை நீங்கள் உணரமாட்டீர்கள் என்று இறைவன் தெளிவாகக் கூறுவதை இவர்கள் உணரவில்லை.
மேலும் இவ்வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.  நல்லடியார்களின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் உடலில் புகுத்தப்பட்டு சுவர்க்கத்தில் உலவி கொண்டுயிருப்பார்கள். அங்குள்ள கனிகளைப்புசித்து மகிழ்வார்கள். (நூல்: அபூதாவூத்)
எனவே நல்லடியார்கள் சுவர்கத்தில் உயிருடன் இருக்கிறார்கள்,  கபுறுகளில் உயிருடன் இல்லை. அல்லாஹ் கூறுவது போல் நம்மால் உணர முடியாத ஒரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்  என்பது தெளிவு. எனவே கண்ணியமிக்க இஸ்லாமிய சமுதாயத்தவர்களே! இறைவன் அனுமதித்த வழியில் இறைவனை நெருங்குவதற்குரிய வழியைத்தேட முற்பட்டு இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றம் அடையுங்கள். வல்ல அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரையும் அவனது நேர் வழியில் நடத்தாட்டுவானாக!
நன்றி: ஜகராவ்
அவ்லியாக்கள் மறுமையில் ஷஃபாஅத் செய்வார்களா?

 ’அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!)கூறுவீராக! அவைஎந்த சக்தியையும், அறிவையும் பெறாமலிருந்தாலுமா?பரிந்துரை பேசுதல் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.’ (அல்-குர்ஆன்- 39:43,44)

 ’ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த பரிந்துரையும் அவர்களுக்குப் பலனளிக்காது’. (அல்-குர்ஆன்- 72:20,74:48)
 ’தங்களுக்கு ஏதொரு நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை அவர்கள் வணங்குவார்கள்.மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் (ஷஃபாஅத்) பரிந்து பேசும் என்றும்   கூறுகிறார்கள்.( அல்-குர்ஆன்- 10:18)
 ’அவன் யாருக்கு அனுமதியளிக்கின்றானோ அவருக்கே தவிர மற்றவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது.(அல்-குர்ஆன்-20:109,34:23)
 ’தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் அனுமதியளித்த பின்பே தவிர அவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது. (அல்-குர்ஆன்-53:26)

 மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய முடியுமா? என்பதில் மூன்று விதக் கருத்துக்கள் கூறப்படுகின்றன.

 1. அறவே பரிந்துரை கிடையாது.
 2. நல்லடியார்கள், நபிமார்கள் தாம் விரும்பியவருக்கு பரிந்துரை செய்வார்கள்.
 3. நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு.

 முதலிரண்டு கருத்துகளும் குர்ஆனைப்பற்றிய தெளிவான அறிவு இல்லாதவர்களின் கருத்தாகும்.
 அறவே பரிந்துரை கிடையாது என்போர் குர்ஆன் கூறும் பரிந்துரை பற்றிய ஏனைய வசனங்களை       அறியாதவர்கள். இரண்டும் தவறானவையாகும்.

குர்ஆனின் 2:48,2:123,2:254,6:51,6:70,6:94, 26:100,32:4,36:23,39:43,44, 74:48 ஆகிய வசனங்களைப் படிப்பவர்கள  மறுமையில் பரிந்துரை என்பதே கிடையாது. பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.

 அவன் அனுமதி பெறாமல் யார் பரிந்துரைக்க முடியும்? (அல்-குர்ஆன்-2:255)
 அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை.(அல்-குர்ஆன்-10,3)

 ஆகிய வசனங்கள் இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை அறியலாம்.  இறைவன் அனுமதியளிக்கமாட்டான் என்றால் இவ்வாறு இறைவன் கூறியிருக்கமாட்டான்.

அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர அவர்கள் பரிந்துரை செய்யமாட்டார்கள் (அல்-குர்ஆன்-21:28)
 ரஹ்மானிடம் உடன்படிக்கை எடுத்தவர் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளர்கள் அல்லர்.    (அல்-குர்ஆன்-19:87)

 என்ற வசனங்களின் படி சிலருக்கு பரிந்துரை செய்ய அனுமதியளிக்கப்படும் என்பதையும், அந்தப் பரிந்துரை  பயன் தரும் என்பதையும் இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

மறுமையில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்று எவருக்கும்; தெரியாது. ஆகவே, ‘அவ்லியாவே!   எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்!’ என்று இந்த உலகில் வாழும்போது நாம் கேட்பது கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.

 மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டியதால் தான் ‘இணைவைப்போர்’ ஆனார்கள்.     (பார்க்க குர்ஆன் 10:18)
 யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ்தான் தீர்மானிப்பான் என்பதையும் ஷஃபாஅத- பரிந்துரை யாரிடமும் வேண்டக் கூடாது.

நாம் அழைத்தால் அவர்களால் கேட்க முடியுமா?

