ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் அக்கவுண்டிங் துறையில் ஐசிடபிள்யூஏஐ என்பது மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சி நிறுவனமாகும்.
மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், அந்நிறுவனம் பலவிதமான படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கி வருகிறது. அப்படிப்புகளின் விபரங்கள் மற்றும் சேர்க்கை முறைகளைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
ICWA அடிப்படைப் படிப்பு சேர்க்கைத் தகுதி 17 வயது பூர்த்தியடைய வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட முறையில் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களும், தற்காலிக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.கட்டணம்(போஸ்டல் கோச்சிங்)
போஸ்டல் டியூஷன் உள்ளிட்டவைகளுக்கு ரூ.2000
விவரக் கையேடுக்கு ரூ.150(பதிவுக் கட்டணம் இல்லை)
அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு வங்கியில் எடுக்கப்பட்ட டிடி(ICWAI, Payable at Kolkatta) மூலமாக பணம் செலுத்தலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
வங்கி வரைவோலை(DD)
சான்றளிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் சான்றிதழ் நகல்
சான்றளிக்கப்பட்ட 10+2 சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்.
படிவத்தின் மீது 3 புகைப்படங்கள் சான்றளிக்கப்பட்டு, ஒட்டியிருக்க வேண்டும்.
சான்றை
Legislative Assembly or a Gazetted Officer or a Principal of a college ஆகியோரில், யாரேனும் ஒருவரிடம் பெறலாம்.
ICWA Intermediate படிப்பு
சேர்க்கைத் தகுதி
18 வயதுக்கு குறைந்தவராக இருக்கக்கூடாது.
அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முடிவுகளுக்கு காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
போஸ்டல் டியூஷன் உள்ளிட்டவைகளுக்கு ரூ.3500
பதிவுக் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு ரூ.300
விவரக் கையேடுக்கு ரூ.150
அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு வங்கியில் எடுக்கப்பட்ட DD(ICWAI, Payable at Kolkatta) மூலமாக பணம் செலுத்தலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
வங்கி வரைவோலை
சான்றளிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் சான்றிதழ்
சான்றளிக்கப்பட்ட 10+2 சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்
நீங்கள் பெற்ற பட்டத்தின் சான்றிளிக்கப்பட்ட நகல்
சான்றிளிக்கப்பட்ட 3 புகைப்படங்களை விண்ணப்பத்தில் ஒட்டியிருக்க வேண்டும்.
சான்றை any member of ICWAI /ICAI/ /ICSI/Parliament/Stage
Legislative Assembly or a Gazetted Officer or a Principal of a college ஆகிய யாரேனும் ஒருவரிடம் பெறலாம்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை, அதாவது, ஜுன் 18 முதல் 21 வரையிலும், டிசம்பர் 26 முதல் 29 வரையும் நடைபெறும்.
ஜுன் மாதத் தேர்வையெழுத, அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் 15க்குள்ளும், டிசம்பர் மாதத் தேர்வையெழுத அதே ஆண்டு ஜுன் 15க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?
முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை, தேவைப்படும் ஆவணங்களுடன் சேர்த்து, கட்டண ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட பிராந்திய கவுன்சிலுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
ICWA Final Course
தகுதி தேவைகள்
ஒரு செல்லத்தக்க பதிவு எண்ணைப் பெறும்வரை, ஒருவர், இறுதித் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்.
ICWAI தேர்வை தடையின்றி எழுதியிருக்க வேணடும்.
ICWAI Intermediate Examination தேர்வை இறுதிப் பருவத்திற்கு முன்பாக தேறியிருக்க வேண்டும்.
டிசம்பர் தேர்வில் தேறிய மாணவர், அடுத்த ஜுன் தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்.
ஒரு மாணவர், தேவைப்படும் பயிற்சி முடிவு சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு மாணவர், கட்டணத்தை, தற்போதைய மதிப்பில், குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். (ஜுன் தேர்வுக் கட்டணத்தை ஏப்ரல் 15க்குள்ளும், டிசம்பர் தேர்வுக் கட்டணத்தை அக்டோபர் 25க்குள்ளும் செலுத்திவிட வேண்டும்.
தலைமை அலுவலகங்கள், பிராந்திய கவுன்சில்கள் ஆகியவற்றில் ரூ.20 மற்றும் தபால் மூலமாக ரூ.25க்கு கிடைக்கும் விண்ணப்பத்தை, முறைப்படி சமர்ப்பித்திருக்க வேண்டும்.
Foundation, Intermediate மற்றும் Final தேர்வுகளில், ஹிந்தி மொழியில் எழுத, ஒருவருக்கு வாய்ப்பு தரப்படுகிறது.
Coaching Completion Certificate என்ற சான்றிதழைப் பெறுவதற்கு, ஒரு மாணவர் கீழ்கண்ட பயிற்சிகளை அவசியம் முடித்திருக்க வேண்டும்.
5000 வார்த்தைகள் கொண்ட ஆய்வுக் கட்டுரை
நிலை 3 மற்றும் 4ல்(எது பின்பாகவோ) Coaching Completion Certificate பெற, ஆராய்ச்சிக் கட்டுரை அவசியம் தேவை. அதற்கான விதிமுறைகள் கீழ்கண்டவையாக இருக்க வேண்டும்.
