Thursday 20 August 2015

விமானத்தின் டூர்பூலன்ஸ் (Turbulance) என்பது பற்றிய ஒரு சிறப்பு அறிவியல் பார்வை !!


முதலில் டர்புலன்ஸ் என்றால் என்ன என்பதை அதைப்பற்றி தெரியாதவர்களுக்கு விளக்கி விடுகிறேன்
விமானம் நடுவானில் பறக்கும்போது திடீரென்று மேலும் கீழும் ஆடும், சில புதுப்பயணிகளுக்கு வயிற்றில் அப்போது புளியை கரைக்கும், சில சமயம் மிக மோசமாக ஆடும். அதன் காரணியைதான் டர்புலன்ஸ் என்பார்கள்
இது விமானத்தில் மட்டும்தான் ஏற்படும் என நினைக்காதீர்கள், கடலுக்கு அடியில் செல்லும் நீர்மூழ்கி கப்பலிலும் இந்த டர்புலனஸால் ஏற்படும் ஆட்டம் அடிக்கடி வரும். திரவம் மற்றும் காற்று இரண்டிலும் இந்த டர்புலன்ஸ் உண்டு
வெவ்வேறு தண்மைகளை உடைய காற்று கலந்திருக்கும்போது, அது விமானத்தின் இறக்கையில் இருக்கும் காறழுத்தத்தை ஒரே சீராக வைத்திருக்காமல், அடிஅடிக்கடி மாற்றும்போதுதான் இந்த ஆட்டம் நிகழ்கிறது. விமானம் ஒரே வேகத்தில் சென்றாலும், காற்றின் அடர்த்தி ஒரே சீராக சிலமுறை இருப்பதில்லை
உதாரணத்திற்கு மேகத்தினுள் பயணிக்கும்போதெல்லாம் இந்த டர்புலன்ஸ் கண்டிப்பாக விமானத்தில் வருவதை உணரமுடியும்...
காரனம் மேகம் என்பது அதை சுற்றியிருக்கும் காற்றை விட அடர்த்தி குரைவாகவோ அதிகமாகவோ இருகும் ஒன்று. அதனால் விமானத்தின் இறக்கை அதனுடன் உராயும்போது, திடீரென்று காற்றின் அடர்த்தி மாறுபடுவதால் , அதன் மேல் மற்றும் கீழுள்ள காற்றழுத்தமும் மாறுபடுகிறது, அதனால் விமானத்தின் மேல் நோக்கு விசை தடாலென்று குறையும், ஏறும், குறையும் ஏறும். இதனால்தான் விமானமே ஆடுகிறது
மேகம் மட்டும் அல்ல, பல சமயம் காற்றிலே சில சூடான காற்றுக்களும் தனியா இருக்கும், அவை அடர்த்தி குறைவானவை, அவை ஊடாக விமானம் செல்லும்போதும் இந்த டர்புலன்ஸ் நிகழும்.
தி
விமானம் செல்லும் பாதையில் காற்றின் அடர்த்தி ஒரே சீராக இருந்தால் இந்த டர்புலன்ஸ் நிகழாது
மேல்நோக்கு விசை என்பது காற்று இல்லாவிட்டால் உருவாகாது என்பதை முன்பே சொன்னேன் அல்லவா? அது உருவாகும் அளவு விமானத்தின் இறக்கை மற்றும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகம், இறக்கையின் பரப்பளவை தவிர்த்து, காற்றின் அடர்த்தியிலும் சார்ந்து உள்ளது.


அதனால்தான் காற்றின் அடர்த்தி மாற்றங்கள் அடிக்கடி நிகழும்போது மேல்நோக்கு விசை அடிக்கடி மாறி, விமானம் ஆடுகிறது.

தொகுப்பு : மு அஜ்மல் கான்.

No comments:

Post a Comment