(நபியே!) நிச்சயமாக நீர் இறந்தவர்களை செவியேற்கும்படி செய்ய முடியாது (குர்ஆன் 30:52)

இறைவன், நபியவர்களுக்கு ‘உம்மால் இறந்தவர்களைக் கேட்கச் செய்யமுடியாது என மிகத்தெளிவாகவே கூறிவிட்டான்.நமது உயிரினும் மேலான அகிலத்தின் அருட்கொடையான நபியவர்களால் கேட்கச் செய்ய முடியாத ஒரு காரியத்தை கப்றிலே அடக்கமாயிருக்கும் அவ்லியாக்கள் என நம்மால் சித்தரிக்கப்படுவோரால்  எவ்வாறு செவியேற்கச் செய்ய முடியும்?

இறந்தவர்களால் இந்த உலகில் நடைபெறுபவற்றைக் கேட்க முடியாது. அவர்கள் ‘ஃபர்ஸக்’ என்னும் திரையுலகில்  மறைவான வாழ்வில் இருக்கிறார்கள். அவர்களால் இறுதிநாள் வரை இந்த உலகுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய  முடியாது.எனவே நாம் கேட்பவற்றை இறந்தவர்கள் கேட்பார்கள் என்பது இறைவனின் சொல்லுக்கு மாற்றமாகும். இஸ்லாத்திற்கே எதிரானதாகும்.
 அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் ஒரு திரை (ஃபர்ஸக்) உள்ளது. (குர்ஆன்:23:100)
 ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும் இந்த உலகுக்கும் எவ்விதத்தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப்பின்னால் புலனுக்குத தெரியாத மிகப் பெரிய திரை போடப்பட்டு விடுகிறது. என்று இந்த வசனம் (23:100) கூறுகிறது.

 இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்தித்தல், இறந்தவர்களை வழிபடுதல், இறந்தவர்களிடம் கோரிக்கை வைத்தல், நேர்ச்சை செய்தல் போன்ற காரியங்களைச் செய்பவர்களுக்கு இவ்வசனம் சரியான மறுப்பாக அமைந்துள்ளது.

இறந்தவர்களுக்கும், இந்த உலகிற்கும் திரை போடப்படுகிறது என்று சொன்னால் இந்த உலகில் உள்ளவர்கள் செய்யும் எதையும் இறந்தவர்களால் அறிந்து கொள்ளவே முடியாது.

அறிந்து கொள்ளவே முடியாது எனும் போது அவர்களால் எதுவும் செய்யவும் முடியாது என்பதை நாம் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்யலாமா?

 பிரார்த்தித்தல், உதவி தேடுதல், நேர்ச்சை செய்தல், அறுத்துப்பலியிடுதல் போன்றவை இறைவனுக்குச் செய்யும் வணக்கங்களாகும். இறைவனுக்கு மட்டுமே செய்யும் வணக்கங்களை இறைவன் அல்லாதவர்களுக்குச் செய்வது கூடாது. அவை (ஷிர்க்) இணைவைப்பதாகும்.
இவர்கள் (தங்களின் இறைவனுக்குச் செய்த) நேர்ச்சைகளையும் நிறைவேற்றி வைத்தனர். நீண்ட வேதனையுடைய (இறுதி) நாளையும் பயந்து கொண்டிருந்தனர்.(அல்குர்ஆன்: 76:58)
 இம்ரானுடைய மனைவி (மர்யமின் தாயார்) ‘ நிச்சயமாக என் வயிற்றிலுள்ள குழந்தையை முற்றிலும் உனக்கு அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆகவே இந்த நேர்ச்சையை நீ அங்கீகரிப்பாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள். ( அல்குர்ஆன்: 3:35)
 என்ற வசனங்கள் நேர்ச்சையை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நிறைவேற்றவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன

