Friday, 15 August 2008

ஷபே பராத் என்றழைக்கப்படும் பராத் இரவு பற்றிய சிறப்பு பார்வை..

ஷபே பராத் என்றழைக்கப்படும் பராத் இரவு ரமலான் மாதம் வருவதற்கு சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும். 

பராத் இரவு சம்பந்தமாக பல கதைகள்.

அன்றைய இரவில் மனித சமூகத்தில் ஒரு வருடத்தில் நடை பெற இருக்கின்ற அனைத்து விடயங்களையும் அல்லாஹ் பதிவதாகவும், மூன்று நோன்புகளை நாம் தொடராக நோற்றிவிட்டு அன்றிரவில் மூன்று யாசீன் சூராக்களை ஓதி சில விடயங்களை அல்லாஹ்விடம் கேட்டால் அவைகளை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பதாகவும் ஒரு நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது.

அதன் படி முதலாவது யாசீன் சூராவை ஓதிவிட்டு நமது நீண்ட ஆயுளுக்கும், இரண்டாவது யாசீனை ஓதி விட்டு உணவு விஷ்தீரனத்துக்கும், மூன்றாவது யாசீனை ஓதிவிட்டு நாம் அந்த வருடத்தில் செய்யப் போகின்ற பிழைகளையும்,  அத்துடன் கூடவே மரணித்து மண்ணறைகளில் இருக்கும் நமது உறவினர்களின் பிழைகளையும் மன்னித்து நமக்கு நல்லருளை அருளுமாரும் பிரார்த்திக்க நமக்கு நமது உலமாக்கள் சொல்லித் தந்து இருக்கிறார்கள்.

நாமும் மிகவும் பக்தி சிரத்தையுடன் அதனை செய்துக் கொண்டு வருகிறோம்.

பராத் தினத்தில் நோன்பு நோற்று நாம் அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையில் எதுவித உயிர்ப்பும் இல்லை என்பதை நாம் அல்லாஹ்விடம் முன் வைக்கும் வேண்டுதல்களே நமக்கு பறை சாட்டுவதை மிகக் கவனமாக கவனித்தால் புரிந்து போகும்.

நாம் நீண்ட ஆயுளைக் கேட்கிறோம்.

அந்த ஆயுள் முழுதும் உண்பதற்கு உணவைக் கேட்கிறோம்.

உணவு உண்ட கொழுப்பில் நாம் செய்யும் பாவங்களையும் மன்னிக்குமாறு கேட்கிறோம்.

நாம் கேட்கும் இத்தகைய பிரார்த்தனையில் பொதிந்திருக்கும் ஆன்மீக இரகசியங்கள் என்ன?

ஒவ்வொரு குடும்பங்களிலும் மறைந்த தந்தை, தாயார், பாட்டன், பாட்டிகள், குழந்தைகளின் ஞாபகமாக அன்றைய தினம் வீடுகளில் கத்தம் பாத்திஹா ஓதி, படையல்கள் படைத்து அதை தப்ருக் என்று சொல்லி அனைவருக்கும் கொடுப்பார்கள்! இது எங்கிருந்து வந்தது! சகோதரர்களே சிந்தியுங்கள்
3 காபிர்களின் சமுதாய வழிமுறைகள் தான் இது (காபிர்கள், நசாராக்கள், மற்றும் சீன மதத்தினர்கள்)

சிலை வணங்கிகள்
பண்டிகைகளின் போது காபிர்கள் மறைந்த தங்கள் தந்தை, தாயார், பாட்டன், பாட்டிகள், குழந்தைகளின் ஞாபகமாக அன்றைய தினம் வீடுகளில் பூஜை ஓதி, படையல்கள் படைத்து அதை பிரசாதம் என்று சொல்லி அனைவருக்கும் கொடுப்பார்கள்!

நஸாராக்கள் –  மண்ணரை திருவிழா
நஸாராக்கள் மண்ணரை திருவிழாவின் போது மறைந்த தங்கள் தந்தை, தாயார், பாட்டன், பாட்டிகள், குழந்தைகளின் ஞாபகமாக அன்றைய தினம் வீடுகளில் மதகுருமார்களை அழைத்து ஜெப-பூஜை ஓதி, படையல்கள் படைத்து அதை ஜெப-பிரசாதம் என்று சொல்லி அனைவருக்கும் கொடுப்பார்கள்!