இந்த ஆய்வுக் கட்டுரையானது, பல்கலைக்கழக பேராசிரியர், மத்திய மற்றும் மாநில அரசில் உதவி செயலர் என்ற நிலையிலுள்ள அதிகாரி, தனியார் துறை அல்லது பொதுத்துறையில் துணைத் தலைவர் என்ற நிலையிலுள்ள அதிகாரி மற்றும் FICWA, FCA, FCS என்ற நிலையிலுள்ளவர்கள் ஆகிய யாரேனும் ஒருவரது வழிகாட்டுதலின் கீழ் செய்யப்பட வேண்டும்.
தனது ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு வழிகாட்டுநரை(Guide), ஒரு மாணவர் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், பிராந்திய கவுன்சில்கள் மற்றும் வாய்மொழி பயிற்சி மையங்கள் ஆகியவையும், இறுதிப் படிப்பிற்கு, வாய்வழி அல்லது தபால்வழி பயிற்சி வகுப்பை நடத்த அனுமதி பெற்றுள்ளன மற்றும் வேண்டுகோளின் பேரில் மாணவருக்கு, அறிமுகக் கடிதத்தையும் அளிக்கலாம்.
இதுபோன்ற ஆய்வுக்கு வழிகாட்டுநராக இருக்க தகுதிப் பெற்றவர்களின் பெயர் பட்டியலை பிராந்திய கவுன்சில் வைத்திருக்கும்.
மாணவரால் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரையின் ஒரு நகல், பிராந்தியக் கவுன்சிலின் நூலகத்திலேயே, எதிர்காலத் தேவைக்கருதி வைக்கப்படும் மற்றும் அதன் பட்டியலானது, கொல்கத்தா தலைமை அலுவலகத்தில் Director of Studies at Headquarters -க்கு அனுப்பப்படும். ஆய்வுக் கட்டுரைக்கான சான்றிதழ் வழங்கப்படுகையில், அந்த குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையின் தலைப்பை, பிராந்திய கவுன்சில் குறிப்பிடும்.
இதுபோன்ற ஆய்வுக் கட்டுரைக்கு, எந்தவிதமான கட்டணத்தையும் பிராந்தியக் கவுன்சில் வசூலிக்காது.
100 மணிநேர கணினிப் பயிற்சி
ஒரு நிலையில் தேறி அடுத்த நிலைக்கு சென்ற மாணவர் அல்லது இரண்டு நிலையிலும் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், கல்வி நிறுவனத்தால் அவ்வப்போது பரிந்துரை செய்யப்படும் கணினி நிறுவனத்தில், கட்டாய கணிப்பொறி பயிற்சியை முடித்திருக்க வேண்டும். மேலும், இந்தப் பயிற்சிக்காக, ஒரு குறிப்பிட்டளவு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
கீழ்காணும் தகுதிகளைப் பெற்றிருந்தால், கணிப்பொறி பயிற்சியிலிருந்து ஒரு மாணவருக்கு விலக்கு அளிக்கப்படும்.
DOEACC -யின் &'A&' நிலை சான்றிதழ் பெற்றவர், இறுதி நிலைத் தேர்வுக்கு கணினிப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்குப் பெறலாம்.
அங்கீகரிக்கப்பட்ட நிலையில் முதுநிலைப் பட்டம் அல்லது முதுநிலை டிப்ளமோ பெற்றவர்களும் விலக்கு பெறுவார்கள்.
மேற்கூறிய விதிவிலக்கைப் பெற விரும்பும் மாணவர்கள், இயக்குநருக்கு, ICWAI, 12, Sudder Street,Kolkata-700 016 என்ற முகவரிக்கு, தேவையான ஆணவங்களுடன், , ICWAI என்ற பெயருக்கு Payable at Kolkatta என்பதாக ரூ.1200க்கு வரைவோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
Modular பயிற்சி - 15 நாட்கள்
பிராந்திய கவுன்சில்கள், 15 வேலை நாட்களுக்கு Modular பயிற்சியை ஏற்பாடு செய்யும். இதற்கான கட்டணம் ரூ.1500 ஐ தாண்டாது.
Audit / Industrial பயிற்சி - 12 மாதங்கள்
இந்தப் பயிற்சி பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
நிறுவனம் தொடர்பான பயிற்சி
செலவு மற்றும் மேலாண்மை அக்கவுண்டிங் அம்சங்கள்
நிதி அக்கவுண்டிங் அம்சங்கள்
மேலாண்மை அக்கவுண்டிங் அம்சங்கள்
பொது அலுவலக சேவைகள்
ஆந்திரா, கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு மற்றும் கேரளா போன்றவை.இந்த பயிற்சியைப் பற்றி மேலும் விபரங்களை அறிந்துகொள்ள,
Southern India Regional Council
4, Montieth Lane, Egmore,
Chennai - 600 008
Ph:044-28554443/28554326/28528219
Fax
என்ற முகவரியை அணுகவும்.
Website:www.sircoficwai.com
sircoficwai@gmail.com
No comments:
Post a Comment