Thursday 16 February 2012

இதயமில்லாது வாழும் உலகின் முதல் மனிதன்!...


மருத்துவ உலகின் புதிய புரட்சி !..

(வீடியோ இணைப்பு)

கடந்த வருடம் மார்ச் மாதம், கிரேய் லெவிஸ் (55) எனும் நபர் இதயக்கோளாறு காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்கு புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Texas Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அகற்றிவிட்டு, இதயம் போன்று செயற்பட கூடிய ‘contunuos flos’ எனும் செயற்கை உபகரணத்தை பொருத்தினர். 


இதயத்தை போன்று இந்த உபகரணம் துடிப்பதில்லை.ஆனால் இதயம் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்கிறது. இந்த முயற்சி வெற்றியளித்ததுடன், சிகிச்சை முடித்த அடுத்த நாளே குறித்த நபர் மருத்துவர்களின் பேசக்கூடியளவு போதிய உடல் நலம் பெற்றார்.


முதல் முயற்சியாக காளை மாடு மீது இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது மனிதனிடமும் மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்துள்ளது. இதன் மூலம் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. உலகில் இதயமில்லாது நடமாடும் முதன் மனிதன் எனும் பெயரை கிரேய் லெவிஸ் எனும் அந்நபர் பெற்றுள்ளார்.


இதய மாற்று சிகிச்சை செய்யப்பட்ட வீடியோ (அனைவருக்கும் உகந்ததல்ல – பலவீனமானவர்கள் பார்வையிட வேண்டாம்)


 

No comments:

Post a Comment