மேலே கண்ட பித்அத்-ஆன செயலை இஸ்லாத்தில் அல்லாஹ் அனுமதிக்கிறானா?
அல்லது நபிகள் (ஸல்) இந்த பராத் இரவை சொல்லித் தந்தார்களா? அவர்கள் கொண்டாடினார்களா?
கீழே உள்ளதை சற்று படியுங்கள்.
 அல்லாஹ் கூறுகிறான்
‘அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(யான) தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா?’ என அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் அஷ்ஷுரா:21)
 நபி (ஸல்) அவர் கூறுகிறார்கள்:-
எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும்  இருந்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும்  மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி) நூல்-முஸ்லிம்)

‘எனது வழிமுறையையும், நேர்வழி நடப்போரான எனது கலீபாக்களின் வழி முறையையும் எடுத்து நடப்பதுடன் அவைகளை கடவாய்ப் பற்களால் கவ்விப்பிடித்துக் கொள்ளுங்கள்! 
புதுமையான காரியங்கள் அனைத்தையும் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: அபூதாவூது)

இந்த பராத் நாளில் முஸ்லிம்களின் கீழ்கண்ட வழிமுறைகளை காணுங்கள் இது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் காட்டிய வழிமுறையா?
அல்லது
ஷைத்தானின் வழிமுறையா? என்பதை தாங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்!
பாத்திஹா என்ற பூஜை ஓதுவது
படையல் வைப்பது, அதில் பரக்கத் பொழியும் என்று நினைப்பது
மசூதிகள், வீடுகள், கடைகள் ஆகியவற்றில் அலங்கார விளக்குகளை எரிப்பது, ஏன் கப்ருஸ்தானிலும் கூட அலங்கார விளக்குகளை எரிப்பது, இது கப்ருகளில் உறங்கிக் கொண்டிருப் பவர்களுக்கு நாம் செய்யும் நன்மையா?
படையலில் வைக்கப்படும் பொருட்களின் பட்டியல்
தாத்தா பீடி குடித்ததன் நினைவாக – பீடி கட்டுகள் வைப்பது
அப்பா புகையிலை சாப்பிட்டதன் நினைவாக – புகையிலை வைப்பது
அன்றைய தினம் இறந்த ஆவிகள் வீடுகளுக்கு வருவதாகவம் ஆசீர்வாதம் செய்வதாகவும் எண்ணிக்கொண்டு கண்விழித்து பிரார்ததணை செய்வது! இது நபிமார்கள் காட்டித்தந்த வழியா?
(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (திருக்குர்ஆன் 27:80)
(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்யமுடியாது. (திருக்குர்ஆன் 35:22)

இறந்தவர்களுக்கு உணவு மற்றும் அவர்களுக்கு பிடித்தமானவைகளை படையல் இடுவது சீன மக்களின் மூட நம்பிக்கை இதை பின்பற்றலாமா?

சகோதர சகோதரரிகளே! அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்!!
மேலும் “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியல் (நடக்கக்)கண்டோமோ! அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்.  என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (திருக்குர்ஆன் அல்பகரா 2-170)

அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும் மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக்கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக்கொள்ளச் செய்தது எது? (திருக்குர்ஆன் அல்பகரா 2-175)
கீழே உள்ளதை கவனியுங்கள் சகோதரர்களே!

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:

  1. சதக்கத்துல் ஜாரியா
  2. பலன் தரும் கல்வி
  3. பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்
இதற்கான விளக்கம் இதோ கீழே தருகிறேன்
1. ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

2. இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

3. மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.
மார்க்கத்தில் புதுமைகளை புகுத்துபவர்களுக்கு நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை!
‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல் வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை இறைவன் மன்னிக்கிறான். நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்றான்.’-குர்ஆன் 5 : 3
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு  இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது  என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.  (அலி (ரழி) நூல்கள்-அபூதாவூது, நஸயீ.)