அவர்களுக்காக அறுத்துப் பலியிடலாமா?
அல்லாஹ் ஒருவனுக்கே அறுத்துப்பலியிடவேண்டும். அவ்லியாக்களுக்கோ, இறந்து போன பெரியார்கள் , மகான்கள் பெற்றோர், உற்றார்,உறவினர்களுக்கோ ஆடு,மாடு,கோழி போன்றவற்றை அறுத்துப் பலியிடுவது பெரும்பாவமாகும். இணைவைத்தலாகும். இன்று மீலாத் விழா, முஹ்யித்தீன் விழாக்களுக்காக ஆடுகள், கோழிகளை நேர்ச்சை நேர்ந்து கடைசி நாளன்று அவற்றை அறுத்து ஊர்முழுவதும் வழங்கி உண்டு மகிழ்வதைக் காணலாம். ஒரே நாளில் ஊர்மக்களெல்லாம் உண்டு மகிழ்வது ஒரு பெரும் பேறல்லவா? எனப் பெருமையாகப் பேசிக் கொள்வதைப்பார்க்கிறோம். இந்த உணவுகள் ஊரைக் கடந்தும், கடல் கடந்தும் வினியோகம் செய்யப்படுகிறது. ஹராமான- தடுக்கப்பட்ட-உணவை உண்பதில் மக்களின் ஆர்வத்தைப் பார்த்தீர்களா? உணவிலே நஞ்சூட்டப்பட்டிருந்தால் இவற்றை உண்பார்களா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்காகவே அறுத்துப்பலியிடவேண்டும் என்று வரும் மறை வசனங்களைப் படியுங்கள்.
ஃபஸல்லி லிறப்பிக்க வன்ஹர். உங்கள் இறைவனைத் தொழுது (அவனுக்கே) அறுத்துப்பலியிடுவீராக! (குர்ஆன்: 108: 02)
(நபியே! நீர் கூறுவீராக! நிச்சயமாக எனது தொழுகை, தியாகம் (குர்பானி), வாழ்வு, மரணம் யாவும் உலகைப்படைத்துக் காக்கும் அல்லாஹ்வுக்கே உரியவை. (அல்குர்ஆன்: 6:162)
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப்பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ( அறிவிப்பவர் அலீ(ரலி), நூல்: முஸ்லிம்)
கப்று ஸியாரத் செய்யலாமா? அதன் நோக்கம் என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (முதலில்) கப்றுகளுக்கு ஸியாரத் செய்வதைத் தடுத்து வந்தேன். (இப்போது) ஸியாரத் செய்யுங்கள். அது மரணத்தை நினைவு படுத்தும். ( அறிவிப்பவர்: இப்னு புரைதா (ரலி), ஆதாரம்: அபூதாவூது-3237.
முன்னோர்கள் சமாதிகளுக்குச் சென்று வழிபாடு செய்யவும், தங்களது தேவைகளை அவர்களிடம் கேட்கவும் மக்கத்து மக்கள் செய்து வந்ததால் அதே பாவங்களை தமது மக்களும் செய்து விடக்கூடாதே என்னும் முன்னெச்செரிக்கையால் ‘சமாதிகளுக்குச் செல்வதை நபி (ஸல்) அவர்கள்
தடுத்து வந்தார்கள்’. பின்னர் கப்று ஸியாரத்தின் நோக்கத்தை மக்கள் புரியத் தொடங்கியதும்; அதற்கு அனுமதி வழங்லானார்கள்.ஆனால் அதற்காக ஒரு நிபந்தனையை விதிக்கவும் செய்தார்கள். ‘அவர்கள் தங்கள் தேவைகளை அவர்களிடம் கேட்பது கூடாது. அது மரணத்தை நினைவு படுத்துவதாக அமைய வேண்டும்’ அங்கு செல்வதால் ‘இதைப் போல் தமக்கும் மரணம் நிகழும்; என்பதை எண்ணி, இறைவனை பயந்து தமது வாழ்வை சீராக அமைத்துக் கொள்ளவேண்டும்’ என்ற உணர்வுகள் மக்களிடம் ஏற்படவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் நபி (ஸல்) அனுமதித்தார்கள்.
இன்று கப்று ஸியாரத்தின் நோக்கமே மாறி தங்கள் கோரிக்கைகளை இறந்தவர்களிடம் முன்வைக்கவும், தமது தேவைகளை நிறைவேற்றித்தரவும், குழந்தை பாக்கியத்தை பெற்றுத்தரவும் வேண்டுகிறார்கள். இது வல்லமை மிக்க அல்லாஹ்வின் ஆற்றலை மறந்து செய்யும் கொடிய
பாவம் ஆகும். ஷிர்க் (இணைவைத்தல்) ஆகும்.
கப்ருகளுக்குச் சென்றால் எவ்வாறு ஸியாரத் செய்வது.? அங்கு என்ன செய்யவேண்டும் ? என்பதை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு மிகத் தெளிவாகவே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
ஃபாத்திஹா ஓதச் சொல்லவில்லை. யாஸீன் ஓதச் சொல்லவில்லை. இறந்தவர்களிடம் துஆ கேட்கச் சொல்லவில்லை. பின் என்ன சொன்னார்கள் ?
பின் வரும் துஆவை மட்டும் ஓதச் சொன்னார்கள்:-
‘அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன்! வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியா’ - ஈமான் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து அடக்கமாகியிருக்கும் நல்லடியார்களே! நிச்சயமாக விரைவில் நாங்களும் (மரணமடைந்து) உங்களோடு சேரவிருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் நன்மையை வழங்க அல்லாஹ்வை வேண்டுகிறோம். ஆதாரம்: முஸ்லிம்.
இதைத்தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. பாத்திஹா ஓதுவதோ, யாஸீன் ஓதுவதோ, நேர்ச்சை நேருவதோ, இறந்தவர்களிடம் துஆ கேட்பதோ கூடாது.


by Dr. Ahmad Baqavi PhD.

நன்றி: http://albaqavi.com/home/?p=௧௫௦௧

No comments:

Post a Comment