நீங்கள் நஷ்டவாளியாகலாமா?
அல்லாஹ் கூறுகிறான்,
“செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல் குர்ஆன் 18:103,104)
நீங்கள் யாருக்கு கட்டுப்படவேண்டும்?
‘இறைவனுக்கும் இத்தூதருக்கும கட்டுப்படுங்கள். இதனால் அருள் செய்யப் படுவீர்கள்.’-குர்ஆன் 3 : 132

உங்கள் முன் ஒரு திருக்குர்ஆனின் அத்தியாத்தை எடுத்து வைக்கிறேன் படியுங்கள் வெற்றிபெறுங்கள்!

ஸுரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)  
 அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
 (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹ் செய்வீராக (87-1)
 அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான் (87-2)
 மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றை பெறுவதற்கு) நேர்வழி காட்டினான் (87-3)
 அன்றியும் அவனே (கால்நடைகளுக்கென) மேய்சலுக்குரிய வற்றையும் வெளியாக்கினான் (87-4)
 பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான் (87-5)
 (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக்கொடுப்போம், அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்! (87-6)
 அல்லாஹ் நாடியதை அல்லாமல் – நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான் (87-7)
 அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம் (87-8)
 ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக! (87-9)
 (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான் (87-10)
ஆனால் துர்பாக்கியமுயடையவனோ, அதை விடட்டு விலகிக் கொள்வான் (87-11)
 அவன்தான் பெரும் நெருப்பில் புகுவான் (87-12)
 பின்னர் அதில் அவன் மறிக்கவும் மாட்டான்! வாழவும் மாட்டான் (87-13)
தூய்மையடைந்தவன் திட்டமாக வெற்றி பெறுகிறான் (87-14)
 மேலும் அவன் தன் இறைவனுடைய நாமத்ததை துதித்தக்கொண்டும் தொழுதுகொண்டும் இருப்பான் (87-15)
 எனினும் நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறீர்கள் (87-16)
 ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும், என்றும் நிலைத்திருப்பதும் ஆகும் (87-17)
 நிச்சயம் இது முந்திய ஆகமங்களிலும் (87-18)
 இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது (87-19)
 நிச்சயமாக நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் இதை செய்வது தங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது! அறிந்துக்கொள்ளுங்கள் இதிலிருந்து விலகுபவர் தன்னை இஸ்லாத்திலிருந்தும் அல்லாஹ்விடமிருந்தும் தூர விலகி வழிகேட்டில் விழுந்தவர்போலாவார்!
எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும்  இருந்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும்  மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி) நூல்-முஸ்லிம்)
ஜிஹாது என்றவுடன் ஆயுதத்தை ஏந்துவதுதான் தங்களுக்கு நினைவுவரும் அப்படியல்ல (ஒரு நாட்டின் சார்பாக நின்று ராணுவத்தின் உதவியுடன் போருக்கு ஆயத்தமானால் தான் ஆயுதம் ஏந்தவேண்டும் மாறாக பொதுமக்களை துன்புறுத்த தீவிரவாதிகள் போல் எக்காரணம் கொண்டும் ஆயுதத்தை ஏந்தக்கூடாது) இங்கு ஜிஹாது என்று கூறப்படுவது பித்அத்-ஐ வெறுப்பது அதை தடுப்பது அப்போது வரும் சோதனைகளை பொறுத்துக் கொள்வதுதான்
உங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது உண்மையில் பாசம் நேசம் மற்றும் மரியாதை இருந்தால் இந்த ஷபே பராத் இரவை புறக்கணியுங்கள்! இல்லையெனில் உங்களுக்க கீழ்கண்ட கதிதான்! (கீழ்கண்டதை தாங்கள் பெற்றுக்கொண்டால் (இன்ஷா அல்லாஹ்) முடிந்தது உங்கள் சுவனப்பாதையின் கனவு)
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு  இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது  என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.  (அலி (ரழி) நூல்கள்-அபூதாவூது, நஸயீ). 

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment